பொது மாநாடு
உடன்படிக்கைகள் மூலம் தேவனின் வல்லமையை அணுகுதல்
ஏப்ரல் 2023 பொது மாநாடு


உடன்படிக்கைகள் மூலம் தேவனின் வல்லமையை அணுகுதல்

நீங்கள் உடன்படிக்கையின் பாதையில் நடக்கும்போது, ஞானஸ்நானம் முதல் ஆலயம் வரை மற்றும் வாழ்நாள் முழுவதும், இயற்கையான உலக ஓட்டத்திற்கு எதிராகச் செல்லும் ஆற்றலை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

கடந்த நவம்பரில், பெலேம் பிரேசில் ஆலயத்தை பிரதிஷ்டை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. வடக்கு பிரேசிலில் உள்ள சபையின் அர்ப்பணிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் இருந்தது மகிழ்ச்சியளித்தது. அந்த நேரத்தில், பெலேம் உலகின் மிக சக்திவாய்ந்த நதியான அமேசான் நதியை உள்ளடக்கிய பகுதியின் நுழைவாயில் என்று அறிந்தேன்.

ஆற்றின் வலிமை இருந்தபோதிலும், வருடத்திற்கு இரண்டு முறை, இயற்கைக்கு மாறான ஒன்று நடப்பதாகத் தோன்றியது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே கோட்டில் இருக்கும்போது, ஆற்றின் இயற்கையான நீர் ஓட்டத்திற்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த அலை மேல்நோக்கிப் பாய்கிறது. 6 மீட்டர் உயரமான1 அலைகள் 50 கிலோமீட்டர் வரை2 மேல் நோக்கி பயணிப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அலை துளை என அறியப்படும் இந்த நிகழ்வு, அது எழுப்பும் உரத்த சத்தத்தின் காரணமாக உள்ளூரில் பொரோரோகா அல்லது “பெரிய கர்ஜனை” என்று குறிப்பிடப்படுகிறது. வலிமைமிக்க அமேசான் கூட வானத்தின் வல்லமைகளுக்கு அடிபணிய வேண்டும் என்று நாம் சரியாக முடிவு செய்யலாம்.

அமேசான் போல, நம் வாழ்வில் இயற்கையான ஓட்டம் உள்ளது; இயற்கையாக வருவதை நாம் செய்ய முனைகிறோம். அமேசானைப் போல, பரலோகத்தின் உதவியுடன், நாம் இயற்கைக்கு மாறாகத் தோன்றுகிற காரியங்களைச் செய்யமுடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் மனத்தாழ்மை, சாந்தம், அல்லது நம் விருப்பங்களை தேவனுக்கு சமர்ப்பிக்க தயாராக இருப்பது இயற்கையானது அல்ல. இருப்பினும் அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே நாம் மாற்றப்பட்டு, தேவனின் பிரசன்னத்தில் வாழவும், நமது நித்திய இலக்கை அடையவும் முடியும்.

அமேசான் போலல்லாமல், நாம் பரலோக வல்லமைகளுக்கு அடிபணிய வேண்டுமா அல்லது “ நீரோட்டத்துடன் செல்லலாமா” 3 என்பதை நாம் தேர்ந்தெடுக்கலாம் நீரோட்டத்திற்கு எதிராக செல்வது கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் “பரிசுத்த ஆவியின் வசீகரங்களுக்கு” அடிபணிந்து, இயற்கையான ஆண் அல்லது பெண்ணின் சுயநலப் போக்குகளை விடும்போது, 4 நம் வாழ்வில் இரட்சகரின் மாற்றும் வல்லமையை, கடினமான காரியங்களைச் செய்யும் வல்லமையைப் பெறலாம்.

இதை எப்படி செய்வது என்று தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் வாக்களித்தார், “ஒவ்வொரு நபரும் ஞானஸ்நான தொட்டிகளிலும், ஆலயங்களிலும் உடன்படிக்கைகளை செய்து, அவற்றைக் கடைப்பிடிக்கிறவர்கள், இந்த வீழ்ச்சியடைந்த உலகின் இழுவைக்கு மேலே நம்மை உயர்த்துவதற்கு இயேசு கிறிஸ்துவின் வல்லமை பெறுவதில் அதிகரித்துள்ளனர்.”5 வேறு வார்த்தைகளில் எனில், நாம் தேவனின் வல்லமையை அணுக முடியும், ஆனால் பரிசுத்த உடன்படிக்கைகள் மூலம் நாம் அவருடன் இணைந்தால் மட்டுமே.

பூமி சிருஷ்டிக்கப்படுவதற்கு முன், தேவன் உடன்படிக்கைகளை ஏற்படுத்தினார், இதன் மூலம் அவருடைய பிள்ளைகளான நாம் அவருடன் நம்மை ஒன்றிணைக்க வேண்டும். நித்தியமான, மாறாத நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில், நாம் மாற்றப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, உயர்த்தப்படுகிற பேரம்பேசமுடியாத நிபந்தனைகளை அவர் குறிப்பிட்டார். இந்த வாழ்க்கையில், ஆசாரியத்துவ நியமங்களில் பங்குகொள்வதன் மூலமும், தேவன் நம்மிடம் கேட்பதைச் செய்வதாக உறுதியளிப்பதன் மூலமும் இந்த உடன்படிக்கைகளைச் செய்கிறோம், அதற்கு பதிலாக, தேவன் நமக்கு சில ஆசீர்வாதங்களை வாக்களிக்கிறார்.6

உடன்படிக்கை என்பது நாம் ஆயத்தப்பட வேண்டிய, தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய, மற்றும் முற்றிலும் மதிக்க வேண்டிய உறுதிமொழியாகும்.7 தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்வது சாதாரணமாக வாக்குறுதியளிப்பதை விட வித்தியாசமானது. முதலில், ஆசாரியத்துவ அதிகாரம் தேவை. இரண்டாவதாக, ஒரு பலவீனமான வாக்குறுதியானது இயற்கையான ஓட்டத்தின் இழுவைக்கு மேலே நம்மை உயர்த்துவதற்கான இணைக்கும் வலிமையைக் கொண்டிருக்கவில்லை. நிறைவேற்றுவதற்கு மிகவும் விதிவிலக்காக நம்மை அர்ப்பணிக்க எண்ணும் போது மட்டுமே நாம் ஒரு உடன்படிக்கையை செய்கிறோம்.8 நாம் தேவனின் உடன்படிக்கை பிள்ளைகளாகவும், அவருடைய ராஜ்யத்தின் சந்ததியர்களாகவும், குறிப்பாக உடன்படிக்கையுடன் நம்மை முழுமையாக அடையாளம் காணும்போது மாறுகிறோம்.

உடன்படிக்கை பாதை என்ற சொல் கிறிஸ்துவிடம் வந்து அவருடன் இணைக்கும் உடன்படிக்கைகளின் தொடரைக் குறிக்கிறது. இந்த உடன்படிக்கையின் இணைப்பின் மூலம், அவருடைய நித்திய வல்லமையை நாம் அணுகுகிறோம். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலுடன் அதைத் தொடர்ந்து ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியைப் பெறுதலில் பாதை தொடங்குகிறது.9 இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது பாதையில் பிரவேசிப்பது எப்படி என்று நமக்குக் காட்டினார்.10 மாற்கு மற்றும் லூக்காவில் உள்ள புதிய ஏற்பாட்டு சுவிசேஷ விவரங்களின்படி, பரலோக பிதா இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது நேரடியாகப் பேசினார், “நீர் என் நேச குமாரன்; நான் உம்மில் பிரியமாயிருக்கிறேன்.” ஞானஸ்நானம் மூலம் நாம் உடன்படிக்கையின் பாதையில் செல்லும்போது, பரலோக பிதா நம் ஒவ்வொருவருக்கும் இதே போன்ற ஒரு காரியத்தைச் சொல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது: “நீ என் நேச குமாரன், உன்னில் நான் பிரியமாயிருக்கிறேன். தொடர்ந்து செல்லுங்கள்.”11

ஞானஸ்நானத்தின் போதும், திருவிருந்தில் பங்குகொள்ளும் போதும், 12 நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று சாட்சியளிக்கிறோம்.13 இந்தச் சூழலில், “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக” 14என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளையை நாம் கவனத்தில் கொள்வோம். நமது தற்கால காதுகளுக்கு, இது கர்த்தருடைய நாமத்தைப் பொருட்படுத்தாமல் பயன்படுத்துவதற்கு எதிரான தடையாகத் தெரிகிறது. கட்டளை அதை உள்ளடக்கியது, ஆனால் அதன் கட்டளை இன்னும் ஆழமானது. “எடு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் அர்த்தம், “தூக்குதல்” அல்லது “ஏந்திச் செல்வது”, ஒரு குழு அல்லது தனிநபருடன் தன்னை அடையாளப்படுத்தும் ஒரு பேனரைப் போல.15 “வீண்” என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைக்கு “வெற்று” அல்லது “ஏமாற்று” என்று பொருள்.16 கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கக்கூடாது என்ற கட்டளை இப்படியாக அர்த்தமாகிறது, “நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நல்ல பிரதிநிதியாக இருந்தாலொழிய, அவருடைய சீஷராக உங்களை அடையாளப்படுத்தக் கூடாது.”

உடன்படிக்கைகள் மூலம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தெரிந்தே கூடுதலாக எடுத்துக்கொள்ளும் போது நாம் அவருடைய சீஷர்களாகி, அவரது நல்ல பிரதிநிதிகளாகிறோம். நம்முடைய உடன்படிக்கைகள், உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்க நமக்கு வல்லமை அளிக்கின்றன, ஏனென்றால் இயேசு கிறிஸ்துவுடனும் நமது பரலோக பிதாவுடனும் நம்முடைய உறவு மாறிவிட்டது. நாம் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை இணைப்புக்குள் இணைக்கப்பட்டுள்ளோம்.

உடன்படிக்கைப் பாதை, ஆலய தரிப்பித்தல் போன்ற ஆலயத்தின் நியமங்களுக்கு வழிவகுக்கிறது.17 தரிப்பித்தல் என்பது நம்மை அவருடன் முழுமையாக இணைக்கும் பரிசுத்த உடன்படிக்கைகளின் தேவ வரம். தரிப்பித்தலில், நாம், முதலில், தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய உடன்படிக்கை செய்கிறோம்; இரண்டாவதாக, நொறுங்குண்ட இருதயத்துடனும், நருங்குண்ட ஆவியுடனும் மனந்திரும்புதல்; மூன்றாவது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல். அவர்மீது விசுவாசம் வைத்து, இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் நியமங்களைப் பெறும்போது தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து, அந்த உடன்படிக்கைகளை நம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து, தேவனையும் அண்டை வீட்டாரையும் நேசிக்க இரண்டு பெரிய கட்டளைகளுடன் வாழ முயற்சிப்பதன் மூலம் இதைச் செய்கிறோம். நான்காவதாக, கற்புடமை பிரமாணத்தைக் கடைப்பிடிக்க உடன்படிக்கை செய்கிறோம், ஐந்தாவது, நம்மை அர்ப்பணித்து, அவருடைய சபையைக் கட்டியெழுப்ப தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் அனைத்தையும் அர்ப்பணிக்கிறோம்.18

ஆலய உடன்படிக்கைகளைச் செய்து, கடைப்பிடிப்பதன் மூலம், கர்த்தரின் நோக்கங்களைப்பற்றி நாம் அதிகம் அறிந்து, பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறுகிறோம்.19 நம் வாழ்க்கைக்கான வழிகாட்டுதலைப் பெறுகிறோம். நாம் நிரந்தரமான, அறியாமையின் பிள்ளைகளாக இருக்கக்கூடாது என்பதற்காக நமது சீஷத்துவத்தில் நாம் முதிர்ச்சி அடைகிறோம்.20 மாறாக, நாம் ஒரு நித்திய கண்ணோட்டத்துடன் வாழ்கிறோம், மேலும் தேவனுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்ய அதிக உந்துதலுடன் இருக்கிறோம். அநித்தியத்தில் நமது நோக்கங்களை நிறைவேற்றும் அதிகத் திறனைப் பெறுகிறோம். தீமையிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம், 21 சோதனையை எதிர்ப்பதற்கும், தடுமாறும்போது மனந்திரும்புவதற்கும் அதிக ஆற்றலைப் பெறுகிறோம்.22 நாம் தடுமாறும்போது, தேவனுடனான நமது உடன்படிக்கைகளின் நினைவு நம்மை பாதைக்குத் திரும்ப உதவுகிறது. தேவனின் வல்லமையுடன் இணைப்பதன் மூலம், நாம் நமது சொந்த போரோரோகாவாக மாறி, உலக ஓட்டத்திற்கு எதிராக, நம் வாழ்நாள் முழுவதும் மற்றும் நித்தியங்களுக்கு எதிராக செல்ல முடியும். இறுதியில், நமது இலக்குகள் மாற்றப்படுகின்றன, ஏனெனில் உடன்படிக்கையின் பாதை மேன்மையடைதல் மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிவகுக்கிறது.23

ஞானஸ்நான தொட்டிகள் மற்றும் ஆலயங்களில் செய்யப்பட்ட உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது அநித்தியத்தின் சோதனைகள் மற்றும் மனவேதனைகளைத் தாங்கும் வலிமையை நமக்கு வழங்குகிறது.24 இந்த உடன்படிக்கைகளுடன் தொடர்புடைய கோட்பாடு நம் வழியை எளிதாக்குகிறது, நம்பிக்கை, ஆறுதல் மற்றும் சமாதானத்தை வழங்குகிறது.

எனது தாத்தா பாட்டிகளான லீனா சோபியா மற்றும் மாட்ஸ் லியாண்டர் ரென்லண்ட் ஆகியோர் 1912-ல் பின்லாந்தில் சபையில் சேர்ந்தபோது தங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையின் மூலம் தேவனின் வல்லமையைப் பெற்றனர். பின்லாந்தில் உள்ள சபையின் முதல் கிளையின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லீனா அவர்களின் பத்தாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தபோது லியாண்டர் காசநோயால் மரித்தார். லியாண்டர் மரித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு என் தந்தையாகிய அந்தக் குழந்தை பிறந்தது. இறுதியில், லீனா தனது கணவரை மட்டுமல்ல, அவரது பத்து குழந்தைகளில் ஏழு பேரையும் அடக்கம் செய்தார். ஒரு ஏழை விதவையாக, அவர் போராடினார். 20 ஆண்டுகளாக, அவருக்கு நல்ல இரவு ஓய்வு கிடைக்கவில்லை. பகலில், அவர் குடும்பத்திற்கு உணவு வழங்க துடித்தார். இரவில், மரித்துக்கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களை அவர் கவனித்துக்கொண்டார். அவர் எப்படி சமாளித்தார் என்று கற்பனை செய்வது கடினம்.

லீனா விடாமுயற்சியுடன் இருந்தார், ஏனென்றால் மரித்த கணவனும் குழந்தைகளும் நித்தியகாலங்களில் அவருடையவர்களாக இருக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். நித்திய குடும்பங்கள் உட்பட ஆலய ஆசீர்வாதங்களின் கோட்பாடு அவருக்கு சமாதானத்தைக் கொடுத்தது, ஏனென்றால் அவர் முத்திரித்தலின் வல்லமையை நம்பினார். அநித்தியத்தில் இருந்தபோது, அவர் தனது தரிப்பித்தலைப் பெறவில்லை அல்லது லியாண்டருடன் அவர் முத்திரிக்கப்படவில்லை, ஆனால் லியாண்டர் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய செல்வாக்கு மற்றும் எதிர்காலத்திற்கான அவரது பெரும் நம்பிக்கையின் ஒரு பகுதியாக இருந்தார்.

1938-ம் ஆண்டில், லீனா தனது மரித்த குடும்ப உறுப்பினர்களுக்காக ஆலய நியமங்களை நிறைவேற்றுவதற்காக பதிவுகளை சமர்ப்பித்தார், பின்லாந்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்டவைகளில் சில மிகப் பழையனவைகளாகும். அவர் மரித்த பிறகு, அவருக்காகவும், லியாண்டர் மற்றும் அவரது மரித்த குழந்தைகளுக்காகவும் ஆலய நியமங்கள் பிறரால் செய்யப்பட்டன. பதிலி மூலம், அவர் தரிப்பிக்கப்பட்டார், லீனாவும் லியாண்டரும் ஒருவருக்கொருவர் முத்திரிக்கப்பட்டனர், மரித்த அவர்களின் பிள்ளைகள் மற்றும் என் தந்தை அவர்களுடன் முத்திரிக்கப்பட்டனர். மற்றவர்களைப் போலவே, லீனாவும் “விசுவாசத்தில் மரித்தார், வாக்குறுதிகளைப் பெறவில்லை, ஆனால் தொலைதூரத்தில் அவைகளைப் பார்த்து, அவைகளை ஏற்று, அவைகளைத் தழுவினார்.” 25

லீனா தனது வாழ்க்கையில் ஏற்கனவே இந்த உடன்படிக்கைகளை செய்ததைப் போல வாழ்ந்தார். அவருடைய ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் உடன்படிக்கைகள் அவரை இரட்சகருடன் இணைக்கின்றன என்பதை அவர் அறிந்தார். அவர் “[மீட்பரின்] பரிசுத்த ஸ்தலத்திற்கான இனிமையான ஏக்கத்தை [தன்னுடைய] பாழடைந்த இருதயத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்த அனுமதித்தார்.”26 லீனா தனது வாழ்க்கையில் சோகங்களை அனுபவிப்பதற்கு முன்பு நித்திய குடும்பங்களைப்பற்றி கற்றுக்கொண்டது தேவனின் பெரிய இரக்கங்களில் ஒன்றாக கருதினார். உடன்படிக்கையின் மூலம் அவர் சவால்கள் மற்றும் கஷ்டங்களின் மனச்சோர்வைத் தாங்கிக் கொள்ளவும் மேலே எழவும் தேவனின் வல்லமையைப் பெற்றார்.

நீங்கள் உடன்படிக்கையின் பாதையில், ஞானஸ்நானம் முதல் ஆலயம் வரை மற்றும் வாழ்நாள் முழுவதும் நடக்கும்போது, இயற்கையான உலக ஓட்டத்திற்கு எதிராகச் செல்லும் ஆற்றலான, கற்றுக்கொள்ளும் ஆற்றலை, மனந்திரும்புவதற்கான ஆற்றலை மற்றும் பரிசுத்தமாக்கப்படுவதற்கான ஆற்றலை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும், குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஆலயத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்போது எதிரிகளின் செல்வாக்கிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.

நீங்கள் கிறிஸ்துவிடம் வந்து, அவருடனும் நமது பரலோக பிதாவுடனும் உடன்படிக்கையின் மூலம் இணைந்திருக்கையில், இயற்கைக்கு மாறான ஒன்று நடக்கிறது. நீங்கள் மாற்றப்பட்டு இயேசு கிறிஸ்துவில் பரிபூரணமாகிவிட்டீர்கள்.27 நீங்கள் தேவனின் உடன்படிக்கைப் பிள்ளைகளாகவும் அவருடைய ராஜ்யத்தில் சந்ததிகளாகவும் மாறுகிறீர்கள்.28 அவர் உங்களிடம் கூறுவதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன், “நீ என் நேச பிள்ளை, நான் உன்னில் பிரியமாயிருக்கிறேன். வீட்டிற்கு வரவேற்கப்படுகிறாய்.” இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. ஏறத்தாழ 20 அடிகள்

  2. ஏறத்தாழ 30 மைல்கள்

  3. நமக்கு ஒரு தேர்ந்தெடுப்பு இருக்கிறது, ஏனென்றால் நமக்காகத் தேர்ந்தெடுத்து செயல்படுவதற்கான சிலாக்கியத்தை தேவன் நமக்கு அளித்துள்ளார். Guide to the Scriptures, , “Agency,” scriptures.ChurchofJesusChrist.org; 2 நேபி 2:27; மோசே 7:32 பார்க்கவும்.

  4. மோசியா 3:19 பார்க்கவும்.

  5. Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 96, 97.

  6. Guide to the Scriptures, “Covenant,” scriptures.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  7. ஒவ்வொருவரும் சில சந்தர்ப்பத்தில் தடுமாறுகிறார்கள், ஆனால் தேவன் நம்முடைய இடறல்களில் பொறுமையாக இருக்கிறார், உடன்படிக்கையை மீறிய பிறகும் மனந்திரும்புதலை நமக்குக் கொடுத்திருக்கிறார். மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் கற்பித்தது போல், “கர்த்தர் பலவீனங்களை கலகத்தை விட வித்தியாசமாகப் [பார்க்கிறார்] … [ஏனென்றால்] பலவீனங்களைப்பற்றி தேவன் பேசும்போது, அது எப்போதும் இரக்கத்துடன் இருக்கும்” (“Personal Strength through the Atonement of Jesus Christ,” Liahona, Nov. 2013, 83). எனவே, நம்முடைய பலவீனங்களுக்கு உதவும் இரட்சகரின் திறனை நாம் சந்தேகிக்கக்கூடாது. இருப்பினும், உடன்படிக்கையை உணர்வுபூர்வமாக மீறி பின்னர் அக்கறையற்ற திட்டத்துடன் மனந்திரும்புவது வேறுவிதமாகக் கூறினால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாவம் மற்றும் மனந்திரும்புதல் தேவன் வெறுப்பது (எபிரெயர் 6:4-6 பார்க்கவும்).

  8. Robert Bolt, A Man for All Seasons: A Play in Two Acts (1990), xiii–xiv, பார்க்கவும்.

  9. 2 நேபி 31:17–18 பார்க்கவும்.

  10. 2 நேபி 31:4-15 பார்க்கவும்.

  11. லூக்கா பதிவு செய்கிறான், “பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல அவர் மேல் இறங்கினார், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” (லூக்கா 3:22). மாற்கு பதிவு செய்கிறான், “அன்றியும் நீர் என் நேச குமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று” (மாற்கு 1:11). வில்லியம் டின்டேலின் மொழிபெயர்ப்பு ஜேம்ஸ் ராஜா பதிப்பை விட மிகவும் தெளிவானது மற்றும் நெருக்கமானது. அவரது மொழிபெயர்ப்பில், பரலோக பிதாவின் குரல், “நீ என் அன்பான மகன், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறுகிறது (பிரையன் மொய்னஹான், கடவுளின் சிறந்த விற்பனையாளர்: வில்லியம் டின்டேல், தாமஸ் மோர் மற்றும் ஆங்கில பைபிளின் எழுத்து - தியாகம் மற்றும் துரோகத்தின் கதை [2002], 58). மத்தேயு மட்டுமே அந்த குரல் மிகவும் பொதுவாக வழநடத்தப்பட்டதாக தெரிவிக்கிறான், “அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேச குமாரன் இவரில் பிரயமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (மத்தேயு 3:17). யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் பெற்றதை மட்டுமே யோவான் சுவிசேஷம் கூறுகிறது: “நான் கண்டு இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்” (யோவான் 1:34).

  12. 2 நேபி 31:13 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77 பார்க்கவும்.

  13. தலைவர் டாலின் எச். ஓக்ஸ், “விருப்பம்” என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை விளக்கினார்: “நாம் ஞானஸ்நான உடன்படிக்கையை புதுப்பிக்கும்போது, நாம் திருவிருந்தில் பங்குகொள்ளும் போது, இயேசு கிறிஸ்துவின் பெயரை நம்மீது ஏற்றுக்கொள்வதை நாம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அவ்வாறு செய்ய தயாராக இருக்கிறோம் என்பதற்கு சாட்சியாக இருக்கிறோம். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77 பார்க்கவும்). நமது விருப்பத்திற்கு மட்டுமே நாம் சாட்சியாக இருப்பது, அந்த பரிசுத்தப் பெயரை மிக முக்கியமான அர்த்தத்தில் நம்மீது எடுத்துக்கொள்வதற்கு முன்பு வேறு ஏதாவது நடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது” (“Taking upon Us the Name of Jesus Christ,” Ensign, May 1985, 81). “வேறு ஏதாவது” என்பது ஆலய ஆசீர்வாதங்களையும் எதிர்கால மேன்மையையும் குறிக்கிறது.

  14. யாத்திராகமம் 20:7.

  15. James Strong, The New Strong’s Expanded Exhaustive Concordance of the Bible (2010), Hebrew dictionary section, page 192, number 5375 பார்க்கவும்.

  16. James Strong, The New Strong’s Expanded Exhaustive Concordance of the Bible (2010), Hebrew dictionary section, page 273, number 7723 பார்க்கவும்.

  17. மூப்பர் டேவிட் எ. பெட்னர் போதித்தார்: “ஞானஸ்நான உடன்படிக்கை எதிர்கால நிகழ்வு அல்லது நிகழ்வுகளை தெளிவாகக் கருதுகிறது மற்றும் ஆலயத்திற்கு எதிர்நோக்குகிறது. ஞானஸ்நானத்தின் தண்ணீரில் தொடங்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது ஏற்றுக்கொள்வதற்கான செயல்முறை கர்த்தருடைய வீட்டில் தொடர்ந்து விரிவடைகிறது. நாம் ஞானஸ்நானத்தின் தண்ணீரில் நிற்கும்போது, நாம் ஆலயத்தைப் பார்க்கிறோம். திருவிருந்தில் நாம் பங்குகொள்ளும்போது, நாம் ஆலயத்தைப் பார்க்கிறோம். எப்பொழுதும் இரட்சகரை நினைவுகூரவும், ஆலயத்தின் பரிசுத்த நியமங்களில் பங்குபெறவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாகவும், அதிகாரத்தின் மூலமாகவும் கிடைக்கும் உயர்ந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் ஆயத்தமாக அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாக உறுதியளிக்கிறோம். எனவே, பரிசுத்த ஆலயத்தின் நியமங்களில் நாம் இன்னும் முழுமையாகவும் முற்றிலுமாகவும் இயேசு கிறிஸ்துவின் பெயரை நம்மீது ஏற்றுக்கொள்கிறோம்“”(“Honorably Hold a Name and Standing,” Liahona, May 2009, 98). “நாம் அவரைப் போல் இரு்கிறவரை” (மரோனி 7:48), நாம் முழுமையாக மாற்றப்படும் வரை, இந்த செயல்முறை அநேகமாக முழுமையடையாது.

  18. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints சேவை செய்தல், 27.2,(ChurchofJesusChrist.org), உடன்படிக்கைகள் கீழ்ப்படிதல் நியாயப்பிரமாணத்தில் வாழ வேண்டும், தியாகத்தின் பிரமாணத்திற்கு கீழ்ப்படிகின்றன, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகின்றன, கற்புடமை நியாயப்பிரமாணம், மற்றும் அர்ப்பணிப்பு நியாயப்பிரமாணம் வைத்து; டேவிட் ஏ பெட்னார், “Let This House Be Built unto My Name,” Liahona, May 2020, 84–87. ஐயும் பார்க்கவும்.

  19. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:14-15 பார்க்கவும். மூப்பர் டி. டாட் கிறிஸ்டோபர்சன் போதித்தார், “‘பரிசுத்த ஆவியின் நிறைவானது’ இயேசு விளக்கியபடி ‘நித்திய ஜீவனைப்பற்றி நான் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதி, செலஸ்டியல் இராஜ்யத்தின் மகிமையும் கூட; இது முதற்பேறான சபையின் மகிமை, தேவனின் கூட, எல்லாவற்றிலும் பரிசுத்தமானது, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம்’ (கோ&.உ 88:4–5)” (“The Power of Covenants,” Liahona, May 2009, 23, note 5).

  20. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:15 பார்க்கவும்.

  21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:22, 25-26 . பார்க்கவும்.

  22. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:21 பார்க்கவும்.

  23. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:15, 22 Russell M. Nelson,“The Power of Spiritual Momentum,” Liahona, May 2022, 98 பார்க்கவும்.

  24. Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” 96; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20 பார்க்கவும் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆவியின் தூண்டுதல்களைத் தேடிப் பின்பற்றி, ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்லதைச் செய்யும்போது, “ஜென்ம சுபாவ மனுஷன்” செய்யாத காரியங்களை செய்யும்போது, நீங்கள் உலகத்தை ஜெயிக்கிறீர்கள். (“Overcome the World and Find Rest,” 97).

  25. எபிரெயர் 11:13.

  26. Redeemer of Israel,” Hymns, no. 6, verse 5. இது லீனா சோபியா ரென்லுண்டுக்கு மிகப் பிடித்த துதிப்பாடல்.

  27. மரோனி 10:30-33 பார்க்கவும்.

  28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:19–20 பார்க்கவும்.