2010–2019
தேவனின் உறுதியான சாட்சி: மார்மன் புஸ்தகம்
அக்டோபர் 2017


தேவனின் உறுதியான சாட்சி: மார்மன் புஸ்தகம்

மார்மன் புத்தகம், இயேசு கிறிஸ்துவின் தெய்வீகம், ஜோசப் ஸ்மித்தின் தீர்க்கதரிசன அழைப்பு மற்றும் இச்சபை பற்றிய முழுமையான சத்தியம் பற்றி தேவனின் உறுதியான சாட்சியாகும்.

மார்மன் புஸ்தகம் நமது மதத்திற்கு மாத்திரம் மூலைக்கல் அல்ல, ஆனால், சோதனைகள் அல்லது பதிலளிக்கப்படாத கேள்விகள் நம்மை தாக்கும்போது நமது சாட்சிகளுக்கும் இது மூலைக்கல்லாக மாறுகிறது, நமது சாட்சிகளை பாதுகாப்பான இடத்தில் காக்கலாம். விமர்சனமான வாக்குவாதங்கள் அனைத்தின் கூட்டான எடையை, சத்தியத்தின் அளவுகோல்களின் இந்த புஸ்தகத்தின் ஒரு எடை தாண்டுகிறது. ஏன்? ஏனெனில், பின்னர், மாறாக, இது உண்மையாயிருந்ததால், எந்த வரலாற்றுக்கும் அல்லது பிற வாக்குவாதங்களுக்கும் சம்பந்தமில்லாமல், ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், இது ஒரு மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபையாயிருக்கிறது. இந்தக் காரணத்திற்காக, மார்மன் புஸ்தகத்தை பொய்யென நிரூபிக்கும் எண்ணத்தில் விமர்சகர்களிருக்கிறார்கள், ஆனால் இந்த புஸ்தகம் உண்மையாயிருப்பதால் அவர்கள் எதிர்கொள்கிற தடைகள் வெல்ல முடியாததாயிருக்கிறது.

முதலாவதாக, குறைந்த கல்வியறிவுள்ள ஒரு 23 வயது விவசாய சிறுவனான ஜோசப் ஸ்மித், நூற்றுக்கணக்கான தனித்துவமான பெயர்களுடன், இடங்களுடன், அப்படியே, விரிவான கதைகளுடனும் நிகழ்ச்சிகளுடனும் எவ்வாறு ஒரு புஸ்தகத்தை உருவாக்கமுடியுமென விமர்சிப்பவர்கள் விளக்கவேண்டும். முன் சொல்லப்பட்டதைப்போல, மார்மன் புஸ்தகத்தின் வரலாற்றுத் தொகுப்பை உருவாக்க, ஏராளமான புஸ்தகங்களையும் பிற உள்ளூர் ஆதாரங்களையும் சார்ந்திருந்த அவர் ஒரு உருவாக்கும் திறனுள்ள மேதாவி என அநேக விமர்சகர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அவர்களுடைய வாக்குக்கு எதிராக, மொழிபெயர்ப்பு ஆரம்பமாகுவதற்கு முன்னால் இந்த குற்றம் காணும் எந்த ஆதாரங்களுடனும் ஜோசப்பைப் பார்த்ததாக எந்த ஒரு தனித்த சாட்சியுமில்லை.

இந்த வாக்குவாதம் உண்மையாக இருந்திருந்தாலும், மார்மன் புஸ்தகம் இருப்பதை விளக்க வருந்தத்தக்க விதமாக எதுவும் போதுமானதாயில்லை. கேள்விக்கு ஒருவர் பதிலையுமளிக்கவேண்டும். இந்த சொல்லப்படுகிற ஆதாரங்கள் அனைத்தையும் எவ்வாறு ஜோசப் படித்தார், சம்பந்தமில்லாதவைகளைப் பிரித்தெடுத்து, யார் எந்த இடத்தில் எப்போதிருந்தார்கள் போன்ற சிக்கலான உண்மைகளை ஒழுங்குபடுத்தி, பின்னர் சரியான ஞாபகத்தில் அவற்றை எழுத எப்படி உச்சரித்தார், ஏனெனில் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்க்கும்போது எந்தவித குறிப்புகளும் அவரிடத்திலில்லை. உண்மையில், அவருடைய மனைவி எம்மா நினைத்துப் பார்க்கிறார், “அதிலிருந்து படிப்பதற்கு கையெழுத்து பிரதிகளோ, புஸ்தகமோ அவரிடத்திலில்லை. . . அவரிடத்தில் அப்படி ஏதாவதிருந்திருந்தால் அவர் அதை என்னிடமிருந்து மறைத்திருக்கமாட்டார்.” 1

ஆகவே, எந்தக் குறிப்புமில்லாமல் 500 பக்கங்களுக்கும் அதிகமான புஸ்தகத்தின் இந்த விசேஷித்த உச்சரித்தலை எவ்வாறு ஜோசப் செய்தார். அப்படிச் செய்ய அவர் ஒரு உருவாக்கும் மேதையாக மட்டுமிருந்திருக்கமாட்டார் ஆனால், அசாதாரணமான ஞாபகசக்தி கொண்டவராயிருந்திருப்பார். ஆனால் இது உண்மையாயிருந்தால், இந்த விசேஷித்த திறமைக்கு ஏன் அவரது விமர்சகர்கள் கவனம் செலுத்தவில்லை?

ஆனால் இன்னுமிருக்கிறது. இந்த வாக்குவாதங்களின் விவரம் புஸ்தகத்தின் வரலாற்று தொகுப்புக்கு மட்டுமே. உண்மையான விவகாரங்கள் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஆவியுடன் பிரகாசிக்கிற ஒரு புஸ்தகத்தை எவ்வாறு ஜோசப் உண்டாக்கினார், அவருடைய காலத்திலுள்ள கிறிஸ்தவ நம்பிக்கைகளை தெளிவுபடுத்துகிற அல்லது எதிர்க்கிற இத்தகைய மகத்துவமான கோட்பாட்டை எங்கிருந்து அவர் பெற்றார்?

உதாரணமாக, ஆதாமின் வீழ்ச்சி, முன்னேற்றத்திற்கு ஒரு சாதகமான படி போன்ற கிறிஸ்தவ நம்பிக்கைகளின் அதிகமானவற்றிற்கு எதிராக மார்மன் புஸ்தகம் போதிக்கிறது. ஞானல்நானத்தில் செய்யப்படுகிற உடன்படிக்கைகள், வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை என இது வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் நம்மை அவர் சுத்திகரிப்பது மட்டுமல்ல நம்மை பரிபூரணமாக்குகிறாரென்ற ஆற்றலான உள்ளுணர்வை ஜோசப் எப்படி பெற்றாரென்று, கூடுதலாக ஒருவர் கேட்கலாம்? ஆல்மா  32லிலுள்ள விசுவாசத்தின் பிரமிக்கவைக்கும் பிரசங்கத்தை அவர் எங்கிருந்து பெற்றார்? ஒருவேளை இந்த பொருளைப்பற்றி, வேதங்கள் அனைத்திலுமுள்ள மிகவிசேஷித்த பிரசங்கமான இரட்சகரின் பாவநிவர்த்தியைப்பற்றி பென்யமீன் ராஜாவின் பிரசங்கத்தை எங்கிருந்து பெற்றார்? அல்லது, ஒலிவ மரத்தின் சிக்கலான அமைப்புடனும் கோட்பாட்டின் வளமையுடனும் அதன் உவமையை எங்கிருந்து பெற்றார்? இந்த உவமையை நான் படிக்கும்போது, அதன் விவரங்களைப் பின்பற்ற ஒரு படத்தை நான் வரையவேண்டியதிருக்கிறது. எந்த வித குறிப்புகளுமில்லாமல் தனது மனதிலிருந்து இந்த பிரசங்கங்களை ஜோசப் ஸ்மித், எழுதும்படி உச்சரித்தாரென்று இப்போது நாம் நம்ப நினைப்போமா?

இத்தகைய ஒரு முடிவுக்கு மாறாக, குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப்பற்றிய அதன் விசேஷித்த பிரசங்கங்களின் மகத்தான கோட்பாட்டின் சத்தியங்களால், தேவனின் கைரேகைகள் புஸ்தகம் முழுவதிலுமிருக்கிறது.

ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசியாயில்லாவிட்டால், பின்னர், இந்த பிற அநேக குறிப்பிடத்தக்க கோட்பாட்டின் உள்ளுணர்வுகளை கருத்தில்கொள்ளும்படி, அவர் ஒரு வேதசாஸ்திர மேதாவியாயிருந்தாரென விமர்சகர்கள் வாக்குவாதம் செய்திருப்பார்கள். ஆனால் இது  இப்படியிருந்தால், இத்தகைய விசாலமான தனித்துவமும் தெளிவுமான கோட்பாட்டை உருவாக்க, கிறிஸ்துவின் ஊழியத்தின் 1800 ஆண்டுகளில் ஏன் ஜோசப் மாத்திரமிருக்கவேண்டுமென ஒருவர் கேட்கலாம். ஏனெனில் இது புத்திசாலித்தனம் அல்ல, வெளிப்படுத்தல் இந்த புஸ்தகத்தின் ஆதாரமாயிருந்தது.

ஆனால் ஜோசப் ஸ்மித் அதீத ஞாபகசக்தியுடன், ஒரு உருவாக்கும் திறனுள்ளவராகவும் வேதசாஸ்திரத்தில் மேதாவியாயிருந்தாரென்றும் நாம் நினைத்தாலும், இந்த திறமைகள் மாத்திரம் அவரை ஒரு திறனுள்ள எழுத்தாளராக ஆக்கியிருக்காது. , மார்மன் புஸ்தகத்தின் நிலைத்திருப்பை விவரிக்க, 23 வயதில் ஜோசப் இயற்கையிலேயே எழுத்தாளரின் வரம் பெற்றிருந்தாரெனவும் விமர்சகர்கள் உரிமைகோரலாம்.23. இல்லையென்றால், டஜன்கணக்கான பெயர்கள், இடங்கள், நிகழ்ச்சிகளை எப்படி அவர் இணைத்து சீராக இணக்கமாக்கமுடியும்? யுத்த தந்திரங்களையும், ஆற்றல்மிக்க எழுச்சியான பிரசங்கங்களையும், “உங்கள் உடனுற்றார்களுக்கு நீங்கள் சேவை செய்யும்போது, தேவனுக்கே சேவை செய்கிறீர்கள்” (மோசியா 2:17), அல்லது “மனுஷன் பிழைத்திருக்கவே ஆதாம் வீழ்ந்துபோனான்” (2 நெப்பி 2:25) போன்ற லட்சக்கணக்கான மக்களால் அலங்கரிக்கப்பட்ட, மனப்பாடம் செய்யப்பட்ட, மேற்கோள் காட்டப்பட்ட, குளிர் சாதன பெட்டிகளின் கதவுகளில் ஒட்டப்பட்ட சொற்றொடர்களை அவரால் எப்படி எழுதமுடியும். இந்த செய்திகள் ஒரு உயிர்த்துடிப்புடன், ஜீவிக்கிற, சுவாசிக்கிற, உணர்த்துகிறதாயிருக்கிறது. இந்த அபார பணியை ஒரே தொகுப்பாக, ஏறக்குறைய 65 வேலை நாட்களில் எழுதுவதற்கு 23 வயதில் ஜோசப் ஸ்மித்துக்கு தேவையான திறமைகளிருந்தன எனச் சொல்வது வாழ்க்கையின் உண்மைக்கு புறம்பானது.

ஒரு அனுபவமிக்க, திறமையான எழுத்தாளரான தலைவர் ரசல்  எம். நெல்சன், சமீபத்திய மாநாட்டு உரையை 40 முறை சரிசெய்து எழுதியதாக பகிர்ந்துகொண்டார். அங்கிருந்து சில சிறிய இலக்கண மாற்றங்களைச் செய்ததுடன் ஜோசப் ஸ்மித் ஒரே தொகுப்பில் மார்மன் புஸ்தகம் முழுவதையும் எழுதுவதற்கு உச்சரித்தார் என இப்பொழுது நாம் நம்பவேண்டாமா?

ஜோசப்பின் மனைவி எம்மா இத்தகைய ஒரு சாதனையின் சாத்தியமில்லாமையை உறுதிசெய்கிறார். “[ஒரு வாலிபனாக] ஜோசப் ஸ்மித்தால் மார்மன் புஸ்தகத்தைப் போல் அல்ல, ஒரு தெளிவான நல்ல வார்த்தைகள் அமைப்பில் ஒரு கடிதத்தைக்கூட எழுத உச்சரிக்க முடியாது.” 2

இறுதியாக, அவைகள் சந்தேகத்துடனே நடந்துகொண்டிருக்கிற வாக்குவாதங்களை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும், இன்னமும் விமர்சகர்கள் மற்றொரு பெரிய தடையை எதிர்கொள்கிறார்கள். மார்மன் புஸ்தகம் தங்கத் தகடுகளின்மேல் எழுதப்பட்டிருந்தது என ஜோசப் ஸ்மித் அறிவித்தார். உலோகத் தகடுகளில் பூர்வகால எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்வரை பூர்வகால வரலாறுகள் எகிப்திய காகிதத்தில் அல்லது தோல் காகிதங்களில் எழுதப்பட்டிருந்ததென எல்லோரும் அறிந்திருந்ததால் அவருடைய காலத்தில் இந்த அறிவிப்பு பச்சாதாபமில்லாத விமர்சனத்துக்குள்ளாகியது. கூடுதலாக, மார்மன் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதைப்போல, சிமென்ட் கட்டடங்கள் பூர்வகால அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும்வரை, சிமென்டின் பயன் இந்த ஆரம்பகால அமெரிக்கர்களின் திறமைக்கு அப்பாலிருக்கிறது என விமர்சகர்கள் குரல் எழுப்பினர்.

சொன்னவைகள் செய்தவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, விமர்சகர்களால் சொல்லப்பட்டதைப்போல இந்த சொல்லப்பட்ட உண்மைகளும் வலிமைகளும் எதிர்பாராத விதமாக இணைந்திருக்கும் வகையில் மார்மன் புஸ்தகத்தை ஜோசப் எழுத சாத்தியமாக்கி, அப்படியே சாத்தானின் போலியான பணியைச் செய்யமுடியுமென எப்படி ஒருவரால் நம்பமுடியும். இப்போது இது எப்படி ஒரு அர்த்தமுள்ளதாகிறது? இத்தகைய வற்புறுத்தலுக்கு நேரடியான எதிர்ப்பில், சாத்தானை மறுக்கவும் கிறிஸ்துவைப்போன்ற வாழ்க்கையை வாழவும் லட்சக்கணக்கானவர்களை உணர்த்துகிறது.

விமர்சகர்களின் காரணங்களை நம்புவதற்கு சிலர் தெரிந்தெடுக்கும்போது, எனக்கு இது புத்திசாலித்தனத்திற்கும் ஆவிக்குரியதற்கும் உள்ள பாதையின் முடிவாயிருக்கிறது. இதை நம்ப அடுத்தடுத்து வருகிற நிரூபிக்காத கற்பனை கருத்துக்களை நான் நம்பவேண்டும். கூடுதலாக, கடைசிவரை தன்னுடைய சாட்சியில் உண்மையாக நிலைத்திருந்திருந்தாலும், 11 சாட்சிகளின்3 ஒவ்வொரு சாட்சியையும் நான் இகழவேண்டும், அதன் மேன்மையான சத்தியங்களுடன் இந்த பரிசுத்த புஸ்தகத்தின் பக்கத்திற்கு பக்கம் இருக்கிற தெய்வீக கோட்பாட்டை நான் மறுத்திருக்கவேண்டும், எந்த புஸ்தகத்தையும்விட மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதில், என்னையும் சேர்த்து திரளானவர்கள் தேவனிடத்தில் நெருங்கி வருகிறார்கள் என்ற சத்தியத்தை நான் அசட்டை செய்திருக்கவேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசுத்த ஆவியின் உறுதி செய்கிற மென்மையான குரலை நான் மறுத்திருக்கவேண்டும். உண்மையென நான் அறிந்திருக்கிற எல்லாவற்றிற்கும் இது எதிராயிருக்கிறது.

என்னுடைய நல்ல, புத்திசாலியான நண்பர்களில் ஒருவர் கொஞ்ச காலத்திற்கு சபையை விட்டு விலகினார். அவர் திரும்பி வந்ததைப்பற்றி சமீபத்தில் அவர் எனக்கு இப்படி எழுதினார். “வரலாறு, பூகோளம், மொழி மற்றும் கலாச்சாரத்தில் மார்மன் புஸ்தகம் எனக்கு நிரூபிக்கப்பட்டிருக்கவேண்டுமென ஆரம்பத்தில் நான் விரும்பினேன். ஆனால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் அவருடைய இரட்சிக்கும் ஊழியத்தைப்பற்றியும் இது என்ன போதிக்கிறதென்பதில் என் கவனத்தை மாற்றியபோது, அதன் உண்மையின் சாட்சியைப் பெற ஆரம்பித்தேன். . .ஒருநாள் எனது அறையில் மார்மன் புஸ்தகத்தை நான் படித்துக்கொண்டிருந்தபோது, நான் நிறுத்தி, முழங்கால்படியிட்டு இருதயப்பூர்வமான ஜெபத்தை ஏறெடுத்தபோது, சபையும் மார்மன் புஸ்தகமும் உண்மையானதென பரலோக பிதா ஆழமாக என் ஆவிக்குள் மெல்லியகுரலில் சொன்னதை நான் உணர்ந்தேன். மூன்றரை ஆண்டுகாலமாக சபையின் என்னுடைய மறுவிசாரிப்பு, ஏற்றுக்கொள்ளும்படியான அதன் சத்தியத்திற்கும் என்னை முழுஇருதயத்தோடு திரும்பக்கொண்டுவந்தது.”

என் நண்பனைப்போல, மார்மன் புஸ்தகத்தை தாழ்மையுடன் படித்து தியானிக்க ஒருவர் நேரம் எடுத்தால், ஆவியின் இனிய கனிகளுக்கு செவிகொடுத்தால், பின்னர் அவன் அல்லது அவள் இறுதியாக விரும்பத்தக்க சாட்சியைப் பெறுவார்கள்.

மார்மன் புஸ்தகம் நமக்கு தேவனின் விலையேறப்பெற்ற வரங்களில் ஒன்று. இது வாளாகவும் கேடயமாகவுமிருக்கிறது, நீதிமான்களின் இருதயங்களுக்காக போரிட இது தேவனின் வார்த்தையை யுத்தத்திற்கு அனுப்புகிறது, சத்தியத்தின் வாசல் காவலராக செயல்படுகிறது. பரிசுத்தவான்களாக, மார்மன் புஸ்தகத்திற்கு பாதுகாப்பளிக்க மாத்திரமல்ல, அதை ஆற்றலுடன் பயன்படுத்தவும், அதன் தெய்வீக கோட்பாட்டை வல்லமையுடன் பிரசங்கிக்கவும், இயேசு கிறிஸ்து பற்றிய மகுடமான சாட்சியைப் பகிரவும் நமக்கு சிலாக்கியமிருக்கிறது.

தேவனின் வரத்தாலும் வல்லமையாலும் மார்மன் புஸ்தகம் மொழிபெயர்க்கப்பட்டதென்று எனது பயபக்தியில் நான் சாட்சியளிக்கிறேன். இது, இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தின், தேவனின் தவிர்க்கமுடியாத சாட்சியாகவும், ஜோசப் ஸ்மித்தின் தீர்க்கதரிசன அழைப்பாகவும், இந்த சபையின் முழுமையான சத்தியமாகவுமிருக்கிறது. அவர்கள் “ஒருபோதும் பின்வாங்கிப்போகாதிருந்தார்கள்” (ஆல்மா 23:6) என்ற மனமாறிய லாமனியர்களிருந்ததைப்போல, நமக்கும் சொல்லப்பட்டிருக்கிற இது நம்முடைய சாட்சிகளின் தலைக்கல்லாயிருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

  1. Emma Smith, in “Last Testimony of Sister Emma,” Saints’ Herald, Oct. 1, 1879, 289, 290.

  2. Emma Smith, in “Last Testimony of Sister Emma,” 290.

  3. See “The Testimony of Three Witnesses” and “The Testimony of Eight Witnesses,” Book of Mormon.