2010–2019
இதுவே நேரம்
அக்டோபர் 2018


இதுவே நேரம்

உங்கள் வாழ்க்கையில் பரிசீலிக்க ஏதாவதிருந்தால் இதுவே நேரம்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வர்த்தக பயணத்திற்கு ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, எனக்கு நெஞ்சுவலி ஆரம்பித்தது. அக்கறையினிமித்தம் என் மனைவி என்னுடன் வர தீர்மானித்தாள். எங்கள் விமானத்தின் முதல் அடியிலேயே, என்னால் மூச்சுவிட சிரமப்படுகிற அளவுக்கு வலி அதிகரித்தது. நாங்கள் தரையிறங்கியவுடனே, நாங்கள் விமான நிலையத்தைவிட்டு, உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றோம். அங்கே பலவித சோதனைகளைச் செய்து, எங்கள் பயணத்தை தொடர பாதுகாப்பாயிருப்பதாக எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் எங்களிடம் அறிவித்தார்.

நாங்கள் விமானநிலையத்திற்கு திரும்பி வந்து, எங்களுடைய இறுதி இடத்திற்குப் போக விமானம் ஒன்றில் ஏறினோம். நாங்கள் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது என்னை அடையாளம் காட்டும்படி விமானி தொலைபேசியில் என்னிடம் கேட்டார். விமான சிப்பந்தி என்னை அணுகி, இப்போதுதான் அவர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்து, என்னை மருத்துவமனைக்கு அழைத்துப்போக ஒரு ஆம்புலன்ஸ் விமானநிலையத்தில் காத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

நாங்கள் ஆம்புலன்ஸில் ஏறி, உள்ளூர் அவசர சிகிச்சை அறைக்கு விரைந்து கொண்டு போகப்பட்டேன். இரண்டு ஆர்வமிக்க மருத்துவர்கள் என்னை சந்தித்து, நான் தவறாக கண்டறியப்பட்டேன் என்றும் எனக்கு மோசமான நுரையீரல் தொற்றுநோயிருப்பதாகவும், அல்லது நுரையீரலில் இரத்த அடைப்பு இருப்பதாகவும், உடனடி மருத்துவ கண்காணிப்பு அவசியமென்றும் விவரித்தார்கள். இந்த நிலைமையில் அநேக நோயாளிகள் பிழைப்பதில்லை என எங்களிடம் மருத்துவர்கள் கூறினார்கள். நாங்கள் வீட்டைவிட்டு வெகுதொலைவிலிருப்பதை அறிந்தவர்களாக, இத்தகைய வாழ்க்கை மாற்ற நிகழ்சிகளுக்கு நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோமா என்ற நிச்சயமில்லாதவர்களாயிருந்தோம். எங்கள் வாழ்க்கையில் பரிசீலிக்கவேண்டிய ஏதாவதிருந்தால் அதற்கு இதுதான் சமயம் என மருத்துவர்கள் சொன்னார்கள்.

அந்த பரபரப்பான நேரத்தில் கிட்டத்தட்ட உடனடியாக எப்படி என்னுடைய முழு பார்வை மாறிற்று என்பதை நான் நன்றாக நினைவுகூருகிறேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் எது மிக முக்கியமாக தோன்றியதோ அது இப்போது சிறிதே ஆர்வமுள்ளதாயிருந்தது. இந்த வாழ்க்கையின் வசதிகள், அக்கறைகளிலிருந்து, குடும்பம், பிள்ளைகள், என் மனைவி, இறுதியாக என்னுடைய வாழ்க்கையைப்பற்றிய ஒரு மதிப்பீடு என்ற ஒரு நித்திய பார்வைக்கு என் மனம் ஓடியது.

குடும்பமாக, தனிப்பட்டவர்களாக எப்படி வாழ்ந்துகொண்டிருந்தோம்? நாம் செய்த உடன்படிக்கைகளுடன் அல்லது கர்த்தரின் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்த வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருந்தோமா, அல்லது மிக முக்கியமான அந்த காரியங்களிலிருந்து நம்மை திசைதிருப்ப உலகத்தின் அக்கறைகளை ஒருவேளை நாம் தற்செயலாக அனுமதித்தோமா?

இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடத்தை பரிசீலிக்க நான் உங்களை அழைக்கிறேன்: உலகத்திலிருந்து பின்வாங்கி உங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்ய. அல்லது உங்கள் வாழ்க்கையில் பரிசீலிக்கவேண்டிய ஏதாவதிருந்தால் அதற்கு இதுதான் சமயம் என்ற மருத்துவரின் வார்த்தைகள்.

நமது வாழ்க்கையை மதிப்பீடு செய்தல்

எப்போதும் அதிகரிக்கிற கவனச்சிதறல்களால் ஆதிக்கம்செலுத்தி, அதனால் இந்த வாழ்க்கையின் பதட்டத்தின் வழியே வகைப்படுத்தவும், நித்திய தகுதியின் காரியங்களில் கவனம் செலுத்தவும், மிகஅதிக கஷ்டமானதாக்குகிற தகவல் சுமைமிக்க ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். மிக அதிக வேகத்தில் மாறுகின்ற தொழில் நுட்பங்களால் கொடுக்கப்படுகிற கவன ஈர்ப்பு தலைப்புகளுடன் நமது அன்றாட வாழ்க்கை சரமாரியாகத் தாக்கப்படுகிறது.

சிந்திக்க நாம் நேரம் எடுக்காதவரை, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த விரைவு வேக சூழ்நிலைகளின் தாக்கத்தையும் நாம் செய்யும் தேர்ந்தெடுப்புகளையும் நாம் உணரமாட்டோம். மீம்ஸ், காணொலி, பிரகாசிக்கிற தலைப்புகளின் வெடிக்கிற தகவல் தொகுப்புகளுடன் நமது வாழ்க்கை விழுங்கப்படுவதை நாம் காண்போம். இவைகளில் அநேகம் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தாலும், இவைகளில் அநேகம் நமது நித்திய முன்னேற்றத்திற்கு சிறிதே தேவையாகும், இருந்தும் நமது அநித்திய அனுபவத்தை நாம் பார்க்கிற வழியை வடிவமைக்கும்.

இந்த உலக கவனச் சிதறல்கள் லேகியின் சொப்பனத்திற்கு ஒப்பிடப்படலாம். நமது கைகள் இருப்புக்கோலின்மீது இறுகப் பற்றிக்கொண்டிருந்ததுடன் நமது முன்னேற்றம் கீழிறங்கும்போது, பெரிய விசாலமான கட்டிடத்திலிருந்து தங்கள் விரல்களை நீட்டி பரிகாசம் செய்கிறதை நாம் கேட்கிறோம், பார்க்கிறோம் (1 நேபி 8:27). அப்படிச் செய்ய நாம் மனச்சாட்சியுடன் திட்டமிடமாட்டோம் ஆனால் சிலநேரங்களில் என்ன குழப்பம் என்று பார்க்க நாம் நிறுத்தி, கூர்ந்து பார்ப்பதை மாற்றுவோம். நம்மில் சிலர் இருப்புக்கோலை விட்டுவிட்டு, ஒரு நன்கு பார்க்க நெருக்கமாகப் போவோம். “அவர்களை நிந்தித்தவர்கள் நிமித்தம் மற்றவர்கள் முற்றிலுமாக விழுந்து விலகிப்போனார்கள்.” (1 நேபி 8:28)

“உங்கள் இருதயங்கள் லவுகீக கவலைகளினால் பாரமடையாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (லூக்கா 21:34) என இரட்சகர் நம்மை எச்சரித்தார். அழைக்கப்பட்டார்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என தற்போதைய வெளிப்படுத்தல் நமக்கு நினைவூட்டுகிறது. “ஏனெனில் அவர்களின் இருதயங்கள் இந்த உலகத்தின் காரியங்களின்மீது மிகுதியாக இருக்கிறது, மனுஷர்களின் மரியாதையை வாஞ்சிக்கிறதால்” அவர்கள் தெரிந்துகொள்ளப்படவில்லை (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:35; மேலும் வசனம் 34ம் பார்க்கவும்). நமது வாழ்க்கையை மதிப்பிடுதல் உலகத்திலிருந்து பின் வாங்கவும், உடன்படிக்கையின் பாதையில் நாம் எங்கிருக்கிறோம் என சிந்திக்கவும், தேவைப்பட்டால், உறுதியான பிடிப்பையும் முன்னோக்கிய பார்வையையும் உறுதி செய்ய அனுசரணைகள் செய்ய சந்தர்ப்பம் அளிக்கிறது.

உலகத்திலிருந்து பின்வாங்கி, ஏழுநாள் உபவாசத்தைக் கைக்கொள்வதால் சமூக ஊடகங்களிலிருந்து விடுபட்டிருக்க, சமீபத்திய உலகமுழுவதிலுமுள்ள இளைஞர் பிரார்த்தனையில் தலைவர் ரசல் எம். நெல்சன் இளைஞர்களை அழைத்தார். கடந்த மாலையில் மாநாட்டன் பெண்கள் கூட்டத்தின் பகுதியாக சகோதரிகளுக்கு அதுபோன்ற அழைப்பைக் கொடுத்தார். பின்னர், அவர்கள் எப்படி உணருகிறார்கள், என்ன நினைக்கிறார்கள், அல்லது எவ்வாறு நினைக்கிறார்களென்பதில் எதாவது வித்தியாசத்தை கவனிக்க வேண்டும் என இளைஞர்களிடம் அவர் சொன்னார். பின்னர், “உங்கள் பாதம், உடன்படிக்கை பாதையில் உறுதியாக பதிக்கப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்த ஒரு முழுமையான வாழ்க்கை மதிப்பீடு செய்ய” அவர்களை அவர் அழைத்தார். மாற்றத்திற்குத் தேவையான காரியங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்தால் மாறுவதற்கு “இன்று சரியான நேரம்” என அவர்களை அவர் ஊக்குவித்தார். 1

நமது வாழ்க்கையில் மாறுவதற்கு தேவையான காரியங்களை மதிப்பீடு செய்வதில், ஒரு நடைமுறை கேள்வியை நம்மையே நாம் கேட்கலாம்: இந்த உலகத்தின் திசைதிருப்புதல்களுக்கு மேலே நாம் எப்படி எழுந்து நமக்கு முன்னாலுள்ள நித்தியத்தின் பார்வை மீது நிலைத்திருப்பது?

நல்லது, சிறந்தது, மிகச்சிறந்தது என்ற தலைப்புடன் 2007 மாநாட்டில், உலகத்தின் அநேக முரண்பட்ட கோரிக்கைகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுப்புகளுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பதென, தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் போதித்தார். சிறந்தது, அல்லது மிகச்சிறந்த மற்றவைகளை தேர்ந்தெடுக்கும்படியாக சில நல்ல காரியங்களை நாம் துறக்கவேண்டியதிருக்கும் ஏனெனில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை அவர்கள் விருத்தி செய்து நமது குடும்பங்களை பெலப்படுத்துகிறார்கள்” என அவர் ஆலோசனையளித்தார். 2

இந்த வாழ்க்கையில் மிகச்சிறந்த காரியங்கள் இயேசு கிறிஸ்துவின்மேலும், அவர் யாரென்றும் அவருடன் நமக்குள்ள உறவில் நாம் யார் என்பதை புரிந்துகொள்வதிலும் மையமாக்கப்படுகிறது என நான் பரிந்துரைக்கிறேன்.

சத்தியத்தை நாடவும்

இரட்சகரை அறிந்துகொள்ள நாம் நாடும்போது, நாம் யாரென்றும் நாம் இங்கே ஏன் இருக்கிறோமென்கிற அடிப்படை சத்தியத்தை நாம் கவனியாதிருக்கக்கூடாது. “இந்த ஜீவியம் தேவனை சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாயிருக்கிறது” (ஆல்மா 34:32–33). “நித்தியத்திற்காக ஆயத்தம்பண்ணும்படி நமக்குக் கொடுக்கப்பட்ட காலம். மனித அனுபவமுள்ள நாம் ஆவிக்குரிய மனிதர்கள்” என அமுலேக் நமக்கு நினைவுபடுத்தினான். 3

நமது தெய்வீக மூலத்தை புரிந்துகொள்ளுதல் நமது நித்திய முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமாயிருந்து, இந்த வாழ்க்கையில் திசைதிருப்புதல்களிலிருந்து நம்மை விடுதலையாக்குகிறது. இரட்சகர் போதித்தார்:

“நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால், மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:31–32)

“இந்த உலகத்தில் மனுக்குலம் செய்யக்கூடிய மிகச்சிறந்த சாதனை, அவர்கள் அடைந்த ஞானத்திலிருந்து உலகத்தில் வாழுகிற எந்த உயிரினத்தின் எடுத்துக்காட்டோ நடத்தையோ எப்போதும் அவர்களை திருப்ப முடியாதபடி மிக முழுமையாக, மிகச்சரியான தெய்வீக சத்தியத்துடன் தங்களைப் பழக்கப்படுத்தியிருத்தலே” என தலைவர் ஜோசப் எப்.ஸ்மித் பிரகடனப்படுத்தினார். 4

இன்றைய உலகத்தில், சத்தியத்தின் மேலுள்ள விவாதம், தனிப்பட்ட விளக்கத்திற்கு திறந்திருக்கிற ஒரு சார்ந்திருக்கிற கருத்தைப்போல சத்தியம் அதன் எல்லா பக்கங்களுடனும் ஒரு வெறியின் சுருதியை வந்தடைந்துவிட்டது. இளம் சிறுவன் ஜோசப் ஸ்மித் தனது வாழ்க்கையில், “குழப்பமும் பூசல்களும் மிகுதியாயிருந்தபோது யார் சரியானவர்கள், யார் தவறானவர்கள் என்ற ஒரு நிச்சய முடிவுக்கு வர சாத்தியமில்லாதிருந்தது” (ஜோசப் ஸ்மித்-வரலாறு 1:8) “இந்த வார்த்தை யுத்தத்திற்கும் கருத்துக்களின் சந்தடிக்கும் நடுவில்” (ஜோசப் ஸ்மித்-வரலாறு 1:10) சத்தியத்தைத் தேடியதில் தெய்வீக வழிநடத்தலை அவர் நாடினார்.

“சத்தியத்தை தாக்குகிற எண்ணற்ற குரல்கள், மனிதர்களின் தத்துவங்கள் வழியாக தேடுதலின் எந்த நம்பிக்கையும் நமக்கிருந்தால், வெளிப்படுத்தலைப் பெற நாம் கற்றுக்கொள்ளவேண்டும்” 5 என ஏப்ரல் மாநாட்டில், தலைவர் நெல்சன் போதித்தார். “உலகம் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் பெற்றுக்கொள்ளமாட்டாத” சத்தியத்தின் ஆவியை சார்ந்திருக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும் (யோவான் 14:17).

மாற்று உண்மைகளுக்கு இந்த உலகம் மிகவேகமாக நகர்ந்துகொண்டிருக்கும்போது, “ஆவியானவர் பொய் உரைக்காமல் உண்மையையே பேசுகிறார். ஆகவே இருக்கிறதும், இருக்கப்போவதுமான காரியங்களைக் குறித்துச் சொல்லுவார். அதிநிமித்தம் எங்கள் ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக தெளிவாக இந்தக் காரியங்கள் எங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன” (யாக்கோபு 4:13) என்ற யாக்கோபுவின் வார்த்தைகளை நாம் நினைவுகூரவேண்டும்

உலகத்திலிருந்து நாம் பின்வாங்கி, நமது வாழ்க்கையை மதிப்பீடு செய்யும்போது, என்ன மாற்றங்களை நாம் செய்யவேண்டுமென பரிசீலிக்க இதுவே நேரம். நமது உதாரண புருஷர் இயேசு கிறிஸ்து மீண்டும் ஒருமுறை வழிநடத்துகிறார். அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் முன்பு, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அவருடைய தெய்வீகப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ள உதவ அவர் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தபோது “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்” என அவர்களுக்கு அவர் நினைவுபடுத்தினார் (யோவான் 16:33). அவர் பற்றி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சி பகருகிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), HopeofIsrael.lds.org.

  2. Dallin H. Oaks, “Good, Better, Best,” Liahona, Nov. 2007, 107.

  3. அடிக்கடி பியரி டெய்ல்ஹார்ட் டி சார்டினுக்கு உரிமையளிக்கப்படுகிறது.

  4. Teachings of Presidents of the Church: Joseph F. Smith (1998), 42.

  5. Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 96.