பொது மாநாடு
தங்கள் கடமையின் பாதையில்
அக்டோபர் 2023 பொது மாநாடு


தங்கள் கடமையின் பாதையில்

இன்று உங்கள் கடமையின் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கும் நீங்கள்தான், இரட்சகரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் பலம்.

உலகெங்கிலும் உள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களுக்காக நான் இப்போது என் அன்பையும், போற்றுதலையும், நன்றியையும் வெளிப்படுத்தும்போது, பரிசுத்த ஆவியின் உதவிக்காக நான் மனப்பூர்வமாக ஜெபிக்கிறேன்.

கடைசி வண்டியிலிருந்த அவர்கள்

1947 ஆம் ஆண்டு சால்ட் லேக் பள்ளத்தாக்குக்கு வந்த முதல் பிற்கால பரிசுத்தவான் முன்னோடிகளின் 100 வது ஆண்டு நிறைவைக் குறித்தது. அந்த ஆண்டில் பல நினைவுக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன, மேலும் பாதைகளை அமைத்து, வீடுகளை கட்டி, தரிசான பாலைவனத்தில் பயிர்களை நட்ட மற்றும் சமூகங்களைக் குடியமர்த்தின, இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீடர்களுக்கு எண்ணற்ற அளவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தலைவர் ஜே. ரூபன் கிளார்க், பிரதான தலைமையின் முதல் ஆலோசகர், அக்டோபர் 1947 பொது மாநாட்டில் இந்த விசுவாசமிக்க முன்னோடிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் மனதைத் தொடும் அஞ்சலிகளில் ஒன்றை வழங்கினார்.

ப்ரிகாம் யங், ஹீபர் சி. கிம்பல், வில்போர்ட் வுட்ரப், பார்லி பி. பிராட் மற்றும் பலர் மேற்கு நோக்கிய இடப்பெயர்வுக்கு வழிகாட்டிய நன்கு அறியப்பட்ட தலைவர்களை, தலைவர் கிளார்க் தனது செய்தியில் சுருக்கமாக பாராட்டினார். இருப்பினும், அவரது முதன்மை நோக்கம் இந்த குறிப்பிடத்தக்க நபர்களின் சாதனைகளை விவரிப்பதில்லை. மாறாக, சபை வரலாற்றில் பெயர்கள் அறியப்படாத அல்லது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத உறுதியான ஆத்துமாக்கள் மீது அவர் தனது கருத்துக்களை மையப்படுத்தினார். அவரது போதனையான செய்தியின் தலைப்பு, “கடைசி வண்டியிலிருந்த அவர்கள்.”1

சமவெளிகளைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நீண்ட தொடர் வண்டியிலும் கடைசியாக மூடப்பட்ட வண்டியில் பயணம் செய்த புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பண்புகள் மற்றும் சவால்களை தலைவர் கிளார்க் மிக விரிவாக விவரித்தார். நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மற்றும் மாதத்திற்கு மாதம், தங்கள் முன்னால் உருண்டு வரும் வண்டிகள் அனைத்தும் கிளறிவிட்ட தூசு மூச்சுத் திணறடிக்க—மற்றும் வழியில் அவர்கள் சந்தித்த இடைவிடாத தடைகளை முறியடித்த பெயர் தெரியாத மற்றும் கொண்டாடப்படாத இந்த மாவீரர்களை அவர் புகழ்ந்தார்.

தலைவர் கிளார்க் அறிவித்தார், “கடைசி வண்டியில் அவர்கள் முன்னோக்கி சென்று, தேய்ந்து, சோர்வாக, கால் வலி, சில சமயங்களில் ஏறக்குறைய மனமுடைந்து, தேவன் தங்களை நேசித்தார் என்றும், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் உண்மை என்றும், கர்த்தர் சகோதரர்களை முன்சென்று வழிநடத்தி வழிகாட்டினார் என்றும் தங்கள் விசுவாசத்தால் கூறினார்கள்.”2

“நம்பிக்கையில் சிறந்த, வேலையில் சிறந்த, நேர்மையான வாழ்வில் சிறந்த, நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை வடிவமைப்பதில் சிறந்த இந்த தாழ்மையான ஆத்துமாக்களுக்கு, எனது அன்பையும், மரியாதையையும், பயபக்தியான வணக்கத்தையும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.”3

குறைவாக சேவை செய்யக்கூடியவர்கள் இல்லை

1990 ஆம் ஆண்டில், பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் தலைவராக இருந்த தலைவர் ஹோவர்ட் டபிள்யூ. ஹண்டர், விடாமுயற்சியுடனும் உண்மையுடனும் சேவை செய்யும் எண்ணற்ற சபை உறுப்பினர்களின் இன்றியமையாத பங்களிப்புகளைப் பற்றி ஒரு செய்தியை வழங்கினார். அவர்கள் சிறிதளவு அல்லது பொது அங்கீகாரம் அல்லது பாராட்டைப் பெறவில்லை.

தலைவர் ஹண்டர் விளக்கினார்:

“[இளம் மற்றும் வீரம் மிக்க தலைவன் மரோனி பற்றி] கூறப்பட்டது:

“‘எல்லா மனுஷரும் மரோனியைப் போல இருந்திருந்தால், இருப்பதால், எப்போதாவது இருப்பார்களெனில், இதோ, நரகத்தின் வல்லமைகள் அனைத்தும் என்றென்றைக்குமாய் தகர்க்கப்படிருக்கும்; ஆம், பிசாசு மனுபுத்திரரின் இருதயங்களின்மீது ஒருபோதும் வல்லமை கொள்ளமாட்டான்.’(ஆல்மா 48:17) .

“ஒரு பிரபலமான மற்றும் வல்லமை வாய்ந்த மனிதனுக்கு என்ன ஒரு பாராட்டு. … இரண்டு வசனங்களுக்குப் பிறகு, மரோனியை விட குறைவான பாத்திரத்தில் நடித்த ஏலமன் மற்றும் அவனது சகோதரர்களைப் பற்றிய ஒரு அறிக்கை பின்வருகிறது:

“’இப்பொழுதும் இதோ, ஏலமனும், அவன் சகோதரரும், ஜனத்திற்கு செய்த சேவை, மரோனி ஜனத்திற்கு செய்ததிலும் குறைந்ததல்ல’ (ஆல்மா 48:19).”

தலைவர் ஹண்டர் தொடர்ந்தார், “வேறு வார்த்தைகளில் எனில், ஏலமன் மரோனியைப் போல் கவனிக்கத்தக்கவனாகவோ அல்லது வெளிப்படையாகவோ இல்லாவிட்டாலும், அவன் சேவை செய்யக்கூடியவனாக இருந்தான்; அதாவது, அவன் மரோனியைப் போல உதவியாக அல்லது பயனுள்ளவனாக இருந்தான்.”4

தலைவர் ஹண்டர் நம் அனைவருக்கும் குறைவான சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அவர் கூறினார், “இந்த ஆண்டு அல்லது வரும் ஆண்டுகளில் நீங்கள் செய்யும் பல செயல்கள் உங்களை மிகவும் பிரபலமாக்காது என்று நீங்கள் உணர்ந்தால், தைரியமாக இருங்கள். இதுவரை வாழ்ந்த சிறந்த மனிதர்களில் பெரும்பாலோர் மிகவும் பிரபலமானவர்கள் அல்ல. விசுவாசமாகவும் அமைதியாகவும் சேவை செய்து வளருங்கள்.”5

தங்கள் கடமையின் பாதையில்

இன்று இரட்சகரிடம் வரும் மில்லியன் கணக்கான சபை உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,6 மற்றும் நமது சமகால தொடர் வண்டிகளின் கடைசி வண்டிகளில் உடன்படிக்கை பாதையில் முன்னோக்கி சென்று—உண்மையில் அவர்கள் குறைந்த சேவை செய்யக்கூடியவர்கள் அல்ல. பரலோக பிதா மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது உங்களின் வலுவான விசுவாசம் மற்றும் உங்களின் ஆடம்பரமற்ற, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை என்னை ஒரு சிறந்த மனிதனாகவும் சீடனாகவும் இருக்க உணர்த்துகிறது.

நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களைப் பாராட்டுகிறேன். நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்! மேலும் நான் உங்களைப் பாராட்டுகிறேன்.

மார்மன் புஸ்தகத்தில் உள்ள லாமானியனான சாமுவேலின், ஒரு வாசகம் உங்களுக்காக என் உணர்வுகளை மிகச் சிறப்பாகச் சுருக்கமாகக் கூறுகிறது.

“அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கடமையின் பாதையில் இருப்பதையும், தேவனுக்கு முன்பாக பயபக்தியோடு நடப்பதையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய ஒழுங்குகளையும், கடைபிடித்து …

“ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் இதைச் செய்து, தங்கள் சகோதரரில் மீதியானவர்களையும் சத்தியத்தின் ஞானத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு சலிப்பில்லாமல் கருத்தோடு முயற்சிக்கிறார்கள்.”7

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர், சபைக் கூட்டங்களிலும், பல்வேறு அமைப்புகளிலும் தனியாக இருப்பவர்களைத் தேடி, அருகில் அமர்ந்திருக்கும் விவேகமுள்ள சகோதர சகோதரிகளை விவரிக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆறுதல் தேவைப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்க அங்கீகாரம் அல்லது பாராட்டுகளை எதிர்பார்க்காமல்8 அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர், கர்த்தரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் தலைமைப் பதவியில் பணியாற்றும் ஒரு துணைவர், பெற்றோர் அல்லது குழந்தைக்கு ஆதரவளிக்கும் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளை விவரிக்கிறது. அவர்களின் நிலையான, அமைதியான மற்றும் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத நீடித்த செல்வாக்கு பல தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் ஆசீர்வாதத்தை, அது நித்தியத்தில் மட்டுமே முழுமையாக அறியப்படும் வழிகளில் சாத்தியமாக்குகிறது.

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர், தேவனிடமிருந்து விலகி, தாழ்மையுடன் மீண்டும் அவரிடம் திரும்பும்,9 தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புதல், மற்றும் இரட்சகரின் பாவநிவர்த்தியின் சுத்திகரிக்கும் மற்றும் குணப்படுத்தும் வல்லமையைத் தேடும் நபர்களை விவரிக்கிறது. கிறிஸ்துவிடம் வருவது,10 பாவமான மாற்றுப்பாதைகளிலிருந்து “தடைசெய்யப்பட்ட பாதைகளுக்கு”11 உடன்படிக்கை பாதைக்குத் திரும்புவதன் மூலம் ஆவிக்குரிய விதமாக இன்றியமையாதது மற்றும் நீதிப்படி கடுமையானது. அவர்கள் விசுவாசத்துடன் முன்னோக்கிச் சென்று, நன்மை செய்வதில் சோர்வடையாமல், அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில்,12 எல்லா தலைமுறைகளுக்கும், நித்தியத்திற்கும்13 ஒரு மாபெரும் பணிக்கான அடித்தளத்தை இடுகிறார்கள்.

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர், அவருடைய சுவிசேஷத்தின் அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் மூலம் இரட்சகருடன் பிணைக்கப்பட ஏங்கும் நீதிமான்களை விவரிக்கிறது, ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் அவ்வாறு செய்வதிலிருந்து தடைசெய்யப்படலாம். உங்களின் தனிப்பட்ட வேதனைகள் நீங்கி, பொறுமையுடன் உங்கள் விருப்பத்தை தேவனுக்குச் சமர்ப்பிக்க உங்கள் கீழ்ப்படிதலும் விசுவாசத்தன்மையும் “கர்த்தருக்கு ஏற்ற காலத்தின்படி” வெகுமதி அளிக்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.14 “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.”15

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர் உலகெங்கிலும் உள்ள “தன்னுடைய சொந்த பாஷையில், தங்கள் சொந்த மொழியில் ஒவ்வொரு மனுஷனும் சுவிசேஷத்தின் பரிபூரணத்தைக் கேட்கும்படி” 16 உணர்த்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்து நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சொல்பவர்களை விவரிக்கிறது, அவர்களின் குரல்கள், சைகை மொழிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் நித்திய சத்தியங்களைத் தெரிவிக்கின்றன, ஆனால் நம்மில் சிலருக்கே அவர்களின் பெயர்கள் தெரியும் அல்லது பாராட்டு தெரிவிக்கிறோம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட மொழிகளின் வரத்தின் மூலம், மொழிபெயர்ப்பாளர்களும், மொழிபெயர்த்து சொல்பவர்களும் விடாமுயற்சியுடன், தன்னலமின்றி, மற்றும் பெரும்பாலும், தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் மூலமும் கேட்பதன் மூலமும் விசுவாசத்தின் ஆவிக்குரிய வரத்தைப் பெற மக்களுக்கு உதவ பெயர் தெரிவிக்காமல் சேவை செய்கிறார்கள்.17

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர், பூமியில் பலுகி பெருகுவதற்கான தங்கள் உடன்படிக்கைப் பொறுப்பை மதிக்கும் உண்மையுள்ள திருமணமான ஆண்களையும் பெண்களையும் மேலும் திருவிருந்து கூட்டங்களில் தங்கள் குழந்தைகளுடன் மல்யுத்தம் செய்வதற்கான வலிமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்களையும் விவரிக்கிறது. குழப்பம் அதிகரிக்கும் உலகில் பேரழிவுகள் மற்றும் தவறான முன்னுரிமைகள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த தைரியமான ஆத்துமாக்கள் சுயநலத்தை போற்றும் மதச்சார்பற்ற குரல்களுக்கு செவிசாய்ப்பதில்லை; பரலோக பிதாவின் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியின் திட்டத்திலுள்ள, அவர்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் மதிக்கிறார்கள்.

பல திருமணமான தம்பதிகள் தங்கள் இருதயத்தின் நீதியான ஆசைகள் எப்படி அல்லது எப்போது நடக்கும் என அவர்கள் நம்பிக்கை மற்றும் கனவு கண்டது நடக்காதபோதும் தேவனை நம்புகிறார்கள். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”18 மற்றும் அவர் தங்கள் பூலோக காலக்கெடுவை நிறைவேற்ற வேண்டும் என்று கோரவில்லை. “தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் ஆயத்தம் செய்தவைகளான இவ்வளவு மகத்தான காரியங்களை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு மனுஷர்கள் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, எந்தக் கண்ணும் பார்த்ததுமில்லை.”19

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர், ஒவ்வொரு ஓய்வு நாளிலும் சபையின் குழந்தைகளை நேசிக்கும் மற்றும் அறிவுறுத்தும் ஆயிரக்கணக்கான பாலர் வகுப்பு தலைவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களை விவரிக்கிறது.

இந்த அர்ப்பணிப்புள்ள சீடர்கள் செய்த சேவையின் நித்திய தாக்கத்தையும், குழந்தைகளுக்குச் சேவை செய்பவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அற்புதமான ஆசீர்வாதங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.

“ஒரு சிறு பிள்ளையை [இயேசு] எடுத்து: அவனை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அவனை அணைத்துக்கொண்டு:

“இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.”20

“தங்கள் கடமையின் பாதையில்” என்ற சொற்றொடர் அர்ப்பணிப்புள்ள குழந்தைகள் வயதான பெற்றோரை அன்புடன் கவனித்துக்கொள்வதை விவரிக்கிறது, தூக்கமின்மை கொண்ட ஒரு தாய் பயந்துபோன குழந்தையை ஆறுதல்படுத்துகிறார், அதே நேரத்தில் தனது வீட்டின் “வாசலில் சிங்கமாக” காவலில் நிற்கிறார்.21 சீக்கிரம் வந்து நாற்காலிகளை அமைப்பதற்கும், கீழே இறக்குவதற்கும் கடைசி வரை இருக்கும் சபை உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை வந்து பார்க்கவும், வரவும், உதவவும், வந்து தங்கவும் அழைக்கும் நபர்களை விவரிக்கிறது.22

“[உங்கள்] கடமையின் பாதையில்” முன்னேறி வரும் உங்களைப் போன்ற இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் மற்றும் அர்ப்பணிப்புள்ள சீடர்களின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உதாரணங்களை மட்டுமே நான் விவரித்துள்ளேன். தங்கள் “முழு ஆத்துமாக்களையும்”23 தேவனுக்கு அர்ப்பணிக்கும் பிற்கால பரிசுத்தவான்களின் மில்லியன் கணக்கான கூடுதல் எடுத்துக்காட்டுகள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வீடுகளிலும் உலகெங்கிலும் உள்ள சபை அங்கங்களிலும் காணப்படுகின்றன.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் நீங்கள் நேசிக்கிறீர்கள், சேவை செய்கிறீர்கள், கேட்கிறீர்கள், கற்றுக்கொள்கிறீர்கள், கவனித்துக்கொள்கிறீர்கள், ஆறுதலளிக்கிறீர்கள், கற்பிக்கிறீர்கள், சாட்சி கொடுக்கிறீர்கள். நீங்கள் உபவாசித்து, அடிக்கடி ஜெபித்து, மனத்தாழ்மையில் மென்மேலும் வலிமையாகி வளர்கிறீர்கள், மேலும் கிறிஸ்துவின் விசுவாசத்தில் மென்மேலும் உறுதியாகவும் “[உங்கள்] இருதயம் தூய்மையாக்கப்பட்டு, தேவனிடம் தங்கள் இருதயங்களைக் கொடுப்பதினிமித்தமே … வருகிற சுத்திகரிப்பினால் சுத்திகரிக்கப்படுமளவிற்கும், [உங்கள்] ஆத்துமாக்கள் சந்தோஷத்தாலும், ஆறுதலாலும் நிரப்பப்படும் வரைக்குமாய்”24 வளருங்கள்.

வாக்களிப்பும் சாட்சியும்

கடைசி வண்டியில் வந்த அவர்கள், குறைந்த சேவை செய்யாமல் , மற்றும் இன்று உங்கள் கடமையின் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கும் நீங்கள், இரட்சகரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் பலம். கர்த்தர் வாக்களித்தபடி,“சகல சிங்காசனங்களும், கர்த்தத்துவங்களும், துரைத்தனங்களும், அதிகாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக பராக்கிரமத்துடன் நிலைத்திருந்த அனைவர் மேலும் அருளப்படும்.”25

பரலோக பிதாவும் அவருடைய அன்பான குமாரனும் ஜீவிக்கிறார்கள் என்றும், அவர்களுடைய வாக்குறுதிகள் நிச்சயமாக இருக்கின்றன என்றும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஆனந்தமாக சாட்சியமளிக்கிறேன், ஆமென்.