2010–2019
கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தில் திடமும் உறுதியும்
அக்டோபர் 2018


கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தில் திடமும் உறுதியும்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒருவருடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் ஊடுருவிச்செல்ல, கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தில் திடமான விடாமுயற்சியும் உறுதியும் தேவையாயிருக்கிறது.

தொடர்ச்சியான காலங்களில், இஸ்ரவேல் ஜனங்கள், யேகோவாவுடன் தங்களுடைய உடன்படிக்கையை கனம்பண்ணி, அவரைத் தொழுதுகொண்டு, பிற நேரங்களில் அந்த உடன்படிக்கையை புறக்கணித்து பாகால் விக்கிரகங்களை தொழுதுகொண்டதை பழைய ஏற்பாட்டு வரலாற்றில் நாம் படிக்கிறோம். 1

இல்ரவேல் வடக்கு இராஜ்ஜியத்தில் ஆகாபின் ஆளுகை காலம் மதமாறுபாட்டு காலமாயிருந்தது. இஸ்ரவேல் ஜனங்களையும், தீர்க்கதரிசிகளையும், பாகாலின் பூஜாரிகளையும் கர்மேல் பர்வதத்தில் கூடிவரச்செய்யும்படி ஆகாப் இராஜாவினிடத்தில் எலியா தீர்க்கதரிசி கூறினான். ஜனங்கள் கூடிவந்தபோது அவர்களிடத்தில், “நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்? [அல்லது வேறு வார்த்தைகளிலெனில், “ஒரேயடியாக நீங்கள் எப்போது தீர்மானிப்பீர்கள்?”] கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள், பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என எலியா சொன்னான். ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.” 2 ஆகவே, அவனும், பாகாலின் பூஜாரிகளும் ஒரு இளங்காளையை, துண்டித்து, அவரவர் பீடங்களிலுள்ள விறகுகளின் மேல் போட்டனர், ஆனால் “நெருப்பு போடவேண்டாம்”3 என எலியா சொன்னான். பின்னர், “நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக்கூப்பிடுங்கள், நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக்கூப்பிடுவேன். அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்”. 4

அக்கினியை அனுப்பும்படி மணிக்கணக்காக தங்களுடைய இல்லாத கடவுளிடம், பாகாலின் பூஜாரிகள் ஆர்ப்பரித்தார்களென்பதை நீங்கள் நினைவுவைத்திருப்பீர்கள், ஆனால், “ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.” 5 எலியாவின் முறை வந்தபோது, தகர்க்கப்பட்டிருந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு, விறகுகளையும் பலியையும் அதன்மேல் வைத்து, பின்னர் அதன் மேல் முழுவதும், ஒரு முறை அல்ல, மூன்று முறை தண்ணீரை ஊற்றச் சொன்னான். அவனோ, அல்லது எந்த மனித சக்தியோ அங்கே அக்கினி மூட்ட முடியாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

“அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுவுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும் நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும் நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும் …

“அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

“ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து, கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.” 6

இன்று எலியா சொல்லலாம்:

  • தேவனோ, நமது பரலோக பிதாவோ இருக்கிறாரோ, அல்லது இல்லையோ, ஆனால், அவரிருந்தால் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

  • இயேசு கிறிஸ்து தேவ குமாரனோ, மனுக்குலத்தின் உயிர்த்தெழுந்த மீட்பரோ, அல்லது அவர் இல்லையோ, ஆனால் அவரிருந்தால், அவரைப் பின்பற்றுங்கள்.

  • மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தையோ, அல்லது அது இல்லையோ, ஆனால், அது இருந்தால் பின், “அதன் கற்பனைகளை [படிப்பதாலும்] நிலைத்திருப்பதாலும் தேவனிடம் நெருங்குங்கள்.” 7

  • 1820ல், அந்த வசந்த காலத்தில் ஜோசப் ஸ்மித் பிதாவையும் குமாரனையும் பார்த்து அவர்களுடன் உரையாடினாரோ, அவர் செய்யவில்லையோ, ஆனால் அவர் அப்படிச் செய்திருந்தால், பின், எலியாவாகிய நான் அவன் மீது அருளிய முத்திரித்தலின் திறவுகோல்களையும் சேர்த்து தீர்க்கதரிசன பொறுப்பைப் பின்பற்றுங்கள்.

மிக சமீபத்திய பொது மாநாட்டில் தலைவர் ரசல் எம். நெல்சன் அறிவித்தார், “எது சத்தியமென்பதைப்பற்றி நீங்கள் ஆச்சரியப்படவேண்டியதில்லை [மரோனி 10:5 பார்க்கவும்]. யாரை நீங்கள் பாதுகாப்பாக நம்பலாமென ஆச்சரியப்படவேண்டியதில்லை. மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்றும், ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி என்றும், இது கர்த்தருடைய சபை என்றும் தனிப்பட்ட வெளிப்படுத்தல் மூலமாக நீங்கள் உங்களின் சொந்த சாட்சியைப் பெறுவீர்கள். மற்றவர்கள் என்ன சொல்லலாம் அல்லது செய்யலாமென்பதைப் பொருட்படுத்தாமல், எது சத்தியமென்பதைப்பற்றி உங்கள் இருதயத்திலும் மனதிலும்பட்ட ஒரு சாட்சியை யாராலும் எப்போதும் நீக்கிவிட முடியாது.” 8

தேவன் அவருடைய ஞானத்தை நாடுகிற “யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறார்” 9 என யாக்கோபு வாக்களித்தபோது, அவன் எச்சரித்தான்:

“ஆனாலும், அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன், சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.

“அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.

“இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” 10

மறுபுறம், நிலைத்திருத்தலுக்கு நமது இரட்சகர் ஒரு மிகச்சரியான எடுத்துக்காட்டு. பிதாவுக்குப் பிரியமானவைகளை11 நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என அவர் சொன்னார். இரட்சகரைப்போல திடமாகவும் உறுதியாகவுமிருந்த வேதங்களின் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து இந்த விளக்கங்களை கருத்தில் கொள்ளவும்.

அவர்கள் “மெய்யான விசுவாசத்திற்கு மனம்மாறி, அவர்கள் திடமனதாயும், உறுதியாயும், அசைக்கமுடியாதவர்களும், கர்த்தருடைய கற்பனைகளைச் சகல கருத்தோடும் கைக்கொள்ள மனதுள்ளவர்களாயும் இருந்ததால், அதிலிருந்து விலகவில்லை.”12

“அவர்களின் எண்ணங்கள், அவர்கள் தொடர்ந்து தேவனில் தங்களின் நம்பிக்கையை வைக்கிறார்கள்.” 13

“இதோ, சத்திய ஞானத்திற்குக் கொண்டுவரப்பட்ட அநேகர், தங்கள் விசுவாசத்திலும், தங்களை விடுதலை பண்ணின காரியத்திலும் உறுதியாயும், அசைக்கமுடியாதவர்களுமாய் இருக்கிறார்களென நீங்கள் கண்டும் அறிந்தும் இருக்கிறீர்கள்.” 14

“அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” 15

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒருவருடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் ஊடுருவிச்செல்ல, கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தில் திடமான விடாமுயற்சியும் உறுதியும் தேவையாயிருக்கிறது, அதன் அர்த்தம் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு செல்வாக்கில் மட்டும் சுவிசேஷம் வெறுமையான ஒன்றாக மாறுவதில்லை, ஆனால், அவன் அல்லது அவளின் வாழ்க்கை மற்றும் நடத்தையின் வரையறையை கவனிக்கிறது. கர்த்தர் சொல்லுகிறார்:

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

“உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்.

“ நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.” 16

இந்த உடன்படிக்கையைத்தான் நமது ஞானஸ்நானத்தாலும் ஆலய நியமங்களாலும் நாம் செய்கிறோம். ஆனால், சிலர் தங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆயினும், பவுல் சொல்கிறதைப்போல, அவர்கள் “[கிறிஸ்துவுடனேகூட] ஞானஸ்நானத்தினாலே அடக்கம்பண்ணப்பட்டார்கள்,” கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, … நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளவேண்டும்17 என்பதை அவர்கள் இன்னமும் தவற விடுகிறார்கள். சுவிசேஷம் இன்னமும் அவர்களை விவரிக்கவில்லை. அவர்கள் இன்னமும் கிறிஸ்துவை மையமாக கொள்ளவில்லை. அவர்கள் பின்பற்றும் உபதேசங்களிலும், கற்பனைகளிலும், சபையில் எங்கே எப்போது சேவை செய்வார்களென அவர்கள் தேர்ந்தெடுப்பவர்களாக இருக்கிறார்கள். முரணாக, “உடன்படிக்கையின்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்,” 18 மோசடியைத் தவிர்த்து, கிறிஸ்துவின் மீது விசுவாசத்தில் உறுதியாயிருப்பவர்கள், துல்லியமாக தங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளவதில் அது இருக்கிறது.

இந்த கணநேரத்தில் தொடர்ச்சியாக, ஒரு பக்கம் சமுதாய தூண்டுதலால் சுவிசேஷ சடங்காச்சாரங்களில் பங்கேற்புக்கும், மறுபக்கம் தேவனின் சித்தத்திற்கு கிறிஸ்துவைப்போல முழுமையான அர்ப்பணிப்பிற்குமிடையில் நம்மில் அநேகர் நம்மை காண்போம். எங்கேயோ, அந்த தொடர்ச்சியின் வழியே, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ நற்செய்தி நமது இருதயங்களில் பிரவேசித்து நமது ஆத்துமாவில் ஆட்கொள்கிறது. இது ஒரு சமயத்திலே நடைபெறுவதில்லை. ஆனால், நாம் அனைவரும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிலைக்கு நகரவேண்டும்.

இது சவாலானது, ஆனால், அநித்தியத்தில், நம் அனைவருக்கும் சீக்கிரமோ தாமதமாகவோ வரக்கூடிய ஒன்றான நாம் “உபத்திரவத்தின் சூளையில்”19 புதுப்பிக்கப்பட்டிருத்தலை நாமே காணும்போது திடமாயும் உறுதியாயுமிருக்க அது முக்கியம். தேவனில்லாமல் இந்த இருளான அனுபவங்கள் விரக்தி, நம்பிக்கையின்மை, கசப்புணர்ச்சியும் கொடுக்கும். தேவனால், வேதனைக்குப் பதிலாக ஆறுதலும், கொந்தளிப்புக்குப் பதிலாக சமாதானமும், துக்கத்திற்குப் பதிலாக நம்பிக்கையும் வரும். கிறிஸ்துவின் மீது விசுவாசத்தில் மீதியான உறுதி, அவருடைய சீரான கிருபையையும் ஆதரவையும் கொண்டுவரும். 20 அவர் சோதனையை ஆசீர்வாதமாக மாற்றுவார், ஏசாயாவின் வார்த்தைகளிலெனில், “சாம்பலுக்குப் பதிலாக சிங்காரத்தைக் கொடு.” 21

தனிப்பட்ட ஞானமாக எனக்கிருக்கிற மூன்று எடுத்துக்காட்டுகளை நான் குறிப்பிடுகிறேன்.

மருத்துவ கவனிப்பை, ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை, உபவாசம் மற்றும் ஜெபத்தை கண்டிப்பாக வேண்டி நின்ற, தாங்கமுடியாத நாள்பட்ட வியாதியால் ஒரு பெண் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள். ஆயினும், அவளிடமிருந்த ஜெபத்தின் வல்லமை, தேவனின் அன்பின் உண்மை மீது அவளுக்குள்ள விசுவாசம் மங்கிப்போகவில்லை. சபையின் அழைப்பில் சேவை செய்துகொண்டு, தன்னுடைய புதிய குடும்பத்தை, தனது கணவனோடு சேர்ந்து கவனித்துக்கொண்டு, முடிந்தவரை புன்னகைத்து ஒவ்வொரு நாளும் சிலநேரங்களில் ஒவ்வொரு மணிநேரமும் அவள் முன்னேறிச்சென்றாள். தன்னுடைய பாடுகளால் புடமிடப்பட்டதால் மற்றவர்கள் மீது அவளுக்குள்ள இரக்கம் ஆழமானது, மற்றவர்களுக்கு சேவை செய்வதில் எப்போதுமே அவள் தன்னைப்பற்றி மறந்துபோவாள். அவள் தொடர்ந்து திடமாயிருந்தாள், அவளைச் சுற்றியிருப்பதில் ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சபையில் வளர்ந்த, ஒரு முழுநேர ஊழியக்காரனாக சேவைசெய்த, ஒரு அன்பான பெண்ணை மணம் புரிந்த ஒரு மனிதன், அவனுடைய பிள்ளைகளில் சிலர் சபையைப்பற்றியும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தைப்பற்றியும் விமர்சிக்க ஆரம்பித்தபோது ஆச்சரியப்பட்டான். சிலகாலத்திற்குப் பின் அவர்கள் சபையைவிட்டுச் சென்றனர், அவர்களைப் பின்பற்ற அவனை வற்புறுத்தினர். இந்த மாதிரி விவகாரங்களில் அடிக்கடி நடப்பதைப்போல, அவர்களில் அநேகர் தாங்களாகவே விலகிக்கொண்ட சபையின் முன்னாள் அங்கத்தினர்களான விமர்சகர்களால் தயாரிக்கப்பட்ட கட்டுரைகளாலும், பாட்காஸ்ட்டுகளாலும், காணொலிகளாலும் அவனைத் தாக்கினார்கள். ஏமாறக்கூடியவன், தவறாக வழிநடத்தப்படுகிறான் என அவனிடம்கூறி, அவனுடைய விசுவாசத்தைப்பற்றி அவனுடைய பிள்ளைகள் கேலி செய்தார்கள். அவர்களுடைய வாதங்கள் அனைத்துக்கும் அவனிடம் பதில்கள் இல்லாமலிருந்ததால், இரக்கமற்ற எதிர்ப்பின் கீழ் அவனுடைய விசுவாசம் அசைய ஆரம்பித்தது. சபைக்குப் போவதை நிறுத்தவேண்டுமோ என அவன் வியப்படைந்தான். அவனுடைய மனைவியுடன் அவன் பேசினான். அவன் நம்பிக்கை வைத்திருந்த மக்களிடம் அவன் பேசினான். அவன் ஜெபித்தான். இந்த தொந்தரவான மனநிலையில் அவன் தியானித்தபோது, பரிசுத்த ஆவியை அவன் உணர்ந்த, ஆவியால் சத்தியத்தின் சாட்சியைப் பெற்ற சந்தர்ப்பங்களை அவன் நினைவுகூர்ந்தான். ஒரு முறைக்கும் மேலாக பரிசுத்த ஆவி என்னைத் தொட்டதையும், ஆவி உண்மையானதென்பதன் சாட்சியையும், எனக்கு நான் நேர்மையானவனாயிருந்தால், நான் ஒப்புக்கொள்ளவேண்டும் என அவன் முடித்தான். சந்தோஷம் மற்றும் சமாதானத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட உணர்வு அவனுக்கிருந்தது, அது அவனுடைய மனைவியாலும் பிள்ளைகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

தங்களுடைய வாழ்க்கையில் சகோதரர்களுடைய ஆலோசனையை சீராகவும் சந்தோஷமாகவும் பின்பற்றிய ஒரு கணவனும் மனைவியும் பிள்ளைகளால் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களால் கவலையடைந்தனர். அவர்கள் திறமையுள்ள மருத்துவ நிபுணர்களிடத்தில் , கணிசமான பணத்தை செலவழித்தனர், சிலகாலத்திற்குப் பின்னர் ஒரு மகனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஆயினும், ஒரு ஆண்டுக்குள்ளாக யாருடைய தப்புமில்லாமல் குழந்தை ஒரு விபத்துக்குள்ளாகி, அதிக மூளை பாதிப்புடன் பாதி கோமா நிலையில் இருந்தது. சிறந்த கண்காணிப்பை அவன் பெற்றான், ஆனால், காரியங்கள் எப்படியாகுமென மருத்துவர்களால் கணிக்கமுடியவில்லை. இந்த குழந்தையை, இந்த தம்பதியினர் உலகத்திற்குக் கொண்டுவர மிகக் கடினமாக செயல்பட்டு ஜெபித்த உணர்வு எடுக்கப்பட்டு, அவர்களுக்கு குழந்தை கிடைப்பானா என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களுடைய பிற பொறுப்புகளை எதிர்கொண்டபோது, குழந்தையின் முக்கியத் தேவைகளைக் கவனிக்க இப்போது அவர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள். இந்த மிகக்கடினமான நேரத்தில், அவர்கள் கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அவரிடமிருந்து பெற்ற அன்றன்றுள்ள அப்பத்தை அவர்கள் சார்ந்திருந்தனர். இரக்கமுள்ள நண்பர்களாலும் குடும்பத்தினராலும் அவர்கள் உதவிபெற்று, ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களால் பெலப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி, மற்றபடி சாத்தியமாவதைவிட, ஒருவேளை அவர்களுடைய ஒற்றுமை இப்போது ஆழமாகவும் மிக முழுமையாகவுமிருக்கிறது.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அப்போதைய தலைவரான தாமஸ் பி. மார்ஷூக்கு ஜூலை 23, 1837ல் ஒரு வெளிப்படுத்தலை கர்த்தர் கொடுத்தார். பின்வருபவை அதில் அடங்கியிருக்கின்றன:

“உன்னுடைய பன்னிரு சகோதரருக்காவும் ஜெபம்பண்ணு. என்னுடைய நாமத்தினிமித்தம் அவர்களுக்கு கடிந்து புத்தி சொல்லு, அவர்களுடைய எல்லா பாவங்களுக்காவும் அவர்கள் புத்தி சொல்லப்படுவார்களாக, என்னுடைய நாமத்தில் எனக்கு முன்பாக விசுவாசமுள்ளவனாயிரு.

“அவர்களுடைய சோதனைகளுக்கும் உபத்திரவங்களுக்கும் பின்பு இதோ, கர்த்தராகிய நான் அவர்களுக்கு இரங்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாக தங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாதிருந்தால், வணங்காக் கழுத்துள்ளவர்களாயில்லாதிருந்தால் அவர்கள் மனம் மாறுவார்கள், நான் அவர்களைக் குணப்படுத்துவேன்.”22

இந்த வசனங்களில் வெளிப்படுத்தப்பட்ட கொள்கைகள் நம் அனைவருக்கும் பொருந்தும் என நான் நம்புகிறேன். நாம் அனுபவிக்கிற சோதனைகளும் உபத்திரவங்களும், கூடுதலாக, சுமக்க பொருந்துவதாக கர்த்தர் பார்க்கிற எந்த சோதனைகளும் நமது முழு மனமாற்றுதலுக்கும் குணமாக்குதலுக்கும் நடத்துகிறது. ஆனால், நமது இருதயங்களை நாம் கடினப்படுத்தாமலும், நமது கழுத்துக்களை அவருக்கு எதிராக விறைப்பாக்காமலும் இருந்தால் மட்டுமே இது நடக்கிறது. திடமாகவும் உறுதியாகவும் நாம் நிலைத்திருந்தால், எது வந்தாலும், “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து”23 என பேதுருவிடம் அவர் சொன்னதைப்போல, இரட்சகரின் எண்ணப்படி மாற்றிச் செய்யமுடியாத மிகமுழுமையான ஒரு மாற்றமான மனமாற்றத்தை நாம் அடைவோம். வாக்களிக்கப்பட்ட குணமாக்குதல் என்பது, பாவ காயமடைந்த ஆத்துமாக்களை சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தி, நம்மை பரிசுத்தமாக்குதல் ஆகும்.

நமது தாய்மார்களின் ஆலோசனையை நான் நினைவுகூர்கிறேன். உங்கள் காய்கறிகளை உண்ணுங்கள், அது உங்களுக்கு நன்மை செய்யும். நம் தாய்மார்கள் சொன்னது சரி. விசுவாசத்தில் உறுதியாயிருத்தலின் சூழலில் உங்கள் காய்கறிகளை உண்ணுங்கள் என்பது, தொடர்ந்து ஜெபிப்பதும், தினமும் வேதங்களை ருசித்துப் பார்ப்பதும், சபையில் சேவை செய்து தொழுதுகொள்வதும், ஒவ்வொரு வாரமும் தகுதியுள்ளவராய் திருவிருந்து எடுத்துக்கொள்வதும், உங்கள் அயலானை நேசிப்பதும், ஒவ்வொரு நாளும் தேவனுக்குக் கீழ்படிந்து உங்கள் சிலுவையை எடுத்துக்கொள்வதுமாகும். 24

கிறிஸ்துவின் மீது விசுவாசத்தில் திடமாயும் உறுதியாயும் இருப்பவர்களுக்கு இப்போதும், இதற்குப் பிறகும் வரப்போகிற நல்ல காரியங்களின் வாக்களிப்பை எப்போதும் நினைவுகூருங்கள். “நித்திய ஜீவனையும் பரிசுத்தவான்களின் சந்தோஷத்தையும்” 25 நினைவுகூருங்கள். “இருதயத்திலே சுத்தமுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும், உங்கள் மனம் திடமனதாய் என்றென்றைக்கும் இருக்குமேயானால், உங்கள் தலைகளை உயர்த்தி தேவனுடைய பிரியமான வார்த்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள், அவரின் அன்பிலே உண்டுகளியுங்கள்”26. கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென்.