2010–2019
ஆத்துமாக்களை மேய்த்தல்
அக்டோபர் 2018


ஆத்துமாக்களை மேய்த்தல்

நாம் செய்யும்படிக்கு நமது இரட்சகர் கட்டளையிட்டது இது என்பதால் நாம் அன்புடன் பிறரிடம் செல்கிறோம்.

என்னுடைய நண்பர்களில் ஒருவருடன் அண்மையில் ஒரு உரையாடலில், அவர் இளமையில் புதிதாக ஞானஸ்நானம் பெற்ற அங்கத்தினராக இருந்தபோது, தன் தொகுதிக்கு பொருத்தமானவரில்லை என்பது போல எப்படியோ உணர்ந்தார் என என்னிடம் சொன்னார். அவருக்கு போதித்த ஊழியக்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள், மற்றும் தான் விளிம்பில் இருப்பதாக அவர் உணர்ந்தார். தொகுதியில் நண்பர்களின்றி, அவர் தன் பழைய நண்பர்களைக் கண்டுபிடித்து, மந்தையிலிருந்து வழிதப்பிப் போகுமளவுக்கு, சபைப் பங்கேற்புக்கு தூரமாக கூட்டிச்சென்ற செயல்களில் அவர் ஈடுபட்டார். அப்போது ஒரு சக தொகுதி அங்கத்தினர் இதமான சேர்த்துக்கொள்ளும் விதமாக, திரும்ப வர ஊழியக் கரம் நீட்டி அழைத்தபோது அவர் எவ்வளவு நன்றியுணர்வு பெற்றார் என அவரது கண்களில் கண்ணீருடன் விவரித்தார். சில மாதங்களுக்குள் தன்னையும் பிறரையும் பெலப்படுத்தி அவர் மந்தையின் பாதுகாப்பில் திரும்ப வந்தார். இப்போது எழுபதின்மர் தலைமை அங்கத்தினராக எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற மூப்பர் கார்லோஸ் ஏ. கோடோய் ஆகிய அந்த இளைஞனைத் தேடிய பிரேசிலின் மேய்ப்பருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக உணரவில்லையா?

இப்படிப்பட்ட சிறிய முயற்சிகள் எப்படி நித்திய விளைவுகளை உண்டாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதில்லையா?. சபையின் ஊழியம் செய்யும் முயற்சிகளின் மையமாக இந்த உண்மை இருக்கிறது. பரலோக பிதா நமது எளிய அன்றாட முயற்சிகளை அற்புதமான ஒன்றாக மாற்ற முடியும். “பிறரில் அக்கறை காட்டவும் ஊழியம் செய்யவும் புதிய பரிசுத்த அணுகுமுறையை நாம் நடைமுறைப்படுத்துவோம். இந்த முயற்சிகளை எளிதாக ஊழியம் செய்தல் என குறிப்பிடுவோம்,”2 என விளக்கி “நாம் பிறர் மீது அக்கறை செலுத்தும் விதத்துக்கு முக்கிய அனுசரிப்புகளை கர்த்தர் செய்திருக்கிறார்,” 1 என தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கியதிலிருந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. 2

தலைவர் நெல்சன் மேலும் விளக்கினார்: “தேவனின் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஊழியம் செய்ய கர்த்தரின் உண்மையான உயிரோட்டமுள்ள சபையின் அடையாளம் எப்போதும் ஒழுங்கமைக்கப்பட்டு வழிநடத்தப்படும் முயற்சியாகும். இது அவரது சபையாகையால், நாம் அவரது ஊழியக்காரர்களாக அவர் செய்ததுபோலவே அந்த ஒருவருக்கு நாம் ஊழியம் செய்வோம். அவரது நாமத்தில், அவரது வல்லமையோடும், அதிகாரத்தோடும், அவரது அன்பான தயவோடும் நாம் ஊழியம் செய்வோம்.” 3

அந்த அறிவிப்பிலிருந்து, உங்களது பிரதிசெயல் வியப்புக்குரியதாய் இருந்திருக்கிறது! நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியால் வழிநடத்தப்படுகிறபடி, உலகத்திலுள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு பிணையத்திலும், இந்த மாற்றங்களைச் செய்ததில் மாபெரும் வெற்றி அறிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். உதாரணமாக, ஊழியம் செய்யும் சகோதரர்களும் சகோதரிகளும் குடும்பங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர், வாலிபர்களையும் இளம்பெண்களையும் சேர்த்து தோழமைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழிய நேர்காணல்கள் நடக்கின்றன. எனினும் நேற்றும் இன்றும் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களுடன், இது நமது ஊழியத்தையும், கவனத்தையும் வேகப்படுத்தும் என்பதை தீர்மானிக்க நாம் விரும்புகிறோம்.

“வீட்டிலும் சபையிலும் சுவிசேஷம் கற்பித்தலுக்கு புதிய சமநிலையும் தொடர்பும்” என்ற நேற்றைய வெளிப்படுத்தப்பட்ட அறிவிப்பும், ஆறு மாதங்களுக்கு முந்திய ஊழியம் செய்தல் பற்றிய வெளிப்படுத்தப்பட்ட அறிவிப்பும் ஒரு ஒத்த நிகழ்வு என நான் நினைக்கவில்லை. 4 ஜனவரியிலிருந்து தொடங்கி நமது சபை ஆராதனையில் ஒரு மணி நேரம் குறைவாக செலவு செய்யும்போது, குடும்பத்துடனும் அன்புக்குரியவர்களுடனும் உயர்வான, பரிசுத்தமான, வீட்டை மையமாகக் கொண்ட ஓய்வு நாள் அனுபவத்தின் வெற்றிடத்தை சமன் செய்ய ஊழியம் செய்வதில் நாம் கற்றவை நமக்கு உதவும்.

ஒரு அமைப்பு வடிவம் இருக்கும்போது, நாம் கேட்கலாம், “நாம் கர்த்தரின் வழியில் ஊழியம் செய்கிறோம் என நாம் எப்படி அறிவோம்? அவர் எதிர்பார்க்கிற விதமாக நாம் நல்ல மேய்ப்பனுக்கு உதவுகிறோமா?”

தலைவர் ஹென்றி பி. ஐரிங், ஒரு அண்மை உரையாடலில், இந்த கவனிக்கத்தக்க மாற்றங்களை அனுசரித்ததற்காக அவர் பரிசுத்தவான்களை பாராட்டினார். ஆனால் அங்கத்தினர்கள் ஊழியம் செய்தல் “அருமையாக இருப்பதை” விட அதிகமானது என அடையாளம் காண்கிறார்கள் என உண்மையான நம்பிக்கை தெரிவித்தார். அருமையாயிருத்தல் விளைவுகள் ஏற்படுத்தாது என்று சொல்வதற்காக அல்ல, ஆனால் ஊழியம் செய்வதன் உண்மையான உணர்வை புரிந்துகொள்பவர்கள் அது அருமையாயிருத்தலுக்கும் அப்பாற்பட்டது என புரிய வேண்டும். கர்த்தரின் வழியில் செய்யப்படுகிற ஊழியம், மூப்பர் கோடோய்க்கு ஏற்பட்டது போல நித்தியத்துக்கும் நன்மைக்கேதுவான எழுப்புதல்களுக்கான ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தும்.

“அவர் அன்பால் ஊழியம் செய்ததுபோல, ஊழியம் செய்தல் என்றால் என்ன என இரட்சகர் உதாரணத்தால் காட்டினார். ... அவர் போதித்தார். ... ஜெபித்தார், தேற்றினார், அவரைப் பின்பற்ற அனைவரையும் அழைத்து, அவரைச் சுற்றிலுமிருந்தவர்களை ஆசீர்வதித்தார். சபையார் உயர்வான பரிசுத்தமான விதமாக ஊழியம் செய்யும்போது, அவர் செய்வது போல சேவை செய்ய ஜெபத்தில் கேட்கிறார்கள், எப்போதும் ‘சபையைக் கண்காணிக்கவும், அவர்களோடு இருந்து அவர்களைப் பலப்படுத்தவும்,’ ‘ஒவ்வொரு அங்கத்தினரின் வீட்டுக்கும் செல்லவும்’ ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராக உதவுவதும்.” 5

உண்மையான மேய்ப்பன் தன் ஆடுகள் ஒவ்வொன்றையும் அறிந்து நேசிக்கிறான் அவற்றை பேரேபேராக அறிகிறான், அவற்றின் மீது “தனிப்பட்ட அக்கறை” கொண்டிருக்கிறான் என நாம் புரிந்து கொள்கிறோம். 6

படம்
மலையில் ஆடுகள்

ஒரு நெடுநாள் நண்பர், கரடு முரடான மலைகளில் தன் கால்நடைகளையும் ஆடுகளையும் வளர்த்து கடினமாக உழைத்த பண்ணைக்காரராக தன் வாழ்க்கையைக் கழித்தார். ஆடுகளை வளர்ப்பதன் சவால்களையும் ஆபத்துக்களையும் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதிகாலையில் பரந்த மலைச்சாரலில் பனி அநேகமாக உருகிய முன்வசந்த காலத்தில், கோடைகாலத்துக்காக மலைகளில் தோராயமாக 2000 ஆடுகளுள்ள குடும்ப மந்தையை வைத்திருந்ததாக விளக்கினார். பின் பனிக்காலம் வரை அங்கு அவர் ஆடுகளை பராமரித்து வந்தார், பின்பு அவை கோடை தங்குமிடத்திலிருந்து பாலைவனத்தில் குளிர் காலத் தங்குமிடத்துக்கு மாற்றப்பட்டன. அதிகாலை, தாமதமான இரவுகள் என சூரிய உதயத்துக்கு முன்னேயும், இருள் சூழ்ந்து அதிக நேரம் கழித்தும் நடப்பது, பெரிய ஆட்டு மந்தையை மேய்ப்பது கடினமானது என அவர் விவரித்தார். அதை அவரால் தனியாக செய்ய முடியாது.

படம்
பண்ணையின் உதவியாள் ஆடுகளுடன்

அனுபவமிக்க மந்தை மேய்ப்போர் மற்றும் தங்கள் தோழர்களின் ஞானத்தால் பலனடைந்த இளம் மேய்ப்போரால் உதவப்பட்டு, பலர் சேர்ந்து மந்தையை மேய்க்க பிறர் உதவினர். அவர் இரண்டு குதிரைகளையும், பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இரு குதிரைக்குட்டிகள், இரண்டு கிழ மந்தை நாய்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று நாய்க்குட்டிகளையும் சார்ந்திருந்தார். கோடை காலத்தின்போது என் நண்பரும் அவரது ஆடுகளும் காற்றையும் புயலையும், சுகமின்மை, காயங்கள், வறட்சி, மற்றும் ஒருவர் கற்பனை செய்யக்கூடிய எல்லா கஷ்டங்களையும் எதிர்கொண்டனர். சில வருடங்கள் ஆடுகளின் உயிரைக் காக்க கோடை முழுவதும் நீர் இறைக்க வேண்டியிருந்தது. பின்பு ஒவ்வொரு வருடத்தின் பின்பனிக்காலத்தில் குளிர்கால தட்ப வெப்பநிலை பயமுறுத்தியபோது, ஆடுகள் மலையிலிருந்து இறக்கப்பட்டன, 200க்கும் அதிகமானவை காணாமல்போகும்.

படம்
ஆடுகளை ஓட்டிச் செல்லுதல்
படம்
ஆட்டு மந்தை

முன் வசந்த காலத்தில் மலையில் விடப்பட்ட 2000 ஆடுகளில் 1800க்கும் குறைவாக குறைந்தது. அதிகமாக காணாமற்போன ஆடுகள் நோயாலோ, இயற்கை மரணத்தாலோ காணாமற் போகவில்லை, ஆனால் மலை சிங்கங்கள் அல்லது கோதோட்கள் போன்ற மாம்சபட்சிணிகளால் போயின. தங்கள் மேய்ப்பனின் பாதுகாப்பில் இருந்து விலகியும், மந்தையின் பாதுகாப்பிலிருந்து வழிதவறியும் போன ஆடுகளை மாம்சப் பட்சிணிகள் வழக்கமாக கண்டுபிடித்தன. நான் இப்போது விவரித்ததை ஆவிக்குரிய விதமாக ஒரு கணம் பார்க்கலாமா? மேய்ப்பன் யார்? மந்தை யார்? மேயப்பனுக்கு உதவி செய்பவர்கள் யார்?

படம்
நல்ல மேய்ப்பன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், “நானே நல்ல மேய்ப்பன் என்னுடையவைகளை அறிந்து, ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.” 7

படம்
இயேசு தன் ஆடுகளுக்கு உணவளித்தல்

இயேசு “தமது ஆடுகளை மேய்ப்பார், அவை அவரில் தங்கள் மேய்ச்சல்களைக் கண்டடையும்,” என தீர்க்கதரிசி நேபியைப்போல போதித்தார்.8 “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” 9 நாம் ஒவ்வொருவரும் அவரால் அறியப்பட்டு அவரது பராமரிப்பில் இருக்கிறோம் என அறிவதிலும், நான் நிலைத்த சமாதானம் பெறுகிறேன். நாம் வாழ்க்கையின் காற்றையும், புயலையும், சுகவீனத்தையும், காயங்களையும், வறட்சியையும் எதிர்கொள்ளும்போது, நமது மேய்ப்பர் நமக்கு ஊழியம் செய்வார். அவர் நமது ஆத்துமாக்களை சீராக்குவார்.

அதே விதமாக என் நண்பர் இளம் மற்றும் வயதான மந்தை மேய்ப்பவர்கள், குதிரைகள், மந்தை நாய்கள் உதவியுடன் அவரது ஆடுகளை மேய்த்தார், அவரது மந்தையை கவனிக்கும் சவால்மிக்க பிரயாசத்தில் கர்த்தருக்கும் உதவி தேவைப்படுகிறது.

படம்
இயேசு கிறிஸ்து ஊழியம் செய்தல்

அன்புமிக்க பரலோக பிதாவின் பிள்ளைகள் மற்றும் அவரது மந்தையின் ஆடுகளாக, இயேசு கிறிஸ்துவால் தனித்தனியாக உதவிசெய்யப்பட்டு ஊழியம் செய்யப்படுகிற ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கிறோம். அத்துடன் நாமே மேய்ப்பர்களாக பிறருக்கு ஊழிய உதவி செய்ய பொறுப்பு நமக்கு இருக்கிறது. “நீ என்னைச் சேவித்து என் நாமத்திலே புறப்பட்டுப்போய் என் ஆடுகளை ஒன்றாய்ச் சேர்ப்பாய்” என்ற கர்த்தரின் வார்த்தைக்குச் செவி கொடுப்போம். 10

மேய்ப்பன் யார்? ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மற்றும் தேவனின் ராஜ்யத்தில் ஒரு பிள்ளையும் ஒரு மேய்ப்பர். அழைப்பு தேவையில்லை. நாம் ஞானஸ்நான தண்ணீரிலிருந்து வெளிவந்த தருணத்திலிருந்தே, இப்பணிக்காக நாம் ஆணையிடப்பட்டுள்ளோம். நாம் அன்போடு பிறரிடம் செல்கிறோம். ஏனெனில் இரட்சகர் அதைத்தான் நாம் செய்யும்படி கட்டளையிட்டார். ஆல்மா வலியுறுத்தினான், “அநேக ஆடுகள் இருந்தும், அவைகளை கவனியாமல் ஓநாய்கள் பிரவேசித்து தன் மந்தையைப் பட்சித்துப்போடுமட்டும், இருக்கிற மேய்ப்பன் உங்களில் உண்டோ... அதைத் துரத்தாமலிருப்பானோ?” 11 நமது அக்கம்பக்கத்தார் உலகப்பிரகாரமாக அல்லது ஆவிக்குரிய பிரகாரமாக துன்பத்தில் இருக்கும்போது, நாம் அவர்களது உதவிக்காக ஓடுகிறோம். அவைகள் இலகுவாயிருக்கும்படிக்கு ஒருவருக்கொருவரின் பாரங்களைத் தாங்குகிறோம். துக்கப்படுபவர்களோடு துக்கப்படுகிறோம். ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதல் சொல்லுகிறோம். 12 கர்த்தர் இதை அன்போடு நம்மிடம் எதிர்பார்க்கிறார். அவரது மந்தைக்கு ஊழியம் செய்ய நாம் காட்டுகிற அக்கறைக்கு நாம் பொறுப்பாக்கப்படும் நாள் வரும். 13

மேய்ச்சலிடத்தில் கவனிப்பதில் மற்றொரு முக்கிய விஷயத்தை என் மேய்ப்பர் நண்பர் பகிர்ந்தார். மாம்சப்பட்சிணிகளின் ஆபத்தால் காணாமற்போன ஆடுகள் குறிப்பாக இலக்காகும் என மேய்ப்பர் நண்பர் பகிர்ந்தார். உண்மையில் அவரது குழு மற்றும் அவரது நேரத்தில் 15 சதவீதம் காணாமல் போன ஆடுகளைக் கண்டுபிடிக்க அர்ப்பணிக்கப்பட்டது. ஆடு மந்தையிலிருந்து அதிக தூரம் செல்வதற்கு முன்பு அவர்கள் ஆடுகளைக் கண்டுபிடித்தால் ஆடு பாதிக்கப்படுவது குறைவாக இருக்கும் என விரைவில் அவர்கள் கண்டுபிடித்தனர். காணாமற்போன ஆட்டைத் திரும்ப கொண்டுவர அதிக பொறுமையும் ஒழுக்கமும் தேவைப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு உள்ளூர் நாளேட்டில், நான் கண்ட செய்தியை நான் பாதுகாக்கும் அளவுக்கு அதிக ஆச்சரியமாக இருந்தது. முதல் பக்க தலைப்புச் செய்தியாவது, “தீர்மானமுள்ள நாய் காணாமற்போன ஆட்டை கைவிடாது.” 14 என் நண்பரின் நிலத்துக்கு அருகில் ஒருவருக்குச் சொந்தமான சில ஆடுகள் அவர்களது கோடை மேய்ச்சலிடத்தில் விடப்பட்டதை அந்த செய்தி விவரிக்கிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின் அவை மலையில் மாட்டி பனியால் சூழப்பட்டிருந்தது. ஆடுகள் விட்டு விடப்பட்டபோது மந்தை நாய் அவற்றோடு தங்கியது. ஏனெனில் ஆடுகளைப் பாதுகாப்பதும் கவனிப்பதும் அதன் கடமை. காவலிலிருந்து அது போகாது. பல மாதங்களாக குளிரும் பனியும் மிகுந்த காலநிலையில், ஆடுகளை தாக்கும் கோயோட்டுகள், மலைசிங்கங்கள், மற்றும் பிற மாம்சப்பட்சிணிகளிடமிருந்து பாதுகாப்பாக இருந்து, காணாமல் போன ஆடுகளை சுற்றிச் சுற்றி அங்கிருந்தது. மேய்ப்பனிடத்துக்கும் மந்தைக்கும் திரும்ப வழிநடத்தும்வரை அது அங்கே இருந்தது. ஒரு நாயின் கண்களிலும் நடத்தையிலும் குணநலத்தை ஒருவர் யூகிக்க முடியுமானால், இந்த மந்தை நாயின் உருவம் தான் அது.

படம்
மந்தை நாயின் கண்களில் தன்மையும் குணமும்

புதிய ஏற்பாட்டில், மேய்ப்பர்களாகவும் ஊழியச் சகோதரிகளாகவும் சகோதரர்களாகவும், காணாமல் போன ஆடுகளுக்கு சம்மந்தப்பட்ட கூடுதலான உள்ளுணர்வை கொடுக்கிற இரட்சகரின் உவமையையும் அறிவுரையையும் நாம் காண்கிறோம்:

“உங்களில் ஒருவன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமல் போனால், தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலே விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

“கண்டு பிடித்தபின்பு அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேலே போட்டுக்கொண்டு,

“வீட்டுக்கு வந்து சிநேகரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து, காணாமற்போன என் ஆட்டைக் கண்டு பிடித்தேன் . என்னோடு கூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?” 15

இந்த உவமையில் போதிக்கப்பட்டுள்ள பாடத்தை சுருக்கிச் சொன்னால், இந்த மதிப்புமிக்க ஆலோசனையை நாம் காண்கிறோம்:

  1. நாம் காணாமற்போன ஆட்டை அடையாளம் காண வேண்டும்.

  2. அவை கண்டுபிடிக்கப்படும்வரை அவற்றை தேடுகிறோம்.

  3. அவை கண்டுபிடிக்கப்பட்ட பின் அவற்றை வீட்டுக்கு கொண்டுவர நமது தோள்களில் அவைகளைப் போட வேண்டியிருக்கும்.

  4. அவை திரும்பி வந்த பின் நண்பர்களுடன் அவற்றைச் சூழ்ந்து நிற்போம்.

சகோதர சகோதரிகளே, நாம் காணாமல் போன ஆடுகளுக்கு ஊழியம் செய்யும்போது, நமது பெரும் சவால்களும் நமது பெரும் பிரதிபலன்களும் வரும். மார்மன் புஸ்தகத்தின் சபையார், “தங்கள் ஜனத்தைக் காத்து, நீதிக்குரிய காரியங்களால் அவர்களைப் போஷித்தார்கள்.” 16 “ஆவியால் வழிநடத்தப்பட்டு, ஒவ்வொரு அங்கத்தினர் தேவைக்குமேற்ப அனுசரிக்கப்பட்டு நெளிவுள்ளதாக ஊழியம் இருக்க வேண்டும்” என நாம் நினைவுகொள்ளும்போது நாம் அவர்களின் உதாரணத்தை பின்பற்றலாம். “தனிநபர்களும் குடும்பங்களும் தங்கள் அடுத்த நியமங்களுக்கு ஆயத்தமாகவும், அவர்களது உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளவும் …   சுயசார்புடையவர்களாகவும், உதவ நாம் நாடும்போது” இதுவும் முக்கியமாகும். 17

நமது பரலோக பிதாவுக்கு ஒவ்வொரு ஆத்துமாவும் அருமையானது. இது அவரது பணியும் மகிமையாகவும் இருப்பதால், ஊழியம் செய்ய அவரது தனிப்பட்ட அழைப்பு மிகவும் மதிப்புடையதும் முக்கிமானதுமாகும். இது நிச்சயமாக நித்தியத்தின் பணி. அவரது ஒவ்வொரு பிள்ளையும் அவரது பார்வையில் அளவிடமுடியாத ஆற்றலுடையவர்கள். நீங்கள் அறியத் தொடங்க முடியாத அளவில் அவர் உங்களை நேசிக்கிறார். ஒரு அர்ப்பணிப்புள்ள மந்தை நாய்போல காற்றிலும் புயலிலும் பனியிலும் மற்றும் அதிகமானவற்றிலும்உங்களைப் பாதுகாக்க அவர் மலையின்மேல் நிற்பார்.

கடந்த பொது மாநாட்டில் தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்குப் போதித்தார்: உலகத்துக்கு [‘நாம் ஊழியம் செய்யும் மந்தைக்கு’ என நான் சேர்க்கிறேன்] நமது செய்தி எளிமையானது மற்றும் உண்மையானது திரைக்கு இருபக்கத்திலும் உள்ள தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் இரட்சகரிடம் வரவும், பரிசுத்த ஆலய ஆசீர்வாதங்களைப் பெறவும், நிலையான சந்தோஷம் பெறவும், நித்திய ஜீவனுக்கு தகுதிபெறவும் நாங்கள் அழைக்கிறோம். 18

ஆலயத்துக்கும், இறுதியாக நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவிடமும் நாம் ஆத்துமாக்களை நடத்தும்படிக்கு இந்த தீர்க்கதரிசன பார்வைக்கு நமது பார்வையை உயர்த்துவோமாக. நாம் அற்புதங்கள் செய்ய அவர் நம்மை எதிர்பார்க்கவில்லை. ஆத்துமாக்களை மீட்க அவருக்கு வல்லமை இருப்பதால், அவரிடம் நமது சகோதரர்களையும், சகோதரிகளையும் கொண்டுவரும்படி மட்டுமே அவர் கேட்கிறார். நாம் அப்படிச் செய்யும்போது இந்த வாக்குறுதியை பாதுகாக்க முடியும், பாதுகாப்போம். அப்படிச் செய்தால் “பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது, மகிமையுள்ள வாடாத மகிமையின் கிரீடத்தைப் பெறுவீர்கள்.” 19 இதைக்குறித்தும்—இயேசு கிறிஸ்து நமது இரட்சகரும் மீட்பருமானவர் என நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.