2010–2019
முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள்
அக்டோபர் 2018


முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள்

இரட்சகர் அவரது பெயரை நமது இருதயங்களில் வைக்கிறார். பிறருக்காகவும் உங்களுக்காகவும் கிறிஸ்துவின் சுத்தமான அன்பை உணர்கிறீர்கள்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்களுடன் பேசும் இந்த தருணத்துக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த மாநாடு எனக்கு உயர்த்துதலும் தெளிவும் உள்ள மாநாடாக இருந்தது. பாடப்பட்ட இசையும் பேசப்பட்ட வார்த்தைகளும் பரிசுத்த ஆவியால் நமது இருதயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதே ஆவியால் நான் சொல்வது உங்களுக்கும் தெரிவிக்கப்படும் என நான் நம்புகிறேன்.

அநேக ஆண்டுகளுக்கு முன், கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு சேகர தலைவருக்கு நான் முதல் ஆலோசகராக இருந்தேன். எங்கள் சிறிய கிளைகளுக்கு நாங்கள் காரில் சென்றபோது ஒன்றுக்கும் மேலான தடவைகள், அவர் என்னிடம் சொன்னார், “ஹால், நாம் யாரையாவது சந்திக்கும்போது, அவர்கள் மிகுந்த பிரச்சினையில் இருப்பது போல நாம் அவர்களை நடத்தினால், பாதி நேரத்துக்கும் மேலாக நாம் சரியாக செய்திருப்போம்.” அவர் சொன்னது சரி மட்டுமல்ல, இந்த ஆண்டுகளில் அவரது கணிப்பில் அதிக குறைத்தே செய்திருந்தார் என நான் அறிந்தேன். இன்று நீங்கள் சந்திக்கிற பிரச்சினைகளில் உங்களை ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.

நமது உலக வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பரீட்சையாகவும், வளர்ச்சிக்கு ஆதாரமாகவும், ஒரு நேசிக்கிற தேவனால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலக சிருஷ்டிப்பின் சமயத்தில், தன் பிள்ளைகள் குறித்த தேவனின் வார்த்தைகளை நினைவுகொள்ளுங்கள். “கர்த்தராகிய அவர்களது தேவன் அவர்களுக்குக் கட்டளையிடுகிற அனைத்தையும் அவர்கள் செய்வார்களா என இதனால் நாம் நிரூபிப்போம்.” 1

ஆரம்பத்திலிருந்தே சோதனைகள் எளிதாக இல்லை. அநித்திய சரீரங்கள் பெற்றதால் வருகிற பாடுகளை நாம் எதிர்கொள்ளுகிறோம். சத்தியத்துக்கு எதிராகவும் நமது தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு எதிராகவும் சாத்தானின் யுத்தம் அதிக தீவிரமாகிக் கொண்டிருக்கிற உலகில் நாம் வாழ்கிறோம். உலகத்திலும், உங்கள் வாழ்க்கையிலும் குழப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக உங்களுக்குத் தெரியலாம்.

எனது ஆறுதல் இதுவே: உங்கள் சோதனைகளை அனுமதித்த அன்புமிக்க தேவன், அவற்றைக் கடந்து செல்ல நிச்சயமான வழிகளை வடிவமைத்திருக்கிறார். பரலோக பிதா உலகை மிகவும் நேசித்ததால் நமக்கு உதவ அவரது நேச குமாரனை அவர் அனுப்பினார். 2 அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்காக தனது ஜீவனைக் கொடுத்தார். கெத்சமனேயிலும் சிலுவையிலும் நமது பாவங்களின் பாரத்தை இயேசு கிறிஸ்து சுமந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனை மூலமும் நம்மை ஆறுதல்படுத்தி பெலப்படுத்தும்படிக்கு, நமது துக்கங்கள், வேதனைகள் மற்றும் நமது பாவங்களின் தாக்கங்களையும் அவர் அனுபவித்தார். 3

தன் ஊழியக்காரர்களுக்கு கர்த்தர் சொன்னவற்றை நினைவுகொள்ளுங்கள்

“பிதாவும் நானும் ஒன்றாக இருக்கிறோம். நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறோம். நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிற வகையில் நீங்கள் என்னில் இருக்கிறீர்கள், நான் உங்களில் இருக்கிறேன்.

“ஆகவே நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன், நானே உங்கள் நல்ல மேய்ப்பன், இஸ்ரவேலின் கன்மலை. இந்த கற்பாறையின்மேல் கட்டுகிறவன் ஒருக்காலும் விழுவதில்லை.” 4

நமது தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சன் அதே உறுதியைக் கொடுத்திருக்கிறார். மேலும் நாம் கற்பாறை மீது கட்டவும் நமது பாடுகளின் மத்தியில் நமது இருதயங்களில் கர்த்தரின் பெயரை வைக்கவும் ஒரு வழியை அவர் விவரித்தார்.

அவர் சொன்னார்: “நீ தற்போது தைரியத்தை இழந்திருக்கலாம், வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டுமென்பது இல்லை. பாடுகள் தாங்கிக் கொள்ளப்பட வேண்டும், வழியில் வரும் துயரங்கள் சகித்துக்கொள்ளப்பட வேண்டும். ‘தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை,’ என்பதை நீ நினைக்கும்போது, (லூக்கா 1:37), அவர் உன் பிதா என அறிந்து கொள். நீ அவரது சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட குமாரன் அல்லது குமாரத்தி. உனது நீதியான முயற்சிகளில் உதவிக்காக வெளிப்படுத்தல் பெற உன் தகுதியினால் உரிமை பெற்றுள்ளாய். நீ கர்த்தரின் பரிசுத்த நாமத்தை உன் மீது தரித்துக்கொள்ளலாம். தேவனின் பரிசுத்த நாமத்தில் பேச நீ தகுதி பெற முடியும். (கோ. உ 120 பார்க்கவும்).”5

நமது பட்சத்தில் நாம் வாக்களித்தவற்றை செய்யும்போது, நமது பரலோக பிதா நிறைவேற்றுகிற வாக்குத்தத்தமாகிய, திருவிருந்து ஜெபத்தில் காணப்படுகிற வாக்குத்தத்தத்தை தலைவர் நெல்சனின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.

நித்திய பிதாவாகிய தேவனே, இந்த அப்பத்தில் பங்கெடுக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காவும், அவர்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தின் நினைவுகூருதலில் புசிக்கும்படியாகவும், அவருடைய ஆவியை அவர்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படியாகவும், உம்முடைய குமாரனுடைய நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்ளும்படியாகவும், அவரை எப்பொழுதும் நினைவுகூரும்படியாகவும், தங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற அவருடைய கற்பைனகைளக் கைக்கொள்ளும்படியாகவும், சித்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே உம்மிடத்தில் சாட்சி பகரவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 6

ஆமென் என்ற வார்த்தையை நாம் சொல்லுகிற ஒவ்வொரு நேரமும், நமக்காக அந்த ஜெபம் ஏறெடுக்கப்படும்போது, அப்பத்தில் பங்கேற்பதால், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளவும், அவரை எப்போதும் நினைத்திருக்கவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும் சித்தமாயிருக்கிறோம் என நாம் உறுதியேற்கிறோம். மாற்றாக நம்மோடு அவரது ஆவியை எப்போதும் கொண்டிருக்க நாம் வாக்களிக்கப்பட்டிருக்கிறோம். இந்த வாக்களிப்புகளால் நாம் எதிர்கொள்ளுகிற ஒவ்வொரு புயலின்போதும் பயமின்றி நாம் நிற்கக்கூடிய கன்மலை இரட்சகரே.

உடன்படிக்கையின் வார்த்தைகளையும், அதற்குத் தொடர்புடைய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களையும்பற்றி நான் சிந்திக்கும்போது கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள சித்தமாயிருப்பது என்றால் என்ன என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் விளக்குகிறார்: “நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்வதாக நாம் சாட்சியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிச் செய்ய நாங்கள் சித்தமாயிருக்கிறோம் என சாட்சியளிக்கிறோம். (கோ.உ 20:77 பார்க்கவும்.) நாம் சித்தமாயிருப்பதை மட்டுமே சாட்சியளிக்கிறோம் என்ற உண்மை, மிக முக்கியமாக நாம் உண்மையாகவே அந்த பரிசுத்த நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளுவதற்கு முன்பு வேறு ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என கூறுகிறது.” 7

அவரது நாமத்தை “[நம்மீது] தரித்துக்கொள்ள சித்தமாயிருக்கிறோம்” என்ற வாசகம் நாம் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டபோது நாம் முதலில் ஞானஸ்நானத்தில் அவரது நாமத்தைத் தரித்துக்கொண்டது முற்றுப்பெறவில்லை என நமக்குச் சொல்லுகிறது. திருவிருந்து மேஜையில் நாம் உடன்படிக்கைகளை புதுப்பிக்கும்போதும், கர்த்தரின் பரிசுத்த ஆலயங்களில் உடன்படிக்கைகளைச் செய்யும்போதும் நமது வாழ்க்கை முழுவதும் அவரது நாமத்தை தரிக்க தொடர்ந்து நாம் உழைக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் ஆகவேண்டிய இரு முக்கிய கேள்விகள் “என் மீது அவரது நாமத்தைத் தரித்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” மற்றும் “நான் முன்னேற்றமடையும்போது அதை நான் எப்படி அறிவேன்?”

தலைவர் நெல்சனின் வாசகம் ஒரு உதவிகரமான பதிலை சொல்கிறது. நாம் இரட்சகரின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள வேண்டும் மற்றும் அவருக்காக நாம் பேச முடியும் என அவர் சொன்னார். நாம் அவருக்காக பேசும்போது, நாம் அவருக்கு சேவை செய்கிறோம். “தான் சேவித்திராத தனக்கு அன்னியனும் தன் உள்ளத்தின் எண்ணங்களிலும், நோக்கங்களிலுருந்தும், தூரமாயும் இருக்கிற எஜமானை ஒரு மனுஷன் எப்படி அறிவான்.” 8

அதற்கு விசுவாச ஜெபம் தேவைப்படுகிறது. அவரது பணியில் இரட்சகருக்கு உதவ, நாம் பேசக்கூடிய வார்த்தைகளை அறிய பரலோக பிதாவை நோக்கி ஒரு உருக்கமான ஜெபம் தேவைப்படுகிறது. அந்த வாக்குக்கு நாம் தகுதி பெற வேண்டும், “எனது சொந்தக் குரலிலானாலும், அல்லது எனது ஊழியக்காரர்களின் குரலிலானாலும், அது ஒன்றே.” 9

ஆயினும் அவரது நாமத்தைத் தரிக்க அவருக்காக பேசுவதைப் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது. அவரது ஊழியக்காரர்களாக நாம் தகுதிபெற நமது இருதயங்களில் உணர்ச்சிகள் உள்ளன.

அவரது நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள நம்மைத் தகுதிபடுத்தி சாத்தியப்படுத்துகிற உணர்ச்சிகளை தீர்க்கதரிசி மார்மன் விவரித்தான். இந்த உணர்ச்சிகளில் விசுவாசம், நமபிக்கை, கிறிஸ்துவின் பரிபூரண அன்பாகிய தயாளமும் அடங்கும்.

மார்மன் விளக்கினான்:

“உங்களுடைய சாந்த குணத்தினிமித்தம் நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசிக்கிறீர்கள் என நான் எண்ணுகிறேன். அவரில் உங்களுக்கு விசுவாசம் இல்லையெனில், அவருடைய சபையின் ஜனங்களுக்குள்ளே நீங்கள் எண்ணப்பட அபாத்திரராய் இருப்பீர்கள்.

“மேலும் எனக்குப் பிரியமான சகோதரரே, மறுபடியும் நான் உங்களிடத்தில் நம்பிக்கை குறித்து பேசுகிறேன். நீங்கள் நம்பிக்கையில்லாமல் விசுவாசத்தைப் பெறுவதெப்படி?

“மேலும் நீங்கள் எதை நம்பியிருக்கிறீர்கள்? கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் நித்திய ஜீவனுக்கேதுவாய் எழும்படியான அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை மூலம் நீங்கள் நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவரில் உங்களுடைய விசுவாசத்தினிமித்தமும் வாக்குத்தத்தத்தின்படியும் அதைப் பெறுவீர்கள்.

“ஆதலால் ஒரு மனுஷனுக்கு விசுவாசமிருந்தால் அவன் நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். ஏனெனில் விசுவாசமில்லாமல் எந்த நம்பிக்கையும் இருக்க முடியாது.

“மேலும் மறுபடியும் அவன் சாந்தமாயும் இருதயத்தின் தாழ்மையோடும் இராவிட்டால், அவன் விசுவாசத்தையும் நன்மையையும் பெற முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

“அப்படியிருந்தால் அவனது விசுவாசமும் நம்பிக்கையும் வீணே, சாந்த குணமுள்ளவர்களையும் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களையும், தவிர வேறு ஒருவரும் தேவனுக்கு முன் ஏற்கப்படுவதில்லை, சாந்தமாயும் இருதயத்தில் தாழ்மையாயுமிருந்து இயேசுவே கிறிஸ்து என பரிசுத்த ஆவியானவராலே அறிக்கை பண்ணுகிறவன், நிச்சயமாய் தயாளத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அவன் தயாளத்துவத்தைப் பெற்றிராவிட்டால் அவன் ஒன்றுமில்லை. அவன் நிச்சயமாய் தயாளத்துவத்தைப் பெற வேண்டும்.”

தயாளத்துவத்தை விவரித்த பிறகு, மார்மன் தொடர்ந்து சொல்லுகிறான்:

“தயாளம் கிறிஸ்துவின் தூய அன்பாய் இருக்கிறது. அது என்றென்றும் சகித்திருக்கும். கடைசி நாளின்போது அதை உடையவனாய் காணப்படுகிற எவனும் நன்மையை அடைவான்.

“ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, பிதா தன்னுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற யாவர் மேலும் அவர் அருளின இந்த அன்பினால் நீங்கள் நிரப்பப்படவும் தேவனுடைய குமாரர்களாக, அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதனால், அவருக்கு ஒப்பாயிருக்கவும், இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கவும் அவர் தூயவராய் இருப்பதைப் போலவே, நாமும் தூய்மையாக்கப்படவும் அவரிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்தோடும் ஜெபியுங்கள்.” 10

இரட்சகர் அவரது பெயரை உங்கள் இருதயங்களிலே போடுகிறார். உங்களில் அநேகருக்கு அவரில் விசுவாசம் அதிகரிக்கிறது. நீங்கள் அதிக நம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் பெறுகிறீர்கள். பிறர் மீதும் உங்கள் மீதும் கிறிஸ்துவின் தூய்மையான அன்பை உணர்கிறீர்கள்.

உலகமெங்கும் ஊழியக்காரர்கள் சேவை செய்வதில் இதை நான் பார்க்கிறேன். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையைப்பற்றி அங்கத்தினர்கள் தங்கள் நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், பிள்ளைகளும் கூட இரட்சகர் மற்றும் அவர்களது அயலார் மீதான அன்பினிமித்தம் ஊழியம் செய்கிறார்கள்.

உலகம் முழுவதிலும் பேரழிவுகளின் முதல் அறிவிப்பிலேயே, கேட்கப்படாமலேயே, சில சமயங்களில் கடல் தாண்டி கூட, மீட்புக்காக செல்ல அங்கத்தினர்கள் திட்டமிடுகின்றனர். அவர்கள் சில சமயங்களில் அழிக்கப்பட்டுள்ள இடம் அவர்களை ஏற்க முடிவதற்கு முன்பு காத்திருப்பதைக் கடினமாக எண்ணுகிறார்கள்.

இன்று கேட்டுக்கொண்டிருக்கிற உங்களில் சிலர் உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் பிரச்சினைகளால் மேற்கொள்ளப்படுகின்றன என உணரலாம் என நான் உணர்கிறேன். நீங்கள் அன்பை உணர ஏங்கலாம்.

சகோதர சகோதரிகளே, அவரது அன்பை உணரவும் பகிரவும் உங்களுக்கருகில் சந்தர்ப்பங்களை கர்த்தர் வைத்திருக்கிறார். உங்களைக் கர்த்தர் அவருக்காக ஒருவரை நேசிக்க வழிநடத்தவும், நீங்கள் தன்னம்பிக்கையோடு ஜெபிக்கலாம். உங்களைப் போன்ற சாந்த குணமுள்ள தன்னார்வலர்களின் ஜெபங்களுக்கு கர்த்தர் பதிலளிக்கிறார். உங்கள் மீதும் அவருக்காக நீங்கள் சேவையாற்றுகிற நபர் மீதும் தேவனின் அன்பை நீங்கள் உணர்வீர்கள். அவர்களுடைய பிரச்சினைகளில் தேவ பிள்ளைகளுக்கு நீங்கள் உதவும்போது, உங்கள் பிரச்சினைகள் எளிதாகத் தோன்றும். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் பெலப்படுத்தப்படும்.

அச்சத்தியத்துக்கு நான் கண்கண்ட சாட்சி. வாழ்க்கை முழுவதும் என் மனைவி கர்த்தருக்காக பேசியிருக்கிறாள், அவருக்காக ஜனங்களுக்கு சேவை செய்திருக்கிறாள். நான் முன்பு குறிப்பிட்டது போல, நமது ஆயர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார், “நான் ஆச்சரியப்படுகிறேன். தொகுதியிலுள்ள பிரச்சினையுள்ள ஒருவரைப்பற்றி கேள்விப்படும்போதெல்லாம் உதவ நான் விரைகிறேன். ஆனாலும் நான் வரும் நேரத்தில் உங்கள் மனைவி அங்கே ஏற்கனவே இருப்பதுபோல் தோன்றுகிறது.” 56 வருடங்களாக நாங்கள் வசித்த எல்லா இடங்களிலும் அது உண்மையாக இருந்திருக்கிறது.

இப்போது அவள் ஒரு நாளைக்கு சில வார்த்தைகளே பேச முடியும். கர்த்தருக்காக அவள் நேசித்த ஜனங்களால் அவள் சந்திக்கப்படுகிறாள். ஒவ்வொரு காலையும் மாலையும் நான் அவளுடன் பாடல் பாடி ஜெபிக்கிறேன். அந்த ஜெபங்களில் நான் குரலாக இருக்கவேண்டியிருக்கிறது. அவள் மிகவும் விரும்புகிற பாடல் வார்த்தைகளை சொல்கிறாள். சில சமயங்களில் அவள் பிள்ளைகள் பாடலை விரும்புகிறாள். அவள் மிகவும் விரும்புவதாகத் தோன்றுகிற உணர்வு இப்பாடலில் சுருக்கப்பட்டுள்ளது, “நான் இயேசுவைப்போல இருக்க முயற்சிக்கிறேன்.” 11

ஒருநாள் “இயேசு உங்களை நேசித்ததைப்போல ஒருவரையொருவர் நேசியுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் தயவுகாட்ட முயலுங்கள்,” என்ற வரிகளின் வார்த்தைகளை பாடிய பின், மென்மையாக ஆனால் தெளிவாக சொன்னாள், “முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள், முயற்சி செய்யுங்கள்.” நமது இரட்சகர் அவளது இருதயத்தில் அவரது நாமத்தை வைத்துள்ளார், அவள் அவரைப்போலாகி விட்டாள் என அவரைப் பார்க்கும்போது அவள் கண்டு பிடிப்பாள் என நான் நினைக்கிறேன். உங்கள் பிரச்சினைகளூடாக அவர் உங்களைச் சுமக்கவிருப்பது போல அவளது பிரச்சினைகளைக் கடந்து அவர் அவளைச் சுமந்து செல்கிறார்.

இரட்சகர் உங்களை அறிகிறார் மற்றும் நேசிக்கிறார் என நான் சாட்சியை அளிக்கிறேன். நீங்கள் அவரது பெயரை அறிவதைப்போல உங்கள் பெயரை அவர் அறிகிறார். உங்கள் பிரச்சினைகளை அவர் அறிகிறார். அவர் அவற்றை அனுபவித்திருக்கிறார். அவரது பாவநிவர்த்தி மூலம் அவர் உலகத்தை மேற்கொண்டிருக்கிறார். உங்கள் மீது அவரது நாமத்தை தரிக்க சித்தமாயிருப்பதால் நீங்கள் எண்ணற்ற பிறரின் பாரங்களை நீக்குவீர்கள். சரியான நேரத்தில் நீங்கள் நன்கு அறிகிறீர்கள், அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார் என காண்பீர்கள். அவரது பெயர்கள் உங்கள் இருதயங்களில் இருக்கும், உங்கள் நினைவில் நிலைத்திருக்கும். இப்பெயராலேயே நீங்கள் அழைக்கப்படுவீர்கள். என் மீதும் எனக்கன்பானவர்கள் மீதும், உங்கள் மீதும் அவரது அன்பான தயவுக்காக நன்றியுணர்வுடன் நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.