பொது மாநாடு
“இந்த ஆலயம் என்னுடைய நாமத்தில் கட்டப்படுவதாக”
ஏப்ரல் 2020 பொது மாநாடு


“இந்த ஆலயம் என்னுடைய நாமத்தில் கட்டப்படுவதாக”

(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:40.)

ஆலயங்களில் பெறப்படுகிற உடன்படிக்கைகள், நடப்பிக்கப்படுகிற நியமங்கள், நமது இருதயங்களை சுத்திகரிப்பதற்கும், தேவனின் குமாரர்களாக, குமாரத்திகளாக இறுதியான மேன்மையடைதலுக்கும் அத்தியாவசியமாயிருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த தோப்பில், நித்திய பிதாவாகிய தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் இளம் ஜோசப் ஸ்மித் கண்டு அவர்களிடம் பேசினார். தெய்வத்தின் உண்மையான தன்மையைப்பற்றியும், பிற்காலத்தில் “காலங்கள் நிறைவேறும்போது” இந்த அமானுஷ்ய தரிசனம் தோன்றியதால் தொடருகிற வெளிப்படுத்தலைப்பற்றியும் அவர்களிடமிருந்து ஜோசப் அறிந்துகொண்டார்.1

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், செப்டம்பர் 21, 1823 மாலையில் கருத்தான ஜெபத்திற்குப் பதிலாக, “நண்பகலின் வெளிச்சத்தைவிட குறைவான வெளிச்சம் வரும்வரை” ஜோசப்பின் படுக்கையறையை அது் நிரப்பியது.2 அவருடைய படுக்கையறையில் ஒரு பிரமுகர் தோன்றி, இளம் சிறுவனை பெயர் சொல்லி அழைத்து, “தேவபிரசன்னத்திலிருந்து அனுப்பப்பட்ட அவர் ஒரு தூதுவனெனவும், … அவருடைய பெயர் மரோனியெனவும்” அறிவித்தான்3 வரப்போகிற மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய அவன் ஜோசப் ஸ்மித்துக்கு அறிவுறுத்தினான்.

பின்னர், இராஜா ஜேம்ஸ் பதிப்பில் பயன்படுத்தப்பட்ட மொழியில் சிறிது மாற்றத்துடன் பழைய ஏற்பாட்டின் மல்கியா புஸ்தகத்திலிருந்து மரோனி மேற்கோள் காட்டினான்:

“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே எலியா தீர்க்கதரிசியினால் ஆசாரியத்துவத்தை நான் உங்களுக்கு வெளிப்படுத்துவேன். …

“பிதாக்களுக்குச் செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களில் அவன் நடுவான், பிள்ளைகளின் இருதயங்கள் தங்கள் பிதாக்களிடத்திற்கு திரும்பும். இல்லையெனில், அவரது வருகையில் பூமி முழுவதும் நிச்சயமாய்ப் பாழாக்கப்படும்.”4

முக்கியமாக, ஆலயம் மற்றும் பிற்காலத்தில் குடும்ப வரலாற்று பணியை எலியாவின் ஊழியம் ஆரம்பித்து வைத்ததென்றும் “உலகத்தோற்ற முதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம்” மறுஸ்தாபிதமாக ஒரு முக்கிய அங்கமாக இருந்ததெனவும் ஜோசப்புக்கு மரோனி அறிவுறுத்தினான்.5

உடன்படிக்கைகளை, நியமங்களை, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஆலயங்களில் நமக்குக் கிடைக்கக்கூடிய ஆசீர்வாதங்களைப்பற்றி நாம் கற்றுக்கொள்ளும்போது பரிசுத்த ஆவியின் உதவிக்காக நான் ஜெபிக்கிறேன்.

எலியா திரும்பி வருதல்

ஒரு அடிப்படை கேள்வியுடன் நான் ஆரம்பிக்கிறேன்: எலியா திரும்பி வருதல் ஏன் முக்கியமானது?

“மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் முத்திரித்தலின் வல்லமையை எலியா தரித்திருந்தான்”6 என்றும் “இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு முன்பே அதைச் செய்ய அவன் கடைசி தீர்க்கதரிசியாயிருந்தான்”7 என்றும் பிற்கால வெளிப்படுத்தலிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் விவரித்தார், “மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ பரிபூரணத்தின் திறவுகோலைத் தரித்திருக்க உங்களுக்கு வல்லமையுண்டு, தேவராஜ்யத்திற்கு சொந்தமான எல்லா நியமங்களையும் பெறவும், பரலோகத்திலிருப்பவர்களின் பிதாக்களுடைய இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கு திருப்பவும் பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களிடத்திற்கு திருப்பவுமுமே எலியாவின் ஆவி, வல்லமை மற்றும் அழைப்பு”8.

“பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்படியாகவுமே”9 இந்த பரிசுத்த முத்திரிக்கும் அதிகாரம் அவசியமாயிருக்கிறது.

ஜோசப் மேலும் தெளிவுபடுத்தினார்: “இந்த தலைமுறையை மீட்க தேவன் எவ்வாறு வருவார்? தீர்க்கதரிசி எலியாவை அவர் அனுப்புவார். … பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுக்கு பிதாக்கள் முத்திரிக்கவும் உடன்படிக்கைகளை எலியா வெளிப்படுத்துவான்.”10

மறுரூபமலையில் மோசேக்கு எலியா தோன்றி, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானுக்கு இந்த அதிகாரத்தை அருளினான்.11 ஏப்ரல் 3, 1836 ஆம் ஆண்டில், கிர்த்லாந்து ஆலயத்தில் மோசேக்கும் எலிஸாவுக்கும் எலியா தோன்றி அதே ஆசாரியத்துவ திறவுகோல்களை ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரேயுக்கும் அருளினான். 12

இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு உலகத்தை ஆயத்தப்படுத்த, 1836ல் எலியாவால் கொடுக்கப்பட்ட முத்திரித்தலின் அதிகாரத்தின் மறுஸ்தாபிதம் அவசியமாயிருந்து, குடும்ப வரலாறு ஆராய்ச்சிக்கு பெரிதும் அதிகரித்த மற்றும் உலகளாவிய ஆர்வத்தைத் தொடங்கியது.

இருதயங்களை மாற்றுதல், திருப்புதல் மற்றும் தூய்மைப்படுத்துதல்

இருதயம் என்ற வார்த்தை தரமான படைப்புகளில் 1000 முறைகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எளிய ஆனால் விசேஷித்த வார்த்தை பெரும்பாலும் ஒருவரின் உள்ளுணர்வுகளைக் குறிக்கிறது. நமது ஆசைகள், பாசங்கள், நோக்கங்கள் மற்றும் எண்ணங்களின் மொத்தமான நமது இருதயங்கள் நாம் யாரென்றும், நாம் யாராக மாறுவோமென்பதை தீர்மானிப்பதையும் வரையறுக்கிறது. கர்த்தருடைய கிரியையின் சாரம்சம், சுவிசேஷ உடன்படிக்கைகள் மற்றும் ஆசாரியத்துவ நியமங்கள் மூலமாக இருதயங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது, திருப்பிக்கொண்டிருக்கிறது, தூய்மைப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஒரு மறக்கமுடியாத தனிப்பட்ட அல்லது குடும்ப அனுபவத்திற்கு மட்டுமே நாம் ஆலயங்களை கட்டவோ அல்லது பிரவேசிப்பதோ இல்லை. மாறாக, ஆலயங்களில் பெறப்படுகிற உடன்படிக்கைகள், நடப்பிக்கப்படுகிற நியமங்கள், நமது இருதயங்களை சுத்திகரிப்பதற்கும், தேவனின் குமாரர்களாக, குமாரத்திகளாக இறுதியான மேன்மையடைதலுக்கும் அத்தியாவசியமாயிருக்கிறது.

பிதாக்களுக்கு செய்யப்பட்ட வாக்குத்தத்தங்களை பிள்ளைகளின் இருதயங்களில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுவுக்கும்கூட நடுதல், தங்களுடைய சொந்த பிதாக்களுக்கு பிள்ளைகளின் இருதயங்களை திருப்புதல், குடும்ப வரலாறு ஆராய்ச்சியை நடத்துதல், பதிலி ஆலய நியமங்களை நடத்துதல், திரைக்கு இருபுறமும் தனிப்பட்டவர்களை ஆசீர்வதிக்கும் பிரயாசங்களாயிருக்கின்றன. இந்த பரிசுத்த பணியில் நாம் ஆர்வமாய் ஈடுபட்டிருக்கும்போது, தேவனையும் அண்டைவீட்டாரையும் நேசிக்கவும் சேவை செய்யவும் கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோம். 13 அத்தகைய தன்னலமற்ற சேவை “அவருக்கு செவிகொடுக்கவும்!” 14 இரட்சகரண்டை வரவும் உண்மையில் நமக்குதவுகிறது.15

மிகப் பரிசுத்தமான உடன்படிக்கைகளும் ஆசாரியத்துவ நியமங்களும், கர்த்தருடைய ஆலயமான ஒரு ஆலயத்தில் மட்டுமே பெறப்படுகிறது. ஆலயத்தில் கற்றுக்கொள்ளப்படுகிற அனைத்தும், செய்யப்படுகிற அனைத்தும், இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தையும், பரலோக பிதாவின் மகா சந்தோஷத்தின் திட்டத்தில் அவருடைய பாத்திரத்தையும் வலியுறுத்துகிறது.

உள்ளேயிருந்து வெளியே

“மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கடந்து செல்ல” கொண்டுவருவதில் மீட்பர் பயன்படுத்துகிற ஒரு முக்கியமான மாதிரியை தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் விவரித்தார். 16 அவர் சொன்னார், “கர்த்தர் உள்ளேயிருந்து வெளியே வேலை செய்கிறார் உலகம் வெளியிலிருந்து உள்ளே வேலை செய்கிறது. உலகம் சேரிகளிலிருந்து மக்களை வெளியேற்றுகிறது. மக்களிடமிருந்து கிறிஸ்து சேரிகளை வெளியே எடுக்கிறார், பின்னர் அவர்கள் தங்களை சேரிகளிலிருந்து தாங்களே எடுக்கிறார்கள். தங்களுடைய சூழல்களிலிருந்து மாற்றுவதால் உலகம் மனிதர்களை வடிவமைக்கும். கிறிஸ்து மனிதர்களை மாற்றுகிறார், பின்னர் அவர்கள் சூழலை மாற்றுகிறார்கள். மனித நடத்தையை உலகம் வடிவமைக்கும், ஆனால் கிறிஸ்து மனித தன்மையை மாற்றமுடியும்.”17

ஆவிக்குரிய மறுபிறப்பின் மற்றும் உருமாற்றத்தின் தற்போதைய செயல்பாட்டில் உடன்படிக்கைகள் மற்றும் ஆசாரியத்துவ நியமங்கள் மையமாயிருக்கின்றன, நம் ஒவ்வொருவருடனும் உள்ளிருந்து வெளியே கர்த்தர் செயல்படுகிற அவைகள் வழிமுறைகள். உறுதியுடன் கனப்படுத்தப்படுகிற, எப்போதும் நினைவுபடுத்தப்படுகிற, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிற உடன்படிக்கைகள்,”18 அநித்தியத்திலும் நித்தியத்திலும் ஆசீர்வாதங்களின் நோக்கத்தையும் நிச்சயத்தையும் வழங்குகிறது. தகுதியுடன் பெறப்பட்டு தொடர்ந்து நினைவில் வைக்கப்படுகிற உடன்படிக்கைகள், நமது வாழ்க்கையில் பாயக்கூடிய தேவ பக்தியின் வல்லமையின் மூலமாக பரலோக வாய்க்கால்கள் திறக்கின்றன.

உலகத்தின் தீமைகளிலிருந்து மறைந்துகொள்ள அல்லது தப்புவிக்க நாம் ஆலயத்திற்கு வருவதில்லை. மாறாக, உலகத்தின் தீமையை வெல்லவே நாம் ஆலயத்திற்கு வருகிறோம். ஆசாரியத்துவ நியமங்களை பெறுவதாலும், பரிசுத்த உடன்படிக்கைகளை, செய்வதாலும் கைக்கொள்ளுவதாலும் “தேவ பக்தியின் வல்லமையை”19 நமது வாழ்க்கைக்குள் நாம் அழைக்கும்போது, அநித்தியத்தில் சோதனைகளையும் சவால்களையும் மேற்கொள்ளவும் நன்மையைச் செய்யவும் மாறவும் நமது சொந்தத்திற்கும் அப்பால் பெலத்துடன் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.20

ஆலயத்தின் புகழ் பரவவேண்டும்

மார்ச் 27, 1836ல் கிர்த்லாந்து, ஒஹையோவில், இந்த ஊழியக்காலத்தின் முதல் ஆலயம் கட்டப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.

அர்ப்பணிப்பிற்கு ஒரு வாரத்திற்குப் பின்பு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு ஒரு வெளிப்படுத்தலில் கர்த்தர் அறிவித்தார்.

“என்னுடைய நாமத்தில் தங்களுடைய பராக்கிரமத்தில் இந்த ஆலயத்தைக் கட்டிய என்னுடைய சகல ஜனங்களின் இருதயங்களும் களிகூர்வதாக. …

“ஆம் பொழியப்படுகிற ஆசீர்வாதங்கள் மற்றும் இந்த ஆலயத்தில் என்னுடைய ஊழியக்காரர்கள் தரிப்பித்த தரிப்பித்தலின் விளைவாக ஆயிரக்கணக்கானோர் மற்றும் இலட்சக்கணக்கானவர்களின் இருதயங்கள் அதிகமாய் களிகூரும்.

“இந்த ஆலயத்தின் புகழ் வெளி தேசங்களுக்கும் பரவும்; என்னுடைய ஜனங்களின் தலைகள்மீது பொழியப்படும் ஆசீர்வாதங்களின் ஆரம்பமாய் இது இருக்கும்.”21

ஆயிரக்கணக்கானோர் மற்றும் இலட்சக்கணக்கானவர்களின் இருதயங்கள் அதிகமாய் களிகூரும், மற்றும் இந்த ஆலயத்தின் புகழ் வெளி தேசங்களுக்கும் பரவும் என்ற சொற்றொடர்களை தயவுசெய்து கவனிக்கவும். சபையில் மிகக்குறைவான அங்கத்தினர்களும் ஒரு ஆலயமும் மட்டுமே இருந்தபோது, 1836ல் இவை அதிர்ச்சியூட்டும் பிரகடனங்கள்.

இன்று 2020ல் 168 இயங்குகிற ஆலயங்கள் நமக்கிருக்கின்றன. நாற்பத்தி ஒன்பது கூடுதலான ஆலயங்கள் கட்டுமானத்தின் கீழிருக்கின்றன அல்லது அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கர்த்தரின் ஆலயம் “சமுத்திரத்தின் தீவுகளின்மேலும்”, 22 ஒரு ஆலயத்துக்கு உத்தரவாதம் அளிக்க வாய்ப்பில்லாத பலரால் முன்னர் கருதப்பட்ட நாடுகளிலும் இடங்களிலும் கட்டப்பட்டிருக்கிறது.

தரிப்பித்தலின் சடங்கு தற்போது 86 மொழிகளில் வழங்கப்படுகின்றன, அதிகமான தேவ பிள்ளைகளை ஆசீர்வதிக்க ஆலயங்கள் கட்டப்படும்போது அநேக கூடுதலான மொழிகளில் வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் ஆலய நியமங்கள் கிடைக்கக்கூடிய மொழிகளின் எண்ணிக்கை அநேகமாக இரட்டிப்பாகும்.

இந்த ஆண்டு நாம் அஸ்திபாரம் அமைத்து 18 ஆலயங்களின் கட்டுமானத்தை ஆரம்பிப்போம். மாறாக, 1830ல் சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, டோக்கியோ ஜப்பான் ஆலயம் 1980ல் தலைவர் ஸ்பென்சர் டபுள்யு.கிம்பலால் அர்ப்பணிக்கப்பட்டதுவரை, முதல் 18 ஆலயங்களைக் கட்ட 150 ஆண்டுகள் எடுத்தன.

படம்
ஆறு ஆலயங்கள்

தலைவர் ரசல் எம். நெல்சனின் வாழ்நாளில் நடைபெறுகிற ஆலயப்பணியின் விரைவுபடுத்துதலை கருத்தில்கொள்ளவும். செப்டம்பர் 9, 1924ல் தலைவர் நெல்சன் பிறந்தபோது சபைக்கு ஆறு ஆலயங்கள் இயக்கத்திலிருந்தன.

படம்
26 ஆலயங்கள்

ஏப்ரல் 7, 1984ல் ஒரு அப்போஸ்தலராக அவர் நியமிக்கப்பட்டபோது, 60 ஆண்டுகளுக்குப் பின்னர், 26 ஆலயங்கள் இயக்கத்திலிருந்தன, அது 60 ஆண்டுகளில் 20 ஆலயங்களின் அதிகரிப்பு.

படம்
159 ஆலயங்கள்

பன்னிருவர் குழுமத்தின் ஒரு அங்கத்தினராக தலைவர் நெல்சன் சேவை செய்த 34 ஆண்டுகளில் 133 ஆலயங்களின் அதிகரிப்போடு, அவர் சபையின் தலைவராக ஆதரிக்கப்பட்டபோது, 159 ஆலயங்கள் இயக்கத்திலிருந்தன.

படம்
இயங்கிக்கொண்டிருக்கிற, அறிவிக்கப்பட்ட ஆலயங்கள்

ஜனுவரி 14, 2018ல் தலைவர் நெல்சன், சபையின் தலைவரானதிலிருந்து 35 புதிய ஆலயங்களை அவர் அறிவித்தார்.

தற்போதிருக்கும் தொண்ணூற்றியாறு சதவீதம் ஆலயங்கள் தலைவர் நெல்சனின் வாழ்நாளில் அர்ப்பணிக்கப்பட்டவை, எண்பத்தியாறு சதவீதம் ஆலயங்கள் ஒரு அப்போஸ்தலராக அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து அர்ப்பணிக்கப்பட்டவை.

எப்போதும் மிக முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்துங்கள்

கர்த்தருடைய மறுஸ்தாபித சபையின் அங்கத்தினர்களாக, பிற்காலங்களில் எப்போதும் துரிதப்படுகிற அவருடைய வேலையின் வேகத்தில் நாம் ஆச்சரியத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். அதிகமான ஆலயங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பிரிகாம் யங் தீர்க்கதரிசனமுரைத்தார், “இந்தப் பணியை நிறைவேற்ற ஒரே ஒரு ஆலயம் மட்டும் இருக்கக்கூடாது, ஆயிரக்கணக்கான ஆலயங்களிருக்கவேண்டும், ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அந்த ஆலயங்களுக்குள் பிரவேசிப்பார்கள் மற்றும் கர்த்தர் வெளிப்படுத்தும்வரை வாழ்ந்த மக்களுக்காக கடமையாற்றுவார்கள்.”23

ஒவ்வொரு புதிய ஆலயத்தின் அறிவிப்பும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் கர்த்தருக்கு நன்றி செலுத்த ஒரு காரணமாயிருக்கிறதென்பதும் புரிந்துகொள்ளக்கூடியவை. எப்படியாயினும், நமது இருதயங்களை மாற்றக்கூடியதும், வெறுமனே இடம் அல்லது கட்டிடத்தின் அழகில் அல்லாமல் இரட்சகரிடத்து நமது அர்ப்பணிப்பை ஆழப்படுத்துகிறதுமான உடன்படிக்கைகளிலும் நியமங்களிலும் நமது அடிப்படை கவனமிருக்கவேண்டும்.

(1)“அவருக்கு செவிகொடுக்கவும்!”24, உடன்படிக்கைகள், நியமங்கள் மூலமாக நமது சொந்த இருதயங்கள் மாற்றப்படவும், (2) திரையின் இருபுறமும் மனித குடும்பம் முழுவதற்கும் ஆலய ஆசீர்வாதங்களை வழங்க நியமிக்கப்பட்ட தெய்வீக பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவதுமே, கர்த்தருடைய மறுஸ்தாபித சபையின் அங்கத்தினர்களாக நம்மீதிருக்கிற அடிப்படை கடமைகள். கர்த்தருடைய வழிகாட்டுதலுடனும் உதவியுடனும், உண்மையில் இந்த பரிசுத்த கடமைகளை நாம் நிறைவேற்றுவோம்.

சீயோனை கட்டுதல்

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார்:

“சீயோனைக் கட்டியெழுப்புவது ஒவ்வொரு யுகத்திலும் தேவனுடைய ஜனங்களுக்கு ஆர்வமாயிருப்பதற்கு ஒரு காரணம்; தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் ராஜாக்கள் விசித்திரமான மகிழ்ச்சியுடன் வாழ்ந்த ஒரு கருப்பொருள் இது; நாம் வாழுகிற நாளுக்காக அவர்கள் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்; பரலோக மற்றும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புகளுடன் அவர்கள் இந்த நமது நாளைப் பாடி, எழுதி, தீர்க்கதரிசனமுரைத்தார்கள்; ஆனால் பார்வை இல்லாமல் அவர்கள் மரித்தார்கள்; … பிற்கால மகிமையைப் பார்க்கவும், பங்கேற்கவும் முன்னேறிச் செல்ல உதவுவதற்கும் இது நமக்காக விடப்பட்டுள்ளது. ”25

“அந்த பெரிய நோக்கங்களைக் கொண்டுவருவதற்கு, பரலோக ஆசாரியத்துவம் பூமிக்குரியவர்களுடன் ஒன்றிணையும்; … தேவனும் தூதர்களும் கடந்த தலைமுறைகளாக மகிழ்ச்சியுடன் சிந்தித்த ஒரு பணி; இது பண்டைய கோத்திரத் தலைவர்களின் மற்றும் தீர்க்கதரிசிகளின் ஆத்துமாக்களை சுட்டது; இருளின் வல்லமைகளின் அழிவை, பூமியின் புதுப்பித்தலை, தேவனின் மகிமை மற்றும் மனித குடும்பத்தின் இரட்சிப்பைக் கொண்டுவர, விதிக்கப்பட்ட ஒரு பணி.”26

பிதாவும் குமாரனும் ஜோசப் ஸ்மித்துக்கு தோன்றினார்கள் என்றும் முத்திரிக்கும் அதிகாரத்தை எலியா மறுஸ்தாபிதம் செய்தானென்றும் நான் பயபக்தியுடன் சாட்சியளிக்கிறேன். பரிசுத்த ஆலய உடன்படிக்கைகளும் நியமங்களும் நம்மைப் பெலப்படுத்தி, நாம் “அவருக்குச் செவிகொடுக்கும்போது!”27 நமது இருதயங்களை தூய்மைப்படுத்தி நமது வாழ்க்கையில் தெய்வீகத்தின் வல்லமையைப் பெறமுடியும் இந்த பிற்கால பணி இருளின் வல்லமைகளை அழிக்குமெனவும் மனித குடும்பத்திற்கு இரட்சிப்பைக் கொண்டு வருமெனவும் நான் சாட்சியளிக்கிறேன் இந்த சத்தியங்களைப்பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் மகிழ்ச்சியுடன் சாட்சியளிக்கிறேன், ஆமென்.