பொது மாநாடு
இந்நாளில் கிறிஸ்துவோடிருங்கள்
அக்டோபர் 2023 பொது மாநாடு


இந்நாளில் கிறிஸ்துவோடிருங்கள்

இயேசு கிறிஸ்து நாம் “இந்நாளில் இருப்பதை” சாத்தியமாக்குகிறார்.

இது குறிப்பான மற்றும் நேரடி உவமைகளாலும், சிக்கலான கேள்விகளாலும், ஆழமான கோட்பாடுகளாலும் நிறைந்த ஒரு நாளாகும். “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்,” என்ற இந்த கடுமையான கண்டனத்தை தெரிவித்த பிறகு இயேசு ஆவிக்குரிய ஆயத்த நிலை மற்றும் சீஷத்துவத்தைப்பற்றிய மேலும் மூன்று உவமைகளையும் போதித்தார். இவைகளில் ஒன்று பத்து கன்னிகைகளின் உவமை.

“அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

“அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும் ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.

“புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை.

“புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள்.

“மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

“நடுராத்திரியிலே, இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

“அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

“புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி, உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே, என்றார்கள்.

“புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக, அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

“அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது, மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடுகூட கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள், கதவும் அடைக்கப்பட்டது.

“பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்காகத் திறக்க வேண்டும் என்றார்கள்.”2

“அதற்கு அவர் உங்களை அறியேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”3

“மனுஷ குமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.”4

வரப்போகும் மணவாளனைப்பற்றி தலைவர் டாலின் எச். ஓக்ஸ் கீழே உள்ள சிந்தனையைத் தூண்டும் கேள்வியைக் கேட்டார்:5 அவருடைய வருகையின் நாள் நாளையாக இருந்தால் எப்படியிருக்கும்? நாளை நாம் கர்த்தரை சந்திப்போமென்று தெரிந்திருந்தால்—நம்முடைய அகால மரணம் அல்லது அவருடைய எதிர்பாராத வருகை மூலமாகவோ—நாம் இன்று என்ன செய்வோம்?”6

வரவிருக்கும் கர்த்தருக்காக ஆவிக்குரிய ஆயத்தம் முக்கியமானதொன்று மட்டுமல்லாமல் அது ஒன்றே உண்மையான அமைதிக்கும் சந்தோஷத்திற்கும் வழியாகும் என்று என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டேன்.

“உனக்கு புற்று நோய்” என்ற வார்த்தைகளை நான் முதலாவதாக கேட்டபொழுது அது ஒரு மிருதுவான இலையுதிர்கால நாள். என்னுடைய கணவரும் நானும் திகைத்துப்போனோம்! செய்தியை நினைத்துப் பார்த்துக்கொண்டே அமைதியாக வீட்டுக்கு காரோட்டிக்கொண்டு போகும்போது, என்னுடைய மனம் எங்களுடைய மூன்று மகன்களிடம் திரும்பியது.

“நான் இறக்கப் போகிறேனா?” என பரலோகப் பிதாவிடம் என் மனதில் கேட்டுக்கொண்டேன்.

“எல்லாம் நல்லபடியே இருக்கும்” என்று பரிசுத்த ஆவி கிசுகிசுத்தது.

பிறகு “நான் வாழப் போகிறேனா?” எனக் கேட்டேன்.

“எல்லாம் நல்லபடியே இருக்கும்”என்று மறுபடியும் பதில் வந்தது.

நான் குழப்பமடைந்தேன். நான் மரித்தாலும் வாழ்ந்தாலும் சரியாக அதே பதிலை நான் ஏன் பெற்றேன்?

நாங்கள் அவசரமாக வீட்டுக்குப்போய் எப்படி ஜெபிப்பது என்று நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை என்று நான் ஞாபகப்படுத்தப்பட்டபோது திடீரென்று என்னுடைய ஒவ்வொரு இழையும் முழுமையான அமைதியால் நிரம்பியது. ஜெபத்திலிருந்து எப்படி பதில்களையும் ஆறுதலையும் பெறுவது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். வேதங்களையும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் அவர்களுக்குப் போதிப்பதற்காக அவசரமாக வீட்டிற்கு போக வேண்டியதில்லை. இந்த வார்த்தைகள், வலிமை மற்றும் தைரியத்தின் நம்பகமான ஆதாரங்களாக ஏற்கனவே உள்ளன. மனந்திரும்புதல், உயிர்த்தெழுதல், மறுஸ்தாபிதம், இரட்சிப்பின் திட்டம், நித்திய குடும்பங்கள் அல்லது இயேசு கிறிஸ்துவின் உண்மையான கோட்பாட்டை அவர்களுக்குப் போதிப்பதற்காக அவசரமாக வீட்டிற்கு போகவேண்டாம்.

அந்தத் தருணத்தில் ஒவ்வொரு குடும்ப இல்ல மாலை பாடம், வேதப்படிப்பு அமர்வு, ஏறெடுக்கப்பட்ட விசுவாச ஜெபம், கொடுக்கப்பட்ட ஆசிர்வாதம், சாட்சி பகிர்ந்தது, உடன்படிக்கை செய்து கைக்கொண்டது, ஓய்வுநாள் அனுசரிக்கப்பட்டதும் முக்கியமானதாகும்—அது எவ்வளவு முக்கியமானது! நம்முடைய விளக்குகளில் எண்ணெய் ஊற்றுவதற்கு மிகவும் தாமதாகிவிட்டது. ஒவ்வொரு சொட்டும் நமக்குத் தேவையாயிருந்தது, மற்றும் அது இப்பொழுதே நமக்குத் தேவையாயிருந்தது!

நான் மரித்தாலும் கூட இயேசு கிறிஸ்து மற்றும் அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தினால், எனது குடும்பம் ஆறுதலளிக்கப்பட்டு, பெலப்படுத்தப்பட்டு மற்றும் ஒரு நாள் திரும்பச் சேர்க்கப்படுவார்கள். ஆனால் நான் உயிர் வாழ்ந்தால், என்னை தாங்கி, ஆதரித்து, சொஸ்தமாக்குவதற்கான இந்த பூமியிலுள்ள மகத்தான வலிமையை நான் பெறமுடியும். முடிவில், இயேசு கிறிஸ்துவினிமித்தம் யாவும் சரியாகும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் கவனமான படிப்பிலிருந்து நாம் “சரியானது” என்றால் எப்படி இருக்குமென்று அறிகிறோம்:

“எனது மகிமையில் நான் வரும் அந்த நாளில், பத்து கன்னிகைகளைப்பற்றி நான் பேசிய உவமை நிறைவேற்றப்படும்.

ஏனெனில் புத்திமான்களும் சத்தியத்தைப் பெற்றவர்களும்அவர்களை வழிநடத்துவதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள், மற்றும் ஏமாற்றப்படாதவர்கள்,—மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படமாட்டார்கள், ஆனால் அந்நாளில் இருப்பார்கள்.”7

இயேசு கிறிஸ்து நாம் “இந்நாளில் இருப்பதை” சாத்தியமாக்குகிறார். தரித்திருக்கும் நாள் என்பது செய்யவேண்டிய, அதிகரித்துக்கொண்டே போகும் வேலைகளை பட்டியலிடுவது என்ற அர்த்தமில்லை. ஒரு உருப்பெருக்கும் கண்ணாடியை சிந்தியுங்கள். பொருட்களை பெரிதுபடுத்துவது மட்டுமே அதனுடைய ஒரே நோக்கம் அல்ல. அதிகமாக வலிமையானதாக்க ஒளியை சேகரித்து மையப்படுத்தவும் அதனால் முடியும். நம்முடைய முயற்சிகளை எளிமையாக்கி, கவனம் செலுத்தி, மற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியை சேகரிப்பவர்களாக இருக்கவேண்டும். நமக்கு மிகவும் பரிசுத்தமான வெளிப்படுத்தும் அனுபவங்கள் தேவை.

எப்போதும் “பசுமையான மலை” என்று குறிப்பிடப்படுகிற ஒரு அழகான மலைத்தொடர், வடமேற்கு இஸ்ரேலில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும்8 பெருமளவிலிருந்து சிறிய அளவுவரை பனியால் கர்மேல் மலை பசுமையாகவே இருக்கிறது. போஷிப்பு தினமும் நடக்கிறது. “கர்மேலின் பனியைப்போல்”,9 “நீதிக்கான காரியங்களை நாடி” நாம் நம்முடைய ஆத்துமாக்களை போஷிக்கும்போது10 “சிறிய மற்றும் எளிமையான காரியங்களான,”11 நம்முடைய சாட்சியங்களும் நம் பிள்ளைகளுடைய சாட்சியங்களும் ஜீவித்திருக்கும்!

இப்போது, நீங்கள் நினைக்கலாம், “ஆனால் சகோதரி ரைட், உங்களுக்கு என் குடும்பத்தை தெரியாது. இப்படி எதையும் போலல்லாமல், நாங்கள் நிஜமாகவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.” நீங்கள் சொன்னது சரிதான்! உங்கள் குடும்பத்தை எனக்குத் தெரியாது. ஆனால் அளவில்லாத அன்பும், இரக்கமும், வல்லமையும், அறிவும், மகிமையும் உள்ள தேவன் அறிவார்.

உங்களின் ஆத்துமாவின் ஆழத்தில் வலிக்கும் கேள்விகளே நீங்கள் கேட்கும் கேள்விகளாகலாம். பரிசுத்த வேதங்களில் அது போன்ற கேள்விகள் காணப்படுகின்றது:

“போதகரே நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?”12

“என் நம்பிக்கை இப்போது எங்கே?”13

“இந்தக் காரிருளான மேகம் நம்மை நிழலாடுவதிலிருந்து நீக்கப்படும்படிக்கு நாம் செய்யவேண்டியதென்ன என்றார்கள்?”14

“ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே?, புத்தி விளைகிற இடம் எது?”15

“[நான்] எல்லா நன்மையான காரியத்தையும் எப்படி ஏற்றுக்கொள்ளக் கூடும்?” 16

“கர்த்தரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?” 17

பிறகு மிக இனிமையாக பதில்கள் வருகிறது:

“இரட்சிப்புக்கேதுவான கிறிஸ்துவினுடைய வல்லமையை விசுவாசிக்கிறாயா?”18

“இதோ தன் நன்மையைப் புசிக்கக்கூடாது, என யாரையாகிலும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறாரா?.”19

“இதைச் செய்ய [அவருக்கு] வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?”20

“தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா?”21

“நீங்கள் உங்களை சிருஷ்டித்தவரின் மீட்பிலே விசுவாசம் கொண்டிருக்கிறீர்களா?”22

“சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ?”23

என் அருமையான நண்பர்களே, நமது எண்ணெயை நாம் பகிரமுடியாது, ஆனால் அவரது ஒளியை பகிரமுடியும். நம்முடைய விளக்கின் எண்ணெய் நாம் “அந்நாளில் இருப்பதற்கு” உதவுவது மட்டுமல்லாமல், நாம் அன்பு கூருவோரை திறந்த கரங்களுடன் வரவேற்க நிற்கும் கர்த்தரிடம் வழிநடத்துவதற்கு உதவுகிற பாதையை வெளிச்சமாக்குவதற்கும் வழியாகும்.24

“நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டு… அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.

“அங்கே உனது முடிவில் நம்பிக்கையுண்டு, தங்களின் எல்லைகளுக்கு உங்கள் பிள்ளைகள் திரும்ப வருவார்கள் என கர்த்தர் சொல்கிறார்.”25

இயேசு கிறிஸ்துவே “உன் முடிவின் ஒளி.” நாம் செய்த அல்லது செய்யாத எதுவும் அவருடைய அளவில்லா நித்திய பலிக்கு அப்பாற்பட்டவையல்ல. நம்முடைய கதைக்கு முடிவில்லாதிருப்பதன் காரணம் அவர்தான்.26 ஆகையால், “கிறிஸ்துவில் திட நம்பிக்கையாய் பூரண நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும் எல்லா மனிதரிடத்திலும் அன்போடும் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதனால் [நாம்] கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்து, முடிவுபரியந்தம் நிலைநின்று முன்னேறிச் செல்வோமானால், இதோ, [நாம்] நித்திய ஜீவனைப் பெறுவோம் என பிதா உரைக்கிறார்.” 27

நித்திய ஜீவன் நித்திய சந்தோஷமாகும். இப்பொழுது—இந்த ஜீவியத்தில் சந்தோஷம், நம்முடைய நாளின் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் ஆனால் கர்த்தருடைய உதவியினால் அவற்றிலிருந்து அறிந்து அவைகளை இறுதியாக மேற்கொண்டு —மற்றும் வரப்போகிற ஜீவியத்தில் அளவிடமுடியாத மகிழ்ச்சியும் கூட.” கண்ணீர்கள் உலர்ந்து போகும், நொருங்கின இருதயங்கள் சரிசெய்யப்படும், தொலைந்தது கிடைக்கும், கவலைகள் தீர்க்கப்படும், குடும்பங்கள் திரும்பச் சேர்க்கப்படும், மற்றும் பிதாவிடம் உள்ளது எல்லாம் நம்முடையதாகும்28

இயேசு கிறிஸ்துவைப் பார்த்து ஜீவித்திருங்கள்29 என்பதே என்னுடைய சாட்சி, நம்முடைய ஆத்துமாக்களின் அன்பார்ந்த “மேய்ப்பர் மற்றும் ஆயருமான” பரிசுத்தமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 30

குறிப்புகள்

  1. மத்தேயு 23:27.

  2. மத்தேயு 25:1–11.

  3. Joseph Smith Translation, Matthew 25:11 (in Matthew 25:12, footnote a).

  4. மத்தேயு 25:13.

  5. மூப்பர் ஜேம்ஸ் ஈ. டால்மேஜ் போதித்தார்: மணவாளன் இயேசு கிறிஸ்து; அவர் மகிமையில் வந்து பூமியிலுள்ள சபையை தன் மணப்பெண்ணாக பெற்றுக்கொள்வதை அந்த திருமண விருந்து அடையாளமாக்குகிறது. கன்னிகைகள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசிப்பவர்களை மாதிரியாக்குகிறது, மற்றும் அவர்கள் அதனால் நம்பிக்கையுடன் ஆசிர்வதிக்கப்பட்ட பங்காளர்களாக விருந்தில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு கன்னிகையும் எடுத்து வந்த ஏற்றிய விளக்கே கிறிஸ்துவர்களின் வெளிப்படையான விசுவாசம் மற்றும் நடைமுறையாகும்; புத்திசாலிகளின் எண்ணெய் இருப்பில், விடாமுயற்சி மற்றும் பக்தியுடன் தேவனில் செய்யும் ஊழியம் ஒன்றே நாம் ஆவிக்குரிய பெலத்தையும் மிகுதியையும் பெற உறுதிசெய்வதை நாம் காணமுடியும்” (Jesus the Christ [1916], 578).

  6. Dallin H. Oaks, “Preparation for the Second Coming,” Liahona, May 2004, 9.

  7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:56–57; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது;

  8. காய்ந்த கோடையிலும்கூட பனித்துளி குறைவான அளவுக்கு ஈரத்தை கொடுக்கிறது, அது தர்பூசணி போன்ற கோடைப் பயிர்களுக்கு முக்கியமானதாகும். காற்று இல்லாத குளிர் இரவுகளில், மண் அதன் பரப்பை தொடும் காற்றைவிட குளிர்ந்து போகிறது, கடலுக்கு அருகாமையில் உள்ள இடமானால், அதில் பனித்துளி விழும் வாய்ப்புகள் சிறந்தவை. பொதுவாக, கடலோர சமவெளியில் உள்நாட்டுப் பகுதிகளை விட அதிகமான பனி உள்ளது; செழிப்பானது கர்மேல் மலை, ஒரு வருஷத்தில் சராசரியாக 250 இரவுகள் பனித்துளி கிடைக்கும்.” (Efraim Orni and Elisha Efrat, Geography of Israel, 3rd rev. ed. [1971], 147).

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:19.

  10. மோசியா 23:18.

  11. ஆல்மா 37:6.

  12. மாற்கு 4:38.

  13. யோபு 17:15.

  14. ஏலமன் 5:40.

  15. யோபு 28:12.

  16. மரோனி 7:20.

  17. அப்போஸ். 9:6.

  18. ஆல்மா 15:6.

  19. 2 நேபி 26:28.

  20. மத்தேயு 9:28.

  21. அப்போஸ். 26:27.

  22. ஆல்மா 5:15.

  23. ஆதியாகமம் 18:25.

  24. மார்மன் 6:17.

  25. எரேமியா 31:16–17, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  26. See Camille N. Johnson, “Invite Christ to Author Your Story,” Liahona, Nov. 2021, 82: ஒவ்வொரு நல்ல கதையின் ஒரு பகுதியாக இருக்கும் துன்பம் மற்றும் வியாகுலம், நீங்கள் இயேசு கிறிஸ்துவை நெருங்குவதற்கும், மேலும் அவர் போல் இருப்பதற்கும் ஒரு வழிமுறையாக இருக்கட்டும்.

  27. 2 நேபி 31:20.

  28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:38 பார்க்கவும்.

  29. ஆல்மா 37:47 பார்க்கவும்

  30. 1 பேதுரு 2:25.