பொது மாநாடு
பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது மற்றும் அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்!
அக்டோபர் 2020 பொது மாநாடு


பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது மற்றும் அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்!

பொறுமையை நாம் பயன்படுத்தும்போது, நமது விசுவாசம் அதிகரிக்கிறது. நமது விசுவாசம் அதிகரிக்கும்போது, அப்படியே நம் சந்தோஷமும் அதிகரிக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய இளைய சகோதரன் சாட் திரையின் வழியே அடியெடுத்து வைத்தான். மறுபக்கத்திற்கு அவன் மாறியது, எனது மைத்துனி ஸ்டீபனிக்கு, அவர்களுடைய இரண்டு சிறுபிள்ளைகள் பிரேடன் மற்றும் பெல்லா, அப்படியே மீதியிருந்த குடும்பத்தினருக்கும் உள்ளத்தில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தியது. சாட் மரிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பொது மாநாட்டில் பேசிய மூப்பர் நீல் எல். ஆன்டர்சன்னின் வார்த்தைகளில் நாங்கள் ஆறுதலைக் கண்டோம்: “பூமிக்குரிய சோதனைகளில், பொறுமையாக முன்னேறிச் செல்வதும், இரட்சகரின் குணமாக்கும் வல்லமையும் உங்களுக்கு ஒளியை, புரிந்துகொள்ளுதலை, சமாதானத்தை, நம்பிக்கையைக் கொண்டுவரும்” (“Wounded,Liahona, Nov. 2018, 85).

படம்
சாட் ஜாகி மற்றும் குடும்பம்

இயேசு கிறிஸ்துவில் நமக்கு விசுவாசம் உண்டு, மீண்டும் நாம் சாடுடன் இணைவோம் என நாம் அறிகிறோம், ஆனால், அவனுடைய சரீர இருப்பின் இழப்பு வேதனையளிக்கிறது. அன்புக்குரியவர்களை அநேகர் இழந்துபோகிறார்கள். பொறுமையாயிருப்பதும், அவர்களுடன் இணைவதற்கான நேரத்திற்காக காத்திருப்பதும் கடினமானது.

அவன் மரித்து ஒரு ஆண்டுக்குப் பின், எங்களை ஒரு இருண்ட மேகம் சூழ்ந்திருப்பதைப்போல நாங்கள் உணர்ந்தோம். நமது வேதங்களைப் படிப்பதில், அதிக ஆர்வத்தில் ஜெபிப்பதில், மிக அடிக்கடி ஆலயத்திற்குப் போவதில் நாம் அடைக்கலத்தை நாடுகிறோம். அந்த நேரத்தில் இந்த துதிப்பாடலின் வரிகள் நமது உணர்வுகளை கவர்கிறது: “பகல் விடியல் உடைகிறது, உலகம் விழித்துக்கொள்கிறது, இரவின் இருளின் மேகங்கள் தப்பி ஓடுகிறது” (“The Day Dawn Is Breaking,” Hymns, no. 52).

2020 ஆண்டு ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஆண்டாயிருக்குமென எங்கள் குடும்பத்தினர் தீர்மானித்தார்கள். நமக்கு ஒரு கருத்து வெளிப்படுத்தப்படும்போது, கடந்த 2019ல் புதிய ஏற்பாடு புத்தகத்தின் யாக்கோபுவின் பாடத்திலுள்ள நமதுஎன்னைப் பின்பற்றி வாருங்களை நாங்கள் படித்தோம். யாக்கோபு அதிகாரம் 1, வசனம் 2 இப்படிச் சொல்கிறது, “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (Joseph Smith Translation, யாக்கோபு 1:2 [in யாக்கோபு 1:2, footnote a]). ஒரு புதிய ஆண்டை, புதிய தசாப்தத்தை மகிழ்ச்சியுடன் ஆரம்பிப்பதற்கான நமது விருப்பத்தில், 2020 ஆண்டை நாம் “மிகுந்த சந்தோஷமாக எண்ணுவோம்” என நாம் தீர்மானித்தோம் “மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட சட்டைகளை கடந்த கிறிஸ்துமஸில் எங்கள் உடன்பிறப்புகளுக்கு பரிசளித்து, நாங்கள் அதைப்பற்றி மிக வலிமையாக உணர்ந்தோம். 2020 ஆண்டு நிச்சயமாக ஒரு சந்தோஷத்தின், களிகூருதலின் ஆண்டாயிருக்கும்.

நல்லது, நாம் இங்கிருக்கிறோம், மாறாக, 2020, உலகளாவிய கோவிட்-19 தொற்று நோயையும், உள்நாட்டு அமைதியின்மையையும், அதிகமான இயற்கை பேரழிவுகளை, பொருளாதார சவால்களையும் கொண்டு வந்துள்ளது. பொறுமையின் நமது புரிந்துகொள்ளுதலையும் சந்தோஷத்தைத் தேர்ந்தெடுக்க நமது உள்ளுணர்வான தீர்மானத்தையும் பிரதிபலிக்கவும் கருத்தில்கொள்ளவும் நேரத்தை நமது பரலோக பிதா நம்மை அனுமதிக்கக்கூடும்.

அப்போதிலிருந்து, யாக்கோபு புத்தகம் எங்களை ஒரு புதிய அர்த்தத்திற்கு எடுத்துப்போனது. யாக்கோபு, அதிகாரம் 1, வசனங்கள் 1 மற்றும் 3 தொடருகிறது:

“உங்கள் விசுவாசத்தின் பரிட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து கொள்ளுங்கள்.

“ஆனால், நீங்கள் நிறைவாயும், முழுமையாகவும், எதுவும் தேவையில்லாதவர்களுமாயிருக்க பொறுமை அதன் நிறைவான வேலையைச் செய்யட்டும்.”

நமது சோதனைகளுக்கு மத்தியில், சந்தோஷத்தைக் காண நமது முயற்சிகளில், அந்த சோதனைகள் நமது நன்மைக்காக செயல்பட அனுமதிக்க, பொறுமைதான் திறவுகோல் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

சுபாவ மனுஷனை அகற்றி, “கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் பரிசுத்தவானாகி, ஒரு சிறுபிள்ளையைப் போலாகி, கீழ்ப்படிந்து, சாந்தமாயும், தாழ்மையாயும், பொறுமையாயும், அன்பில் பூரணப்பட்டிருந்து, கர்த்தர் தன் மீது சுமத்துகிற சகல காரியங்களுக்கும், கீழ்ப்படிந்திருக்க” பென்யமீன் ராஜா போதித்தான் (மோசியா 3:19).

நாம் பின்பற்ற முடிகிற கிறிஸ்துவின் முக்கிய பண்புக்கூறுகளை, என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் அதிகாரம் 6 போதிக்கிறது: “கோபம், விரக்தி, அல்லது ஆர்வமடையாமல், தாமதம், பிரச்சினை, எதிர்ப்பு அல்லது வேதனைகளில் நிலைத்திருக்க பொறுமை திறனாகும். இது தேவனுடைய சித்தத்தைச் செய்யவும், அவருடைய நேரத்தை ஏற்றுக்கொள்ளவும் திறனாகும். நீங்கள் பொறுமையாயிருக்கும்போது, நீங்கள் அழுத்தத்தின் கீழிருந்து, அமைதியுடனும் நம்பிக்கையுடனும் உபத்திரவத்தை எதிர்கொள்ள முடிகிறவர்களாயிருக்கிறீர்கள்” (Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. [2019], 126).

கிறிஸ்துவின் ஆரம்பகால சீஷர்களில் ஒருவனான கானானியனான சீமோனின் வாழ்க்கையிலும் பொறுமையின் சரியான வேலை சித்தரிக்கப்பட்டுள்ளது. ரோமானிய ஆட்சியை கடுமையாக எதிர்த்த யூத தேசியவாதிகள் குழுவாக ஜீலாட்டுகள் இருந்தனர். பொருட்களைக் கைப்பற்றுவதன் மூலமாகவும், அவர்களின் நோக்கத்திற்காக பிற நடவடிக்கைகளை தொடர்வதாலும், ஜீலாட் இயக்கம் ரோமானியர்களுக்கும், அவர்களின் யூத ஆதரிப்பாளர்களுக்கும், சதுசேயர்களுக்கும் எதிரான வன்முறையை தூண்டியது.(Encyclopedia Britannica, “Zealot,” britannica.com/topic/Zealot பார்க்கவும்). கானானியனான சீமோன் ஒரு ஜீலாட்(லூக்கா 6:15 பார்க்கவும்). ஆயுதங்களை எடுத்துக்கொள்வதற்கும், ஒரு போர்க்குணமிக்க குழுவை வழிநடத்துவதற்கும் அல்லது எருசலேமில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இரட்சகரை இணைக்க சீமோன் முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள். இயேசு போதித்தார்:

“சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவன்கள். …

“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். …

“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத்தேயு 5:5, 7, 9).

வைராக்கியத்துடனும் ஆர்வத்துடனும் தனது தத்துவத்தை சீமோன் தழுவி, பரிந்துரைத்தான், ஆனால் இரட்சகரின் செல்வாக்கு மற்றும் எடுத்துக்காட்டின் மூலமாக அவனுடைய கவனம் மாறியது என வேதங்கள் ஆலோசனையளிக்கிறது. கிறிஸ்துவில் அவனுடைய சீஷத்துவம், அவனுடைய வாழ்க்கையின் முயற்சிகளில் மையக் கவனமாக மாறுகிறது.

தேவனுடன் நாம் உடன்படிக்கைகளைச் செய்து கைக்கொள்ளும்போது, “மறுபடியும் ஜெனிக்கவேண்டும், ஆம், மறுபடியும் ஜெனிக்கவேண்டும் என்பதால், தேவனால் மீட்கப்பட்டு, நீதியின் நிலைக்கு மாற்றப்பட்டு, அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்க இரட்சகர் நமக்குதவமுடியும்.”(மோசியா 27:25).

அனைத்து வைராக்கிய சமூக, மத மற்றும் அரசியலில் நமது நாட்களின் அனைத்து முயற்சிகளிலும் இயேசு கிறிஸ்துவின் சீஷன் நமது மிகவும் உச்சரிக்கப்படும், உறுதிப்படுத்தும் இணைப்பாக இருக்கட்டும் “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (மத்தேயு 6:21). அவருடைய உண்மையுள்ள சீஷர்கள், “தேவனுடைய சித்தத்தின்படி செய்தபோதும்” அவர்களுக்கு “பொறுமை வேண்டியதாயிருந்தது” (எபிரெயர் 10:36) என்பதையும் நாம் மறக்கவேண்டாம்.

நம்முடைய விசுவாசத்தின் முயற்சி நமக்குள் பொறுமையை வளர்ப்பதைப் போலவே, நாம் பொறுமையைக் கடைப்பிடிக்கும்போது, நம்முடைய விசுவாசமும் அதிகரிக்கிறது. நமது விசுவாசம் அதிகரிக்கும்போது, அப்படியே நம் சந்தோஷமும் அதிகரிக்கும்.

இந்த கடந்த மார்ச்சில், சபையிலுள்ள அநேக ஊழியக்காரர்கள் கட்டாய தனிமைக்குப் போனதைப்போல, எங்கள் இரண்டாவது மகள் எம்மாவும் தனிமைக்குச் சென்றாள். அநேக ஊழியக்காரர்கள் வீடு திரும்பினர். அநேக ஊழியக்காரர்ரகள் மறுநியமிப்புக்குக் காத்திருந்தனர். பிரயாசத்தின் ஒரு களத்திற்கு அவர்கள் போவதற்கு முன்பு தங்களுடைய ஆலய ஆசீர்வாதங்களை அநேகர் பெறவில்லை. மூப்பர்களே, சகோதரிகளே உங்களுக்கு நன்றி. நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.

நெதர்லான்டில், முதல் அநேக வாரங்களில் எம்மாவுக்கும் அவளுடைய கூட்டாளிக்கும் நீட்டப்பட்டு, அந்த நிகழ்வுகளில் கண்ணீரும் நீட்டப்பட்டது. தனிப்பட்ட தொடர்புக்கு மிகக் குறைவான, வெளியே செல்வதற்கான வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளுடனும், எம்மாவின் தேவனுடன் சார்ந்திருத்தல் அதிகரித்தது. அவளுடன் ஆன்லைனில் நாங்கள் ஜெபித்து, எங்களால் எவ்வாறு அவளுக்குதவமுடியும் என கேட்டோம். ஆன்லைனில் அவள் போதித்துக்கொண்டிருந்த நண்பர்களுடன் இணைக்க அவள் எங்களைக் கேட்டுக்கொண்டாள்.

நெதர்லான்டில் எம்மாவின் நண்பர்களுடன் ஒருவர் ஒருவராக எங்கள் குடும்பம் ஆன்லைனில் இணைய ஆரம்பித்தார்கள். நீடிக்கப்பட்ட என்னைப் பின்பற்றி வாருங்கள் படிப்பில் எங்களுடைய வாராந்தர ஆன்லைனில் சேர அவர்களை அழைத்தோம். ப்ளோர், லாரா, ரென்ஸ்க், ப்ரீக், பெஞ்சமின், ஸ்டால் மற்றும் முகமது எல்லோரும் எங்கள் நண்பர்களாயினர். நெதர்லான்டிலிருந்து எங்கள் நண்பர்களில் சிலர் “இடுக்கமான வாசல் வழியாய்” பிரவேசித்தார்கள் (3 நேபி 14:13). மற்றவர்களுக்கு அவர்கள் பிரவேசிக்கவேண்டுமென்றிருக்கிற, வழியின் இடுக்கமும், வாசலின் நெருக்கமும்” (2 நேபி 31:9) காண்பிக்கப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவில் சகோதர சகோதரிகள். உடன்படிக்கையின் பாதையில் எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் ஒன்றுசேர்ந்து பணிபுரியும்போது ஒவ்வொரு வாரமும் நாங்கள் அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுவோம்.

ஒரு காலக்கட்டத்தில் தொகுதி குடும்பங்களை நேரில் எங்களால் சந்திக்கமுடியாதிருக்கும்போது நாங்கள் “பொறுமையானது பூணகிரியை செய்யவிட்டோம்”. (யாக்கோபு 1:4) ஆனால் புதிய தொழில்நுட்ப இணைப்புகளாலும், என்னைப் பின்பற்றி வாருங்கள் மார்மன் புஸ்தகம் படிப்பின் மூலமாவும் விசுவாசத்தில் அதிகரிப்பதால் எங்கள் குடும்பத்தில் நாங்கள் சந்தோஷத்தை எண்ணுகிறோம்.

“குறிப்பாக வெற்றிகரமாக இல்லை என்று நீங்கள் உணரும்போதுள்ள நேரங்களிலும் இந்த பெரு முயற்சியில் உங்களின் சீரான முயற்சி உங்கள் வாழ்க்கையை, உங்கள் குடும்பத்தை, உலகத்தை மாற்றும்” என தலைவர் ரசல் எம். நெல்சன் வாக்களித்தார் (“Go Forward in Faith,” Liahona, May 2020, 114).

தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்கிற ஆலயம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுகிற வீடு திறந்திருக்கிறது. ஆலய உடன்படிக்கைகளின் விதிவிலக்கான அழகைப்பற்றி வீட்டில் படிக்கவும் சிந்திக்கவும் நமக்கு வாய்ப்பிருக்கிறது. அந்த பரிசுத்தமான இடத்திற்குள் பிரவேசிக்க முடியாவிட்டாலும்கூட, “பொழியப்படுகிற ஆசீர்வாதங்களின் விளைவாக எங்கள் இருதயங்கள் அதிகமாய் களிகூருகிறது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:9).

அநேகர் வேலையை இழந்து நிற்கிறார்கள், மற்றவர்கள் வாய்ப்புகளை இழந்தார்கள். நமது அங்கத்தினர்களிடமிருந்து தன்னார்வ உபவாச காணிக்கைகள் உண்மையில் அதிகரித்திருக்கிறது, அப்படியே நமது மனிதாபிமான நிதிக்கு தன்னார்வ நிதிகளும் அதிகரித்திருக்கினறன. இந்த கடினமான நேரத்தை நாம் ஒன்றுசேர்ந்து மேற்கொள்ளுவோம். நீங்கள் தொடர்ந்து மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்” (Russell M. Nelson’s Facebook page, post from Aug. 16, 2020, facebook.com/russell.m.nelson).

பயப்படுங்கள் என்றல்ல, “திடன்கொள்ளுங்கள்” என கர்த்தரிடமிருந்து கட்டளை வந்தது (மத்தேயு 14:27).

எல்லாவற்றையும் நாம் சரியாகச் செய்துகொண்டிருக்கிறோம் இருந்தும் நாம் விரும்புகிற ஆசீர்வாதங்களைப் பெறுவதில்லை என நாம் நினைக்கும்போது, சிலநேரங்களில் நாம் பொறுமையை இழக்கிறோம். ஏனோக்கும் அவனுடைய ஜனங்களும் மறுரூபமடைவதற்கு முன் 365 நாட்கள் தேவனோடு அவனும் அவர்களும் நடந்தார்கள். எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முன்னூற்று அறுபத்தைந்து வருஷங்களாக உழைத்து பின்னர் அது நடந்தது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:49 பார்க்கவும்.)

யூட்டா ஆக்டன் ஊழியத்தின் தலைமையிலிருந்து எங்கள் விடுவிப்புக்கு ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் என்னுடைய சகோதரன் சாடின் மரணம் நடந்தது. நாங்கள் தெற்கு கலிபோர்னியாவில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, 2015 ஆம் ஆண்டில் நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்து ஊழியங்களிலும் நாங்கள் வடக்கு யூட்டாவுக்கு நியமிக்கப்பட்டது அற்புதமாயிருந்தது. சாடின் வீட்டிலிருந்து ஊழிய வீடு 30 நிமிடங்கள் பயண தூரத்திலிருந்தது. எங்களுடைய ஊழிய நியமிப்பை நாங்கள் பெற்ற பின்பு சாடின் புற்றுநோய் கண்டறியப்பட்டது. மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், எங்களுடைய பரலோக பிதா எங்கள்மீது அக்கறை உள்ளவராயிருந்தாரென்றும், சந்தோஷத்தைக்காண எங்களுக்கு உதவிக்கொண்டிருந்தாரென்றும் நாங்கள் அறிந்தோம்.

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மீட்பின், சுத்திகரிப்பின், தாழ்மையின், சந்தோஷமான வல்லமையை நான் கண்டேன். இயேசுவின் நாமத்தில் நமது பரலோக பிதாவிடம் நாம் ஜெபிக்கும்போது, அவர் நமக்கு பதிலளிக்கிறாரென்பதை நான் கண்டேன். கர்த்தருடைய, அவருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம்.நெல்சனின் குரலை நாம் கேட்கும்போது, செவிசாய்க்கும்போது, செவிகொடுக்கும்போது, நாம் “பொறுமையானது பூணகிரியை செய்யவிட்டு” “மிகுந்த சந்தோஷமாக எண்ணுவோம்” என்பதை நான் கண்டேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.