2010–2019
மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்
அக்டோபர் 2017


மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்

பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் மாபெரும் திட்டம், அதனிமித்தம் தெய்வீக தன்மையின் பங்காளிகளாகும்படிக்கு, கோட்பாடுகளையும், நியமங்களையும், உடன்படிக்கைகளையும், மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களையும் கொண்டுள்ளது.

நாம் ஒவ்வொருவரும் தினமும் எதிர்கொள்ளுகிற பெரும் சவால்களில் ஒன்று மிக முக்கியமான நித்திய காரியங்களை உதாசீனப்படுத்தும் விதமாக, நமது நேரத்தையும் சக்தியையும் இந்த உலகத்தில் அதிகம் கோலோச்சுகிற அக்கறைகளுக்காக அனுமதிக்காதிருப்பதுதான். 1 நமது அநேக பொறுப்புகள் மற்றும் சுறுசுறுப்பான கடமைகளினிமித்தம், தேவையான ஆவிக்குரிய முன்னுரிமைகளை நினைப்பதிலிருந்தும் கவனிப்பதிலுமிருந்தும் நாம் எளிதில் திசைதிருப்பப்படலாம். சில சமயங்களில் நாம் எங்கு செல்கிறோம், ஏன் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறக்கும் விதமாக மிக வேகமாக ஓட முயல்கிறோம்.

“இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு, தம்முடைய மகிமையினாலும் காருண்யத்தாலும், நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே, ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்ததுவுமின்றி,

இச்சையினால் உலகத்துக்குண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது,” 2 என அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு நினைவூட்டுகிறான்.

நமது அநித்திய பயணத்தில் நாம் எங்கு போகிறோம் ஏன் போகிறோம் என்பதன் உண்மையான நினைவூட்டுதல்களாக பேதுருவால் விவரிக்கப்பட்ட அதிமகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே எனது செய்தி. இந்த முக்கிய வாக்குத்தத்தங்களை நினைவுகொள்ள நமக்கு உதவ, ஓய்வு நாள், பரிசுத்த ஆலயம், மற்றும் நமது வீடுகளின் பங்குகளைப்பற்றியும் நான் கலந்துரையாடுவேன்.

இந்த முக்கிய சத்தியங்களை நாம் ஒன்றாக சிந்திக்கும்போது, நம் ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவர் அறிவுறுத்தும்படியாக நான் உருக்கமாக ஜெபிக்கிறேன்.

நமது தெய்வீக அடையாளம்

தெய்வீக தன்மையில் நாமும் பங்காளிகளாகும்படிக்கு, நமது பரலோக பிதாவின் மாபெரும் மகிழ்ச்சியின் திட்டத்தில் கோட்பாடுகளும், உடன்படிக்கைகளும் மகா மேன்மையும், அருமையான வாக்குத்தத்தங்களும் அடங்கியுள்ளன. அவரது திட்டம் நமது நித்திய அடையாளத்தையும், நாம் கற்று, மாறி, வளர்ந்து, இறுதியாக அவருடன் என்றென்றும் தரித்திருக்க பின்பற்ற வேண்டிய பாதையை வரையறுக்கிறது.

“குடும்பம் உலகுக்கு ஓர் பிரகடனத்தில்” விளக்கியுள்ளபடி:

“எல்லா மனுஷர்களும், ஆண்களும் பெண்களும், தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் பரலோக பெற்றோரின் ஆவிக்குமாரர்களும் குமாரத்திகளும் ஆவர். அதனால் ஒவ்வொருவருக்கும் தெய்வீக தன்மையும் இலக்கும் உண்டு. ...

அநித்தியத்துக்கு முந்தய ஜீவியத்தில் ஆவிக்குமாரர்களும் குமாரத்திகளும் தங்கள் நித்திய பிதாவாக தேவனை ஆராதித்தனர் மற்றும் அதனிமித்தம் அவரது பிள்ளைகள் ஒரு மாம்ச சரீரம் பெற்று, பரிபூரணத்தை நோக்கி முன்னேற உலகப்பிரகார அனுபவம் பெற்று முடிவாக நித்திய ஜீவியத்தின் வாரிசுகளாக தங்கள் தெய்வீக இலக்கை உணர்வார்கள்.” 3

அவரது பிள்ளைகள் அவரது திட்டத்தின் கொள்கைகளையும், அவரது நேச குமாரனின் உதாரணத்தையும் பின்பற்றியும், கட்டளைகளைக் கைக்கொண்டும், முடிவுபரியந்தம் விசுவாசத்தில் நிலைத்திருந்தால், அப்போது இரட்சகரின் மீட்பினிமித்தம், அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள், அந்த வரம் தேவனின் அனைத்து வரங்களிலும் உயர்வானது என அவர்களுக்கு தேவன் வாக்குத்தத்தம் அளிக்கிறார். 4 நித்திய ஜீவன் முடிவான அதிமகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தம் ஆகும்.

ஆவிக்குரிய மறுபிறப்பு

நாம் அந்த அதிமகா மேன்மையான அருமையுமான வாக்குத்தத்தத்தை முழுமையாக அறிந்து, மகிமைக்கும் காருண்யத்துக்குமான கர்த்தரின் அழைப்புக்கு மனமுவந்து இசைந்து, தெய்வீகத் தன்மையில் பங்குபெறத் தொடங்குகிறோம். பேதுரு விவரிக்கிறபடி, இந்த அழைப்பு உலகத்திலுள்ள பொல்லாங்குகளுக்குத் தப்ப முயற்சிப்பதால் நிறைவேற்றப்படுகிறது.

இரட்சகரில் விசுவாசத்துடன் பணிந்து நாம் முன்னேறும்போது, அப்போது அவரது பாவநிவர்த்தி மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் “பொல்லாப்பை இனிச்செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு நமது இருதயங்களிலேயும் நமக்குள்ளேயும் பலத்த மாற்றம் [ஏற்படுகிறது].” 5 நாம் “மறுபடியும் ஜெனிக்க வேண்டும்; தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு, நம்முடைய மாம்சமான வீழ்ந்த நிலையிலிருந்து தேவனால் மீட்கப்பட்டு, நீதியின் ஸ்தலத்துக்கு மாற்றப்படுகிறோம்.” 6 “இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” 7

அப்படிப்பட்ட அறிவார்ந்த மாற்றம் நமது தன்மையில் உடனேயோ அல்லது விரைவிலேயோ ஏற்படுவதில்லை. இரட்சகரைப் போல நாமும் “முதலிலேயே முழுமையைப் [பெறுவதில்லை], ஆனால் கிருபைக்கு கிருபையாகப் [பெறுகிறோம்”]. 8 “இதோ வரி வரியாகவும், கற்பனை கற்பனையாயும், இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக மனுபுத்திரருக்கு நான் கொடுப்பேன். என் கற்பனைக்குச் செவி கொடுத்து என் ஆலோசனைக்குக் காது கொடுப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்வார்கள்.” 9

நடந்து கொண்டிருக்கிற ஆவிக்குரிய மறுஜென்ம முறையில் ஆசாரியத்துவ நியமங்களும் பரிசுத்த உடன்படிக்கைகளும் தேவையானவை. அவை நாம் அவரது அதிமகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களையும் பெறக்கூடிய தேவனால் நியமிக்கப்பட்ட வழிகளுமாகும். தகுதியுடன் பெறப்பட்டு, தொடர்ந்து நினைக்கப்படுகிற நியமங்கள், நமது வாழ்க்கையில் தேவதன்மையின் வல்லமையிலிருந்து வரக்கூடிய பரலோக வழிகளைத் திறக்கின்றன. உறுதியாய் மதிக்கப்பட்டு, நினைக்கப்படுகிற உடன்படிக்கைகள் அநித்தியத்திலும் நித்தியத்திலும் நோக்கத்தையும் நிச்சயத்தையும் வழங்குகின்றன.

உதாரணமாக குடும்பங்கள் நித்தியம் முழுமைக்கும் ஒன்றாயிருக்கும்படிக்கு, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற இயல்வதற்காகவும், 11 நாம் இந்த உலகத்தில் சமாதானம் பெற முடிவதாலும், 12 இரட்சகர் மரணத்தின் கட்டுகளை அறுத்து, கல்லறையை ஜெயித்ததாலும், 13 தேவன் நமக்கு நமது விசுவாசத்தின்படி தேவத்துவத்தின் மூன்றாவதானவரான பரிசுத்த ஆவியானவரின்10 தோழமையை வாக்குத்தத்தம் செய்கிறார்.

புரிந்துகொள்ளும் விதமாக தன் பிள்ளைகளுக்கு பரலோக பிதா கொடுக்கிற அதிமகா மேன்மையான அருமையுமான வாக்குத்தத்தங்கள் யாவும் கணக்கிடப்பட முடியாது அல்லது தெளிவாக விவரிக்கப்பட முடியாது. எனினும் நான் இப்போது கொடுத்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களின் பகுதி பட்டியல் கூட நம் ஒவ்வொருவரையும் “வியப்படையச் செய்து,” 14 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே “பிதாவைக் கீழே விழுந்து ஆராதிக்க” 15 வைக்கும்.

வாக்குத்தத்தத்தை நினைவுகூருதல்

“இங்கு அநித்தியத்தில் நம்மை வைக்க அனுப்பிய நமது பரலோக பிதாவின் நோக்கமும், நாம் அழைக்கப்பட்டிருக்கிற பரிசுத்த அழைப்பும் ஆகிய வாழ்க்கையின் மாபெரும் நோக்கத்தை நாம் மறக்கிறோம். சிறிய தற்காலிக காரியங்களுக்கு மேலாக எழும்புவதற்குப் பதிலாக, அது மட்டுமே அந்த தற்காலிக காரியங்களை மேற்கொள்ள நமக்கு சாத்தியப்படுத்துகிற, தேவன் ஸ்தாபித்த தெய்வீக உதவியைப் பெறாமல், உலகத்தின் அளவுக்கு கீழிறங்க நாம் நம்மை அனுமதிக்கிறோம்” 16 என தலைவர் லாரன்சோ ஸ்நோ எச்சரித்தார்.

உலகத்தின் அளவுக்கும் தீமைக்கும் மேலெழும்ப நமக்கு உதவ தேவன் ஏற்படுத்தியுள்ள இரண்டு குறிப்பிட்ட ஆதாரங்கள் ஓய்வு நாளும் பரிசுத்த ஆலயமும் ஆகும். ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்கும் உயர்ந்த நோக்கங்களும், ஆலயத்துக்குச் செல்வதுவும் தொடர்புடையவை, ஆனால் வெவ்வேறானவை என நாம் முதலில் நினைக்கலாம். எனினும் இந்த இரு நோக்கங்களும் ஒரே போலானவை மற்றும் தனிப்பட்டவர்களாகவும், நமது வீடுகளிலும், ஆவிக்குரிய பிரகாரமாக நம்மைப் பலப்படுத்த அவை இணைந்து பணியாற்றுகின்றன என நான் நம்புகிறேன்.

ஓய்வு நாள்

தேவன் அனைத்தையும் சிருஷ்டித்த பிறகு, அவர் ஓய்வு நாளில் ஓய்ந்திருந்து, ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள் ஜனங்கள் அவரை நினைக்க உதவுதற்காகவே, எனக் கட்டளையிட்டார். 17 ஓய்வு நாள் அவரை ஆராதிக்கவும், அவரது மகா மேன்மையான அருமையுமான வாக்குத்தத்தங்களை பெற்று நினைவு கூரவும், குறிப்பாக ஒதுக்கப்பட்டுள்ள தேவனின் நேரம் மற்றும் பரிசுத்த நேரம்.

இந்த ஊழியக்காலத்தில் கர்த்தர் வழிகாட்டியிருக்கிறார்,

உலகத்திலிருந்து உங்களை முற்றிலும் கறைதிறையற்றவர்களாக உங்களை நீங்கள் வைத்துக்கொள்ளும்படிக்கும், எனது பரிசுத்த நாளில் நீங்கள் ஜெப வீட்டுக்கு வந்து உங்களின் திருவிருந்துகளைக் கொடுக்கும்படிக்குமே.

“ஏனெனில் இந்த நாள் உங்கள் பிரயாசங்களிலிருந்து ஓய்ந்திருக்கவும், உன்னதமானவருக்கு உங்கள் அர்ப்பணிப்புகளைச் செலுத்தும்படிக்கும் மெய்யாகவே நியமிக்கப்பட்டிருக்கிறது. 18

இப்படியாக, ஓய்வுநாளில் நாம் நியமங்களில் பங்கேற்று, கற்கவும், பெறவும், நினைவுகூரவும், உடன்படிக்கைகளை புதுப்பிக்கவும், நாம் குமாரனின் நாமத்தில் பிதாவை ஆராதிக்கிறோம். அவரது பரிசுத்த நாளில் நமது சிந்தனைகளும், செயல்களும், நடத்தையும் தேவனுக்கு நாம் காட்டும் அடையாளங்கள் மற்றும் அவர் மீது நமது அன்பின் குறியீடு ஆகும். 19

ஓய்வுநாளின் மற்றொரு கூடுதல் நோக்கம், நமது பார்வையை உலகத்தின் காரியங்களிலிருந்து நித்திய ஆசீர்வாதங்களுக்கு உயர்த்துவதாகும். நமது சுறுசுறுப்பான வாழ்க்கையின் அநேக வழக்கமான பணிகளிலிருந்து இந்த பரிசுத்த நேரத்தின்போது விலகி, நாம் தெய்வீக தன்மையின் பங்காளிகளாகிற மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களைப் பெற்று நினைவுகூர்ந்து, நாம் “தேவனைப் பார்த்து பிழைத்திருக்கலாம்.” 20

பரிசுத்த ஆலயம்

தகுதியுள்ள பரிசுத்தவான்கள் தங்களுக்காகவும் மரித்தோருக்காகவும் பரிசுத்த சுவிசேஷ சடங்குகளையும் நியமங்களையும் நிறைவேற்ற, பரிசுத்த ஸ்தலங்களாகிய ஆலயங்களைக் கட்ட தன் ஜனத்திடம் கர்த்தர் எப்போதும் கட்டளையிட்டிருக்கிறார். அனைத்து ஆராதனை இடங்களிலும் ஆலயங்கள் மிகப் பரிசுத்தமானவை. ஒரு ஆலயம் மெய்யாகவே கர்த்தரின் வீடு, தேவனை ஆராதிக்கவும், அவரது மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களைப் பெற்று நினைவுகூரவும், விசேஷமாக வைக்கப்பட்டிருக்கிற பரிசுத்த ஸ்தலமாகும்.

இந்த ஊழியக்காலத்தில் கர்த்தர் வழிகாட்டியிருக்கிறார், உங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். தேவையான அனைத்தையும் ஆயத்தம் செய்யுங்கள். ஒரு வீட்டை ஸ்தாபியுங்கள், ஒரு ஜெப வீட்டை, உபவாசிக்கிற வீட்டை, விசுவாச வீட்டை, கற்கிற வீட்டை, மகிமையின் வீட்டை, ஒழுங்கின் வீட்டை, தேவனின் வீட்டை. 21 ஆலய ஆராதனையின் முக்கிய நோக்கம் நியமங்களில் பங்கேற்றல், மற்றும் உடன்படிக்கைகளைப்பற்றி கற்று, பெற்று, நினைவுகூர்வதாகும். நாம் அடிக்கடி போகிற பிற இடங்களை விட ஆலயத்தில் நாம் வித்தியாசமாக சிந்திக்கிறோம், செயல்படுகிறோம், உடுத்துகிறோம்.

ஓய்வுநாளின் முக்கிய நோக்கம், நமது பார்வையை உலகத்தின் காரியங்களிலிருந்து நித்திய ஆசீர்வாதங்களுக்கு உயர்த்துவதாகும். நமக்குத் தெரிந்த உலகப்பிரகார சூழலில் சிறிது நேரத்துக்கு விலகி, நாம் தெய்வீக தன்மையின் பங்காளிகளாகிற, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களைப் பெற்று நினைவுகூர்ந்து, நாம் “தேவனைப் பார்த்து பிழைத்திருக்கலாம்.” 22

ஓய்வுநாளும் ஆலயமும் முறையே ஒரு பரிசுத்த நேரத்துக்காகவும், ஒரு பரிசுத்த ஸ்தலத்துக்காகவும் குறிப்பாக தேவனை ஆராதிக்கவும், அவரது பிள்ளைகளுக்கு அவரது அதிமகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களைப் பெற்று நினைவுகூரவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை தயவுசெய்து கவனியுங்கள். தேவனால் ஏற்படுத்தப்பட்டபடி உதவிக்கான இந்த இரு தெய்வீக ஆதாரங்களின் முக்கிய நோக்கங்கள் ஒன்றே: நமது பரலோக பிதா, அவரது ஒரே பேறான குமாரன், பரிசுத்த ஆவி மற்றும் இரட்சகரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் நியமங்களுடனும் உடன்படிக்கைகளுடனும் தொடர்புடைய வாக்குத்தத்தங்கள் மீது வல்லமையாகவும் தொடர்ந்தும் நமது கவனத்தைச் செலுத்துவதாகும்.

நமது வீடுகள்

முக்கியமாக, ஒரு வீடு, நேரம் மற்றும் வெளியின் சிறந்த இணைப்பாக இருக்க வேண்டும், அங்கு தனிநபர்களும் குடும்பங்களும் தேவனின் மகா அருமையான வாக்குத்தத்தங்களை மிகுந்த ஆற்றலுடன் நினைவுகூர்கின்றனர். ஞாயிறு கூட்டங்களில் நேரம் செலவிடவும், ஒரு ஆலயத்தின் பரிசுத்த வெளியில் நுழையவும் வீட்டை விட்டுச் செல்வது முக்கியம், ஆனால் போதுமானதல்ல. அந்த பரிசுத்த நிகழ்ச்சிகளிலிருந்து கிடைத்த ஆவியையும் பலத்தையும் நமது வீட்டுக்குள் கொண்டு வரும்போதுதான், நாம் அநித்திய ஜீவியத்தின் மாபெரும் நோக்கங்கள் மீது நமது கவனத்தை தக்கவைக்க முடியும். நமது ஓய்வுநாள் மற்றும் ஆலய அனுபவங்கள் தேவனின் நித்திய வாக்குத்தத்தங்களில் நம்பிக்கையின் பரிபூரண பிரகாசத்துடன், 23 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவண்டை வர தொடர்ந்த, ஆழமான மனமாற்றத்துடன், பரிசுத்த ஆவியின் பிரசன்னத்துடனும் வல்லமையுடனும், கற்ற முக்கிய பாடங்களின் தொடர்ச்சியான நினைவூட்டல்களுடன், தனிநபர்களோடும் குடும்பங்களோடும் ஊறிவிடுகிற ஆவிக்குரிய கிரியாவூக்கியாக இருக்க வேண்டும்.

பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கட்டப்பட வேண்டுமென்று, 25 ஓய்வுநாளும் ஆலயமும் மேன்மையான வழியில்24 நமது வீடுகளில் ஏற்படுத்தி உதவ முடியும். அவரது பரிசுத்த நேரத்தில் நாம் வீடுகளில் செய்வனவும், அவரது பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கற்பதுவும் தெய்வீக தன்மையின் பங்குதாரர்களாக முக்கியமானவை.

வாக்குத்தத்தமும் சாட்சியும்

நாம் அநித்தியத்தின் அன்றாட மற்றும் உலகப்பிரகார காரியங்களால் எளிதாக மேற்கொள்ளப்படலாம். தூங்குதல், சாப்பிடுதல், உடுத்துதல், வேலை செய்தல், விளையாடுதல், உடற்பயிற்சி மற்றும் அனேக பல வழக்கமான நிகழ்ச்சிகள் தேவையானவை மற்றும் முக்கியமானவை. ஆனால் இறுதியாக, நாம் ஆவது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியிடமிருந்து கற்பது, நமது அறிவு மற்றும் சித்தத்தின் விளைவாகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் நமது அன்றாட முயற்சிகளின் கூட்டுத்தொகை மட்டுமே அல்ல.

சுவிசேஷம் செய்யப்படவேண்டிய வெவ்வேறு வேலைகளின் வழக்கமான பரிசோதனைப் பட்டியலைவிட மிக அதிகமானது. மாறாக இசைவாய் இணைக்கப்பட்ட, 26 ஒன்றாக நெய்யப்பட்ட நாம் பரலோக பிதா மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போலாகவும், தெய்வீக தன்மையின் பங்காளிகளாக இருக்கவும் கூட வடிவமைக்கப்பட்ட மகத்தான தொங்கலாடை. இந்த அதிகமான ஆவிக்குரிய உண்மை தேவைகளாலும் அக்கறைகளாலும், உலகத்தின் கவனக்குறைவாலும் உண்மையாகவே இலக்குக்கு அப்பாலே பார்த்து27 நாம் குருடாக்கப்பட்டு விட்டோம்.

நாம் ஞானமுள்ளவர்களாக நமது வழிகாட்டியாயிருக்க பரிசுத்த ஆவியை அழைக்கும்போது, 28 எது உண்மை என அவர் நமக்கு போதிப்பார் என நான் வாக்குத்தத்தம் செய்கிறேன். நாம் நமது நித்திய இலக்கை நிறைவேற்றி, தெய்வீக தன்மையின் பஙகாளிகளாகும்போது, “அவர் கிறிஸ்துவைப்பற்றி சாட்சியளித்து, பரலோக பார்வையால் நமது மனங்களை ஒளியேற்றுவார்.” 29

நமது நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளோடு தொடர்புடைய அதிமகா மேன்மையான அருமையுமான வாக்குத்தத்தங்கள் நிச்சயமானவை என நான் சாட்சியளிக்கிறேன். கர்த்தர் இவ்வாறு அறிவித்திருக்கிறார்,

“உங்கள் இரட்சிப்புக்காக அது உங்களிடத்தில் திரும்பும்படியாக நீங்கள் எனக்கு முன்பாக எப்படி நடப்பதென நான் உங்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கிறேன்.

“கர்த்தராகிய நான் சொல்வதை நீங்கள் செய்யும்போது நான் கட்டப்படுகிறேன், ஆனால் நான் சொல்வதை நீங்கள் செய்யாதபோது, உங்களுக்கு வாக்குத்தத்தம் இல்லை.” 30

நமது பரலோக பிதா ஜீவிக்கிறார் எனவும், இரட்சிப்பின் திட்டத்தை உருவாக்கியவர் அவர் எனவும் நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்து அவரது ஒரே பேறான குமாரன், நமது இரட்சகர் மற்றும் மீட்பர். பிதாவின் திட்டமும், வாக்குத்தத்தங்களும், இரட்சகரின் பாவநிவர்த்தியும், பரிசுத்த ஆவியின் தோழமையும் இந்த உலகத்தில் சமாதானத்தையும் வரவிருக்கிற உலகத்தில் நித்திய ஜீவனையும் சாத்தியமாக்குகிறது என நான் சாட்சியளிக்கிறேன். 31 இவைகளைப்பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.