2010–2019
நம்புங்கள், நேசியுங்கள், செய்யுங்கள்
அக்டோபர் 2018


நம்புங்கள், நேசியுங்கள், செய்யுங்கள்.

அவரது வழிகளைப் பின்பற்றியும், அவரது பணியில் ஈடுபட்டும்—இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாகி, நாம் ஒரு தாராளமான வாழ்க்கை வாழ்கிறோம்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, உணர்த்தப்பட்ட செய்திகளைக் கேட்கவும், நமது குமாரத்திகளும் குமாரர்களுமான, உலகம் முழுவதிலுமுள்ள அநேக ஆயிரக்கணக்கான ஊழியக்காரர்களின் பிரதிநிதிகளாக ஊழியக்காரர்களின் அற்புதமான, வியப்பூட்டும் இசைக்குழு பாடக் கேட்கவும், நமது அன்பு தலைவரும் தீர்க்கதரிசியுமான தலைவர் ரசல் எம். நெல்சன், பிரதான தலைமை, மற்றும் சபையின் பொது அலுவலர்களை மீண்டும் ஆதரிக்கவும், விசேஷமாக இன்று நமது விசுவாசத்தில் ஒன்றிணைந்து, அற்புதமான பொது மாநாட்டின் இன்றைய கூட்டத்தில் உங்களோடிருப்பது அற்புதமான சந்தர்ப்பம். உங்களோடு இன்று இருப்பதால் எவ்வளவு சந்தோஷமான நாள்.

சரித்திரத்தில் மிகவும் வெளியரங்கமாக வெற்றிபெற்ற மனுஷர்களில் ஒருவர் பூர்வ கால சாலமோன் இராஜா. 1 அவர் எல்லாவற்றையும் வைத்திருந்ததாக தோன்றுகிறது. பணம், ஆற்றல், மரியாதை, புகழ், ஆனால் பல ஆண்டுகளாக சுகபோகம், மற்றும் ஆடம்பரத்துக்குப் பிறகு சாலமோன் இராஜா எப்படி தன் வாழ்க்கையை மதிப்பீடு செய்தான்?

“எல்லாம் மாயை,” 2 அவன் சொன்னான்.

எல்லாம் பெற்றிருந்த இந்த மனுஷன், அவனிடமிருந்த எல்லாம் அவனுக்கு சாதகமாக இருந்தாலும், உற்சாகமிழந்து, சந்தேகத்துடன், மகிழ்ச்சியின்றி மரித்தான். 3

ஜெர்மனில் ஒரு வார்த்தை உண்டு வெல்ச்மெர்ச். சாதாரணமாக வர்ணித்தால், நாம் அது எப்படி இருக்கவேண்டும் என எண்ணுகிறோமா அதைவிட மட்டமாக இருப்பதைப்பற்றிய கவலையிலிருந்து வருகிற துக்கம் ஆகும்.

ஒருவேளை நம் அனைவரிடத்திலும் சிறு வெல்ச்மெர்ச் இருக்கிறது.

நமது வாழ்க்கையின் மூலைகளில் அமைதியாக துக்கம் ஊர்ந்து வரும்போதும். நமது நாளில் சோகம் நிறையும்போதும், நமது இரவுகளின் மீது அடர்ந்த நிழல்களை விழவைக்கும்போதும். நம்மைச் சுற்றியுள்ள உலகில் நாம் நேசிக்கிறவர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்க்கையில் துக்கமும் அநீதியும் நுழையும்போதும். நமது தனிப்பட்ட தனிமையான துரதிர்ஷ்டமான பயணத்தில், வேதனை நமது அமைதியை இருளாக்கும்போதும், நமது சமாதானத்தை உடைக்கும்போதும், வாழ்க்கை வீணானது மற்றும் அர்த்தமற்றது என சாலமோனோடு சம்மதிக்க நாம் தூண்டப்படலாம்.

மாபெரும் நம்பிக்கை

நற்செய்தி என்னவெனில் நம்பிக்கை இருக்கிறது. வெறுமைக்கும், மாயைக்கும், வாழ்க்கையின் வெல்ச்மெர்சுக்கும் தீர்வு உண்டு. நீங்கள் உணரக்கூடிய ஆழமான நம்பிக்கையின்மை, அதைரியத்துக்கும் தீர்வு உண்டு.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மாற்றும் வல்லமையிலும், நமது ஆத்தும வியாதிகளை குணமாக்கும் இரட்சகரின் மீட்கும் வல்லமையிலும் அது காணப்படுகிறது.

இயேசு அறிவித்தார், “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” 4

நமது சொந்த தேவைகளில் அல்லது நமது சொந்த சாதனைகளில் கவனம் செலுத்தி நாம் தாராளமான வாழ்க்கை பெறுவதில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாகி, அவரது வழிகளைப் பின்பற்றியும் அவரது பணியில் ஈடுபட்டும்தான். நம்மை மறந்தும் கிறிஸ்துவின் மாபெரும் நோக்கத்தில் ஈடுபட்டும் நாம் தாராளமான வாழ்க்கையை காண்கிறோம்.

கிறிஸ்துவின் நோக்கம் என்ன? அவரை நம்புவதும், அவர் நேசித்ததுபோல் நேசிப்பதுவும் அவர் செய்தது போல் செய்வதும் ஆகும்.

இயேசு “நன்மை செய்பவராய் சுற்றித் திரிந்தார்.” 5 தரித்திரர், தள்ளப்பட்டோர், பிணியாணிகள், வெட்கப்படுத்தப்பட்டோர் மத்தியிலே நடந்தார். வல்லமையற்றோருக்கும், பெலவீனருக்கும், நண்பர்களற்றவர்களுக்கும் அவர் ஊழியம் செய்தார். அவர்களோடு நேரம் செலவளித்தார், அவர்களோடு பேசினார். “அவர்கள் எல்லோரையும் குணமாக்கினார்.” 6

அவர் சென்ற இடமெல்லாம், இரட்சகர் சுவிசேஷத்தின் “நற்செய்தியை” 7 போதித்தார். ஆவிக்குரிய விதமாகவும் உலகப்பிரகாரமாகவும் ஜனங்களை சுதந்தரமாக்கிய நித்திய சத்தியங்களை போதித்தார்.

கிறிஸ்துவின் நோக்கத்துக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்த சத்தியத்தை கண்டு பிடிக்கிறார்கள்: “என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டுபிடிப்பான்.” 8

சாலமோன் சொன்னது தவறு, என் அருமை சகோதர சகோதரிகளே—வாழ்க்கை “மாயை” அல்ல. மாறாக அது நோக்கமும், அர்த்தமும், சமாதானமும் நிறைந்ததாக இருக்க முடியும்.

இயேசு கிறிஸ்துவின் குணமாக்கும் கரங்கள் அவரைத் தேடுபவர்கள் அனைவரிடமும் செல்கிறது. தேவனை நம்புவதும் நேசிப்பதும் கிறிஸ்துவைப் பின்பற்ற முயல்வதும் நமது இருதயங்களை மாற்றி, 9 நமது வேதனையை மென்மையாக்கி, நமது ஆத்துமாக்களை “மிகப்பெரும் சந்தோஷத்தால்” நிரப்ப முடியும் என நான் அறிந்திருக்கிறேன். 10

நம்புங்கள், நேசியுங்கள், செய்யுங்கள்

கண்டிப்பாக, நமது வாழ்க்கையில் இது குணமாக்கும் வல்லமையைக் கொண்டிருப்பதால் சுவிசேஷம் குறித்த புத்திசாலித்தனமான புரிதல் மட்டும் பெறுவதைவிடவும், நாம் அதிகம் செய்ய வேண்டும்.

சீஷத்துவம் மூன்று எளிய வார்த்தைகளுடன் தொடங்குகிறது என நான் ஆலோசனையளிக்கிறேன்:

நம்புங்கள், நேசியுங்கள்,செய்யுங்கள்.

தேவனை நேசித்தல், அவரில் விசுவாசத்துக்கும் அவரது வார்த்தைகளில் நம்பிக்கைக்கும் வழிநடத்துகிறது. விசுவாசம் தேவன் மற்றும் பிறர் மீது நமது இருதயங்களை அன்பில் வளரச்செய்கிறது. அன்பு வளரும்போது நாம் இரட்சகரைப் பின்பற்ற உணர்த்தப்பட்டு, சீஷத்துவத்தின் பாதையில் நமது பெரும் பயணத்தைத் தொடர்கிறோம்.

“ஆனால் மிக எளிதாகத் தோன்றுகிறது” என நீங்கள் சொல்கிறீர்கள். வாழ்க்கையின் பிரச்சினைகளும்—நிச்சயமாக என் பிரச்சினைகளும்—இப்படிப்பட்ட எளிய தீர்வை விட மிகவும் குழப்பமானவை. நம்புங்கள், நேசியுங்கள், செய்யுங்கள், என்ற மூன்று எளிய வார்த்தைகளால் வெல்சமெர்ச்- ஐ நீங்கள் குணப்படுத்த முடியாது.

குணப்படுத்துவது பழமொழி அல்ல. தேவனின் அன்பே, மீட்டு, சீராக்கி, புதுப்பிக்கிறது.

தேவன் உங்களை அறிகிறார். நீங்கள் அவரது பிள்ளை. அவர் உங்களை நேசிக்கிறார்.

வேறுவிதமாக நீங்கள் உணர்ந்தாலும், அல்லது நேசிக்கத் தகுந்தவரல்ல என நினைத்தாலும் அவர் உங்களிடம் வருகிறார்.

இன்றே, தினமும், உங்களைக் குணமாக்க வாஞ்சித்து அவர் உங்களிடம் வந்து, உங்களைக் குணப்படுத்த வாஞ்சித்து, உங்களை உயர்த்தி, உங்கள் இருதயத்திலுள்ள வெற்றிடத்தை நீடித்த சந்தோஷத்தால் மாற்றவுமே. உங்கள் வாழ்க்கையை மூடுகிற இருளைத் துடைத்துவிட்டு, உங்கள் ஆத்துமாவை பரிசுத்தமான, பிரகாசமான அவரது முடிவற்ற மகிமையின் ஒளியால் நிரப்ப அவர் வாஞ்சிக்கிறார்.

இதை நானே அனுபவித்திருக்கிறேன்.

தேவனிடத்தில் வருகிற அனைவரும் உண்மையாகவே நம்பி, நேசித்து,செய்பவர்கள் அனைவரும் அதை அனுபவிக்க முடியும் என கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இது எனது சாட்சியாகும்.

நாம் நம்புகிறோம்

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனெனில் தேவனிடத்தில் சேருகிறவன் அவரை உண்டென்கிறான்” என வேதங்கள் நமக்குப் போதிக்கின்றன. 11

சிலருக்கு நம்பும் செயல் கடினம். வழியில் சில சமயங்களில் நமது பெருமை வருகிறது. ஒருவேளை நாம் புத்திசாலிகளாயும், படித்தும், அல்லது அனுபவத்துடனும் இருப்பதால் நாம் தேவனை நம்ப முடியாது என நாம் நினைக்கலாம். நாம் மதத்தை முட்டாள்தனமான பாரம்பரியம் என நினைக்கத் தொடங்குகிறோம். 12

என் அனுபவத்தில், நாம் பார்க்கவும், பாராட்டவும், அதுபற்றி கலந்துரையாடவும், கற்பனை செய்யவும் கவர்ச்சியான ஓவியம் அல்ல நம்பிக்கை. நாம் வயல்களில் ஓட்டி, நமது நெற்றியின் வியர்வையால், பூமியில் பிளவுகளை ஏற்படுத்தி, அது விதைகளை ஏற்றுக்கொண்டு கனிதரச் செய்யக்கூடிய நிலைத்திருக்கக்கூடிய கலப்பையாகும். 13

தேவனிடம் வாருங்கள், அவர் உங்களிடம் வருவார். 14 நம்ப விரும்புபவர்கள் அனைவருக்கும் இதுவே வாக்குத்தத்தம்.

நாம் நேசிக்கிறோம்

நாம் தேவனையும் அவரது பிள்ளைகளையும் அதிகம் நேசிக்கும்போது, நாம் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. 15 இயேசு பேசிய அன்பு, ஒரு பரிசு அட்டையோ, சாதாரணமானதோ, நேசிக்கிற மற்றவற்றுக்கு மாறுவதோ அல்ல. பேசப்பட்டு மறக்கப்படுவது அல்ல அன்பு. என்னால் செய்யக்கூடியது எதாவது இருந்தால் தெரியப்படுத்து என்கிற விதமானது அல்ல அன்பு.

தேவன் பேசுகிற விதமான அன்பு, காலையில் நாம் எழும்போது நமது இருதயங்களுக்குள் நுழைந்து, நாள் முழுவதும் நம்முடன் தங்கி, மாலை முடிவடையும்போது, நமது நன்றியுணர்வின் ஜெபங்களுக்கு நாம் குரல் கொடுக்கும்போது, நமது இருதயங்களை விரிவடையச் செய்கிறது.

இது பரலோக பிதா நம்மீது வைத்துள்ள தெரிவிக்க முடியாத அன்பு.

அவர்கள் யார் என பிறரை அதிக தெளிவாகப் பார்க்க நம்மை அனுமதிக்கிற முடிவற்ற மனதுருக்கம். பரிசுத்தமான அன்பின் உருப்பெருக்கியால், எல்லையற்ற திறமைகளுடைய அழியாதவர்கள் மற்றும் சர்வ வல்ல தேவனின் தகுதியான நேச குமாரர்கள் மற்றும் குமாரத்திகள்.

அந்த உருப்பெருக்கி வழியே பார்த்தால், குறைத்தோ, மதிக்காமலோ, அல்லது யாரையும் பிரித்தோ பார்க்க முடியாது.

நாம் செய்கிறோம்

இரட்சகரின் பணியில், “எப்போதும் சிறிய மற்றும் எளிய வழிகளில் பெரிய காரியங்கள் நடப்பிக்கப்படுகின்றன.” 16

எதிலும் நன்மையானதாக திரும்பத் திரும்ப பயிற்சி தேவைப்படுகிறது, என நாம் அறிவோம். சாக்ஸபோன் வாசிப்பதானாலும், வலைக்குள் பந்தை அடிப்பதானாலும், காரை சீர் செய்வதானாலும், ஒரு விமானத்தை பறக்க விடுவதானாலும் கூட, பயிற்சியால் மட்டுமே நாம் சிறப்பாக ஆக முடியும். 17

பூமியில் இரட்சகர் சிருஷ்டித்த அமைப்பு, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, அதையே செய்ய நமக்கு உதவுகிறது. அது அவர் போதித்த விதமாக வாழவும், அவர்போல பிறரை ஆசீர்வதிக்கவும் பயிற்சி கொடுக்கிற இடமாகும்.

சபையாராக, மனதுருக்கத்தோடும், பிறருக்கு சேவை செய்தும் அவர்களிடம் செல்ல அழைப்புக்களும் அல்லது பொறுப்புக்களும், சந்தர்ப்பங்களும் ஊழியம் செய்ய நாம் கொடுக்கப்பட்டுள்ளோம்.

அண்மையில் சபை பிறருக்கு ஊழியம் செய்வது அல்லது சேவை செய்வதைப்பற்றி புதுப்பிக்கப்பட்ட அழுத்தம் கொடுத்திருக்கிறது. இச்சிறப்பான அழுத்தத்தை நாம் எப்படி அழைக்க வேண்டுமென தீர்மானிக்க பெரிதும் சிந்திக்கப்பட்டது.

கருத்தில் கொள்ளப்பட்ட பெயர்களில் ஒன்று, “என் ஆடுகளை மேய்ப்பாயாக” 18 என்ற கிறிஸ்துவின் அழைப்புக்கு பொருத்தமான குறிப்பு மேய்த்தல் ஆகும். எனினும் குறைந்த பட்சம் சிக்கலான ஒன்று அதில் இருந்தது, அந்த சொல்லை உபயோகித்தல் என்னை ஜெர்மன் ஷெப்பர்ட் ஆக நினைக்கத் தோன்றும். ஆகவே, ஊழியம் செய்தல் என்ற வார்த்தை எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது.

இப்பணி ஒவ்வொருவருக்குமானது

கண்டிப்பாக இந்த அழுத்தம் புதிதல்ல. சபையின் நோக்கத்தை அமுல்படுத்தவும் செயல்படுத்தவும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட வழியாகிய “ஒருவரையொருவர் நேசிக்க” 19 இரட்சகரின் கட்டளையை பயிற்சி செய்ய நமக்கு புதுப்பிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அது வழங்குகிறது.

இதைப்பற்றி சிந்தியுங்கள்! தைரியமான, தாழ்மையான, தன்னம்பிக்கையுள்ள சுவிசேஷப் பகிர்தல், அவர்கள் யாராயிருந்தாலும் பிறரின் ஆவிக்குரிய தேவைகளுக்கு ஊழியம் செய்வதன் அற்புதமான உதாரணம்.

அல்லது ஆலயப்பணி செய்தல், நமது மூதாதையர்களின் பெயர்களைத் தேடி, நித்தியத்துக்கும் ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கொடுத்தல். என்ன ஒரு தெய்வீக விதமான ஊழியம்.

தொங்குகிற கரங்களை உயர்த்தி அல்லது பிணியாளிகளையும் வேதனைப்படுபவர்களையும் ஆசீர்வதித்து, வறியோர் மற்றும் தேவையிலிருப்போரைத் தேடும் செயலைக் கருத்தில் கொள்ளவும். அவர் பூமியில் நடந்தபோது, கர்த்தர் செய்த தூய ஊழியச் செயல்கள் அவை இல்லையா?

நீங்கள் சபையாராக இல்லாவிடில், நீங்கள் வந்து எங்களோடு சேர உங்களை நான் அழைக்கிறேன், “வந்து பாருங்கள்.” 20 நீங்கள் சபையாராக இருந்து இப்போது உற்சாகமாக பங்கேற்கவில்லையானால், நான் உங்களை அழைக்கிறேன், தயவுசெய்து திரும்ப வாருங்கள். நீங்கள் எங்களுக்குத் தேவை!

வாருங்கள், எங்களோடு உங்கள் பெலத்தை சேருங்கள்.

உங்களது தனித்துவமான தாலந்துகள், திறமைகள் மற்றும் ஆளுமை நிமித்தம் நாங்கள் சிறந்தவர்களாகவும் அதிக மகிழ்ச்சியானவர்களாகவும் ஆக எங்களுக்கு உதவுவீர்கள். மாற்றாக நீங்களும் சிறப்பானவர்களாகவும் மகிழ்ச்சியானவர்களாகவும் ஆக நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

வாருங்கள், தேவனுடைய எல்லா பிள்ளைகளிடமும் குணமாக்கும், தயவுகாட்டும், இரக்கமுள்ள கலாச்சாரத்தை கட்டவும் பெலப்படுத்தவும் எங்களுக்கு உதவுங்கள். ஏனெனில் “பழையவை ஒழிந்து போயின, எல்லாம் புதிதாகிற” 21 புதிய சிருஷ்டிகளாக நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். முன்னேயும் மேல்நோக்கியும் நகர தேவன் நமக்கு வழிகாட்டுதல் கொடுக்கிறார். அவர் சொல்கிறார், “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.” 22 நாம் ஆக வேண்டுமென தேவன் எண்ணிய விதமான ஜனங்களாக நாமனைவரும் சேர்ந்து உழைப்போமாக.

இயேசு கிறிஸ்துவின் சபை முழுவதிலும் இவ்விதமான சுவிசேஷ கலாச்சாரத்தை விருத்திசெய்ய நாங்கள் விரும்புகிறோம். நாம் ஒருவரையொருவர் மன்னிக்கிற இடமாக சபையைப் பெலப்படுத்த நாம் நாடுகிறோம். குற்றம் காணவும், புறங்கூறவும், பிறரைச் சிறுமைப் படுத்தவும் ஏற்படுகிற சோதனைகளை எதிர்க்கிற இடம். இங்கு தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக நம்மால் முடிந்தவரை சிறந்தவர்களாக நாம் ஒருவரையொருவர் உயர்த்துகிறோம்.

நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன். வந்து பாருங்கள். எங்களோடு சேருங்கள். எங்களுக்கு நீங்கள் தேவை.

பரிபூரணமற்ற ஜனம்

இந்த உலகம் கொடுக்கக்கூடிய மிக அருமையான ஜனங்களால் இச்சபை நிறைந்திருப்பதை நீங்கள் காணலாம். அவர்கள் வரவேற்பவர்கள், அன்பானவர்கள், தயவுள்ளவர்கள், உண்மையுள்ளவர்கள். அவர்கள் கடினமாக உழைக்கிற, தியாகம் செய்ய சித்தமாயிருக்கிற, சில சமயங்களில் வீரர்களாகவுமிருக்கிறார்கள்.

அவர்களும் வேதனைதரும்படிக்கு, பரிபூரணமற்றுமிருக்கிறார்கள்.

அவர்கள் தவறு செய்கிறார்கள்.

அவ்வப்போது அவர்கள் சொல்லக்கூடாதவற்றை சொல்கிறார்கள். அவர்கள் செய்ய விரும்பாத செயல்களைச் செய்கிறார்கள்.

ஆனால் பொதுவாக இப்படியிருக்கிறார்கள், முன்னேறவும் கர்த்தராகிய நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நெருக்கமாக வரவும் விரும்புகிறார்கள்.

அதைச் சரிசெய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நேசிக்கிறார்கள். அவர்கள் செய்கிறார்கள்.

சுயநலம் குறைவானவர்களாகவும், அதிக மனதுருக்கமுள்ளவர்களாகவும், அதிகம் சுத்திகரிக்கப்பட்டவர்களாகவும், அதிகமாக இயேசுவைப்போலிருக்கவும் ஆக விரும்புகிறார்கள்.

மகிழ்ச்சிக்கான வரைவுத்திட்டம்

ஆமாம், வாழ்க்கை சில சமயங்களில் கடினமானதாக இருக்கலாம். நிச்சயமாக நம் அனைவருக்கும் விரக்தியும் அதைரியமும் வரும் நேரங்கள் உண்டு.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நம்பிக்கையளிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சபையில் நாம் சௌகர்யமாக உணரக்கூடிய, நாம் ஒன்றாக நம்பக்கூடிய, நேசிக்கக்கூடிய,செய்யக்கூடிய வளர்கிற இடத்தில் இடம் பிடிக்க பிறருடன் நாம் சேர்கிறோம்.

நமது வித்தியாசங்கள் பொருட்டின்றி, நமது அன்பான பரலோ பிதாவின் குமாரர்களும் குமாரத்திகளுமாக ஒருவரையொருவர் அரவணைத்துக்கொள்வதை நாடுகிறோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் அங்கத்தினராயிருக்கவும், இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் அர்த்தத்துக்கும் வரைபடம் கொடுக்குமளவுக்கு தேவன் தன் பிள்ளைகளை நேசிக்கிறார் என அறியவும், வரவிருக்கிற வாழ்க்கையில் மகிமையின் மாளிகைகளில் நித்திய மகிழ்ச்சியின் அனுபவத்தின் வழிக்காகவும் அளவிட முடியாத நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஆத்தும பிணியையும் வாழ்வின் வெல்ச்மெர்சையும் குணப்படுத்த ஒரு வழியை தேவன் கொடுத்திருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நாம் தேவனை நம்பி, அவரை நேசித்து அவரது பிள்ளைகளையும் நமது முழு இருதயத்தோடு நேசிக்கும்போதும், தேவன் நமக்கு அறிவுறுத்தியபடி தேவன் செய்ததுபோல செய்ய, முயற்சி செய்யும்போதும், நாம் குணமாக்கலும் சமாதானமும், மகிழ்ச்சியும், அர்த்தமும் காண்போம் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, ஆமென்.