2010–2019
கர்த்தர் தன் சபையை வழிநடத்துகிறார்
அக்டோபர் 2017


கர்த்தர் தன் சபையை வழிநடத்துகிறார்

அவருடைய சபைக்கு கர்த்தரின் வழிநடத்துதலுக்கு, பூமியில் அவருக்கு சேவை செய்கிற அனைவருக்கும் அதிக நிலையான விசுவாசம் தேவைப்படுகிறது.

தேவனின் ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற என் அன்பு சகோதரரே, நான் இன்றிரவில் பூமியில் தனது இராஜ்யத்தை வழிநடத்துகிற கர்த்தரின் ஆச்சரியமான விதத்தைப்பற்றி பேச விரும்புகிறேன். அடிப்படைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். பரிசுத்த ஆவியானவர் அவற்றை உங்களுக்கு உறுதிப்படுத்துமாறு நான் ஜெபிக்கிறேன்.

முதலாவது, இயேசு கிறிஸ்து உலகம் முழுவதற்கும் சபையின் தலைவர்.

இரண்டாவது, தீர்க்கதரிசிகளாக அழைக்கப்பட்ட மனுஷர்களிடம் பேசி அவர் தன் சபையை வழிநடத்துகிறார், வெளிப்படுத்தல் மூலமாக அவர் அதைச் செய்கிறார்.

மூன்றாவதாக, நீண்ட காலத்துக்கு முன்பே அவர் தன் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தல் கொடுத்தார், இப்போதும் செய்கிறார், தொடர்ந்து அப்படிச் செய்வார்.

நான்காவதாக, தன் தீர்க்கதரிசிகளின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு அவர் உறுதியான வெளிப்படுத்தல் கொடுக்கிறார்.

இந்த அடிப்படைகளிலிருந்து, அவரது சபையில் கர்த்தரின் தலைமைத்துவத்துக்கு, பூமியில் அவருக்கு சேவை செய்யும் அனைவருக்கும் பெரும் உறுதியான விசுவாசம் தேவைப்படுகிறது என நாம் அங்கீகரிக்கிறோம்.

உதாரணத்துக்கு, உயிர்த்தெழுந்த கர்த்தர் அவரது இராஜ்யத்தின் அன்றாட விவரங்களை கண்காணிக்கிறார் என நம்ப விசுவாசம் தேவைப்படுகிறது. நம்பிக்கை தேவைப்படுகிற ஸ்தானங்களில் அவர் பரிபூரணமற்றவர்களை அழைக்கிறார் என நம்ப விசுவாசம் தேவைப்படுகிறது. அவர் அழைக்கிறவர்களையும், அவர்களது திறமைகளையும், அவர்களது தகுதிகளையும் பரிபூரணமாக அறிகிறார், ஆகவே அவரது அழைப்புகளில் எந்த தவறும் செய்யவில்லை என நம்ப விசுவாசம் தேவைப்படுகிறது.

சேவை செய்ய தங்கள் சொந்த அழைப்பே தவறாக இருக்கலாம், மற்றும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் கர்த்தரின் இராஜ்யத்தில் தங்கள் இடத்துக்கு பொருத்தமானவர்கள் அல்ல என நினைத்துக் கொள்ளுபவர்களுக்கும், இந்த பார்வையாளர்களில் இருக்கும் சிலருக்கும் புன்சிரிப்பையோ, தலையசைப்பையோ அது கொண்டுவரலாம். இரண்டு குழுவினருக்கும் எனது ஆலோசனை, கர்த்தர் பார்ப்பதை நீங்கள் நன்றாகப் பார்க்கும்வரை அந்த தீர்ப்புகளைத் தள்ளி வையுங்கள். மாறாக நீங்கள் செய்ய வேண்டிய தீர்ப்பு, வெளிப்படுத்தல் பெறவும், பயமின்றி அதன்படி செயல்படவும் நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்கள், என்பதே.

அப்படிச் செய்ய விசுவாசம் தேவைப்படுகிறது. உங்களை வழிநடத்த பரிபூரணமற்ற மனுஷ வேலையாட்களை கர்த்தர் அழைத்திருக்கிறார் என நம்ப இன்னும் அதிக விசுவாசம் தேவைப்படுகிறது. அவருக்கு உங்கள் சேவையை தேவன் வழிநடத்துகிறார் என்ற உங்கள் விசுவாசத்தைக் கட்டுவதே இன்றிரவில் எனது நோக்கம். இன்னும் அதிக முக்கியமாக, உங்கள் தலைவர்களாக, அவர் அழைத்திருக்கிற பரிபூரணமற்றவர்களுக்கு கர்த்தர் உணர்த்துகிறார் என்ற உங்கள் விசுவாசத்தைக் கட்டுவதே எனது நோக்கம்.

கர்த்தரின் சபை மற்றும் இராஜ்யத்தின் வெற்றிக்கு அப்படிப்பட்ட விசுவாசம் முக்கியமல்ல என முதலில் நீங்கள் நினைக்கலாம். எனினும் கர்த்தரின் தீர்க்கதரிசி முதல் புதிய ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர் வரை, ஆசாரியத்துவ சேவை சங்கிலித் தொடரில் நீங்கள் எங்கிருந்தாலும் அது பொருட்டின்றி, விசுவாசம் முக்கியம் என நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

ஒரு ஆசிரியர் அல்லது ஒரு உதவிக்காரர் குழும தலைவருக்கு விசுவாசம் என்பது என்ன என நாம் ஆரம்பிக்கலாம். ஆசிரியர்களின் பலவீனங்களையும், பெலன்களையும் அறிந்தே கர்த்தர் அவரை தனிப்பட்ட முறையில் அழைத்திருக்கிறார் என்ற விசுவாசம் அவருக்கு முக்கியம். அழைப்பை விடுத்த மனுஷன் தேவ ஆவியால் வெளிப்படுத்தல் பெற்றார் என அவர் விசுவாசம் கொள்ள வேண்டும். அவரது குழுமத்தின் ஆலோசகர்களும் அங்கத்தினர்களும் பயமின்றி தன்னம்பிக்கையுடன் அவரைப் பின்பற்ற அதே விசுவாசம் தேவை.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் தன் உதவிக்காரர் குழும தலைமையுடன் ஒரு பையன் அமர்ந்திருந்தபோது அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். அவன் அவர்களது புதிதாக அழைக்கப்பட்ட செயலாளர். அந்த இளம் தலைமை ஒன்றாக ஆலோசித்தனர். சபைக்கு ஒரு ஆர்வம் குன்றிய பையனை திரும்பக் கொண்டுவர ஆயரின் வேண்டுகோளை அவர்கள் நிறைவேற்றும்படியாக பல வழிகளைப்பற்றி அவர்கள் பேசினர். ஜெபத்துக்கும் கலந்துரையாடலுக்கும் பின், கூட்டத்துக்கு ஒருபோதும் வராத பையனின் வீட்டுக்குச் சென்று அவனை அழைக்க அவர்கள் செயலாளரை நியமித்தனர்.

செயலாளருக்கு பையனைத் தெரியாது, ஆனால் பையனின் பெற்றோரில் ஒருவர் ஆர்வம் குறைந்தவர், மற்றவர் அங்கத்தினரல்ல, நட்பானவருமல்ல. என அவன் அறிவான். செயலாளர் ஆர்வம் அடைந்தான், ஆனால் பயப்படவில்லை. காணாமல் போன ஆடுகளை திரும்பக் கொண்டுவர ஆசாரியத்துவத் தலைவர்களை தேவனின் தீர்க்கதரிசி கேட்டிருக்கிறார் என அவன் அறிவான். அவன் தன் தலைமையின் ஜெபத்தைக் கேட்டான். பையன் தன் சொந்தப் பெயரிலே மீட்கப்பட வேண்டும், என பையனின் பெயரில் அவர்கள் ஒரு ஒப்புதலுக்கு வந்ததை அவன் கேட்டான்.

ஆர்வம் குறைந்த பையனின் வீட்டை நோக்கி, தெருவிலே செயலாளர் நடந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பெரிய ஆபத்தில் சிக்கப்போவது போல மெதுவாக நடந்தான். ஆனால் அரை மணி நேரத்துக்குள்ளே அவன் சாலையில் பையனோடு சிரித்தபடி மகிழ்ச்சியாக திரும்பவந்து கொண்டிருந்தான். அப்போது அவன் அறிந்திருந்தானா என எனக்குத் தெரியாது, ஆனால் அவன் கர்த்தரின்  கடமையில் தான் இருந்ததாக விசுவாசத்துடன் போயிருந்தான். பல ஆண்டுகளாக ஒரு ஊழியக்காரனாக, ஒரு தகப்பனாக, வாலிபர் தலைவனாக, ஆயராக அந்த விசுவாசம் அவனோடு இருந்து வளர்ந்திருக்கிறது.

ஒரு ஆயருக்கு அப்படிப்பட்ட விசுவாசம் என்னவாகிறது என நாம் பேசுவோம். சிலசமயங்களில் அவர் நன்றாக அறிந்தவர்களுக்கு சேவை செய்ய அழைக்கப்படுகிறார். அவனது மனுஷ பெலவீனத்தையும், ஆவிக்குரிய பெலனையும், தொகுதி அங்கத்தினர்கள் அறிவார்கள், தொகுதியிலுள்ள நன்கு படித்தவராகத் தெரிகிற, அதிக அனுபவப்பட்ட, அதிக இனிமையான, அல்லது அதிக அழகுடையவராகக் கூட பிறர் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் அறிவார்கள்.

ஆயராகச் சேவை செய்யும் அழைப்பு, வெளிப்படுத்தல் மூலமாக கர்த்தரிடமிருந்து வந்தது என இந்த அங்கத்தினர்கள் அறிய வேண்டும். அவர்களது விசுவாசமின்றி, தேவனால் அழைக்கப்பட்ட ஆயர், அவர்களுக்கு உதவ, வெளிப்படுத்தல் பெறுவது கடினம். அவரை ஆதரிக்க அங்கத்தினர்களின்  விசுவாசமின்றி, அவர் வெற்றியடைய மாட்டார்.

மகிழ்ச்சியடையும்படியாக அதன் மாற்றம் உண்மைதான். தன் ஜனத்தை மனந்திரும்புதலுக்கு வழிநடத்திய கர்த்தரின் சேவகனாகிய பென்யமின் இராஜாவைப்பற்றி நினைத்துப் பாருங்கள். அவனது மனுஷ பெலவீனங்கள் இருந்தாலும், அவன் தேவனால் அழைக்கப்பட்டவன், அவனது வார்த்தைகள் தேவனிடமிருந்து வந்தன என்ற அவர்களது விசுவாசத்தின் மூலம் ஜனங்களின் இருதயங்கள் மிருதுவாக்கப்பட்டன. ஜனங்கள்  என்ன சொன்னார்கள் என நினைவு கூருங்கள்: “ஆம் நீர் எங்களுக்குப் பேசின சகல வார்த்தைகளையும் விசுவாசிக்கிறோம். பொல்லாப்பை இனி செய்ய மனமில்லாதவர்களாய் நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு, உங்கள் இருதயங்களிலேயும் எங்களுக்குள்ளேயும், பலத்த மாற்றத்தைச் செய்வித்த சர்வ வல்ல கர்த்தருடைய ஆவியானவரினிமித்தம், அவைகளின் உண்மையையும் சத்தியத்தையும் அறிவோம்.” (மோசியா 5:2).

கர்த்தரின் பணியில் ஒரு தலைவர் வெற்றிபெற, அவரது அங்கவீனங்கள் மற்றும் அநித்திய பெலவீனங்களைப்பற்றிய பார்வையை விட, அவர் தேவனால் அழைக்கப்பட்டவர் என்ற ஜனங்களின் நம்பிக்கை மேலோங்க வேண்டும். பென்யமின் இராஜா எப்படி தன் சொந்த தலைமைத்துவத்தை விளக்கினான் என நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள்:

“எனக்கு நீங்கள் அஞ்சவோ, மரிக்கும் அநித்திய மனுஷனிலும் என்னை மேன்மையானவன் என்று எண்ணவோ இங்கே வரவேண்டுமென்று நான் உங்களைக் கட்டளையிடவில்லை.

“நானும் உங்களைப்போல சரீரத்திலும் மனதிலுமான சகலவித பலவீனங்களுக்கும், உட்பட்டவனாய் இருந்தும், ஜனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, என் தந்தையால் அபிஷேகம் பண்ணப்பட்டு, இந்த ஜனத்தில் மேல் இராஜாவாகவும் அதிகாரியாகவும் இருக்கும்படி கர்த்தரின் கரத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு கர்த்தர் அருளிய சகல ஊக்கத்தோடும் மனதோடும் பெலத்தோடும் உங்களைச் சேவிக்க அவருடைய இணையற்ற வல்லமையினால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறேன்.” (மோசியா 2:10–11).

கர்த்தரின் சபையில் உங்கள் தலைவர் பெலவீனமான மனுஷராகவும் தோன்றலாம் அல்லது பெலமுள்ளவராகவும் உணர்த்தப்பட்டவராகவும் தோன்றலாம். ஒவ்வொரு தலைவரும் அந்த பண்புகள் மற்றும் பலவற்றின் கலவைதான். நம்மை வழிநடத்த அழைக்கப்பட்ட கர்த்தரின் வேலையாட்களுக்கு உதவி செய்வது எப்படியெனில், அவரை அழைத்தபோது கர்த்தர் பார்த்தபடி நாம் பார்க்க  முடிகிறபோதுதான்.

கர்த்தர் தன் வேலையாட்களை பரிபூரணமாகப் பார்க்கிறார். அவர் அவர்களது திறமையையும் எதிர்காலத்தையும் பார்க்கிறார். அவர்களது தன்மை எப்படி மாற்றப்பட முடியும் என அவர் அறிவார். அவர்கள் வழிநடத்துகிற ஜனங்களுடன் அவர்களது அனுபவங்களால் அவர்கள் மாற்றப்பட முடியும் என அவர் அறிவார்.

நீங்கள் சேவை செய்ய அழைக்கப்பட்ட ஜனங்களால் பெலமாக்கப்படும் அனுபவத்தை நீங்கள் பெற்றிருக்கலாம். நான் ஒருமுறை இளம் தனிமையான வயதுவந்தோரின் ஆயராக அழைக்கப்பட்டேன். அவர்களில் அவர்கள் மாற்றம் செய்ய நான் உதவக்கூடியவை அல்லது என்னில் அவர்கள் செய்வார்கள் என அவர் நினைத்த மாற்றங்களைவிட கர்த்தரின் நோக்கங்கள் அதிகமானவையா என நான் அறியவில்லை.

ஒரு அளவுக்கு நான் புரிந்து கொள்ளவில்லை. அந்த தொகுதியின் அதிகமான இளைஞர்களில் பலர் விசேஷமாக அவர்களுக்காக நான் அழைக்கப்பட்டிருப்பது போல நடந்துகொண்டார்கள். அவர்கள் என் பெலவீனத்தை பார்த்தார்கள், ஆனால் அதைக் கடந்து பார்த்தார்கள்.

அவனது கல்வி சாத்தியங்களைப்பற்றி ஆலோசனை கேட்ட ஒரு இளைஞனை நான் நினைவு வைத்திருக்கிறேன். அதே பல்கலைக் கழகத்தில் அவன் புதிதாக சேர்ந்தவன். நான் அறிவுரை கொடுத்த ஒரு வாரத்துக்குப் பிறகு என்னுடன் ஒரு சந்திப்புக்கு அவன் கேட்டான்.

அவன் அலுவலகத்துக்கு வந்தபோது, இப்படிக் கேட்டு அவன் என்னை ஆச்சரியப்படுத்தினான், “ஆயரே நாம் பேசும் முன் ஜெபிக்கலாமா? நாம் முழங்கால்படியிடலாமா? நான் ஜெபிக்கட்டுமா?”

அவனது வேண்டுகோள் என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் அவனது ஜெபம் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது இப்படியிருந்தது: “பரலோக பிதாவே, ஆயர் ஐரிங் கடந்த வாரம் கொடுத்த ஆலோசனை பலனளிக்கவில்லை என நான் அறிவேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என அறிய தயவுசெய்து அவருக்கு உணர்த்துவீராக.”

இப்போது நீங்கள் அதற்காக சிரிக்கலாம், ஆனால் நான் சிரிக்கவில்லை. அவன் என்ன செய்ய வேண்டும் என கர்த்தர் விரும்பியதை அவன் ஏற்கனவே அறிந்திருந்தான். ஆனால் கர்த்தரின் சபையில் ஆயரின் அலுவலை அவன் கனம் பண்ணினான், ஒருவேளை அந்த அழைப்பில் வெளிப்படுத்தல் பெற அதிக தன்னம்பிக்கை பெற, நான் சந்தர்ப்பம் பெற விரும்பியிருக்கலாம்.

அது பயனளித்தது. நாங்கள் எழுந்து உட்கார்ந்தபோது, எனக்கு வெளிப்படுத்தல் வந்தது. அவன் என்ன செய்ய வேண்டும் என கர்த்தர் விரும்புவதாக நான் உணர்ந்ததை நான் அவனிடம் சொன்னேன். அப்போது அவனுக்கு 18 வயது, ஆனால் ஆவிக்குரிய வயதில் அவன் முதிர்ச்சியடைந்திருந்தான்.

அத்தகைய பிரச்சினைக்கு அவன் ஆயரிடம் செல்ல வேண்டியதில்லை என அவன் அறிவான். ஆனால் தனது அநித்திய பெலவீனத்திலும்கூட, கர்த்தரின் வேலைக்காரரை ஆதரிக்க அவன் கற்றுக் கொண்டான். அவன் கடைசியாக ஒரு பிணையத் தலைவனான். நாங்கள் ஒன்றாகக் கற்ற பாடத்தைத் தன்னோடு சுமந்து சென்றான், அவர் அழைக்கிற அந்த பரிபூரணமற்ற வேலைக்காரர்களுக்கு, வெளிப்படுத்தல் மூலம் தன் சபையை கர்த்தர் வழிநடத்துகிறார் என உங்களுக்கு விசுவாசம் இருந்தால், உங்களுக்கு திறந்தது போல அவர்களுக்கும் கர்த்தர் பரலோக பலகணிகளைத் திறப்பார்.

அந்த அனுபவத்திலிருந்து, நாம் சேவை செய்கிற ஜனங்களின் விசுவாசம் சில சமயங்களில் நமது விசுவாசத்தைவிட மேலானது, கர்த்தரின் சேவையில் நமக்கு வெளிப்படுத்தல் கொண்டு வருகிறது என்ற பாடத்தை நான் சுமந்து சென்றேன்.

எனக்கு இன்னொரு பாடம் கிடைத்தது. முதலில் அவனுக்கு நல்ல ஆலோசனை கொடுக்க நான் தவறியதற்காக அப்பையன் என்னை நியாயந்தீர்த்திருந்தால், அவன் ஒருபோதும் திரும்பவும் கேட்க திரும்பி வந்திருக்க மாட்டான். ஆகவே, என்னை நியாயந்தீர்க்க தெரிந்துகொள்ளாமல், அவன் வாஞ்சித்த உறுதியைப் பெற்றான்.

அந்த அனுபவத்திலிருந்து மற்றொரு பாடம் எனக்கு அதிகம் உதவியது. எனக்குத் தெரிந்தவரை, முதலில் நான் அவனுக்கு நல்ல ஆலோசனை கொடுக்கவில்லை என தொகுதியில் யாரிடமும் அவன் சொல்லவில்லை. அவன் அதைச்செய்திருந்தால் ஆயரின் உணர்த்துதலை நம்ப, தொகுதியிலுள்ள பிறரின் விசுவாசத்தை அது குறைத்திருக்கலாம்.

கர்த்தரின் வேலைக்காரர்களையோ அல்லது அவர்களது வெளிப்படையான பெலவீனத்தையோ, சீர்தூக்கிப் பார்க்க நான் முயற்சி செய்யவில்லை. என் பிள்ளைகளுக்கு உதாரணத்தால் அதைக் கற்பிக்க நான் முயற்சிக்கிறேன். தலைவர் ஜேம்ஸ்  ஈ. பாஸ்ட் பகிர்ந்த கொள்கையை நான் சொல்ல விரும்புகிறேன். அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

“நாம் நமது உள்ளூர் தலைவர்களை ஆதரித்துத் தாங்க வேண்டும், ஏனெனில் அவர்கள் ‘அழைக்கப்பட்டவர்கள் மற்றும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்’. சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும், ஆயரிடம் அல்லது கிளைத்தலைவரிடம், பிணைய அல்லது ஊழியத் தலைவரிடமிருந்தும், மற்றும் சபையின் தலைவரிடமிருந்தும் அவரது உடனிருப்போரிடமிருந்தும் ஆலோசனை பெறலாம். இந்த சகோதரரில் ஒருவரும் அவரது அழைப்பைக் கேட்டுப்பெறவில்லை. ஒருவரும் பரிபூரணமானவரில்லை. இருப்பினும் அவர்கள் உணர்த்துதல் பெற உரிமை பெற்றவர்கள் மூலம் அவரால் அழைக்கப்பட்ட கர்த்தரின் வேலையாட்கள். அழைக்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு, பணிக்கப்பட்டவர்கள், நமது தாங்கும் ஆதரவுக்கு பாத்தியப்பட்டவர்கள்.

“…மதத்தலைவர்களை அவமரியாதை செய்தல், அநேகரை ஆவிக்குரிய பெலவீனத்திலும், வீழ்ச்சியிலும், அநேகரை கஷ்டப்படவும் வைத்திருக்கிறது. நமக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்ட மனுஷரின் பார்க்கப்பட்ட பரிபூரணமின்மை, மருக்கள், அல்லது புள்ளிகளுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும். அவர்களது அலுவலை மதிக்க வேண்டும். ” (“Called and Chosen,” Liahona, Nov. 2005, 54–55).

எல்லா சூழ்நிலைகளிலும் தேவனின் வேலையாட்களை அந்த ஆலோசனை ஆசீர்வதிக்கிறது.

கர்த்தரின் சபையின் முதல் நாட்களில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு நெருக்கமான தலைவர்கள் அவரது தவறுகளைப்பற்றி பேசத்தொடங்கினர். கர்த்தருடன் அவரது உறவை பார்த்து அறிந்த அனைத்துக்கும் பிறகும்கூட, அவர்களது குறைகூறும் ஆவி கொள்ளைநோய் போலப் பரவியது. நாம் கர்த்தரின் இராஜ்யத்தில் சேவைசெய்ய வேண்டுமென்றால், பன்னிருவரில் ஒருவர், நாம் பெற வேண்டிய விசுவாசத்தையும், நேர்மையையும் அமைத்திருக்கிறார்.

அந்த அறிக்கை இதோ: “பல தலைவர்கள் ஜோசப் ஸ்மித்தை வீழ்ந்த தலைவராக கருதிய அனைவரையும் ஆலயத்தில் ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். அவர்கள் டேவிட் விட்மரை புதிய சபைத்தலைவராக நியமிக்க விரும்பினர். தீர்க்கதரிசிக்கு எதிரான விவாதங்களைக் கேட்டபிறகு பிரிகாம் [யங்] எழுந்து சாட்சி சொன்னார், ‘ஜோசப் ஒரு தீர்க்கதரிசி, அதை நான் அறிவேன். அவர்கள் ஆசைப்படுவதுபோல, அவரை பரியாசம் பண்ணலாம், பழி சொல்லலாம், அவர்கள் தேவனின் தீர்க்கதரிசியின் நியமனத்தை அழிக்க முடியாது, அவர்களது சொந்த அதிகாரத்தை அழிக்கலாம், தீர்க்கதரிசியோடும் தேவனோடும் கட்டுகிற நூலை அறுக்கலாம், தங்களை நரகத்துக்குள் அமிழ்த்திக் கொள்ளலாம்.’” (Church History in the Fulness of Times Student Manual [Church Educational System manual, 2003], 2nd ed., 174; see also Teachings of Presidents of the Church: Brigham Young [1997], 79).

நமது சேவையில் கர்த்தரோடு நம்மைக் கட்டுகிற ஒரு நூல் இருக்கிறது. நாம் இராஜ்யத்தில் எங்கு வேலை செய்ய அழைக்கப்பட்டாலும், ஆசாரியத்துவத்தில் நம்மீது தலைமை தாங்க அழைக்கப்பட்டவர்கள்வரை, கர்த்தருடன் கட்டப்பட்டிருக்கிற தீர்க்கதரிசி வரைக்கும் செல்கிறது. நாம் அழைக்கப்பட்டுள்ள ஸ்தானத்தில் வேலை செய்யவும், நம்மையும் நமக்குத் தலைமை தாங்குபவர்களையும் கர்த்தர் அழைத்திருக்கிறார் என நம்பவும், முழு விசுவாசத்துடன் அவர்களை ஆதரிக்கவும் விசுவாசமும் தாழ்மையும் தேவை.

கர்த்லாந்து நாட்களில் இருந்ததுபோல, நம்மைக் கர்த்தர் அழைத்திருக்கிற ஸ்தலத்தில் நிற்கவும், அவரது தீர்க்கதரிசிக்கும் அவர் வைத்துள்ள தலைவர்களுக்கும் நேர்மையாக இருக்க நமக்கு விசுவாசம் தேவைப்படுகிற, மற்றும் பிரிகாம் யங்கின் உத்தமமும் தேவைப்படுகிற நாட்கள் வரும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தலைமையிலிருக்கிறார் என நான் புனிதமான மற்றும் மகிழ்ச்சியான சாட்சியளிக்கிறேன். அவரது சபையையும் அவரது வேலைக்காரர்களையும் அவர் வழிநடத்துகிறார். இச்சமயத்தில் பூமியில் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் அனைத்து திறவுகோல்களையும் வைத்து பயன்படுத்துகிற ஒரே மனுஷன் தாமஸ்  எஸ். மான்சன் என நான் சாட்சியளிக்கிறேன். அவர் தாமே வழிநடத்துகிற இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில், மனமுவந்து நன்றாக வேலை செய்யும் தாழ்மையான அனைவர் மீதும் ஆசீர்வாதத்துக்காக நான் ஜெபிக்கிறேன். ஜோசப் ஸ்மித் பிதாவாகிய தேவனையும், இயேசு கிறிஸ்துவையும் பார்த்தார் என நான் சாட்சியளிக்கிறேன். அவர்கள் அவரிடம் பேசினர். பரலோக பிதாவின் அனைத்து பிள்ளைகளின் ஆசீர்வாதத்துக்காகவும் ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டன. கர்த்தரின் பணிக்காக நமது ஸ்தானங்களில் சேவை செய்வதே நமது ஊழியமும் பொறுப்புமாகும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.