2010–2019
ஒரு மகத்தான பணிக்கு அஸ்திபாரம் போடுதல்
அக்டோபர் 2018


ஒரு மகத்தான பணிக்கு அஸ்திபாரம் போடுதல்

நமது வீடுகளில் நாம் ஏற்படுத்தியிருக்கிற மரபுகள் மூலமாக கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்கள் சிறியவையாயும் எளியவையாயிருந்தாலும் இன்றைய உலகத்தில் அதிக முக்கியமாயிருக்கிறது.

சீயோனின் பெற்றோர்களாக, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நமது பிள்ளைகளின் பேரார்வத்தையும், சந்தோஷம், ஒளி மற்றும் சத்தியத்துக்கு அர்ப்பணிப்பையும் விழிப்புறச்செய்யும் ஒரு பரிசுத்த கடமை நமக்கு இருக்கிறது. நமது பிள்ளைகளை வளர்க்கும்போது நமது வீட்டிற்குள் மரபுகளை நாம் ஏற்படுத்தி நமது குடும்ப உறவுகளுக்குள் தொடர்பு மற்றும் நடத்தையின் மாதிரிகளை நாம் கட்டுகிறோம். அப்படிச் செய்வதில் நாம் ஏற்படுத்துகிற மரபுகள், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள பெலத்துடன் அவர்களை உட்படுத்தி, நமது பிள்ளைகளில் நல்ல பண்பு பலமாக வேரூன்ற வேண்டும்

அநேக ஆண்டுகளாக, வடகிழக்கு யூட்டாவின் உயின்டா மலைகளின் உச்சியில் வருடாந்தர முகாமிடும் மரபை எங்கள் குடும்பம் அனுபவித்தோம். உயர்ந்த பள்ளத்தாக்கு சுவர்களுடன், குளிர்ந்த தெளிவான தண்ணீர் நிறைந்து ஓடுகிற ஒரு நதியின் வழியாக, பாறைகள் நிறைந்த அழுக்குச் சாலைவழியாக 20 மைல்கள் (32 கி.மீ) நாங்கள் பயணிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும், எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் இருதயங்களுக்குள் சுவிசேஷ கோட்பாட்டின், பழக்கங்களின் மதிப்பை மறுஉறுதி செய்யும் நம்பிக்கையில், கிறிஸ்துவை மையப்படுத்துகிற ஒரு வீட்டின் அஸ்திபாரத்தில் ஒரு முக்கிய உறுப்பாக அவர்கள் உணருகிற ஒரு தலைப்பில் ஒரு சுருக்கமான செய்தியை ஆயத்தம்செய்ய எங்களுடைய ஆறு பிள்ளைகளையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் சூசனும் நானும் கேட்டோம்.

படம்
கற்களில் எழுதப்பட்ட செய்திகள்

இந்த ஆண்டு, எங்களுடைய பேரப்பிள்ளைகள், அதன்மேல் ஒரு சந்தோஷமான வாழ்க்கை நிறுவப்படுகிற, ஒரு உறுதியான அஸ்திபாரத்தை பிரதிபலிக்கிற, தங்களுடைய செய்தியின் தலைப்பை கற்களில் எழுதி, பின்னர் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக, ஒன்றன் பின் ஒன்றாக அவைகளைப் புதைத்தனர். தங்களுடைய ஆறு செய்திகள் முழுவதுக்கும் மத்தியில், அந்த அஸ்திபாரத்தின் மூலைக்கல் இயேசு கிறிஸ்து என்பது மாற்றமுடியாத நித்திய சத்தியம்.

ஏசாயாவின் வார்த்தைகளில், “ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது, இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன். அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்.” 1 சீயோனின் அஸ்திபாரத்தில் அந்த விலையேறப்பெற்ற மூலைக்கல் இயேசு கிறிஸ்து. அவரே தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தினார், “ஆகவே நன்மை செய்வதிலே சோர்ந்து போகாதிருங்கள், ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள். சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்.” 2

நமது வீடுகளில் நாம் உருவாக்கியிருக்கிற மரபுகள் மூலமாக கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்கள் சிறியவையாய், எளியவையாயிருந்தாலும் இன்றைய உலகத்தில் அதிகம் முக்கியமாயிருக்கிறது. ஏற்படுத்தப்படும்போது, நமது பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு பெரிய பணியை நடப்பிக்கிற சிறிய, எளிய காரியங்கள் எவை?

டொரன்டோ, கனடாவில் ஒரு பெரிய சபையில் சமீபத்தில் தலைவர் ரசல் எம். நெல்சன் உரையாற்றினார், நமது பிள்ளைகளுக்கு போதிக்கவேண்டிய நமக்குக்குள்ள பொறுப்பை உரைக்கும்படி பெற்றோருக்கு அவர் நினைவுபடுத்தினார். அடையாளம் காணப்பட்ட அத்தியாவசியமான பொறுப்புகளுக்கு மத்தியில், நாம் ஏன் திருவிருந்தில் பங்கேற்கவேண்டும், உடன்படிக்கையில் பிறந்திருத்தலின் முக்கியத்துவத்தையும், கோத்திரப் பிதாவின் ஆசீர்வாதங்களைப் பெற ஆயத்தப்படுதலின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள நமது பிள்ளைகளுக்குப் போதிக்கவேண்டிய பெற்றோர்களின் கடமையை தலைவர் நெல்சன் வலியுறுத்தினார். ஆபாசப்படங்களின் கொள்ளை நோய்க்கும் எவ்வாறு அதன் கொடிய பிடியிலிருந்து தடுப்பதென்றும் நமது பிள்ளைகளை எச்சரிக்க ஒரு குடும்பமாக ஒன்றாக வேதங்களை வாசிப்பதை நடத்த அவர் பெற்றோர்களை ஊக்குவித்தார். 3 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் தங்களுடைய அன்பையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு கடிதம் எழுத பெற்றோர்களுக்கு அவர் ஆலோசனையளித்தார். 4

“அவர் தன் பாஷையை [அவனுக்குப்] போதித்து கர்த்தருடைய போஷிப்பிலே எச்சரித்த” அவனுடைய தகப்பனின் எடுத்துக்காட்டுக்காக அவன் உணர்ந்த மகத்துவமான நன்றியுணர்வை மார்மன் புஸ்தகத்திலே ஏனோஸ் பதிவுசெய்கிறான். மிகுந்த உணர்ச்சியுடன் ஏனோஸ் உரக்கக் கத்தினான், “அதன் நிமித்தம் என் தேவனின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாகுவதாக.” 5

எங்கள் திருமணம் முடிந்து 35 ஆண்டுகளாக, எங்கள் வீட்டில் நாங்கள் கடைபிடித்து வருகிற எங்களுக்கிருக்கிற சிறிய எளிய மரபுகளுக்காக நான் சந்தோஷமடைகிறேன். எங்களுடைய மரபுகள் அநேகம் நுட்பமானவை, இருந்தும் அர்த்தமுள்ளவை. உதாரணமாக,

  • மாலை நேரங்களில் நான் வீட்டிலில்லாதபோதும், வேதப்படிப்பிலும், குடும்ப ஜெபத்திலும் குடும்பத்தை நடத்த, கேட்கப்படாமலே அதை அவன்மேல் எடுத்துக்கொண்டு, எங்களின் மூத்தமகன் நடத்துவான் என்று எனக்கு எப்போதும் தெரியும். 6

  • மற்றொரு மரபு, நான் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்லாமல் நாங்கள் ஒருபோதும் வீட்டைவிட்டுப் போகமாட்டோம், அல்லது ஒரு தொலைபேசி உரையாடலை முடிக்கமாட்டோம்.

  • எங்கள் மகன்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட நேர்காணலை வழக்கமான அடிப்படையில் நடத்த ஒரு நேரத்தை ஒதுக்குதலால், எங்கள் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஊழியத்தைச் செய்ய அவனுக்குள்ள விருப்பத்தையும் ஆயத்தத்தையும் பற்றி ஒரு நேர்காணலில் எங்கள் மகனைக் கேட்டேன். சிறு கலந்துரையாடலுக்குப் பின் ஒரு ஆழ்ந்த அமைதியான நேரமிருந்தது, பின்னர் அவன் முன்பக்கம் சாய்ந்து சிந்தனையோடு அறிவித்தான், “அப்பா, நான் சிறுவனாக இருந்தபோது தகப்பனின் நேர்காணலை நாம் ஆரம்பித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?” நான் “ஆம்” என்றேன். “நான் ஊழியம் செய்வேன் என உங்களுக்கு நான் வாக்களித்தேன், உங்களுக்கு வயதாகும்போது அம்மாவும் நீங்களும் ஊழியம் செய்வீர்களென எனக்கு நீங்கள் வாக்களித்தீர்கள்” என அவன் சொன்னான். பின்னர் அங்கு மற்றொரு அமைதி நிலவியது. “ஊழியம் செய்ய உங்களைத் தடுக்கிற எதாவது பிரச்சினைகள் உங்களுக்கிறதா, அப்படியிருந்தால் நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்.”

ஜெபம், வேத வாசிப்பு, குடும்ப இல்ல மாலை, சபைக்கூட்டங்களில் பங்கேற்பது, சிறியதாகவும் எளிமையானதாகவும் தோன்றினாலும் அன்பின் கலாச்சாரம், மரியாதை, பாதுகாப்பை உருவாக்குதல், ஆரோக்கியமான குடும்ப மரபுகளில் அடங்கியிருக்கிறது. இந்த முயற்சிகள் இணைந்திருக்கிற அந்த உற்சாகத்தில், நமது நாட்களில் மிகவும் கலந்திருக்கிற உலக கலாச்சாரங்களான பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களிலிருந்து நமது பிள்ளைகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

தன் குமாரனுக்கு ஏலமன் கொடுத்த ஞானமிக்க ஆலோசனைபற்றி நாம் நினைவுறுத்தப்படுகிறோம். “நினைவுகூருங்கள், தேவகுமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலையின் மேல் நீங்கள் உங்கள் அஸ்திவாரத்தை கட்டவேண்டுமென்று நினைவில்கொள்ளுங்கள், பிசாசு கனத்த காற்றுக்களையும், ஆம், சூறாவளியில் தன் அம்புகளையும், அனுப்பி, ஆம், அவன் சகல கல்மழையாலும், அவனுடைய பலத்த புயலாலும் உங்களை அடிக்கும்போது, அது உங்களை பொல்லாத துரவிற்கும், நித்திய துன்பத்திற்கும் இழுத்துச் செல்ல வல்லமையற்றுப்போகும். ஏனெனில் நீங்கள் கட்டப்பட்டிருக்கிற கன்மலை மெய்யான அஸ்திவாரமாயிருக்கிறது. அந்த அஸ்திவாரத்தின் மேல் மனுஷர் கட்டினால் அவர்கள் விழுந்து போவதில்லை.” 7

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளம் ஆயராக ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு வயதான மனிதர் என்னை சந்திக்க நேரம் கேட்டார். அவர் இளமையாயிருந்தபோது, சபையை விட்டும் அவருடைய பெற்றோரின் நீதியான மரபுகளை விட்டும் வெளியேறியதை அவர் விவரித்தார். உலகம் கொடுக்கிற கண நேர சந்தோஷங்களுக்கிடையில் நீடித்த மகிழ்ச்சியை வீணாக தேடியபோது, அவருடைய வாழ்க்கையில் அனுபவித்த மனவேதனையை அவர் விரிவாக விளக்கினார். வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில், மென்மையான, சில நேரங்களில் தொல்லையாயிருக்கிற தேவனின் மென்மையான குரலின் உணர்வு, பாடங்களுக்கும், பழக்கங்களுக்கும், உணர்வுகளுக்கும், தனது பிள்ளைப்பருவத்தின் பாதுகாப்புக்கும் திரும்ப வழிகாட்டுகிறதை அவர் அனுபவித்தார். அவருடைய பெற்றோரின் மரபுகளுக்காக நன்றியை அவர் வெளிப்படுத்தினார், தற்கால வார்த்தைகளிலெனில் ஏனோஸின் பிரகடனத்தை அவர் எதிரொலித்தார், “அதன் நிமித்தம் என் தேவனின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.”

என்னுடைய அனுபவத்தில், இந்த அன்பான மனிதனின் சுவிசேஷத்திற்குத் திரும்புதல் அநேகரின் இயல்பாயிருக்கிறது, சிறிது காலத்திற்கு விலகி, தங்களின் இளமைகால போதனைகளுக்கும் பழக்கங்களுக்கும் திரும்புவது தேவனின் பிள்ளைகளுக்கு மத்தியில் திரும்பத்திரும்ப நடக்கிறது. அந்த நேரங்களில் பெற்றோருக்கு அறிவுறுத்திய நீதிமொழிகளின் ஆசிரியரின் ஞானத்தை நாம் பார்க்கிறோம். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” 8

பிள்ளைகளை வளர்த்து வரும்போது, ஏமாற்றம் வரும் நேரங்களையும், தீர்மானத்தின், பெலம் வேறுபடுகிற அளவுகளையும் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்கொள்கிறார்கள். ஆயினும், சீராகவும், ஒளிவுமறைவின்றியும், அன்புடனும் பிள்ளைகளுக்கு போதிப்பதாலும், வழியிலே அவர்களுக்குதவ அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாலும் பெற்றோர்கள் விசுவாசத்தை பயிற்சி செய்யும்போது, விதைக்கப்பட்ட விதைகள் தங்கள் பிள்ளைகளின் இருதயங்களிலும் மனங்களிலும் வேரூன்றுகிறதென்ற பெரிய நம்பிக்கையை அவர்கள் பெறுவார்கள்.

நிலையான போதனைக்கான அடிப்படைத் தேவையை மோசே நன்றாக புரிந்திருந்தான். “நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும் படுத்துக்கொள்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” என அவன் ஆலோசனையளித்தான். 9

குடும்ப ஜெபங்களின்போது நமது பிள்ளைகளுடன் நாம் முழங்கால்படியிடுகிறோம், அர்த்தமுள்ள குடும்ப வேத வாசிப்பை நடத்த நமது முயற்சிகளின் மூலமாக அவர்கள் மீது அக்கறை கொள்கிறோம், குடும்ப இல்ல மாலையில் அவர்களோடு ஒன்று சேர்ந்து நாம் பங்கேற்கும்போது பொறுமையுடனும் அன்புடனும் நாம் அவர்களிடம் அக்கறை செலுத்துகிறோம், பரலோகத்திற்கு நமது தனிப்பட்ட ஜெபங்களை ஏறெடுக்கும்போது நமது முழங்கால்களில் அவர்களுக்காக வேதனைப்படுகிறோம். அவர்களுடைய இருதயங்களுக்குள்ளும், மனங்களுக்குள்ளும் வேறூன்றப்பட நாம் எவ்வளவு ஏங்குகிறோம்

வேதங்களை வாசிக்க, அல்லது குடும்ப இல்ல மாலையை நடத்த, அல்லது தேவனுக்கான கடமை அல்லது இளம் பெண்கள் அங்கீகாரத் திட்டங்கள் வழியாக பணியாற்றுதல் போன்ற நமது போதனைகளுக்கு மத்தியில் நமது பிள்ளைகள் அதைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பது ஒரு சிறு கேள்வியென நான் நம்புகிறேன். அந்த நேரங்களில் அந்த நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது சிறு கேள்வி. நேர்மையாக வாழ, போதிக்க, அறிவுறுத்த, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் உணர்த்தப்பட்ட எதிர்பார்ப்புகளை அமைக்க, கர்த்தரின் ஆலோசனையைப் பின்பற்ற பெற்றோர்களாக போதுமான விசுவாசத்தை நாம் பிரயோகிக்கிறோமா என்பது பெரிய கேள்வி. ஒரு நாள் தங்களுடைய இளைஞர்களில் விதைக்கப்பட்ட விதைகள் வேரூன்றி, துளிர்விட ஆரம்பித்து, வளரும் என்ற நம்பிக்கை, நமது விசுவாசத்தால் உந்தப்பட்ட ஒரு முயற்சி.

நாம் பேசுகிற காரியங்கள், நாம் பிரசங்கிக்கிற, போதிக்கிற காரியங்கள் நமக்குள்ளே நடைபெறும் காரியங்களைத் தீர்மானிக்கிறது. கிறிஸ்துவின் கோட்பாட்டைப் போதிக்கிற ஆரோக்கியமான மரபுகளை நாம் நிலைநாட்டும்போது, நமது செய்தியின் சத்தியத்தை பரிசுத்த ஆவி சாட்சியளித்து, எல்லா வழிகளிலும் நமது முயற்சிகளால் நமது பிள்ளைகளின் இருதயங்களில் ஆழமாக நடப்பட்ட சுவிசேஷத்தின் விதைகளை போஷிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.