பொது மாநாடு
பார்க்க கண்கள்
அக்டோபர் 2020 பொது மாநாடு


பார்க்க கண்கள்

நம்மையே நாம் பார்க்கவும், அவர் பார்ப்பதுபோல மற்றவர்களைப் பார்க்கவும் பரிசுத்த ஆவியின் வல்லமை மூலம், கிறிஸ்து நமக்கு சாத்தியமாக்குவார்.

தேவனின் கரத்தைப் பார்த்தல்

தீர்க்கதரிசி எலிசாவுக்கு சேவை செய்த ஒரு இளைஞனின் பழைய ஏற்பாட்டு கதையை நான் விரும்புகிறேன். ஒரு நாள் அதிகாலையில் அந்த இளைஞன் எழுந்து, வெளியே சென்று, அவர்களை அழிக்கும் நோக்கில் ஒரு பெரிய இராணுவத்தால் நகரம் சூழப்பட்டதைக் கண்டான். அவன் எலிசாவிடம் ஓடினான்: “ஐயோ, என் ஆண்டவனே! என்ன செய்வோம்? ”

எலிசா பதிலளித்தான், “பயப்படாதே, அவர்களோடிருப்பவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.”

எலிசா இளைஞனுக்கு உறுதியளிப்பதை விட அதிகமானது தேவை என்பதை அறிந்திருந்தான்; அவனுக்கு தரிசனம் தேவை. ஆகவே, எலிசா விண்ணப்பம் பண்ணினான் “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும். கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார். இதோ எலிசாவைச் சுற்றிலும் அக்கினி மயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.” 1

உலகத்தின் சோதனைகள் உங்களை முழங்கால்படியிட வைக்கும்போது, நீங்கள் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் நேரங்களில் வேலைக்காரனைப்போல, உங்கள் வாழ்க்கையிலும் தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பார்க்க நீங்கள் சிரமப்படுகிற நேரங்கள் இருக்கலாம், தேவனையும் அவருடைய நேரத்தையும் நம்புங்கள், காத்திருங்கள், ஏனென்றால் அவருடைய இருதயத்தை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் நம்பலாம். ஆனால் இங்கே இரண்டாவது பாடம் இருக்கிறது. என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே, நீங்களும் சாதாரணமாகப் பார்க்காத விஷயங்களைக் காண உங்கள் கண்களைத் திறக்கும்படி கர்த்தரிடம் ஜெபிக்கலாம்.

தேவன் நம்மைப் பார்க்கும் விதமாக நம்மை பார்த்தல்

தேவன் யார், நாம் உண்மையில் யார் என்பதைத் தெளிவாகக் காண, நமக்கு மிக முக்கியமான காரியங்கள். “தெய்வீக இயல்பு மற்றும் நித்திய இலக்குடன்” பரலோக பெற்றோரின் மகன்களும் மகள்களும் என்பதே. 2 உங்களைப்பற்றி அவர் எப்படி உணருகிறார் என்பதோடு, இந்த உண்மைகளையும் உங்களுக்கு வெளிப்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள். உங்கள் உண்மையான அடையாளத்தையும் நோக்கத்தையும், ஆத்தும ஆழமாக நீங்கள் எவ்வளவு அதிகமாக புரிந்துகொள்கிறீர்களோ, அது உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் அவ்வளவு செல்வாக்கு பெறும்.

பிறரைப் பார்த்தல்

தேவன் நம்மை எப்படிப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது, அவர் பார்ப்பது போலவே மற்றவர்களைப் பார்க்க உதவும் வழியையும் ஆயத்தம் செய்கிறது. கட்டுரையாளர் டேவிட் ப்ரூக்ஸ் கூறினார்: “நமது சமூகத்தின் பெரிய பிரச்சினைகள் காணப்படாதவர்களாகவும், அறியப்படாதவர்களாகவும் உணர்பவர்களிடமிருந்து வருகின்றன. … நாம் அனைவரும் சிறந்து விளங்க வேண்டிய ஒரு முக்கிய… பண்பு இருக்கிறது, அதுவே ஒருவருக்கொருவரை ஆழ்ந்து பார்ப்பதுவும், ஆழமாகப் பார்க்கப்படுவதும் ஆகிய பண்பு.” 3

இயேசு கிறிஸ்து ஜனங்களை ஆழ்ந்து பார்க்கிறார். அவர் தனிநபர்களையும், அவர்களின் தேவைகளையும், அவர்கள் யார் ஆக முடியும் என்பதையும் பார்க்கிறார். மற்றவர்கள் மீனவர்கள், பாவிகள் அல்லது பொது மக்களைக் கண்ட இடத்தில், இயேசு சீஷர்களைக் கண்டார்; மற்றவர்கள் பிசாசுகளால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனைக் கண்டார்கள், இயேசு வெளிப்புற துயரத்தைக் கடந்து பார்த்தார், அவனை ஏற்றுக் கொண்டார், குணப்படுத்தினார். 4

நம்முடைய சுறுசுறுப்பான வாழ்க்கையில் கூட, நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி தனிநபர்களை , அவர்களின் தேவைகள், நம்பிக்கை, போராட்டம், அவர்கள் யார் ஆகலாம் எனக் காணலாம். 5

நான் பொதுவாகக் காணாத விஷயங்களைக் காண என் கண்களைத் திறக்கும்படி கரத்தரிடம் ஜெபம் செய்யும்போது, நான் அடிக்கடி இரண்டு கேள்விகளைக் கேட்டு, வரும் எண்ணங்கள் குறித்து கவனம் செலுத்துகிறேன்: ”நான் செய்கிற எதை நிறுத்த வேண்டும் ?” மற்றும் “நான் என்ன செய்யத் தொடங்க வேண்டியதை செய்யவில்லை?” 6

பல மாதங்களுக்கு முன்பு, திருவிருந்தின்போது, இந்த கேள்விகளை நானே கேட்டுக்கொண்டேன், வந்த எண்ணத்தால் ஆச்சரியப்பட்டேன். “நீங்கள் வரிசையில் காத்திருக்கும்போது உங்கள் தொலைபேசியைப் பார்ப்பதை நிறுத்துங்கள்.” வரிசைகளில் எனது தொலைபேசியைப் பார்ப்பது கிட்டத்தட்ட தானியக்கமாகி விட்டது; பல வேலைகள் செய்ய, மின்னஞ்சலைப் படிக்க, தலைப்புச் செய்திகளைப் பார்க்க அல்லது ஒரு சமூக ஊடக ஊட்டத்தைப் பார்க்க இது ஒரு நல்ல நேரம் என்று நான் கண்டேன்.

அடுத்த நாள் காலையில், கடையில் ஒரு நீண்ட வரிசையில் காத்திருந்தேன். நான் என் தொலைபேசியை வெளியே எடுத்தேன், பின்னர் நான் பெற்ற எண்ணம் நினைவுக்கு வந்தது. நான் என் தொலைபேசியை ஒதுக்கி வைத்துவிட்டு சுற்றிலும் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒரு வயதான மனிதரைப் பார்த்தேன். பூனை உணவின் ஒரு சில கேன்கள் தவிர அவரது வண்டி காலியாக இருந்தது. நான் கொஞ்சம் அசிங்கமாக உணர்ந்தேன், ஆனால் உண்மையில் இது போன்ற புத்திசாலித்தனமான ஒன்றைச் சொன்னேன், “உங்களுக்கு ஒரு பூனை இருப்பதை நான் காண முடிகிறது.” புயல் வந்து கொண்டிருப்பதாகவும், பூனை உணவு இல்லாமல் இருக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறினார். நாங்கள் சிறிது நேரம் சந்தித்தபோது, பின்னர் அவர் என்னிடம் திரும்பி, “உங்களுக்குத் தெரியுமா, நான் இதை யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் இன்று எனது பிறந்த நாள்.” என் இதயம் உருகியது. நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன், மேலும் தேவைப்படும் மற்றொரு நபரை உண்மையிலேயே பார்க்கவும் தொடர்புகொள்ளவும் ஒரு வாய்ப்பை இழந்திருக்க, எனது தொலைபேசியை பயன்படுத்தவில்லை என்பதற்காக ஒரு மவுனமான ஜெபம் செய்தேன்.

எரிகோவுக்குச் செல்லும் பாதையில் ஆசாரியன் அல்லது லேவியனைப் போல இருக்க நான் என் முழு இருதயத்தோடு விரும்பவில்லை. 7 ஆனால் பெரும்பாலும் நான் தான் என்று நினைக்கிறேன்.

தேவனுக்கான எனது கடமையைப் பார்த்தல்

ரோஸ்லின் என்ற இளம் பெண்ணிடமிருந்து ஆழமாகப் பார்ப்பதைப்பற்றி நான் சமீபத்தில் ஒரு மதிப்புமிக்க பாடம் கற்றுக்கொண்டேன்.

20 வருடமாக உடனிருந்த அவளது கணவர் வெளியேறியபோது சின்னாபின்னமான எனது சிநேகிதி இந்த கதையை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். அவளுடைய பிள்ளைகள் பெற்றோர்களிடையே நேரத்தைப் பிரித்துக்கொள்வதால், சபைக்கு தனியாகச் செல்வதற்கான வாய்ப்பு அச்சுறுத்தலாகத் தெரிந்தது. அவள் நினைவுகூர்கிறாள்:

“குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சபையில், தனியாக உட்கார்ந்துகொள்வது வேதனையாக இருக்கும். அந்த முதல் ஞாயிற்றுக்கிழமை யாரும் என்னிடம் பேசக்கூடாது என ஜெபித்துக்கொண்டு உள்ளே சென்றேன். நான் அதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன், கண்ணீர் விளிம்பில் வந்தது. பெஞ்ச் எவ்வளவு காலியாக இருந்தது என்பதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நான் எனது வழக்கமான இடத்தில் அமர்ந்தேன்.

“எங்கள் தொகுதியின் ஒரு இளம் பெண் திரும்பி என்னைப் பார்த்தாள். நான் சிரிப்பது போல் நடித்தேன். அவள் திரும்ப சிரித்தாள். அவளுடைய முகத்தில் இருந்த அக்கறையை என்னால் பார்க்க முடிந்தது. அவள் என்னுடன் பேச வரக்கூடாது என்று நான் அமைதியாக ஜெபித்தேன், என்னிடம் சொல்வதற்கு சாதகமாக எதுவும் இல்லை, நான் அழுவேன் என்று எனக்குத் தெரியும். நான் என் மடியில் திரும்பிப் பார்த்தேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன்.

“அடுத்த ஒரு மணி நேரத்தில், அவள் எப்போதாவது என்னைத் திரும்பிப் பார்ப்பதை நான் கவனித்தேன். கூட்டம் முடிந்தவுடன், அவள் என்னிடம் வந்தாள் ‘ஹாய் ரோஸ்லின்,’ நான் கிசுகிசுத்தேன். அவள் என்னை தன் கைகளால் அணைத்து, ‘சகோதரி ஸ்மித், இன்று உங்களுக்கு ஒரு மோசமான நாள் என்று என்னால் சொல்ல முடியும். நான் வருந்துகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்.“ நினைத்துபோலவே, அவள் என்னை மீண்டும் கட்டிப்பிடித்தபோது கண்ணீர் வந்தது. ஆனால் நான் விலகிச் செல்லும்போது, ‘ஒருவேளை இதை எல்லாம் என்னால் செய்ய முடியும்’ என்று நினைத்தேன்.

படம்
ரோஸ்லின் மற்றும் சகோதரி ஸ்மித்

“அந்த இனிமையான 16 வயது இளம் பெண், என் வயதில் பாதிக்கும் குறைவானவள், அந்த ஆண்டின் மீதி பாகத்திலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னைக் கட்டிப்பிடித்து,‘ நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ’என்று கேட்டாள். சபைக்கு வருவதைப்பற்றி நான் உணர்ந்ததில் இது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. உண்மை என்னவென்றால், நான் அந்த அணைப்புகளை சார்ந்திருக்கத் தொடங்கினேன். யாரோ என்னை கவனித்தனர். நான் அங்கு இருப்பதை யாரோ அறிந்தார்கள். யாரோ அக்கறை காட்டினர். ”

பிதா மிகவும் விருப்பத்துடன் அளிக்கும் எல்லா பரிசுகளையும் போலவே, ஆழமாகப் பார்க்க நாம் அவரிடம் கேட்கவும் பின்னர் செயல்படவும் வேண்டும். மற்றவர்களை அவர் பார்ப்பது போல பார்க்க கேளுங்கள், அவருடைய உண்மையான மகன்களும் மகள்களும் எல்லையற்ற மற்றும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள். பின்பு அன்பு செலுத்தியும், சேவை செய்தும் தூண்டப்பட்டபடி அவர்களது தகுதியையும் திறமையையும் உறுதி செய்தும் செயலாற்றுங்கள். இது நம் வாழ்வின் மாதிரியாக மாறும் போது, நாம் “இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக” மாறுவதைக் காண்போம். 8 மற்றவர்கள் நம்முடைய இருதயங்களை அவர்களது இருதயங்களுடன் நம்ப முடியும். இந்த மாதிரியில் நமது சொந்த உண்மையான அடையாளத்தையும் நோக்கத்தையும் கண்டுபிடிப்போம்.

படம்
இரட்சகர் போதித்தார்:

அவளது வீட்டில் சுவிசேஷத்தின்படி வாழ்ந்த 20 வருட முயற்சிகள் அனைத்தும் பயனற்றதா என்று வியந்து, அதே வெற்று வராண்டாவில் தனியாக உட்கார்ந்திருந்தபோது என் சிநேகிதி மற்றொரு அனுபவத்தை நினைவு கூர்ந்தாள். அவளுக்கு அமைதிப்படுத்தும் உறுதியைவிட அதிகமாக தேவைப்பட்டது; அவளுக்கு கண்ணோட்டம் தேவை. ஒரு கேள்வி அவள் இதயத்தைத் துளைப்பதை அவள் உணர்ந்தாள்: “நீ ஏன் அந்த காரியங்களைச் செய்தாய்? வெகுமதிக்காகவோ, மற்றவர்களின் புகழுக்காகவோ அல்லது விரும்பிய முடிவுக்காகவோ நீ அவற்றைச் செய்தாயா? ” அவள் ஒரு கணம் தயங்கினாள், அவள் இதயத்தில் தேடினாள், பின்னர் நம்பிக்கையுடன் பதிலளிக்க முடிந்தது, “நான் இரட்சகரை நேசிப்பதால் நான் அவற்றை செய்தேன். நான் அவருடைய சுவிசேஷத்தை நேசிக்கிறேன். “ கர்த்தர் அவள் பார்க்கும்படிக்கு உதவ அவளுடைய கண்களைத் திறந்தார். இந்த எளிய ஆனால் சக்திவாய்ந்த கண்ணோட்ட மாற்றம், அவளுடைய சூழ்நிலைகளாக இருந்தபோதிலும், கிறிஸ்துவை விசுவாசிப்பதைத் தொடர அவளுக்கு உதவியது.

கடினமாக இருக்கும்போது கூட, நாம் சோர்வடையும்போது கூட, நாம் தனிமையாக இருக்கும்போது கூட, விளைவுகள் நாம் நம்பியது போல இல்லாவிட்டாலும் கூட, பார்க்க இயேசு கிறிஸ்து நமக்கு கண்களைக் கொடுக்க முடியும் என நான் சாட்சியமளிக்கிறேன். அவருடைய கிருபையின் மூலம், அவர் நம்மை ஆசீர்வதிப்பார், நம்முடைய திறனை அதிகரிப்பார். பரிசுத்த ஆவியின் வல்லமை மூலம், நாம் பார்க்கவும் அவர் பார்ப்பதுபோல பார்க்கவும் கிறிஸ்து நமக்கு சாத்தியமாக்குவார். அவருடைய உதவியுடன், மிகவும் அவசியமானதை நாம் பிரித்தறியலாம். நம்முடைய வாழ்க்கையின் சாதாரண விவரங்கள் மூலமாகவும், கர்த்தருடைய கரம் செயல்படுவதையும் நாம் காண ஆரம்பிக்கலாம் - நாம் ஆழமாகக் காண்போம்.

பின்னர், அந்த மகத்தான நாளில் “அவர் தோன்றும் போது நாம் அவரைப் போலவே இருப்போம், ஏனெனில் அவர்போல நாம் , அவரைப் பார்ப்போம். இந்த நம்பிக்கையை நாம் பெறுவதே” 9 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது ஜெபமாகும், ஆமென்.

குறிப்புகள்

  1. 2 இராஜாக்கள் 6:15–17.

  2. இளம்பெண்கள் தலைப்பு ChurchofJesusChrist.org.

  3. David Brooks, “Finding the Road to Character” (Brigham Young University forum address, Oct. 22, 2019), speeches.byu.edu.

  4. மாற்கு 5:1–15 பார்க்கவும்.

  5. “சாத்தியமான தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் சமுதாயத்தில் வாழ்வது ஒரு கடினமான விஷயம், நீங்கள் பேசக்கூடிய மிகவும் ஆர்வமற்ற நபர் ஒரு நாள் ஒரு உயிரினமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வது, அதை இப்போது பார்த்தால், நீங்கள் வணங்குவதற்கு வலுவாக ஆசைப்படுவீர்கள் … சாதாரண மக்கள் யாரும் இல்லை.” (C. S. Lewis, The Weight of Glory [2001], 45–46).

  6. Kim B. Clark, “Encircled about with Fire” (Seminaries and Institutes of Religion satellite broadcast, Aug. 4, 2015), ChurchofJesusChrist.org.

  7. (லூக்கா 10:30–32 ) பார்க்கவும்.

  8. மரோனி 7:48

  9. மரோனி 7:48; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.