பொது மாநாடு
கர்த்தருக்குக் காத்திருத்தல்
அக்டோபர் 2020 பொது மாநாடு


கர்த்தருக்குக் காத்திருத்தல்

நமது சார்பில் அவருடைய கரம் வெளிப்படுவதை நாம் காணும் வரை சில துன்பங்களை அவை உள்ளடக்கியிருந்தாலும் கூட, நல்ல நேரத்திலும் கெட்ட காலத்திலும் தேவனை நம்பியிருத்தல் என்பதே விசுவாசத்தின் பொருள்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் ஆர்வமாயிருக்கிறோம். நமது அன்பான தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சனின் நிறைவு உரையைக் கேட்க, என்னைவிட ஆர்வமுள்ளோர் யாருமில்லை. இது ஒரு அற்புதமான மாநாடு, ஆனால் இரண்டாவது முறையாக கோவிட்-19 தொற்றுநோய் நமது பாரம்பரிய நடவடிக்கைகளை மாற்றியுள்ளது. நாம் நமது தலைமுடியைப் பிடுங்க வேண்டும் என்று நினைக்கிறவாறு, இந்த தொற்றுநோயால் நாம் மிகவும் சோர்வடைந்து இருக்கிறோம். வெளிப்படையாக, எனது சகோதரர்களில் சிலர் ஏற்கனவே அந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக, விசேஷமாக அன்பானவர்களை இழந்தவர்களுக்காக நாங்கள் தொடர்ந்து ஜெபிக்கிறோம் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். இது மிக மிக நீண்ட காலமாக இருந்துவிட்டது என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

நம்மீது வருகிற கஷ்டங்களிலிருந்து நிவாரணத்துக்கு நாம் எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும்? நாம் காத்திருந்து காத்திருந்து, உதவி வருவது மிகத் தாமதமாகத் தோன்றும்போது நமது தனிப்பட்ட சோதனைகளில் எவ்வாறு நிலைத்திருப்பது? நம்மால் தாங்கமுடிகிறதைவிட சுமைகள் மிக அதிகமாகத் தோன்றும்போது ஏன் இந்த தாமதம்?

இத்தகையக் கேள்விகளைக் கேட்கும்போது, அந்த நேரத்தில், அந்த இடத்தில் பதிவானதில் மிகக் குளிரான குளிர்காலத்தில், ஒரு இருண்ட சிறைச்சாலையின் ஈரத்தொட்டியிலிருந்து எதிரொலித்த மற்றொருவரின் கூக்குரலை நாம் முயற்சித்தால் கேட்க முடியும்.

லிபர்டி சிறைச்சாலையின் ஆழத்திலிருந்து நாம் கேட்கிறோம், “தேவனே நீர் எங்கே இருக்கிறீர்?”. “உம்முடைய மறைவான இடத்தை மூடியிருக்கிற கூடாரம் எங்கே? எம்மட்டும் உமது கரம் தடுக்கப்படும்?”1 எதுவரைக்கும் கர்த்தாவே, எதுவரைக்கும்?

ஆகவே, துக்கங்கள் நம்மை கீழே அழுத்தும்போது, அல்லது நமது இருதயத்தில் ஒரு வலி தொடர்ந்திருக்கும்போது இத்தகைய கேள்விகளைக் கேட்க நாம் முதலாமவர்களுமில்லை கடைசியானவர்களுமில்லை. தொற்று நோயை அல்லது சிறைச்சாலைகளைப்பற்றி இப்போது நான் பேசிக்கொண்டிருக்கவில்லை, ஆனால், அநேக சவால்களை எதிர்கொள்கிற உங்களைப்பற்றி, உங்கள் குடும்பத்தைப்பற்றி, உங்கள் அண்டைவீட்டாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். திருமணம் செய்துகொள்ள விரும்புகிற, செய்துகொள்ளாதவர்களின் ஏக்கங்களை அல்லது திருமணம் செய்து, உறவு இன்னும் சிறிது அதிக சிலஸ்டியலாக இருக்க விரும்புகிறவர்களைப்பற்றி நான் பேசுகிறேன். ஒரு தீவிர மருத்துவ நிலையின் தேவையற்ற நிலையை சமாளிக்க வேண்டியவர்களைப்பற்றி, ஒருவேளை குணப்படுத்த முடியாத ஒன்று, அல்லது எந்தவொரு தீர்வும் இல்லாத மரபணு குறைபாட்டுடன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்கொள்பவர்களைப்பற்றி நான் பேசுகிறேன். அது அவர்களுடன் கஷ்டப்படும் அநேகரின் ஆத்துமாக்களின் மீதும், அவர்களை நேசிக்கும் மற்றும் துன்பப்படுபவர்களின் இதயங்களின் மீதும் பெரிதான பாரமாயிருக்கிற, உணர்ச்சி மற்றும் மனநல சவால்களுடன் தொடர்ச்சியான போராட்டத்தைப்பற்றி நான் பேசுகிறேன். ஒருபோதும் மறக்கக்கூடாதென இரட்சகர் நமக்குக்கூறிய ஏழைகளைப்பற்றி நான் பேசுகிறேன், அவன் அல்லது அவள் செல்லவேண்டுமென நீங்கள் ஜெபித்த ஒரு பாதையிலிருந்து வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்த, வயதைப் பொருட்படுத்தாது ஒரு பிள்ளை திரும்பிவருவதற்காகக் காத்திருக்கிற உங்களைப்பற்றி நான் பேசுகிறேன்.

அதற்கும் மேலாக, நாம் தனிப்பட்ட முறையில் காத்திருக்கக்கூடிய இந்த நீண்ட விஷயங்களின் பட்டியல் கூட நம்மை கூட்டாக எதிர்கொள்ளும் பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அக்கறைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த மோசமான பொதுப் பிரச்சினைகளையும், அப்படியே தனிப்பட்ட பிரச்சினைகளையும் சரிசெய்ய பரலோகத்திலுள்ள நமது பிதா நம்மிடம் தெளிவாக எதிர்பார்க்கிறார், ஆனால், நம்முடைய சிறந்த ஆவிக்குரிய முயற்சி மற்றும் நேர்மையான, கெஞ்சும் ஜெபங்கள் கூட, அது பெரிய உலகளாவிய பிரச்சினைகள் அல்லது சிறிய தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியதாக இருந்தாலும், நாம் ஏங்கியிருக்கும் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொடுக்காத நேரங்கள் நம் வாழ்வில் இருக்கும், ஆகவே, நமது ஜெபங்கள் சிலவற்றிற்கான பதில்களுக்காக நாம் ஒன்றுசேர்ந்து உழைத்து காத்திருக்கும்போது, ஒருவேளை அந்த நேரத்தில் அல்லது நாம் விரும்புகிற வழியில் இல்லாதிருந்தும் அவைகள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்படுமென்கிற எனது அப்போஸ்தல வாக்குத்தத்தத்தை நான் உங்களுக்கு அருளுகிறேன். ஆனால் அவைகள் எப்போதும் அந்த நேரத்திலும், ஒரு அறிவார்ந்த மற்றும் நித்திய இரக்கமுள்ள பெற்றோர் அவைகளுக்கு பதிலளிக்கவேண்டிய வழியிலும் பதிலளிக்கப்படுகின்றன. எனக்கன்பான சகோதர சகோதரிகளே, உறங்காதவரும் தூங்காதவருமான அவர்2 அவருடைய பிள்ளைகளின் சந்தோஷத்திற்கும் முடிவான மேன்மையடைதலுக்கும், ஒரு தெய்வீக ஜீவன் செய்ய வேண்டியதற்கும் மேலாக கவனமுள்ளவராயிருக்கிறார். அவர் தூய அன்பின் மகிமையாக ஆளுமையாக்கப்பட்ட இரக்கமுள்ள பிதா என்பது அவருடைய நாமமாயிருக்கிறது.

“அது அப்படியிருந்தால் அவருடைய அன்பும் கருணையும் நமது தனிப்பட்ட செங்கடலைப் பிரித்து, நம்முடைய கஷ்டங்களை கடந்து வறண்ட நிலத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாதா? நமது தொல்லைதரும் 21வது நூற்றாண்டின் வெட்டுக்கிளிகள் எல்லாவற்றையும் விழுங்கிப்போட, எங்கேயோ இருந்து சிறகடித்து வரும் 21வது நூற்றாண்டின் கடல்பறவைகளை அவர் அனுப்பக்கூடாதா?”

இத்தகைய கேள்விகளுக்கு பதில், ஆம், தேவனால் அற்புதங்களை உடனடியாக வழங்க முடியும், ஆனால் நமது அநித்திய பயணத்தின் நேரங்களும் பருவங்களும் அவருடையதாகவும், வழிநடத்த அவர் மட்டுமே இருக்கிறார் எனவும் விரைவிலோ, பின்னரோ நாம் அறிந்துகொள்கிறோம். அந்த நாட்காட்டியை நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர் நிர்வகிக்கிறார். ஏனெனில் பெதஸ்தா குளத்தில் இறங்க அவன் காத்திருக்கையில், பலவீனமான ஒவ்வொருவனுக்கும் உடனடியாக குணமடைகிறவனுக்கும்,3 வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள் பிரவேசிக்க வனாந்தரத்தில் 40 ஆண்டுகள் ஒருவன் காத்திருப்பான்.4 அவர்களின் விசுவாசத்தால் ஒவ்வொரு நேபியும், லேகியும், சுற்றியுள்ள நெருப்பின் சுடரில், தெய்வீகத்தால் பாதுகாக்கப்பட்டவர்களுக்கும்5, நெருப்பின் சுடரால் எரிக்கப்பட்ட அபிநாதி நம்மிடம் உண்டு6. பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக சாட்சி பகர வானத்திலிருந்து நெருப்பை உடனடியாகக் கொண்டுவர அழைத்த அதே எலியாவை நாம் நினைவுகூருகிறோம்7, அதே எலியா பலஆண்டுகளாக மழை இல்லாத ஒரு நேரத்தை சமாளித்து, காகத்தின் கால்களால் கொண்டுவரப்பட்ட ஆகாரத்தை உண்டான். 8 என்னுடைய மதிப்பீட்டின்படி, அது “மகிழ்ச்சியான உணவு” என்று நாம் அழைக்கும் எதுவுமாக இருந்திருக்க முடியாது.

பொருள் என்ன? நமது சார்பில் அவருடைய கரம் வெளிப்படுவதை நாம் காணும் வரை சில துன்பங்களை அவை உள்ளடக்கியிருந்தாலும் கூட, நல்ல நேரத்திலும் கெட்ட காலத்திலும் தேவனை நம்பியிருத்தல் என்பதே விசுவாசத்தின் பொருள்.9 வாழ்க்கையில் மிக உயர்ந்த நன்மை எல்லா துன்பங்களையும் தவிர்ப்பதே என்றும், யாரும் எதைப்பற்றியும் எப்போதும் வேதனைப்படக்கூடாது என்றும், அநேகர் நம்பும்போது, நம் நவீன உலகில் அது கடினமாக இருக்க முடியும்.10 ஆனால், அந்த நம்பிக்கை, “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக” ஒருபோதும் நம்மை நடத்தாது. 11

மூப்பர் நீல் எ.மேக்ஸ்வெல் ஒருமுறை சொன்னதை மாற்றியமைக்கவும் நீட்டிக்கவும் துணிந்ததற்காக, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நானும் “ஒருவரின் வாழ்க்கை… விசுவாசம் நிறைந்ததாகவும் மன அழுத்தமில்லாமலும் இருக்க முடியாது” என்று பரிந்துரைக்கிறேன். எலுமிச்சை சாற்றின் மற்றொரு கிண்ணத்தை நாம் பருகும்போது, “வாழ்க்கையில் அப்பாவியாக சறுக்குவது” நடக்காது: “கர்த்தாவே, உமது விருப்பமான எல்லா நற்பண்புகளையும் எனக்குக் கொடும், ஆனால் எனக்கு துக்கமோ, வேதனையோ, எதிர்ப்போ உறுதியாக கொடுக்காதிரும். தயவுசெய்து, யாரும் என்னை வெறுக்காமல் அல்லது ஏமாற்றாமலிருக்கட்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, உம்மாலோ அல்லது நான் நேசிப்பவர்களோ என்னைக் கைவிட்டதாக நான் உணராமலிருக்கச் செய்யும். உண்மையில், கர்த்தாவே, உம்மை தெய்வீகமாக்கிய அனைத்து அனுபவங்களிலிருந்தும் என்னைத் தடுக்க கவனமாயிரும். பின்னர், ஒவ்வொருவராலும் கடினமான சறுக்குதல் முடிந்தபோது, நான் வந்து உம்மோடே தங்க விடும், அங்கே, என் வசதியான கிறிஸ்தவ மேகத்தின் மீது நான் மிதக்கும்போது நமது பெலன்களும் நடத்தைகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன என்பதைப்பற்றி நான் பெருமை கொள்ள முடியும்”.12

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, கிறிஸ்தவம் ஆறுதல்படுத்துகிறது, ஆனால் பெரும்பாலும் அது வசதியானதல்ல. இங்கேயும் இப்போதிருந்தும் பரிசுத்தத்திற்கும் சந்தோஷத்திற்குமான பாதை நீண்டதாகவும் சிலநேரங்களில் பாறைகள் நிறைந்ததாயும் இருக்கிறது. அதில் நடப்பதற்கு நேரமும் உறுதியும் தேவை. ஆனால், நிச்சயமாக அப்படிச் செய்வதற்கான வெகுமதி நினைவுச் சின்னமானது. இந்த உண்மை, மார்மன் புஸ்தகத்தின் ஆல்மா 32வது அதிகாரத்தில் தெளிவாகவும் வலியுறுத்தியும் போதிக்கப்படுகிறது. தேவனுடைய வார்த்தை நமது இருதயங்களில் வெறும் விதையாக விதைக்கப்பட்டால், போதுமான தண்ணீர் ஊற்றி, களை எடுத்து, போஷித்து, அதை ஊக்குவித்தால் வருங்காலத்தில் கனிகொடுக்கும், அவை “விலையேறப்பெற்றதும், தித்திப்பானவைகளைக்காட்டிலும் தித்திப்பானதுமாயிருக்கும்,” பசித்தும் விடாய்த்தும் போகாத நிலைக்கு இதைப் புசிப்பது நடத்துகிறது என இங்கே இந்த மகத்தான பிரதான ஆசாரியன் போதிக்கிறான்.13

இந்த விசேஷித்த அதிகாரத்தில் அநேக பாடங்கள் போதிக்கப்பட்டன, ஆனால், அதனுடைய கனியை விசுவாசக் கண்ணால் எதிர்நோக்கி, விதைகள் போஷிக்கப்பட்டு அது முதிர்ச்சியடைய நாம் காத்திருக்கவேண்டும் என்பது அவைகள் எல்லாவற்றிற்கும் மையமாயிருக்கிறது.14 நமது அறுவடை காலப்போக்கில் வருகிறதென ஆல்மா சொல்கிறான்15 கருத்தாய் மற்றும்பொறுமையாய் தேவனுடைய வார்த்தையை நமது இருதயங்களில் போஷிக்க “நீடிய சாந்தத்தோடு” “ காத்திருத்தல்” அவன் அழைப்பதில் மூன்று முறை திரும்பச் சொல்வதில், “விருட்சம் உங்களுக்குக் கனியைக் கொண்டுவருகிறதென” அவன் சொல்கிறபோது, அவன் தனது விசேஷித்த முடிவுரையைக் கொடுப்பது சிறிது ஆச்சரியம்.16

கோவிட்டும் புற்றுநோயும், சந்தேகமும் திகைப்பும், பணப் பிரச்சினைகளும் குடும்ப சோதனைகளும். இந்த சுமைகள் எப்போது விலக்கப்படும்? “காலப்போக்கில்”17 என்பது பதில். அது குறுகிய காலம் அல்லது நீண்ட காலமாயிருந்தாலும் எப்போதும் நாம் சொல்வதல்ல, ஆனால் தேவனின் கிருபையால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றிப்பிடிப்பவர்களுக்கு ஆசீர்வாதங்கள் வரும். அந்த விவகாரம் தனியார் தோட்டத்திலும், எருசலேமில் ஒரு பொது மலையிலும் நீண்ட காலத்திற்கு முன்பு தீர்க்கப்பட்டது.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” 18 என்பதை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ரசல் நெல்சன் செய்துகாட்டினார் என்பதை, இந்த மாநாட்டை எங்கள் அன்பான தீர்க்கதரிசி நிறைவுசெய்வதை இப்போது நாம் கேட்கும்போது, நாம் நினைவில் கொள்வோமாக. உங்கள் துக்கங்களிலிருந்து நிவாரணத்தையும் உங்களுடைய விசனத்திலிருந்து விடுதலையையும் நாடுகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் காலப்போக்கில், விரைவில் அல்லது தாமதமாக அந்த ஆசீர்வாதங்கள் வருமென நான் ஜெபிக்கிறேன். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் பதிலான தேவனின் அன்பையும் அவருடைய மகிமையான சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தையும் குறித்து நான் சாட்சி பகருகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் நாமத்தில், ஆமென்.