பொது மாநாடு
சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்கள்
அக்டோபர் 2020 பொது மாநாடு


சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்கள்

உலகத்தை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும் சுவிசேஷத்தின் பகுதியாக, கர்த்தருடைய தீர்க்கதரிசனங்களும் வாக்களிப்புகளும் நிறைவேறுதலின் பகுதியாக நம்முடைய சொந்த வழியில் நாம் மாறலாம்.

அன்பான சகோதர சகோதரிகளே, கோவிட் - 19 வழிகாட்டுதலைப் பின்பற்றி ஒரு ஆலய முத்திரித்தலை சமீபத்தில் நான் நடத்தினேன். ஊழியம் செய்து திரும்பிய விசுவாசமிக்க மணமகனும் மணமகளும் தங்களுடைய பெற்றோருடனும், உடன்பிறப்புகளுடனும் அங்கிருந்தனர். இது எளிதாக இருக்கவில்லை! மணமகள் பத்து பிள்ளைகளில் ஒன்பதாவது பிறந்தவள். நிச்சயமாக சமூக இடைவெளியோடு, மூத்தவரிலிருந்து இளையவர் வரை அவளுடைய உடன்பிறப்புகள் வரிசையில் அமர்ந்தனர்.

அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், நல்ல அண்டைவீட்டாராயிருக்க அந்த குடும்பம் நாடியது. ஆயினும், ஒரு சமுதாயம் விரும்பத்தகாததாக இருந்தது- ஏனெனில், அவர்களுடைய குடும்பத்தினர், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள் என மணமகளின் தாய் சொன்னாள்.

பள்ளிக்கூடத்தில் நண்பர்களை உருவாக்கவும், பங்களிக்கவும், ஏற்றுக்கொள்ளப்படவும் குடும்பத்தினர் எல்லாவற்றையும் செய்தனர், ஆனால் பலனில்லை. இருதயங்கள் மிருதுவாக குடும்பத்தினர் ஜெபித்தார்கள், ஜெபித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு இரவு, அது எதிர்பாராத வழியிலிருந்தாலும், தங்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதாக குடும்பத்தினர் உணர்ந்தார்கள். அவர்களுடைய வீடு தீ பிடித்து தரைமட்டமானது. ஆனால் ஏதோ ஒன்று நடந்தது. நெருப்பு அவர்களுடைய அண்டைவீட்டாரின் இருதயங்களை மிருதுவாக்கிற்று.

எல்லாவற்றையும் இழந்துபோன, குடும்பத்திற்குத் தேவையான ஆடைகள், காலணிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்களுடைய அண்டைவீட்டாரும் உள்ளூர் பள்ளிக்கூடமும் சேகரித்தனர். புரிந்துகொள்ளுதலை அன்பு திறந்தது. தங்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படும் என அவர்கள் நம்பிய அல்லது எதிர்பார்த்த வழி இதல்ல. ஆயினும், கடினமான அனுபவங்கள் மற்றும் இதயப்பூர்வமான ஜெபங்களுக்கு எதிர்பாராத பதில்கள் மூலமாக அவர்கள் கற்றுக்கொண்டவற்றிற்காக அவர்கள் நன்றி செலுத்தினார்கள்.

உண்மையாகவே, சவால்களுக்கு மத்தியில், விசுவாசமுள்ள இருதயங்களுடனும் பார்ப்பதற்கு கண்களுடனும் இருந்தவர்களுக்கு, கர்த்தருடைய மென்மையான இரக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டன. விசுவாசத்துடன் சந்திக்கப்படுகிற சவால்கள் மறறும் தியாகம் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. இந்த அநித்தியத்தில், ஒரு நேரத்தில் சில காரியங்களை நாம் இழக்கலாம் அல்லது காத்திருக்கலாம், ஆனால், முடிவில், எது மிக முக்கியமானதோ அதை நாம் காண்போம். 1 அது அவருடைய வாக்குத்தத்தம் 2 .

“உலகத்தின் எல்லா தேசத்திலுமுள்ள அவருடைய பிள்ளைகளை தேவன் நேசிக்கிறார்” 3 என்ற மகத்துவமான வாக்களிப்பையும் உள்ளடக்கி நமது 2020 இருநூற்றாண்டு பிரகடனம் ஆரம்பிக்கிறது. சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்கள், மற்றும் ஜனங்களிலும் நம் ஒவ்வொருவருக்கும் தேவன் வாக்களிக்கிறார், உடன்படிக்கை செய்கிறார், அவருடைய ஏராளமான சந்தோஷத்திலும் நன்மையிலும் பங்கேற்க வருமாறு நம்மை அழைக்கிறார். 4

சகல ஜனங்கள் மீதுமுள்ள தேவனின் அன்பு வேதங்கள் முழுவதிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 ஆபிரகாமிய உடன்படிக்கையை, அவருடைய சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்தலை மற்றும் அவருடைய சந்தோஷத்தின் திட்டத்தை அந்த அன்பு உள்ளடக்கியிருக்கிறது. 6

விசுவாசிகளின் வீட்டில் அந்நியர்கள் இருப்பதில்லை 7 , ஐஸ்வரியவான்களும் தரித்திரருமில்லை, 8 வெளியிலுள்ள “மற்றவர்கள்” இல்லை. “பரிசுத்தவான்களுடன் சககுடிமகன்களாக” 9 வெளியிலிருந்து உள்ளே, ஒரு நபர், ஒரு குடும்பம், ஒருநேரத்தில் ஒரு அண்டைவீட்டாரென சிறப்பாக உலகத்தை மாற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

சுவிசேஷத்தின்படி நாம் வாழ்ந்து பகிர்ந்துகொள்ளும்போது இது நடைபெறுகிறது. எல்லா இடங்களிலும் எல்லோரும் தேவனுடைய அன்பைக் கண்டுபிடிக்கவும், வளரவும் மாறவும் அவருடைய வல்லமையை அனுபவிக்கவும் பரலோக பிதா விரும்புகிறார் என்ற விசேஷித்த தீர்க்கதரிசனத்தை இந்த ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில், தீர்க்கதரிசி ஜோசப் பெற்றார்.

படம்
ஸ்மித் குடும்ப வீடு

பல்மைரா, நியூயார்க்கில் ஸ்மித் குடும்பத்தின் மரவீட்டில், இங்கே அந்த தீர்க்கதரிசனம் பெறப்பட்டது 10 .

படம்
ஸ்மித் வீட்டில், மூப்பர் மற்றும் சகோதரி காங்

1998ல் கட்டி முடிக்கப்பட்ட ஸ்மித்தின் வீடு, அதனுடைய முந்திய அஸ்திபாரத்தின்மேல் புனரமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது மாடி படுக்கை அறை, அதே 18 x 30 x 10 அடி (5.5 x 9 x 3 மீ) அளவுள்ள இடத்தை ஆக்கிரமித்திருந்தது, அங்கே, செப்டம்பர் 21, 1823 மாலை நேரத்தில் வாலிப ஜோசப்பிடம், தேவனிடமிருந்து வந்த ஒரு மகிமையான தூதுவனாக மரோனி வந்தான். 11

தீர்க்கதரிசி ஜோசப் விவரித்தது உங்களுக்கு நினைவிருக்கும்:

“[மரோனி] சொன்னான் நான் செய்யும்படியாக தேவனிடம் ஒரு பணியிருக்கிறதென்றும், சகல ஜாதிகளுக்கும், கோத்திரங்களுக்கும், பாஷைக்காரர்களுக்கும் மத்தியில் நன்மையாயும் தீமையாயும் என்னுடைய பெயரிருக்கும். …

ஒரு புஸ்தகம் வைக்கப்பட்டிருக்கிறதென்றும், நித்திய சுவிசேஷத்தின் பரிபூரணம் அதில் அடங்கியிருக்கிறதென்றும் “[மரோனி] சொன்னான்” 12 .

இங்கே நாம் நிறுத்துகிறோம். நித்திய பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, நாம் தொழுதுகொள்கிறோம், தீர்க்கதரிசி ஜோசப்பையோ அல்லது எந்த ஆணையோ பெண்ணையோ அல்ல.

இருந்தும், அவருடைய ஊழியக்காரர்களுக்கு தேவன் கொடுக்கிற தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன. 13 ஆரம்பத்தில், சிலவும், பின்னர் சிலவும், ஆனால் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. 14 கர்த்தருடைய தீர்க்கதரிசன ஆவிக்கு நாம் செவிகொடுக்கும்போது, நமது சொந்த வழியில், அவருடைய தீர்க்கதரிசனங்கள் மற்றும் வாக்களிப்புகளின் நிறைவேறுதலில் நாம் பகுதியாக, உலகத்தின் சுவிசேஷ ஆசீர்வாதத்தின் பகுதியாக மாறலாம்.

1823ல், புதிதாக சுதந்தரமடைந்த ஒரு சாதாரண கிராமத்தில், ஒரு அறியப்படாத, 17 வயது குமரப்பருவத்தில் ஜோசப் வாழ்ந்துவந்தார். அது உண்மையாயில்லாமல், தேவனின் வேலையில் அவர் ஒரு கருவியாயிருக்கிறாரென சொல்கிறதற்கும், எல்லா இடங்களிலும் பிரசித்தமாயிருக்கிற பரிசுத்த வேதத்தை தேவனுடைய வரத்தாலும் வல்லமையாலும் மொழிபெயர்த்தாரென்றும் சொல்வதற்கு அவரால் எப்படி கற்பனை செய்யமுடியும்?

இருந்தும் அது உண்மையாயிருப்பதால், அது நடைபெற உதவுவதற்கு நாம் அழைக்கப்பட்டிருந்தாலும், அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருப்பதை நீங்களும் நானும் காணமுடியும்.

சகோதர, சகோதரிகளே, உலகம் முழுவதிலும் இந்த அக்டோபர் 2020 பொது மாநாட்டில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்றுக்கொண்டிருப்பதென்பது, சகல ஜாதிகள், கோத்திரங்கள், பேசப்படும் பாஷைக்காரர்களுக்கு மத்தியிலாகும்.

இன்று, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை அங்கத்தினர்கள் 196 நாடுகளிலும் பிரதேசங்களிலும், அவைகளில் 90, 3446 சபை பிணையங்களுடனும் வாழ்கிறார்கள். 15 புவியியல் அகலம் மற்றும் வலிமை மையங்கள் இரண்டையும் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிகோ, பிரேசில் என்ற மூன்று நாடுகள் ஒவ்வொன்றிலும் 2020ல் இந்த சபையில் ஒரு மில்லியனுக்கும் மேலான அங்கத்தினர்களிருப்பார்கள் என 1823ல் யார் கற்பனை செய்திருப்பார்கள்?

அல்லது, வட அமெரிக்காவில் மூன்று, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பதினான்கு, ஐரோப்பாவில் ஒன்று, ஆசியாவில் நான்கு, ஆப்பிரிக்காவில் ஒன்று என இருபத்தி மூன்று நாடுகளில் 100,000 க்கும் மேற்பட்ட சபை அங்கத்தினர்கள் இருக்கமுடியமா? 16

மார்மன் புஸ்தகம் அற்புதங்களின் அற்புதமென தலைவர் ரசல் எம். நெல்சன் அழைக்கிறார். 17 எல்லா தேசத்தாரும், இனத்தாரும், பாஷைக்காரரும், ஜனங்களும் இதனால் அறிந்துகொள்ளவேண்டியது என்னவென்று அதன் சாட்சிகள் சாட்சியளிக்கின்றனர். 18 இன்று, பொதுமாநாடு 100 மொழிகளில் கிடைக்கின்றது. இயேசு கிறிஸ்துவையும் அவருடைய மறுஸ்தாபித சுவிசேஷத்தையும்பற்றி தலைவர் நெல்சன் 138 நாடுகளில் சாட்சியமளித்துள்ளார்.

மார்மன் புஸ்தகத்தின், 1830 ம் ஆண்டின் முதல் பதிப்பாக 5000 பிரதிகளுடன் ஆரம்பித்து, மார்மன் புஸ்தகத்தின் முழுவதும் அல்லது அதன் பகுதி 112 மொழிகளில் 192 மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மார்மன் புஸ்தக மொழிபெயர்ப்புகள் டிஜிட்டலில் பரவலாகக் கிடைக்கின்றன. தற்போதைய மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்புகளில் 50 மில்லியன் மக்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பேசும், மொத்தமாக சுமார் 4.1 பில்லியன் மக்களின் சொந்த மொழிகளான 23 உலக மொழிகளில் பெரும்பாலானவை அடங்கும். 19

நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கிற சிறிய, எளிய வழிகளில் பெரிய காரியங்கள் கொண்டுவரப்படும்.

உதாரணமாக, 2200 ஜனத்தொகை கொண்ட மான்ரோ, யூட்டாவில் எத்தனை பேர் ஊழியம் செய்திருக்கிறார்களென ஒரு பிணைய மாநாட்டில் நான் கேட்டேன். ஏறக்குறைய அனைத்துக் கைகளும் உயர்த்தப்பட்டன. சமீப ஆண்டுகளில், அந்த ஒரு பிணையத்திலிருந்து 564 ஊழியக்காரர்கள், முழு அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், அன்டார்டிக்கா கண்டத்தைத் தவிர எல்லா கண்டங்களிலுள்ள 53 நாடுகளிலும் ஊழியம் செய்திருக்கிறார்கள்.

அன்டார்டிகாவைப்பற்றிப் பேசும்போது, அர்ஜென்டினாவின் தெற்கு முனையில் உள்ள உஷுவாயாவில் கூட, நம்முடைய ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை “பூமியின் முடிவு” என்று அழைக்கப்பட்ட ஒரு இடத்தில் பகிர்ந்து கொண்டதால் தீர்க்கதரிசனம் நிறைவேறியதை நான் கண்டேன். 20

படம்
பரிசுத்தவான்களால் உருவாக்கப்பட்ட சுவரோவியம்

பரிசுத்தவான்களின் 21 நான்கு பாகங்களால் அட்டைகளால் உருவாக்கப்பட்ட சுவரோவியம், உண்மையுள்ள பரிசுத்தவான்களிடமிருந்து வரும் சுவிசேஷத்தின் பலன்களின் ஒரு உலகளாவிய சித்திரத்தை சித்தரிக்கிறது. மார்மன் புஸ்தகத்தின் தகடுகளை மரோனி காட்டிய விசுவாமிக்க சகோதரியான மேரி விட்மரையும் சேர்த்து ஒவ்வொரு அங்கத்தினரின் வாழ்ந்த சாட்சியிலும், சுவிசேஷ பயணத்திலும் நமது சபை வரலாறு நங்கூரமிடப்பட்டுள்ளது. 22

படம்
சபையின் புதிய பத்திரிக்கைகள்

வரும் ஜனுவரி 2021ல், நமது சபையின் மூன்று உலகளாவிய பத்திரிக்கைகளான நண்பன், இளைஞரின் பெலனுக்காக மற்றும்லியஹோனா உலகளாவிய விசுவாச சமூகத்தில் அனைவரையும் சொந்தமானவர்களாகவும் பகிர்ந்து கொள்ளவும் அழைக்கிறது. 23

சகோதர, சகோதரிகளே, பரலோக பிதாவிடத்திலும் இயேசு கிறிஸ்துவிடமும் நமது விசுவாசத்தை அதிகரித்து, ஜீவிக்கிற மறுஸ்தாபித சுவிசேஷ சத்தியங்களில் காணப்படுகிற ஆசீர்வாதங்களையும், பரிசுத்த உடன்படிக்கைகளையும் பெற்று, தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் மறுஸ்தாபிதத்தைப்பற்றி பகிர்ந்துகொள்ளும்போது, தீர்க்கதரிசனம் நிறைவேறுதலில் நாம் பங்கெடுக்கிறோம்.

எல்லா இடங்களிலும் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிற ஒரு சுவிசேஷ மாதிரியில் நம்மையும் உலகத்தையும் நாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு ஆப்ரிக்க சகோதரி சொல்கிறாள், “என்னுடைய கணவரின் ஆசாரியத்துவ சேவை அவரை அதிக பொறுமையுள்ளவராகவும், அன்புள்ளவராகவுமாக்குகிறது. ஒரு சிறந்த மனைவியாகவும் தாயாகவும் நான் மாறிக்கொண்டிருக்கிறேன்.”

மத்திய அமெரிக்காவில் இப்போது மதிக்கப்படும் சர்வதேச வணிக ஆலோசகர் ஒருவர், தேவனின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, அவர் தெருவில் இலட்சியமின்றி வாழ்ந்தார். இப்போது அவரும் அவருடைய குடும்பமும் அடையாளத்தை, நோக்கத்தை, பெலத்தைக் கண்டிருக்கிறார்கள்.

தென் அமெரிக்காவில், அவனுடைய குடும்பம் கட்டிக்கொண்டிருந்த வீட்டிற்கு ஜன்னல் வாங்க உதவுவதற்கு ஒரு வாலிபன் கோழிகளை வளர்த்து, அவைகளின் முட்டைகளை விற்றுவந்தான். முதலில் அவருடைய தசமபாகத்தை அவன் செலுத்துகிறான். பரலோகத்தின் ஜன்னல்கள் திறப்பதை அவன் நேரடியாகப் பார்ப்பான்.

தென்மேற்கு அமெரிக்காவில், நான்கு மூலைகளில், ஒரு பூர்வீக அமெரிக்கக் குடும்பம், சுவிசேஷ விசுவாசத்தின் மற்றும் சுய சார்பின் அடையாளமாக, வனாந்தரத்தில் பூக்க ஒரு அழகான ரோஜா செடியை வளர்க்கிறார்கள்.

தென் கிழக்கு ஆசியாவில், ஒரு கசப்பான உள்ளூர் போரில் பிழைத்துக்கொண்ட ஒரு சகோதரர், வாழ்க்கைக்கு எந்த அர்த்தமுமில்லை என விரக்தியடைந்தார். ஒரு முன்னாள் சகமாணவன் திருவிருந்து தட்டை ஏந்திக்கொண்டு, இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் நியமங்களையும் பாவநிவர்த்தியையும் சாட்சியளித்துக்கொண்டிருப்பதாக அவன் கண்ட கனவில் அவன் நம்பிக்கையைக் கண்டான்.

அவருடைய அன்பை உணரவும், கல்வி, மரியாதையான வேலை, சுயசார்பு சேவை மற்றும் அவருடைய மறுஸ்தாபித சபையில் நாம் காண்கிற நன்மை மற்றும் சந்தோஷத்தின் மூலமாக, கற்றுக்கொள்ளவும் வளரவும் பரலோக பிதா எல்லா இடங்களிலும் நம்மை அழைக்கிறார்.

நமது மிகுந்த இருளான, தனிமையான, மிக நிச்சயமற்ற நேரங்களில் வேண்டுதல் மூலமாக சிலநேரங்களில் தேவனை நம்பும்போது, சிறப்பாக அவர் நம்மை அறிந்திருக்கிறார், நம்மை நாம் அறிந்திருக்கிறதைவிட, அன்பு செலுத்துகிறதைவிட, நம்மை நேசிக்கிறார் என நாம் அறிகிறோம்.

இதனால்தான், நமது வீடுகளிலும், சமுதாயங்களிலும் நீடித்த நீதியை, சமத்துவத்தை, நேர்மையை, சமாதானத்தை உருவாக்க தேவனுடைய உதவி நமக்குத் தேவை. நாம் தேவனுடைய மீட்பின் அன்பை உணரும்போது, அவருடைய குமாரனின் பாவநிவர்த்தியின் மூலமாக கிருபையையும் அற்புதங்களையும் நாடும்போது, பரிசுத்த உடன்படிக்கைகளால் நீடித்த உறவுகளை அமைக்கும்போது, நமது மிக உண்மையான, ஆழமான, மிக நம்பகமான கதையும், இடமும், சொந்தமும் வருகிறது.

இன்றைய இரைச்சலான, சத்தமிகுந்த, மாசுபட்ட உலகத்தில் மதநல்லிணக்கமும், ஞானமும் தேவை. மனித ஆவியை வேறு எவ்வாறு நாம் புதுப்பிக்கலாம், உணர்த்தலாம், திருத்தலாம்? 24 .

படம்
ஹெயிட்டியில் மரங்களை நடுதல்
படம்
ஹெயிட்டியில் மரங்களை நடுதல்
படம்
ஹெயிட்டியில் மரங்களை நடுதல்

நன்மை செய்ய மக்கள் கூடிவருவதற்கான நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளுக்கு மத்தியில், ஹெயிட்டியில் மரங்களை நடுதல் ஒன்று மட்டுமே இருந்தது. மரங்களை நன்கொடையாக வழங்கிய நமது சபையின் 1,800 அங்கத்தினர்கள் உட்பட உள்ளூர் சமுதாயம் கிட்டத்தட்ட 25,000 மரங்களை நடுவதற்கு கூடினார்கள். 25 . இந்த பல்லாண்டு மறுகட்டமைப்பு திட்டம் ஏற்கனவே 121,000 மரங்களை நட்டுள்ளது. இன்னும் பல்லாயிரக்கணக்கான அதிகமான மரங்களை நடுவதற்கு அது எதிர்பார்த்திருக்கிறது.

இந்த ஒற்றுமையான முயற்சி, நிழலைக் கொடுத்து, மண்ணைப் பாதுகாத்து, வருங்கால வெள்ளத்தைத் தடுக்கிறது. இது சுற்றுப்புறங்களை அழகுபடுத்துகிறது, சமுதாயத்தை உருவாக்குகிறது, சுவையை திருப்திப்படுத்துகிறது, ஆத்துமாவை போஷிக்கிறது. இந்த மரங்களிலிருந்து கனிகளை அறுவடை செய்கிற ஹெயிட்டியிலுள்ளவர்களை நீங்கள் கேட்டால், அவர்கள் சொல்வார்கள், “எவர் பசியுடன் இருந்தாலும்.”

உலகத்தின் ஜனத்தொகையில் சுமார் 80 சதவீதம் மதரீதியாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். 26 இயற்கை அழிவுகளுக்குப் பின்னர், உடனடி தேவைகளுக்கும், அப்படியே, உணவிற்கும், உறைவிடத்திற்கும், கல்வி மற்றும் கல்வி அறிவிற்கும், வேலை வாய்ப்பு பயிற்சிகளுக்கும், மத சமுதாயங்கள் பதிலளிக்க ஆயத்தமாயிருக்கின்றன. உலகெங்கிலும், நமது அங்கத்தினர்கள், நண்பர்கள் மற்றும் சபையின் உதவி சமூகங்கள் அகதிகளுக்கு ஆதரவளித்து, ஒரு நபர், ஒரு கிராமம், ஒரே நேரத்தில் ஒரு மரம் என, நீர், சுகாதாரம், மாற்றுத்திறனாளிகள் இயக்கம், பார்வை பராமரிப்பை வழங்குகின்றன. 27 பிற்காலப் பரிசுத்தவான்களின் தொண்டு நிறுவனங்கள் மூலமாக அவற்றையும் சேர்த்து, எல்லா இடங்களிலும் நல்ல பெற்றோராக, நல்ல குடிமகன்களாக இருக்கவும் நம்முடைய சுற்றுப்புறங்களில் சமுதாயத்தில் பங்கெடுக்கவும் நாம் நாடுகிறோம். 28

தார்மீக சுயாதீனத்தையும், தார்மீக பொறுப்பையும் தேவன் நமக்குக் கொடுக்கிறார். “தேவனாகிய கர்த்தராகிய நான் உங்களை விடுதலையாக்குகிறேன், ஆகவே நீங்கள் உண்மையாகவே விடுதலையடைந்திருக்கிறீர்கள்” 29 என கர்த்தர் அறிவிக்கிறார். “சிறைப்பட்டவர்களுக்கு சுதந்திரத்தை” 30 பிரகடனப்படுத்தி, அவருடைய பாவநிவர்த்தியும் சுவிசேஷப் பாதையும் உலகப்பிரகாரமான, ஆவிக்குரிய கட்டுகளை உடைக்குமென கர்த்தர் வாக்களிக்கிறார். 31 அநித்தியத்திலிருந்து கடந்து சென்றவர்களுக்கு, இரக்கமுள்ள இந்த மீட்பின் சுதந்தரம் கொடுக்கப்படுகிறது.

பிற்காலப் பரிசுத்தவான்களின் “மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி” அவர் படித்துக்கொண்டிருந்ததாக, சிலஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அமெரிக்காவிலுள்ள ஒரு மதபோதகர் என்னிடம் கூறினார். “இது நியாயமாகத் தோன்றுகிறது,” அந்த போதகர் சொன்னார், “கிறிஸ்துவில் ஜீவனுள்ளோராய் இருக்கிற சிறுபிள்ளைகளைத் தவிர, அவர்கள் எப்போது, எங்கே வாழ்ந்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாது ஞானஸ்நானம் பெற ஒவ்வொருவனுக்கும் தேவன் வாய்ப்புகளைக் கொடுக்கிறார்.” 32 “ஞானஸ்நானம் மற்றும் உயிர்த்தெழுதலுக்காக மரித்தவர்கள் காத்திருப்பதைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல், பேசியதை” அந்த போதகர் குறிப்பிட்டார். 33 ஒருவனும் “மரணத்திற்கோ, நரகத்திற்கோ, அல்லது கல்லறைக்கோ அடிமையாயிருக்கமாட்டான்” என சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்களுக்கு ஆலய பதிலி நியமங்கள் வாக்களிக்கிறது. 34

தேவனை நாம் கண்டுபிடிக்கும்போது, சில சமயங்களில் ஜெபங்களுக்கு எதிர்பாராத விதமான பதில்கள் நம்மைத் தெருவில் இருந்து அழைத்துச் செல்கின்றன, நம்மை சமுதாயத்திற்கு கொண்டுவருகின்றன, நம்முடைய ஆத்துமாக்களிலிருந்து இருளைத் துரத்துகின்றன, மேலும் ஆவிக்குரிய அடைக்கலத்தைக் கண்டறிவதற்கும், அவருடைய உடன்படிக்கைகளின் நன்மை மற்றும் நிலையான அன்பைக் கொண்டிருப்பதற்கும் வழிகாட்டுகின்றன.

பெரிய காரியங்கள் சிறியதாக ஆரம்பிக்கின்றன, ஆனால் தேவனின் அற்புதங்கள் தினமும் வெளிப்படுத்தப்படுகின்றன. பரிசுத்த ஆவியின் வானுலக வரத்திற்காக, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திக்காக, அவருடைய பெயரில் அழைக்கப்படுகிற அவருடைய மறுஸ்தாபித சபையில் காணப்படுகிற, வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடு, நியமங்கள், உடன்படிக்கைகளுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

சகல ஜாதிகள், கோத்திரங்கள், பாஷைக்காரர்கள் பெறவும், அவருடைய வாக்களிக்கப்பட்ட தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட ஆசீர்வாதங்களை நிறைவேற்ற உதவவும் தேவனுடைய அழைப்பை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோமா, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.