பொது மாநாடு
நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் வல்லமை
அக்டோபர் 2023 பொது மாநாடு


நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் வல்லமை

நாம் ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவிடம் வர முற்படும்போது அந்த பலத்தின் ஆதாரம் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் என்பதை நான் கண்டேன்.

அன்பான சகோதர சகோதரிகளே இது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை. அவருடைய சபையாக கூடியிருப்பது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இது யாருடைய சபை, யாருடைய போதனைகளை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதற்காக, கர்த்தருடைய சபையின் சரியான பெயரை அடிக்கடி பயன்படுத்துமாறு தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு நினைவூட்டியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

தலைவர் நெல்சன் கூறினார்: வரும் நாட்களில், உலகம் எப்போதும் கண்டிராத இரட்சகரின் வல்லமையின் மிகப் பெரிய வெளிப்பாடுகளை நாம் காண்போம். விசுவாசிகளுக்கு எண்ணற்ற சிலாக்கியங்களையும், ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும் அருளுவார்.”1

எனக்கும் என் மனைவி ரெனிக்கும் கிடைத்த மிகப் பெரிய சிலாக்கியங்கள் மற்றும் வாய்ப்புகளில் ஒன்று, பரிசுத்தவான்களை நாங்கள் சேவை செய்யும் இடங்களில் சந்திப்பது. நாங்கள் அவர்களின் கதைகளைக் கேட்கிறோம், அவர்களின் இழப்புகளைக் காண்கிறோம், அவர்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம், அவர்களின் வெற்றியில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விசுவாசிகளுக்கு இரட்சகர் அருளிய பல ஆசீர்வாதங்களையும் அற்புதங்களையும் நாங்கள் கண்டிருக்கிறோம். சாத்தியமற்றதைக் கடந்து வந்த, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்தவர்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.

படம்
தலைவர் ஜோஸ் படல்லா மற்றும் அவரது மனைவி சகோதரி வலேரியா படல்லா.
படம்
பிளாவியா க்ருசாடோ மற்றும் அவரது அப்பா.

பொலிவியாவில் கர்த்தருக்கு சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் கணவனை இழந்த ஒரு விதவையில் இரட்சகரின் வல்லமை வெளிப்படுவதை நாங்கள் கண்டோம்.2 யாரோ ஒருவர் அவளது செல்போனை திருட நினைத்ததற்காக அர்ஜென்டினாவில் ரயிலுக்கு அடியில் தள்ளப்பட்டு காலை இழந்த ஒரு இளம்பெண்னிடம் அதைப் பார்த்திருக்கிறோம்3 அந்த ஒரு கொடூரமான மற்றும் விவரிக்க முடியாத செயலுக்கு பிறகு அவரது ஒற்றை தந்தை, உடைந்த பகுதிகளைக் கொண்டு இப்போது அவரது மகளைப் பலப்படுத்த வேண்டும். 2022 கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த குடும்பங்களில் இதைப் பார்த்திருக்கிறோம்.4 அதிர்ச்சிகரமான விவாகரத்துக்குப் பிறகு துன்பப்படுபவர்களிடமும், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளிடமும் நாங்கள் அதைப் பார்த்திருக்கிறோம்.

படம்
சிலியில் தீ

கடினமான விஷயங்களைச் கடந்து செல்ல அவர்களுக்கு எது வல்லமை அளிக்கிறது? எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகத் தோன்றும்போது, ​​கூடுதல் பலம் தருவது எது?

நாம் ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவிடம் வர நாமாக முற்படும்போது அந்த பலத்தின் ஆதாரம் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் என்பதை நான் கண்டேன்.

மனுஷர் யாவரும் தம்முடைய சத்தத்திற்குச் செவி கொடுப்பார்களெனில், அவர்களை இரட்சிக்கும்படியாகவே அவர் உலகத்திற்கு வருகிறார்; இதோ, அவர் எல்லா மனுஷருடைய வேதனைகளையும், ஆம் ஆதாமின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஜீவராசியின் வேதனைகளையும், புருஷர்கள், ஸ்திரீகள், குழந்தைகளுமான அனைவருடைய வேதனைகளையும் தாங்கியிருக்கிறார் என்று யாக்கோபு தீர்க்கதரிசி கற்பித்தான்.5

சில சமயங்களில், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது சாத்தியமற்றது, கிட்டத்தட்ட அடைய முடியாத ஒன்றாகத் தோன்றலாம். கிறிஸ்துவிடம் வருவதற்கு நம்மிடம் இல்லாத பலம், வல்லமை மற்றும் பரிபூரணம் தேவை என்று நாம் நினைக்கலாம், மேலும் அதைச் செயல்படுத்துவதற்கான வலிமையை நம்மால் பெற முடியவில்லை. ஆனால் இவர்கள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையே பயணத்தைத் தொடங்குவதற்கு நமக்கு ஆற்றலைத் தருகிறது. சில நேரங்களில் நாம் நினைக்கலாம், “நான் இயேசுவிடம் வருவதற்கு முன்பு என் வாழ்க்கையை நான் சரிசெய்ய வேண்டும்,” ஆனால் உண்மை என்னவென்றால், அவர் மூலம் நம் வாழ்க்கையை சரிசெய்ய நாம் இயேசுவிடம் வருகிறோம்.

நாம் பரிபூரணமாக இருப்பதால் இயேசுவிடம் வரவில்லை. நாம் குறைபாடுள்ளவர்களாய் இருப்பதால் நாம் அவரிடம் வருகிறோம், மேலும் அவரில் நாம் “பூரணப்பட முடியும்”6

ஒவ்வொரு நாளும் சிறிதளவு விசுவாசத்தை பிரயோகிக்க நாம் எவ்வாறு தொடங்கலாம்? என்னைப் பொறுத்தவரை இது காலையில் தொடங்குகிறது: நான் எழுந்ததும், எனது தொலைபேசியைப் பார்ப்பதற்குப் பதிலாக, நான் ஒரு ஜெபத்தை ஏறெடுக்கிறேன். எளிமையான ஜெபமாக கூட இருக்கலாம். பிறகு நான் வேதம் வாசிக்கிறேன். திருவிருந்தில் பங்குபெறும் போது “எப்போதும் அவரை நினைவுகூர்வோம்” என்ற வாராந்திர உடன்படிக்கையை செயல்படுத்த இது எனக்கு உதவுகிறது.7 ஒரு ஜெபம் மற்றும் வேதவசனத்துடன் எனது நாளைத் தொடங்கும் போது, ​​நான் எனது தொலைபேசியைப் பார்க்கும்போதுகூட “அவரை நினைவுகூர” முடியும். நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசும்போது, ​​​​பிரச்சினைகள் மற்றும் மோதல்களை எதிர்கொள்ளும் போது நான் “அவரை நினைவில்” கொள்ள முடியும், மேலும் நான் இயேசுவைப் போலவே அவற்றை எதிர்கொள்ள முயற்சிக்கிறேன்.

நான் “அவரை நினைவுகூரும்போது,” நான் மாற வேண்டும், மனந்திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தை உணர்கிறேன். என் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கான வல்லமையின் ஆதாரத்தை நான் காண்கிறேன், மேலும் பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கை என் வாழ்க்கையில் உணர்கிறேன் “[நான்] எப்பொழுதும் அவருடைய ஆவியைக் கொண்டிருக்க அவர் [எனக்கு] கொடுத்த அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன்.”8 இது முடிவுபரியந்தம் வரை நிலைத்திருக்க உதவுகிறது.9 அல்லது குறைந்தபட்சம் நாள் இறுதி வரை! அந்த நாட்களில் நான் அவரை நாள் முழுவதும் நினைவில் வைத்துக் கொள்ளத் தவறிவிட்டாலும், அவர் இன்னும் இருக்கிறார், என்னை நேசிக்கிறார், “பரவாயில்லை நீ நாளை மீண்டும் முயற்சி செய்யலாம்” என்று என்னிடம் கூறுகிறார்.

நாம் அவரை நினைவுகூருவதில் அபூரணர்களாக இருந்தாலும், நம்முடைய அன்பான பரலோகப் பிதா நம்மை நினைவுகூரத் தவறுவதில்லை.

நாம் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று, உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பது அல்லது தேவனுக்கு நாம் செய்யும் வாக்குறுதிகள் அவருடன் நாம் செய்யும் ஒருகையான பரிவர்த்தனை என்று நினைப்பது: நான் கீழ்ப்படிகிறேன், எனக்கு எப்பொழுதும் தீங்கு நடக்காமல் அவர் என்னைப் பாதுகாக்கிறார் என்று நினைப்பதே. நான் என் தசமபாகத்தை செலுத்துகிறேன், நான் ஒருபோதும் என் வேலையை இழக்க மாட்டேன் அல்லது அக்கினி என் வீட்டை எரிக்காது. ஆனால், நாம் எதிர்பார்த்தபடி நடக்காதபோது, ​​“நான் அழிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா?” என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறோம்.10

நம்முடைய உடன்படிக்கைகள் வெறும் பரிவர்த்தனை அல்ல; அவை மாறத்தக்கவை.11 என் உடன்படிக்கைகள் மூலம் நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தப்படுத்தும், பலப்படுத்தும் வல்லமையைப் பெறுகிறேன், இது என்னை மன்னிக்க முடியாததை மன்னிக்க, சாத்தியமற்றதை ஜெயிக்க ஒரு புதிய நபராக மாற்றவல்லது. இயேசு கிறிஸ்துவை நினைவுகூர்வது எப்பொழுதும் வல்லமையைத் தரும்; “அவர் [எனக்கு] கொடுத்த அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க” இது எனக்கு கூடுதல் பலத்தைத் தருகிறது. 12இது என்னை விரும்பத்தக்கவராகவும் , எந்நிலையிலும் புன்னகைக்கவும், சமாதானம் செய்பவராகவும், 13முரண்பாட்டைத் தவிர்க்கவும், தேவன் என் வாழ்க்கையில் மேலோங்கவும் உதவுகிறது.14

நம்முடைய வலி அல்லது நாம் விரும்பும் ஒருவரின் வலி நம்மால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, ​​​​இயேசு கிறிஸ்துவை நினைத்து அவரிடத்தில் வருவது பாரத்தை குறைக்கலாம், இருதயத்தை மென்மையாக்கலாம் மற்றும் வலியை குறைக்கலாம். ஒரு தந்தை தனது இயற்கையான திறனைத் தாண்டி காலை இழந்த தனது மகளின் சரீர மற்றும் மன வலியைத் தாங்குவதற்கு இந்த வல்லமை சாத்தியப்படுத்தியது.

படம்
மூப்பர் உலிசஸ் சோயர்ஸுடன் பிளாவியோ க்ரூசடோ.

மூப்பர் சோயர்ஸ் கடந்த ஜூன் மாதம் அர்ஜென்டினாவுக்குச் சென்று பிளாவியாவிடம் அவளுடைய துயரமான விபத்து பற்றிக் கேட்டபோது, ​​அவர் உண்மையாக பதிலளித்தார், “[இது நடந்தபோது] நான் கலக்கம், கசப்பு, கோபம் மற்றும் வெறுப்பை அனுபவித்தேன். ‘ஏன் நான்?’ என்று கேட்பது அல்ல, ‘எதற்கு?’ என்பதுதான் எனக்கு உதவிய கேள்வி. இது என்னை மற்றவர்களிடமும், கர்த்தரிடமும் நெருக்கமாக்கியது. … அவரிடமிருந்து என்னை விலக்குவதற்குப் பதிலாக, நான் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.15

தலைவர் நெல்சன் போதித்தார்: தேவனுடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கான வெகுமதி பரலோக வல்லமையாகும், நமது துன்பங்கள், சோதனைகள் மற்றும் மனவேதனைகளை சிறப்பாகச் சமாளிக்க நம்மைப் பலப்படுத்தும் வல்லமை. இவ்வாறு, உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் ஒரு சிறப்பு வகையான இளைப்பாறுதலுக்கு உரிமையுடையவர்கள்.” 16 தினமும் கணவனை காணாத மனவேதனையை மீறி அந்த விதவையின் கண்களில் நான் கண்ட சமாதானமும் இளைப்பாறுதலும் இதுதான்.

படம்
கலிலேயா கடலில் புயல்.

இயேசுவும் அவருடைய சீடர்களும் ஒரு கப்பலில் இருந்த நேரத்தைப் புதிய ஏற்பாடு நமக்குச் சொல்கிறது:

விரைவிலேயே, “பலத்த சுழற்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதன்மேல் மோதிற்று. …

“அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.

“அவர் எழுந்து, காற்றை அதட்டி கடலைப் பார்த்து, இரையாதே அமைதலாயிரு என்றார். …

“அவர் அவர்களை நோக்கி:, ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.”17

இந்தக் கதையில் எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு. அவர்கள் தங்கள் விசுவாசத்தைப் பிரயோகித்து புயலை அமைதிப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்த்தாரா? காற்றைக் கடிந்து கொள்வதா? இயேசு கிறிஸ்து நம்முடன் கப்பலில் இருப்பதால் நாம் அழிய மாட்டோம் என்பதை அறிந்து, புயலைத் தாங்கும் சமாதான உணர்வே இயேசு கிறிஸ்துவில் மீதுள்ள விசுவாசம்.

சிலியில் ஏற்பட்ட தீவிபத்திற்குப் பிறகு குடும்பங்களைச் சந்தித்தபோது நாங்கள் கண்ட விசுவாசம் இதுதான். அவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டன; அவர்கள் அனைத்தையும் இழந்தனர். ஆயினும்கூட, நாங்கள் அவர்களின் வீடுகளாக இருந்த இடத்தில் நடந்து செல்லும்போதும், அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி எங்களிடம் கூறும்போதும், நாங்கள் பரிசுத்த இடத்தில் நிற்பதாக உணர்ந்தோம். ஒரு சகோதரி என் மனைவியிடம், “அருகில் உள்ள வீடுகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தபோது, ​​எங்கள் வீடு எரியப் போகிறது, எல்லாவற்றையும் இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது என்று கூறினார். விரக்திக்கு பதிலாக, விவரிக்க முடியாத சமாதானத்தை நான் அனுபவித்தேன். எப்படியோ, எல்லாம் சரியாகிவிடும் என்று உணர்ந்தேன்.” கர்த்தரை நம்புவதும், அவருடனான நமது உடன்படிக்கைகளைக் கடைபிடிப்பதும் நமது பலவீனத்திற்கு வல்லமையும், நமது துக்கத்திற்கு ஆறுதலையும் தருகிறது.

விசுவாசம், பலம் மற்றும் விடாமுயற்சியின் பல உதாரணங்களுக்காக ரெனியும் நானும் இந்த அசாதாரண பாரிசுத்தவான்களில் சிலரைச் சந்திக்க நேர்ந்த வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒரு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஒருபோதும் வெளியிடாத அல்லது வைரலாகிவிடாத மனவேதனை மற்றும் ஏமாற்றத்தின் கதைகள். இழப்பு அல்லது அதிர்ச்சிகரமான விவாகரத்துக்குப் பிறகு சிந்திய கண்ணீரையும், ஜெபங்களையும் எடுக்கப்படாத படங்கள் , பயம், துக்கம் மற்றும் வலியை பதிவிடாத இடுகைகள் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவர்த்தியில் அவர்கள் கொண்டுள்ள விசுவாசத்தால் தாங்கக்கூடியதாக ஆவதற்கு நன்றி. இந்த ஜனங்கள் என் தனிப்பட்ட விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார்கள், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இது இயேசு கிறிஸ்துவின் சபை என்று எனக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் நாம் அவரிடம் வந்தால், அவருடைய வல்லமையை நமக்கு வழங்க அவர் தயாராக இருக்கிறார் என்பதை நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.