2010–2019
பரலோக வெளிச்சத்தைத் தாங்குபவர்கள்
அக்டோபர் 2017


பரலோக வெளிச்சத்தைத் தாங்குபவர்கள்

தேவனுடைய ஆசாரியத்துவத்தைத் தாங்கியிருப்பவராகவும், இயேசு கிறிஸ்துவின் சீஷராகவும் நீங்கள் அந்த ஒளியை ஏந்துபவர்கள்.

தபால் அலுவலகத்தில் தபால் தலைகள் வாங்க ஒரு முதியவர், சேவை பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். அவர் கஷ்டப்பட்டு நடப்பதைக் கவனித்த ஒரு இளம்பெண் நேரத்தை மிச்சப்படுத்த ஒரு இயந்திரத்திலிருந்து, எப்படித் தபால்தலைகளை வாங்குவது என அவருக்குக் காட்ட முன்வந்தாள். அந்த வயதானவர் சொன்னார், “நன்றி, நான் காத்திருப்பதையே விரும்புகிறேன். எனது வாதநோயைப்பற்றி அந்த இயந்திரம் கேட்காது.”

சில சமயங்களில் நமது பிரச்சினைகளைப்பற்றி அக்கறையுள்ள ஒருவரிடம் பேசுவது பலனளிக்கிறது.

வேதனையும், துக்கமும், சுகவீனமும் நாம் அனைவரும் பகிர்ந்துகொள்கிற அனுபவங்கள், விபத்து, துன்பம், மற்றும் துரதிர்ஷ்டத்தின் தருணங்கள் நமது ஆத்துமாவின் சொந்த உள் வன்பொருளில் பெருமளவு நினைவுகளாக சேருகின்றன.

நமது சரீர சுகத்தைப் பொருத்தமட்டில் நமது உலகப் பயணத்தின் பகுதியாக வயதாவதையும் சுகவீனத்தையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். மாம்ச சரீரத்தை புரிந்து கொண்டிருக்கிற தொழில்முறை வல்லுநர்களிடம் நாம் ஆலோசனை கேட்கிறோம். நாம் உணர்வுபூர்வமான பிரச்சினை அல்லது மன நலம் குன்றி கஷ்டப்படும்போது, இவ்விதமான வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கிற வல்லுநர்களின் உதவியை நாடுகிறோம்.

இந்த அநித்தியத்தில் சரீர மற்றும் உணர்வுபூர்வ பாடுகளை எதிர்கொள்வதுபோல, நாம் ஆவிக்குரிய பிரகார சவால்களையும் எதிர்கொள்கிறோம். நம்மில் அதிகமானோர் நமது வாழ்க்கையில் நமது சாட்சி பிரகாசமாக எரிந்த நேரங்களை அனுபவித்திருக்கிறோம். நமது பரலோக பிதா தூரத்திலிருப்பதுபோலத் தெரிகிற சமயங்களையும் நாம் அனுபவித்திருக்கிறோம். ஆவிக்குரிய காரியங்களை நமது முழு இருதயத்தோடும் பொக்கிஷப்படுத்திய நேரங்களும் உண்டு. அவை அருமை குறைந்த அல்லது முக்கியத்துவம் குறைந்த நேரங்களாகவும் இருக்கலாம்.

தேக்கநிலையிலிருந்து நாம் எப்படி குணம் பெறலாம் மற்றும் பிரகாசமான ஆவிக்குரிய நலமான பாதையில் நடக்கலாம் என்ற ஆவிக்குரிய நலத்தைப்பற்றி இன்று நான் பேச விரும்புகிறேன்,.

ஆவிக்குரிய சுகவீனம்

சில சமயங்களில் பாவத்தின் விளைவாகவும், உணர்வுபூர்வ காயங்களாலும் ஆவிக்குரிய சுகவீனம் வருகிறது. சில சமயங்களில் ஆவிக்குரிய தடைகள் என்ன நடக்கிறது என சொல்லமுடியாதபடிக்கு மெதுவாக வருகின்றன. படிவப்பாறை அடுக்குகள் போல ஆவிக்குரிய வேதனையும் துயரமும் நமது ஆத்துமாவில் பாரத்தை ஏற்றி காலப்போக்கில் அதிகமாகி, கிட்டத்தட்ட தாங்க முடியாமல் அதிக பாரமாகும்வரை வளருகிறது. உதாரணமாக வேலையிலும், வீட்டிலும், சபையிலும் நாம் சுவிசேஷத்தின் சந்தோஷத்தை இழக்குமளவுக்கு பொறுப்புகள் அதிகமாகும்போது இது நடக்கிறது. நாம் செய்வதற்கு இன்னும் ஒன்றுமில்லை அல்லது தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது நமது பெலனுக்கு அப்பாற்பட்டது என்றும் நாம் உணரலாம்.

ஆவிக்குரிய பாடுகள் உண்மை என்பதால் மட்டுமே அவை குணமாக்க முடியாதவை என்று அர்த்தமல்ல்.

நாம் ஆவிக்குரிய பிரகாரம் குணமாக்கலாம்.

ஆழமான ஆவிக்குரிய காயங்கள் கூட, ஆம், குணப்படுத்த முடியாதது போலத் தோன்றுபவை கூட, குணமாக்கப்படலாம்.

என்னுடைய அன்பான நண்பர்களே, நமது நாளில் இயேசு கிறிஸ்துவின் குணமாக்கும் வல்லமை இல்லாமல் இல்லை.

இரட்சகரது குணமாக்கும் தொடுதல் அவரது நாளைப் போல நமது நாளிலும் வாழ்க்கையை மாற்றக்கூடும். நமக்கு விசுவாசமிருந்தால், அவர் நமது கரங்களைப் பிடித்து, நமது ஆத்துமாக்களை பரலோக வெளிச்சத்துடனும் குணமாக்குதலாலும் நிரப்பி, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட,” என்ற ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறலாம். 1

இருளும் வெளிச்சமும்

நமது ஆவிக்குரிய நோய்களை எது ஏற்படுத்தினாலும், அவை அனைத்துக்கும் பொதுவாக ஒன்று இருக்கிறது: தெய்வீக வெளிச்சம் இல்லாதது.

தெளிவாகப் பார்க்கும் நமது திறமையை இருள் குறைக்கிறது. ஒரு சமயம் சமமாகவும் தெளிவாகவும் இருந்து, நமது பார்வையை மங்கலாக்குகிறது. நாம் இருளிலிருக்கும்போது, நாம் மோசமான தேர்வுகளைச் செய்யலாம், ஏனெனில் நமது பாதையில் ஆபத்துக்களைப் பார்க்க முடிவதில்லை. நாம் இருளில் இருக்கும்போது, நாம் நம்பிக்கை இழக்க நேரிடலாம், ஏனெனில் நாம் முன்னேறிக்கொண்டு இருந்தால், நமக்காகக் காத்திருக்கிற சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பார்க்க முடியாது.

மாறாக, வெளிச்சம், பொருட்கள் உண்மையாகவே இருப்பதைப் போல பார்க்க நம்மை அனுமதிக்கிறது. அது உண்மைக்கும் தப்புக்கும், முக்கியமானதற்கும் அற்பமானதற்கும் இடையே பிரித்தறிய நம்மை அனுமதிக்கிறது. நாம் வெளிச்சத்தில் இருக்கும்போது, உண்மையான கொள்கைகளின் அடிப்படையில் நாம் நீதியான தேர்வுகள் செய்ய முடியும். நாம் ஒளியில் இருக்கும்போது, “பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தைப்” பெறுகிறோம், 2 ஏனெனில் நாம் நமது அநித்திய பாடுகளை நித்திய பார்வையிலிருந்து பார்க்க முடிகிறது.

நாம் உலகத்தின் நிழல்களிலிருந்து வெளியே, கிறிஸ்துவின் நித்திய வெளிச்சத்தில் அடியெடுத்து வைத்தால், நாம் ஆவிக்குரிய குணமாக்குதலைக் காண்கிறோம்.

வெளிச்சத்தின் கோட்பாட்டுக் கருத்தை நாம் புரிந்து அதிகம் பிரயோகிக்கும்போது, எல்லா பக்கத்திலிருந்தும் கையிலிருந்தும் நம்மை வியாகுலப்படுத்த அல்லது தொல்லைப்படுத்துகிற ஆவிக்குரிய சுகவீனத்துக்கு எதிராக நாம் அதிகமாக பாதுகாத்துக்கொள்ள முடியும். நாம் ஆற்றலுள்ள, தைரியமிக்க, கவனிக்கிற, தாழ்மையான, பரிசுத்த ஆசாரியத்துவம் தரித்தவர்களாக, நமது பாசத்துக்குரிய, நித்திய இராஜாவின் உண்மையான சேவகர்களாகவும் சீஷர்களாகவும் நாம் சிறப்பாக சேவை செய்ய முடியும்.

உலகத்தின் வெளிச்சம்

இயேசு கிறிஸ்து சொன்னார், “நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்.” 3

இதன் அர்த்தம் என்ன?

எளிமையாகவெனில் இப்படி: இயேசு கிறிஸ்துவை தாழ்மையாகப் பின்பற்றுபவர்கள் அவரது ஒளியை அனுபவித்துப் பகிர்ந்து கொள்வார்கள். மிகவும் கடுமையான இருளைக்கூட இறுதில் விலக்கும்வரை அந்த ஒளி அதிகரிக்கும்.

அதாவது, இரட்சகரிடமிருந்து புறப்படுகிற வல்லமை, பலத்த செல்வாக்காக இருக்கிறது. “ஆகாயத்தின் விரிவுகளை நிறைக்க தேவபிரசன்னத்திலிருந்து” 4இது வருகிறது. இந்த வல்லமை தெளிவுபடுத்தி, உயர்த்தி, நமது வாழ்க்கையை ஒளியேற்றுவதால், வேதங்கள் இதை அடிக்கடி வெளிச்சம் என அழைக்கிறது, ஆனால் இது ஆவி மற்றும் சத்தியம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கோட்பாடும் உடன்படிக்கைகளிலும் நாம் வாசிக்கிறோம், “கர்த்தரின் வார்த்தை சத்தியம், சத்தியமான எதுவும் ஒளி, ஒளியான எதுவும் ஆவி, இயேசு கிறிஸ்துவின் ஆவிகூட.” 5

இந்த ஆழமான உள்ளுணர்வு, ஒளியே சத்தியம், இந்த ஒளி உலகத்தில் வருகிற ஒவ்வொரு ஆத்துமா மீதும் ஒளியேற்றுகிறது என்பது நமபிக்கையுடையதும் முக்கியமானதும் கூட. கிறிஸ்துவின் ஒளி தெளிவுபடுத்தி, ஆவியின் சத்தத்தைக் கேட்கிற அனைவரின் ஆத்துமாக்களையும் நிரப்புகிறது. 6

கிறிஸ்துவின் ஒளி பிரபஞ்சத்தை நிரப்புகிறது.

அது பூமியை நிரப்புகிறது.

அது ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்ப முடியும்.

“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல.” 7 அவரது ஒளி அனைவருக்கும் கிடைக்கிறது. பெரியவரானாலும் சிறியவரானாலும், ஐஸ்வர்யவானானாலும் தரித்திரனானாலும், சிலாக்கியம் பெற்றவரானாலும் அல்லது சாதகமற்றவர்களானாலும்.

கிறிஸ்துவின் ஒளியைப் பெற நீங்கள் உங்கள் மனத்தையும் இருதயத்தையும் திறந்தால், தாழ்மையாக இரட்சகரைப் பின்தொடர்ந்தால், நீங்கள் அதிக ஒளியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையிலிருந்து இருள் விரட்டப்படும் வரி வரிமேல் வரியாகவும், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சமாக, நீங்கள் உங்கள் ஆத்துமாக்களுக்குள் ஒளியையும் சத்தியத்தையும் சேர்ப்பீர்கள். 8

தேவன் உங்கள் கண்களைத் திறப்பார்.

தேவன் ஒரு புதிய இருதயத்தைக் கொடுப்பார்.

தேவனின் அன்பும் ஒளியும் சத்தியமும் புதைந்துள்ளவைகளை உயிருள்ளவைகளாக கொண்டு வருவார், நீங்கள் கிறிஸ்துவுக்குள் புதிய ஜீவனாக மறுபடியும் பிறப்பீர்கள். 9

கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார், “உனது கண் எனது மகிமையை மட்டும் பாரத்தால், உங்கள் மொத்த சரரீரமும் ஒளியால் நிரப்பப்படும், உங்களில் இருள் இருக்காது. ஒளியால் நிரப்பப்படுகிற சரீரம் அனைத்தையும் அறிகிறது.” 10

ஆவிக்குரிய சுகவீனத்துக்கு இதுவே இறுதியான தீர்வு. ஒளியின் பிரசன்னத்தால் இருள் விலகும்.

ஆவிக்குரிய இருளுக்கு ஒரு உருவகம்

எனினும் அவரது ஒளியைத் தழுவ தேவன் நம்மைக் கட்டாயப்படுத்த மாட்டார்.

நாம் இருளோடு சௌகரியமாக இருந்தால், நமது இருதயங்கள் மாறுவது சாத்தியமில்லை.

ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால், நாம் ஆர்வமாக ஒளியை உள்ளே அனுமதிக்க வேண்டும்.

நமது பூமி கோளம் முழுவதும், ஒரு விமான ஓட்டியாக எனது பயணங்களின்போது, தேவனின் சிருஷ்டிப்பின் அழகையும் பரிபூரணத்தையும் பார்த்து மயங்கியிருக்கிறேன். பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தொடர்பு என்னை சிறைப்பிடிப்பதாக விசேஷமாகக் கண்டேன். இருளும் ஒளியும் எப்படி நிலைத்திருக்கிறது என்பதற்கு இது ஒரு ஆழமான விளக்கப்பாடமாக கருதுகிறேன்.

நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடி, ஒவ்வொரு 24 மணிகளுக்குள், இரவு பகலாகிறது, பகல் இரவாகிறது.

எனவே, பின்னர் எது இரவு?

இரவு நிழல் என்பதை விட அதிகம் எதுவுமில்லை.

மிகவும் இருண்ட இரவுகளில் கூட, தன் ஒளியை வீச சூரியன் தவறுவதில்லை. எப்போதும் போல பிரகாசமாக அது பிரகாசிக்கிறது. ஆனால் பூமியின் பாதி இருளிலிருக்கிறது.

ஒளி இல்லாமலிருப்பது இருளை ஏற்படுத்தும்.

இரவின் இருள் விழும்போது சூரியன் அணைந்துவிட்டது என நாம் விரக்தியடைவதோ கவலைப்படுவதோ இல்லை. சூரியன் இருக்கிறதா அல்லது மரித்துவிட்டதா என நாம் ஆராய்வதில்லை. நாம் ஒரு நிழலில் இருக்கிறோம், பூமி தொடர்ந்து சுற்றும், அதன் விளைவாக சூரியனின் கதிர்கள் மீண்டும் நம்மிடம் வரும் என நாம் புரிந்து கொள்கிறோம்.

இருள் ஒளியில்லை என்பதற்கான அடையாளம் இல்லை. அடிக்கடி ஒளியைப் பெற நாம் சரியான இடத்தில் இல்லை என்பதே அதன் அர்த்தம். சமீபத்திய சூரிய கிரகணத்தின்போது, ஒரு பிரகாசமான வெப்பமான நாளில், சந்திரனால் உருவாக்கப்பட்ட ஒரு குறுகலான நிழல் பட்டைக்குள் செல்ல அநேகர் முயற்சித்தனர்.

அதே விதமாக, ஆவிக்குரிய ஒளி தொடர்ந்து தேவனின் அனைத்து ஜீவராசி மீதும் ஒளிர்கிறது. சாத்தான் ஒரு நிழலை உருவாக்கவும் அல்லது நாமே ஏற்படுத்துகிற நிழலுக்குள் தள்ள எல்லா முயற்சியையும் செய்வான். நமது சொந்த கிரகணத்தை உண்டாக்க அவன் தூண்டுவான். அவனது குழியின் இருளில் நம்மை தள்ளுவான்.

ஒருசமயத்தில் ஒளியில் நடந்து கர்த்தரில் களிகூர்ந்தவர்களைச் சுற்றி கூட மறதியின் திரையை ஆவிக்குரிய இருள் போடக்கூடும். இருப்பினும் மிகவும் இருள் சூழ்ந்த தருணங்களில், “ஆண்டவரே என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்.” 11 என ஜெபிக்கும்போதும் தேவன் நமது தாழ்மையான ஜெபங்களைக் கேட்கிறார்.

ஆல்மாவின் நாட்களில் ஆவிக்குரிய காரியங்களை ஏற்க அநேகர் போராடினர், அவர்களது அவிசுவாசத்தினிமித்தம் தேவனின் ஒளியும் சத்தியமும் அவர்களது ஆத்துமாக்களுக்குள் நுழைய முடியவில்லை. அவர்களுடைய இருதயங்கள் கடினமாயிருந்தது. 12

நாம் வெளிச்சத்தை ஏந்துபவர்கள்

சகோதரரே, இயேசு கிறிஸ்துவின் தெய்வீக ஒளியையும் சத்தியத்தையும் பார்க்க சரியான இடத்தில் இருப்பது நம்மைப் பொறுத்தது. இரவு வந்து உலகம் இருளாகத் தெரிந்தாலும், நாம் கிறிஸ்துவின் ஒளியில் நடக்கவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும், அவர் இருப்பதையும் அவரது பெருமையையும் தைரியமாக சாட்சியளிக்கத் தெரிந்து கொள்ளலாம்.

தேவனுடைய ஆசாரியத்துவத்தைத் தாங்கியிருப்பவராகவும், இயேசு கிறிஸ்துவின் சீஷராகவும் நீங்கள் அந்த ஒளியை ஏந்துபவர்கள். அவரது தெய்வீக ஒளியைப் போஷிக்கும் காரியங்களைச் செய்து கொண்டிருங்கள். “உங்கள் வெளிச்சத்தை உயரப்பிடியுங்கள்.” 13 அது “மனுஷர் முன்னே பிரகாசிக்கக் கடவது”, அவர்கள் உங்களைப் புகழும்படிக்கு அல்ல, ஆனால் “உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படிக்கே.” 14

என் அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் பரலோகபிதாவின் பிள்ளைகளின் ஆத்துமாக்களுக்கு வெளிச்சத்தையும் குணமாக்குதலையும் கொண்டு வருகிற நோக்கத்துடன் கர்த்தரின் கரத்தில் கருவியாக இருக்கிறீர்கள். ஆவிக்குரிய விதமாக சுகவீனமாக இருப்பவர்களைக் குணமாக்க ஒருவேளை நீங்கள் தகுதியுள்ளவர்களாக உணராதிருக்கலாம், கண்டிப்பாக ஒரு தபால் அலுவலக ஊழியர் முடக்குவாதத்தை குணமாக்க தகுதி பெற்றிருப்பதை விட அதிகமாக அல்ல. நீங்கள் உங்கள் சொந்த ஆவிக்குரிய சவால்களை எதிர்கொள்ளலாம். இருப்பினும் கர்த்தர் உங்களை அழைத்திருக்கிறார். தேவையிலிருப்போரை சென்றடைய அவர் உங்களுக்கு அதிகாரமும் பொறுப்பும் கொடுத்திருக்கிறார். இருளுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவரவும், தேவனின் பிள்ளைகளை உயரத்தவும் ஆசீர்வதிக்கவும் தனது பரிசுத்த ஆசாரியத்துவ வல்லமையைக் கொடுத்திருக்கிறார். “காயப்பட்ட ஆத்துமாவைக் குணமாக்குகிற”15 அவரது சபையையும் அவரது அருமையான சுவிசேஷத்தையும் மறுஸ்தாபிதம் செய்திருக்கிறார். ஆவிக்குரிய நன்மையின் பாதையை அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். தேக்கத்திலிருந்து குணம்பெற பிரகாசமான ஆவிக்குரிய ஆரோக்கியத்தை நோக்கி நகருங்கள்.

தாழ்மையான ஜெபத்தில் தேவனுக்கு உங்கள் இருதயங்களை நீங்கள் திருப்பும் ஒவ்வொருமுறையும், நீங்கள் அவரது வெளிச்சத்தை அனுபவிக்கிறீர்கள். அவரது வார்த்தையையும், சித்தத்தையும் நீங்கள் வேதங்களில் தேடும் ஒவ்வொரு முறையும், வெளிச்சத்தின் பிரகாசம் அதிகரிக்கிறது. தேவையிலிருக்கிற ஒருவரை நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அன்புடன் அவரிடத்தில் செல்ல சௌகரியத்தை தியாகம் பண்ணும்போதும், வெளிச்சம் விரிவடைந்து, அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் சோதனையை மறுத்து சுத்தத்தை தெரிந்து கொள்ளும்போதும், நீங்கள் மன்னிப்புக் கேட்கிற அல்லது மன்னிக்கிற ஒவ்வொரு முறையும், சத்தியத்தைப்பற்றி தைரியமாக நீங்கள் சாட்சிகொடுக்கும் ஒவ்வொருமுறையும், வெளிச்சம் இருளை விரட்டி, வெளிச்சத்தையும் சத்தியத்தையும் தேடுபவர்களைக் கவர்ந்திழுக்கிறது.

உங்கள் சொந்த அனுபவங்களைப்பற்றியும், தெய்வீக வெளிச்சம் உங்கள் மீது பிரகாசித்தபோது தேவனுக்கும் சகமனுஷருக்கும் சேவை செய்த தருணங்களைப்பற்றியும், பரிசுத்த ஆலயத்திலும், திருவிருந்து மேஜையிலும், ஜெப சிந்தனையோடிருந்த அமைதியான தருணத்திலும், உங்கள் குடும்ப கூடுகைகளிலும், ஆசாரியத்துவ சேவை செய்த நேரத்தைப்பற்றி நினையுங்கள். இந்த தருணங்களைப்பற்றி, குடும்பத்துடனும், நணபர்களுடனும், குறிப்பாக வெளிச்சத்தைத் தேடிக்கொண்டிருக்கிற நமது இளைஞர்களுடனும் பகிருங்கள். இந்த வெளிச்சத்துடன் முற்றிலும் இருள் நிறைந்த உலகத்திலும் கூட நம்பிக்கையும் குணமாக்குதலும் வருகின்றன என அவர்கள் அறிய வேண்டும்.

கிறிஸ்துவின் ஒளி நம்பிக்கையும், மகிழ்ச்சியும், எந்த ஆவிக்குரிய காயம் அல்லது நோயின் குணமாக்குதலையும் கொண்டுவருகிறது. 16 இந்த சுத்திகரிக்கும் செல்வாக்கை அனுபவிக்கிற யாரும் பிறருக்கு ஒளி கொடுக்க உலகத்தின் வெளிச்சத்தின் கரங்களில் கருவியாகிறார்கள். 17 லாமோனி இராஜா உணர்ந்ததுபோல அவர்கள் உணர்வார்கள். இந்த வெளிச்சம் அவனுடைய ஆத்துமாவில் மிகுந்த சந்தோஷத்தை ஊற்றெடுக்கவும், காரிருளை மறைக்கவும் செய்தது. அவனுடைய ஆத்துமாவில் நித்திய ஜீவ ஒளி ஏற்றப்பட்டது. 18

என் அன்பு சகோதரர்களே, என் அன்பு நண்பர்களே, நமக்குள்ளே அவரது நித்திய ஜீவ ஒளி பிரகாசமாக எரிந்து, இருளின் மத்தியிலும் நமது சாட்சி தன்னம்பிக்கையுடனும் பலமாகவும் ஆகும்வரைக்கும் கர்த்தரைத் தேடுவது நமது தேடல்.

சர்வ வல்ல தேவனின் ஆசாரியத்துவம் தரித்தவர்களாக, அவரது பரலோக வெளிச்சத்தை எப்போதும் சந்தோஷமாக தாங்குபவர்களாக இருக்க, உங்கள் இலக்கை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள் என்பது எனது சாட்சியும் ஆசீர்வாதமுமாகும். நமது போதகராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, ஆமென்.