பொது மாநாடு
ஆலயப்பணி மற்றும் குடும்ப வரலாறு—ஒப்புமையான ஒரே பணி
ஏப்ரல் 2023 பொது மாநாடு


ஆலயப்பணி மற்றும் குடும்ப வரலாறு—ஒப்புமையான ஒரே பணி

இந்த வாழ்க்கைக்காகவும் நித்தியத்திற்காகவும் குடும்பத்தை ஒன்றிணைத்தல், நமது பரலோக பிதாவின் திட்டத்தின் மையக் கவனம்

இந்த “காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தில் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:18) ஆலயங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மறுஸ்தாபிதத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து, விசுவாசமுள்ள பரிசுத்தவான்கள் ஆலய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளைப் பெறுவதற்கு பல தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்களின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றி, என் அன்பு மனைவி எவ்லியாவும் நானும், எங்கள் அன்பான பெற்றோருடன் சேர்ந்து, 197-ல் பல பொருளாதார தியாகங்களுக்குப் பிறகு மெக்ஸிகோ நகரத்திலிருந்து பயணித்து, மீஷா அரிசோனா ஆலயத்தில் நித்தியத்திற்கும் கணவன் மனைவியாக முத்திரிக்கப்பட்டோம். அன்றைய தினம், கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் நாங்கள் ஒன்றுபட்டிருந்தோம், நாங்கள் உண்மையிலேயே பரலோகத்தின் ஒரு காட்சியை கண்டோம்.

ஆலயங்களின் பணியும் நோக்கமும்

இவ்வனுபவம், இந்த ஊழியக்காலத்தின் முதலாம் ஆலயத்தை மூன்று வருட கடின உழைப்பு மற்றும் பெரும் தியாகத்திற்குப் பிறகு, ஓஹையோவிலுள்ள கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்கள், 1836-ம் ஆண்டு வசந்த காலத்தில் இறுதியாக தங்கள் அழகிய ஆலயத்தை எவ்வாறு கட்டினார்கள் என்பது என்னை மிகவும் சிறப்பாக பாராட்ட அனுமதித்தது. அதே ஆண்டு மார்ச் மாதத்தில், பிரதிஷ்டை சேவைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜனங்கள் ஆலயத்திலும் அதன் நுழைவாயிலிலும் கூடினர். வெளிப்படுத்துதலால் பெற்ற அர்ப்பணிப்பு ஜெபத்தை ஏறெடுக்க தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் எழுந்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109 பார்க்கவும்). அதில், கர்த்தரின் ஆலயத்தில் பிரவேசிப்பவர்களின் மேல் அருளப்படும் பல அசாதாரண ஆசீர்வாதங்களைப்பற்றி அவர் விவரித்தார். பின்னர் தேர்ந்திசைக் குழு “The Spirit of God” என்ற பாடலைப் பாடியதும் “கட்டிடத்திலிருந்து கூரையை உயர்த்தும், வல்லமையுடன் கூட்டத்தினர் ஓசன்னா கூவுதலுக்காக எழுந்து நின்றனர் ” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 307).

ஒரு வாரம் கழித்து, தீர்க்கதரிசி ஆலயத்தில் கண்ட கர்த்தரின் தோற்றத்தை விவரித்தார், அவர் கூறினார்:

“ஏனெனில் இதோ, இந்த ஆலயத்தை நான் ஏற்றுக்கொண்டேன், என்னுடைய நாமம் இங்கேயிருக்கும், இந்த ஆலயத்தில் இரக்கத்துடன் என்னுடைய ஜனங்களுக்கு நான் என்னை வெளிக்காட்டுவேன்…

“இந்த ஆலயத்தின் புகழ் வெளி தேசங்களுக்கும் பரவும்; என்னுடைய ஜனங்களின் தலைகள்மீது பொழியப்படும் ஆசீர்வாதங்களின் ஆரம்பமாய் இது இருக்கும்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:7,10)

இந்த மற்றும் பிற தரிசனங்களுக்குப் பிறகு, மரணத்தை ருசிக்காமல் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட எலியா தீர்க்கதரிசி, ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுடரி முன் தோன்றி கூறினார்:

“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே அவன் [எலியா] அனுப்பப்படுவான் என்று மல்கியாவின் வாயால் பேசப்பட்ட நேரம் முழுமையாக வந்தது

“பூமி முழுவதையும் சங்காரத்தால் அடிக்கப்படாதபடிக்கு, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளின் இருதயங்களை தங்களின் பிதாக்களிடத்திற்கும் திருப்பப்படவேண்டும்

“ஆகவே, இந்த ஊழியக்காலத்தின் திறவுகோல்கள் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டன, இதன் மூலமாக கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் சமீபத்திருக்கிறதென, வாசற்படிகளிலே இருக்கிறதென நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:14-16).

ஆலய மற்றும் குடும்ப வரலாறு

முத்திரையிடுதலின் திறவுகோல்களை கர்த்தர், ஜோசப் ஸ்மித்துக்கு மறுஸ்தாபிதம் செய்த பின்பு, இந்த ஊழிய காலத்தின் இரட்சிப்பின் பணி திரையின் இருபுறமும் துவங்கியது (1 கொரிந்தியர் 15:22, 29 கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:8-18பார்க்கவும்)

தலைவர் பாய்ட் கே. பாக்கர் இவ்வாறு போதித்தார் “இந்த அடையாள நிகழ்ச்சி உலகத்தால் கேட்கப்படாமல் நடந்தது, ஆனால் எப்போதுமே வாழ்ந்த, வாழப்போகிற ஒவ்வொரு ஆத்துமாவின் இலக்கிலும் இது செல்வாக்கு ஏற்படுத்தும். காரியங்கள் அமைதியாக நடக்க ஆரம்பித்தன. சபை ஒரு ஆலயம் கட்டும் சபையாக மாறியது.

உலகத்தில் இங்கேயும் அங்கேயும் எழும்பின, ஒரு வகையில் தன்னிச்சையாக என சிந்திக்கக்கூடிய, வம்சவரலாற்றை தேடிக்கண்டுபிடிக்க மக்களும், ஸ்தாபனங்களும், சமுதாயங்களும் ஆர்வமாயினர். இவை எல்லாம் கர்த்லாந்து ஆலயத்தில் எலியா தோன்றியதிலிருந்தே நடந்திருக்கின்றன. (The Holy Temple [1980], 141).

“ஏப்ரல் 3, 1836 என்ற அந்த நாளிலிருந்து பிள்ளைகளின் இருதயங்கள் தங்களுடைய பிதாக்களிடம் திரும்பத் தொடங்கின. அதன்பிறகு நியமங்கள் தற்காலிகமாக நடக்கவில்லை, ஆனால் நிரந்தரமானதாயிற்று. முத்திரிக்கும் வல்லமை நம்முடனிருந்தது. எந்த அதிகாரமும் மதிப்பில் அதை மிஞ்சியதில்லை. அந்த வல்லமை, முறையான அதிகாரத்துடன் ஜீவிக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நடத்தப்படுகிற எல்லா நியமங்களுக்கும், அர்த்தத்தையும் நித்திய நிரந்தரத்தையும் கொடுக்கிறது. (பரிசுத்த ஆலயத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஆயத்தப்படுத்துதல் [2002], 28).

அன்பான சகோதர சகோதரிகளே, எந்த ஊழிய காலகட்டத்திலும் ஆலயங்களைக் கட்டுவதும் முறையாகப் பயன்படுத்துவதும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபையின் அடையாளமாக இருந்து வருகிறது. 1893-ல் சால்ட் லேக் ஆலய பிரதிஷ்டைக்குப் பிறகு, தலைவர் வில்ஃபோர்ட் உட்ரஃப் ஆலயத்தின் உறுப்பினர்களை தங்கள் மூதாதையர்களின் பதிவுகளைக் கண்டறியவும், ஆலயத்திற்குள் பெயர்களைக் கொண்டு வந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக முடிந்தவரை பின்னால் சென்று அவர்களின் வம்சாவளியைப் பதிவு செய்யவும் ஊக்குவித்தார். ( Teachings of Presidents of the Church: Wilford Woodruff [2004], 174 பார்க்கவும்).

குடும்ப வரலாறும் ஆலயப்பணியும்- ஒரே பணி

ஒரு வருடம் கழித்து (1894 -ல்), அதே தலைவர் வுட்ரஃப் யூட்டாவின் வம்சவரலாறு சங்கத்தின் உருவாக்கத்தை மேற்பார்வையிட்டார். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1994-ல், அப்போதைய பன்னிரு அப்போஸ்தலர் குழும உறுப்பினரான மூப்பர் ரசல் எம். நெல்சன், சொன்னார், “அந்த வரலாற்று ஆண்டின் நிகழ்வுகள் குடும்ப வரலாற்று ஆராய்ச்சியையும் ஆலய பணியையும் சபையில் ஒரே பணியாக நிறுவியது” (“The Spirit of Elijah,” Ensign, Nov. 1994, 85).

குடும்ப வரலாற்றுப் பணி

அன்பான சகோதர சகோதரிகளே, நம்முடைய சொந்த குடும்ப வரலாற்றைப் பாதுகாக்கவும், நம் முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவர்கள் உடன்படிக்கையின் பாதையில் முன்னேறுவதற்கு, ஆலயங்களில் சுவிசேஷத்தின் நியமங்களை பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும், கர்த்தர் தம் சபையின் உறுப்பினர்களாகிய நம்மை ஊக்குவிக்கிறார். அது அவர்களை நித்திய குடும்பத்துடன் ஆசீர்வதிக்கும். இந்த வாழ்க்கைக்காகவும் நித்தியத்திற்காகவும் குடும்பத்தை ஒன்றிணைத்தல்: இதுவே நமது பரலோக பிதாவின் திட்டத்தின் மையக் கவனம்

உங்களில் இந்த பணியைச் செய்யத் திறனில்லை என்று உணர்பவர்களுக்கு, நீங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் குடும்ப வரலாற்று மையங்களாக நாம் அறிந்திருந்த குடும்பத் தேடல் மையங்களில் காணப்படும், சபை தயாரித்துள்ள கருவிகளுக்கு நாம் அனைவரும் திரும்பலாம். இந்தக் குடும்பத் தேடல் மையங்கள், கிட்டத்தட்ட எல்லோரும், சிறிய உதவியுடன், தங்கள் மூதாதையர்களின் தகவல்களைக் கண்டுபிடித்து, அதை கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சரியாக ஒழுங்கமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வழிகாட்டும் உங்கள் தொகுதி அல்லது கிளையில் உள்ள குடும்ப வரலாற்று ஆலோசகர்களை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

தீர்க்கதரிசிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நம் குடும்ப வரலாற்றை எப்படிச் செய்வது, நம் முன்னோர்களுக்கு ஆலய வழிபாடுகளைச் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால், அதைச் செய்வதை நிறுத்த விரும்பாத அளவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்போம். ஆவியானவர் நம் இருதயங்களை நிரப்புவார், அதைச் செய்ய நம் திறமைகளை எழுப்புவார், மேலும் நம் முன்னோர்களின் பெயர்களைத் தேடும்போது நம்மை வழிநடத்துவார். ஆனால் குடும்ப வரலாறு என்பது பெயர்கள், தேதிகள் மற்றும் இடங்களைத் தேடுவதை விட அதிகம் என்பதை நினைவில் கொள்வோம். இது குடும்பங்களை ஒன்றிணைத்து, சுவிசேஷத்தின் நியமங்களை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதால் வரும் மகிழ்ச்சியை உணரச்செய்கிறது.

நமது அன்பிற்குரிய தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சனின் உணர்த்தப்பட்ட போதனையை நான் நேசிக்கிறேன், அவர் கூறினார்: “இரட்சகரும் அவருடைய கோட்பாடும் ஆலயத்தின் இருதயமாக இருப்பதால் ஆலயத்தில் நமது விசுவாசத்தையும், ஆவிக்குரிய வலிமையையும் வலுப்படுத்த ஆலயம் மையத்தில் உள்ளது. அறிவுறுத்தலின் மூலமும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் ஆலயத்தில் கற்பிக்கப்பட்ட யாவும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கிறது. பரிசுத்த உடன்படிக்கைகள் மூலமாக அவருடைய பரிசுத்தமான ஆசாரியத்துவ உடன்படிக்கைகள் அவருடன் நம்மைக் கட்டுகிறது. பின்னர், நமது உடன்படிக்கைகளை நாம் கைக்கொள்ளும்போது, அவருடைய சுகப்படுத்தலுடனும் வல்லமையை பலப்படுத்துவதுடனும் அவர் நம்மை தரிப்பிக்கிறார்.”(“The Temple and Your Spiritual Foundation,” Liahona, Nov. 2021, 93–94).

நிச்சயமாக, ஆலய பணியும் குடும்ப வரலாறும் சபையில் ஒப்புமையான ஒரே பணி.

இந்த சத்தியங்களுக்கு நான் சாட்சியமளிக்கிறேன். இந்த ஈஸ்டர் நேரத்தில் நாம் நினைவுகூர்ந்து சேவிக்கும் நமது இரட்சகரும் மீட்பருமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபை இது என்பதை நான் அறிவேன். அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன், நாம் நம்முடைய உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போதும், அவர்மீது நம்பிக்கை வைக்கும்போதும், அவருடைய குணப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் வல்லமையை அவர் நமக்கு தரிப்பிக்கிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.