2010–2019
சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?
அக்டோபர் 2018


சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம், நாம் மனந்திரும்பி இரட்கரிடம் நமது இருதயத்தை முழுவதும் திருப்பினால், அவர் நம்மை ஆவிக்குரிய விதமாக குணமாக்குவார்.

அவனது ஊழியத்துக்குச் சென்ற சில மாதங்களில் எங்கள் இளைய மகனும் அவனது ஊழியத்தோழனும், தங்களுடைய வாசிப்பை முடித்தபோது, எங்கள் மகன் தலையில் சிறிது வலியை உணர்ந்தான். அவன் விசித்திரமாக உணர்ந்தான், முதலில் இடது கை கட்டுப்பாட்டை இழந்தான், பின்னர் நாக்கு மரத்தது. அவனது முகத்தின் இடப்பக்கம் தொங்க ஆரம்பித்தது. பேசுவது அவனுக்கு கடினமானது. ஏதோ தவறாக இருக்கிறது என அவன் அறிந்தான். அவனது மூளையின் மூன்று பகுதிகளில் பெரும் பாதிப்பு இருப்பதை அவன் அறியவில்லை. ஒரு பகுதி முடங்கியதால் பயம் வந்தது. மூளை பாதிப்பு நோயாளி எவ்வளவு சீக்கிரம் கவனிப்பு பெறுகிறானோ அவனது குணமாதலில் அவ்வளவு பெரும் தாக்கம் இருக்கும். அவனது விசுவாசமுள்ள ஊழியத்தோழன் உறுதியாக செயல்பட்டான். 911ஐ அழைத்தபின் அவன் ஒரு ஆசீர்வாதம் கொடுத்தான். அதிசயமாக அவசர ஊர்தி ஐந்து நிமிட தொலைவில்தான் இருந்தது.

எங்கள் மகன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பிறகு, மருத்துவர்கள் விரைந்து சூழ்நிலையை யூகித்து, மூளை பாதிப்பின் முடக்கும் விளைவுகளை தடுக்க எங்கள் மகனுக்கு ஒரு மருந்தைக் கொடுக்க தீர்மானித்தனர். 1 எனினும் எங்கள் மகனுக்கு மூளை பாதிப்பு இல்லை என்றால் மூளையில் இரத்தக் கசிவு போன்ற பயங்கர விளைவுகளை அந்த மருந்து ஏற்படுத்தும். முழுமையான குணமாதலுக்கு மேலும் அறுவைச் சிகிச்சைகளும் பல மாதங்களும் ஆகும் நிலையில், மூளை பாதிப்பு தாக்கங்கள் அதிகமாக குறைந்தபோது, முடிவில் எங்கள் மகன் ஊழியத்தை முடித்து திரும்பி வந்தான்.

நமது பரலோக பிதா சர்வ வல்லவர், சர்வமும் அறிந்தவர். நமது சரீரபிரகாரமான போராட்டங்களை அவர் அறிவார். சுகவீனம், நோய், வயது முதிர்ச்சி, விபத்துக்கள், அல்லது பிறவி ஊனங்கள் காரணமான நமது சரீர வலிகளை அவர் அறிவார். கவலை, தனிமை, விரக்தி, அல்லது மனநோய் தொடர்புடைய உணர்வுபூர்வ போராட்டங்களை அவர் அறிவார். அநியாயம் அனுபவித்த அல்லது துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட ஒவ்வொருவரையும் அவர் அறிவார். நாம் போராடிக்கொண்டிருக்கிற நமது பலவீனங்கள், மனநிலைகள் மற்றும் சோதனைகளையும் அவர் அறிவார்.

அநித்தியத்தின்போது, நாம் தீமையை விட நன்மையைத் தெரிந்து கொள்கிறோமா என பார்க்க நாம் சோதிக்கப்படுகிறோம். அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுபவர்கள் “முடிவில்லா மகிழ்ச்சியின் நிலையில்” அவரோடு வாழ்வார்கள். 2 அவரைப் போலாக நமது முன்னேற்றத்தில் நமக்கு உதவ, பரலோக பிதா தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா வல்லமையையும் அறிவையும் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவால் குணமாக்க முடியாத எந்த சரீர. உணர்வுபூர்வ மற்றும் ஆவிக்குரிய வியாதி இல்லை. 3

இரட்சகரின் பூலோக ஊழியத்திலிருந்து, சரீர பிரகாரமாக பாடனுபவித்தவர்களை குணமாக்க தன் தெய்வீக வல்லமையை இயேசு கிறிஸ்து பயன்படுத்திய அதிசயமான நிகழ்ச்சிகளை வேதங்கள் கூறுகின்றன.

யோவானின் சுவிசேஷம் 38 ஆண்டுகளாக ஊனப்படுத்திய நோயை தாங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் கதையை கூறுகிறது.

“படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகு காலமாய் வியாதியஸ்தன் என அறிந்து, அவனை நோக்கி சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்?”

அந்த வியாதியஸ்தன் அவனுக்கு தேவைப்படும்போது உதவிசெய்ய அவனருகில் யாருமில்லை என பதிலளித்தான்.

“இயேசு அவனை நோக்கி எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான்.” 4

அந்த மனுஷன் 38 வருடங்களாக எவ்வளவு காலம் பாடனுபவித்தான், இரட்சகர் இடைபட்டவுடன் எவ்வளவு சீக்கிரத்தில் குணமாதல் வந்தது என தயவுசெய்து ஒப்பிட்டுப் பாருங்கள். குணமாதல் “உடனே” நிகழ்ந்தது.

மற்றொரு சம்பவத்தில், 12 வருடங்களாக இரத்தப்போக்கிருந்த பெண், “தன் வாழ்நாள் ஆஸ்தி முழுவதையும் வைத்தியர்களிடமே … செலவளித்தவள், அவருக்குப் பின்னால் வந்து, அவரது வஸ்திரத்தின் விளிம்பை தொட்டாள். உடனே அவளது இரத்தப்போக்கு நின்றது. …

“இயேசு சொன்னார், என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன், ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு.

“அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, ... உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.” 5

அவரது ஊழியத்தின் மூலம், மாம்ச சரீரத்தின் மீது அவர் வல்லமை பெற்றிருந்தார் என போதித்தார். நமது சரீர வியாதிகளிலிருந்து கிறிஸ்துவின் குணமாக்கல் நிகழும் நேரத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. குணமாதல் அவருடைய சித்தப்படியும், ஞானப்படியும் நிகழ்கிறது. வேதங்களில் சிலர் பத்தாண்டுகள் பாடனுபவித்தார்கள், பிறர் தங்கள் வாழ்நாள் முழுவதும். சரீர ஊனங்கள், நம்மை சுத்திகரித்து, நாம் தேவனில் சார்ந்திருப்பதை ஆழப்படுத்தும். ஆனால் கிறிஸ்து தலையிட நாம் அனுமதிக்கும்போது, அவர் எப்போதும் நம்மை ஆவிக்குரிய பிரகாரமாய் பெலப்படுத்துவார், ஆகவே நமது பாரங்களை தாங்க நாம் அதிக திறமை பெற முடியும்.

முடிவாக ஒவ்வொரு சரீர வியாதி, சுகவீனம் அல்லது பரிபூரணமின்மை உயிர்த்தெழுதலில் குணமாக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் எல்லா மனுக்குலத்துக்கும் அது ஒரு பரிசு. 6

நமது சரீரங்களை விடவும் அதிகமாக இயேசு கிறிஸ்து குணமாக்க முடியும். அவர் நமது ஆவிகளையும் குணமாக்க முடியும். பெலவீன ஆவியுடையவர்களுக்கு கிறிஸ்து எப்படி உதவி செய்து எப்படி சொஸ்தமாக்கினார் என வேதம் முழுவதிலும் நாம் பார்க்கிறோம். 7 அந்த அனுபவங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நமது வாழ்க்கையை ஆசீர்வதிக்கும் இரட்சகரின் வல்லமை மீது நமது நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரிக்கிறது. இயேசு கிறிஸ்து நமது இருதயங்களை மாற்ற முடியும், நாம் அனுபவிக்கிற அநீதி மற்றும் துர்ப்பிரயோகத்தின் விளைவுகளை குணமாக்க முடியும், நமது வாழ்க்கையின் பாடுகளைச் சகிக்க உதவ சமாதானத்தைக் கொடுத்து, உணர்வுபூர்வமாக நம்மைக் குணப்படுத்தி இழப்பையும் மனவேதனைகளையும் தாங்கும் நமது திறமையை அதிகரிக்க முடியும்.

நாம் பாவம் செய்யும்போது கிறிஸ்து நம்மைக் குணமாக்க முடியும். தேவனின் ஒரு நியாயப்பிரமாணத்தை நாம் மீறும்போது, நாம் பாவம் செய்கிறோம். 8 நாம் பாவம் செய்யும்போது நமது ஆவி அசுத்தமாகிறது. தேவ சமூகத்தில் எந்த அசுத்தமானதும் தரித்திருக்க முடியாது. 9 பாவத்திலிருந்து சுத்தமாவது ஆவிக்குரிய பிரகாரமாக குணப்படுவதாகும். 10

நாம் பாவம் செய்வோம் என பரலோக பிதா அறிகிறார். ஆனால் நாம் மீட்கப்பட அவர் ஒரு வழியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். மூப்பர் லின்  ஜி. ராபின்ஸ் போதித்தார், “நாம் தவறிழைக்கும் சமயத்தில் மனந்திரும்புதல் தேவனின் மாற்று திட்டம் அல்ல. நாம் செய்வோம் என அவர் அறிந்த மனந்திரும்புதல்தான் அவரது திட்டம்.” 11 நாம் பாவம் செய்யும்போது, தீமையிலிருந்து நன்மையைத் தெரிந்து கொள்கிற சந்தர்ப்பம் நமக்கிருக்கிறது. நாம் பாவம் செய்த பிறகு, மனந்திரும்பும்போது, நாம் நன்மையைத் தெரிந்து கொள்கிறோம். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவாரண பலி மூலம் நாம் நமது பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு நாம் மனந்திரும்பினால் பிதாவாகிய தேவனின் பிரசன்னத்துக்கு கொண்டுபோகப்பட முடியும். ஆவிக்குரிய குணமாதல் ஒருதரப்பானதல்ல, அதற்கு இரட்சகரின் மீட்கும் வல்லமையும், பாவியின் தரப்பில் உண்மையான மனந்திரும்புதலும் தேவை. மனந்திரும்ப தெரிந்து கொள்ளாதவர்கள் கிறிஸ்துவின் குணமாக்குதலை மறுதலிக்கிறார்கள். அவர்களுக்கு மீட்பு என்ற ஒன்றே நடக்காதது போலிருக்கிறது. 12

மனந்திரும்புதலை நாடுகிறவர்களுக்கு நான் ஆலோசனையளித்தபோது, பாவத்தில் வாழ்பவர்கள் சரியான தீர்மானங்கள் எடுக்க கஷ்டப்படுகிறார்கள் என நான் அதிசயித்திருக்கிறேன். பரிசுத்த ஆவி அவர்களை விட்டு விலகும், அவர்களை தேவனுக்கு நெருக்கமாக கொண்டுவரும் தேர்வுகளை செய்ய அடிக்கடி அவர்கள் போராடினர். பாவங்களின் விளைவுகள் பற்றி வெட்கப்பட்டு அல்லது பயந்து பல மாதங்களாக அல்லது பல ஆண்டுகளாக அவர்கள் போராடுவார்கள். அடிக்கடி தாங்கள் ஒருபோதும் மாற முடியாது அல்லது மன்னிக்கப்படமுடியாது என உணர்கின்றனர். அவர்களை நேசிப்பவர்களுக்கு அவர்கள் செய்தது தெரிந்தால், அவர்களை நேசிப்பதை நிறுத்தி விடுவார்கள் அல்லது விலகிச் சென்று விடுவார்கள் என அவர்கள் பயப்படுவதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். இப்படி அவர்கள் சிந்தித்தபோது அமைதியாக இருக்க முடிவுசெய்து, மனந்திரும்புதலை தள்ளிப்போட்டனர். தாங்கள் நேசிப்பவர்களை இன்னும் அதிகமாக காயப்படுத்தாதிருக்க இப்போது மனந்திரும்புவது சரியல்ல என தவறாக நினைக்கின்றனர். இப்போது மனந்திரும்பும் முறையைப் பின்பற்றுவதைவிட இந்த வாழ்க்கைக்குப் பிறகு கஷ்டப்படலாம் என்பது அவர்களது மனங்களில் இருக்கிறது. சகோதர சகோதரிகளே, உங்கள் மனந்திரும்புதலை தள்ளிப்போடுவது ஒருபோதும் நல்ல அபிப்பிராயம் அல்ல. இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தின்படி உடனே நாம் செயல்படுவதை தடுக்க சத்துரு அடிக்கடி பயத்தைப் பயன்படுத்துகிறான்.

நேசிப்பவர்கள் பாவ நடத்தைகளின் உண்மைகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் ஆழமாக காயம்பட்டதாக உணரும்போது, உருக்கமாக மனந்திரும்பிய பாவம் செய்தவர் மாறவும், தேவனோடு ஒப்புரவாகவும் உதவ விரும்புகின்றனர். பாவி அறிக்கையிடும்போதும், அவரை நேசிப்பவர்களால் சூழப்படும்போதும், அவர்கள் தங்கள் பாவங்களை விட்டுவிட உதவும்போதும் உண்மையாகவே ஆவிக்குரிய குணமாதல் வேகமெடுக்கிறது. அவரிடத்தில் திரும்புகிற வெகுளியான பாவத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்குவதில் இயேசு கிறிஸ்து வல்லவர் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். 13

தலைவர் பாய்ட் கே. பாக்கர் சொன்னார்: “நாம் தவறுகளும் பாவங்களும் செய்யும்போது, நமது ஆவிகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் மாம்ச சரீரங்கள் போலல்லாமல் மனந்திரும்புதலின் முறை முழுமையாகும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம் எந்த தழும்புகளும் இருப்பதில்லை. வாக்குத்தத்தமாவது, ‘இதோ தம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்பியவன் மன்னிக்கப்படுகிறான். கரத்தராகிய நான் அவற்றை ஒருபோதும் நினைப்பதில்லை.’ [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42].14

நாம் இருதயத்தின் முழு நோக்கத்தோடு மனந்திரும்பும்போது, 15 நமது வாழ்க்கையில் “உடனே மீட்பின் மாபெரும் திட்டம் கொண்டு வரப்படும்.” 16 இரட்சகர் நம்மை குணமாக்குவார்.

மூளை பாதிப்பால் வேதனைப்பட்ட எங்களது மகனுக்கு உதவிசெய்த ஊழியத் தோழன் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டனர். மூளைபாதிப்பை மாற்றும் மருந்தை எடுக்க எங்கள் மகன் தெரிந்துகொண்டான். உலக வாழ்க்கையின் மீதியில் அவனைத் தொடர்ந்திருக்கக்கூடிய மூளைபாதிப்பின் முடக்க பாதிப்புகள் மாற்றப்பட்டன. அதுபோல மனந்திரும்பவும், நமது வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தியைக் கொண்டுவர தாமதிப்பதன் அளவு பாவத்தின் தாக்கத்திலிருந்து நாம் விரைவாக குணமாக முடியும்.

தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த அழைப்பைக் கொடுத்தார்: “நீங்கள் பாதைக்கு வெளியே காலை வைத்திருந்தால், தயவுசெய்து திரும்பவாருங்கள் என நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் அக்கறைகள் எதுவானாலும், உங்கள் சவால்கள் எதுவானாலும், இந்த கர்த்தருடைய சபையில் உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது. நீங்களும் இன்னும் பிறக்காத தலைமுறைகளும் இப்போது உடன்படிக்கையின் பாதைக்கு திரும்ப வரும் செயல்பாடுகளால் ஆசீர்வதிக்கப்படும்.” 17

நமது இரட்சகர் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு நாம் பணிவது நமது ஆவிக்குரிய குணமாதலுக்கு தேவைப்படுகிறது. நாம் தாமதிக்கக் கூடாது! நாம் இன்றே செயல்பட வேண்டும்! உங்கள் நித்திய முன்னேற்றத்தை ஆவிக்குரிய முடக்கம் தடைபண்ணாதபடிக்கு இப்போதே செயல்படுங்கள். நான் பேசிக்கொண்டிருந்தபோது, நீங்கள் தவறிழைத்தவரிடம் மன்னிப்புக் கேட்கும் தேவையை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் செயல்பட நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் செய்தவற்றை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களது மன்னிப்பை கோருங்கள். உங்கள் ஆலய தகுதியை பாதிக்கிற பாவத்தை நீங்கள் செய்திருந்தால், உங்கள் ஆயரிடம் ஆலோசனை கேட்க நான் உங்களை அழைக்கிறேன். இன்றே. தாமதிக்காதீர்.

என் சகோதர சகோதரிகளே, தேவன் நமது அன்புமிக்க பரலோக பிதா. அவர் தன் நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா வல்லமையும் புத்தியையும் கொடுத்திருக்கிறார். அவர் நிமித்தம் மனுக்குலம் முழுவதும், ஒவ்வொரு சரீர வியாதியிலிருந்தும் என்றென்றைக்குமாக குணமாக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம், நாம் மனந்திரும்பவும் நமது இருதயங்களை இரட்சகரிடமிருந்து திருப்பவும் நாம் தெரிந்து கொண்டால் அவர் நம்மை ஆவிக்குரிய பிரகாரமாய் குணமாக்குவார். குணமாக்குதல் உடனே தொடங்கலாம். தேர்வு நம்முடையது. சொஸ்தமாக்கப்படுவீர்களா?

நாம் சொஸ்தமாக்கப்படும்படிக்கு இயேசு கிறிஸ்து கிரயம் செலுத்தினார் என நான் சாட்சியளிக்கிறேன். ஆனால் அவர் தருகிற அந்த குணமாக்கும் மருந்தை எடுக்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றே எடுத்துக் கொள்ளுங்கள். தாமதிக்காதீர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. அம்மருந்து tPA என அழைக்கப்படுகிறது. (tissue plasminogen activator).

  2. மோசியா 2:41.

  3. மத்தேயு 4:24 பார்க்கவும். எல்லா வியாதியஸ்தரையும், “வெவ்வேறு நோய்கள் உள்ளோரையும்,” “துன்பப்படுவோரையும்,” “பிசாசு பிடித்தோரையும்,” “பித்து பிடித்தவர்களையும்” குணமாக்கி சுற்றித் திரிந்தார்.

  4. யோவான் 5:5–9 பார்க்கவும்

  5. லூக்கா 8:43–47; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது

  6. ஆல்மா 40:23 பார்க்கவும்; ஏலமன் 14:17.

  7. லூக்கா 5:20,23–25 பார்க்கவும்; மேலும் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு லூக்கா 5:23 (லூக்கா 5:23ல் அடிக்குறிப்பு a) பார்க்கவும். “பிணியாளரை எழுந்து நடக்கச் சொல்லுவதைவிட பாவங்களை மன்னிக்க அதிக வல்லமை தேவைப்படுகிறதா?”

  8. 1 யோவான் 3:4 பார்க்கவும். 

  9. 3 நேபி 27:19 பார்க்கவும்.

  10. The Gospel of Jesus Christ,” Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. (2018), lds.org/manual/missionary.

  11. Lynn G. Robbins, “Until Seventy Times Seven,” Liahona, May 2018, 22.

  12. மோசியா 16:5 பார்க்கவும்.

  13. அநேக தருணங்களில், நேர்மையையும் நம்பிக்கையையும் மீறியவர்களை குடும்பத்தினர் சூழ்ந்திருக்கும்போது அவர்களின் வாழ்க்கையில் அவரது குணமாக்கும் வல்லமைக்காக அவர்கள் முற்றிலுமாக இரட்சகர் பக்கம் திரும்ப உதவிசெய்து, தனிநபர்களின் விரைவான குணமாகுதலை நான் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே மனந்திரும்பிய ஆத்துமா மாற்றத்தை நாடும்போது, சுவிசேஷ படிப்பிலும், உருக்கமான ஜெபத்திலும், கிறிஸ்து போன்ற சேவையிலும் குடும்பத்தினர் உதவும்போது, பாவம் செய்தவர் மாற உதவுவது மட்டுமின்றி, தங்கள் வாழ்க்கையில் இரட்சகரிடமிருந்து அதிக குணமாக்குதலுக்கு கதவைத் திறக்கிறது. தேவைப்படுகிறபோது வெகுளியான பாதிக்கப்பட்டோர், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் வல்லமையிலிருந்து மாறவும் ஆதாயம்பெறவும், மனந்திரும்பும் ஆத்துமாவை ஆதரிக்கவும் பெலப்படுத்தவும் ஒன்றாக என்ன படிப்பதென அறிய பரலோக பிதாவின் வழிகாட்டுதலுக்காகவும், எப்படி சேவைசெய்வது என்பதற்காகவும், குடுபத்தாரை ஈடுபடுத்தி உதவலாம்.

  14. Boyd K. Packer, “The Plan of Happiness,” Liahona, May 2015, 28.

  15. 3 நேபி 18:32.

  16. ஆல்மா 34:31; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  17. Russell M. Nelson, “As We Go Forward Together,” Liahona, Apr. 2018, 7.