பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
அக்டோபர் 2022 பொது மாநாடு


சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, உங்கள் ஆதரவு வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் sமுன்மொழிதல் எனது சிலாக்கியம்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் மரியான் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் உலிசஸ் சோயர்ஸ்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

மூப்பர்கள் வெதர்போர்ட் டி. கிளேட்டன், லெக்ராண்ட் ஆர். கர்டிஸ் ஜூனியர், ராண்டி டி. பங்க், கிறிஸ்டோபெல் கோல்டன், வால்டர் எப். கோன்சாலஸ், லாரி எஸ். காச்சர், லின் ஜி. ராபின்ஸ் மற்றும் ஜோசப் டபிள்யூ. சிடாட்டி ஆகியோரை பொது அதிகார எழுபதின்மர்களாக இருந்ததிலிருந்து நாங்கள் விடுவித்து, ஒய்வுபெற்ற நிலை வழங்கியுள்ளோம்.

அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்காக இந்த சகோதரர்களுக்கும், அவர்களது மனைவிகளுக்கும் குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் உயர்த்திய கரங்களோடு அப்படிச் செய்யலாம்.

கடந்த ஆண்டில் தங்கள் சேவையை நிறைவு செய்த பிரதேச எழுபதின்மர்களையும் நாங்கள் பாராட்டுதலோடு குறிப்பிடுகிறோம், அவர்களின் பெயர்களை newsroom.ChurchofJesusChrist.org இல் காணலாம்.

இந்த சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக நன்றி தெரிவிக்க விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பொது அதிகாரிகள், பிரதேச எழுதின்மர், மற்றும் இந்த வார தொடக்கத்தில் newsroom.ChurchofJesusChrist.orgல் அறிவிக்கப்பட்ட ஆறு புதிய பிரதேச எழுபதின்மர் உட்பட தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து உயர்த்திய கரங்களால் அப்படிச் செய்யவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

சகோதர சகோதரிகளே, சபைத் தலைமை சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

ரிக்கார்டோ ஜே. பாட்டிஸ்டா, வில்லி பினென், பெர்ன்ஹார்ட் சீஸ்லா, நாதன் ஆர். எமெரி, சியோன் டுயோன், யவ்ஸ் எஸ். வீட்மேன்.

பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆகஸ்ட் 1, 2021 அன்று விடுவிக்கப்பட்டனர்:

லூயிஸ் ஆர். அர்பிசு, மைக்கேல் வி. பெஹெஷ்டி, டேவிட் ஏ. பெனால்காசர், பெர்ன் எஸ். பிராட்பென்ட், கெவின் இ. கால்டர்வுட், லூசியானோ காஸ்கார்டி, டிங் சுங் சாங், ஏரியல் ஈ. சாப்பரோ, பாப்லோ எச். சாவேஸ், ரேமண்ட் ஏ. கட்லர், ஜோஸ் எல். டெல் குயர்சோ, அலெஸாண்ட்ரோ டினி சியாச்சி, கார்லோஸ் ஆர். ஃபுஸ்கோ ஜூனியர், ஜார்ஜ் ஏ. கார்சியா, கேரி எஃப். கெசல், கார்ல் டி. ஹிர்ஸ்ட், ரென் எஸ். ஜான்சன், ஜே பி. ஜோன்ஸ், பால் என். லெகியாஸ், ஆர்டூர் ஜே. மிராண்டா, எலி கே. மோங்கா, ஏ. ஃபேபியோ மொஸ்கோசோ, யுடகா நாகடோமோ, ஜுவான் சி. போஸோ, அந்தோனி குவைஸி, மார்ட்டின் சி. ரியோஸ், சாண்டினோ ரோமன், ஜானி எஃப். ரூயிஸ், ரோசெண்டோ சாண்டோஸ், கார்டன் எச். ஸ்மித், கே. ராய் டன்னிக்லிஃப்.

மூப்பர் லேவி டபிள்யூ. ஹீத் மற்றும் மூப்பர் ‘இனோக் எஃப். குபு, பிரதேச எழுபதின்மர்ஆகப் பணியாற்றியவர்கள், 2022 இல் காலமானார்கள்.