2010–2019
நீங்கள் சிறந்த புஸ்தகங்களிலிருந்து தேடுங்கள்
அக்டோபர் 2017


நீங்கள் சிறந்த புஸ்தகங்களிலிருந்து தேடுங்கள்

நாம் மிகச் சிறந்த புத்தகங்களிலிருந்து படிக்கும்போது, நமது ஆவிக்குரிய வேர்களை மென்றுவிட நாடுகிற அச்சுறுத்தும் தாடைகளுக்கு எதிராக நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்கிறோம்.

ஒரு அதிகாலையில், ஒரு அழகான ரோஜா செடியின்மேல் நன்றாக உருமாறியிருந்த பசியோடிருந்த ஒரு கூட்டுப்புழுவை நான் பார்த்தேன். இளம் தண்டுகள் சிலவற்றை கண்டதிலிருந்து, அதன் பயமுறுத்தும் வாயுடன் இளந்தளிர் இலைகளின்ஊடே அது போய்க்கொண்டிருப்பதை சாதாரணமாகக் கவனிக்கிற ஒருவரால்கூட கண்டுபிடிக்க முடியும். உவமையாக சொல்கிறேன், ஆனால், இந்த உருமாறிய கூட்டுப்புழுக்களைப்போல சிலர் இருக்கிறார்கள் என்று நினைக்காமலிருக்க என்னால் முடியவில்லை, உலகம் முழுவதிலும் அவர்கள் காணப்படுகிறார்கள், சிலர், நாம் அவர்களை நமது வாழ்க்கைக்குள் அனுமதிப்போம் என மிக புத்திசாலித்தனமாக மாறுவேடம் அணிந்திருக்கிறார்கள், இதை நாம் அறிவதற்கு முன்பே அவர்கள் நம்முடைய மற்றும் நம்முடைய குடும்பத்தினரின், நண்பர்களின் ஆவியின் வேர்களை, அவர்கள் சாப்பிட்டுவிடுகிறார்கள்.

நிரம்பியிருக்கிற நமது நம்பிக்கைகளைப்பற்றி தவறாகப் புரிந்துகொள்ளுகிற ஒரு நாளில் நாம் வாழ்கிறோம். சிலநேரங்களில் இவற்றைப்போன்று, நமது ஆவிக்குரிய வேர்களைப் பாதுகாக்கவும் ஆழப்படுத்தவும் தவறுதல், கிறிஸ்துவில் நமது விசுவாசத்தையும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் நமது நம்பிக்கையையும் அழிக்க வகைதேடுகிறவர்களால் அவைகளைக் கடித்துப்போட இது ஒரு அழைப்பாயிருக்கிறது. மார்மன் புஸ்தக காலங்களில் விசுவாசிகளின் விசுவாசத்தை அழிக்க வகைதேடியவன் சீஸ்ரோம்.

அவனுடைய செயல்களும் வார்த்தைகளும் “ஜனங்களைப் பிடித்து அதன்மூலம் அவர்களை தனக்கு அடிமையாக்கி, தன்னுடைய சங்கிலிகளாலே அவர்களை பிணைத்துக் கட்டுகிற இது சத்துருவானவனின் கண்ணியாயிருந்தது” (ஆல்மா 12:6) .அதே கண்ணிகள் இன்றுமிருக்கின்றன, நாம் ஆவியில் எச்சரிக்கையாயிருந்து நமது மீட்பரின் மேல் ஒரு உறுதியான அஸ்திபாரத்தைக் கட்டாதவரை (ஏலமன் 5:12 பார்க்கவும்) நாம் சாத்தானின் சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பதை நாம் கண்டு, மார்மன் புஸ்தகத்தில் பேசப்பட்டிருக்கிற தடை செய்யப்பட்டிருக்கிற பாதைகளில் கவனமாக வழிநடத்தப்படுவோம். (1 நெப்பி 8:28பார்க்கவும்).

நமது நாட்களுக்கும் பொருந்துகிற, ஒரு எச்சரிக்கையை அப்போஸ்தலனாகிய பவுல் அவனது நாட்களில் அறிவித்தான். “உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்” (அப்போஸ். 20:29–30).

எதிர்ப்பு மற்றும், வஞ்சகமான வார்த்தைகளுக்கு எதிராக ஆவியில் நம்மை பாதுகாத்துக்கொள்ள நம்மால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் செய்யும்படி, நமது தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் எச்சரிப்புகள் நமக்கு நினைப்பூட்டுகிறது. சபையின் தொகுதிகளையும் பிணையங்களையும் நான் சந்திக்கும்போது, நான் பார்ப்பதிலும், கேட்பதிலும், பரிசுத்தவான்களாக நேர்மறையாகவும் உண்மையாகவும் இரட்சகரின் மற்றும் அவரது ஊழியக்காரர்களின் போதனைகளுக்கு பிரதியுத்தரமளிப்பதை உணரும்போது நான் உயர்த்தப்படுகிறேன்.

ஓய்வுநாள் ஆசரிப்பின் அதிகரிப்பு, தீர்க்கதரிசன வரவேற்புக்கு செவி கொடுத்தல், ஆவியில் தங்களை அங்கத்தினர்கள் பாதுகாப்பதன் ஒரு எடுத்துக்காட்டு. ஆலய நியமங்கள் மூலமாக தங்களுடைய முன்னோர்களை அவர்கள் கூட்டிச்சேர்க்கும்போது ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணியின் அதிகரிப்பில், கூடுதலான பெலப்படுத்துதல் நிரூபணமாகிறது. நாம் அன்றாடம் மனந்திரும்பி, பரிசுத்த ஆவியின் தோழமையை நாடி, நமது இரட்சகரையும் அவருடைய தன்மைகளையும் அறிந்து, அவரைப்போலாக முயற்சி செய்யும்போது, உருக்கமான தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபங்கள் நமது விசுவாசத்துக்கு அரண்களாக மாறும்போது நமது ஆவிக்குரிய வேர்கள் மிக ஆழமாகப் போகிறது (3நெப்பி 27:27 பார்க்கவும்).

நமது இரட்சகரான இயேசு கிறிஸ்து உலகத்தின் ஒளி, அவரைப் பின்பற்ற அவர் நமக்கு சைகை காட்டுகிறார். எல்லா நேரங்களிலும், விசேஷமாக, இருளான புயலான இரவுகளிலிருந்தால் ஒரு சுழலும் பனிமூட்டத்தைப்போல, சந்தேகத்தின், நிச்சயமின்மையின் புயல் உள்நுழைகிறது. “ஒரு பெரிய நீருள்ள நதிக்கு மறுபக்கத்தில், விசாலமான கட்டிடத்திலிருந்து,” (1நெப்பி 8:26) கேலி செய்யும், இழிவுபடுத்தும், சைகை செய்யும் எண்ணத்துடன் சுட்டிக்காட்டும் விரல்கள் உங்களை நோக்கி காட்டப்படவேண்டுமா. சத்தியத்திலிருந்தும் அதன் ஆசீர்வாதங்களிலிருந்தும் தந்திரமான, மறைமுகமான வழிகளால் உங்களைப் பிரிக்க, நீங்கள் வற்புறுத்தப்படாமலிருக்க உடனடியாக திரும்பிவிட நான் உங்களைக் கேட்கிறேன்.

ஆயினும் வக்கிரமான காரியங்கள் பேசப்படும்போதும், எழுதப்படும்போதும், சித்திரிக்கப்படும்போதும், இந்த நாட்களில் அது மாத்திரமே போதுமானதல்ல. “சுவிசேஷத்தின்படி வாழுவதில் முழுமையாக நீங்கள் ஈடுபடாதவரை, உங்கள் முழு மனதோடும், ஊக்கத்தோடும் பெலத்தோடும் அதன்படி வாழாதவரை, இருளை பின்னுக்குத் தள்ள போதுமான ஆவியின் ஒளியை உங்களால் உற்பத்தி செய்யமுடியாது என மூப்பர் ராபர்ட்  டி.ஹேல்ஸ் நமக்குப் போதித்தார்” (“Out of Darkness into His Marvelous Light,” Liahona, May 2002). நிச்சயமாக, உலகத்தின் ஒளியான (யோவான் 8:12 பார்க்கவும்) கிறிஸ்துவைப் பின்பற்ற நமது விருப்பம் என்பது, நாம் அவருடைய போதனைகளின்படி செயல்படவேண்டும். கர்த்தரின் வார்த்தையின்படி நாம் செயல்படும்போது, நாம் ஆவிக்குரியவிதமாக பெலப்படுத்தப்பட்டு, அரண் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறோம்.

நமது வாழ்க்கையில் அதிக ஒளி, குறைந்த இருளைக் கொடுக்கிறது. ஆயினும், நாம் தாராளமான ஒளியிலிருந்தாலும் மக்களிடத்தில் நமது நம்பிக்கைகளை தவறாக பிரதிபலிக்கிற, நமது விசுவாசத்தை சோதிக்கிற ஜனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆட்படுத்தப்படுகிறோம். “விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்” (யாக்கோபு 1:3). என அப்போஸ்தலன் யாக்கோபு எழுதினான். “சபை பற்றி தவறாக தெரிவிக்கப்படும்போது ஒரு பொறுமையான சீஷன் ஆச்சரியப்படமாட்டான் அல்லது அவமானமடைய மாட்டான்” என்ற உள்ளுர்வுடன் மூப்பர் நீல்  எ. மேக்ஸ்வெல் போதித்தார். (“Patience” [Brigham Young University devotional, Nov. 27, 1979], speeches.byu.edu).

நமது சபையின் வரலாற்றைப்பற்றியும் நம்பிக்கைகளைப்பற்றியும் கேள்விகள் எழும்புகின்றன. சரியான பதில்களைக் காண நாம் எங்கே திரும்புகிறோம் என்பதற்கு மிகுந்த கவனம் தேவை. குறைவான படிப்பவறிவுடையவர்கள் அல்லது மயக்கத்திலிருக்கிறவர்களின் பார்வைகள் மற்றும் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதில் பயன்பெற எதுவுமில்லை. சிறந்த ஆலோசனை அப்போஸ்தலன் யாக்கோபுவால் கொடுக்கப்பட்டிருக்கிறது. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், தேவனிடத்தில் கேட்கக்கடவன்” (யாக்கோபு 1:5).

நாம் தேவனைக் கேட்பதற்கு முன்னால் கவனமாகப் படிக்க வேண்டும். முன்னேறிச் செல்ல சிறந்த புஸ்தகங்களில் ஞானமான வார்த்தையையும்தேடி, படிப்பதாலும் விசுவாசத்தாலும் கற்றுக்கொள்ள நாடுங்கள் (கோ.உ 88:118). என்ற ஆவிக்குரிய உத்தரவின் கீழ் நாம் இருக்கிறோம். பரலோக உணர்த்துதலுடைய சபைத் தலைவர்களாலும், பிரசித்தம்பெற்ற, பாதுகாப்பான, நம்பத்தக்க வரலாறு மற்றும் கோட்பாட்டு அறிஞர்களாலும் எழுதப்பட்ட இந்த புஸ்தகங்களில் தாராளமான வளமை இருக்கிறது. சொல்லப்பட்ட அத்துடன், சட்டமாக்கப்பட்ட வேதத்திலுள்ள தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் மகத்துவத்தை எதுவும் மிஞ்ச முடியாது. கெட்டியான ஆவிக்குரிய உள்ளுணர்வுகளுள்ள அந்த மெல்லிய பக்கங்களிலிருந்து, பரிசுத்த ஆவியின் மூலமாக சத்தியத்தை நாம் அறிந்துகொள்கிறோம், அதனிமித்தம் அதிக ஒளி பெறுகிறோம்..

“ஒவ்வொரு நாளும் மார்மன் புஸ்தகத்தை ஜெபத்துடன் படித்து தியானிக்கும்படி நம்மிடம்” தலைவர் தாமஸ்  எஸ். மான்சன் கெஞ்சுகிறார். (“The Power of the Book of Mormon,” Liahona, May 2017)

அநேக ஆண்டுகளுக்கு முன், பிஜி சுவா ஊழியத்தின் தலைவராக பணியாற்றிக்கொண்டிருந்தபோது, மார்மன் புஸ்தகத்தின் மனமாற்றும் வல்லமை அவர்களை பலப்படுத்திய ஒரு அனுபவம் சில ஊழியக்காரர்களுக்கிருந்தது. வெப்பமாகவும் புழுக்கமாகவுமிருந்த ஒரு நாளில் இரண்டு ஊழியக்காரர்கள் லபாசாவின் ஒரு சிறிய குடியிருப்பிலிருந்த ஒரு சிறிய வீட்டிற்கு வந்துசேர்ந்தார்கள்.

மார்மன் புஸ்தகத்தின் உண்மையை ஊழியக்காரர்கள் சாட்சியளித்ததை செவிகொடுத்த ஒரு பெலவீனமான மனிதனால், தட்டப்பட்ட கதவு திறக்கப்பட்டது. அவர்கள் அவருக்கு ஒரு பிரதியைக் கொடுத்து, இது தேவனின் வார்த்தையென அவர்களைப்போல அவரும் அறிந்துகொள்ள அதைப் படிக்கும்படியும் ஜெபிக்கும்படியும் அவரை அழைத்தார்கள். அவருடைய பதில் சுருக்கமாயிருந்தது. “நாளை நான் மீன் பிடிக்க திரும்பிச்செல்கிறேன், கடலிலிருக்கும்போது நான் இதைப் படிப்பேன், நான் திரும்பி வரும்போது நீங்கள் என்னை வந்து பார்க்கலாம்”.

அவர் தூரமாகப் போயிருந்தபோது, பணிமாற்றங்கள் செய்யப்பட்டு, சில வாரங்களுக்குப் பின், புதிய மூப்பர் தோழர்கள் மீன் பிடிப்பவரைக் காணச்சென்றனர். இந்த நேரத்தில் அவர் மார்மன் புஸ்தகம் முழுவதையும் படித்து முடித்து, அதன் உண்மையின் நிச்சயத்தைப் பெற்று அதிகமாக அறிந்துகொள்ள ஆர்வமாயிருந்தார்.

நீண்ட காலத்திற்கு முன்பு போதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் கோட்பாடுகளையும் ஒவ்வொரு பக்கத்திலும் சத்தியத்தின் விலையேறப்பெற்ற வார்த்தைகளில் நமது காலத்திற்காக பாதுகாக்கப்பட்டிருந்த மார்மன் புஸ்தகத்தில் கண்கூடாகப் பார்த்த இந்த மனிதன் பரிசுத்த ஆவியால் மனமாற்றமடைந்தார். அதே ஆசீர்வாதங்கள் நம் ஒவ்வொருக்கும் கிடைக்கிறது.

விலையுயர்ந்த உள்ளுணர்வுகளை, வேதங்களிலிருந்தும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை LDS.org லிருந்தும், சபையின் மூலப்பொருட்களைப் பெறமுடிகிறதையும் படித்து, பகிர்ந்துகொள்ள குடும்பங்களுக்கு சரியான இடம் வீடு. முதல் தரிசனத்தின் விவரங்கள் போன்ற சுவிசேஷத் தலைப்புகளைப்பற்றி அங்கே ஏராளமானவற்றை நீங்கள் காண்பீர்கள். சிறந்த புஸ்தகங்களிலிருந்து நாம் படிக்கும்போது, நமது ஆவிக்குரிய வேர்களை மென்றுவிட பயமுறுத்தும் அந்த தாடைகளுக்கு எதிராக நம்மை நாம் பாதுகாத்துக்கொள்கிறோம்

நமது ஜெபம், படிப்பு, தியானித்தல் எல்லாவற்றுடன் இன்னமும் பதிலளிக்கப்படாத கேள்விகளிருக்கின்றன, ஆனால் அது நம்முள் எரிந்துகொண்டிருக்கிற விசுவாசத்தின் தீயை அணைய நாம் விடக்கூடாது. அத்தகைய கேள்விகள் நமது விசுவாசத்தைக் கட்ட ஒரு அழைப்பாயிருக்கிறது, ஏமாற்றும் சந்தேகத்தின் கடந்துபோகும் நேரத்தைஊக்குவிக்கக்கூடாது. அது விசுவாசத்தின் நோக்கங்களில் ஒன்றாயிருப்பதால், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு நிச்சயமான பதிலில்லாமலிருப்பது மதத்தின் சாராம்சமாக இருக்கிறது. அந்த வகையில், “அந்த நேரங்கள் வரும்போது, பிரச்சினைகள் மேலே வரும்போது, உடனேயே தீர்வு வராவிட்டால், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றை கெட்டியாகப் பிடித்திருந்து, கூடுதலான அறிவு வரும்வரை திடமாக நிற்க வேண்டும்” என மூப்பர் ஜெப்ரி  ஆர். ஹாலன்ட் நமக்குப் போதித்தார். (“Lord, I Believe,” or Liahona, May 2013).

தங்களுடைய ஆவியின் வேர்களை தொடர்ந்து போஷிப்பதால் திடமாக நிற்கிற அநேகரின் மகிழ்ச்சியை நம்மைச் சுற்றி நாம் பார்க்கிறோம். தங்களுடைய இரட்சகரிடத்தில் பெரிய நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க, அவர்களுடைய விசுவாசமும் கீழ்ப்படிதலும் போதுமானது. அங்கிருந்து அதிக மகிழ்ச்சி வருகிறது. சகல காரியங்களையும் அறிந்து அவர்கள் அறிக்கையிடுவதில்லை, ஆனால் அதிகமாகத் தெரிந்துகொள்ள அவர்கள் நாடும்போது சமாதானத்தை பெற்றிருக்க போதுமானதை அறிந்திருக்கவும், பொறுமையுடன் வாழவும் , அவர்கள் கிரயம் செலுத்தியிருக்கிறார்கள். வரிவரியாக, கிறிஸ்துவில் அவர்கள் விசுவாசம் பெலப்பட்டு, பரிசுத்தவான்களுடன் சக குடிகளைப்போல அவர்கள் திடமாக நிற்கிறார்கள்.

“முடிவுபரியந்தம் கிறிஸ்துவின் விசுவாசத்தில் உறுதியாக” (ஆல்மா 27:27) நிலைத்திருக்கும்படியாக, இப்போதும் எப்போதும், நமது வாழ்க்கையில்  பயமுறுத்தும் உருமாற்றமடைந்த கூட்டுப்புழுக்களின் வாய்களுக்கு இடமில்லாமலிருக்கும்படியாக நாம் ஒவ்வொருவரும் வாழ்வோமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.