பொது மாநாடு
இரையாதே, அமைதலாயிரு
அக்டோபர் 2020 பொது மாநாடு


இரையாதே, அமைதலாயிரு

நம்மைச் சுற்றி காற்று கடுமையாக அடித்தாலும், நமது நம்பிக்கைகளை மூழ்கடிக்க பெரும் அலைகள் பயமுறுத்தினாலும் எவ்வாறு சமாதானமாகவும் அமைதியாகவுமிருப்பது என இரட்சகர் நமக்கு போதிக்கிறார்.

எங்கள் பிள்ளைகள் இளமையாயிருந்தபோது, ஒரு சில நாட்கள் ஒரு அழகிய ஏரியில் எங்கள் குடும்பம் செலவுசெய்தோம். ஒரு பிற்பகலில் பிள்ளைகளில் சிலர் பாதுகாப்பு ஆடைகளை அணிந்துகொண்டு தளத்திலிருந்து தண்ணீருக்குள் குதித்தார்கள். எங்களுடைய கடைசி மகள் தயக்கத்துடன் கவனித்து, அவளுடைய உடன்பிறப்புகளை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் திரட்ட முடிந்த முழு தைரியத்துடன் ஒரு கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு குதித்தாள். உடனேயே அவள் தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்து, பீதியில் சத்தமிட்டாள், “எனக்குதவுங்கள்! எனக்குதவுங்கள்!”

இப்போது அவள் உயிருக்கு ஆபத்தில் இல்லாமலிருந்தாள், அவளுடைய பாதுகாப்பு உடை அதன் வேலையைச் செய்து, பாதுகாப்பாக அவள் மிதந்துகொண்டிருந்தாள். நாங்கள் அவளை அணுகமுடிந்து, சிறிய முயற்சியில் அவளை மீண்டும் தளத்திற்கு கொண்டுவர இழுத்தோம். இருந்தும் அவளுடைய பார்வையில் அவளுக்கு உதவி தேவையாயிருந்தது. ஒருவேளை தண்ணீரின் குளிராக அல்லது புதிய அனுபவத்தாலிருந்திருக்கலாம். எந்த வகையிலும் அவள் தளத்திற்கு திரும்ப வந்து, ஒரு உலர்ந்த துண்டால் அவளைச் சுற்றி, அவளுடைய தைரியத்திற்காக அவளை பாராட்டினோம்.

நாம் முதியவர்களோ இளையவர்களோ, நம்மில் அநேகர் துன்பமான நேரங்களில் “எனக்கு உதவுங்கள்!” போன்ற அவசர வார்த்தைகளை உச்சரிக்கிறோம். “என்னைக் காப்பாற்றுங்கள்!” அல்லது “தயவுசெய்து என் ஜெபத்திற்கு பதிலளியுங்கள்!”

கிறிஸ்துவின் பூலோக ஊழியத்தில், அவருடைய சீஷர்களுக்கு அத்தகைய ஒரு நிகழ்வு ஏற்பட்டது. இயேசு “மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார், திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்”1 என நாம் மாற்குவில் வாசிக்கிறோம். கூட்டம் எண்ணிலடங்காமல் இருந்ததால் இயேசு “படவில் ஏறி”2 அதன் தளத்திலிருந்து பேசினார். அவர்கள் கடற்கரையில் அமர்ந்தபோது, நாள் முழுவதும் உவமையில் அவர் ஜனங்களுக்குப் போதித்தார்.

“சாயங்காலமானபோது, நாம் அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என அவருடைய சீஷர்களுக்கு அவர் சொன்னார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு”3 கடற்கரையை விட்டு, கலிலேயா கடல் வழியே தங்கள் பாதையில் சென்றனர். படவின் பின்பக்கத்தில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து இயேசு அங்கே படுத்து சீக்கிரத்திலேயே நித்திரையடைந்தார். விரைவிலேயே, “பலத்த சுழற்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதன்மேல் மோதிற்று”4.

இயேசுவின் சீஷர்களில் அநேகர் அனுபவமுள்ள மீன்பிடிப்பவர்கள், ஒரு புயலில் படவை எப்படி கையாளுவதென்பதை அறிந்தவர்கள். அவர்கள் அவருக்கு நம்பிக்கையான, உண்மையில் அவருக்கு அன்பான சீஷர்கள். இயேசுவைப் பின்பற்ற அவர்கள் தங்களின் வேலைகளை, தனிப்பட்ட ஆர்வங்களை, குடும்பத்தை விட்டுவிட்டார்கள். படவில் அவர்களிருந்ததின்மூலம் அவர்மீது அவர்களுக்கிருந்த விசுவாசம் தெளிவாகத் தெரிந்தது. இப்போது அவர்களின் படவு புயலுக்கு நடுவிலே இருந்து, மூழ்கும் நிலையிலிருந்தது.

புயலில் படவை மிதக்க வைக்க எவ்வளவு நேரம் போராடினார்கள் என்று நமக்குத் தெரியாது, ஆனால், சிறிது பீதியுடன் அவர்கள் இயேசுவை எழுப்பினார்கள்.

“போதகரே நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?”5

“ஆண்டவரே ,எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்.”6

அவர்கள் அவரை “போதகரே” என்றழைத்தனர், அவர் அவர்தான். “அவர் இயேசு கிறிஸ்துவென்றும், தேவனுடைய குமாரனென்றும், வானம் மற்றும் பூமியின் பிதாவென்றும், ஆதியிலிருந்தே சகல காரியங்களின் சிருஷ்டிகரென்றும், அழைக்கப்படுவார்”7

படம்
இரையாதே, அமைதலாயிரு

படவில் அவர் தன்னுடைய நிலையிலிருந்து எழுந்து, காற்றை அதட்டி கொந்தளித்துக்கொண்டிருந்த கடலைப் பார்த்து, “இரையாதே அமைதலாயிரு என்றார். காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.”8 இரண்டு எளிய, இருந்தும் அன்பான கேள்விகள் மூலமாக, என்றும் போதகரும் ஆசிரியருமான இயேசு பின்னர் அவருடைய சீஷர்களுக்குப் போதித்தார். அவர் கேட்டார்,

“ஏன் இப்படி மிகப் பயப்பட்டீர்கள்?”9.

“ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று?”10

சோதனைகள், கஷ்டங்கள் அல்லது துன்பங்களுக்கு நடுவில் நம்மைக் காணும்போது ஒரு மரண போக்கு, ஒரு சோதனையும் கூட இருக்கிறது “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” என்னைக் காப்பாற்றுங்கள்” தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்? உம்முடைய மறைவான இடத்தை மூடியிருக்கிற கூடாரம் எங்கே?”11

நம்மைச் சுற்றி காற்று கடுமையாக அடித்தாலும், நமது நம்பிக்கைகளை மூழ்கடிக்க பெரும் அலைகள் பயமுறுத்தினாலும் எவ்வாறு சமாதானமாகவும் அமைதியாகவுமிருக்க அவர் நமக்கு போதிக்கிறதால் உலகத்தின் இரட்சகர் நிச்சயமாக நமது அநித்திய வரையறைகளைப் புரிந்திருக்கிறார்.

நிரூபிக்கப்பட்ட விசுவாசம், குழந்தை போன்ற விசுவாசம், அல்லது விசுவாசத்தின் மிகச்சிறிய துகள் கூட உள்ளவர்களை12 “என்னிடத்தில் வாருங்கள்”13 என இயேசு அழைக்கிறார். “என் நாமத்தில் விசுவாசியுங்கள்.”14 “என்னிடமிருந்து கற்றுக்கொள், எனது வார்த்தைகளுக்குச் செவிகொடு”15 “மனந்திரும்பி என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுங்கள்,”16 “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்”17 மற்றும் “என்னை எப்பொழுதும் நினைவுகூருங்கள்”18 என அவர் மென்மையாக கட்டளையிடுகிறார். “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன் என விவரித்து இயேசு உறுதியளித்தார். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்”19 என அவர் உறுதியளித்தார்.

புயல் வீசப்பட்ட படகில் இருந்த இயேசுவின் சீஷர்கள், அவசியமாக, அலைகள் தங்கள் தளத்தின்மீது விழுந்து, தண்ணீரை வெளியேற்றுவதைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்திருந்ததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர்கள் படவைக் கையாளுவதையும், அவர்களின் சிறிய படவின் மீது சில கட்டுப்பாட்டைப் பராமரிக்க முயற்சிப்பதையும் என்னால் சித்தரிக்க முடிகிறது. அந்த நேரத்தில் பிழைத்திருத்தல் அவர்களுடைய கவனமாயிருந்தது, உதவிக்காக அவர்களுடைய கெஞ்சல் உடனடி நேர்மையாயிருந்தது.

நமது நாட்களில் நம்மில் அநேகர் விதிவிலக்கல்ல. உலகத்தையும் நம் நாடுகளையும், சமுதாயங்களையும், குடும்பங்களையும் சுற்றிய சமீபத்திய நிகழ்வுகள், எதிர்பாராத சோதனைகளால் நம்மை நிலைகுலைய வைத்தன. கொந்தளிப்பான காலங்களில், நம்முடைய விசுவாசம் நம்முடைய நிலைத்திருத்தலை மற்றும் புரிந்துகொள்ளுதலின் வரம்புகளுக்கு நீட்டிக்கப்படுவதை உணர முடியும். தேவனுடைய நன்மைகளை மறக்கக் காரணமாகி, பயத்தின் அலைகள் நம்மை திசைதிருப்பலாம், அப்படியே நமது முன்னோக்கை குறுகிய பார்வை மற்றும் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறது. இருந்தும், நம்முடைய பயணத்தின் இந்த கடினமான பாதைகளில் தான் நம்முடைய விசுவாசம் முயற்சிக்கப்படவும், பலப்படுத்தப்படவும் முடியும்.

நமது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது, இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை வளர்க்கவும் அதிகரிக்கவும் வேண்டுமென்றே நாம் முயற்சி எடுக்கலாம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்றும் அவர் நம்மை நேசிக்கிறாரென்றும் நாம் நினைவுகூரும்போது இது பலப்படுத்துகிறது. நம்பிக்கையுடனும், சிரத்தையுடனும், தேவனுடைய வார்த்தைகளை நாம் பரிசோதிக்கும்போது, கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்ற நம்மால் முடிந்தளவுக்கு சிறப்பாக முயற்சி செய்யும்போது நமது விசுவாசம் வளர்கிறது. சந்தேகத்துக்குப் பதிலாக நம்பவும், நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக மன்னிக்கவும், எதிர்ப்பதைவிட மனந்திரும்ப நாம் சேர்ந்தெடுக்கும்போது நமது விசுவாசம் அதிகரிக்கிறது. பரிசுத்த மேசியாவின் நற்கிரியைகள், இரக்கம், கிருபையில் நாம் பொறுமையாக சார்ந்திருக்கும்போது நமது விசுவாசம் புதுப்பிக்கப்படுகிறது. 20

விசுவாசம் ஒரு நிறைவான அறிவாயில்லாதிருக்கும்போது, அறிவு நிறைவாயிருக்கிற தேவனில் அது ஒரு ஆழமான நம்பிக்கையைக் கொண்டுவருகிறது”21 என மூப்பர் நீல் எ. மேக்ஸ்வெல் சொன்னார். கொந்தளிப்பான நேரங்களில், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் உறுதியானதும் நெகிழ்வதாகுமிருக்கிறது. இது முக்கியமற்ற கவனச்சிதறல்களை சலிக்க நமக்குதவுகிறது. உடன்படிக்கை பாதையில் தொடர்ந்து செல்ல இது நம்மை ஊக்குவிக்கிறது. ஊக்குவித்தல் மூலமாக விசுவாசம் தள்ளுகிறது, மற்றும் தீர்மானத்துடனும் கனத்த தோள்களுடனும் வருங்காலத்தை எதிர்கொள்ள நம்மை அனுமதிக்கிறது. அவருடைய குமாரனின் நாமத்தில் பிதாவிடம் நாம் ஜெபிக்கும்போது மீட்புக்கும் நிவாரணத்திற்கும் கேட்க நம்மை உணர்த்துகிறது. ஜெபத்துடனான வேண்டுதல்கள் பதிலளிக்கப்படாமல் போவதாகத் தோன்றும்போது, இயேசு கிறிஸ்துவில் நமது பிடிவாதமான விசுவாசம், “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக”22 என்ற வார்த்தைகளை பயபக்தியுடன் உச்சரிக்கும் திறமையை உற்பத்தி செய்கிறது.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்:

“நமது பயங்கள் நமது விசுவாசத்தை இடம் பெயர அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவதன் மூலம் அந்த பயங்களை நாம் எதிர்த்துப் போராட முடியும்.

“உங்கள் பிள்ளைகளுடன் ஆரம்பியுங்கள். … உங்கள்மீது கடினமான சோதனைகள் வருகிறபோதும் உங்கள் விசுவாசத்தை அவர்கள் உணரட்டும். நமது அன்பான பரலோக பிதாவிடமும், அவருடைய நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமும் உங்கள் விசுவாசம் கவனம் செலுத்தட்டும். அவன் அல்லது அவள் தேவனுடைய பிள்ளை என்றும், ஒரு பரிசுத்த நோக்கத்துடனும் திறனுடனும் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டார்களென்றும் விலையேறப்பெற்ற சிறுவன் அல்லது சிறுமி ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுக்கவும். மேற்கொள்ளப்பட சவால்களுடனும் விருத்தி செய்யப்பட விசுவாசத்துடனும் ஒவ்வொருவரும் பிறந்தார்கள்”23.

“இயேசு கிறிஸ்து எவ்வாறு உங்களுக்கு உதவுகிறார்?” என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கும்போது, இயேசு கிறிஸ்துவில் தங்களுடைய விசுவாசத்தை இரண்டு நான்கு வயது பிள்ளைகள் பகிர்ந்துகொண்டதை சமீபத்தில் நான் கேட்டேன். முதல் பிள்ளை சொன்னான், “இயேசு எனக்காக மரித்ததால் அவர் என்னை நேசிக்கிறாரென நான் அறிகிறேன். அவர் வயது வந்தவர்களையும் நேசிக்கிறார்.” இரண்டாவது பிள்ளை சொன்னான், “நான் துக்கமாக அல்லது எரிச்சலாக இருக்கும்போது அவர் எனக்கு உதவுகிறார். நான் மூழ்கிக்கொண்டிருக்கும்போது அவர் எனக்கு உதவுகிறார்”.

“ஆகவே, மனந்திரும்பி ஒரு சிறுபிள்ளையைப்போல என்னிடத்தில் வருகிற எவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையதே.”24 என இயேசு அறிவித்தார்

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”25

“கேட்க, செவிகொடுக்க, இரட்சகரின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க”26 உண்மையாக புதியதாக நாம் ஆரம்பிக்கும்போது, “குறைந்த பயமும் அதிகரித்த விசுவாசமும் பின்தொடரும்” என சமீபத்தில் தலைவர் நெல்சன் வாக்களித்தார்

படம்
இயேசு கடலை அமைதிப்படுத்தினார்

சகோதரிகளே, சகோதரரே, நமது தற்போதைய சவால்கள் நிறைந்த சூழ்நிலைகள் நமது இறுதியான நித்திய இலக்கு இல்லை. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்துவின் சபை அங்கத்தினர்களாக, உடன்படிக்கையின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நாம்த்தை நாம் நம்மீது எடுத்துக்கொண்டோம். அவருடைய மீட்பின் வல்லமையிலும், அவருடைய மகத்தான, விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களிலும் நமக்கு விசுவாசமிருக்கிறது. களிகூர நமக்கு எல்லா காரணங்களுமிருக்கின்றன, ஏனெனில் நமது கர்த்தரும் இரட்சகருமானவர் நமது பிரச்சினைகள், அக்கறைகள், துக்கங்களை நன்கு அறிந்திருக்கிறார்கள். முன்பு இயேசு தன் சீஷர்களுடன் இருந்ததைப்போலவே அவர் நம் படகிலிருக்கிறார். நீங்களும் நானும் அழிந்து போகாமலிருக்கும்படியாக, அவர் தன் ஜீவனைக் கொடுத்தார் என நான் சாட்சியளிக்கிறேன். நாம் அவரை நம்பி, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து “இரையாதே, அமைதலாயிரு”27 என அவர் சொல்வதை விசுவாசத்துடன் கேட்போமாக. இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.