2010–2019
காயம்பட்டோர்
அக்டோபர் 2018


காயம்பட்டோர்

உலகப் பாடுகளின் பாத்திரத்தில் பொறுமையோடு முன்னேறுங்கள், இரட்சகரின் குணமாக்கும் வல்லமை உங்களுக்கு ஒளியையும், புரிதலையும், சமாதானத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வருகிறது.

மார்ச் 22, 2016ல் காலை 8 மணிக்கு முன், ப்ருசெல்ஸ் விமானநிலையத்தில் இரண்டு தீவிரவாத குண்டுகள் வெடித்தன. கிளீவ்லேன்ட், ஒஹையோ ஊழியத்திற்காக, சகோதரி பானி கிளையன் விமானத்தில்போக, விமானநிலையத்திற்கு, மூப்பர் ரிச்சர்ட் நோர்பி, மூப்பர் மேசன் வெல்ஸ், மூப்பர் ஜோசப் எம்பெ, அவளை அழைத்துப்போனார்கள். முப்பத்திரண்டு பேர் உயிரழந்தனர், ஊழியக்காரர்கள் அனைவரும் காயப்பட்டனர்.

தனது மனைவியான சகோதரி பாம் நோர்பியுடன் ஊழியம் செய்துகொண்டிருந்த 66வயது நிரம்பிய மூப்பர் ரிச்சர்ட் நோர்பி மோசமாகக் காயமடைந்தார்.

அந்த நேரத்தைப்பற்றி மூப்பர் நோர்பி நினைவுகூருகிறார்.

“என்ன நடந்ததென உடனடியாக எனக்குத் தெரிய வந்தது.

“பாதுகாப்புக்காக நான் ஓட முயற்சித்தேன், ஆனால் உடனேயே நான் கீழே விழுந்தேன். . . என்னுடைய இடது கால் மோசமாக காயமடைந்திருந்தது. கறுப்பாக, ஏறத்தாழ சிலந்திவலையைப்போல, இரண்டு கைகளிலிருந்தும் புகைக்கரி வழிந்துகொண்டிருந்தது. அதை நான் மெதுவாக இழுத்தேன், ஆனால் அது புகைக்கரி இல்லை என்னுடைய தோல் கருகியிருந்தது. என்னுடைய முதுகிலுள்ள ஒரு காயத்திலிருந்து என்னுடைய வெள்ளை சட்டை சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது.

“என்ன நடந்ததென்ற உணர்வு என் மனதை நிரப்பியபோது நான் எங்கிருந்தேன், என்ன நடந்தது, அந்த நேரத்தில் நான் எதை அனுபவித்துக்கொண்டிருந்தேன் என்பதை இரட்சகர் அறிந்திருக்கிறார் என்ற சிந்தனை மிகப்பலமாக இருந்தது.” 1

படம்
ரிச்சர்ட் நோர்பி செயற்கை கோமாவில்

ரிச்சர்ட் நோர்பிக்கும் அவருடைய மனைவி பாமுக்கும் கடினமான நாட்கள் காத்திருந்தன. அவர் செயற்கை கோமாவிலிருந்தார், அதைத் தொடர்ந்த அறுவை சிகிச்சைகளுடன் மிகவும் நிச்சயமில்லாமையிலுமிருந்தார்.

ரிச்சர்ட் உயிரோடிருந்தார், ஆனால், அவருடைய வாழ்க்கை ஒருபோதும் பழைய மாதிரி இல்லை. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய காயங்கள் இன்னமும் குணமடைந்து வந்தன, அவருடைய காலிலுள்ள காணாமற்போன பாகங்களை ஒரு இணைப்பு மாற்றியமைத்து, ப்ருசெல்ஸ் விமானநிலையத்திலிருந்த நேரத்திற்கு முன்பை விட, இப்போது ஒவ்வொரு அடியும் வித்தியாசமாக இருந்தது.

படம்
ரிச்சர்ட் மற்றும் பாம் நோர்பி

ரிச்சர்டுக்கும் பாமுக்கும் இது ஏன் நடக்க வேண்டும்? 2 அவர்களுடைய உடன்படிக்கைகளுக்கு அவர்கள் உண்மையாயிருந்தார்கள். இந்த ஊழியத்திற்கு முன்பு ஐவரி கோஸ்டில் ஒரு ஊழியத்தில் அவர்கள் சேவை செய்து, ஒரு அற்புதமான குடும்பத்தை வளர்த்தார்கள். “இது நியாயமா! இது சரியில்லை! இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள், இது எப்படி நடக்கக்கூடும்?” என சிலர் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சொல்லக்கூடும்.

இது அநித்தியம்

நியாயமில்லாத கடினமான இந்தக் கதை, இந்த சோகங்கள், ஆவிக்குரிய மற்றும் சரீரத்திற்குரிய, எதிர்பாராத சோதனைகளும் துன்பங்களும் நம் ஒவ்வொருவருக்கும் வருகிறது. ஏனெனில் இது அநித்தியம்.

மாநாட்டின் இந்த கூட்டதின் செய்தியாளர்கள் பற்றி இக்காலை வேளையில் நான் சிந்தித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இருவர் பிள்ளைகளை இழந்து, மூவர் பேரப்பிள்ளைகளை இழந்து, தங்கள் பரலோக வீட்டுக்கு திரும்ப அனுப்பியிருந்தது என் நினைவுக்கு வந்தது. வியாதியிலிருந்தும் சோகத்திலிருந்தும் ஒருவரும் தப்பிப்பதில்லை, இந்த வாரத்திலேயே நாம் அனைவரும் நேசிக்கிற சகோதரி பார்பரா பல்லார்ட் திறையினூடே நழுவியிருக்கிறார். தலைவர் பல்லார்ட் உங்களது இன்றைய காலை சாட்சியை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

நாம் சந்தோஷத்தைத் தேடுகிறோம். நாம் சமாதானத்திற்காக ஏங்குகிறோம். அன்பை நாம் நம்புகிறோம். ஒரு அற்புதமான ஆசீர்வாதங்களின் பெருக்கத்தை கர்த்தர் நம்மீது பொழியப்பண்ணுகிறார். ஆனால், மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் ஒன்றிணைக்கப்பட ஒரு காரியம் நிச்சயம். உங்கள் ஆத்துமா காயமடைந்ததாக உணரக்கூடிய நேரங்கள், மணிகள், நாட்கள், சிலநேரங்களில் ஆண்டுகள் இருக்கலாம்.

நாம் கசப்பையும் இனிப்பையும் சுவைப்போம், 3 “எல்லாவற்றிலும் எதிர்ப்பு இருக்கும்” 4 என வேதங்கள் போதிக்கின்றன. இயேசு சொன்னார் “[உங்களுடைய பிதா] தீயோர் மேலும், நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பொழியப்பண்ணுகிறார்.” 5

ஆத்துமாவின் காயங்கள் ஒரு கலாச்சாரத்திற்கு, ஒரு தேசத்திற்கு, அல்லது ஒரு தலைமுறைக்கு மட்டும் தனிப்பட்டதல்ல. செல்வத்தால் அல்லது ஏழ்மையால் அவைகள் தீர்மானிக்கப்படுகிறதில்லை. அவைகள் எல்லோருக்கும் வருகிறது. அவைகள், இந்த அநித்திய அனுபவத்திலிருந்து நாம் பெறுகிற கற்றுக்கொள்ளுதலின் பாகம்.

நீதிமான்கள் விதிவிலக்கல்ல

இன்று என்னுடைய செய்தி, விசேஷமாக, தேவனின் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, தேவனிடம் தங்கள் வாக்களிப்புகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு மற்றும் நோர்பியைப்போல அல்லது பிற ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளையும் போன்ற உலகளாவிய எதிர்பாராத, வேதனையான சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டவர்களுக்கும் ஆகும்.

ஒரு இயற்கை பேரழிவினால் அல்லது ஒரு துரதிருஷ்டமான விபத்தினால் நமது காயங்கள் வரலாம். ஒரு நீதியான துணைக்கும் பிள்ளைகளுக்கும் வாழ்க்கையை தலைகீழாக புறட்டிப்போட்ட ஒரு விசுவாசமில்லாத கணவன் அல்லது மனைவியிடமிருந்து அவைகள் வரலாம். இருளிலிருந்தும் மனச்சோர்விலிருந்தும், நாம் நேசிக்கிற ஒருவரின் வேதனை அல்லது அகால மரணத்திலிருந்தும் காயங்கள் வரலாம். ஒரு குடும்ப அங்கத்தினர் அவர் அல்லது அவள் விசுவாசத்தை விலக்குவதன் துக்கத்திலிருந்து, ஒரு நித்திய துணையை சூழ்நிலைகள் கொண்டுவராதபோதுள்ள தனிமை, அல்லது நூற்றுக்கணக்கான, இருதயத்தைப் பிழக்கிற, கண்களால் காணக்கூடாத பிற வேதனையான [துயரங்களிலிருந்து] அவைகள் வரலாம். 6

அந்த சிரமங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்கிறோம், ஆனால் அவைகள் தனிப்பட்டதாக நமக்கு வரும்போது அவை நமது மூச்சை வாங்குகிறது. பதைபதைக்காமல் நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னான், “உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றி எரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாதிருங்கள்.” 7 சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியின் பிரகாசமான வர்ணங்களினூடே, சோதனையின் கரிய நிற நூல்கள் மற்றும் சோகம் நமது பிதாவின் திட்டமான நூலுடன் ஆழமாக பின்னப்பட்டிருக்கிறது. இந்த போராட்டங்கள், கடினமாக இருந்தபோதிலும் வழக்கமாக நமது பெரிய ஆசிரியர்களாக மாறுகின்றன. 8

தீர்க்கதரிசி ஏலமனால் நடத்தப்பட்ட 2060 இளம் வீர்ர்கள் பற்றிய அற்புதமான கதையை நாம் சொல்லும்போது, இந்த வசனத்தை நாம் நேசிக்கிறோம், “நாங்கள் ஆச்சரியப்படவும், எங்களுடைய முழு சேனை சந்தோஷமடையவும், தேவனுடைய கடாட்சத்தினால் அவர்களில் ஒரு ஆத்துமாவாகிலும் அழிந்து போகவில்லை.”

ஆனால், வாக்கியம் தொடருகிறது: “அவர்களில் அநேக காயங்கள் பெறாத ஒரு ஆத்துமாவுமில்லை.” 9 2060ல் ஒவ்வொருவரும் அநேகக் காயங்களைப் பெற்றனர். வாழ்க்கையின் யுத்தத்தில் நாம் ஒவ்வொருவரும் சரீரப்பிரகாரமாயும், ஆவிக்குரிய பிரகாரமாயும், அல்லது இரண்டு விதமாயும் காயப்படுவோம்.

இயேசு கிறஸ்துவே நமது நல்ல சமாரியன்

ஆனால் உங்களுடைய ஆத்துமாவின் காயங்கள் எவ்வளவு ஆழமாயிருந்தாலும், அவைகளின் தோற்றுவாய் எதுவாயிருந்தாலும், அவைகள் எங்கேயும், எப்போதும் நடந்தாலும் அவைகள் எவ்வளவு குறைந்த நாட்கள் அல்லது நீண்ட நாட்கள் இருந்தாலும் ஆவிக்குரியபிரகாரமாக அழிவதற்காக நீங்கள் இல்லை. ஆவிக்குரியவிதமாக நீங்கள் பிழைத்திருக்கவும், ஜீவிக்கவும், விசுவாசத்திலும், தேவனில் நம்பிக்கையிலும் வளரவும் இருக்கிறீர்கள்.

அவரிடமிருந்து சுயாதீனமாயிருக்க நமது ஆவிகளை தேவன் சிருஷ்டிக்கவில்லை. அவருடைய பாவநிவர்த்தியின் கணக்கிடமுடியாத வரத்தின் மூலமாக நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து மட்டும் நம்மை மீட்கவில்லை, மனந்திரும்புதல், நமது பாவங்களுக்காக மன்னித்தல் மூலமாக நமக்கு மீட்பை வழங்குகிறார், ஆனால், நமது காயமடைந்த ஆத்துமாக்களின் துக்கங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் நம்மைக் காக்கவும் அவர் தயாராக நிற்கிறார். 10

படம்
நல்ல சமாரியன்

“இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்க” 12 அனுப்பப்பட்ட இரட்சகர் நல்ல சமாரியன். 11 நல்ல சமாரியனைப்போல, மற்றவர்கள் நம்மைக் கடந்துபோகும்போது அவர் நம்மிடம் வருகிறார். மனதுருக்கத்தோடு அவருடைய குணமாக்கும் தைலத்தை நம் காயங்களில் வைத்து அவைகளைக் கட்டுகிறார். அவர் நம்மை சுமக்கிறார். நம்மீது அவர் அக்கறையுள்ளவராயிருக்கிறார். “என்னிடத்தில் வாருங்கள். . . நான் [உங்களைக்] குணப்படுத்துவேன்” 13 என அவர் நம்மை அழைக்கிறார்.

“ [இயேசு] எல்லா வகையான வேதனைகளையும், துன்பங்களையும், சோதனைகளையும் [சகித்து], அவர் தமது ஜனங்களுடைய வேதனைகளையும் வியாதிகளையும் அவர்மேல் எடுத்துக்கொள்ளும்படிக்கு. . . இரக்கத்தால் நிரப்பப்பட்டு நமது பெலவீனங்களை [தம்மீது எடுத்துக்கொண்டு]. 14

திக்கற்றவர்களே, நீங்கள் எங்கே சோர்வடைந்திருந்தாலும் வாருங்கள்,

கிருபாசனத்துக்கு வந்து, உருக்கமாக முழங்கால்படியிடுங்கள்.

இங்கே உங்கள் காயமுற்ற இருதயங்களைக் கொண்டுவாருங்கள்.

பரலோகம் குணப்படுத்தமுடியாத எந்த துக்கமும் பூமியிலில்லை. 15

ஜோசப் ஸ்மித்தின் மிகுந்த பாடுகளின் நேரத்தில் அவருக்குக் கர்த்தர் சொன்னார், “இந்தக் காரியங்கள் அனைத்தும் உனக்கு அனுபவத்தைக் கொடுக்கும், உனது நன்மைக்காகவே இருக்கும்.” 16 வேதனையான காயங்கள் எப்படி நமது நன்மைக்காக இருக்கும்? பூமியின் சோதனைகளின் பாத்திரத்தில் நாம் பொறுமையாகவும் ஸ்திரமாகவும் நிற்கும்போது, இரட்சகரின் குணமாக்கும் வல்லமை ஒளியையும், புரிந்துகொள்ளுதலையும், சமாதானத்தையும், நம்பிக்கையையும் கொண்டுவரும். 17

ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள்

உங்கள் முழுஇருதயத்துடன் ஜெபியுங்கள். அவர் இருப்பதில், அவருடைய கிருபையில் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்துங்கள். அவருடைய வார்த்தைகளில் பற்றிக்கொள்ளுங்கள். “என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” 18

மனந்திரும்புதல் வல்லமையான ஆவிக்குரிய மருந்து என்பதை நினைவுகூருங்கள்.19 கற்பனைகளைக் கைக்கொண்டு, தேற்றரவாளனுக்குத் தகுதியாயிருங்கள். “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், நான் உங்களிடத்தில் வருவேன்” என இரட்சகர் வாக்களித்தார். 20

ஆலயத்தின் சமாதானம் காயம்பட்ட ஆத்துமாவை தணிக்கும் தைலமாயிருக்கிறது. முடிந்தவரை உங்களுடைய காயப்பட்ட இருதயங்களுடனும் குடும்பத்தினர் பெயர்களுடனும் கர்த்தரின் ஆலயத்திற்குத் திரும்புங்கள். ஆலயம் நித்தியத்தின் பரந்த திரையில் அநித்தியத்தில் நமது சுருக்கமான நேரத்தை விரிவுபடுத்திக் காட்டுகிறது. 21

உங்களுடைய அநித்தியத்திற்கு முந்தைய நிலையில் உங்கள் தகுதியை நீங்கள் நிரூபித்தீர்கள் என்பதை நினைவுகூர்ந்து திரும்பிப் பாருங்கள். நீங்கள் தேவனின் ஒரு வீரமுள்ள பிள்ளை, அவருடைய உதவியுடன் இந்த வீழ்ந்துபோன உலகத்தின் யுத்தங்களில் நீங்கள் வெற்றியடையலாம். நீங்கள் இதை முன்பே செய்திருக்கிறீர்கள், நீங்கள் அதை மீண்டும் செய்யமுடியும்.

முன்நோக்கி பாருங்கள். உங்கள் பிரச்சினைகளும், துக்கங்களும் நிஜம், ஆனால் அவைகள் நீடித்திராது, ஆனால் அவை என்றென்றைக்கும் நீடிக்காது. 22 உங்களது இருண்ட இரவு கடந்து போகும். ஏனெனில் தன் சிறகுகளில் குணமாக்குதலுடன் குமாரன் [எழுந்தார்]. 23

நோர்பி தம்பதியர் என்னிடம் சொன்னார்கள், “ஏமாற்றங்கள் எப்போதாவது வருகிறது, ஆனால் அவை தங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை.” 24 அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான் “நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை, கலக்கமடைந்தாலும் மனமுறிவடைகிறதில்லை, துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை, கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.” 25 நீங்கள் களைத்துப்போகலாம் ஆனால் விட்டுவிடாதீர்கள். 26

உங்களுடைய வேதனையான காயங்களுடனும், உள்ளுணர்வால் இரட்சகரின் வாக்குத்தத்தத்தை நம்பி மற்றவர்களை நீங்கள் அணுகுவீர்கள்: “என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.” 27 மற்றவர்களின் காயங்களுக்கு சிகிச்சையளிக்கிற காயமடைந்தவர்கள், பூமியில் தேவனுடைய தூதர்கள்.

இன்னும் சில கணங்களில், நமக்கன்பான இயேசு கிறிஸ்துவில் அசைக்க முடியாத விசுவாசமிக்க மனுஷனாகிய, நம்பிக்கையும் சமாதானமும் நிறைந்த மனுஷனாகிய, தேவனால் நேசிக்கப்பட்ட ஆனால் ஆத்துமாவின் காயங்களிலிருந்து தப்புவிக்கப்படாத, தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சன் பேச நாம் கேட்கப்போகிறோம்.

1995ல் அவருடைய மகள் எமிலி ஒரு குழந்தையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, அவளுக்கு புற்றுநோயிருப்பதாக கண்டறியப்பட்டது. அவளுக்கு ஒரு ஆரோக்கியமான குழந்தை பிறந்தபோது, அவை நம்பிக்கை மற்றும் சந்தோஷத்தின் நாட்களாக இருந்தன. ஆனால், புற்றுநோய் திரும்பவந்து, அவர்களுடைய அன்பான எமிலியின் 37வது பிறந்த நாளிற்கு இரண்டு வாரங்களுக்குப் பின், அவளுடைய அன்பான கணவனையும் ஐந்து இளம் பிள்ளைகளையும் விட்டு, இந்த வாழ்க்கையை அவள் கடந்து போனாள்.

படம்
1995ல் தலைவர் நெல்சன் பேசுகிறார்

அவள் மரித்த பின் விரைவிலேயே பொது மாநாட்டில் மூப்பர் நெல்சன் தெரிவித்தார், “எங்கள் மகளை நான் இன்னும் நன்றாக கவனித்திருக்கலாமென்கிற, விருப்பங்களுடனே துக்கத்துடன் எனது கண்ணீர் வழிந்தது. … எனக்கு உயிர்த்தெழுதலின் வல்லமையிருந்திருந்தால் அவளைத் திரும்பக்கொண்டுவர உந்தப்பட்டிருப்பேன், ஆனால் அந்த திறவுகோல்களை இயேசு கிறிஸ்து தரித்திருக்கிறார், எமிலிக்கும் எல்லா ஜனங்களுக்கும் கர்த்தருடைய ஏற்ற காலத்தில் அவைகளை அவர் பயன்படுத்தவார்.” 28

படம்
போர்ட்டோ ரிகாவில் தலைவர் நெல்சன்

கடந்த மாதம், போர்டோ ரிகாவில் பரிசுத்தவான்களை சந்தித்தபோது, கடந்த ஆண்டின் மரியா சூறாவளியின் பேரழிவை நினைவுகூர்ந்து அன்புடனும் மனதுருக்கத்துடனும் தலைவர் நெல்சன் பேசினார்:

“[இது] வாழ்க்கையின் ஒரு பகுதி. இதனால்தான் நாம் இங்கேயிருக்கிறோம். ஒரு சரீரம் நமக்கிருக்கவும், சோதிக்கப்படவும் சோதனைக்குள்ளாகவும் நாம் இங்கேயிருக்கிறோம். இந்த சோதனைகள் சில சரீரப்பிரகாரமானது, சில ஆவிக்குரியது, இங்கே உங்களுடைய சோதனைகள் சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரியதாகவுமிருக்கும்.” 29

“நீங்கள் விட்டுவிடவில்லை. நாங்கள் உங்களில் பெருமைப்படுகிறோம். உண்மையுள்ள பரிசுத்தவான்களாகிய நீங்கள் அதிகம் இழந்துவிட்டீர்கள், ஆனால், அதன் எல்லாவற்றின் வழியாகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வளர்த்தீர்கள்.” 30

“தேவனின் கற்பனைகளைக் கைக்கொள்ளுவதால் நம்முடைய மிகமோசமான சூழ்நிலைகளின் நடுவிலும் நாம் சந்தோஷத்தைக் காணமுடியும்.” 31

கண்ணீர் யாவும் துடைக்கப்படும்

என்னுடைய சகோதர சகோதரிகளே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உங்களின் அதிகரிக்கப்பட்ட விசுவாசம், கூடுதலான பெலத்தையும் பெரிய நம்பிக்கையையும் கொண்டுவரும் என்பது உங்களுக்கு என்னுடைய வாக்குத்தத்தம். நீதிமான்களான உங்களுக்கு, நமது ஆத்துமாக்களைக் குணமாக்குகிறவர், அவருடைய நேரத்தில், அவருடைய வழியில் உங்கள் காயங்கள் அனைத்தையும் குணமாக்குவார். 32 எந்த அநீதியும், எந்த துன்புறுத்தலும், எந்த துக்கமும், எந்த மனவேதனையும், எந்த துன்பமும், எவ்வளவு ஆழமாக இருந்தாலும், எவ்வளவு பரந்திருந்தாலும், எவ்வளவு வேதனையாக இருந்தாலும் எந்த காயமும், ஆறுதல், சமாதானம் நிலைத்திருக்கும், அவருடைய பிரசன்னத்திற்குள் திரும்பிவர நீட்டப்பட்ட கரங்களுடனும், காயம்பட்ட கைகளுடனும், நம்மை அழைக்கிற அவருடைய நம்பிக்கையினால் நீக்கப்படும். அந்த நாளில் அப்போஸ்தலன் யோவான் சாட்சியளிக்கிறான், நீதிமான்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்,” 33 தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வெள்ளை அங்கிகளைத் தரித்தவர்களாக நிற்பார்கள். ஆட்டுக்குட்டியானவர் அவர்களுக்கும் தேவனுக்கும் நடுவிலிருந்து இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” 34 அந்த நாள் வரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அப்படியே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. தனிப்பட்ட உரையாடல், ஜன. 26, 2018.

  2. இந்த ஆண்டில் முன்பு ஒரு உரையாடலில், ரிச்சர்ட் நோர்பி என்னிடம் சொன்னார், “நமக்குக் கொடுக்கப்பட்ட பதிலை நாம் கொடுக்கிறோம். அவரது குறிப்பிதழிலிருந்து, இதைப் பகிர்ந்து கொண்டார்: “நம் ஒவ்வொருவருக்கும் வருகிற சோதனைகளும் பாடுகளும், இரட்சகரை நன்கு அறியவும், அவரது பாவநிவாரண பலியை ஆழ்ந்து விவரமாகப் புரியவும் சந்தர்ப்பமும் சிலாக்கியமும் கொடுக்கிறது. நாம் அவர் மீது சாய்கிறோம். அவரை நாம் தேடுகிறோம். அவரை நாம் சார்ந்திருக்கிறோம். அவரில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். எந்த தடையும் இன்றி நமது முழு இருதயத்துடனும் அவரையே நாம் நேசிக்கிறோம். அநித்தியத்தின் பங்காகிய அனைத்து சரீர மற்றும் உணர்வுபூர்வ வேதனைகளையும் இரட்சகர் மூடினார். அவர் நம்மிடமிருந்து வேதனையை எடுக்கிறார். அவர் நமது துக்கங்களை வாங்கிக்கொள்கிறார்.” (ஜன. 26, 2018ல் பகிரப்பட்டது.)

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:39 பார்க்கவும்.

  4. 2 நேபி 2:11.

  5. மத்தேயு 5:45.

  6. “Lord, I Would Follow Thee,” Hymns, no. 220.

  7. 1 பேதுரு 412.

  8. “கர்த்தராகிய தேவன் அவர்களுக்கு கட்டளையிடுகிற எந்தக் காரியமானாலும் அவர்கள் செய்கிறார்களா என பார்க்க இவ்வாறு நாம் நிரூபிப்போம்.” ஆபிரகாம் 3:25 பார்க்கவும். மேலும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:4–5 பார்க்கவும்.

  9. ஆல்மா 57:25.

  10. ஒரு நண்பர் எனக்கு எழுதினார்: “பல்வேறு அளவுகளில் உணரவுபூர்வ இருள் மற்றும் மந்தாரத்தில் கிட்டத்தட்ட ஐந்து வருட யுத்தம், உங்கள் திறமைகளுக்கும், உறுதிக்கும், விசுவாசத்துக்கும், பொறுமைக்கும் கொண்டு செல்கிறது. பலநாள் ‘கஷ்டத்துக்குப்’ பின் நீங்கள் சோர்வடைகிறீர்கள். வாரக்கணக்கான ‘கஷ்டத்துக்குப்’ பின் நீங்கள் தளர்வடைகிறீர்கள். மாதங்களாக ‘கஷ்டத்துக்குப்ட பின், நீங்கள் நிதானம் இழக்கத் தொடங்குகிறீர்கள். வருடங்களாக கஷ்டப்பட்ட பின் நீங்கள் ஒருபோதும் குணமடைய மாட்டீர்கள் என்ற சாத்தியத்துக்கு பணிகிறீர்கள். நம்பிக்கை அதிக வரங்களில் அருமையான, கற்பனையாகிறது. சுருக்கமாக இரட்சகர் இல்லாவிட்டால் இந்த பாடுகளிலிருந்து எப்படி வெளியே வந்தேன் என நான் உறுதியாக அறியவில்லை. இதுவே ஒரே விளக்கம். நான் அதைச் செய்யாமல் நான் அதை எப்படி அறிவேன் என நான் விளக்க முடியாது. அவராலேயே நான் இதை கடந்தேன்.”

  11. லூக்கா 10:30–35 பார்க்கவும்.

  12. லூக்கா 4:18; ஏசாயா 61:1ஐயும் பார்க்கவும்.

  13. 3 நேபி 18:32.

  14. ஆல்மா 711–12. “அவர் அறிந்த அனைத்துக்கும் அவர் கீழ் இறங்கினார்.” கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:6.

  15. “Come, Ye Disconsolate,” Hymns, no. 115.

  16. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122:7.

  17. “தேவனின் மேன்மையை நீங்கள் அறியுங்கள் உனது நன்மைக்காக அவர் துன்பங்களை பரிசுத்தமாக்குவார்.” (2 நேபி 22). “தேவனில் தங்கள் நம்பிக்கையை வைப்பவர்கள் அவர்களது பாடுகளிலும், அவர்களது பிரச்சினைகளிலும், அவர்களது துன்பங்களிலும், ஆதரிக்கப்பட்டு கடைசி நாளில் உயர்த்தப்படுவார்கள்.” (ஆல்மா 36:3).

  18. 2 கொரிந்தியர் 12:9.

  19. See Neil L. Andersen, “The Joy of Becoming Clean,” Ensign, Apr. 1995, 50–53.

  20. யோவான் 14:18.

  21. “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதவிக்கப்பட்டவர்களாக இருப்போம்.” (1 கொரிந்தியர் 15:19).

  22. மார்மன் புஸ்தகத்தில் முதல் வசனத்தில், , “[அவனுடைய] நாட்களில் அநேக உபத்திரவங்களைக் கண்டிருப்பினும்” என நேபி விளக்கியிருக்கிறான் (1 நேபி 1:1). பின்னர் நேபி சொன்னான், “இருந்த போதிலும் நான் தேவனை நோக்கிப் பார்த்து நாள் முழுவதும் அவரைத் துதித்தேன். என் துன்பங்களினிமித்தம் நான் கர்த்தருக்கு எதிராக முறுமுறுக்கவில்லை.(1 நேபி 18:16).

  23. 3 நேபி 25:2.

  24. தனிப்பட்ட உரையாடல், ஜன. 26, 2018.

  25. 2 கொரிந்தியர் 4:8–9.

  26. இஸ்ரேலுக்குச் சென்றபோது, அப்படிப்பட்ட பரீட்சை ஆபிரகாம் ஏன் தன் மகனை பலியிடுமாறு கட்டளையிடப்பட்டான் என கேட்கப்பட்டபோது தலைவர் ஹ்யூ பி. ப்ரௌன் பதிலளித்தார், “ஆபிரகாம் ஆபிரகாமைப் பற்றி அறிய வேண்டியிருந்தது.” (in Truman G. Madsen, Joseph Smith the Prophet [1989], 93).

  27. மத்தேயு 16:25.

  28. Russell M. Nelson, “Children of the Covenant,” Ensign, May 1995, 32.

  29. Russell M. Nelson, in Jason Swensen, “Better Days Are Ahead for the People of Puerto Rico,” Church News, Sept. 9, 2018, 4.

  30. Russell M. Nelson, in Swensen, “Better Days Are Ahead,” 3.

  31. Russell M. Nelson, in Swensen, “Better Days Are Ahead,” 4.

  32. See Russell M. Nelson, “Jesus Christ—the Master Healer,” Liahona, Nov. 2005, 85–88.

  33. வெளிப்படுத்தின விசேஷம் 7:14.

  34. வெளிப்படுத்தின விசேஷம் 7:13, 15, 17 பார்க்கவும்.