2010–2019
தொடக்க குறிப்ப்புகள்
அக்டோபர் 2018


தொடக்க குறிப்புகள்

நமது கிளைகளுக்குள்ளும், தொகுதிகளுக்குள்ளும், பிணைய கட்டிடங்களுக்குள்ளும் நடைபெறுவனவற்றால் ஆதரிக்கப்பட்டு, வீட்டை மையமாகக் கொண்ட சபைக்கான நேரம் இது.

என் அன்பு சகோதர சகோதரிகளே, சபையின் இந்த அக்டோபர் பொது மாநாட்டில் மீண்டும் உங்களோடு கூடுவதை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இதயபூர்வ வரவேற்பைத் தெரிவிக்கிறோம். உங்கள் ஆதரிக்கும் ஜெபத்துக்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவற்றின் தாக்கத்தை நாங்கள் உணர முடிகிறது. உங்களுக்கு நன்றி.

ஆறு மாதங்களுக்கு முன் பொதுமாநாட்டில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றும் அதிகமான முயற்சிகளுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மூப்பர் குழுமங்களை மாற்றியமைக்க உலகம் முழுவதிலுமுள்ள பிணையத் தலைவர்கள் வெளிப்படுத்தல்களை நாடியிருக்கிறார்கள். ஒரு உயர்வான, பரிசுத்தமான விதமாக நமது சகோதர சகோதரிகளுக்கு, கருத்தாய் ஊழியம் செய்ய குழுமங்களின் ஆண்கள் நமது அர்ப்பணிப்புள்ள ஒத்தாசைச் சங்க சகோதரிகளுடன் உழைக்கிறார்கள். உங்கள் குடும்பங்களுக்கும், அயலாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் போல ஊழியம் செய்ய இரட்சகரின் அன்பைக் கொண்டுவருவதில் உங்கள் நற்காரியங்களாலும், அசாதாரண முயற்சிகளாலும் நாங்கள் உணர்த்தப்பட்டிருக்கிறோம்.

ஏப்ரல் மாநாட்டிலிருந்து சகோதரி நெல்சனும், நானும் நான்கு கண்டங்கள் மற்றும் கடலின் மீதுள்ள தீவுகளிலுள்ள அங்கத்தினர்களை சந்தித்துள்ளோம். எருசலேமிலிருந்து ஹராரே வரை, வின்னிபெக்கிலிருந்து ஹாங்காங் வரை உங்கள் மாபெரும் விசுவாசத்தையும், உங்கள் சாட்சிகளின் பெலத்தையும் அனுபவித்திருக்கிறோம்.

இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க உதவ கர்த்தரின் இளைஞர் பட்டாளத்தில் சேர்ந்திருக்கிற1 நமது இளைஞர்களின் எண்ணிக்கையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். உலகளாவிய இளைஞர் ஆராதனையில் கொடுக்கப்பட்ட என் அழைப்புகளைத் தொடர்ந்து நீங்கள் பின்பற்றியதால், நாங்களும் பின்பற்ற நீங்கள் ஒரு தரத்தை ஏற்படுத்துகிறீர்கள். இளைஞர்களாகிய நீங்கள் எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

அண்மை ஆண்டுகளில் சபையின் தலைமை தாங்கும் குழுக்களிலுள்ள நாங்கள், ஒரு அடிப்படை கேள்வியோடு போராடியிருக்கிறோம். தேவனின் பிள்ளைகள் யாவருக்கும் எளிமையான சுத்தமாக, சுவிசேஷத்தையும், அவற்றின் நித்திய வல்லமையுடன் நியமங்களையும் நாம் எப்படி கொண்டு செல்வது.

பிற்காலப் பரிசுத்தவான்களாக கூடுமிடங்களில் நடக்கிற ஒன்றாகவும், வீட்டில் நடப்பவைகளால் ஆதரிக்கப்பட்டதாகவும் “சபையை” நினைக்க நாம் பழகிவிட்டோம். இந்த மாதிரிக்கு ஒரு மாற்றம் நமக்கு தேவை. நமது கிளைகளுக்குள்ளும், தொகுதிகளுக்குள்ளும், பிணைய கட்டிடங்களுக்குள்ளும், நடப்பனவற்றால் ஆதரிக்கப்படுகிற வீட்டை மையமாகக் கொண்ட சபைக்கு இதுவே நேரம்.

உலகம் முழுவதிலும் சபை தொடர்ந்து விரிவடைகையில், கூடுமிடங்கள் இல்லாத இடங்களில் அனேக அங்கத்தினர்கள் வாழ்கின்றனர், வருங்காலத்திலும் எதிர் பார்க்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையால் தங்கள் வீட்டில் கூட வேண்டியிருந்த ஒரு குடும்பத்தை நான் நினைக்கிறேன். தன் சொந்த வீட்டிலேயே சபைக்குச் செல்வதை அவர் எவ்வாறு விரும்பினார் என நான் அந்த தாயிடம் கேட்டேன். அவர் பதிலளித்தார், “இதை நான் விரும்புகிறேன்! ஒவ்வொரு வாரமும் அவர் திருவிருந்தை ஆசீர்வதிப்பார் என அறிந்து, இப்போது வீட்டில் என் கணவர் நல்ல வார்த்தைகளைப் பேசுகிறார்.”

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும் அவரது பாவநிவர்த்தியிலும் தங்கள் விசுவாசத்தை அதிகரிக்க உதவவும், தேவனோடு தங்கள் உடன்படிக்கைகளைச் செய்து, காத்துக்கொள்ளவும் அவர்களது குடும்பங்களைப் பெலப்படுத்தி முத்திரிக்கவும் துணை நிற்பதுவும், சபையின் நீண்ட நாள் நோக்கமாகும். குழப்பமான இன்றைய உலகில் இது எளிதல்ல. சத்துரு விசுவாசத்தின் மீதும், நம்மீதும் நமது குடும்பத்தின் மீதும் அதிக அளவில் தன் தாக்குதலை அதிகரித்திருக்கிறான். ஆவிக்குரிய விதத்தில் நாம் வாழ்ந்திருக்க நமக்கு எதிர் வியூகங்களும் அதிக செயல்படும் திட்டங்களும் தேவை. அதற்கேற்ப நமது அங்கத்தினர்களையும் அவர்களது குடும்பங்களையும் மேலும் பெலப்படுத்தும் அமைப்பு ரீதியான அனுசரிப்புகள் நமக்கு தேவை.

கோட்பாட்டைக் கற்கவும், விசுவாசத்தைப் பெலப்படுத்தவும், தனிப்பட்ட சிறந்த ஆராதனையை ஊக்குவிக்கவும் வீட்டை மையமாகக் கொண்டுசபையால் ஆதரிக்கப்படுவதன் மூலம், குடும்பங்களையும் தனிநபர்களையும் பெலப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தைப்பற்றி அநேக ஆண்டுகளாக சபைத்தலைவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தவும், அதை மகிழ்ச்சியானதாக்கவும் தேவனுக்கு அவர்மீது நமது அன்பின் தனிப்பட்ட அடையாளமாக ஆக்குவதற்கும், நாம் இப்போது அறிமுகப்படுத்தவிருக்கும் அனுசரிப்புக்கள் வழிவகுக்கும்.

வீட்டிலும் சபையிலும் சுவிசேஷம் கற்பித்தலுக்கிடையே, ஒரு புதிய சமநிலையையும் தொடர்பையும் இன்று காலை நாங்கள் அறிவிப்போம். நமது தனிப்பட்ட வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு. தங்கள் பிள்ளைகளுக்கு கோட்பாட்டைக் கற்றுக் கொடுப்பது பெற்றோரின் தலையாய பொறுப்பு என வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றன. 2அவன் அல்லது அவளது சுவிசேஷ அறிவை அதிகரிக்கும், தெய்வீகமாக வரையறுக்கப்பட்ட இலக்கில் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் உதவுவது சபையின் பொறுப்பு.

மூப்பர் க்வெண்டின் எல். குக், இப்போது இந்த முக்கிய அனுசரிப்புகளை விளக்குவார். இந்த செய்தியை அங்கீகரிப்பதில் பிரதான தலைமை அங்கத்தினர் ஆலோசனைக்குழுவும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் இணைந்திருக்கிறோம். மூப்பர் குக் வழங்கப்போகும் திட்டங்களையும் நடைமுறைகளையும், விருத்தி செய்வதில் செல்வாக்காயிருந்த கர்த்தரின் உணர்த்துதலுக்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, தேவன் ஜீவிக்கிறார் என நான் அறிவேன்! இயேசுவே கிறிஸ்து! தன் தாழ்மையான ஊழியக்காரர்களை தீர்க்கதரிசனம் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் வழிநடத்துகிற இது, அவரது சபை. அவ்வாறு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.