பொது மாநாடு
சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருங்கள்
அக்டோபர் 2023 பொது மாநாடு


சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருங்கள்

“சமாதானமுள்ள கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்” இந்த வாழ்க்கையில் சமாதானத்தையும், மகிமையான பரலோக மறுசந்திப்பையும் காண்பார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.

“சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக”1 தனித்துவமான சவால்களை அனுபவிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பணிவுடன் ஆராதித்து, சாட்சிகூறுபவர்கள் எப்போதும் சோதனைகளையும், உபத்திரவங்களையும், துன்பங்களையும் அனுபவித்திருக்கிறார்கள்.2 நானும் என் மனைவி மேரியும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த ஆண்டில், எங்களின் நெருங்கிய உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் மற்றும் ஊழியக்கார தோழர்கள், அவர்கள் சிலரது அருமையான மனைவிகள், முன்னாள் உடன் ஊழியர்கள் பலர் மரித்ததைக் கண்டோம் அல்லது தலைவர் ரசல் எம். நெல்சன் கூறியது போல், திரையின் மறுபுறம் செல்ல பட்டம் பெற்றார்கள். விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் வளர்க்கப்பட்ட சிலர் உடன்படிக்கையின் பாதையிலிருந்து விலகிச் செல்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, 23 வயது பேரனை இழந்தோம், அவன் ஒரு சோகமான கார் விபத்தில் இறந்தான். சில அன்பான நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களும் குறிப்பிடத்தக்க உடல்நல சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

சோதனைகள் ஏற்படும் போதெல்லாம், நாம் துக்கப்படுகிறோம், ஒருவருக்கொருவரின் சுமைகளை சுமக்க முயற்சி செய்கிறோம்.3 நிறைவேறாததையும், பாடாத பாடல்களையும் நினைத்து புலம்புகிறோம்.4 இந்த பூலோகப் பயணத்தில் நல்லவர்களுக்கு தீமையான காரியங்கள் நடக்கின்றன. ஹவாயியில் உள்ள , மௌயி, தெற்கு சிலி மற்றும் கிழக்கு கனடாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீ, நல்ல மனிதர்கள் சில நேரங்களில் எதிர்கொள்ளும் பயங்கரமான நிகழ்வுகளுக்கு எடுத்துக்காட்டுகள்.

கர்த்தர் ஆபிரகாமுக்கு ஆவிகளின் நித்திய தன்மையை வெளிப்படுத்தியதாக விலையேறப்பெற்ற முத்துவில் வாசிக்கிறோம். ஆபிரகாம் நமது பூலோக ஜீவியத்திற்கு முந்தியதையும், குறிக்கப்பட்டிருத்தலையும், சிருஷ்டிப்பையும், ஒரு மீட்பரைத் தெரிந்துகொள்ளுதலையும், மனுஷனின் பூலோக ஜீவியத்தைப்பற்றியும் அறிந்துகொள்ளுகிறான்.5 மீட்பர் அறிவித்தார்:

“இவைகள் வாசம்செய்ய ஒரு பூமியை நாம் உண்டாக்குவோம்.

“அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிட்ட சகல காரியங்களையும் அவர்கள் செய்வார்களாவென அவர்களை நாம் சோதித்துப் பார்ப்போம்.” 6

இப்போது நாம் அனைவரும் தேவனின் மாபெரும் இரட்சிப்பின் ஒரு பகுதியாக மகிமையின் ராஜ்யத்தை நோக்கி முன்னேறும் பயணத்தின் இரண்டாவது வாழ்விடத்தில் இருக்கிறோம். நாம் சுயாதீனத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் பூலோக சோதனைகளுக்கு ஆட்கொள்ளப்பட்டுள்ளோம். இந்த ஜீவியம் மனுஷனுக்கு, தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.7 இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் திட்டத்தில் அவருடைய பங்கைப் பற்றியும் அறிந்து கொள்வதில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில்—பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாகும் சிலாக்கியம் நமக்கு இருக்கிறது. கிறிஸ்துவின் சமாதானமுள்ள பின்பற்றுபவர்களாக, நாம் அவருடைய கட்டளைகள்படி வாழ முயற்சி செய்கிறோம். அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அது எளிதாக இருந்ததில்லை. இரட்சகருக்கு அவரது பூலோக ஊழியத்தை உண்மையாக நிறைவேற்றுவதும் எளிதானது அல்ல.

வேதங்கள் தெளிவாக உள்ளன, பலர் “புசித்து, குடித்து, பூரிப்பாயிரு, ஏனெனில் நாளை நாம் இறந்துவிடுவோம்” என்ற அணுகுமுறைக்கு அடிபணிவார்கள்.8 ஏனைய அவிசுவாசிகளோ, நவமான காரியங்கள் 9 மற்றும் மனிதர்களின் தத்துவங்களுக்காக.10கூடிடும் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளுடன் இணைந்து இருளில் அகப்பட்டிருக்கிறார்கள். சத்தியத்தை எங்கே காண்பதென அவர்கள் அறிந்திருக்கவில்லை.11

சமாதானமுள்ள கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் இந்த வழி எதையும் பின்பற்றுவதில்லை. நாம் வாழும் சமூகங்களின் அன்பான, ஈடுபாடுள்ள உறுப்பினர்கள். கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்ற தேவனின் குழந்தைகள் அனைவரையும் நாம் நேசிக்கிறோம், பகிர்ந்து கொள்கிறோம், அழைக்கிறோம்.12 நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி, தலைவர் நெல்சனின் ஆலோசனையை நாம் பின்பற்றுகிறோம்; இப்போதும் எப்பொழுதும் சமாதானம் செய்பவரின் பாத்திரத்தை நாம் தேர்வு செய்கிறோம்.13 இந்த உணர்த்தப்பட்ட அணுகுமுறை, வேதம் மற்றும் தீர்க்கதரிசன வழிகாட்டுதல் ஆகிய இரண்டிற்கும் இசைவானது.

1829 இல், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை ஒழுங்கமைக்கப்படவில்லை, மற்றும் மார்மன் புஸ்தகம் வெளியிடப்படவில்லை. பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு, துயரப்படும் மக்களின் சிறிய குழு, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை பின்தொடர்ந்தார்கள். கடினமான நேரங்களில் கர்த்தர் ஜோசப்புக்கு ஆலோசனையை வெளிப்படுத்தினார்: “ஆகவே, சிறுமந்தையே பயப்படாதே; நன்மை செய், பூமியும் நரகமும் உனக்கு விரோதமாக திரண்டாலும், நீங்கள் என் கன்மலையின் மேல் கட்டப்பட்டிருந்தால் அவைகளால் மேற்கொள்ளமுடியாது.”14 மேலும் அவர் அவர்களுக்கு லோசனையளித்தார்:

“எல்லா சிந்தனையிலும் என்னை நோக்கிப் பார், சந்தேகிக்காதே, பயப்படாதே.

“விசுவாசமாயிரு, எனது கட்டளைகளைக் கைக்கொள், பரலோக ராஜ்யத்தை நீ சுதந்தரித்துக் கொள்வாய்.”15

நாம் துன்பங்களை அனுபவிக்கும்போது நமது பரலோக இலக்கு மாறாது என்பது தெளிவாகிறது. எபிரெயரில், “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்,”16என்ற ஆலோசனையைப் பெறுகிறோம். இயேசு கிறிஸ்து, “நித்திய இரட்சிப்புக்கு காரணர்.” 17

“கிறிஸ்துவின் சமாதானமுள்ள சீஷர்களாய்… நீங்கள் மனுபுத்திரரோடு சமாதானமாய் நடக்கிறதாலே” என்று பாராட்டி, அவனது மகன் மரோனி மேற்கோள் காட்டிய மார்மனின் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.18

“சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக” இருக்க முயற்சிக்கும் சபையார்களுக்கு, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தும்போது , பிரகாசமான காலத்தை எதிர்பார்க்கலாம் சோதனைகள் உலக வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ்கின்றன. இதில் நாடுகளுக்கும் தனிநபர்களுக்கும் இடையிலான பெரிய மோதல்களும் அடங்கும்.

சபைத் தலைவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி, “ஒரு நீதியுள்ள தேவன் ஏன் தீமையான காரியங்களை அனுமதிக்கிறார், குறிப்பாக நல்லவர்களுக்கு?” மற்றும் “நீதிமான்களாக கர்த்தருடைய சேவையில் இருப்பவர்களும் ஏன் இத்தகைய துயரங்களிலிருந்து விலக்கப்படவில்லை?”

முழுமையான பதில்கள் நம்மிடமில்லை; இருப்பினும், நம் ஒவ்வொருவருக்கும் காத்திருக்கும் பிரகாசமான எதிர்காலத்தில் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் சோதனைகள், இன்னல்கள் மற்றும் துன்பங்களை எதிர்கொள்ள வலுப்படுத்தும் முக்கியமான கொள்கைகளை நாம் அறிவோம். ஜோசப் ஸ்மித், தீர்க்கதரிசி, லிபர்ட்டி சிறையில் கைதியாக இருந்தபோது, கர்த்தருடைய வார்த்தையை விட உபத்திரவத்தை கடந்து செல்ல வேறு சிறந்த உதாரணம் வேதத்தில் எதுவும் இல்லை.

கர்த்தர் இந்த பாகத்தில் அறிவித்தார்:

“பாதாளத்தின் கதவுகள் உனக்காக வாயை அகலத்திறந்தால், இந்தக் காரியங்கள் யாவும் உனக்கு அனுபவத்தைத் தரும், உன்னுடைய நன்மைக்காயிருக்கும் என்பதை என் மகனே, நீ அறிந்துகொள்.”

“மனுஷ குமாரன் சகலவற்றிற்கும் கீழே இறங்கினார். அவரைவிட நீ பெரியவனோ?

“… மனுஷன் செய்ய முடிகிறவற்றுக்காக பயப்படாதே, ஏனெனில் என்றென்றைக்கும் தேவன் உன்னோடிருக்கிறார்.”19

பரலோகத்தில் நமக்கு ஒரு பிதா இருக்கிறார் என்பது தெளிவாகிறது. தனிப்பட்ட முறையில் நம்மை நேசிக்கிறார் மற்றும் நம் துன்பங்களை முழுமையாக புரிந்துகொள்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய இரட்சகரும் மீட்பரும் ஆவார்.

தலைவர் ரசல் எம். நெல்சன் மற்றும் தலைவர் எம். ரசல் பல்லார்ட் இருவரும் என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்களின் புதிய இரண்டாம் பதிப்பின் முக்கியத்துவத்தை வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.20 நான் அவர்களின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் புதிய பதிப்பு, பரிசுத்த வேதங்களை வலிமையாக்கி, வல்லமை வாய்ந்த முறையில் அறிவிக்கிறது:

“அவரது பாவநிவாரண பலியில் நமது பாவங்களையும், வேதனைகளையும், பெலவீனங்களையும் இயேசு கிறிஸ்து தம்மீது எடுத்துக்கொண்டார். இதனிமித்தம், ‘தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்தின் பிரகாரமாய், ஒத்தாசை புரிவதெப்படி’ என்று அறிகிறார். (ஆல்மா 7:12; மற்றும் வசனம் 11 பார்க்கவும்). அவர் அழைக்கிறார், ‘என்னிடத்தில் வாருங்கள்’, நாம் அப்படிச் செய்தால், அவர் நமக்கு ஓய்வு, நம்பிக்கை, வலிமை, முன்னோக்கு மற்றும் குணப்படுத்துதலைத் தருகிறார்.(மத்தேயு 11:28; மற்றும் வசனங்கள் 29–30 பார்க்கவும்).

“இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவிர்த்தியின் மீது நாம் சார்ந்திருக்கையில், நம்முடைய சோதனைகள், வியாதிகள் மற்றும் வலிகளை தாங்கிக்கொள்ள அவர் நமக்கு உதவுவார். நாம் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் ஆறுதலால் நிரப்பப்படலாம். வாழ்க்கையில் அநீதியான அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக சரிசெய்யப்பட முடியும்”21.

நாம் ஆனந்தமாக, கிறிஸ்துவின் சமாதானமுள்ள பின்பற்றுபவர்களாக இருக்கலாம்.

நம் பிதாவின் குழந்தைகளுக்கான மகிழ்ச்சித் திட்டமானது, அநித்தியத்திற்கு முந்தைய மற்றும் உலக வாழ்க்கைக்கு முந்தைய வாழ்க்கையை மட்டுமல்ல, நித்திய ஜீவனுக்கான சாத்தியத்தையும் உள்ளடக்கியது, இதில் நாம் இழந்தவர்களுடன் ஒரு பெரிய மற்றும் புகழ்பெற்ற மறு இணைதலும் அடங்கும். எல்லா தவறுகளும் சரி செய்யப்படும், மேலும் சரியான தெளிவு மற்றும் குறையற்ற கண்ணோட்டம் மற்றும் புரிதலுடன் பார்ப்போம்.

சபைத் தலைவர்கள் இந்த முன்னோக்கை மூன்று-காட்சி நாடகத்தின் நடுவில் யாரோ ஒருவர் நடப்பதோடு ஒப்பிட்டுள்ளனர்.22 பிதாவின் திட்டத்தைப் பற்றிய ஞானம் இல்லாதவர்கள் முதல் காட்சியில் என்ன நடந்தது (அல்லது அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையில்) மற்றும் அங்கு நிறுவப்பட்ட நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியாது; பிதாவின் திட்டத்தின் மகிமையான நிறைவேற்றமான மூன்றாவது காட்சியில் வரும் தெளிவு மற்றும் தீர்மானமும் அவர்களுக்குப் புரியவில்லை.

அவருடைய அன்பான மற்றும் விரிவான திட்டத்தின் கீழ், எந்தத் தவறும் செய்யாமல், பின்தங்கியவர்களாகத் தோன்றுபவர்கள், இறுதியில் பாதிக்கப்படுவதில்லை என்பதை பலர் பாராட்டுவதில்லை.23

வசனங்கள் தெளிவாக உள்ளன: சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நீதியுள்ளவர்களாகவும், இரட்சகரைப் பின்பற்றி, அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நீதியாய் இருப்பவர்களுக்கு, பென்யமீன் ராஜா தனது மக்களுக்கு உரையாற்றியவைகள் மிக முக்கியமான வசனங்களில் ஒன்றாகும். கட்டளைகளை விசுவாசத்தோடு கடைபிடிப்பவர்கள் “முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்ய பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படும்வரையும்” இந்த வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று அவர் உறுதியளிக்கிறார்.24

நாம் அனைவரும் நம் வாழ்வில் சரீர மற்றும் ஆவிக்குரிய புயல்களை, மற்றும் சில பேரழிவுகளை அனுபவித்திருக்கிறோம் அன்பான பரலோக பிதாவும், அவருடைய குமாரனுமான மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் தலைவருமான இயேசு கிறிஸ்து, நம்மைத் தயார்படுத்துவதற்கும், ஆபத்துகளைப் பற்றி எச்சரிப்பதற்கும், நம்மைத் தயார்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் நமக்கு வேதங்களையும் தீர்க்கதரிசிகளையும் வழங்கியுள்ளார். சில வழிகாட்டுதல்களுக்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது, மற்றும் சில எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. கோட்பாடும் உடன்படிக்கைகளுமுக்கு கர்த்தரின் முன்னுரை, பாகம் 1, “தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க” நமக்கு அறிவுறுத்துகிறது.”25

பாகம் 1 நம்மை எச்சரிக்கிறது, “ஆயத்தமாயிருங்கள், வரப்போகிறதற்காக ஆயத்தமாயிருங்கள், ஏனெனில் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.”26 கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு வரப்போகும் காரியத்திற்கு ஆயத்தமாவதற்கு வாய்ப்பளிக்கிறார்.

ஜனவரி 14, 1847 அன்று வின்டர் குவார்ட்டர்ஸில் தலைவர் ப்ரிகாம் யங்கிற்கு கர்த்தர் ஒரு வல்லமைவாய்ந்த வெளிப்பாட்டைக் கொடுத்தார்.27 வரப்போகும் நிலைக்கு மக்களை தயார்படுத்துகிறார் என்பதற்கு இந்த வெளிப்பாடு ஒரு சிறந்த உதாரணம். விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் சால்ட் லேக் பள்ளத்தாக்கின் மலை சரணாலயத்திற்கு தங்கள் யாத்திரையைத் தொடங்கினர். அவர்கள் நாவூ ஆலயத்தை வெற்றிகரமாகக் கட்டி, பரிசுத்த இரட்சிக்கும் நியமங்களைப் பெற்றனர். அவர்கள் மிசௌரியிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் அவர்களை துன்புறுத்தியவர்கள் ஒரு பயங்கரமான குளிர்காலத்தில் நாவூவிலிருந்து அவர்களை விரட்டியடித்தனர். பிரிகாமுக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு, யாத்திரைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதற்கான நடைமுறை ஆலோசனையை வழங்கியது. ஏழைகள், விதவைகள், தந்தையற்றவர்கள் மற்றும் மார்மன் பட்டாலியனில் பணிபுரிபவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதில் கர்த்தர் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தார், பரிசுத்தவான்களின் முக்கிய குழு அவர்களின் ஆபத்தான பயணத்தைத் தொடர்ந்தது.

நேர்மையாக வாழ மற்ற அறிவுரைகள் தவிர, இன்றும் தொடர்ந்து பொருந்தக்கூடிய இரண்டு கொள்கைகளை கர்த்தர் வலியுறுத்தினார்.

முதலாவதாக, “பாடலுடனும் வாத்தியத்துடனும் ஆடலுடனும், துதியின் ஜெபத்தோடும் ஸ்தோத்திரத்தின் ஒரு ஜெபத்துடனும், நன்றி செலுத்துதலுடனும் கர்த்தரைத் துதிக்க” அவர்களை உற்சாகப்படுத்தினார்.28

இரண்டாவதாக, கர்த்தர் ஆலோசனை கூறினார் “துக்கமாயிருந்தால் உங்களுடைய ஆத்துமாக்கள் சந்தோஷப்படும்படியாக விண்ணப்பத்தோடு உன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிடு.”29

இந்த இரண்டு அறிவுரைகளும் நமது நாளுக்கான சிறந்த அறிவுரைகள். துதி, இசை, நன்றியறிதல் நிறைந்த வாழ்க்கை தனித்தன்மையாக ஆசீர்வதிக்கப்படுகிறது. மகிழ்ச்சியுடன் இருப்பதும், ஜெபத்தின் மூலம் பரலோக உதவியை சார்ந்திருப்பதும் கிறிஸ்துவின் சமாதானமுள்ள பின்பற்றுபவர்களாக இருப்பதற்கு ஒரு வல்லமையான வழியாகும். எப்பொழுதும் நல்ல உற்சாகத்துடன் இருக்க முயற்சிப்பது ஆவியில் தாழ்த்தப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.

ஒரு கற்பனைப் பாடலின் இறுதி வரி அழகிய பாணியில் இறுதியான பதிலைத் தெரிவிக்கிறது: “பரலோகம் குணப்படுத்த முடியாத துயரம் பூமிக்கு இல்லை.”30

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்ற முறையில், “சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்க” இந்த வாழ்க்கையில் தனிப்பட்ட சமாதானத்தையும், மகிமையான பரலோக மறு கூடுகையையும் காண்பார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். இரட்சகரின் தெய்வீகத்தன்மை மற்றும் அவரது பாவநிவர்த்தியின் உண்மைக்கு நான் உறுதியான சாட்சியாக இருக்கிறேன். அவரே நமது இரட்சகர், நமது மீட்பர் இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.