2010–2019
நன்மை செய்யப் பயப்படாதிருங்கள்
அக்டோபர் 2017


நன்மை செய்யப் பயப்படாதிருங்கள்

நாம் அவரது கன்மலையின் மீது நிற்கும்போது, சந்தேகமும் பயமும் குறைகிறது, நன்மை செய்யும் வாஞ்சை கூடுகிறது என கர்த்தர் நமக்குக் கூறுகிறார்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, நான் இன்று பேசும்போது, கர்த்தரின் ஆவி நம்மோடு இருக்கும்படியாக நான் தாழ்மையாக ஜெபிக்கிறேன். அவரது சபையாகிய இந்த சபைக்காகவும், உருக்கமான ஜெபங்களில் நாம் பெற்ற உணர்த்துதலுக்காகவும், உணர்த்தப்பட்ட பிரசங்கங்களுக்காகவும், தேவ தூதர்கள்போன்ற பாடல்களுக்காகவும் கர்த்தரிடத்தில் என் இருதயம் நன்றியால் நிறைந்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில், நான் உள்ளிட்ட உலகமுழுவதிலும் உள்ளவர்களின் இருதயங்களை கலக்கிய செய்தியை தலைவர் தாமஸ்  எஸ். மான்சன், அளித்தார். அவர் மார்மன் புஸ்தகத்தின் வல்லமையைப்பற்றி பேசினார். நாம் படித்து, தியானித்து அதன் போதனைகளைப் பயன்படுத்துமாறு நம்மை வற்புறுத்தினார். மார்மன் புஸ்தகத்திலுள்ளவற்றை ஒவ்வொரு நாளும் படிக்கவும், சிந்திக்கவும், மார்மன் புஸ்தக கட்டளைகளைக் கைக்கொள்ளவும் நாம் நேரம் ஒதுக்கினால் நாம் அதன் சத்தியத்தைப்பற்றிய உயிரோட்டமுள்ள சாட்சி பெறலாம், ஜீவிக்கிற கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியின் விளைவு, கஷ்டமான நேரங்களில் பாதுகாப்பாக நம்மைக் கொண்டு சேர்க்கும். (See “The Power of the Book of Mormon,” Liahona, May 2017, 86–87.)

உங்களில் அநேகரைப்போல தீர்க்கதரிசியின் வார்த்தைகளை எனக்கு கர்த்தரிடமிருந்து வந்த செய்தியாக நான் கேட்டேன். நான் அந்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய முடிவு செய்தேன். இப்போது, நான் சிறுவனாக இருந்ததிலிருந்தே, மார்மன் புஸ்தகம் தேவனுடைய வார்த்தை எனவும், பிதாவும் குமாரனும் ஜோசப் ஸ்மித்துக்கு தரிசனமாகி, அவருடன் பேசினர் எனவும், கர்த்தரின் சபைக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களை மறுஸ்தாபிதம் செய்ய பூர்வகால அப்போஸ்தலர்கள் ஜோசப் ஸ்மித்திடம் வந்தார்கள் எனவும் சாட்சியை நான் உணர்ந்திருக்கிறேன்.

அந்த சாட்சியுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் நான் மார்மன் புஸ்தகத்தை வாசித்திருக்கிறேன். ஆகவே ஒருவேளை தலைவர் மான்சனின் வார்த்தைகள் வேறொருவருக்கானது என்ற காரணத்தில் நான் நினைத்திருக்கலாம். இருப்பினும் உங்களில் அநேகரைப்போல தீர்க்கதரிசியின் ஊக்கமும், வாக்குத்தத்தமும் மேலும் முயற்சி செய்ய என்னை அழைத்ததாக நான் உணர்ந்தேன். நான் செய்ததை அநேகர் செய்திருக்கிறீர்கள். அதிகமான முயற்சியுடன் ஜெபித்திருக்கிறீர்கள், மிகவும் ஆர்வத்துடன் வேதங்களை தியானித்திருக்கிறீர்கள், கர்த்தருக்கும் அவருக்காக பிறருக்கும் சேவை செய்ய கடினமாக முயன்றிருக்கிறீர்கள்.

எனக்கும் உங்களில் அநேகருக்கும், மகிழ்ச்சியான முடிவு தீர்க்கதரிசி வாக்குத்தத்தம் செய்ததாகவே இருந்திருக்கிறது. அவரது உணர்த்தப்பட்ட ஆலோசனைகளை இருதயத்தில் ஏற்றுக்கொண்டவர்கள், ஆவியை சிறப்பாகக் கேட்டிருக்கிறீர்கள். சோதனையை எதிர்க்க அதிக வல்லமையைக் கண்டிருக்கிறோம், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவிலும், அவரது சுவிசேஷத்திலும், அவரது ஜீவனுள்ள சபையிலும் அதிக விசுவாசத்தை உணர்ந்திருக்கிறோம்.

உலகத்தில் குழப்பங்கள் அதிகரிக்கிற காலத்தில் சாட்சியின் அந்த அதிகரிப்புகள், சந்தேகத்தையும் பயத்தையும் துரத்தி, நமக்கு சமாதானத்தின் உணர்வுகளைக் கொண்டு வருகிறது. தலைவர் மான்சனின் ஆலோசனையைக் கேட்டது,  என்னுள் இரண்டு அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன, முதலாவது, உலகத்தின் குழப்பங்கள் அதிகரிப்பதாகத் தோன்றினாலும், அவர் வாக்குத்தத்தம் செய்த ஆவி, முன்னால் இருப்பது குறித்து ஒரு நேர்மறை உணர்வை உருவாக்கியிருக்கிறது. இரண்டாவதாக, எனக்கும் உங்களுக்கும் துயரத்திலிருப்போர் மீது ஒரு அதிகப்படியான அன்பை உணரும்படி செய்திருக்கிறது. பிறரை மீட்க செல்லும் வாஞ்சையின் அதிகத்தை நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த வாஞ்சை தலைவர் மான்சனின் ஊழியம் மற்றும் போதனையின் இருதயமாக இருந்திருக்கிறது.

அவர்களுக்கு முன்னேயிருந்த வேலைகள் அதிகமாயிருந்ததாகத் தோன்றினாலும், கர்த்தர் பிறருக்கு அன்பையும், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரிக்கும் தைரியத்தையும் வாக்களித்தார். தேவையான தைரியம் அவர்களது கன்மலையாக அவரில் அவரது விசுவாசத்திலிருந்து வரும் என கர்த்தர் சொன்னார்.

“என் குமாரர்களே, நன்மை செய்ய பயப்படாதிருங்கள், ஏனெனில் நீங்கள் எதை விதைத்தாலும் அதையே அறுப்பீர்கள். ஆகவே, நீங்கள் நன்மையை விதைத்தால் உங்கள் பிரதிபலனாக நன்மையையே அறுப்பீர்கள்.

“ஆகவே பயப்படாதே சிறுமந்தையே, நன்மை செய், பூலோகமும் பாதாளமும் உங்களுக்கு எதிராக இணைந்தாலும், நீங்கள் எனது கன்மலையின்மேல் கட்டப்பட்டிருந்தால், அவை ஜெயிக்க முடியாது.

“இதோ, நான் உங்களைக் கடிந்து கொள்வதில்லை, உங்கள் வழிகளில் சென்று இனிமேலும் பாவஞ்செய்யாதிருங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பணியை தெளிந்த புத்தியோடு செய்யுங்கள்

“ஒவ்வொரு சிந்தனையிலும் என்னைப் பாருங்கள், சந்தேகப்படாதிருங்கள், பயப்படாதிருங்கள்.

“என் விலாவில் குத்திய தழும்புகளைப் பாருங்கள். என் கைகளிலும் கால்களிலும் ஆணித்தழும்புகளைப் பாருங்கள். விசுவாசமாயிருங்கள், என் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள், நீங்கள் பரலோக இராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள்.” (கோ.உ 6:33–37).

கர்த்தர் தனது மறுஸ்தாபிதத்தின் தலைவர்களுக்குச் சொன்னார், அவர் நமக்கும் சொல்கிறார், நாம் அவரது கன்மலையின்மேல் விசுவாசத்தோடு நின்றால், சந்தேகமும் பயமும் குறைகிறது, நன்மை செய்யும் வாஞ்சை அதிகரிக்கிறது. இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியை நமது இருதயங்களில் நிறுத்த தலைவர் மான்சனின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் வல்லமையையும், வாஞ்சையையும், நமது சொந்த தேவைகள் மீது அக்கறையில்லாமல், பிறரை மீட்கச் செல்லும் வாஞ்சையையும் பெறுகிறோம்.

நம்புகிற பிற்காலப் பரிசுத்தவான்கள் பயங்கரமான சோதனைகளை எதிர்கொள்ளும்போது, அநேக நேரங்களில் இந்த விசுவாசத்தையும் தைரியத்தையும் பார்த்திருக்கிறேன். ஒரு உதாரணமாக ஜூன்  5, 1976ல் டீட்டோன் அணை உடைந்தபோது, நான் ஐடஹோவில் இருந்தேன். ஒரு தண்ணீர் சுவர் கீழே வந்தது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். ஆயிரக்கணக்கான வீடுகளும் கடைகளும் அழிக்கப்பட்டன. அதிசயமாக 15 பேருக்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டனர்.

நான் அங்கே பார்த்ததை, இயேசு கிறிஸ்துவின் சாட்சியாகிய கன்மலை மீது, பிற்காலப் பரிசுத்தவான்கள் உறுதியாக நிற்கும்போது, நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாததால் அவர் அவர்களைக் கண்காணிக்கிறார், அவர்கள் பயமற்றவர்களாகிறார்கள். பிறருடைய நிவாரணத்துக்குச் செல்ல அவர்கள் தங்கள் சொந்த பாடுகளை உதாசீனப்படுத்துகிறார்கள். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், கர்த்தர் மீதான அன்பினிமித்தம் அப்படிச் செய்கிறார்கள்.

உதாரணமாக, டீட்டன் அணை உடையும்போது, அவர்களது வீட்டிலிருந்து மைல்களுக்கு அப்பால் ஒரு பிற்காலப் பரிசுத்தவான் தம்பதியர் பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்தனர். செய்தியை அவர்கள் ரேடியோவிலே கேட்ட உடனே அவர்கள் ரெக்ஸ்பர்க்குக்குத் திரும்பினர். அது அழிந்து விட்டதா என தங்கள் வீட்டைப் பார்க்க செல்வதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் ஆயரைத் தேடிச் சென்றனர். ஒரு மறுசீரமைப்பு கட்டிடமாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தில் அவர் இருந்தார். மஞ்சள் வண்ண பள்ளி பேருந்துகளில் வந்து கொண்டிருந்த, ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை வழிநடத்த உதவிக்கொண்டிருந்தார்.

அத்தம்பதியினர் ஆயரிடம் நடந்து சென்று, சொன்னார்கள், “இப்போதுதான் வந்தோம். ஆயரே, நாங்கள் உதவி செய்ய எங்கே போவது?” ஒவ்வொரு வீடாக அத்தம்பதியினர் சேற்றையும் தண்ணீரையும் மொண்டு ஊற்றினர். பல நாட்களாக காலை முதல் இரவுவரை அவர்கள் வேலை செய்தனர். கடைசியாக ஓய்வெடுத்து, தங்கள் வீட்டைப் பார்க்கச் சென்றனர். சுத்தம் செய்வதற்கு எதுவுமில்லாது, அது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் உடனே ஆயரிடம்  திரும்பி வந்தனர். அவர்கள் கேட்டனர், “ஆயரே எங்களுக்கு உதவி செய்ய யாராவது இருக்கிறார்களா?”

அமைதியான தைரியம் மற்றும் தயாளத்தின் அற்புதம், கிறிஸ்துவின் பரிசுத்தமான அன்பு, வருடங்களாக உலகம் முழுவதிலும் திரும்பவும் காட்டப்படுகிறது. மிசௌரியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் காலத்தில் துன்புறுத்தல்களும் சோதனைகளும் இருந்த பயங்கரமான சமயத்தில் இது நடந்தது. பிரிகாம் யங் நாவூவிலிருந்து பரிசுத்தவான்களை வழிநடத்தி, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதிலும் இருந்த பாலைவனப் பிரதேசங்களுக்கு பரிசுத்தவான்களை வழிநடத்தி கர்த்தருக்காக சீயோனை உருவாக்க ஒருவருக்கொருவர் உதவ அழைத்தபோது இது நடந்தது.

அந்த முன்னோடிகளின் குறிப்பிதழ் எழுத்துக்களை நீங்கள் வாசித்தால், சந்தேகத்தையும் பயத்தையும் விசுவாசத்தின் அற்புதம் விரட்டியதை நீங்கள் பார்க்கிறீர்கள். தங்கள் சொந்த மந்தைகளுக்கும், உழப்படாத வயல்களுக்கும் செல்லுமுன், கர்த்தருக்காக வேறொருவருக்கு உதவ, தங்கள் சொந்த நலத்தை துறப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

சுத்தம் செய்யும் முயற்சிகளை ஆரம்பிக்க, பிற்காலப் பரிசுத்தவான்கள் பிற சபைகளுடனும், உள்ளூர் சமுதாயப் பிரிவுகளுடனும், தேசிய ஸ்தாபனங்களுடனும் பங்குதாரர்களான, போர்ட்டோ ரிக்கோவிலும், செயின்ட் தாமஸிலும், ப்ளோரிடாவிலும், இர்மா சூறாவளிக்குப் பிறகு அதே அற்புதத்தை சில நாட்களுக்கு முன் நான் பார்த்தேன்.

ரெக்ஸ்ப்ர்க்கிலுள்ள என் நண்பர்களைகளைப்போல, ப்ளோரிடாவிலுள்ள சபை அங்கத்தினரல்லாத ஒரு தம்பதியர், தங்களுடைய சொந்த சொத்துக்களில் உழைப்பதைவிட சமுதாயத்திற்கு உதவுவதில் கவனம் செலுத்தினர். அவர்களுடைய வாகனம் செல்லும் பாதையை அடைத்துக்கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தை அகற்ற, பிற்காலப் பரிசுத்தவான்களான சில அண்டைவீட்டார் அவர்களுக்குதவியதில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, தங்களுடைய வீட்டிற்குத் தேவையானதை கர்த்தர் கொடுப்பார் என்ற விசுவாசத்தில் மற்றவர்களுக்கு உதவ அவர்கள் திரும்பினார்கள் என தம்பதியர் விவரித்தார்கள். உதவி செய்ய நமது சபை அங்கத்தினர்கள் வந்துசேருவதற்கு முன்பு தம்பதியர் ஜெபித்தனர் என பின்னர் கணவர் விவரித்தார். உதவி வரும் என ஒரு பதிலை அவர்கள் பெற்றார்கள். அந்த உறுதிப்பாட்டிற்குப் பின் சில மணிநேரங்களில் அது வந்தது.

மஞ்சள் உதவும் கரங்கள் டீ சர்ட்டுகளை அணிந்திருந்த பிற்காலப் பரிசுத்தவான்களை சிலர் “மஞ்சள் தூதர்கள்” என அழைக்கத் தொடங்கியதாக நான் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். ஒரு பிற்காலப் பரிசுத்தவான் அவளது காரை பழுது பார்க்க எடுத்துச் சென்றார், அவளுக்கு உதவிக்கொண்டிருந்த, மஞ்சள் சட்டை அணிந்தவர்கள் அவரது முற்றத்திலிருந்து மரங்களை அகற்றும்போது அந்த ஆவிக்குரிய அனுபவத்தை விவரித்து, அவர் சொன்னார், “அவர்கள் தேவனின் பிள்ளையாயிருப்பது பற்றி சில பாடல்கள் பாடினர்.”

நமது மதத்தைச் சாராத ப்ளோரிடாவின் மற்றொருவர் அவரது அழிந்துபோன குடியிருப்பில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பிற்காலப் பரிசுத்தவான்கள் உதவிசெய்ய அவரது வீட்டிற்கு வந்தபோது அவர் உணர்ச்சிவசப்பட்டு, வியப்புற்று கண்ணீரோடு சொன்ன, “ஒரு தூய்மையான அற்புதம்” என்ற அவரின் வார்த்தைகளை தன்னார்வமுள்ளோர் உண்டாக்கினார்கள். அவர்கள் கருத்தாய் மட்டுமே சேவை செய்யவில்லை, சிரிப்புடனும் புன்னகையோடும், கைமாறாக எதையும் ஏற்றுக்கொள்ளாமல் செய்தார்கள்.

சனிக்கிழமை மாலையில், நான் ப்ளோரிடாவில் ஒரு பிற்காலப் பரிசுத்தவான்கள் குழுவைச் சந்தித்தபோது அந்த சிரத்தையைப் பார்த்தேன், அந்த சிரிப்பைக் கேட்டேன். அவர்களில் சிலரது கரங்களை நான் குலுக்கும்படிக்கு தன்னார்வலர்கள் தங்கள் சுத்தப்படுத்தும் வேலைகளை முன்னமேயே நிறுத்தியிருந்தனர். கடந்த இரவில் ஜார்ஜியாவிலுள்ள பிணையத்தின் 90 பேர் ப்ளோரிடாவின் மீட்புக்கு உதவ இணைய ஒரு திட்டம் தீட்டியிருக்கின்றனர்.

அவர்கள் காலை 4.00 மணிக்கு ஜார்ஜியாவை விட்டுக் கிளம்பி, பல மணி நேரங்கள் பயணம்செய்து, நாள் முழுவதும் வேலை செய்தனர், அடுத்த நாளும் வேலை செய்ய திட்டமிட்டனர்

இவை அனைத்தையும் அவர்கள் புன்சிரிப்புடனும், நகைச்சுவையுடனும் என்னிடம் விவரித்தனர். அவர்கள் வேலைக்குத் திரும்பச் செல்லும்படியாக நன்றி சொல்வது நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதே அவர்களது ஒரே மன அழுத்தம் என உணர்ந்தேன். அடுத்த மீட்புக்குழுவிடம் செல்ல நாங்கள் எங்கள் வாகனங்களில் ஏறிய உடனே, பிணையத் தலைவர் தன் சங்கிலி வாளை இயக்கி, விழுந்த மரங்களை வெட்டினார், ஆயர் மரத் துண்டுகளை அகற்றிக் கொண்டிருந்தார்.

அந்த நாளின் ஆரம்பத்தில் அடுத்த இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நாங்கள் நகர்ந்தபோது, காரின் அருகில் ஒருவர் வந்து, தன் தொப்பியை  எடுத்துவிட்டு, தன்னார்வலர்களுக்காக நன்றி சொன்னார். அவர் சொன்னார், “நான் உங்கள் சபை அங்கத்தினரல்ல, நீங்கள் எங்களுக்காகச் செய்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.” மஞ்சள் சட்டையுடன் அவருக்குப் பக்கத்திலிருந்த எல்.டி.எஸ் தன்னார்வலர் புன்னகைத்துவிட்டு, அவர் புகழப்பட வேண்டியவரில்லை என்பது போல தன் தோள்களை சுருக்கினார்.

ஜார்ஜியாவிலிருந்து தன்னார்வலர்கள் தன்னால் நம்ப முடியாத இந்த மனுஷனுக்கு உதவ வந்திருக்கும்போது, அந்த பேரழிவிலிருக்கும் ப்ளோரிடா பகுதியிலிருந்த நூற்றுக்கணக்கான எல்.டி.எஸ் தன்னார்வலர்கள், ஜனங்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிற ப்ளோரிடாவிலுள்ள தெற்கில் மற்றொரு இடத்துக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம்பண்ணி சென்றிருக்கின்றனர்.

அன்று, நான் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் தீர்க்கதரிசன வார்த்தைகளை நினைத்து, நன்கு புரிந்து கொண்டேன்: “தேவ அன்பால் நிறைந்த ஒருவன், தன் குடும்ப ஆசீர்வாதத்தோடு திருப்தியடைவதில்லை. ஆனால் உலக முழுவதிலுமுள்ள அனைத்து மனுஷ இனத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறான்.” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 426).

எங்கெங்கிலுமுள்ள பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட அன்பை நாம் பார்க்கிறோம். உலகத்தில் சோக நிகழ்வு நடக்கிற ஒவ்வொரு சமயத்திலும், பிற்காலப் பரிசுத்தவான்கள் சபையின் மனிதாபிமான முயற்சிகளுக்கு நிதியளித்து உதவ முன்வருகின்றனர். ஒரு விண்ணப்பம் தேவைப்படுவதில்லை. உண்மையாக சில சந்தர்ப்பங்களில், அப்பணியை வழிநடத்துபவர்கள் அவர்களை வரவேற்க ஆயத்தப்படும்வரை, தன்னார்வலராக இருக்க வருவோரை மீட்புப் பணியிடத்துக்கு பிரயாணம் பண்ணுவதற்குக் காத்திருக்குமாறு கேட்க வேண்டியிருந்திருக்கிறது.

ஆசீர்வதிக்கும் வாஞ்சை, ஜனங்கள், இயேசு கிறிஸ்து, அவரது சுவிசேஷம், அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை மற்றும் அவரது தீர்க்கதரிசியைப்பற்றி, சாட்சி பெறுவதன் கனியாகும். அதனால்தான் கர்த்தரின் ஜனம் சந்தேகிப்பதில்லை, பயப்படுவதில்லை. அதனால்தான் ஊழியக்காரர்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும், சேவை செய்ய முன்வருகிறார்கள். அதனால்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் பிறருக்காக ஜெபிக்கின்றனர். அதனால்தான் தலைவர்கள் மார்மன் புஸ்தகத்தை தங்கள் இருதயத்துக்குள் கொண்டு சென்று அதில் மூழ்குமாறு தலைவர் மான்சன் கொடுத்த வேண்டுகோளை இளைஞர்களுக்கு சவாலாகக் கொடுக்கின்றனர்.  தலைவர்கள் ஊக்குவிப்பதால் கனி வருவதில்லை, ஆனால், விசுவாசத்துடன் செயல்படும் இளைஞர்களாலும் அங்கத்தினர்களாலும் செயல்பட வைக்கப்பட்ட சுயநலமற்ற தியாகம் தேவைப்படும் விசுவாசமான அது, தேவ அன்பை அவர்கள் உணரத்தக்கதாக அவர்களை அனுமதிக்கிற இருதய மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

இருப்பினும் நமது இருதயங்கள் தீர்க்கதரிசியின் ஆலோசனைகளை நாம் தொடர்ந்து பின்பற்றும்வரை, மாறியிருக்கின்றன. ஒரு முயற்சிக்குப் பின்னர் நாம் முயற்சிப்பதை நிறுத்திக் கொண்டால், மாற்றம் மங்கும்.

விசுவாசமிக்க பிற்காலப் பரிசுத்தவான்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும், மார்மன் புஸ்தகத்தை தேவ வார்த்தையாகவும், அவரது உண்மையான சபையின் ஆசாரியத்துவ திறவுகோல்களின் மறுஸ்தாபிதத்திலும், தங்கள் விசுவாசத்தை அதிகரித்திருக்கின்றனர். அந்த அதிகரித்த சாட்சி அதிக தைரியத்தைக் கொடுத்து, தேவனின் பிற பிள்ளைகள் மீதும் அக்கறையை கொடுத்திருக்கிறது. ஆனால் முன்னால் இருக்கிற சவால்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் அதிகமாகக்கூட தேவைப்படும்.

விவரங்களை நாம் முன்னறிய முடியாது, ஆனால் நாம் விசாலமான தோற்றத்தை அறிவோம். கடைசி நாட்களில் உலகம் குழப்பத்திலிருக்கும் என நாம் அறிவோம். வருகிற எந்த பிரச்சினைக்கு மத்தியிலும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒவ்வொரு தேசத்துக்கும், ஜாதிக்கும், பாஷைக்கும், ஜனத்துக்கும், எடுத்துச் செல்ல கர்த்தர் விசுவாசமிக்க பிற்காலப் பரிசுத்தவான்களை வழிநடத்துவார். அவர் திரும்பவும் வரும்போது, அவரை வரவேற்க கர்த்தரின் உண்மையான சீஷர்கள் தகுதியாயும் ஆயத்தப்பட்டும் இருப்பார்கள் என நாம் அறிவோம். நாம் பயப்படத் தேவையில்லை.

ஆகவே, நமது இருதயங்களில் நாம் ஏற்கனவே விசுவாசத்தையும் தைரியத்தையும் கட்டியிருப்பதால், கர்த்தர் நம்மிடமும், நமக்குப் பின்னால் வரவிருக்கிற தலைமுறைகளிடமும், அதிகம் எதிர்பார்க்கிறார். அவர்கள் அதிக பெலத்துடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும், ஏனெனில் நாம் செய்ததைவிட அவர்கள் பெரிய கடினமான காரியங்களைச் செய்வார்கள். நமது ஆத்துமாக்களின் சத்துருவிடமிருந்து அவர்கள் அதிகரிக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ளுவார்கள்.

நாம் முன்னேறிச் செல்லும்போது நேற்மறையான வழி கர்த்தரால் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஒவ்வொரு சிந்தனையிலும் என்னை நோக்கிப் பாருங்கள், சந்தேகப்படாதிருங்கள், பயப்படாதிருங்கள்” (கோ.உ 6:36). அதை எப்படிச் செய்வதென தலைவர் மான்சன் நமக்குச் சொன்னார். நாம் மார்மன் புஸ்தகத்தையும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் சிந்தித்து பயன்படுத்த வேண்டும். எப்போதும் ஜெபியுங்கள். நம்புங்கள். முழு இருதயத்தோடும், பராக்கிரமத்தோடும், மனதோடும், பெலனோடும் கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். கிறிஸ்துவின் பரிசுத்த அன்பான தயாளத்துவத்தின் வரத்துக்காக, நமது இருதயங்களில் முழு சக்தியோடும் நாம் ஜெபிக்க வேண்டும். (மரோனி 7:47–48 பார்க்கவும்). எல்லாவற்றுக்கும் மேலாக தீர்க்கதரிசன ஆலோசனையைப் பின்பற்றுவதில், ஸ்திரமாகவும், விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.

வழி கடினமாயிருக்கும்போது, நாம் கர்த்தரின் வாக்குத்தத்தத்தைச் சார்ந்திருக்கலாம், இரட்சகரின் வார்த்தைகளை அவர் அடிக்கடி குறிப்பிடும்போது தலைவர் மான்சன் நமக்கு நினைவூட்டியிருக்கிற, வாக்குத்தத்தம்: “உங்களை யார் வரவேற்றாலும் நான் அங்கேயிருப்பேன், ஏனெனில் நான் உங்கள் முகத்துக்கு முன்னே போவேன். நான் உங்கள் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருப்பேன், உங்கள் இருதயங்களில் என் ஆவி இருக்கும். உங்களைத் தாங்க எனது தூதர்கள் உங்களைச் சுற்றிலுமிருப்பார்கள்.” (கோ.உ 84:88).

அவரது பணியில் நீங்கள் இருக்கும்போதெல்லாம் கர்த்தர் உங்கள் முகத்துக்கு முன்னே போவார் என நான் சாட்சியளிக்கிறேன். சிலசமயங்களில் உங்களைத் தாங்குகிற தூதர்களால் நீங்கள் சூழப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒவ்வொரு திருவிருந்து ஆராதனையிலும் நீங்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறபடி, உங்கள் இருதயங்களில் அவரது ஆவியை எப்போதும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் அவரது கட்டளைகளுக்கு மட்டும் கீழ்ப்படிய வேண்டும்.

பூமியில் தேவ இராஜ்யம் இருக்க சிறந்த நாட்கள் வரவிருக்கின்றன. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் நாட்களிலிருந்தே இருக்கிறபடி, எதிர்ப்பு இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை அதிகரிக்கும். விசுவாசம் எப்போதும் பயத்தை தோற்கடிக்கிறது. ஒன்றுபட்டு நிற்பது ஒற்றுமையை உருவாக்குகிறது. தேவையிலிருப்போருக்காக உங்களது ஜெபம், நேசிக்கிற தேவனால் பதிலளிக்கப்படும். அவர் ஒருபோதும் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை.

பிதாவாகிய தேவன் ஜீவிக்கிறார், அவரிடத்தில் வீட்டுக்கு நீங்கள் திரும்பி வர அவர் விரும்புகிறார் என நான் சாட்சியளிக்கிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை. அவர் உங்களை அறிகிறார், நேசிக்கிறார், உங்களைக் கண்காணிக்கிறார். உங்கள் மற்றும் என்னுடைய பாவங்களுக்காகவும், பரலோக பிதாவின் அனைத்து பிள்ளைகளின் பாவங்களுக்காகவும் அவர் பாவ நிவர்த்தி செய்தார். உங்கள் வாழ்க்கையிலும், பிறருக்கு நீங்கள் சேவை செய்வதிலும் அவரைப் பின்பற்றுவது, நித்திய ஜீவனுக்கு ஒரே வழி.

அப்படியாக சாட்சியளித்து என் ஆசீர்வாதத்தையும் அன்பையும் உங்களுக்குக் கொடுக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, ஆமென்.