2010–2019
கலங்காதிருப்பீர்களாக
அக்டோபர் 2018


கலங்காதிருப்பீர்களாக

இருதயத்தில் வைத்திருங்கள், சகோதர சகோதரிகளே. ஆம் நாம் ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம், ஆனால் நாம் உடன்படிக்கையின் பாதையில் இருந்தால் நாம் பயப்படத் தேவையில்லை.

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் ஆலோசனைக்குழுவின் இணக்கமான மற்றும் ஒருமனதான தீர்மானம் பற்றி கொஞ்ச நேரத்திற்கு முன்பு தலைவர் ரசல் எம். நெல்சன் மற்றும் மூப்பர் க்வெண்டின் எல். குக்கால் கொடுக்கப்பட்ட செய்திகளுக்கு எனது சாட்சியை நான் சேர்க்கிறேன். இந்த தீர்க்கதரிசன அறிவிப்புகள் கர்த்தரின் எண்ணமும் சித்தமுமாயிருக்கிறதென்றும், வரப்போகிற தலைமுறைகளாக தனிநபர்களையும், குடும்பங்களையும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையையும் ஆசீர்வதிக்கும், பெலப்படுத்தும் என நான் அறிவேன்.

சில ஆண்டுகளுக்கு முன், திருமணமான எங்களுடைய இளம் மகள்களில் ஒருத்தியும் அவளுடைய கணவனும் எனக்கு மிகமுக்கியமான, வாழ்க்கையில் செல்வாக்கு ஏற்படுத்தும் கேள்வியை சகோதரி ராஸ்பாண்டிடம் கேட்டார்கள். “நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற துன்மார்க்கமான பயமுறுத்துகிறதாக தோன்றுகிற இந்த உலகத்திற்குள் பிள்ளைகளை கொண்டுவருவது இன்னமும் பாதுகாப்பானதா, புத்திசாலித்தனமா?”

இப்பொழுது, அன்பான தங்களுடைய திருமணமான பிள்ளைகளுடன் ஆலோசிக்க ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் அது ஒரு முக்கியமான கேள்வியாக இருந்தது. அவர்களுடைய குரல்களிலுள்ள பயத்தை எங்களால் கேட்கமுடிந்தது, அவர்களுடைய இருதயங்களிலுள்ள பயத்தை உணரமுடிந்தது. அடிப்படை சுவிசேஷ போதனைகளையும் எங்களுடைய இதயப்பூர்வமான பதிவுகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் நாங்கள் பகிர்ந்தபோது, “ஆம், இது மிக சரியானது” என்பது அவர்களுக்கு எங்கள் உறுதியான பதிலாயிருந்தது

பயம் புதிதல்ல. கலிலேயா கடற்கரையில் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களிருந்தபோது, இரவின் இருளில் “சுழல்காற்றுக்கும் அலைகளுக்கும்” அவர்கள் பயந்தார்கள். 1 இன்று அவருடைய சீஷர்களாக நமக்கும் பயங்கள் உண்டு. திருமணம் செய்துகொள்ளுதல் போன்ற கடமைகளைச் செய்ய நமது திருமணமாகாத வயதுவந்தோர் பயப்படுகிறார்கள். எங்கள் பிள்ளைகளைப்போல புதிதாக திருமணமானவர்கள், அதிகரித்துவரும் துன்மார்க்க உலகத்தில் பிள்ளைகளைக் கொண்டுவர பயப்படலாம். ஊழியக்காரர்கள் அநேகக் காரியங்களுக்காக, விசேஷமாக அன்னியர்களை அணுகுவதற்குப் பயப்படுகிறார்கள். தனியாகச் செல்லுவதற்கு விதவைகள் பயப்படுகிறார்கள். குமரப்பருவத்தினர் ஏற்றுக்கொள்ளப்படாததால் பயப்படுகிறார்கள், முதல் நாள் பள்ளிக்கூடத்திற்குப் போக மாணவர்கள் பயப்படுகிறார்கள், திரும்ப ஒரு பரிட்சை மதிப்பெண்ணை பெற பல்கலைக்கழக மாணவர்கள் பயப்படுகிறார்கள். தோல்விகளுக்கும், நிராகரிப்புகளுக்கும், ஏமாற்றத்திற்கும், தெரியாதவைகளுக்கும் நாம் பயப்படுகிறோம். சூறாவளிகளுக்கும், பூமியதிர்ச்சிகளுக்கும், நிலத்தையும் நமது வாழ்க்கையையும் அழிக்கிற நெருப்புக்கும் நாம் பயப்படுகிறோம். நாம் தெரிந்துகொள்ளப்பட்டதற்காக நாம் பயப்படுவதில்லை, அதே நேரத்தில் நாம் தெரிந்துகொள்ளப்பட்டதற்காக பயப்படுகிறோம். போதுமான அளவுக்கு நன்றாக இல்லாததற்காக நாம் பயப்படுகிறோம். நமக்காக கர்த்தர் எந்த ஆசீர்வாதங்களையும் வைக்கவில்லை என நாம் பயப்படுகிறோம். மாற்றத்திற்காக நாம் பயப்படுகிறோம், நமது பயங்கள் பயங்கரமாக அதிகரிக்கலாம். நான் எல்லோரையும் சேர்த்துக் கொண்டேனா?

பூர்வகாலங்களிலிருந்தே, தேவனின் பிள்ளைகளின் பார்வையை பயம் மட்டுப்படுத்தியது. 2 இராஜாக்களில் எலிசாவின் பதிவுகளை நான் எப்போதுமே நேசிப்பேன். “இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்ட” ஒரு படையை சீரியாவின் இராஜா அனுப்பினான்.2 தீர்க்கதரிசி எலிசாவை கைப்பற்றி கொல்லுவதே அவர்களுடைய நோக்கமாயிருந்தது. நாம் வாசிக்கிறோம்:

“தேவ மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து, வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும், இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்க கண்டான். அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான்?” 3

அது பயத்தால் பேசியது.

“அதற்கு அவன் பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.” 4

ஆனால் அவன் அங்கே நிறுத்தவில்லை.

“அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி, கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான், உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார், இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.” 5

நமது பயங்களை, நமது பிசாசுகளை விரட்ட, அக்கினிமயமான இரதங்களை நாம் அனுப்பலாம், அனுப்பாதிருக்கலாம், ஆனால் பாடம் தெளிவானது. கர்த்தர் நம்மோடிருக்கிறார், நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராயிருக்கிறார், அவரால் முடிகிற வழிகளில் மட்டுமே நம்மை ஆசிர்வதிக்கிறார். இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய பாவநிவர்த்தியின் பலியிலும் நமது சிந்தனைகளை மையப்படுத்த நமது பெலத்தையும் வெளிப்படுத்தலையும் ஜெபம் கேட்கலாம். சிலநேரங்களில் நாம் பயப்படுதலை உணர்வோம் என கர்த்தர் அறிகிறார். நான் அங்கிருந்தேன், நீங்களும் அங்கிருந்தீர்கள், அதனால்தான் கர்த்தருடைய ஆலோசனை வேதங்களில் நிறைந்திருக்கிறது:

“திடன்கொள்ளுங்கள் பயப்படாதிருங்கள்.” 6

“ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப் பார், சந்தேகப்படாதே, பயப்படாதே.” 7

“சிறுமந்தையே பயப்படாதே” 8 “சிறுமந்தையின்” மென்மை எனக்குப் பிடிக்கும். செல்வாக்கை உலகம் எண்ணிக்கையிடுகிறபோது இந்த சபையில் நாம் எண்ணிக்கையில் சிலராயிருக்கலாம் ஆனால், நமது ஆவிக்குரிய கண்களைத் திறக்கும்போது, “அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.” 9 நம்முடைய அன்பான மேய்ப்பரான இயேசு கிறிஸ்து பின்னர் தொடருகிறார், “பூமியும் நரகமும் உனக்கு விரோதமாக திரண்டாலும், நீங்கள் என் கன்மலையின்மேல் கட்டப்பட்டிருந்தால் அவர்களால் மேற்கொள்ளமுடியாது.” 10

பயம் எப்படி விரட்டப்படும்? அந்த இளம் பையனைப் பொருத்தவரை தேவனின் தீர்க்கதரிசியான எலிசாவுக்கு பக்கத்தில் அவன் நின்றுகொண்டிருந்தான். நமக்கும் அதே வாக்களிப்பு உண்டு. தலைவர் ரசல் எம். நெல்சன் சொல்வதை நாம் கேட்கும்போது, அவருடைய ஆலோசனைக்கு நாம் செவிகொடுக்கும்போது, தேவனின் தீர்க்கதரிசியுடன் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். ஜோசப் ஸ்மித்தின் வார்த்தைகளை நினைவுகூருவோம், “இப்பொழுது அவரைப்பற்றிக் கொடுக்கப்பட்ட அநேக சாட்சிகளுக்குப் பின்னர் எல்லாவற்றிற்கும் கடைசியாக அவரைப்பற்றி நாங்கள் கொடுக்கிற சாட்சி இதுவே, அவர் ஜீவிக்கிறார்!” 11 அவர் மேலுள்ள அன்பும் அவருடைய சுவிசேஷமும் பயத்தை விரட்டுகிறது.

நம்முடன் “அவருடைய ஆவியை எப்பொழுதும் கொண்டிருக்க” 12 நமது விருப்பம், நமது அநித்திய வாழ்க்கையில் ஒரு அதிக நித்திய பார்வைக்காக பயத்தை புறம்பே தள்ளும். “வருகிற நாட்களில், வழிநடத்தல், வழிகாட்டுதல், ஆறுதலளித்தல், பரிசுத்த ஆவியின் தெடர்ந்த செல்வாக்கு இல்லாமல் ஆவிக்குரியதில் பிழைத்திருப்பது சாத்தியமில்லாதிருக்கலாம் என தலைவர் நெல்சன் எச்சரித்தார்.” 13

தேசத்தை மூடுகிற வெள்ளங்களைப்பற்றியும், அநேகரின் இருதயங்களை கடினப்படுத்துவதைப்பற்றியும் கர்த்தர் சொன்னார், “எனது சீஷர்கள் பரிசுத்த ஸ்தலங்களில் நின்றுகொண்டிருப்பார்கள், அசைக்கப்படமாட்டார்கள்.” 14

பின்னர் இந்த தெய்வீக ஆலோசனை, “நீங்கள் கலங்காதிருப்பீர்களாக, ஏனெனில் இந்தக் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்போது உங்களோடு செய்யப்பட்ட வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.” 15

பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டிருங்கள், கலங்காதிருங்கள், வாக்குத்தத்தங்கள் நிறைவேறும். நமது பயங்களுக்கு சம்பந்தப்பட்ட இவைகள் ஒவ்வொன்றையும் நாம் உற்று நோக்குவோம்.

முதலாவதாக, பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டிருங்கள். நாம் பரிசுத்த ஸ்தலங்களான நமது நீதியான வீடுகள், நமது அர்ப்பணிக்கப்பட்ட ஜெபக்கூடங்கள், பரிசுத்தமாக்கப்பட்ட ஆலயங்களில் நின்றுகொண்டிருக்கும்போது, நம்மோடு கர்த்தரின் ஆவி இருப்பதை நாம் உணருவோம். நம்மை தொந்திரவு செய்கிற கேள்விகளுக்கு பதில்களை, அல்லது அவைகளை ஒதுக்கிவைக்க சமாதானத்தை நாம் கண்டுபிடிப்போம். அந்த ஆவியே செயலிலிருக்கிறது. பூமியிலுள்ள தேவ இராஜ்ஜியத்தில் இந்த பரிசுத்த ஸ்தலங்கள், நமது பக்தியை, மற்றவர்களிடத்தில் நமது மரியாதையை, சுவிசேஷத்தின்படி வாழ்தலில் நமது சிறப்பை, நமது பயங்களை ஒதுக்கிவைக்க நமது நம்பிக்கைகளை, அவருடைய பாவநிவர்த்தியின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் குணமாக்கும் வல்லமையை நாடுதலுக்கு அழைப்பு விடுக்கிறது.

தேவனின் இந்த பரிசுத்த ஸ்தலங்களில் அல்லது அவருடைய பிள்ளைகளின் இருதயங்களில் பயத்திற்கு இடமில்லை. ஏன்? அன்பினால். எப்பொழுதும் தேவன் நம்மை நேசிக்கிறார், நாம் அவரை நேசிக்கிறோம். தேவன் மீதுள்ள நமது அன்பு எல்லா பயங்களையும் எதிர்க்கிறது, அவருடைய அன்பு பரிசுத்த ஸ்தலங்களில் நிறைந்திருக்கிறது. அதைப்பற்றி சிந்தியுங்கள். கர்த்தருக்கான நமது அர்ப்பணிப்புகளில் நாம் தற்காலிகமாயிருக்கும்போது, நித்திய ஜீவனுக்கு நடத்துகிற அவருடைய பாதையிலிருந்து நாம் தவறிப்போகும்போது, அவருடைய தெய்வீக வடிவமைப்பில் நமது முக்கியத்துவத்தை நாம் கேள்விகேட்கும்போது அல்லது சந்தேகப்படும்போது, ஊக்கமின்மை, கோபம், எரிச்சல், ஏமாற்றம், திருப்தியின்மை என்ற அதன் எல்லா கூட்டாளிகளுக்கும் கதவைத் திறக்க பயத்தை நாம் அனுமதிக்கும்போது ஆவி நம்மைவிட்டு விலகுகிறது, நாம் கர்த்தரில்லாமல் இருக்கிறோம். அது என்னவென்று உங்களுக்குத் தெரியவந்தால், இருக்க அது நல்ல இடமல்ல என நீங்கள் அறிவீர்கள். மாறாக, பரிசுத்த ஸ்தலங்களில் நாம் நிற்கும்போது, தேவனின் அன்பை நாம் உணருவோம், “பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.” 16

அடுத்த வாக்களிப்பு “கலங்காதிருப்பாயாக.” 17 பூமியை அதிக துன்மார்க்கமும் குழப்பமும் நிரப்புவதைப் பொருட்படுத்தாமல், இயேசு கிறிஸ்து மீதுள்ள நமது அன்றாட விசுவாசத்தால் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்” 18 நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது. சகல வல்லமையிலும் மகிமையிலும் கிறிஸ்து வருகிறபோது தீமை, கலகம், நீதி முடிவுக்குவரும்.

நீண்ட காலத்திற்கு முன்பு நமது காலங்களைப் பற்றி இளம் தீமோத்தேயுவுக்கு சொன்னபோது அப்போஸ்தலனாகிய பவுல் தீர்க்கதரிசனமுரைத்தான்.

“கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.

“எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவராயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும். . .

“. . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயிருப்பார்கள்.” 19

தங்களுடைய முழுஇருதயத்தோடும், பராக்கிரமத்துடனும், மனதோடும், பெலத்தோடும் கர்த்தரிடத்தில் அன்புள்ளவர்கள் திரைக்கு இரண்டு பக்கமும் “அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” 20 என்பதை நினைவுகூருங்கள். நமக்கு தீவிரமாக கர்த்தரிடத்திலும் அவருடைய வழிகளிலும் நம்பிக்கையிருந்தால், அவருடைய பணியில் நாம் ஈடுபட்டிருந்தால் உலகின் போக்குகளால் நாம் பயப்படமாட்டோம் அல்லது அவைகளால் பதற்றமடையமாட்டோம். உலகத்தின் செல்வாக்குகளையும் அழுத்தங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஆவிக்குரியவைகளை நாட நான் உங்களை வேண்டுகிறேன். அவருடைய கற்பனைகள், அவருடைய பரிசுத்த ஸ்தலங்கள், அவரோடு நமக்குள்ள பரிசுத்த உடன்படிக்கைகள், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் திருவிருந்து, ஜெபத்தின்மூலமாக நமது தொடர்பையும் சேர்த்து, கர்த்தர் நேசிப்பவைகளை நேசியுங்கள்.

கடைசி குறிப்பு. கர்த்தரையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் நம்புங்கள். அவருடைய அனைத்து வாக்குத்தத்தங்களும் நிறைவேற்றப்படும் என்று நான் அறிவேன். இந்த பரிசுத்த கூட்டத்தில் உங்களுக்கு முன் நான் நின்றுகொண்டிருப்பதைப்போல, இதை உறுதியாக நான் நம்புகிறேன்.

கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கிறார், “ஏனெனில் புத்திமான்களும் சத்தியத்தைப் பெற்றவர்களும், அவர்களை வழிநடத்துவதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் ஏமாற்றப்படாதவர்கள், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படமாட்டார்கள், ஆனால் அந்நாளில் இருப்பார்கள்.” 21

இதனால்தான் இன்றைய கொந்தளிப்பினாலும், அந்த பெரிய விசாலமான கட்டிடத்திலுள்ளவர்களாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நேர்மையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பான சேவையையும் வெறுப்பவர்களாலும் நாம் பதற்றமடையக்கூடாது. தொந்தரவுகள் அல்லது கொந்தளிப்புகளால் பாரப்படாதிருக்கிற ஒரு இருதயத்திலிருந்து சாதகவாதம், தைரியம் மற்றும் தயாளம் வருகிறது. வருங்காலத்தைப்பற்றி சாதகவாதியான தலைவர் நெல்சன், “எண்ணற்ற குரல்களில் சலிக்கப்பட்ட, சத்தியத்தை தாக்குகிற மனிதர்களிள் தத்துவங்கள் வழியே நம்பிக்கை நமக்கு இருக்குமானால் வெளிப்படுத்தலைப் பெற நாம் கற்றுக்கொள்ளவேண்டும்” என நமக்கு நினைவுபடுத்தினார். 22

தனிப்பட்ட வெளிப்படுத்தலைப்பெற, சுவிசேஷத்தின்படி வாழுதலுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து, மற்றவர்களிடத்திலும் அப்படியே நம்மிலும் விசுவாசத்தை ஊக்குவித்தலை ஊக்குவிக்கவேண்டும்.

“என்னுடைய இளமைக் காலத்தில் ஸ்பென்சர் டபுள்யு. கிம்பல் தீர்க்கதரிசிகளில் ஒருவராயிருந்தார். ஒரு அப்போஸ்தலராக அழைக்கப்பட்ட பின்பு இந்த கடந்த சில ஆண்டுகளில், அக்டோபர், 1943ன் பொது மாநாட்டில் அவருடைய முதல் செய்தியில் நான் சமாதானத்தைக் கண்டேன். அவருடைய அழைப்பில் அவர் தத்தளித்துப்போனார், அந்த உணர்வு எப்படியிருக்குமென எனக்குத் தெரியும். மூப்பர் கிம்பல் சொன்னார், சிந்தித்தல், ஜெபித்தல், உபவாசித்து ஜெபித்தலில் நான் பெரிய பேரம் செய்தேன். என்னுடைய மனதில் எழுந்த முரண்பாடான சிந்தனைகளிருந்தன, உன்னால் இந்த வேலையை செய்யமுடியாது. நீ தகுதியுள்ளவனில்லை. உனக்குத் தகுதியில்லை என்று குரல்கள் சொல்வதாகத் தோன்றியது. இறுதியாக, எப்போதையும்போல வெற்றிகரமான சிந்தனை வந்தது. நியமிக்கப்பட்ட வேலையை நீ செய்யவேண்டும், உன்னை நீயே முடிந்தவனாக, தகுதியுள்ளவனாக, தகுதிபெற்றவனாக்க வேண்டும். போராட்டம் தீவிரமடைந்தது.”23

இந்த வலிமையான சபையின் 12வது தலைவராக மாறிய இந்த அப்போஸ்தலரின் தூய உள்ளத்தின் சாட்சியை என் இருதயத்தில் எடுத்தேன். நியமிக்கப்பட்ட வேலையைச் செய்ய அவருடைய பயங்களை பின்னுக்கு தள்ளவும், அவரையே அவர் முடிந்தவனாக, தகுதியுள்ளவனாக, தகுதிபெற்றவனாக்க பெலத்திற்காக கர்த்தரை சார்ந்திருக்கவும் அங்கீகரித்தார். நாமும்கூட செய்யலாம். போராட்டங்கள் தீவிரமடையும், ஆனால் கர்த்தரின் ஆவியுடன் நாம் அவைகளை எதிர்கொள்வோம். நாம் கலங்காதிருப்போம் ஏனெனில் நாம் கர்த்தருடன் நின்று, அவருடைய கொள்கைகள், அவருடைய நித்திய திட்டத்துடன் நிற்கும்போது நாம் பரிசுத்த ஸ்தலங்களில் நின்றுகொண்டிருக்கிறோம்.

இப்பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு இதயப்பூர்வமான, ஆய்வுக்குள்ளான பயத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வியைக் கேட்ட அந்த மகள் மற்றும் மருமகளைப்பற்றி என்ன சொல்வது? அந்த இரவில் எங்கள் உரையாடலை அவர்கள் தீவிரமாக பரிசீலனை செய்தார்கள் அவர்கள் ஜெபித்து, உபவாசமிருந்து, தங்கள் சொந்த முடிவுகளுக்கு வந்தார்கள். சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்களுக்காகவும் எங்களுக்காகவும், தாத்தா பாட்டியான அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும் முன்னேறிப்போகும்போது, ஏழு அழகான பிள்ளைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

படம்
மூப்பர் மற்றும் சகோதரி ராஸ்பாண்டின் ஏழு பேரப்பிள்ளைகள்

சகோதர சகோதரிகளே, இருதயத்தில் வைத்திருங்கள். ஆம், நாம் அழிவுக்கேதுவான காலங்களில் வாழுகிறோம், ஆனால் நாம் உடன்படிக்கையின் பாதையிலிருக்கும்போது, நாம் பயப்படத் தேவையில்லை. நீங்கள் அப்படிச் செய்யும்போது, நாம் வாழுகிற காலங்களில், அல்லது உங்கள் வழிகளில் வருகிற தொந்தரவுகளால் நீங்கள் கலங்காதிருக்க நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் பரிசுத்த ஸ்தலங்களில் நிற்க தேர்ந்தெடுக்கவும், நகராதிருக்கவும் உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன். அவர் ஜீவிக்கிறார், அவர் நம்மைக் கண்காணிக்கிறார், நம் அருகில் நிற்கிறார் என்ற இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களை நம்ப நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.