பொது மாநாடு
கிறிஸ்துவின் கலாச்சாரம்
அக்டோபர் 2020 பொது மாநாடு


கிறிஸ்துவின் கலாச்சாரம்

நமது பூமிக்குரிய தனிப்பட்ட கலாச்சாரங்களில் சிறந்தவற்றில் நாம் மகிழ்ந்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திலிருந்து வருகிற நித்திய கலாச்சாரத்தில் முழுமையாக பங்கேற்பவர்களாக இருக்கலாம்.

ஒவ்வொன்றும் கலாச்சாரத்தில் வளமையாயிருக்கிற, நூற்றுக்கணக்கான நாடுகளிலும் ஆயிரக்கணக்கான குழுக்களிலும் பரவியுள்ள, மக்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வரலாறுகளின் பெரும் பன்முகத்தன்மையின் வீடாயிருக்கிற என்ன ஒரு மகத்துவமான உலகத்தில் நாம் வாழ்ந்து பகிர்ந்துகொண்டிருக்கிறோம், பெருமைப்படவும் கொண்டாடவும் மனுக்குலத்திற்கு மிக அதிகமிருக்கிறது. ஆனால், நாம் வளரும் கலாச்சாரங்களால் அந்தக் காரியங்களான கற்றறிந்த நடத்தைள் நம் வாழ்வில் ஒரு பெரிய பலமாக செயல்படக்கூடும் என்றாலும், அது சில நேரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க தடையாக மாறவும்கூடும்.

கலாச்சாரம் நம் சிந்தனையிலும் நடத்தையிலும் மிக ஆழமாக பதிந்திருப்பதால் மாற்றுவது சாத்தியமில்லை எனத் தோன்றக்கூடும். அனைத்திற்கும் மேலாக, நாம் உணருவது நம்மை வரையறுக்கிறது, அதிலிருந்து ஒரு அடையாளத்தை நாம் உணருகிறோம். நமது சொந்த கலாச்சாரங்களில் மனிதன் உருவாக்கிய பலவீனங்கள் அல்லது குறைகளைப் பார்க்க நாம் தவறிய இது ஒரு வகையான பலத்த செல்வாக்காயிருக்கலாம், அதன் விளைவாக நமது “தகப்பன்களின் மரபுகளை” தூக்கி எறிய தயக்கம் ஏற்படுகிறது. ஒருவரின் கலாச்சார அடையாளத்தை அதிகமாக நிர்ணயிப்பது, தெய்வீக கருத்துக்கள், பண்புக்கூறுகள் மற்றும் நடத்தை ஆகியவற்றையும் நிராகரிக்க வழிவகுக்கக்கூடும்.

இந்த கலாச்சார கிட்டப்பார்வையின் உலகளாவிய கொள்கையைச் சித்தரிக்க உதவுகிற ஒரு அற்புதமான மனிதரை சிலஆண்டுகளுக்கு முன்பு எனக்குத் தெரியும். அவருடைய வீட்டுப்போதகராக நான் நியமிக்கப்பட்டபோது, சிங்கப்பூரில் நான் அவரை முதலாவதாக சந்தித்தேன். சமஸ்கிருதம் மற்றும் தமிழில் ஒரு சிறப்பான பேராசிரியரான அவர் தென்இந்தியாவைச் சேர்ந்தவர். அவருடைய அற்புதமான மனைவியும் இரண்டு மகன்களும் சபையின் அங்கத்தினர்கள், ஆனால் அவர் சபையில் சேரவில்லை, சுவிசேஷத்தைப்பற்றிய போதனைகளுக்கும் அதிகமாய் அவர் செவிகொடுக்கவில்லை. அவருடைய மனைவியும் பிள்ளைகளும் முன்னேறிக்கொண்டிருந்ததில் அவர் சந்தோஷப்பட்டு, அவர்களுடைய புரிந்துகொள்ளுதலிலும், சபை பொறுப்புகளிலும் அவர்களை முழுமையாக ஆதரித்தார்.

சுவிசேஷத்தின் கொள்கைகளை அவருக்குப் போதிக்கவும், அவருடன் நமது நம்பிக்கைகளைப் பகிர்நதுகொள்ள நான் முன்வந்தபோது ஆரம்பத்தில அவர் தடுத்தார். ஏன் என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு சிறிது காலமானது, அப்படிச் செய்வதால் அவருடைய கடந்த காலத்திற்கும், மக்களுக்கும், அவருடைய வரலாற்றிற்கும் அவர் ஒரு துரோகியாகிவிடுவார் என அவர் உணர்ந்தார். அவராக இருந்த அனைத்தையும், அவரது குடும்பத்தினர் அவருக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தையும், அவருடைய இந்திய பாரம்பரியத்தையும் மறுப்பார் என அவருடைய சிந்தனையில் அவர் நினைத்தார். அடுத்த சில மாதங்களில் இந்த விவகாரங்களைப்பற்றி எங்களால் பேச முடிந்தது. ஒரு வித்தியாசமான பார்வையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எவ்வாறு அவருடைய கண்களைத் திறக்க முடிகிறது என்பதில் நான் திகைத்தேன் (ஆச்சரியப்படாவிட்டாலும்!)

மனிதன் உருவாக்கிய கலாச்சாரங்களில் அநேகமானதில், நல்லதும் கெட்டதும், ஆக்கப்பூர்வமானதும் அழிவுக்கேதுவானதும் காணப்படுகிறது.

அவர்களின் கலாச்சாரத்திலிருந்து எழும் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கிடையேயான மோதல்களின் நேரடி முடிவே, நமது உலகத்தின் பிரச்சினைகளில் அநேகமானவை. ஆனால், மிகச் சமீப காலத்தில் நாம் அனைவரும் கொண்டிருக்கிற ஒன்றின் “அசல் கலாச்சாரத்தை” மட்டுமே உலகம் ஏற்றுக்கொண்டால், அனைத்து மோதல்களும் குழப்பங்களும் விரைவில் மங்கிவிடும். இந்த கலாச்சாரம் நமது அநித்திய இருப்புக்கு முந்தையதற்கும் முந்தியது. இது ஆதாம், ஏனோக்கின் கலாச்சாரம். அது, தீர்க்கரேகையின் நேரத்தில் இரட்சகரின் போதனைகளின்மேல் ஸ்தாபிக்கப்பட்ட கலாச்சாரம், நமது நாட்களில் மீண்டும் ஒருமுறை அது எல்லா பெண்களுக்கும் ஆண்களுக்கும் கிடைக்கிறது. இது தனித்துவமானது அது, கலாச்சாரங்கள் அனைத்திலும் மிகப்பெரியது, தேவனாலும், வீரர்களாலும் கிறிஸ்துவால் எழுதப்பட்ட மகத்தான சந்தோஷத்தின் திட்டத்திலிருந்து வருகிறது. இது பிரிப்பதற்குப் பதிலாக இணைக்கிறது. இது காயப்படுத்துவதற்குப் பதிலாக குணப்படுத்துகிறது.

வாழ்க்கைக்கு நோக்கமிருக்கிறதென இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நமக்குப் போதிக்கிறது. நாம் இங்கு ஜீவிப்பது சில அண்ட விபத்தோ அல்லது தவறோ அல்ல. ஒரு காரணத்திற்காக நாம் இங்கிருக்கிறோம்.

நமது பரலோக பிதா ஜீவிக்கிறார் என்கிற, அவர் உண்மையானவர், நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேசிக்கிறார் என்கிற சாட்சியில் இந்த கலாச்சாரம் அடித்தளமாக்கப்பட்டிருக்கிறது. நாம் அவருடைய “கிரியையும் மகிமையுமாயிருக்கிறோம்.” 1 சம மதிப்பு என்ற கருத்தை இந்த கலாச்சாரம் ஆதரிக்கிறது. ஜாதி அல்லது வர்க்கத்தின் அடையாளம் எதுவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் சகோதர சகோதரிகள், நமது பரலோக பெற்றோரின் ஆவிப் பிள்ளைகள். அங்கே பாரபட்சம் எதுவுமில்லை அல்லது, அனைத்து கலாச்சாரங்களிலும் மிகப்பெரியது என்ற மனநிலையில் நமக்கு எதிர் அவர்கள் என்றில்லை. நாம் என்பது “நாம்” அனைவரும். நாம் “அவர்கள்” அனைவரும். நமக்கும், ஒருவருக்கொருவருக்கும், சபைக்கும், நமது உலகத்திற்கும் நாம் பொறுப்புள்ளவர்களாயும், கணக்கொப்புவிப்பவர்களாயும் இருக்கிறோம் என்பதை நாம் நம்புகிறோம். நமது வளர்ச்சியில் பொறுப்பும், கணக்கொப்புவித்தலும் முக்கியமான காரணிகள்.

தயாளம், கிறிஸ்துவைப் போன்ற உண்மையான அக்கறை இந்த கலாச்சாரத்தின் அடித்தளம். நமது சகமனிதர்களின் சரீரத்துக்குரிய ஆவிக்குரிய தேவைகளுக்காக நாம் உண்மையில் அக்கறையுள்ளவர்களாக உணர்ந்து, அந்த உணர்வுகளின்படி செயல்படுகிறோம். இது தப்பெண்ணத்தையும் வெறுப்பையும் விரட்டுகிறது.

தீர்க்கதரிசிகளால் பெறப்படுகிற தேவ வார்த்தைகளில் மையமான வெளிப்படுத்தலின் கலாச்சாரத்தை நாம் அனுபவிக்கிறோம். (பரிசுத்த ஆவியின் மூலமாக நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்களாக சரி பார்க்கலாம்) தேவனின் விருப்பத்தையும் மனதையும் மனுக்குலம் அனைத்தாலும் அறியமுடியும்.

இந்த கலாச்சாரம் சுயாதீனத்தின் கொள்கையை ஆதரிக்கிறது. நமது முன்னேற்றத்திற்கும், நமது சந்தோஷத்திற்கும் தேர்ந்தெடுக்கும் திறமை மிகவும் முக்கியம். புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்தல் அத்தியாவசியம்.

கற்றுக்கொள்ளும் மற்றும் படிக்கும் இது ஒரு கலாச்சாரம். அறிவையும் ஞானத்தையும் சகல காரியங்களிலும் சிறந்ததை நாம் நாடுகிறோம்.

இது விசுவாசத்தின் கீழ்ப்படிதலின் ஒரு கலாச்சாரம். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் நமது கலாச்சாரத்தின் முதல் கொள்கை, அவருடைய போதனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிதலின் விளைவாயிருக்கிறது. இவை சுய தேர்ச்சிக்கு உயர்த்துகிறது.

இது ஜெபத்தின் ஒரு கலாச்சாரம் தேவன் நமக்கு செவிகொடுப்பது மட்டுமல்ல, நமக்கு உதவவும் செய்கிறார் என நாம் நம்புகிறோம்.

உடன்படிக்கைகளுக்கும் நியமங்களுக்கும், உயர் ஒழுக்க தரங்கள், தியாகம், மன்னிப்பு, மனந்திரும்புதல், நமது சரீர ஆலயத்தின்மீது அக்கறை போன்றவற்றின் கலாச்சாரம். இவை அனைத்தும் தேவனுக்கு நமது ஒப்புக்கொடுத்தலை சாட்சியளிக்கிறது.

தேவனுடைய நாமத்தில் செயல்பட அதிகாரமான, அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க தேவனின் வல்லமையான ஆசாரியத்துவத்தால் ஆளுகை செய்யப்படுகிற இது ஒரு கலாச்சாரம். இது திருத்துகிறது, தனிப்பட்டவர்களைச் சிறந்த மக்களாக, தலைவர்களாக, தாய்மார்களாக, தகப்பன்மார்களாக, தோழர்களாக மாற்ற சாத்தியப்படுத்தி வீட்டை பரிசுத்தப்படுத்துகிறது.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை உருவாக்கிய கலாச்சாரங்களினால் மிகப்பழமையான ஆசாரியத்துவத்தின் வல்லமை, ஜெபம், சுயமுன்னேற்றம், உண்மையான மனமாற்றம், மன்னிப்பு இதைச் சுற்றியுள்ள உண்மையான அற்புதங்கள்.

இது ஊழியப்பணியின் ஒரு கலாச்சாரம். ஆத்துமாக்களின் மதிப்பு மிகப்பெரியது.

கிறிஸ்துவின் கலாச்சாரத்தில், அவர்களின் நிறைவான, நித்திய அந்தஸ்துக்கு பெண்கள் உயர்த்தப்பட்டார்கள். இன்றைய உலகத்தில் அநேக கலாச்சாரத்திலிருப்பதைப்போல அவர்கள் ஆண்களுக்கு அடிபணிந்தவர்களில்லை, ஆனால் இங்கேயும் வரப்போகிற உலகத்திலும் முழுமையான சமமான பங்குதாரர்கள்.

இந்த கலாச்சாரம் குடும்பத்தின் புனிதத்தை அனுமதிக்கிறது. குடும்பம் நித்தியத்தின் அடிப்படை அங்கம். “வீட்டில், தோல்விகளை எந்த பிற வெற்றிகளும் ஈடுசெய்ய முடியாது என போதிக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தின் நிறைவு எந்த தியாகத்திற்கும் மதிப்புள்ளதாயிருக்கும்.” 2 நமது சிறந்த வேலை செய்யப்படுகிறதும் நமது மிகப் பெரிய சந்தோஷம் அடையப்படுகிறதும் வீட்டில்தான்.

கிறிஸ்துவின் கலாச்சாரத்தில் முன்னோக்கும், நித்திய கவனமும், வழிகாட்டுதலுமிருக்கிறது. நீடித்த தகுதியின் காரியங்களுடன் இந்த கலாச்சாரம் அக்கறை கொண்டுள்ளது. நித்தியமானதும், நமது இருப்பில் “ஏன்” “என்ன” “எங்கே” என்பதை விவரிக்கிற, இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திலிருந்து வருகிறது. (இது உள்ளடக்கியது, பிரத்தியேகமானது அல்ல.) நமது இரட்சகரின் போதனைகளின் பயன்பாட்டிலிருந்து இந்த கலாச்சாரம் விளைகிறதால், நமது உலகம் அத்தகைய ஆற்றொண்ணா தேவையிலிருக்கிறதில், அது குணப்படுத்தும் தைலத்தை வழங்க உதவுகிறது.

வாழ்க்கை இந்த பிரம்மாண்டமான, உன்னதமான முறையின் ஒரு பகுதியாக இருப்பது எத்தகைய ஒரு ஆசீர்வாதம்! அனைத்துக் கலாச்சாரங்களிலும் மிகப்பெரிய இதன் ஒரு பகுதியாக இருக்க மாற்றம் தேவைப்படுகிறது. கிறிஸ்துவின் கலாச்சாரத்திற்கு பொருத்தமாய் இல்லாத நமது பழைய கலாச்சாரங்கள் எதையும் விட்டுவிடுவது அவசியமானதென தீர்க்கதரிசிகள் போதித்திருக்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டுமென அதற்கு அர்த்தமாகாது. நமது வாழ்க்கையிலும் நமது தனிப்பட்ட கலாச்சாரங்களிலுமுள்ள நமது விசுவாசத்தை, திறமைகளை, அறிவை நம்முடன் கொண்டுவர, நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம், சுவிசேஷத்தின் செய்தியின் மூலமாக சபை அதனுடன் சேர்க்கட்டுமென, தீர்க்கதரிசிகளும்கூட வலியுறுத்தினார்கள். 3

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை ஒரு மேற்கத்திய சமுதாயமோ அல்லது அமெரிக்க கலாச்சார நிகழ்வோ அல்ல. எப்போதும் அது இருப்பதைப்போல, இது ஒரு சர்வதேச சபை. அதற்கும் மேலாக, இது ஒரு தெய்வீகக் காரியம். உலகமுழுவதிலுமுள்ள புதிய அங்கத்தினர்கள், செழுமையையும், பன்முகத்தன்மையையும், என்றைக்கும் வளர்ந்துவரும் நமது குடும்பத்தில் உற்சாகத்தையும் கொண்டுவருகிறது. எல்லா இடங்களிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்கள், தங்களுடைய சொந்த மரபுகளையும், கதாநாயகர்களையும் இன்னமும் கொண்டாடுகிறார்கள் மதிக்கிறார்கள், ஆனால் இப்போது அவர்கள் மிக மதிப்புள்ளதான ஒன்றிற்கும் பங்காயிருக்கிறார்கள். உண்மையில் நாமிருக்கிறதைப் போல நம்மைப் பார்க்க கிறிஸ்துவின் கலாச்சாரம் நமக்குதவுகிறது, நீதியில் உறுதியாக்கப்பட்ட நித்தியத்தின் கண்ணாடி வழியே பார்க்கப்படும்போது, சந்தோஷத்தின் மகா திட்டத்தை நிறைவேற்ற நமது திறமையை அதிகரிக்க அது செயல்படுகிறது.

ஆகவே என்னுடைய நண்பருக்கு என்ன நேர்ந்தது? நல்லது, பாடங்கள் அவருக்குப் போதிக்கப்பட்டு அவர் சபையில் சேர்ந்தார். அப்போதிலிருந்து, அவருடைய குடும்பம் சிட்னி ஆலயத்தில் காலத்திற்கும் நித்தியம் முழுமைக்கும் முத்திரிக்கப்பட்டார்கள். அவர் சிறிதே விட்டுக்கொடுத்தார், எல்லாவற்றின் திறனையும் பெற்றுக்கொண்டார். இன்னமும் அவருடைய வரலாற்றை அவர் கொண்டாட முடியும், அவருடைய வம்சாவளியை, அவருடைய இசையை, நடனத்தை, இலக்கியத்தை, அவருடைய உணவை, அவருடைய நாட்டை, அவருடைய மக்களைப்பற்றி இன்னமும் பெருமைப்படமுடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அனைத்துக் கலாச்சாரங்களிலும் மகத்தானவற்றுடன், அவருடைய உள்ளூர் கலாச்சாரத்தில் சிறந்தவற்றை இணைப்பதில் எந்த பிரச்சினையுமில்லை என்பதை அவர் கண்டுபிடித்தார். தனது பழைய வாழ்க்கையிலிருந்து சத்தியம் மற்றும் நீதியுடன் ஒத்துப்போகும் விஷயங்களை தனது புதிய வாழ்க்கையில் கொண்டுவருவது பரிசுத்தவான்களுடனான தனது ஐக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பரலோக சங்கத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க உதவுவதற்கும் மட்டுமே உதவுகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார்.

பூமிக்குரிய நமது தனிப்பட்ட கலாச்சாரங்களில் நாம் அனைவரும் நிச்சயமாக மகிழமுடியும், அசலானதும் இறுதியானதுமான இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திலிருந்து வருகிற நித்திய கலாச்சாரமான அவைகள் எல்லாவற்றிலும் மிகப்பழைய கலாச்சாரத்தில் இன்னமும் நாம் பங்கேற்பவர்களாக இருக்கலாம். என்ன ஒரு அற்புதமான மரபில் நாம் அனைவரும் பங்கேற்கிறோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. மோசே 1:39.

  2. J. E. McCulloch, in Teachings of Presidents of the Church: David O. McKay (2011), 154.

  3. Teachings of Presidents of the Church: George Albert Smith (2011), xxviii; Gordon B. Hinckley, “The Marvelous Foundation of Our Faith,” Liahona, Nov. 2002, 78–81 பார்க்கவும்.