பொது மாநாடு
சபை தணிக்கை துறையின் அறிக்கை, 2021
ஏப்ரல் 2022 பொது மாநாடு


சபை தணிக்கை துறையின் அறிக்கை, 2021

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பிரதான தலைமைக்கு

அன்பான சகோதரரே: கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 120ல் வெளிப்படுத்தலால் வழிநடத்தப்பட்டபடி, பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர் குழுமம், மற்றும் தலைமை ஆயத்துவம் அடங்கிய தசமபாகங்களை பரிவர்த்தனை செய்கிற ஆலோசனைக்குழு, சபை நிதிகளின் செலவீனங்களை அங்கீகரிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட, வரவு செலவு திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்றார்போல சபை நிறுவனங்கள் நிதிகளை பட்டுவாடா செய்கிறது.

நம்பகமான வல்லுனர்கள் அடங்கிய சபை தணிக்கை துறை, சபையின் பிற எல்லா துறைகள் மற்றும் நிறுவனங்களிலிருந்தும் சுயாதீனமானது. பெறப்பட்ட நன்கொடைகள், செய்யப்பட்ட செலவுகள், சபை சொத்துக்களை பாதுகாத்தல் போன்றவை சம்பந்தப்பட்ட நியாயமான உத்தரவாதத்தை அளிப்பதற்காக தணிக்கைகளை நடத்த அதற்கு பொறுப்பிருக்கிறது.

நடத்தப்பட்ட தணிக்கைகளின் அடிப்படையில், பெறப்பட்ட நன்கொடைகள், செய்யப்பட்ட செலவுகள், 2021 ஆண்டிற்கான சபையின் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் வகையில், சபை வரவு செலவு திட்டங்கள், கொள்கைகள், கணக்கெடுப்பின் பழக்கங்களுக்கு ஏற்றார்போல நிர்வகிக்கப்பட்டன என சபை தணிக்கை கருதுகிறது. கடன்களைத் தவிர்த்து, தேவையின் நேரத்திற்காக சேமித்து ஒரு வரவு செலவு திட்டத்திற்குள் வாழுதலுக்கு சபை அங்கத்தினர்களுக்கு போதிக்கிற பழக்கங்களை அது பின்பற்றுகிறது.

மரியாதையுடன் சமர்பிக்கப்பட்டது,

சபை தணிக்கை இலாகா

ஜேர்ட் பி.லார்சன்

நிர்வாக இயக்குனர்