பொது மாநாடு
தேவன் இவ்வளவாய் நம்மில் அன்பு கூர்ந்தார்
ஏப்ரல் 2022 பொது மாநாடு


தேவன் இவ்வளவாய் நம்மில் அன்பு கூர்ந்தார்

அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க அல்ல, ஆனால் நம்மைக் காப்பாற்ற அனுப்புமளவுக்கு நம்மில் அன்புகூர்ந்தார்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). இந்த வசனத்தை நான் முதன்முதலில் கவனித்தபோது, நான் சபையிலோ அல்லது குடும்ப இல்ல மாலையிலோ இல்லை. நான் தொலைக்காட்சியில் ஒரு விளையாட்டுப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எந்த நிலையத்தைப் பார்த்தாலும் சரி, அது எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, குறைந்தபட்சம் ஒரு நபராவது “யோவான் 3:16” என்று எழுதப்பட்ட பலகையைப் பிடித்திருந்தார்.

நான் வசனம் 17 ஐ சமமாக விரும்பினேன்: “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி, தேவன் தம்முடைய குமாரனை அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.”

தேவன் நம் ஒவ்வொருவருக்காகவும் தம்முடைய ஜீவனைக் கொடுக்க, மாம்சத்தில் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். அவர் நம்மை நேசிப்பதாலும், நாம் ஒவ்வொருவரும் அவரிடத்திற்குத் திரும்புவதற்கான திட்டத்தை வடிவமைத்ததாலும் இதைச் செய்தார்.

ஆனால் இது ஒரு போர்வை அல்ல, அனைத்தையும் பிடிக்கவும், அடித்து அல்லது தவறவிடுகிற வகையான திட்டம் அல்ல. இது தனிப்பட்டது, நம் இருதயங்களையும், நம் பெயர்களையும், நாம் என்ன செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார் என்பதையும் அறிந்திருக்கிற அன்பான பரலோக பிதாவால் அமைக்கப்பட்டது. நாம் ஏன் அதை நம்புகிறோம்? ஏனென்றால், பரிசுத்த வேதங்களில் நாம் அதைக் கற்பிக்கப்படுகிறோம்:

“மோசே, என் மகனே” (மோசே 1:6 பார்க்கவும்; வசனங்கள் 7, 40 ஐயும் பார்க்கவும்) என்ற வார்த்தைகளை பரலோக பிதா திரும்பத் திரும்பக் கூறுவதை மோசே கேட்டான். ஆபிரகாம் தான் தேவனின் பிள்ளை என்று அவன் அறிந்துகொண்டான், அவன் பிறப்பதற்கு முன்பே தனது ஊழியத்துக்காக தெரிந்து கொள்ளப்பட்டான் (ஆபிரகாம் 3:12, 23 பார்க்கவும்). தேவனின் கையால், எஸ்தர் தனது மக்களைக் காப்பாற்ற செல்வாக்குடையவளாக வைக்கப்பட்டாள் (எஸ்தர் 4 பார்க்கவும்). நாகமான் குணமடைய, ஜீவனுள்ள ஒரு தீர்க்கதரிசியைப்பற்றி சாட்சியமளிக்க ஒரு இளம் பெண்ணான, ஒரு வேலைக்காரியை தேவன் நம்பினார்(2 இராஜாக்கள் 5:1–15 பார்க்கவும்).

இயேசுவைப் பார்க்க மரத்தில் ஏறிய உயரம் குறைந்த, அந்த நல்ல மனிதனை விசேஷமாக நான் நேசிக்கிறேன். அவன் அங்கு இருப்பதை இரட்சகர் அறிந்தார், நிறுத்தி, கிளைகளைப் பார்த்து, இந்த வார்த்தைகளைப் பேசினார்: “சகேயுவே, … இறங்கி வா” (லூக்கா 19:5). மரங்களடங்கிய தோப்பிற்குள் சென்று, உண்மையில் திட்டம் எவ்வளவு தனிப்பட்டது என்பதை அறிந்து கொண்ட 14 வயதானவரை நாம் மறக்க முடியாது: “[ஜோசப்,] இவர் என் நேச குமாரன் இவருக்குச் செவிகொடு!”(ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17).

சகோதர சகோதரிகளே, நாம் நமது பரலோக பிதாவின் திட்டத்தின் மையமாகவும், நமது இரட்சகரின் ஊழியத்துக்கான காரணமாகவும் இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாக, அவர்களின் கிரியை மற்றும் அவர்களின் மகிமை.

என்னைப் பொறுத்தவரை, பழைய ஏற்பாட்டை நான் படித்ததை விட எந்த வேதப் புத்தகமும் இதை தெளிவாக விவரிக்கவில்லை. பரலோக பிதாவும் யேகோவாவும் எப்படி நம் வாழ்வில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான உதாரணங்களை அதிகாரத்துக்கு அதிகாரம் நாம் காண்கிறோம்.

யாக்கோபுவின் அன்பு மகன் யோசேப்பைப்பற்றி சமீபத்தில் நாம் படித்து வருகிறோம். தனது இளமைப் பருவத்திலிருந்தே, யோசேப்பு கர்த்தரால் மிகவும் விரும்பப்பட்டவனாக இருந்தான், இருப்பினும் அவன் தனது சகோதரர்களின் கைகளில் பெரும் சோதனைகளை அனுபவித்தான். யோசேப்பு தன் சகோதரர்களை எப்படி மன்னித்தான் என்பது இரண்டு வாரங்களுக்கு முன்பு, நம்மில் பலரைத் தொட்டது. என்னைப் பின்பற்றி வாருங்களில் நாம் படிக்கிறோம்: “பல வழிகளில், யோசேப்பின் வாழ்க்கை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கு இணையாக இருக்கிறது. நம்முடைய பாவங்கள் அவருக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தினாலும், பஞ்சத்தை விட மிக மோசமான ஒரு தலைவிதியிலிருந்து நம் அனைவரையும் விடுவித்து, இரட்சகர் மன்னிப்பை வழங்குகிறார். நாம் மன்னிப்பைப் பெற வேண்டுமா அல்லது அதை நீட்டிக்க வேண்டுமா, சில சமயங்களில் நாம் அனைவரும் இரண்டையும் செய்ய வேண்டும், யோசேப்பின் உதாரணம் குணப்படுத்தும் மற்றும் ஒப்புரவாகுதலின் உண்மையான ஆதாரமான இரட்சகரை சுட்டிக்காட்டுகிறது.”1

அந்த விவரத்தில் நான் விரும்பும் ஒரு பாடம், யோசேப்பிற்கான தேவனின் தனிப்பட்ட திட்டத்தில் பங்கு வகித்த யோசேப்பின் சகோதரன் யூதாவிடமிருந்து வருகிறது. யோசேப்பு தன் சகோதரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டபோது, யூதா, யோசேப்பின் உயிரைப் பறிக்காமல், அவனை அடிமையாக விற்கும்படி அவர்களை நம்பவைத்தான் (ஆதியாகமம் 37:26–27 பார்க்கவும்).

பல வருடங்களுக்குப் பிறகு, யூதாவும் அவனுடைய சகோதரர்களும் தங்களுடைய இளைய சகோதரன் பென்யமீனை எகிப்துக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அவர்களின் தகப்பன் எதிர்த்தார். ஆனால் அவன் பென்யமீனை அழைத்து வருவதாக, யாக்கோபுக்கு யூதா வாக்குறுதி அளித்தான்.

எகிப்தில், யூதாவின் வாக்குறுதி சோதிக்கப்பட்டது. இளம் பென்யமீன் ஒரு குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டான். யூதா, தனது வாக்குறுதிக்கு உண்மையாக, பென்யமீனின் இடத்தில் சிறையில் அடைக்கப்பட முன்வந்தான். அவன் சொன்னான், “இளையவனை விட்டு எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்?” (ஆதியாகமம் 44:33–34 பார்க்கவும்). யூதா தன் வாக்குறுதியைக் காப்பாற்றி, பென்யமீனைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பத் தீர்மானித்தான். பென்யமீனைப்பற்றி யூதா உணர்ந்ததைப் போல நீங்கள் எப்போதாவது மற்றவர்களைப்பற்றி உணர்ந்திருக்கிறீர்களா?

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப்பற்றி இப்படி உணர்கிறார்கள் அல்லவா? தாங்கள் சேவை செய்யும் மக்களைப்பற்றி ஊழியக்காரர்கள் எப்படி உணருகிறார்கள்? ஆரம்ப வகுப்பு மற்றும் இளைஞர் தலைவர்கள் தாங்கள் கற்பிக்கும் மற்றும் நேசிப்பவர்களைப்பற்றி எப்படி உணருகிறார்கள்?

நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது உங்கள் தற்போதைய சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், ஒருவர் உங்களைப்பற்றி சரியாக இப்படித்தான் உணர்கிறார். யாரோ ஒருவர் உங்களுடன் பரலோக பிதாவிடம் திரும்ப விரும்புகிறார்.

எங்களை ஒருபோதும் கைவிடாதவர்களுக்கும், நமக்காக ஜெபத்தில் தங்கள் ஆத்துமாவைத் தொடர்ந்து ஊற்றுபவர்களுக்கும், தொடர்ந்து கற்பித்து, பரலோகத்திலுள்ள நமது பிதாவிடம் வீடு திரும்புவதற்குத் தகுதிபெற உதவுபவர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு அன்பான நண்பர் கோவிட்-19 நோயுடன் 233 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அந்த நேரத்தில், மரித்த அவரது தகப்பன் அவரைச் சந்தித்தார், அவர் தனது பேரக்குழந்தைகளுக்கு ஒரு செய்தியை வழங்குமாறு கேட்டார். திரைக்கு அப்பால் இருந்தும், இந்த நல்ல தாத்தா தனது பேரக்குழந்தைகள் தங்கள் பரலோக வீட்டிற்கு திரும்ப உதவ விரும்பினார்.

கிறிஸ்துவின் சீஷர்கள் தங்கள் வாழ்க்கையில் “பென்யமீன்களை” நினைவுகூருவது அதிகரித்து வருகிறது. உலகெங்கிலும் அவர்கள் தேவனின் ஜீவிக்கிற தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சனின் உரத்த குரலைக் கேட்டிருக்கிறார்கள். கர்த்தருடைய இளைஞர் படையணியில் இளைஞர்களும் இளம் பெண்களும் ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்டவர்களும் குடும்பங்களும் ஊழியம் செய்யும் மனப்பான்மையுடன், அன்புடனும், பகிர்தலுடனும் சென்றடைகிறார்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரை கிறிஸ்துவிடம் வரும்படி அழைக்கிறார்கள். தேவனின் ஆலயங்களை நிரப்புதல், மரித்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைக் கண்டறிதல், அவர்கள் சார்பாக நியமங்களைப் பெறுதலில், இளைஞர்களும் பெரியவர்களும் தங்களுடைய உடன்படிக்கைகளை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்க முயல்கின்றனர்.

பரலோக பிதாவின் நமக்கான தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தில் மற்றவர்கள் அவரிடம் திரும்ப உதவுவதை ஏன் சேர்க்கிறார்? ஏனென்றால் இப்படித்தான் நாம் இயேசு கிறிஸ்துவைப் போல் ஆகிறோம். இறுதியில், யூதா மற்றும் பென்யமீனைப்பற்றிய விவரம் நமக்காக இரட்சகரின் தியாகத்தைப்பற்றி நமக்குக் கற்பிக்கிறது. அவருடைய பாவநிவர்த்தியின் மூலம், அவர் நம்மை வீட்டிற்கு அழைத்து வரத் தம் ஜீவனைக் கொடுத்தார். யூதாவின் வார்த்தைகள் இரட்சகரின் அன்பை வெளிப்படுத்துகின்றன: “நான் எப்படி என் தகப்பனிடம் செல்வேன், [நீங்கள்] என்னுடன் இருக்கவில்லை?” இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பவர்களாக, அவை நம்முடைய வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

பழைய ஏற்பாடு அற்புதங்கள் மற்றும் மென்மையான இரக்கங்களால் நிரம்பியுள்ளது, அவை பரலோக பிதாவின் திட்டத்தின் அடையாளமாகும். 2 இராஜாக்கள் 4ல், “அது ஒரு நாளில் விழுந்தது” என்ற சொற்றொடர் மூன்று முறை பயன்படுத்தப்பட்டு, முக்கியமான நிகழ்வுகள் தேவனின் நேரப்படி நடக்கின்றன, மேலும் எந்த விவரமும் அவருக்குச் சிறியதாக இல்லை என எனக்கு வலியுறுத்தப்பட்டது.

என் புதிய நண்பர் பால் இந்த சத்தியத்தைப்பற்றி சாட்சியமளிக்கிறார். சில சமயங்களில் துஷ்பிரயோகம் மற்றும் சிலசமயங்களில் மதத்தை பழிக்கிற, பொறுத்துக்கொள்ளாத ஒரு வீட்டில் பால் வளர்ந்தார். ஜெர்மனியில் ஒரு இராணுவ தளத்தின் பள்ளியில் படிக்கும் போது, ஆவிக்குரிய வெளிச்சம் கொண்டிருந்ததாகத் தோன்றிய இரண்டு சகோதரிகளை அவர் கவனித்தார். அவர்கள் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று கேட்டது, அவர்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையைச் சேர்ந்தவர்கள் என்று பதிலைக் கொண்டு வந்தது.

விரைவில் பால் ஊழியக்காரர்களை சந்திக்கத் தொடங்கி, சபைக்கு அழைக்கப்பட்டார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அவர் பேருந்திலிருந்து இறங்கும்போது, ​​வெள்ளை சட்டை மற்றும் டை அணிந்த இரண்டு ஆண்களை அவர் கவனித்தார். அவர்கள் சபையின் மூப்பர்களா என்று அவர் அவர்களைக் கேட்டார். அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர், எனவே பால் அவர்களைப் பின்தொடர்ந்தார்.

ஆராதனையின்போது, ஒரு போதகர் சபையில் இருந்தவர்களைச் சுட்டிக்காட்டி சாட்சியமளிக்க அழைத்தார். ஒவ்வொரு சாட்சியத்தின் முடிவிலும், ஒரு டிரம்மர் டிரம் சல்யூட் செய்தார், சபை “ஆமென்” என்று அழைத்தனர்.

போதகர் பாலை சுட்டிக்காட்டியபோது, அவர் எழுந்து நின்று, “ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி என்றும், மார்மன் புஸ்தகம் உண்மை என்றும் நான் அறிவேன்” என்றார். அங்கே டிரம் சல்யூட்டும் ஆமென்களும் இல்லை. தான் தவறான சபைக்குச் சென்றுவிட்டதை பால் இறுதியில் உணர்ந்தார். விரைவில், பால் சரியான இடத்திற்கு அவருடைய பாதையைக் கண்டுபிடித்து, ஞானஸ்நானம் பெற்றார்.

பால் ஞானஸ்நானம் பெற்ற நாளில், அவருக்குத் தெரியாத ஒரு உறுப்பினர் அவரிடம், “நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள்” என்று கூறினார். சில வாரங்களுக்கு முன்பு, இந்த மனிதன் வேறொரு சபையைத் தேட முடிவு செய்தார், டிரம்ஸ் மற்றும் ஆமென்களுடன் ஒரு ஆராதனையில் கலந்துகொண்டார். ஜோசப் ஸ்மித் மற்றும் மார்மன் புஸ்தகத்தைப்பற்றி பால் சாட்சியத்தைக் கொடுத்ததை அந்த மனிதன் கேட்டபோது, தேவன் அவரை அறிந்திருந்தார், அவருடைய போராட்டங்களை அங்கீகரித்தார், அவருக்காக ஒரு திட்டத்தை வைத்திருந்தார் என்பதை அவர் உணர்ந்தார். பாலுக்கும் அந்த மனிதனுக்கும், உண்மையில் “அது ஒரு நாளில் நடந்தது”!

பரலோக பிதா நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சியின் திட்டத்தை வைத்திருப்பதை நாமும் அறிவோம். தேவன் தம்முடைய நேசகுமாரனை நமக்காக அனுப்பியதால், அவருடைய திட்டம் நிறைவேறுவதற்கு அவசியமான அற்புதங்கள் “அன்றே நடக்கும்”.

இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டில் நமக்கான தேவனின் திட்டத்தைப்பற்றி மேலும் அறிய முடியும் என்று நான் சாட்சியளிக்கிறேன். நிச்சயமற்ற காலங்களில் தீர்க்கதரிசிகளின் பங்கையும், குழப்பமான மற்றும் அடிக்கடி சர்ச்சைக்குரிய உலகில் தேவனின் கரத்தையும் அந்தப் பரிசுத்த புத்தகம் கற்பிக்கிறது. அவருடைய நீண்ட காலத்துக்கு முன்பே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், மகிமையான திரும்பவரும் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி ஆயத்தப்படுவதைப் போலவே, இது நம்முடைய இரட்சகரின் வருகையை உண்மையாக எதிர்நோக்கிய தாழ்மையான விசுவாசிகளைப்பற்றியது.

அந்த நாள் வரை, நம் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் தேவனின் வடிவமைப்பை நம் சுயமான கண்களால் பார்க்க முடியாது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:3 பார்க்கவும்). ஆனால் தனக்குப் புரியாத ஒன்றை எதிர்கொள்ளும் போது நேபியின் பதிலை நாம் நினைவில் கொள்ளலாம்: எல்லாவற்றின் அர்த்தமும் அவனுக்குத் தெரியாத நிலையில், தேவன் தன் பிள்ளைகளை நேசிக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான் (1 நேபி 11:17 பார்க்கவும்).

இந்த அழகான ஓய்வுநாள் காலையில் இதுவே என் சாட்சி. நாம் அதை நம் இருதயங்களில் எழுதி, நம் ஆத்துமாக்களை சமாதானம், நம்பிக்கை மற்றும் நித்திய மகிழ்ச்சியால் நிரப்ப அனுமதிப்போமாக: தேவன் நம்மை இவ்வளவாய் நேசித்தார், அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க அல்ல, ஆனால் நம்மை இரட்சிக்க அனுப்பினார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.