பொது மாநாடு
உங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் - பரலோக பிதாவிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதல்
ஏப்ரல் 2023 பொது மாநாடு


உங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் - பரலோக பிதாவிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதல்

எனது கோத்திர தலைவனின் ஆசீர்வாதம் நான் உண்மையில் யார், நான் யாராக மாற முடியும் என்ற உண்மையான நித்திய அடையாளத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது

தங்கள் பிள்ளைகளை நேசித்து, சுவிசேஷத்தை எங்களுக்கு விசுவாசத்துடன் போதித்த அற்புதமான பெற்றோரால் நான் வளர்க்கப்பட்டேன். துரதிர்ஷ்டவசமாக, என் அன்பான பெற்றோர் பல ஆண்டுகளாக தங்கள் திருமணத்தில் அவதிப்பட்டனர் நான் ஒரு ஆரம்ப வகுப்பு பிள்ளையாக இருந்தபோது அவர்கள் ஒரு நாள் விவாகரத்து செய்வார்கள் என்றும், என் உடன்பிறந்தவர்கள் மற்றும் நான் எந்தப் பெற்றோருடன் வாழ வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் எனக்கு கூறப்பட்டது. இதன் விளைவாக, நான் மிகுந்த மனக்கவலையை அனுபவித்தேன்; இருப்பினும், என் பரலோக பிதாவிடமிருந்து வந்த வரமான கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம், இறுதியாக எல்லாவற்றையும் மாற்ற உதவியது.

11 வயதில், என் பெற்றோரின் உறவைப்பற்றி அதிகமாகக் கவலைப்பட்டதால், எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை நான் மிகவும் எதிர்பார்த்தேன். என் பரலோக பிதா என்னைப் பரிபூரணமாக அறிந்திருக்கிறார் என்றும், என்னுடைய குறிப்பிட்ட சூழ்நிலைகளை அறிந்திருக்கிறார் என்றும் எனக்குத் தெரியும். அவரிடமிருந்து நான் வழிகாட்டுதலைப் பெறுவேன் என்பதும் எனக்குத் தெரியும். எனது 12-வது பிறந்தநாளுக்குப் பிறகு, ​​எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றேன். அது அரை நூற்றாண்டுக்கு முந்தையது, ஆனால் அந்த பரிசுத்தமான அனுபவத்தின் விவரங்களை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன்.

சபையின் பொதுக் கையேட்டில் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களைப்பற்றிய உணர்த்தப்பட்ட வழிகாட்டுதலை நன்றியோடு பார்க்கிறேன்.

“ஒவ்வொரு தகுதியுடைய, ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினரும் பரலோக பிதாவிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதலை வழங்கும், கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள்.”

ஒவ்வொரு உறுப்பினரும் “ஆசீர்வாதத்தின் முக்கியத்துவத்தையும் பரிசுத்த தன்மையையும் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைய வேண்டும்” மற்றும் “சுவிசேஷத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

“வாழ்க்கையில் பல முக்கியமான முடிவுகள் இன்னும் முன்னால் இருக்கும் அளவுக்கு உறுப்பினர் இள வயதுடையவராக இருக்க வேண்டும்… “ஆசாரியத்துவத் தலைவர்கள் உறுப்பினருக்கு கோத்திரத் தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கக்கூடாது.”

“ஒவ்வொரு கோத்திரத் தலைவனின் ஆசீர்வாதமும் பரிசுத்தமானது, இரகசியமானது, தனிப்பட்டது…”

“கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுபவர் அதன் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதி, அவற்றைச் சிந்தித்து, இம்மையிலும் நித்தியத்திலும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறத் தகுதியுள்ளவராக வாழ வேண்டும்.”1

நமது அன்பான தலைவர் ரசல் எம். நெல்சன், கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி தொடர்ந்து போதிக்கிறார்2 அது ஒவ்வொரு பெறுநரின் வம்சாவளியை “ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் இணைக்கிறது”3 மேலும் இது “ஒவ்வொரு ஆசீர்வாதமும் உங்களுக்கான தனிப்பட்ட வேதம்.”4

என் சிறு வயதில் பல நெருக்கடியான தருணங்களில் கோத்திரத் தலைவனின் ஆசீர்வாதம் எனக்கு முக்கியமானதாக இருந்தது. முதலாவதாக, நான் உண்மையில் யாராயிருந்தேன், நான் யாராக மாற முடியும் என்ற எனது உண்மையான நித்திய அடையாளத்தைப் புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக எனது கோத்திரத் தலைவனின் ஆசீர்வாதம் எனக்குதவியது நான் “கர்த்தரின் குமாரன்”,”உடன்படிக்கையின் பிள்ளைமற்றும் “இயேசு கிறிஸ்துவின் சீஷன் என்று தலைவர் நெல்சன் போதித்ததைப் போல இது எனக்கு உதவியது.5 பரலோக பிதாவும் இரட்சகரும் என்னை அறிந்திருக்கிறார்கள், நான் நேசிக்கப்படுகிறேன் என்பதையும், அவர்கள் என் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதுவும் எனக்கு தெரியும். இது அவர்களுடன் நெருங்கி பழகவும் அவர்கள் மீது என் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கவும் எனக்கு உதவியது.

இளம் வயதில் சபையில் சேர்ந்த ஒரு அன்பான நண்பர் பகிர்ந்து கொண்டார்: “கோத்திரத்தலைவன் என் தலையில் கைகளை வைத்து என் பெயரை உச்சரித்தபோது, ​​​​எல்லாம் மாறியது … அந்த ஒருநாள் மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதையும் மாற்றியது அவர் வல்லமையுடன் பேசியதாக, நான் நெருக்கமாகவும் ஆழமாகவும் அறிந்து - உடனடியாக அறிந்து கொண்டேன். அவர் பேசிய வார்த்தைகள் என் முழு உள்ளத்தையும் ஊடுருவின. பரலோக பிதா என்னை உள்ளும் புறமுமாக அறிந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்.

நான் உண்மையில் யார் என்பதை அறிவது, கர்த்தர் என்னிடமிருந்து எதிர்பார்த்ததைச் செய்ய விரும்புவதைப் புரிந்து கொள்ளவும், செய்ய விரும்பவும் உதவியது6

இது நான் செய்த உடன்படிக்கைகளையும், ஆபிரகாமுடன் கர்த்தரின் உடன்படிக்கையில் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் படிக்க வழிவகுத்தது.7 இது எனக்கு ஒரு நித்திய கண்ணோட்டத்தைக் கொடுத்தது, இது எனது உடன்படிக்கைகளை இன்னும் முழுமையாகக் கடைப்பிடிக்க என்னைத் தூண்டியது.

எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை ஒரு இளைஞனாக, நான் அடிக்கடி, தொடர்ந்து தினமும் படித்தேன், அது பரிசுத்த ஆவியின் ஆறுதலான, வழிகாட்டும் தாக்கத்தை உணர எனக்கு உதவியது, பரிசுத்த ஆவியின் உணர்த்துதலை நான் பின்பற்றும்போது என் கவலையைக் குறைக்க உதவியது. வேதங்களைப் படிப்பதன் மூலமும், தினமும் ஜெபிப்பதன் மூலமும், தேவனின் தீர்க்கதரிசி மற்றும் அப்போஸ்தலர்களின் போதனைகளைப் படிப்பது மற்றும், பின்பற்றுவதன் மூலமும் வெளிச்சம், சத்தியம் மற்றும் பரிசுத்த ஆவியானவரை ஆர்வத்துடன் வரவேற்க, என் விருப்பத்தை அதிகரித்தது. மேலுமாக கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம், பரலோக பிதாவின் விருப்பத்திற்கு மிகவும் கீழ்ப்படிந்திருக்க விரும்புவதற்கு எனக்கு உதவியது, மற்றும் நான் அதில் கவனமாயிருக்கும் போது எனது தனிப்பட்ட சூழ்நிலைகளிலும் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்க எனக்கு உதவியது.8

ஒவ்வொரு முறையும் எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் படிக்கும்போது ஆவிக்குரிய பலம் பெற்றேன். இறுதியாக எனது பெற்றோர் விவாகரத்து செய்தபோது, ​​தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தவாறு எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் எனக்கு “ஒரு மதிப்புமிக்க, விலைமதிப்பற்ற தனிப்பட்ட பொக்கிஷமாக,” “மேலுமாக தனிப்பட்ட லியாஹோனாவாகவும்” மாறியது.9

இப்போது, ​​தயவுசெய்து தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். நான் பரிபூரணனாய் இல்லை நான் எல்லா வகையான தவறுகளையும் செய்தேன். நான் இன்னும் செய்கிறேன் என்பதை எனது நித்திய துணை உறுதிப்படுத்துவார். ஆனால் எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் சிறப்பாகவும் மிக சிறப்பாகவும் இருக்க ஆசைப்பட தொடர்ந்து உதவுகிறது.10 எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை அடிக்கடி படிப்பது, சோதனையை தாங்கும் என் வாஞ்சையை அதிகரித்தது. மனந்திரும்புவதற்கான வாஞ்சையும் தைரியமும் எனக்கு உதவியது, மேலும் மனந்திரும்புதல் அதிகமான மகிழ்ச்சியான செயலாக மாறியது.

நான் இள வயதாக இருந்தபோதும், என் சாட்சியம் இன்னும் வளர்ந்துகொண்டிருக்கும்போதும் எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவது எனக்கு இன்றியமையாததாக இருந்தது. மேலும் விருப்பமுடன் நான் தயாராக இருக்கிறேன் என்பதை என் பெற்றோரும் ஆயரும் புரிந்துகொண்டதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எனக்கு 12 வயதாக இருந்தபோது, ​​இன்றைய உலகத்தை விட உலகம் மிகவும் குழப்பமாகவும் கவனத்தை சிதறடிப்பதாகவும் இருந்தது. தலைவர் நெல்சன் இன்றைய கால கட்டமானது “உலக வரலாற்றில் மிகவும் சிக்கலான காலம்” என்று விவரித்தார், “பாவம்-நிறைவுற்ற” மற்றும் “தன்னை மையமாகக் கொண்ட” உலகம்.”11 அதிர்ஷ்டவசமாக இன்றைய நம் இளைஞர்கள் நான் 12 வயதில் இருந்ததை விட மிகவும் பக்குவமடைந்துள்ளனர், அவர்களும் இளம் வயதிலேயே முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்! அவர்கள் உண்மையில் யார் என்பதையும், கர்த்தர் அவர்களை நேசிக்கிறார் என்பதையும், அவர்களைப்பற்றி முழுமையாக அறிந்தவர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்!

நான் விரும்பியது போல எல்லோரும் தங்கள் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் இதுவரை கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெறாத உறுப்பினர்கள் தாங்கள் எப்போது தயாராக இருக்கிறார்கள் என்பதை ஜெபித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் தயார் செய்தால், என்னுடைய அனுபவத்தைப் போலவே உங்கள் அனுபவமும் உங்களுக்கு பரிசுத்தமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். ஏற்கனவே தங்களின் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் படித்து மதித்து போற்ற நான் ஜெபிக்கிறேன் என் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் போற்றுவது என்னுடைய இளவயதில் நான் ஊக்கம் இழந்தபோது தைரியத்தையும், நான் பயந்தபோது ஆறுதலையும், நான் கவலையாக உணரும்போது அமைதியையும், நான் நம்பிக்கையற்றதாக உணரும்போது நம்பிக்கையையும், மிகவும் தேவைப்படும்போது மகிழ்ச்சியையும் அளித்தது. எனது கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதம் பரலோக பிதா மற்றும் இரட்சகர் மீது எனக்குள்ள விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்க உதவியது. அது அவர்கள் மீதான என் அன்பை அதிகப்படுத்தியது, அது தொடர்ந்து அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது 12.

கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்கள் பரலோக பிதாவிடமிருந்து உணர்த்தப்பட்ட வழிகாட்டுதலை வழங்குகின்றன என்று நான் சாட்சியளிக்கிறேன். பரலோகத்திலுள்ள நமது பிதா மற்றும் நம்மை அறிந்து நேசித்து மற்றும் ஆசீர்வதிக்க விரும்பும் அவருடைய குமாரன், நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழும் சத்தியத்திற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். தலைவர் ரசல் எம். நெல்சன், நமது நாளின் தீர்க்கதரிசி என்பதையும் நான் உறுதியாக அறிவேன் இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 18.17, 18.17.1, ChurchofJesusChrist.org.

  2. Russell M. Nelson, “Thanks for the Covenant” (Brigham Young University devotional, Nov. 22, 1988), speeches.byu.edu; “A More Excellent Hope” (Brigham Young University devotional, Jan. 8, 1995), speeches.byu.edu; “Identity, Priority, and Blessings” (Brigham Young University devotional, Sept. 10, 2000), speeches.byu.edu; “Roots and Branches,” Liahona, May 2004, 27–29; “Covenants,” Liahona, Nov. 2011, 86–89; “Youth of the Noble Birthright: What Will You Choose?” பார்க்கவும். (Brigham Young University–Hawaii devotional, Sept. 6, 2013), broadcasts.ChurchofJesusChrist.org; “The Book of Mormon, the Gathering of Israel, and the Second Coming,” Ensign, July 2014, 26–31; Liahona, July 2014, 24–29; “Let God Prevail,” Liahona, Nov. 2020, 92–95; “The Everlasting Covenant,” Liahona, Oct. 2022, 1–6.

  3. Russell M. Nelson, “Covenants,” 88.

  4. Russell M. Nelson, “Thanks for the Covenant,” speeches.byu.edu.

  5. Russell M. Nelson, “Choices for Eternity” (worldwide devotional for young adults, May 12, 2022), ChurchofJesusChrist.org; emphasis added.

  6. Russell M. Nelson, “Covenants,” 86–89 பார்க்கவும்.

  7. ஆதியாகமம் 17:1–10 பார்க்கவும்; Russell M. Nelson, “Children of the Covenant“, Ensign, May 1995, 32–34 ஐயும் பார்க்கவும்.

  8. Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 81–84 பார்க்கவும்.

  9. Thomas S. Monson, “Your Patriarchal Blessing: A Liahona of Light,” Ensign, Nov. 1986, 65–66.

  10. ரசல் எம். நெல்சன், “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67–69 பார்க்கவும்.

  11. ரசல் எம். நெல்சன், “Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 95–96.

  12. Inspired by James E. Faust, “Priesthood Blessings,” Ensign, Nov. 1995, 62–64.