பொது மாநாடு
ஆனால் நாம் அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை
ஏப்ரல் 2022 பொது மாநாடு


ஆனால் நாம் அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை

(1 நேபி 8:33)

உடன்படிக்கைகளும் நியமங்களும் நம்மைச் சுட்டிக்காட்டி, உடன்படிக்கையின் பாதையில் நாம் முன்னேறும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனான நமது தொடர்பை எப்போதும் நினைவில் கொள்ள உதவுகின்றன.

என் மனைவி சூசன், எங்கள் மூன்று மகன்கள் மற்றும் அவர்களது மனைவிகள், எங்கள் பேரக்குழந்தைகள் அனைவரும், மற்றும் ஏறக்குறைய 15 ஆண்டுகளாக பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் எனது இருக்கை தோழர் மூப்பர் க்வெண்டின் எல். குக்கும், நான் நன்றாகப் பாடவில்லை என்ற உண்மையை அனைவரும் உடனடியாகச் சான்றளிப்பார்கள். ஆனால் எனக்கு குரல் திறமை இல்லாத போதிலும், நான் மறுஸ்தாபித பாடல்களைப் பாட விரும்புகிறேன். உணர்த்துதலான பாடல் வரிகள் மற்றும் கம்பீரமான மெல்லிசைகளின் கலவையானது இன்றியமையாத சுவிசேஷத்தின் கொள்கைகளைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவுகிறது, என் ஆத்துமாவைத் தூண்டுகிறது.

விசேஷித்த வழிகளில் என் வாழ்க்கையை ஆசீர்வதித்த ஒரு பாடல் “Let Us All Press On.” சமீபகாலத்தில் அந்தப் பாடலின் பல்லவியில் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரைப்பற்றி சிந்தித்து நான் அறிந்துகொண்டேன். “துன்மார்க்கன் சொல்வதற்கு நாம் செவிகொடுக்க மாட்டோம், ஆனால் கர்த்தருக்கு மட்டுமே நாம் கீழ்ப்படிவோம்.”1

நாம் செவிகொடுக்க மாட்டோம்.

“எல்லோரும் முன்னேறுவோம்,” என்று நான் பாடும்போது, லேகியின் தரிசனத்தில் உள்ளவர்கள் ஜீவ விருட்சத்திற்கு நடத்திச் செல்லும் பாதையில் முன்னேறிச் செல்வதை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் “பற்றிப்பிடித்துக் கொண்டு”2 மாத்திரமல்ல அவர்கள் முன்பாக வந்து கீழே விழுந்து விருட்சத்தின் கனியைப் புசிக்குமட்டும் எப்போதும் இருப்புக்கோலை இறுக்கமாகப் பிடித்திருந்தார்கள்.”3 பெரிய மற்றும் விசாலமான கட்டிடத்தில் “[அவனை] அவமதிக்கும் விரலையும் கனியை உண்பவர்களையும்”4 சுட்டிக்காட்டுவதை, லேகி விவரித்தான். கேலி மற்றும் அவமதிப்புகளுக்கு அவன் அளித்த பதில் அற்புதமானது, மறக்கமுடியாதது: “ஆனால் நாங்கள் அவர்களுக்கு செவிசாய்க்கவில்லை.”5

நாம் வாழும் சமகால உலகின் தீய செல்வாக்குகள் மற்றும் கேலிக் குரல்களுக்கு “செவிகொடுக்காமல்” இருக்க நாம் எவ்வாறு பலப்படுத்தப்படலாம் என்பதை நாம் ஒன்றாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து தெளிவுபடுத்தும்படி ஜெபிக்கிறேன்.

செவிகொடுக்க வேண்டாம்

செவிகொடுத்தல் என்ற வார்த்தை யாரையாவது அல்லது எதையாவது கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. எனவே, “நாம் அனைவரும் முன்னேறுவோம்” என்ற பாடலின் வரிகள், “துன்மார்க்கர்கள் என்ன சொல்லக்கூடும்” என்பதில் கவனம் செலுத்தாமல் உறுதியான முடிவை எடுக்குமாறு அறிவுறுத்துகிறது. பெரிய மற்றும் விசாலமான கட்டிடத்திலிருந்து அடிக்கடி வரும் கேலி மற்றும் அவதூறுகளுக்கு கவனம் செலுத்தாததற்கு லேகியும் அவனுடன் விருட்சத்தின் கனிகளை உண்ணும் மக்களும் ஒரு வலுவான உதாரணத்தை வழங்குகிறார்கள்.

“ஜீவனுள்ள தேவனின் ஆவியுடன் … [நம் இருதயங்களின்] சதையான பலகைகளில்”6 எழுதப்பட்ட கிறிஸ்துவின் கோட்பாடு, நமது விழுந்துபோன உலகில் பல கவனச்சிதறல்கள், அவதூறுகள் மற்றும் திசைதிருப்பல்களுக்கு “செவிகொடுக்காத” நமது திறனை அதிகரிக்கிறது. உதாரணமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதும், அவரிலும் கவனம் செலுத்தும் விசுவாசம் நம்மை ஆவிக்குரிய பலத்தால் பலப்படுத்துகிறது. மீட்பர் மீதான விசுவாசம் செயல் மற்றும் வல்லமையின் கொள்கையாகும். அவருடைய சுவிசேஷத்தின் சத்தியங்களுக்கு ஏற்ப நாம் செயல்படும்போது, இரட்சகர் நமக்கு அளிக்கும் சந்தோஷங்களில் கவனம் செலுத்தும் அதே வேளையில், அநித்தியத்தின் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதற்கான ஆவிக்குரிய திறனைப் பெற்றுள்ளோம். உண்மையாகவே, “நாம் சரியானதைச் செய்தால், நாம் பயப்படத் தேவையில்லை, ஏனெனில், நமக்குத் துணையாகிய கர்த்தர் எப்போதும் அருகில் இருப்பார்.”7

உடன்படிக்கைகள் மூலம் ஒரு தனிப்பட்ட இணைப்பு

பரிசுத்த உடன்படிக்கைகளுக்குள் நுழைவதும், ஆசாரியத்துவ நியமங்களை தகுதியுடன் பெறுவதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனும் பரலோக பிதாவுடனும் நம்மை இணைத்து நம்மைக் கட்டுகிறது.8 இரட்சகரை நமது பரிந்துரைப்பவராகவும்9 மத்தியஸ்தராகவும்10 நம்புகிறோம் என்பதும், வாழ்க்கைப் பயணத்தின் போது அவருடைய தகுதிகள், இரக்கம் மற்றும் கிருபையில்11 சார்ந்திருப்பதும் இதன் பொருள். நாம் கிறிஸ்துவிடம் வருவதில் உறுதியாகவும், அவருடன் இணைக்கப்பட்டவர்களாகவும் இருப்பதால், அவருடைய எல்லையற்ற மற்றும் நித்திய பாவநிவர்த்தியின் சுத்திகரிப்பு, குணப்படுத்துதல் மற்றும் பலப்படுத்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.12

ஜீவிக்கிற அன்பான உடன்படிக்கை ஒப்புக்கொடுத்தல்கள் கர்த்தருடன் ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் ஆவிக்குரிய ரீதியில் ஆற்றல்வாய்ந்த ஒரு தொடர்பை உருவாக்குகிறது. பரிசுத்தமான உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களின் நிபந்தனைகளை நாம் மதிக்கும்போது, படிப்படியாகவும், அதிகமாகவும் அவரிடம் நெருங்கி வருகிறோம்,13 அவரது தெய்வீகத்தன்மை மற்றும் ஜீவிக்கும் யதார்த்தத்தின் தாக்கத்தை நம் வாழ்வில் அனுபவிக்கிறோம். இயேசு பின்னர் வேதக் கதைகளிலுள்ள மையப் பாத்திரத்தை விட அதிகமாக மாறுகிறார்; அவருடைய முன்மாதிரியும் போதனைகளும் நம்முடைய ஒவ்வொரு விருப்பம், எண்ணம் மற்றும் செயலை பாதிக்கின்றன.

உயிர்த்தெழுந்த மற்றும் ஜீவிக்கும் தேவனின் குமாரனுடனான நமது உடன்படிக்கையின் தொடர்பின் துல்லியமான தன்மை மற்றும் வல்லமையை போதுமான அளவு விவரிக்கும் திறன் வெளிப்படையாக என்னிடம் இல்லை. ஆனால், அவருடனும் பரலோக பிதாவுடனும் உள்ள தொடர்புகள் உண்மையானவை என்றும், “எதிரிகள் ஏளனம் செய்தாலும்”14 பயப்படாமல் இருப்பதற்கு நமக்கு உதவும் உறுதி, சமாதானம், மகிழ்ச்சி மற்றும் ஆவிக்குரிய பலத்தின் இறுதி ஆதாரங்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கை செய்யும் மற்றும் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் சீஷர்களாக, நாம் “தைரியமாக இருக்க வேண்டும், ஏனென்றால் கர்த்தர் நம் பக்கம் இருக்கிறார்”15 மற்றும் தீய செல்வாக்குகள் மற்றும் மதச்சார்பற்ற கேலிக்கு கவனம் செலுத்த வேண்டாம்.

உலகெங்கிலும் உள்ள சபையின் உறுப்பினர்களை நான் சந்திக்கையில், நான் அவர்களிடம் அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பேன்: உலக செல்வாக்கு, கேலி, தூற்றுதல் ஆகியவற்றை “கவனிக்காமல் இருப்பதற்கு” எது உங்களுக்கு உதவுகிறது? அவர்களின் பதில்கள் மிகவும் அறிவுறுத்துபவை.

வீரம் மிக்க உறுப்பினர்கள், அர்த்தமுள்ள வேதப் படிப்பு, ஊக்கமான ஜெபம் மற்றும் நியமங்களில் பங்கேற்க சரியான ஆயத்தம் ஆகியவற்றின் மூலம் பரிசுத்த ஆவியின் வல்லமையை தங்கள் வாழ்க்கையில் அழைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கடி எடுத்துக்காட்டுகின்றனர். விசுவாசமுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நம்பகமான நண்பர்களின் ஆவிக்குரிய ஆதரவு, கர்த்தரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் ஊழியம் மற்றும் சேவை செய்வதன் மூலம் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்கள் மற்றும் பெரிய மற்றும் விசாலமான கட்டிடத்தில் உள்ள அல்லது வரும் எதிலும் முழுமையான வெறுமையைக் கண்டறியும் திறன் ஆகியவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன.

இந்த உறுப்பினர் பதில்களில் குறிப்பாக விசேஷித்த ஒரு குறிப்பிட்ட மாதிரியை நான் குறிப்பிட்டுள்ளேன். முதலாவதும் முக்கியமானதாகவும், பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டம் மற்றும் நமது மீட்பர் மற்றும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பங்கைப்பற்றிய உறுதியான சாட்சியங்களை இந்த சீஷர்கள் பெற்றிருக்கின்றனர். இரண்டாவதாக, அவர்களின் ஆவிக்குரிய அறிவும் நம்பிக்கையும் தனித்தனியானவை, தனிப்பட்டவை, குறிப்பிட்டவை; அவை பொதுவானவை அல்ல மற்றும் கருத்துப்பொருள். இந்த அர்ப்பணிப்புள்ள ஆத்துமாக்கள் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கான வலிமையை வழங்கும் உடன்படிக்கைகளைப் பற்றியும், நல்ல மற்றும் கெட்ட சமயங்களில் அவர்களை ஆதரிக்கும் ஜீவிக்கிற கர்த்தருடனான அவர்களின் தொடர்பைப்பற்றியும் பேசுவதை நான் கேட்கிறேன். இந்த நபர்களுக்கு, இயேசு கிறிஸ்து உண்மையில் ஒரு தனிப்பட்ட இரட்சகர்.

படம்
திசைகாட்டி

சுவிசேஷ உடன்படிக்கைகளும் நியமங்களும் ஒரு திசைகாட்டி போல நம் வாழ்வில் செயல்படுகின்றன. திசைகாட்டி என்பது வழிகாட்டல் மற்றும் புவியியல் நோக்குநிலை நோக்கங்களுக்காக வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகியவற்றின் முக்கியமான திசைகளைக் குறிக்கப் பயன்படும் ஒரு சாதனமாகும். இதேபோன்று, நமது உடன்படிக்கைகளும் நியமங்களும் நம்மைச் சுட்டிக்காட்டி, உடன்படிக்கையின் பாதையில் நாம் முன்னேறும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடனான நமது தொடர்பை எப்போதும் நினைவில் கொள்ள உதவுகின்றன.

படம்
கிறிஸ்தஸ்

அநித்தியத்தில் நம் அனைவருக்கும் முக்கிய வழிகாட்டுதல், கிறிஸ்துவுக்குள் வந்து பூரணப்பப்பட வேண்டும் என்பதே.16 பரிசுத்த உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் இரட்சகரின் மீது கவனம் செலுத்தி, அவருடைய கிருபையுடன்,17 மேலும் அவரைப் போல் ஆக முயற்சி செய்ய நமக்கு உதவுகின்றன. மிக உறுதியாக, “ஒரு கண்ணுக்குத் தெரியாத [வல்லமை] சத்தியத்தின் புகழ்பெற்ற காரணத்தில் எனக்கும் உங்களுக்கும் உதவும்.”18

இருப்புக்கோலை இறுகப் பற்றிப்பிடித்தல்

தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான நமது உடன்படிக்கை இணைப்பு, இதன் மூலம் நாம் “செவிகொடுக்காத” திறனையும் பலத்தையும் பெற முடியும். நாம் தொடர்ந்து இருப்புக் கோலை இறுக்கமாகப் பற்றிப்பிடித்துக்கொள்வதால் இந்த பிணைப்பு வலுவடைகிறது. ஆனால் நேபியின் சகோதரர்கள் கேட்டது போல், “நம் தகப்பன் பார்த்த இருப்புக் கோல் என்றால் என்ன … ?

“அது தேவனுடைய வார்த்தை என்றும், தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, அதை உறுதியாய்ப் பிடித்துக் கொள்கிறவர்கள், ஒருக்காலும் அழிவதில்லை என்றும், அவர்களை அழிவுக்குள் நடத்திச்சென்று குருடாக்க, சோதனைகளும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களும், அவர்களை மேற்கொள்ளமுடியாது”19 என்றும் நேபி அவர்களுக்குச் சொன்னான்.

சோதனைகள் மற்றும் எதிரியின் அக்கினியஸ்திரங்களை எதிர்க்கும் திறன் தேவனுடைய வார்த்தையை வெறுமனே “இறுகப் பிடித்துக்கொள்ளுவதைவிட” “பற்றிக்கொள்ளும்” நபர்களுக்கு வாக்குறுதியளிக்கப்படுகிறது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.

சுவாரஸ்யமாக, அப்போஸ்தலனாகிய யோவான் இயேசு கிறிஸ்துவை வார்த்தை என்று விவரித்தான்.20

“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. …

“சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. …

“அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், (அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது).”21

ஆகவே “வார்த்தை”22 இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் ஒன்று.

கூடுதலாக, எட்டாவது விசுவாசப்பிரமாணம் உரைக்கிறது, “வேதாகமம் சரியாக மொழிபெயர்க்கப்பட்டவரை அது தேவனின் வார்த்தையாயிருக்கிறதென நாங்கள் விசுவாசிக்கிறோம்; மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தையாயிருக்கிறது எனவும் நாங்கள் விசுவாசிக்கிறோம்23.”

அப்படியாக, பரிசுத்த வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இரட்சகரின் போதனைகளும் “வார்த்தை” ஆகும்.

தேவனுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வது (1) மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் மூலம் இரட்சகருடனும் அவருடைய பிதாவுடனும் நாம் வைத்திருக்கும் தனிப்பட்ட தொடர்பை நினைவு கூர்தல், கனப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் மற்றும் (2) ஜெபத்துடன், ஆர்வத்துடன், மேலும், பரிசுத்த நூல்களையும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் போதனைகளையும் வெளிப்படுத்திய சத்தியத்தின் உறுதியான ஆதாரங்களாக தொடர்ந்து பயன்படுத்துதலை ஏற்படுத்துகிறது. நாம் கர்த்தருடன் கட்டப்பட்டு, “பற்றிப் பிடித்து” அவருடைய கோட்பாட்டின்படி வாழ்வதன் மூலம் மாற்றப்படும்போது,24 தனித்தனியாகவும் கூட்டாகவும் நாம் “பரிசுத்த ஸ்தலங்களில் நிற்கவும், அசைக்கப்படாமல் இருக்கவும்”25 ஆசீர்வதிக்கப்படுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால், அவர் நம்மோடு தரித்திருந்து நடப்பார்.26 நிச்சயமாக, “சோதனையின் நாட்களில் அவர் தம்முடைய பரிசுத்தவான்களை உற்சாகப்படுத்துவார், சத்தியத்தின் காரணத்தை வளப்படுத்துவார்.”27

சாட்சி

முன்னேறவும். பற்றிப் பிடிக்கவும். செவிகொடுக்காதீர்.

இரட்சகரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களுக்கு விசுவாசமாக இருப்பது, கர்த்தருடைய வேலையில் தொடர்ந்து முன்னேறவும், தேவனுடைய வார்த்தையாக அவரைப் பற்றிக்கொள்ளவும், எதிரியின் கவர்ச்சிகளுக்கு செவிகொடுக்காமல் இருக்கவும் உதவுகிறது. உரிமைக்கான போராட்டத்தில், நாம் ஒவ்வொருவரும் ஒரு பட்டயத்தை, “சத்தியத்தின் வலிமைமிக்க பட்டயத்தை,”28 கூட ஏந்துவோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்