2010–2019
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக் கொள்ளுதல்
அக்டோபர் 2018


இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக் கொள்ளுதல்

அவர் பார்க்கிற விதமாக பார்த்து, அவர் சேவை செய்கிற விதமாக சேவை செய்து, அவரது கிருபை போதுமென நம்பி—இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம் மீது நாம் விசுவாசத்துடன் தரித்துக்கொள்வோமாக.

அண்மையில் சபையை அதன் வெளிப்படுத்தப்பட்ட பெயரில் அழைக்க தலைவர் ரசல் எம். நெல்சனின் கட்டளை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். சபையின் பெயர் பற்றி நேபியர்களுக்கு இரட்சகர் அறிவுறுத்தியதற்குத் திருப்பினேன். 1 நான் இரட்சகரின் வார்த்தைகளை வாசித்தபோது, “கிறிஸ்துவின் நாமத்தை உங்கள் மீது தரித்துக்கொள்ள வேண்டும்,” என ஜனங்களிடம் அவர் சொன்னது பற்றி அதிர்ச்சியடைந்தேன். 2 இது என்னை நானே பார்த்து கேட்க வைத்தது, “நான் செய்யும்படி அவர் சொன்னவிதமாக நான் இரட்சகரின் நாமத்தை என்மீது தரித்திருக்கிறேனா” 3 இன்று என் கேள்விக்கு பதிலாக நான் பெற்ற சில உணர்ச்சிகளைப் பகிர விரும்புகிறேன்.

முதலாவது, கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்வது என்றால், தேவன் பார்ப்பது போல பார்க்க, நாம் விசுவாசத்தோடு பார்க்க முயல்வது.4 தேவன் எப்படிப் பார்க்கிறார். ஜோசப் ஸ்மித் சொன்னார், “மனுக்குலத்தின் ஒரு பகுதி அடுத்ததை இரக்கமின்றி நியாயந்தீர்த்து கண்டிக்கும்போது, பிரபஞ்சத்தின் மாபெரும் பெற்றோர் மனுக்குடும்பம் முழுவதையும் தகப்பன் போன்ற அக்கறையுடனும், தகப்பனுக்குரிய கவனிப்புடனும் பார்க்கிறார்,” ஏனெனில் “அவரது அன்பு ஆழம் காண முடியாதது.” 5

சில ஆண்டுகளுக்கு முன் என் மூத்த சகோதரி மரித்தார். அவருக்கு சவால் நிறைந்த வாழ்க்கை இருந்தது. அவர் சுவிசேஷத்தோடு போராடிக் கொண்டிருந்தார், ஒருபோதும் ஆர்வமாக இல்லை. அவரது கணவன் திருமணத்தை முறித்து, நான்கு இளம்பிள்ளைகளை வளர்க்க விட்டுவிட்டு அவரைப் பிரிந்தார். அவர் மரித்த மாலை, அவரது நான்கு பிள்ளைகளும் அந்த அறையில் இருக்கும்போது, சமாதானமாக வீடு திரும்ப அவருக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தேன். அந்த நேரத்தில் நான் என் சகோதரியின் வாழ்க்கையை அவருடைய பாடுகள் மற்றும் ஆர்வமின்மை அடிப்படையில் மட்டுமே அடிக்கடி அளவிட்டேன் என உணர்ந்தேன். அந்த மாலைப்பொழுதில் அவரது தலை மீது என் கையை வைத்தபோது, ஆவியிடமிருந்து ஒரு பெரிய கடிந்து கொள்ளுதலை பெற்றேன். நான் சரியாக அவரது நற்குணத்தை அறிய செய்யப்பட்டேன், அவரை தேவன் பார்த்த விதமாக பார்க்க அனுமதிக்கப்பட்டேன். சுவிசேஷத்தோடும் வாழ்க்கையோடும் போராடியவராக அல்ல, எனக்கில்லாத கஷ்டமான பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய ஒருவராக. பெரிய தடைகள் இருந்தாலும் நான்கு அழகிய அற்புதமான பிள்ளைகளை வளர்த்த மகத்துவமுள்ள தாயாக நான் பார்த்தேன். எங்கள் அப்பா மரித்த பின் எங்கள் அம்மாவுக்கு ஒரு சிநேகிதியாக கண்காணிக்கவும் தோழியாகவும் நேரம் செலவிட்ட சிநேகிதியாக பார்த்தேன்.

என் சகோதரியுடன் கடைசி மாலையில், “உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தர்கள் என நீ பார்க்க முடியாதா?” என தேவன் என்னை கேட்டதாக நான் நம்புகிறேன்.

ப்ரிகாம் யங் போதித்தார்:

“அவர்கள் இருக்கிற விதமாக புரிந்து கொள்ளவும், நீங்கள் இருக்கிற விதமாக புரிந்துகொள்ளாதிருக்கவும் நான் பரிசுத்தவான்களை வலியுறுத்துகிறேன்.” 6

“எவ்வளவு அடிக்கடி இப்படி சொல்லப்பட்டிருக்கிறது—‘அந்த நபர் தவறு செய்திருக்கிறார், அவர் பரிசுத்தவானாக இருக்கமுடியாது’. ... சிலர் சத்தியம் செய்கிறார்கள் பொய் சொல்லுகிறார்கள்... அல்லது ஓய்வுநாளை மீறுகிறார்கள். ... அப்படிப்பட்டவர்களைத் தீர்க்காதீர்கள், ஏனெனில் அவர்கள் பற்றிய கர்த்தரின் திட்டம் உங்களுக்குத் தெரியாது... மாறாக அவர்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.” 7

உங்ளையும் உங்கள் பாரங்களையும் இரட்சகர் கவனிக்காமல் செல்ல அனுமதிப்பார் என யாராவது நினைக்கிறீர்களா? இரட்சகர் சமாரியனையும், விபச்சாரியையும், ஆயக்காரனையும், குஷ்டரோகியையும், மன வியாதியுடையவனையும் பாவியையும் அதே கண்ணோடுதான் பார்த்தார். அனைவரும் அவரது பிதாவின் பிள்ளைகள். அனைவரும் மீட்கப்படத்தக்கவர்கள்.

தேவ இராஜ்யத்தில் அவரது இடம், அல்லது எந்த விதத்திலாவது உபத்திரவப்பட்ட ஒருவர் திரும்பிச் செல்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 8 என்னால் முடியாது. கிறிஸ்துவின் கண்களில் ஒவ்வொரு ஆத்துமாவும் எல்லையற்ற தகுதியுடையது. தோற்பதற்கு ஒருவரும் முன்னியமிக்கப்படவில்லை. நித்திய ஜீவன் அனைவருக்கும் சாத்தியமானது. 9

என் சகோதரியின் படுக்கையருகில் கடிந்துகொள்ளப்பட்டதிலிருந்து நான் ஒரு பெரிய பாடம் கற்றேன். அவர் பார்ப்பது போல நாம் பார்க்கும்போது, நம்முடையது இரட்டை வெற்றியாக இருக்கும்—நாம் தொடுகிறவர்களின் மீட்பு மற்றும் நமது மீட்பு.

இரண்டாவதாக கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள நாம் தேவன் பார்க்கிற விதமாக மட்டும் பார்க்காமல், அவர் செய்ததுபோல அவரது பணியையும் செய்ய வேண்டும். நாம் இருபெரும் கட்டளைகள்படி வாழ்ந்து, தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து, இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்த்து, நமது ஒளி “மனுஷருக்கு முன்பாக பிரகாசிக்கச்” செய்ய வேண்டும். 10 நாம் அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் உடன்படிக்கைகளை பெற்று, பின்பற்றுகிறோம். 11 நாம் இதைச் செய்யும்போது, நம்மையும் நமது குடும்பங்களையும், பிறரின் வாழ்க்கையையும் ஆசீர்வதிக்கும் வல்லமையுடன் தேவன் நம்மை தரிப்பிக்கிறரார். 12 உங்களையே கேளுங்கள், “தங்கள் வாழ்க்கையில் பரலோக வல்லமைகள் தேவைப்படாத யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?”

நாம் நம்மை பரிசுத்தப்படுத்தும்போது, தேவன் நம்மிடையே அற்புதங்கள் செய்வார். 13 நமது இருதயங்களை சுத்திகரித்து நாம் நம்மை பரிசுத்தப்படுத்துகிறோம். 14 அவர் சொல்வதைக் கேட்கும்போது15 இருதயங்கள் நமது பாவங்களுக்காக மனந்திரும்பி16 மனமாற்றமடைந்து, 17 அவர் நேசித்ததுபோல நேசிக்கும்போது18 நாம் நம்மை சுத்திகரிக்கிறோம்.13 இரட்சகர் நம்மிடம் கேட்டார், “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன?” 19

நான் அண்மையில் மூப்பர் ஜேம்ஸ் ஈ. டால்மேஜ் வாழ்க்கையில் ஒரு அநுபவத்தை பற்றி அறிந்தேன், அது என்னை சுற்றியிருப்பவர்களை நேசித்து சேவைசெய்ய வேண்டும் என நான் யோசிக்கவும் கருத்தில் கொள்ளவும் வைத்தது. ஒரு இளம் பேராசிரியராக அவர் அப்போஸ்தலராவதற்கு முன்பு 1892ல் பயங்கரமான தொண்டை அடைப்பான் நோய் உச்சகட்டத்திலிருந்தபோது, அந்நோயால் பாதிக்கப்பட்ட, அவருக்கு அருகில் வாழ்ந்த, சபையாரல்லாத அறிமுகமில்லாத குடும்பத்தைக் கண்டு பிடித்தார். அந்த தொற்று நோய் தாக்கிய வீட்டுக்குள் போய் சிக்கலில் மாட்ட ஒருவரும் விரும்பவில்லை. மூப்பர் டால்மேஜ் இருப்பினும் அந்த வீட்டை நோக்கி சென்றார். நான்கு பிள்ளைகளைக் கண்டார், மரித்த இரண்டரை வயது பிள்ளை தரையில், ஐந்து வயது மற்றும் பத்து வயதுப் பிள்ளைகள் அதிக வலியுடன், பதிமூன்று வயது பிள்ளை பெலவீனமுற்று. பெற்றோர் துயரத்திலும் சோர்விலும் கஷ்டப்பட்டனர்.

மூப்பர் டால்மேஜ் மரித்த, மற்றும் உயிரோடிருக்கும் பிள்ளைகளுக்கும் உடையுடுத்தி, அறைகளைப் பெருக்கி, அழுக்கடைந்த துணிகளை வெளியே கொண்டுபோய் நோய் தொற்றிய அழுக்கான துணிகளை எரித்தார். அவர் நாள்முழுதும் வேலை செய்து அடுத்த நாளும் திரும்ப வந்தார். பத்து வயது பிள்ளை இரவில் மரித்தது. அவர் ஐந்து வயது பிள்ளையை தூக்கினார். அது அவரது முகத்திலும் ஆடைகளிலும் இரத்தம் கலந்த சளியை தெரித்தது. அவர் எழுதினார், “அவளை கையிலிருந்து கீழே வைக்க முடியவில்லை.” அவரது கரங்களிலே அவள் மரிக்கும்வரை அவர் வைத்திருந்தார். அவர் மூன்று பிள்ளைகளையும் புதைக்க உதவி செய்து, துக்கிக்கும் குடும்பத்துக்கு உணவும் உடைகளும் ஏற்பாடு செய்தார். வீட்டுக்குத் திரும்பி வந்த சகோதரர் டால்மேஜ் தனது துணிகளைக் களைந்து, துத்தநாக கரைசலில் குளித்து, குடும்பத்திலிருந்து ஒதுங்கியிருந்தார், அந்த நோயால் சிறிது தாக்கப்பட்டார். 20

நம்மைச் சுற்றிலும் அநேக உயிர்கள் இக்கட்டிலிருக்கின்றன. அவர்கள் எங்கு எப்படி இருந்தாலும், பரிசுத்தர்களாகி எல்லோருக்கும் ஊழியம் செய்து பரிசுத்தவான்கள் இரட்சகரின் நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்கிறார்கள்—நாம் அப்படிச் செய்வதால் உயிர்கள் காக்கப்படுகின்றன. 21

இறுதியாக அவரது நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ள நாம் அவரை நம்ப வேண்டும். ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் சென்ற ஒரு கூட்டத்தில் ஒரு இளம்பெண் இவ்வாறு கேட்டாள், “அண்மையில் நானும் எனது சிநேகிதனும் பிரிந்தோம், அவன் சபையை விட்டு சென்றான். அவன் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என சொல்கிறான். இது எப்படி இருக்க முடியும்?”

நேபியர்களிடம் பேசியபோது இரட்சகர் இக்கேள்விக்கு பதிலளித்தார், “ஆனால் அது என் சுவிசேஷத்தின்மேல் கட்டப்படாமல், மனுஷரின் கிரியையின் மேலோ அல்லது பிசாசின் கிரியைகளின் மீதோ கட்டப்பட்டிருந்தால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் தங்கள் கிரியைகளினால் கொஞ்ச காலம் மகிழ்ந்திருப்பார்கள். சீக்கிரமாய் முடிவு வரும்.” 22 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு வெளியே நீடித்த சந்தோஷம் இல்லை.

எனினும், அவர்களை மிகவும் பயமுறுத்துகிற பெரும் பாரங்களாலும் கட்டளைகளாலும் போராடுகிற எனக்குத் தெரிந்த நல்லவர்களைப் பற்றி நான் அக்கூட்டத்தில் சிந்தித்தேன். நான் என்னையே கேட்டேன், “அவர்களிடம் இரட்சகர் என்ன சொல்லவேண்டும்.” 23 அவர் கேட்பார் என நான் நம்புவது, “நீ என்னை நம்புகிறாயா?”24 இரத்தப்போக்கு இருந்த பெண்ணிடம் அவர் சொன்னார், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ.” 25

என் விருப்ப வசனங்களில் ஒன்று, யோவான் 4:4. அது கூறுகிறது, “அவர் சமாரியா நாட்டின் வழியே போக வேண்டும்.”

அந்த வசனத்தை நான் ஏன் நம்புகிறேன்? ஏனெனில் இயேசு சமாரியாவுக்குப் போக வேண்டியதில்லை. அவரது நாளில் யூதர்கள் சமாரியர்களை வெறுத்தனர், சமாரியாவைச் சுற்றி ஒரு சாலையில் பயணித்தனர். ஆனால் இயேசு முதன்முறையாக உலகம் முழுமைக்கும் முன்பு அவர் தான் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா என அறிவிக்க அங்கு செல்ல தெரிந்து கொண்டார். இச்செய்திக்காக, அவர் ஒரு தள்ளப்பட்ட ஜாதியைத் தெரிந்துகொண்டது மட்டுமின்றி ஒரு பெண்ணை—சாதாரண பெண்ணல்ல, ஆனால் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த –எல்லாரிலும் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவளாக கருதப்பட்ட ஒருத்தியைத் தெரிந்து கொண்டார். நமது பயங்களையும், அடிமைத்தனங்களையும், சந்தேகங்களையும், சோதனைகளையும், நமது பாவங்களையும், உடைந்த குடும்பங்களையும், நமது மனஅழுத்தங்களையும், கவலைகளையும், நமது அதைரியம், கொடிய சுகவீனத்தையும், தரித்திரத்தையும், நமது துர்ப்பிரயோகத்தையும், தனிமையையும் விட அவரது அன்பு பெரியது என நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவே இயேசு இதைச்செய்தார் என நான் நம்புகிறேன். 26 அவர் குணப்படுத்த முடியாத ஒன்றுமில்லை, ஒருவருமில்லை எனவும், நிலையான சந்தோஷத்தையும் கொடுப்பார் எனவும் அனைவரும் அறிய விரும்புகிறார். 27

அவரது கிருபை போதுமானது. 28 அவர் மட்டுமே எல்லாவற்றுக்கும் கீழே இறங்கினார். அவரது பாவநிவர்த்தியின் வல்லமை நமது வாழ்வில் எந்த பாரத்தையும் மேற்கொள்ளும் வல்லமை. 29 கிணற்றருகில் பெண்ணின் செய்தி, நமது வாழ்க்கை சூழ்நிலைகளை அவர் அறிந்திருக்கிறார். 30 மற்றும் நாம் எங்கு இருந்தாலும் நாம் எப்போதும் அவருடன் நடக்க முடியும் என்பதே. அவளுக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அவர் சொல்லுகிறார், “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ, ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகின்ற நீரூற்றாய் இருக்கும்.” 31

வாழ்க்கையின் எந்தப் பயணத்திலும் உங்களைக் குணப்படுத்தவும், விடுதலை செய்யவும், எல்லா வல்லமைகளையும் கொண்ட, ஒரே இரட்சகரிடமிருந்து நீங்கள் ஏன் விலக வேண்டும்? அவரை நம்ப நீங்கள் கொடுக்கும் விலையும் தகுதியுள்ளதே. என் சகோதர சகோதரிகளே, பரலோக பிதாவிலும், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிலும் நமது விசுவாசத்தை அதிகரிக்க நாம் தெரிந்து கொள்வோமாக.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை இரட்சகரின் சபை. உண்மையான தீர்க்கதரிசி மூலம் ஜீவிக்கிற கிறிஸ்துவிடம் நாம் வழிநடத்தப்படுகிறோம், என என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நான் சாட்சியளிக்கிறேன். நாம் அவர் பார்ப்பது போல பார்த்து, அவர் சேவை செய்வது போல சேவை செய்து, வீட்டுக்கும் நித்திய சந்தோஷத்துக்கும் கொண்டு செல்கிற அவரது கிருபை போதுமென நம்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது விசுவாசத்தோடு தரித்துக் கொள்ள வேண்டுமென்பதே எனது ஜெபமாகும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. 3 நேபி 27:3–8 பார்க்கவும்.

  2. 3 நேபி 27:5–6 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77 மற்றும் திருவிருந்தின் உடன்படிக்கை பார்க்கவும்.

  3. See Dallin H. Oaks, His Holy Name (1998) for a comprehensive study about taking upon ourselves and being a witness of the name of Jesus Christ.

  4. மோசியா 5:2–3 பார்க்கவும். கிறிஸ்துவின் நாமத்தைத் தங்கள் மீது தரித்துக்கொண்ட பென்யமீன் இராஜாவின் ஜனங்களின் இருதய மாற்றத்தின் பகுதியாக “அதிகம் பார்க்கும்படியாக” அவர்களது கண்கள் திறக்கப்பட்டன. சிலஸ்டியல் இராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்பவர்கள் “அவைகள் இருக்கிறபடியே பார்க்கிறவர்கள்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:94).

  5. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 39.

  6. Brigham Young, in Journal of Discourses, 8:37.

  7. Discourses of Brigham Young, sel. John A. Widtsoe (1954), 278.

  8. 3 நேபி 17:7 பார்க்கவும்.

  9. யோவான் 3:14–17; அப்போஸேதலர் 10:34; 1 நேபி 17:35; 2 நேபி 26:33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:41–42; மோசே 1:39 பார்க்கவும். மூப்பர் டி.  டாட் க்றிஸ்டாபர்சன் மேலும் போதித்தார் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி எதிர்பார்த்தது, மற்றும் முடிவில் அவரிடத்தில் திரும்புபவர்களுக்கு குறைபாட்டையும் இழப்பையும் சரிக்கட்டும் என தன்னம்பிக்கையோடு நாங்கள் சாட்சியளிக்கிறோம். தன் பிள்ளைகளுக்கு தேவன் பிதா வைத்திருப்பதைவிட குறைவாகப் பெற யாரும் முன்னியமியமிக்கப்படவில்லை. (“Why Marriage, Why Family,” Liahona, May 2015).

  10. மத்தேயு 5:14; 22:35–40மோசியா 3:19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:13–14, 133:5; see also Russell M. Nelson, “The Gathering of Scattered Israel,” Liahona, Nov. 2006.

  11. லேவியராகமம் 18:4; 2 நேபி 31:5–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:12–16; 136:4; விசுவாசப் பிரமாணங்கள் 1:3–4 பார்க்கவும்.

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20–21; 110:9 பார்க்கவும்.

  13. யோசுவா 3:5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:16; மேலும் யோவான் 17:19 பார்க்கவும். நம்மை ஆசீர்வதிக்கும் வல்லமை பெற இரட்சகர் தம்மைத்தாமே பரிசுத்தப்படுத்திக் கொண்டார்.

  14. ஏலமன் 3:35; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12:6–9; 88:74 பார்க்கவும்.

  15. ஜோசப் ஸ்மித் வரலாறு 1:17 பார்க்கவும். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு தேவனால் கொடுக்கப்பட்ட முதல் கட்டளை; மேலும் 2 நேபி 9:29; 3 நேபி 28:34 பார்க்கவும்.

  16. மாற்கு 1:15; அப்போஸ்தலர் 3:19; ஆல்மா 5:33; 42:23; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:4–20 பார்க்கவும். மேலும் பாவம் பற்றிய இந்த இரு சிந்தனைகளையும் சிந்திக்கவும். முதலில் ஹ்யூ நெப்லி எழுதுகிறார் பாவம் வீண். உங்களுக்குத் திறமை இருக்கிறவற்றையும் பிற சிறப்பானவற்றையும் செய்யும்போது அது வேறொன்றை செய்கிறது. (Approaching Zion, ed. Don E. Norton [1989], 66). ஜான் வெஸ்லியின் தாய் சுசன்னா வெஸ்லி தன் மகனுக்கு எழுதினார்: “இந்த விதியை கடைபிடி. உன் காரணத்தை எது பலவீனப்படுத்தினாலும், உன் மனசாட்சியின் மென்மையை ஊனமாக்கினாலும், தேவன் பற்றிய உன் கருத்தை குழப்பினாலும் ஆவிக்குரிய காரியங்களை நீ ரசிப்பதை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டாலும், உன் மனத்தை விட, உன் சரீர அதிகாரத்தை எது அதிகரித்தாலும், அது எவ்வளவு வெகுளியாகத் தோன்றினாலும் அது உனக்கு பாவம்.” (Susanna Wesley: The Complete Writings, ed. Charles Wallace Jr. [1997], 109).

  17. லூக்கா 22:32; 3 நேபி 9:11,20 பார்க்கவும்.

  18. யோவான் 13:2–15, 34 பார்க்கவும். பாவநிவர்த்தியின் மாலையில், இயேசு அவரைக் காட்டிக் கொடுத்தவன், மற்றும் அவரை மறுதலித்தவன் காலைக் கழுவினார், ஆயினும் அவரது மிக தேவையான நேரத்தில் பிறர் தூங்கினர். பின்னர் அவர் போதித்தார் நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.

  19. மத்தேயு 5:46.

  20. See John R. Talmage, The Talmage Story: Life of James E. Talmage—Educator, Scientist, Apostle (1972), 112–14.

  21. ஆல்மா 10:22–23; 62:40 பார்க்கவும்.

  22. 3 நேபி 27:11 பார்க்கவும்.

  23. மத்தேயு 11:28–30ல் கர்த்தர் உரைக்கிறார்: “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். ... என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” 2 கொரிந்தியர் 12:9ஐயும் கருத்தில் கொள்ளவும். பவுல் பாடுகளை மிக வல்லமையுள்ள மாம்சத்திலே ஒரு முள் என விவரித்து, அது நீக்கப்பட ஜெபித்தான். கிறிஸ்து அவனுக்குச் சொன்னார்: “என் கிருபை உனக்குப் போதும், ஏனெனில் பெலவீனத்தில் என் பலம் பரிபூரணமாக விளங்கும்.” ஏத்தேர் 12:27ம் பார்க்கவும்.

  24. மோசியா 7:33; 29:20; ஏலமன் 12:1; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:87 பார்க்கவும்.

  25. லூக்கா 8:43–48; மாற்கு 5:25–34 பார்க்கவும். இரத்தப்போக்குள்ள பெண் மிகவும் தேவையிலிருந்தாள், அவளுக்கு வேறு வழியில்லை. அவள் 12 ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறாள், அவளது வசதி அனைத்தையும் மருத்துவர்களுக்கே செலவு செய்தாள், மோசமான நிலையிலிருந்தாள். குடும்பத்திலிருந்து தள்ளப்பட்டு, அவள் வேண்டுமென்றே கூட்டத்தின் ஊடே சென்று, இரட்சகரிடம் சென்றாள். அவள் இரட்சகர் மீது முழு விசுவாசமும் நமபிக்கையும் கொண்டிருந்தாள். அவரது வஸ்திரத்தின் ஓரத்தில் அவள் தொட்டதை அவர் உணர்ந்தார். அந்த விசுவாசத்தால் அவர் அவளை உடனை முற்றிலும் குணமாக்கினார். அவர் பின்பு அவளை மகளே என அழைத்தார். அவள் அதற்கு மேலும் தள்ளப்பட்டவளில்லை, தேவ குடும்பத்தில் ஒருத்தி. அவள் குணமானது சரீரப் பிரகாரமானது, சமூகப்பிரகாரமானது, உணர்வுபூர்வமானது மற்றும் ஆவிக்குரியது. பல வருடங்களுக்கு அல்லது வாழ்நாள் முழுவதும் சவால்கள் நீளலாம். ஆனால் அவரது குணமாக்கும் வாக்குத்தத்தம் உறுதியானது, முழுமையானது.

  26. லூக்கா 4:21; யோவான் 4:6–26 பார்க்கவும். யோவானல்ல, லூக்கா, இயேசு கிறிஸ்துவின் தொடக்க ஊழியத்தில் அவர் நாசரேத்தில் தன் சொந்த ஜெப ஆலயத்துக்கு சென்றார், மேசியா பற்றி தீர்க்கதரிசனமுறைக்கிற ஏசாயாவின் பாகத்தை வாசித்தார், பின்பு அறிவித்தார்: “இன்று இந்த வசனம் உங்கள் காதுகளில் நிறைவேறியது” என பதிவு செய்கிறான். மேசியா என தன்னை இரட்சகர் பேசுவது இதுவே முதல் முறை என பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் யாக்கோபுவின் கிணற்றண்டை ஒரு திறந்த வெளியில் தன் மேசியா பாத்திரத்தை இயேசு அறிவிப்பது முதல் முறை என யோவான் பதிவு செய்கிறான். இந்த அமைப்பில் சமாரியர்கள் யூதரல்லாதவர்களாக கருதப்பட்டதிலிருந்து தன் சுவிசேஷம் எல்லாருக்குமானது யூதருக்கும் புறஜாதிக்கும் என இயேசு போதித்தார். இந்த அறிவிப்பு, சூரியனின் முழு ஒளியையும் பூமி பெறுகிற “ஆறாம் மணி” வேளையில் மத்தியானத்தில் நடக்கிறது. யாக்கோபுவின் கிணறு வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு வந்து கர்த்தருடன் மகிழ்ச்சியாக பூர்வகால இஸ்ரவேல் உடன்படிக்கை செய்த பள்ளத்தாக்கில் அதே இடம் ஆகும். ரசிக்கும்படியாக பள்ளத்தாக்கின் ஒருபுறம் உலர்ந்த மலை, மறுபுறம் உயிர் கொடுக்கும் தண்ணீர் வற்றாத ஊற்றுக்கள்.

  27. மூப்பர் நீல்  ஏ. மாக்ஸ்வெல் போதித்தார்: “அழுத்தமான சூழ்நிலைகளில், நம்மிடம் கொடுக்க இன்னும் ஏதாவது இருக்கிறதா, தேவன் என அறிந்து நாம் ஆறுதல் அடையலாம், நாம் நமது திறமையை பூரணமாக அறியலாம், நம்மை வெற்றி பெற இங்கு வைத்தார் என வியக்கிறோம். தோற்கவோ துன்மார்க்கராயிருக்கவோ யாரும் முன்னியமிக்கப்பவில்லை. ... நாம் அதிக பாரப்படும்போது, தேவன் நம்மை அதிகமாக கஷ்டப்படுத்த மாட்டார் என்று உறுதியாக நினைவுகொள்வோமாக.” (“Meeting the Challenges of Today” [Brigham Young University devotional, Oct. 10, 1978], speeches.byu.edu).

  28. தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்திருக்கிறார்:

    “வரும் நாளில் நீங்கள் இரட்சகரின் முன்பு நிற்பீர்கள். நீங்கள் கண்ணீர் விடுமளவுக்கு அவருடைய பரிசுத்த பிரசன்னத்தில் அதிர்ச்சியடைவீர்கள். உங்களுடைய பாவங்களுக்காக கிரயம் செலுத்தியதற்காகவும், பிறர் மீது எவ்விதமான தயவின்மை கொண்டிருந்ததற்காகவும், இவ்வாழ்க்கையின் காயங்களையும் அநீதிகளையும் குணமாக்கியதற்காகவும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேட போராடுவீர்கள்.

    “முடியாததை செய்ய பெலப்படுத்தியதற்காகவும், உங்கள் பெலவீனங்களை பெலனாக மாற்றியதற்காகவும், அவரோடும் உங்கள் குடும்பத்தோடும் என்றென்றும் வாழ சாத்தியப்படுத்தியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பீர்கள். அவரது அடையாளம், அவரது பாவநிவர்த்தி, மற்றும் அவரது தன்மைகள் உங்களுடையதாகவும் உண்மையானதாகவும் ஆகும்.” (“Prophets, Leadership, and Divine Law” [worldwide devotional for youth adults, Jan. 8, 2017], broadcasts.lds.org).

  29. ஏசாயா 53:3–5; ஆல்மா 7:11–13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122:5–9 பார்க்கவும்.

  30. See Joseph Smith—History 1:17; Elaine S. Dalton, “He Knows You by Name,” Liahona, May 2005, 109–11.

  31. யோவான் 4:14.