2010–2019
சத்தியமும் திட்டமும்
அக்டோபர் 2018


சத்தியமும் திட்டமும்

மதத்தைப்பற்றிய உண்மையை நாம் தேடும்போது அந்த தேடுதலுக்கு பொருத்தமாயிருக்கிற ஆவிக்குரிய முறைகளை நாம் பயன்படுத்தவேண்டும்.

“அவைகள் இருக்கிறபடியே, அவைகள் இருந்தபடியே, அவைகள் வரப்போகிறபடியேயானவை அறிவு » என உண்மையை இக்கால வெளிப்படுத்தல் வரையறுக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:24). இரட்சிப்பின் திட்டத்திற்கும் “குடும்பம் : உலகிற்கு ஓர் பிரகடனத்திற்கும்” ஒரு சரியான விளக்கமாயிருக்கிறது.

தகவல் மிகவும் விரிவாக பரவுகிற காலத்தில் நாம் வாழுகிறோம். ஆனால் இந்த தகவல் எல்லாம் உண்மையில்லை. உண்மையை நாம் தேடும்போதும், அந்தத் தேடுதலுக்கான ஆதாரங்களை தேர்ந்தெடுக்கும்போதும் நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். மதச்சார்பற்ற முக்கியத்துவத்தை அல்லது அதிகாரத்தை, சத்தியத்தின் தகுதியான ஆதாரமாக கருதக்கூடாது. பொழுதுபோக்கு நட்சத்திரங்களால், பிரசித்திபெற்ற விளையாட்டு வீரர்களால், அல்லது அநாமதேய இணையத்தின் ஆதாரங்களால் கொடுக்கப்படுகிற தகவலிலும் புத்திமதியிலும் நாம் சார்ந்திருப்பதைப்பற்றி எச்சரிக்கையாயிருக்கவேண்டும். ஒரு துறையில் நிபுணராயிருப்பவர்கள் பிற துறைகளிலுள்ள உண்மையில் நிபுணராக இருப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

தகவலைக் கொடுக்கிறவரின் நோக்கத்தைப்பற்றியும் நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். அதனால்தான் ஆசாரியவஞ்சகத்திற்கு எதிராக வேதங்கள் நம்மை எச்சரிக்கின்றன (2 நேபி 26:29 பார்க்கவும்). ஆதாரம் அநாமதேயமாக அல்லது அறியாததாக இருந்தால் தகவலே சந்தேகத்துக்குரியதாக இருக்கலாம்.

தலைப்புக்குத் தகுதியாயிருக்கிற ஆதாரங்களிலிருந்தும், சுயநல நோக்கங்களிலிருந்தும் சுதந்தரமான தகவலின் அடிப்படையில் நமது தனிப்பட்ட தீர்மானங்கள் இருக்கவேண்டும்.

I.

மதத்தைப்பற்றிய உண்மையை நாம் தேடும்போது அந்த தேடுதலுக்கு பொருத்தமான, ஜெபம், பரிசுத்த ஆவியின் சாட்சி, வேதங்களைப் படித்தல், தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் போன்ற ஆவிக்குரிய முறைகளை நாம் பயன்படுத்தவேண்டும். மதச்சார்பற்ற போதனைகளால் மத விசுவாசத்தின் இழப்பை நான் கேட்கும்போது எப்போதுமே நான் துக்கமடைகிறேன். ஒரு சமயம் ஆவிக்குரிய பார்வையிருந்தவர்கள் சுயதண்டனையின் ஆவிக்குரிய குருட்டுத்தன்மையிலிருந்து வேதனைப்படுவார்கள். “அவர்கள் எதை சிந்திக்கிறார்கள், எதைப் பார்க்கிறார்கள் என்பதில் அவர்களுக்கு பிரச்சினையிருப்பதில்லை, அவர்களால் இன்னும் பார்க்க முடியாததில் இருக்கிறது” என தலைவர் ஹென்றி பி. ஐரிங் சொன்னார். 1

அறிவியல் உண்மை என நாம் அழைக்கிறதற்கு விஞ்ஞானத்தின் முறைகள் நம்மை நடத்துகிறது. ஆனால் அறிவியல் உண்மை, முழுமையான வாழ்க்கை இல்லை. “ஆய்வாலும் விசுவாசத்தாலும்” (கேட்பாடும் உடன்படிக்கைகளும் 88:118) கற்றுக்கொள்ளாதவர்கள் அறிவியல் பொருட்களால் அவர்களால் சரிபார்க்க முடிந்தவைகளுக்கு தங்கள் புரிந்துகொள்ளுதலை குறைக்கின்றனர். அவர்களின் உண்மையின் தேடுதலுக்கு அது செயற்கையான வரம்புகளை ஏற்படுத்துகிறது.

தலைவர் ஜேம்ஸ் இ. பாஸ்ட் சொன்னார், “மதச்சார்பற்ற ஆதாரத்தின் கற்றுக்கொள்ளுதலை மட்டும் கவனக்குறைவாக தேடுகிறவர்கள் [ஞானஸ்நானம் பெற்றவர்கள்] தங்கள் ஆத்துமாவை ஆபத்தில் வைக்கிறார்கள். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் உண்மையின், நித்திய அறிவு ஒளியின் சத்தான சுவிசேஷமாகிய கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணமிருக்கிறது” என நாம் நம்புகிறோம். 2

நாம் யாரென்பதைப்பற்றியும், அநித்திய வாழ்க்கையின் அர்த்தத்தைப்பற்றியும், நாம் மரிக்கும்போது நாம் எங்கே போவோமென்பதைப்பற்றியும் அறிந்துகொள்வதாலும் அதன்படி செயல்படுவதாலும், உண்மையையும் நீடித்த சந்தோஷத்தையும் நாம் காண்போம். அறிவியல் அல்லது மதச்சார்பற்ற முறைகளால் அந்த உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடியாது.

II.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் கோட்பாடுகளுக்கு அடிப்படையாயிருக்கிற மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷ உண்மையைப்பற்றி இப்போது நான் பேசுவேன். தயவுசெய்து இந்த உண்மைகளை கவனமாக கருத்தில் கொள்ளுங்கள். நமது கோட்பாடுகள், நடைமுறைகள், ஒருவேளை இன்னமும் புரிந்துக்கொள்ளமுடியாத சில காரியங்களையும் சேர்த்து, அவைகள் அதிகமாக விவரிக்கிறது.

எப்போதுமே வாழ்ந்தவர்கள் அல்லது வாழப்போகிறவர்கள் அனைவரின் ஆவிகளின் அன்பான பிதாவாகிய ஒரு தேவன் உண்டு.

பாலினம் நித்தியமானது. இந்த பூமியில் நாம் பிறப்பதற்கு முன்பு, தேவனின் பிரசன்னத்தில் ஆணாக அல்லது பெண்ணாக நாம் அனைவரும் வாழ்ந்தோம்.

“தேவனின் திட்டத்தை நான் பின்பற்றுவேன்” “I Will Follow God’s Plan” 3 என்ற பாடலை இசைக் குழுவினர் பாடியதை இப்போதுதான் நாம் கேட்டோம். அவருடைய ஆவி பிள்ளைகள் அனைவரும் நித்தியமாக முன்னேற தேவன் ஒரு திட்டத்தை நிறுவினார். அந்த திட்டம் நம் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது.

அவருடைய அன்பான ஆவியின் பிள்ளைகள் அநித்தியத்திற்குள் பிறப்பதற்கு ஒரு இடமாகவும், ஒரு மாம்ச சரீரத்தைப் பெறவும், நீதியான தேர்ந்தெடுப்புகளைச் செய்வதால் நித்திய முன்னேற்றத்திற்காக சந்தர்ப்பத்தைப் பெறவும் அந்த திட்டத்தின் கீழ் தேவன் இந்த பூமியை சிருஷ்டித்தார். .

அர்த்தமுள்ளதாக இருக்க, நல்ல, தீய படைகளின் போட்டிக்கிடையில் அநித்திய தேர்ந்தெடுப்புகள் செய்யப்படவேண்டும். அங்கே எதிர்ப்பிருக்கும், ஆகவே, தேவனின் திட்டத்திற்கு எதிராக செயல்பட கலகத்தினால் வெளியேற்றப்பட்ட ஒரு சத்துருவானவன் தேவனின் பிள்ளைகளை சோதிக்க அனுமதிக்கப்பட்டான்.

தேவனின் திட்டத்தின் நோக்கம், நித்திய ஜீவனைத் தேர்ந்தெடுக்க அவருடைய பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதுவே. அநித்தியத்தின் அனுபவத்தாலும், மரணத்திற்குப் பின், ஆவி உலகத்தில் அநித்தியத்திற்கு முந்தைய வளர்ச்சியினாலும் மட்டுமே இது நிறைவேற்றப்படும்.

அநித்திய வாழ்க்கையின் போக்கில், சத்துருவானவனின் தீமையின் சோதனைகளுக்கு நாம் இணங்கும்போது நாம் அனைவரும் பாவத்தால் நனைந்துபோய் இறுதியாக நாம் மரித்துப்போகிறோம்.நமது பிதாவாகிய தேவன் ஒரு இரட்சகரைக் கொடுப்பார் என்ற திட்டத்தின் உறுதியினால் நம்பிக்கையில் அந்த சவால்களை நாம் ஏற்றுக்கொண்டோம். அவருடைய ஒரே பேறான குமாரனாகிய அந்த இரட்சகர் மரணத்திற்குப் பின் மாம்ச வாழ்க்கைக்கு ஒரு உலகளாவிய உயிர்த்தெழுதலால் நம்மைக் காப்பாற்றுவார். அவர் பரிந்துரைத்த நிபந்தனைகளில் பாவத்திலிருந்து அனைவரும் சுத்திகரிக்கப்பட கிரயத்தைச் செலுத்த ஒரு பாவநிவர்த்தியையும் இரட்சகர் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவில் விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும், ஞானஸ்நானத்தையும், பரிசுத்த ஆவியின் வரத்தையும் ஆசாரியத்துவ அதிகாரத்தால் நடத்தப்படுகிற பிற நியமங்களையும் அந்த நிபந்தனைகள் அடக்கியிருக்கிறது.

நித்திய நீதிக்கும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக நாம் பெறக்கூடிய இரக்கத்திற்குமிடையில் தேவனின் பெரிய சந்தோஷத்தின் திட்டம், ஒரு சரியான சமநிலையைக் கொடுக்கிறது. கிறிஸ்துவில் புதிய சிருஷ்டிப்புக்கு மாறியிருக்க நமக்கு சாத்தியமாக்குகிறது.

ஒரு அன்புள்ள தேவன் நம் ஒவ்வொருவரையும் அணுகுகிறார். அவருடைய அன்பின் மூலமாகவும், அவருடைய ஒரேபேறான குமாரனின் பாவநிவர்த்தியினாலும் [அவருடைய] சுவிசேஷத்தின் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிதலால் முழுமனுக்குலமும் இரட்சிக்கப்படும் (விசுவாசப் பிரமாணங்கள் 1:3;முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது), என நாம் அறிவோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, ஒரு குடும்ப மையமான சபை என சரியாக அறியப்பட்டிருக்கிறது. ஆனால், எது சரியாகப் புரிந்துகொள்ளப்படாதிருக்கிறதென்றால், நமது குடும்ப மையமானது அநித்திய உறவுகளுக்கு மேலாக கவனம் செலுத்தப்படுகிறது. நித்திய உறவுகளும் நமது இறையியலுக்கு அடிப்படையாயிருக்கிறது. குடும்பம் தேவனால் நியமிக்கப்பட்டது. 4 நமது அன்பான சிருஷ்டிகரின் மகத்தான திட்டத்தின் கீழ், அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் ஊழியம், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் நித்திய திருமணத்தின் மூலமாக மட்டுமே அடையக்கூடிய சிலஸ்டியல் இராஜ்ஜியத்தில் மேன்மையடைதலின் பரலோக ஆசீர்வாதங்களை அடைய அவருடைய பிள்ளைகளுக்கு உதவுவதே. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131:1–3 பார்க்கவும்). “பாலினம் தனிப்பட்ட அநித்தியத்திற்கு முந்தைய, அநித்திய அடையாள நோக்கத்தின் அத்தியாவசிய பண்பு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான திருமணம் அவருடைய நித்திய திட்டத்தில் அத்தியாவசியமானது என்ற கர்த்தருடைய போதனைகளை நாம் உறுதிசெய்கிறோம்.” 5

இறுதியாக, வேண்டுமென்றே இருளின் குமாரர்களாக மாறுகிறவர்களைத் தவிர அவருடைய பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு மகிமையின் இலக்கை அவர் கொடுத்திருக்கிறார் என்பதில் தேவனின் அன்பு மிக மகத்தானது. மரித்தவர்களும் அவருடைய பிள்ளைகள் அனைவரில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நமது ஆலயங்களில் பதிலியால் அவர்களுக்கு நாம் நியமங்களை நடப்பிக்கிறோம். மேன்மையடைதல் அல்லது நித்திய ஜீவனான மகிமையின் மிக உயர்ந்த பட்டத்திற்காக அவருடைய பிள்ளைகளைத் தகுதிபடுத்துவது, இயேசு கிறிஸ்துவின் சபையின் நோக்கம். விருப்பமில்லாத அல்லது அதற்கு தகுதியில்லாதவர்களுக்கு மகிமையின் குறைந்த இராஜ்ஜியங்களாயிருந்தாலும் அவர் பிற இராஜ்ஜியத்தைக் கொடுக்கிறார்.

இந்த நித்திய உண்மைகளை புரிந்துகொள்கிற எவரும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள், ஏன் நாம் செய்கிறதைப்போல சிந்திக்கிறார்கள், நாம் செய்வதைப்போல செய்கிறார்களென்பதைப் புரிந்துகொள்வார்கள்.

III.

தேவனின் திட்டத்தின் ஒளியில் மட்டுமே புரிந்துகொள்ளப்படுகிற இந்த நித்திய உண்மைகளின் சில பயன்பாடுகளை இப்போது நான் குறிப்பிடுகிறேன்.

முதலாவதாக, தனிப்பட்ட சுயாதீனத்தை நாம் கனம்பண்ணுகிறோம். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் உலகமுழுவதிலும் மத சுதந்தரத்தை ஊக்குவிக்க மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைகளின் பெரிய முயற்சிகளை பெரும்பாலனவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த முயற்சிகள் நமது சொந்த ஆர்வங்களை மட்டும் ஊக்குவிக்காது ஆனால், அவருடைய திட்டத்தின்படி தேவனின் பிள்ளைகள் அனைவரும் தேர்ந்தெடுப்பின் சுதந்தரத்தை அனுபவிக்க உதவ நாடுகிறது.

இரண்டாவதாக, நாம் ஊழியம் செய்கிற மக்கள். கிறிஸ்தவ ஜனத்தொகைக்கு மத்தியிலும் அநேக நாடுகளுக்கு ஏன் நாம் ஊழியக்காரர்களை அனுப்புகிறோம் என சில நேரங்களில் நாம் கேட்கப்படுகிறோம். நமது சபை அங்கத்தினர்களல்லாதவர்களுக்கு அதிக மில்லியன் கணக்கில் டாலர்களை மனிதநேய உதவியாக ஏன் நாம் கொடுக்கிறோம், நமது ஊழியத்திற்கான முயற்சிகளுக்கு ஏன் இந்த நிதியை இணைக்கக்கூடாது என அதே கேள்வியை நாம் பெறுகிறோம். மனிதர்கள் அனைவரையும் தேவனின் பிள்ளைகளாகவும், நமது சகோதர சகோதரிகளாகவும் நாம் மதிப்பதாலும் நமது ஆவிக்குரிய, சரீரத்துக்குரிய மிகுதியை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள நாம் விரும்புவதாலும் இதை நாம் செய்கிறோம்,.

மூன்றாவதாக, அநித்திய வாழ்க்கை நமக்கு பரிசுத்தமானது. கருக்கலைப்பையும் கருணைக்கொலையையும் நாம் எதிர்க்கவேண்டுமென்பது, தேவனின் திட்டத்தில் நமது பொறுப்பு

நான்காவதாக, திருமணத்தைப்பற்றியும் பிள்ளைகளைப்பற்றியும் நமது சபையின் சில நிலைப்பாடுகளால் சிலர் சங்கடப்படுகிறார்கள். பாரம்பரிய திருமணத்திலிருந்து பின்வாங்க அல்லது மாற்றங்களுக்காகவும் குழப்புகிற அல்லது பாலினத்தை மாற்றுகிற அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வித்தியாசங்களில் மாற்றங்களைக் கொண்டுவர தற்போதைய சமூக அழுத்தங்களை எதிர்க்க, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய இரட்சிப்பின் திட்டம், விரும்புகிறது. தேவனுடைய மகத்தான திட்டத்தை நிறைவேற்ற உறவுகள், அடையாளங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்பாடுகள் அத்தியாவசியமானவை என நாம் அறிகிறோம்.

ஐந்தாவதாக, பிள்ளைகள் மீது நமக்கு ஒரு தனித்துவமான பார்வை இருக்கிறது. ஒரு மகிழ்ச்சியான பரிசுத்த கடமையான அதில் பங்கேற்க அந்த கொடுக்கப்பட்ட அதிகாரத்தை, தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக பிள்ளைகளை சுமக்கிறதையும் வளர்க்கிறதையும் நாம் பார்க்கிறோம். நமது பார்வையில் நமது பிள்ளைகளும் நமது சந்ததிகளும் பூமியிலும் பரலோகத்திலும் நமது இறுதியான பொக்கிஷங்கள். ஆகவே, பிள்ளைகளின், எல்லா பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும், சந்தோஷத்திற்கும் சிறந்த நிலைமைகளை அளிக்கிற கொள்கைகளுக்காவும் பழக்கங்களுக்காகவும் நாம் போதித்து போராடவேண்டும்.

இறுதியாக, ஆண்மையும் பெண்மையும், ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் திருமணம், பிள்ளைகளை சுமத்தலும் வளர்த்தலும் அவருடைய மகத்தான சந்தோஷத்தின் திட்டத்திற்கு அத்தியாவசியமானது என நமக்குப் போதித்த, பரலோக பிதாவுக்கு நாம் அன்பான பிள்ளைகள். இந்த அடிப்படைகளுக்கு நமது நிலைப்பாடு அடிக்கடி சபைக்கு எதிராக தூண்டப்படுகிறது. அதை தவிர்க்கமுடியாததாக நாம் கருதுகிறோம். எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதி, தேவனுடைய திட்டத்தில் எது முக்கியமாயிருந்தாலும் சாத்தானின் விடாமுயற்சியான எதிர்ப்பு நடத்தப்படுகிறது. தேவனுடைய பணியை அழிக்க அவன் நாடுகிறான். இரட்சகரையும் அவருடைய தெய்வீக அதிகாரத்தையும் இழிவுபடுத்துதல், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் விளைவுகளை அகற்றுதல், மனந்திரும்புதலை அதைரியப்படுத்துதல், வெளிப்படுத்தலை போலியாக்குதல், தனிப்பட்ட பொறுப்புடமையை மறுத்துப்பேசுதல் அவனுடைய பிரதான முறைகள். பாலினத்தை குழப்பவும், திருமணத்தை சிதைக்கவும், கர்ப்பமுண்டாகுதலை அதைரியப்படுத்தவும் (குறிப்பாக உண்மையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோரை) அவன் நாடுகிறான்.

IV.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் போதனைகளை பழக்கப்படுத்த நாம் முயற்சித்துக்கொண்டிருக்கும்போது நம்மை எதிர்கொள்கிற ஒழுங்குபடுத்தப்பட்ட, நிரந்தரமான எதிர்ப்பு இருப்பினும், கர்த்தரின் பணி முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறது. அந்த எதிர்ப்பின் கீழ் தடுமாடுகிறவர்களுக்கு மூன்று ஆலோசனைகளை நான் வழங்குகிறேன்.

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் ஈடிணையற்ற வல்லமையால் சாத்தியமாக்கப்பட்ட மனந்திரும்புதலின் கொள்கையை நினைவுகூருங்கள். “மாறாக, தங்களை மாற்றுவதைவிட சபையை மாற்றுவதற்கு முயற்சிக்கிறவர்கள் மத்தியில் இருக்காதீர்கள்” என மூப்பர் நீல் எ. மேக்ஸ்வெல் வலியுறுத்தினார். 6

மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் வலியுறுத்தியபடி:

“ கூடுதலான அறிவு வருகிறவரை ஏற்கனவே அறிந்தவற்றை கெட்டியாகப் பிடித்திருங்கள், பெலமாக நின்றிருங்கள். ...

இந்த சபையில் நமக்கு தெரியாதவற்றிற்கு நமக்கு தெரிந்தவை எப்போதுமே துருப்பாயிருக்கும்.”7

சுவிசேஷத்தின் முதல் கொள்கையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் வைத்திருங்கள்.

இறுதியாக, உதவியை நாடுங்கள். நமது சபைத் தலைவர்கள் உங்களை நேசிக்கிறார்கள், உங்களுக்குதவ ஆவிக்குரிய வழிநடத்துதலை நாடுகிறார்கள். LDS.org மூலமாகவும் வீட்டில் சுவிசேஷப் படிப்புக்காக பிற ஆதரவுகளையும் நீங்கள் காண்பதைப்போல நமக்கு அநேக ஆதாரங்களிருக்கின்றன. அன்பான உதவியைக் கொடுக்க அழைக்கப்பட்ட சகோதர சகோதரிகளும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

நமது சிருஷ்டிப்பின் நோக்கமான, அவருடைய பிள்ளைகள் சந்தோஷமிருக்க, நமக்கன்பான பரலோக பிதா விரும்புகிறார். நமது தீர்க்கதரிசி ரசல் எம். நெல்சன் அடிக்கடி அழைக்கிற “உடன்படிக்கையின் பாதையின்” வழியே முன்னேறிச் செல்லுதலால் நாம் பெறமுடிகிற நித்திய ஜீவன் தேவனுடைய பிள்ளைகளின் அந்த மகிழ்ச்சியான இலக்கு. சபையின் தலைவராக அவருடைய முதல் செய்தியில் அவர் சொன்னது இங்கே, “உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருங்கள். அவரோடு உடன்படிக்கை செய்வதில் இரட்சகரைப் பின்பற்ற உங்களின் அர்ப்பணிப்பு, பின்னர் அந்த உடன்படிக்கைகளை கைக்கொள்ளுதல், எங்கிலுமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் கிடைக்கிற ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கும் சிலாக்கியத்திற்கும் கதவைத் திறக்கும்.” 8

நான் சொன்ன காரியங்கள் உண்மையானவை என்றும், நமது நித்திய பிதாவாகிய தேவனின் மகத்தான திட்டத்தின் கீழ் அனைத்தையும் சாத்தியமாக்குகிற இயேசு கிறிஸ்துவின் போதனைகளாலும் பாவநிவர்த்தியாலும் அவை சாத்தியமாக்கப்படுகிறது என்றும் நான் பயபக்தியாக சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. Henry B. Eyring, To Draw Closer to God: A Collection of Discourses (1997), 143.

  2. James E. Faust, “The Abundant Life,” Ensign, Nov. 1985, 9.

  3. “I Will Follow God’s Plan,” Children’s Songbook, 164–65.

  4. The Family: A Proclamation to the World,” Liahona, May 2017, 145.

  5. The Family: A Proclamation to the World,” 145.

  6. Neal A. Maxwell, If Thou Endure It Well (1996), 101.

  7. Jeffrey R. Holland, “Lord, I Believe,” Liahona, May 2013, 94; emphasis in original.

  8. Russell M. Nelson, “As We Go Forward Together,” Liahona, Apr. 2018, 7.