2010–2019
கர்த்தர் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெறுதல்
அக்டோபர் 2017


கர்த்தர் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெறுதல்

“உத்தம இருதயம்” உடைய மனுஷர்கள் நம்பப்பட வேண்டிய மனுஷர்கள்--- ஏனெனில் நம்பிக்கை உத்தமத்தின் மீது கட்டப்படுகிறது.

சகோதரரே, ஒருவேளை நாம் தகுதியுடைய ஆசாரியத்துவம் தரித்தவர்கள் எனவும் மகத்தான கணவர்கள் மற்றும் தகப்பன்கள் எனவும் அவர் நம்புகிறார் என அறிவதைவிட கர்த்தரிடத்திலிருந்து நாம் பெறக்கூடிய மிகப்பெரிய வாழ்த்து எதுவுமில்லை.

ஒன்று மட்டும் கண்டிப்பானது, நமது பங்காக பெரும் முயற்சி மூலம் வரக்கூடிய கர்த்தரின் நம்பிக்கையை சம்பாதிப்பது ஒரு ஆசீர்வாதம். நம்பிக்கை தேவனின் நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதன் அடிப்படையிலான ஆசீர்வாதம். கர்த்தரின் நம்பிக்கையைப் பெறுவது ஞானஸ்நானத் தண்ணீரிலும், பரிசுத்த ஆலயத்திலும் நாம் செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் விளைவாக வருகிறது. கர்த்தருடன் நமது வாக்குத்தத்தங்களை நாம் காத்துக்கொள்ளும்போது நம்மில் அவரது நம்பிக்கை வளருகிறது.

ஒரு நீதிமானின் நடத்தையை விவரிக்கும்போது, “இருதயத்தின் உத்தமம்” என்ற சொற்றொடரை பயன்படுத்துகிற பூர்வகால மற்றும் தற்கால வேதங்களை நான் நேசிக்கிறேன். 1 உத்தமம் அல்லது உத்தமக்குறைவு ஒருவரது நடத்தையின் அடிப்படை மூலக்கூறு. “இருதயத்தின் உத்தமம்” உள்ள மனுஷர்கள் நம்பப்பட வேண்டிய மனுஷர்கள், ஏனெனில் நம்பிக்கை உத்தமத்தின் மீது கட்டப்படுகிறது.

உத்தமமான மனுஷனாக இருப்பது என்பது உங்களுடைய நோக்கங்களும் செயல்களும், உங்கள் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லா விதங்களிலும் சுத்தமாகவும் நீதியாகவும் இருக்க வேண்டும். நாம் எடுக்கிற எல்லா தீர்மானங்களிலும், நாம் தேவனின் நம்பிக்கையை சம்பாதிக்கிறோம் அல்லது அவரது நம்பிக்கையை குறைக்கிறோம். கணவர்களாகவும் தகப்பன்களாகவும் இக்கொள்கை ஒருவேளை மிகத்தெளிவாக தெய்வீகமாக நியமிக்கப்பட்ட நமது பொறுப்புகளில் தெரிகிறது.

கணவர்களாகவும் தகப்பன்களாகவும் தற்காலத் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களிடமிருந்து “குடும்பம்: உலகத்துக்கு ஓர் பிரகடனம்” என்ற அறிவிப்பில் நாம் ஒரு தெய்வீகப் பொறுப்பை பெற்றிருக்கிறோம். இந்த அறிவிப்பு போதிப்பதாவது, (1)   “தெய்வீக வடிவமைப்பில் தகப்பன்கள் தங்கள் குடும்பங்களுக்கு அன்பிலும் நீதியிலும் தலைமை தாங்க வேண்டும், (2)  வாழ்க்கையின் தேவைகளை வழங்கவும் தகப்பன்கள் பொறுப்புடையவர்கள். (3)  குடும்பங்களின் பாதுகாப்புக்கும் தகப்பன்கள் பொறுப்புடையவர்கள்.” 2

நாம் தேவனின் நம்பிக்கையைப் பெற, கர்த்தரின் வழியில் நமது குடும்பங்களுக்கு தெய்வீகமாக நியமிக்கப்பட்ட இந்த மூன்று பொறுப்புக்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும். குடும்ப பிரகடனத்தில் மேலும் கூறியுள்ளபடி “சம பங்காளிகளாக” நமது மனைவிகளுடன் ஒன்றாக இப்பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். 3 நமது மனைவிகளுடன் முழு ஒற்றுமையின்றி இந்த மூன்று பொறுப்புகளைப் பொருத்தமட்டில் எந்த முக்கிய முடிவையும் நாம் எடுக்க மாட்டோம் என்பது இதன் அர்த்தமாகும்.

கர்த்தரின் நம்பிக்கையைப் பெற நமது தேடலில் முதல்படி, அவரில் நமது நம்பிக்கையை வைப்பது ஆகும். தீர்க்கதரிசி நெப்பி அவன் ஜெபிக்கும்போது, இவ்விதமான ஒப்புக்கொடுத்தலை காட்டினான், “கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன், நான் உம்மில் என்றென்றும் நம்பிக்கையாயிருப்பேன். நான் மாம்ச புயத்தில் என் நம்பிக்கையை வைக்கமாட்டேன்.” 4 நெப்பி, கர்த்தரின் சித்தத்தைச் செய்ய முழு ஒப்புக்கொடுத்தலுடன் இருந்தான். கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களைச் செய்வேன் என சொன்னதற்கும் கூடுதலாக, இந்த வாசகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, தன் பணிகளைச் செய்து முடிக்க ஒப்புக்கொடுத்தலில் நெப்பி உறுதியாயிருந்தான், “கர்த்தர் ஜீவிக்கிறபடியாலும் நாம் ஜீவிக்கிறபடியாலும், கர்த்தர் நம்மிடத்தில் கட்டளையிட்ட காரியங்களைச் செய்து முடிக்காமல் நாம் வனாந்தரத்தில் இருக்கும் நமது தந்தையிடத்துக்குப் போகப்போவதில்லை.” 5

நெப்பி முதலில் தேவனில் நம்பிக்கையை வைத்ததினிமித்தம், தேவன் நெப்பி மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவனது வாழ்க்கையையும் அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையையும் தன் ஜனங்களின் வாழ்க்கையையும் ஆசீர்வதித்த ஆவியின் மாபெரும் பொழிவால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். நெப்பி தன் குடும்பத்தையும் ஜனத்தையும் அன்பாலும் நீதியாலும் தலைமை தாங்கி, தேவைகளைக் கொடுத்து பாதுகாத்ததால், அவன் பதிவு செய்கிறான், “நாங்கள் மகிழ்ச்சியின் பிரகாரமாய் வாழ்ந்தோம்.” 6

இந்தத் தலைப்பில் ஒரு பெண்ணின் பார்வையைக் குறிக்கிற வகையில், எனக்கு உதவி செய்யுமாறு எனது, இரண்டு திருமணம் செய்த மகள்களைக் கேட்டேன். அது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பாதிப்பதால், நம்பிக்கையின் முக்கியத்துவத்தை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப்பற்றி ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் கொடுக்க முடியுமா என அவர்களைக் கேட்டேன். லாரா ஹாரிஸ் மற்றும் க்றிஸ்டினா ஹான்சனின் எண்ணங்கள் இங்கே உள்ளன.

முதலில் லாரா: “எனக்கு மிக முக்கிய காரியங்களில் ஒன்று, அவரது அன்றாட காரியங்களை எனது கணவர் செய்யும்போது, எனக்கு மரியாதையும் அன்பும் தெரிவிக்கிற தேர்வுகளை அவர் செய்கிறார் என்பதுதான். இவ்விதமாக நாங்கள் ஒருவரையொருவர் நம்பும்போது ஒன்றாக எங்கள் குடும்பத்தை வளர்ப்பதை ரசிக்கிற அது, எங்கள் வீட்டில் சமாதானத்தைக் கொண்டு வருகிறது.”

இப்போது க்றிஸ்டினாவின் எண்ணங்கள்: “ஒருவரில் நம்பிக்கை வைப்பது, ஒருவரில் விசுவாசம் வைப்பதாகும். அந்த நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாமல், பயமும் சந்தேகமும் இருக்கிறது. எனக்கு, எனது கணவரை முழுமையாக நம்ப முடிவதால் வருகிற மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று சமாதானம், மன சமாதானம், அவர் சொல்வதை அவர் செய்வார் என அவர் உண்மையாகவே செய்வதை அறிவதே. சமாதானம், அன்பு மற்றும் அன்பு வளரக்கூடிய சூழ்நிலையை நம்பிக்கை கொண்டு வருகிறது.”

லாராவும் க்றிஸ்டினாவும் அடுத்தவர் எழுதியதைப் பார்த்தது இல்லை. அவர்கள் நம்பக்கூடிய கணவரைப் பெற்றிருப்பதின் நேரடி விளைவாக வீட்டில் சமாதானத்தின் ஆசீர்வாதம் இருக்கிறது என இருவரும் சுதந்திரமாக கருதினார்கள் என்பது எனக்கு இரசிக்கத்தக்கதாக இருக்கிறது. என் மகள்களின் உதாரணங்களில் விளக்கப்பட்டபடி, நம்பிக்கையின் கொள்கை கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வீட்டின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அவரது “இருதயத்தின் உத்தமத்தினிமித்தம்” முழு குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்ற தன் ஆசாரியத்துவத்தை கனம் பண்ணிய என் தகப்பனின் வீட்டில் வளர்ந்ததால், அதே கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தை நான் அனுபவிக்க முடிந்தது. 7 உத்தமத்தின்மேல் கட்டப்பட்ட நம்பிக்கையின் கொள்கைப்படி வாழ்கிற, மற்றும் புரிந்துகொள்கிற ஒரு தகப்பனின் நீடித்த நேரடி தாக்கத்தை விளக்குகிற என் இளமைக்கால அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் மிகவும் இளைஞனாக இருந்தபோது, தொழிற்சாலை தானியக்கத்தை சிறப்பாகச் செய்த ஒரு நிறுவனத்தை என் அப்பா நிறுவினார். இத்தொழில் உலக முழுவதிலும் தானியங்கி தயாரிப்பை இயக்கி, வடிவமைத்து, நிறுவியது.

நான் நடுநிலைப்பள்ளியில் இருந்தபோது, எப்படி வேலை செய்வது என நான் கற்க வேண்டும் என என் அப்பா விரும்பினார். அடிமட்டத்திலிருந்து அத்தொழிலை நான் கற்க வேண்டும் என என் அப்பா விரும்பினார். எனது முதல் வேலை தரையை சுத்தம் செய்வதும், அக்கட்டிடத்தில் பொதுமக்களுக்குத் தெரியாத இடங்களுக்கு வர்ணம் பூசுவதும்தான்.

நான் உயர்நிலைப்பள்ளியில் நுழைந்தபோது, நான் தொழிற்சாலையின் தளத்தில் வேலை செய்ய பணிஉயர்வு கொடுக்கப்பட்டேன். ப்ளுப்ரிண்ட்களை வாசிக்கவும், கனரக வடிவமைப்பு இயந்திரங்களை இயக்கவும் நான் அங்கு கற்றேன். உயர்நிலைப்பள்ளி படிப்புக்குப்பின் நான் பல்கலைக் கழகம் சென்றேன். பின்பு ஊழியக்களத்தில் நுழைந்தேன். ஊழியத்திலிருந்து வீடு திரும்பியவுடன் நான் நேராக வேலைக்குச் சென்றேன். அடுத்த ஆண்டு கல்விச் செலவுகளுக்காக பணம் சம்பாதிக்க எனக்கு பணம் தேவைப்பட்டது.

ஒரு நாள் எனது ஊழியத்துக்குப்பிறகு உடனே, நான் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, என் அப்பா அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்து லாஸ் ஏஞ்சலீஸுக்கு ஒரு வியாபார பயணத்துக்கு நான் அவருடன் செல்ல விரும்புகிறேனா எனக் கேட்டார். ஒரு வியாபார பயணத்துக்கு அவருடன் செல்ல நான் அழைக்கப்பட்டது இதுவே முதல் முறை. அவர் உண்மையாகவே, நிறுவனத்தின் பிரதிநிதியாக பொதுவிடத்துக்கு செல்ல என்னை அனுமதிக்கிறார்.

நாங்கள் பயணத்துக்கு புறப்படுவதற்கு முன் அவர் இந்த சாத்தியமான புதிய வாடிக்கையாளரைப்பற்றி சில விவரங்கள் சொல்லி என்னை ஆயத்தப்படுத்தினார். இரண்டாவதாக, அவர்கள் அண்மை தானியங்கி தொழில் நுட்பத்தை உலக முழுவதிலுமுள்ள உற்பத்தி இடங்களில் தரம் உயர்த்திக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக, எங்கள் நிறுவனம் அவர்களுக்கு ஒருபோதும் இயந்திர அல்லது தொழில்நுட்ப சேவைகள் வழங்கியது இல்லை. கடைசியாக அவர்களது வாங்கும் பொறுப்புடைய நிர்வாக உயரதிகாரி ஒரு புதிய திட்டத்துக்காக எங்கள் ஏலத்தை  பரிசீலிக்க இச்சந்திப்புக்கு அழைத்திருக்கிறார். இச்சந்திப்பு எங்கள் நிறுவனத்துக்கு புதிய முக்கிய சந்தர்ப்ப சாத்தியத்தைப்பற்றியது.

லாஸ் ஏஞ்சலீஸ் வந்தபின், நானும் என் அப்பாவும் சந்திப்புக்காக குறிப்பிட்ட விடுதிக்குச் சென்றோம். அதன் முதல் நிகழ்ச்சி, அத்திட்டத்தின் இயந்திர வடிவமைப்பு குறிப்புகளை கலந்துரையாடி ஆராய்வது. அடுத்த கலந்துரையாடல் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் கைமாற்றுதல் குறித்தது. இறுதி நிகழ்ச்சி விலை, நிபந்தனைகள் குறித்தது. இங்குதான் எல்லாம் இரசிக்கத்தக்கதாக இருக்கும்.

நிறுவன உயரதிகாரி, அத்திட்டத்துக்கு எங்களுடைய விலை பிற எல்லாரையும் விட குறைவாக இருந்ததாக சொன்னார். அவர் பின்பு ஆர்வமாக இரண்டாவது குறைந்த விலையைச் சொன்னார். பின்பு நாங்கள் எங்கள் விலைப்பட்டியலை திரும்பக் கொண்டுவந்து, மீண்டும் அனுப்பத் தயாரா என எங்களைக் கேட்டார். எங்கள் புது விலை அடுத்த விலையைவிட சற்று குறைவாக இருக்க வேண்டும் என்றார். இதனால் புதிதாக வரும் பணத்தை எங்களுக்குள் 50–50 ஆக பிரித்துக் கொள்ள வேண்டும் என்றார். அதில் எல்லாரும் வெற்றி பெறுவோம் என நியாயப்படுத்தினார். நாங்கள் முதலில் கேட்ட விலையைவிட அதிக பணம் கிடைப்பதால் எங்கள் நிறுவனம் வெற்றி பெறும். இப்போதும் குறைந்த விலையிலேயே அவர்களது நிறுவனம் வாங்குவதால் அவர்களது நிறுவனமும் ஜெயிக்கும். இந்த பெரிய வியாபாரத்தை முடிவு செய்ததால் அவரது பங்கைப் பெற்று அவரும் வெற்றிபெறுவார்.

பின்பு அவர் கேட்ட  பணத்தை நாங்கள் அனுப்ப வேண்டிய ஒரு தபால் அலுவலக பெட்டி எண்ணைக் கொடுத்தார். இவை அனைத்துக்கும் பின், அவர் என் அப்பாவைப் பார்த்துக் கேட்டார், “வியாபாரம் முடிந்ததா?” நான் அதிகமாய் ஆச்சரியப்படத் தக்க வகையில் என் அப்பா எழுந்து, அவர் கையைக் குலுக்கி, திரும்பவும் அவரைத் தொடர்புகொள்வதாக சொன்னார்.

சந்திப்பை விட்டு வந்த பிறகு நாங்கள் ஒரு வாடகை வண்டியில் ஏறினோம், என் அப்பா என்னிடம் திரும்பி கேட்டார், “நாம் என்ன செய்ய வேண்டும் என நீ நினைக்கிறாய்?” என கேட்டார்.

நாம் இந்த வியாபாரத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை, என பதிலளித்தேன்.

என் அப்பா பின்னர் கேட்டார், “வேலையின் நல்ல பின் விவரங்களை நமது வேலையாட்கள் அனைவருக்கும் கொடுக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது என நீ நினைக்கவில்லையா?”

அவரது கேள்வியைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, நான் பதிலளிப்பதற்கு முன்னால் அவரது கேள்விக்கு அவரே பதில் சொன்னார், “கேள், ரிக், நீ லஞ்சத்தை ஒருமுறை வாங்கிவிட்டால் அல்லது உன் உத்தமத்தை சமரசம் செய்தால் அதை மாற்றுவது மிகக் கடினம். அதை ஒருபோதும் செய்யாதே, ஒருமுறை கூட.”

இந்த அனுபவத்தை உண்மையாக ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், அவருடன் அந்த முதல் வியாபார பயணத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக்கொடுத்ததை நான் ஒருபோதும் மறக்கவேயில்லை. தகப்பன்களாக நாம் பெற்றிருக்கிற நீடித்த செல்வாக்கைப்பற்றி விளக்கவே நான் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அவரது இருதயத்தின் உத்தமத்தினிமித்தம், என் அப்பா மீது நான் பெற்றிருந்த நம்பிக்கையை நீங்கள் கற்பனை செய்யலாம். என் அம்மாவுடனும், தன் பிள்ளைகளுடனும், அவரோடு தொடர்புடைய அனைவரோடும் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் கூட அவர் அதே கொள்கைகளைக் கடைபிடித்தார்.

சகோதரரே, நாம் அனைவரும் முதலாவதாக நமது நம்பிக்கையை கர்த்தர் மீது வைக்க வேண்டும், நெப்பி செய்ததுபோல, பின், நமது இருதயங்களின் உத்தமத்தின் மூலம் கர்த்தரின் நம்பிக்கையைப் பெற வேண்டும், நமது மனைவிகள் மற்றும் பிள்ளைகளின் நம்பிக்கையையும் பெற வேண்டும், என்பதே இன்றிரவில் எனது ஜெபமாகும். உத்தமத்தின் மேல் கட்டப்பட்ட நம்பிக்கையின் பரிசுத்த கொள்கையை நாம் புரிந்து பயன்படுத்தினால், நாம் நமது பரிசுத்த உடன்படிக்கைகளுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம். அன்போடும் நீதியோடும், வாழ்க்கையின் தேவைகளைக் கொடுத்து, உலகத்தின் தீமைகளிலிருந்து நமது குடும்பங்களைக் காத்து, நமது குடும்பங்களுக்கு தலைமை தாங்குவதில் வெற்றி பெறுவோம். இந்த சத்தியங்களைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் தாழ்மையாக சாட்சியளிக்கிறேன், ஆமென்.