2010–2019
அவர் நம்மில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்
அக்டோபர் 2017


அவர் நம்மில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்

உண்மையான அன்புடன் பிறருக்கு சேவை செய்து மன்னிப்பதால், நாம் குணமாக்கப்பட்டு நமது சொந்த சவால்களை மேற்கொள்ள பெலன் பெறுகிறோம்.

கடைசி இராப்போஜனத்தின்போது, இரட்சகர் தனது சீஷர்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுத்து சொன்னார்:

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” 1

இன்னும் அதிகமாய், இன்னும் பெரியதாய், இன்னும் அதிக தெய்வீகமாய்ச் செய்ய ஒரு புதிய கட்டளை இரட்சகரின் சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த புதிய கட்டளையும் அழைப்பும், “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” என்ற முக்கிய சொற்றொடரில் சுருக்கப்பட்டிருக்கிறது.

செயலில் அன்பு; அன்பே சேவை

“அன்பு, ஆழமான அர்ப்பணிப்பு, அக்கறை, மற்றும் பாசத்தின் உணர்வு. அவருடைய பிள்ளைகளுக்கான தேவனின் அன்பின் மகத்தான எடுத்துக்காட்டு, இயேசு கிறிஸ்துவின் அளவிடமுடியாத பாவநிவர்த்தியில் காணப்படுகிறது.” 2 “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” 3 என யோவான் எழுதினான். “தேவனிடத்திலும் சகமனிதர்களிடமும் அன்புள்ளவர்களாயிருப்பது இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் ஒரு குணாதிசயம்.” 4

சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் மூத்த பேரன் ஜோஸூக்கு நான்கு வயதாயிருந்தபோது அவன் என் மனைவியுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அவர்கள் சிரித்துக்கொண்டு, ஒன்றாக நன்கு நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்தபோது, “பாட்டி, நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?” என எங்கள் பேரன் அவளைக் கேட்டான்.

“ஆம் ஜோஸ், நான் உன்னை நேசிக்கிறேன்” என அவனுக்கு அவள் பதிலளித்தாள்.

பின்னர் அவன் மற்றொரு கேள்வியைக் கேட்டான்: “நீங்கள் என்னை நேசிக்கிறீர்களென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

அவளுடைய உணர்வுகளையும், அவனுக்காக அவள் செய்த எல்லாவற்றையும், அவனுக்காக அவள் செய்ய விருப்பப்படுகிறவற்றையும் கூட அவனுக்குக் கூறி அவனுக்கு அவள் விளக்கமளித்தாள்.

பின்னர், “நீ என்னை நேசிக்கிறாய் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்ற இந்த ஊடுருவும் விசாரிப்பையும் சேர்த்து இதே கேள்விகளை என்னுடைய மனைவி, ஜோஸிடம் கேட்டாள்.

ஒரு மாசற்ற ஆனால் உண்மையான பதிலுடன் அவன் சொன்னான், நான் உங்களை நேசிக்கிறேன், ஏனெனில் அதை நான் இருதயத்தின் உள்ளே உணருகிறேன். அவனுடைய பாட்டியிடம் ஜோஸிடமுள்ள அன்பான நடத்தை அந்நாளிலும் எப்போதும் செயல்கள் மற்றும் ஆழமான உணர்வுகளின் சேர்க்கையைக் காட்டுகிறது.

“இதோ, நீங்கள் ஞானத்தைக் கற்கவும், உங்கள் உடனுற்றார்களுக்கு நீங்கள் சேவை செய்யும்போது தேவனுக்கே சேவை செய்கிறீர்களென்று நீங்கள் கற்றுக்கொள்ளவுமே இந்தக் காரியங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன்”5 என பென்யமீன் இராஜா போதித்தான். 5

வித்தியாசமான சூழ்நிலைகளுக்காக மிக அதிகமான  கஷ்டங்களினிமித்தம் இன்றைய உலகத்தில் ஒரு வேடிக்கையான குறியீடுடன் அல்லது ஒரு நல்ல படத்துடன் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்ற வார்த்தைகளுடன் ஒரு செய்தியை அனுப்புவது நல்லதாகவும் மதிப்புள்ளதாகவுமிருக்கிறது. ஆனால், நமது கைப்பேசிகளை தள்ளிவைத்துவிட்டு, நமது கைகளாலும் கால்களாலும் அதிகத் தேவையிலிருப்போருக்கு நம்மில் அநேகர் உதவி செய்யவேண்டியதாயிருக்கிறது. அன்பில்லாத சேவை கிரியைகளில்லாத விசுவாசத்தைப் போலிருக்கிறது, அது செத்ததாயிருக்கிறது.

அன்பென்பது மன்னிப்பு

தயாளமான 6கிறிஸ்துவின் தூய அன்பு சேவை செய்யவும் அளிக்கவும் நமக்கு  உணர்த்துவது மாத்திரமல்ல,   சூழ்நிலைகளுக்கு அப்பால் மன்னிக்க நம்மைப் பெலப்படுத்தவும் செய்கிறது. என்னை அதிரவைத்து என் வாழ்க்கையை மாற்றிய ஒரு அனுபவத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய குடும்பத்தில் என்ன நடந்ததென பகிர்ந்துகொள்ள கூப்பரின் பெற்றோரான இங்கிருக்கிற டெட்டும் ஷாரனும் எனக்கு அனுமதியளித்திருக்கின்றனர். கூப்பரின் தகப்பனான டெட்டின் கண்ணோட்டத்திலிருந்து அனுபவத்தை நான் கூறுவேன்.

அனைவரும் பள்ளிக்கூடத்திற்குப் போகும் முதல் நாளில் பேருந்தில் ஏற பேருந்து நிறுத்துமிடத்தில் காத்திருந்த நாள், ஆகஸ்ட்  21, 2008. நான்கு  வயதாயிருந்த கூப்பர் சைக்கிளில் சென்றான், என்னுடைய மனைவி ஷாரன் நடந்தாள்.

எனது மனைவி தெருவுக்கு அந்தப் பக்கம் நின்றுகொண்டு தெருவைக் கடந்துவரும்படி கூப்பரிடம் கூறினாள். அதே நேரத்தில் ஒரு கார் மெதுவாக இடது பக்கம் திரும்பி கூப்பர் மேல் ஏறியது.

கூப்பர் மேல் ஒரு மோட்டார் வாகனம் ஏறிவிட்டதென்று பக்கத்து வீட்டுகாரரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவனைப் பார்க்க பேருந்து நிறுத்துமிடத்திற்கு நான் வேகமாக வாகனம் ஓட்டிச் சென்றேன். கூப்பர் புல்மேல் படுத்துக்கொண்டு மூச்சுவிட போராடிக்கொண்டிருந்தான், ஆனால் காணும்படியாக காயங்கள் எதுவுமில்லை.

நான் கூப்பர் அருகில் முழங்காலில் நின்று “எல்லாம் சரியாகிவிடும். பொறுமையாயிரு” போன்ற ஊக்குவிக்கும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய பிரதான ஆசாரியர்கள் குழுத் தலைவர் நேத்தன் அவருடைய மனைவியுடன் அங்கு வந்தார். கூப்பருக்கு ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைக் கொடுக்க அவர் ஆலோசனையளித்தார். கூப்பரின் தலையின்மேல் நாங்கள் எங்கள் கைகளை வைத்தோம். ஆசீர்வாதத்தில் நான் என்ன சொன்னேன் என்று எனக்கு நினைவில்லை. ஆனால், மற்றவர்கள் எங்களைச் சுற்றி நின்றது எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது, அந்த நேரத்தில் கூப்பர் மரிக்கப்போகிறான் என்பது எனக்குத் தெரிந்தது.

ஹெலிகாப்டர் மூலமாக கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே அவன் மரித்தான். என்னுடைய பூலோக உக்கிராணத்துவம் முடிந்ததென்றும் கூப்பர் இப்பொழுது அவருடைய கண்காணிப்பிலிருக்கிறான் என்றும் பரலோக பிதா என்னிடம் சொல்லிக்கொண்டிருந்ததாக நான் உணர்ந்தேன்.

மருத்துவமனையில் சிறிது நேரம் நாங்கள் கூப்பருடன் செலவழித்தோம். நாங்கள் அவனைப் தூக்கிக்கொண்டு அவனை வழியனுப்பவும், நாங்கள் விரும்பியதைப்போல அவனைத் தாங்கிக்கொண்டு அவனோடு முடிந்தவரை அதிக நேரத்தை செலவிடவும், பணியாட்கள் அவனை ஆயத்தப்படுத்தினர்.

வீட்டிற்கு வரும் வழியில், துக்கத்தில் முழ்கிய என்னுடைய மனைவியும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு காரை ஓட்டி வந்த பையனைப்பற்றி பேசிக்கொண்டோம். எங்கள் பக்கத்து தெருவில் அவன் வசித்து வந்தாலும், எங்கள் தொகுதி எல்லைக்குள்ளிருந்தாலும் எங்களுக்கு அவனைத் தெரியாது.

துக்கத்தில் முற்றிலுமாக நாங்கள் துவண்டிருந்ததால் அடுத்த நாள் எங்களுக்கு மிகக் கடினமாக இருந்தது. நான் முழங்காலில் நின்று, நான் எப்போதுமே ஏறெடுக்காத மிக உருக்கமான  ஜெபத்தை ஏறெடுத்தேன். என்னுடைய தாங்கமுடியாத துக்கத்தை எடுத்துப்போடும்படி, என்னுடைய இரட்சகரின் நாமத்தில் பரலோக பிதாவிடம் நான் கேட்டேன். அவர் அப்படியே செய்தார்.

வாகனத்தை ஓட்டி வந்த அந்த வாலிபனையும் அவனுடைய பெற்றோரையும் ஆலோசகரின் வீட்டில் சந்திக்க, அந்த நாளின் பிற்பகுதியில் எங்களுடைய பிணையத் தலைமையின் ஆலோசகர்களில் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். வாலிபனும் அவனது பெற்றோரும் வந்துசேர ஷாரனும் நானும் காத்திருந்தோம். கதவு திறந்தபோது முதன்முறையாக நாங்கள் அவர்களை சந்தித்தோம். “அவனிடம் போங்கள்” என என்னுடைய ஆயர் என்னுடைய காதில் மென்மையாகக் கூறினார். ஷாரனும் நானும் அவனை அணைத்துக்கொண்டோம். நீண்ட நேரமானதாகத் தோன்றிய அளவுக்கு நாங்கள் ஒன்றாக அழுதோம். நடந்தது ஒரு விபத்து என நாங்கள் அறிவோம் என நாங்கள் அவனிடம் கூறினோம்.

நாங்கள் இருவரும் ஒரேவழியில் உணர்ந்தது ஷாரனுக்கும் எனக்கும் அற்புதமாயிருந்தது, நாங்கள் இன்னமும் அப்படியே உணருகிறோம். தேவனின் கிருபையால் இந்த நல்ல வாலிபனை நேசிக்க, நீதியின் பாதையை, தெளிவான பாதையை, ஒரே பாதையை எங்களால் எடுக்க முடிந்தது.

பல ஆண்டுகளாக நாங்கள் வாலிபனிடமும் அவனுடைய குடும்பத்தினரிடமும் மிக நெருக்கமானோம். அவனுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான நேரங்களை அவன் எங்களோடு பகிர்ந்துகொண்டான். அவனுடைய ஊழியத்திற்காக அவன் ஆயத்தப்பட்டபோது நாங்கள் அவனுடன் ஆலயத்திற்குச் சென்றோம். 7

சகோதர சகோதரிகளே, நமது பரலோக பிதா நம்மை நேசிக்கிறாரென சந்தேகத்துக்கிடமில்லாமல் டெட்டுக்குத் தெரியும். மன்னிக்க முடிவதும், அந்த வழியில் அவருடைய சுமைகளை இறக்கவும் முடிகிறது மன்னிக்கப்படுவதைப்போன்று இனிமையானது என்பதை அவர் அறிவார். இந்த இனிமை நமது மகத்தான உதாரணபுருஷரின் பின்வரும் எடுத்துக்காட்டிலிருந்து வருகிறது. “அவர் ஜனங்களுடைய துன்பங்களையும், நோய்களையும் தம்மேல் ஏற்றுக்கொள்வார் என்ற வசனம் நிறைவேறும்படியாய் அவர் புறப்பட்டுப்போய். சகலவித துன்பங்களையும், உபத்திரவங்களையும் சோதனைகளையும் அனுபவிப்பார்” 8 என மார்மன் புஸ்தகத்தில் இரட்சகரைக் குறித்து ஆல்மா அறிவித்தான்.

சகோதர சகோதரிகளே, அன்பு மற்றும் மன்னிப்பின் என்ன ஒரு அற்புதமான கதை. மற்றவர்களுக்கு நாம் சேவைசெய்து மன்னிக்குப்போது, அதைப்போன்றே நமக்கு ஆனந்தமும் சந்தோஷமுமிருக்கும். “நாம் எப்படிப்பட்ட குடும்பம்?” என எங்களுடைய பேரப்பிள்ளைகளில் ஒருவனான ஜார்ஜி, அடிக்கடி கேட்கிறான். “நாம் ஒரு சந்தோஷமான குடும்பமென!” அவன் பதிலளிக்கிறான்.

“நாம் நமது வாழ்க்கையை சோதித்து, இரக்கத்தால், அன்பால், தயாளத்தால் இரட்சகரின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற தீர்மானிப்போமாக” 9 என தலைவர் தாமஸ்  எஸ். மான்சன் நமக்கு ஆலோசனையளித்தார்.

நமது பரலோக பிதாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை நேசிக்கிறார்களென்றும், அவர்கள் நம்மை நேசிக்கிறதைப்போல நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க நமக்குதவ அவர்கள் விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்களென்றும் நான் அறிவேன். உண்மையான அன்புடன் மற்றவர்களுக்கு சேவை செய்வதாலும் மன்னிப்பதாலும் நாம் குணமாக்கப்பட்டு பெலன் பெற்று நமது சவால்களை மேற்கொள்வோம் என நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அதையே அறிவிக்கிறேன், ஆமென்.