பொது மாநாடு
தெய்வீகத்தின் குழந்தை வளர்ப்பு பாடங்கள்
அக்டோபர் 2023 பொது மாநாடு


தெய்வீகத்தின் குழந்தை வளர்ப்பு பாடங்கள்

பெற்றோர்கள் தங்களுடைய அருமையான பிள்ளைகளை மீண்டும் பரலோகத்திற்கு வழிநடத்த தங்கள் பரலோக பிதாவுடன் ஒரு கூட்டாண்மைக்குள் பிரவேசிக்கிறார்கள்.

நீங்கள் எப்போதாவது புதிதாகப் பிறந்த குழந்தையை உங்கள் கைகளில் பிடித்ததுண்டா? புதிதாகப் பிறந்த ஒவ்வொரு குழந்தையிலிருந்தும் ஒரு ஒளி வெளிப்படுகிறது, அது அவர்களின் பெற்றோரின் இருதயங்களை மகிழ்ச்சியுடன் நிரப்பக்கூடிய ஒரு விசேஷித்த அன்பைக் கொண்டுவருகிறது.1 ஒரு மெக்சிகன் எழுத்தாளர் எழுதினார், “புதிதாகப் பிறந்த ஒரு குழந்தை தனது சிறிய முஷ்டியில் தனது தந்தையின் விரலை முதன்முதலில் அழுத்தும் போது, ​​அக்குழந்தை அவரை என்றென்றைக்குமாய் சிறை பிடித்தான் என்பதை நான் அறிந்து கொண்டேன்.”2

வாழ்க்கையின் அசாதாரண அனுபவங்களில் குழந்தை வளர்ப்பும் ஒன்றாகும். பெற்றோர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற பிள்ளைகளை மீண்டும் பரலோகத்திற்கு வழிநடத்த தங்கள் பரலோக பிதாவுடன் ஒரு கூட்டாண்மைக்குள் பிரவேசிக்கிறார்கள்.3 இன்று நான் நமது பெற்றோரின் பாரம்பரியத்தை விட்டு செல்ல உதவுவதற்காக வேதத்தில் காணப்படும் மற்றும் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளால் கற்பிக்கப்படும் சில பெற்றோருக்குரிய பாடங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சுவிசேஷ கலாச்சாரத்தின் உயர்தளத்திற்கு வாருங்கள்.

நாம் நமது குடும்பங்களுடன் சுவிசேஷ கலாச்சாரத்தின் உயர்ந்த தளத்திற்கு வளர வேண்டும். தலைவர் ரசல் எம். நெல்சன் அறிவித்தார்: “குடும்பங்கள் பரலோகத்தின் வழிகாட்டுதலுக்கு தகுதியானவை.“ ”தனிப்பட்ட அனுபவம், பயம் அல்லது அனுதாபத்திலிருந்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு போதுமான அறிவுரை வழங்க முடியாது.”4

நமது கலாச்சார பின்னணிகள், பெற்றோருக்குரிய பாணிகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் பெற்றோருக்கு மதிப்புமிக்கதாக இருந்தாலும், நமது குழந்தைகள் பரலோகத்திற்கு திரும்புவதற்கு இந்த திறன்கள் போதுமானதாக இல்லை. “மேலும் உயர்ந்த மதிப்புகளின் தொகுப்பு மற்றும் … நடைமுறைகளின் அணுகல் நமக்குத் தேவை”5பிள்ளைகளுடன் “உயர்ந்த, பரிசுத்தமான முறையில்” அன்பு மற்றும் எதிர்பார்ப்பு கலாச்சாரத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும்.”6 தலைவர் டாலின் எச். ஓக்ஸ் சுவிசேஷ கலாச்சாரத்தை “ஒரு தனித்துவமான வாழ்க்கை முறை, விழுமியங்கள் என்றும் எதிர்பார்ப்புகள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பு” எனவும் விவரித்தார். இந்த சுவிசேஷ கலாச்சாரம் இரட்சிப்பின் திட்டம், கர்த்தரின் கட்டளைகள் மற்றும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் போதனைகளிலிருந்து வருகிறது. நமது குடும்பத்தை உயர்த்துவதற்கும், நமது தனிப்பட்ட வாழ்க்கையை ஜீவிப்பதற்கும் நமக்கு வழிகாட்டுகிறது.”7

இந்த சுவிசேஷ கலாச்சாரத்தின் மையம் இயேசு கிறிஸ்து. நமது குடும்பங்களில் சுவிசேஷ கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வது, விசுவாசத்தின் விதை செழிக்கக்கூடிய வளமான சூழலை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமானது. உயர்ந்த தளத்திற்கு செல்ல, “இயேசு கிறிஸ்துவின் சபையின் போதனைகளுக்கு முரணான தனிப்பட்ட, குடும்ப மரபுகள் மற்றும் நடைமுறைகளை கைவிடுமாறு” தலைவர் ஓக்ஸ் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.8 பெற்றோர்களே, சுவிசேஷ கலாச்சாரத்தை நிலைநாட்டுவதற்கு நம்மிடம் உள்ள கோழைத்தனம், சத்துரு நம் வீடுகளில் அல்லது மிகவும் மோசமாக நம் குழந்தைகளின் மனங்களில் கால் பதிக்க ஏதுவாக அமையலாம்.

நமது குடும்பத்தில் சுவிசேஷ கலாச்சாரத்தை முதன்மையான கலாச்சாரமாக்க நாம் தேர்வு செய்யும்போது, ​​பரிசுத்த ஆவியின் வல்லமைவாய்ந்த செல்வாக்கால்9 நமது தற்போதைய பெற்றோரின் பாணிகள், மரபுகள் மற்றும் நடைமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டு, சீரமைக்கப்படும், சுத்திகரிக்கப்படும் மற்றும் மேம்படுத்தப்படும்.

வீட்டை சுவிசேஷம் கற்றலின் மையமாக மாற்றவும்

“சுவிசேஷக் கற்றலின் மையமாக” வீடு இருக்க வேண்டும் என்று தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்”10 சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் போதித்தல் அனைத்தின் நோக்கமும் இயேசு கிறிஸ்துவில் நமது மனமாற்றத்தை ஆழமாக்கி அதிகமாக அவரைப்போலாக நமக்குதவுவதாகும்.”11 தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களால் விவரிக்கப்பட்டுள்ள மூன்று முக்கியமான பெற்றோருக்குரிய பொறுப்புகளை கருத்தில் கொள்வோம், அவை நம் வீடுகளில் உயர்ந்த சுவிசேஷ கலாச்சாரத்தை நிறுவ உதவும்.

முதலாவது: சுதந்திரமாக போதிக்கவும்

பரலோக பிதா ஆதாமுக்கு, இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய கோட்பாட்டைக் குறித்து அறிவுறுத்தினார். “உங்கள் பிள்ளைகளுக்கு இவற்றை சுதந்தரமாக போதியுங்கள்” என்று அவருக்கு போதித்தார்.12 வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரலோக பிதா ஆதாமுக்கு இவற்றைத் சுதந்திரமாகவும், தாராளமாகவும், தடையின்றியும் போதிக்கக் கற்றுக் கொடுத்தார்.13 ஆதாமும் ஏவாளும் தேவனின் நாமத்தை ஸ்தோத்தரித்தார்கள், சகல காரியங்களையும் தங்களுடைய குமாரர்களும் குமாரத்திகளும் அறிந்து கொள்ளும்படிச் செய்தார்கள், என்று வேதம் கூறுகிறது.14

நம் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள நேரத்தைச் செலவிடும்போது தாராளமாக போதிக்கிறோம். சபையில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி, திரை நேரம் போன்ற முக்கியமான தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடும்போது நாம் தடையின்றி போதிக்கிறோம்.15 என்னைப் பின்பற்றி வாருங்கள், பயன்படுத்தி நம் பிள்ளைகளுடன் வேத வசனங்களைப் படிக்கும்போது ஆவியானவரை ஆசிரியராக அழைத்து நாம் தாராளமாக போதிக்கிறோம்.

இரண்டாவது: உதாரண சீஷத்துவம்

யோவான் புத்தகத்தில், பல யூதர்கள் இரட்சகரிடம் அவருடைய செய்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பியபோது, ​​இயேசு தம்முடைய மாதிரியான தம் பிதாவிடம் கவனத்தைத் திருப்பினார் என்று வாசிக்கிறோம். அவர் போதித்தார், “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.” 16 பெற்றோர்களே, நம் குழந்தைகளுக்கு நாம் என்ன மாதிரியாக இருக்க வேண்டும்? சீஷத்துவம்

பெற்றோராகிய நாம் முதல் கட்டளையைப் பற்றி விவாதிக்கும்போது தேவனுக்கு முதலிடம் கொடுப்பதன் முக்கியத்துவத்தை கற்பிக்க முடியும், ஆனால் உலக கவனச்சிதறல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒவ்வொரு வாரமும் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்கும்போது மாதிரியாகக் காட்டுகிறோம். சிலஸ்டியல் திருமணத்தின் கோட்பாட்டைப் பற்றி பேசும்போது ஆலய உடன்படிக்கைகளின் முக்கியத்துவத்தை நாம் போதிக்க முடியும், ஆனால் நம் உடன்படிக்கைகளை கனப்படுத்தும்போது, ​​​​நம் மனைவியை கண்ணியமாக நடத்தும்போது அதை மாதிரியாகக் காட்டுகிறோம்.

மூன்றாவது: செயல்பட அழைப்பு

இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசம் நமது பிள்ளைகளின் சாட்சிகளின் மையமாக இருக்க வேண்டும், மேலும் இந்த சாட்சிகள் ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிப்பட்ட வெளிப்பாடு மூலம் வர வேண்டும்.17 நமது பிள்ளைகள் அவர்களின் சாட்சிகளைக் கட்டியெழுப்ப உதவுவதற்கும், சரியானதைத் தேர்ந்தெடுப்பதற்கும்18 கர்த்தரின் உடன்படிக்கையின் பாதையில் வாழ்நாள் முழுவதும் அவர்களைத் தயார்படுத்துவதற்கும் அவர்களின் சுயாதீனத்தைப் பயன்படுத்துமாறு அவர்களை ஊக்குவிக்கிறோம்.19

இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றிய உங்கள் சொந்த சாட்சிக்கு பொறுப்பேற்று அதற்காக உழைத்திடுங்கள், அது வளரும்படியாக அதைப் போஷியுங்கள், சத்தியத்தை ஊட்டுங்கள், நம்பிக்கையற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தவறான தத்துவங்களால் அதை மாசுபடுத்தாதீர்கள்.20

நீதியான, புத்திசாலித்தனமான குழந்தை வளர்ப்பு

ஒரு பெற்றோராக நமது பரலோக பிதாவின் தெய்வீக நோக்கங்கள் மோசேக்கு வெளிப்படுத்தலில் தெரியப்படுத்தப்பட்டன: “ஏனெனில் இதோ, மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது.”21 தலைவர் நெல்சன் “நித்தியத்திற்கும் மிகப்பெரிய ஆசீர்வாதங்களை நீங்கள் தவறவிடாமல் இருக்க, கர்த்தர் உங்களது சுயாதீனத்தை மீறாமல், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்” என்று மேலும் கூறுகிறார்.22

பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளின் பராமரிப்பில் கர்த்தரின் முகவர்கள்.23 அவருடைய தெய்வீக செல்வாக்கை நம் பிள்ளைகள் உணரக்கூடிய சூழலை உருவாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.

பரலோக பிதா ஒருபோதும் பெற்றோர்களாகிய நாம் பார்வையாளர்களாக ஓரிடத்தில் அமர்ந்து, நம் குழந்தைகளின் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. தனிப்பட்ட அனுபவத்துடன் புத்திசாலித்தனமான குழந்தை வளர்ப்பிறகு இந்த யோசனையை விளக்குகிறேன். நான் குவாத்தமாலாவில் உள்ள ஒரு சிறிய கிளையில் ஆரம்ப வகுப்பில் கலந்துகொண்டபோது, ​​கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களின் மகிமையைப் பற்றி என் பெற்றோர் எனக்குப் போதிக்க தொடங்கினர். எனது தாய் தனது பொக்கிஷமான கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதத்தைப் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்கினார். கோத்திரப்பிதாவின் ஆசீர்வாதங்கள் தொடர்பான கோட்பாட்டை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார், மேலும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பற்றியும் சாட்சி பகிர்ந்தார். அவரது புத்திசாலித்தனமான குழந்தை வளர்ப்பு எனது கோத்திர பிதாவின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தை எனக்கு ஏற்படுத்தியது.

எனக்கு 12 வயதாக இருந்தபோது, ​​ஒரு கோத்திரபிதாவை தேடி கண்டறிய என் பெற்றோர் எனக்கு உதவினார்கள். நாங்கள் வாழ்ந்த சேகரத்தில் கோத்திரபிதா இல்லாததால் இது அவசியமானது. நான் 156 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிணையத்தில் இருந்த ஒரு கோத்திரபிதாவை தேடி பயணம் செய்தேன். கோத்திரபிதா என்னை ஆசீர்வதிக்க என் தலையில் கைகளை வைத்தது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. என் பரலோக பிதா என்னை அறிந்திருக்கிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி வல்லமையான ஆவிக்குரிய உறுதிப்படுத்தல் மூலம் நான் அறிந்தேன்.

ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த 12 வயது பையனுக்கு, அது மிகப்பெரிய சிலாக்கியம். என் தாய் மற்றும் தந்தையின் புத்திசாலித்தனமான குழந்தை வளர்ப்பின் காரணமாக அன்று என் இருதயம் பரலோக பிதாவிடம் திரும்பியது, நான் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

முன்னாள் ஆரம்பவகுப்பு பொதுத் தலைவரான சகோதரி ஜாய் டி. ஜோன்ஸ் போதித்தார்: மனமாற்றம் நம் பிள்ளைகளுக்கு வெறுமனே நிகழும் வரை நாம் காத்திருக்க முடியாது. தற்செயலான மனமாற்றம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் கொள்கை அல்ல.”24 நமது அன்பும் ஊக்கமளிக்கும் அழைப்புகளும் நம் குழந்தைகள் தங்கள் சுயாதீனத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதில் வித்தியாசத்தை உண்டுபண்ணும். தலைவர் நெல்சன் வலியுறுத்தினார், “நீதியான, புத்திசாலித்தனமான குழந்தை வளர்ப்பை மிஞ்சிய வேறு எந்த பணியும் இல்லை.”25

முடிவுரை

பெற்றோர்களே, இந்த உலகம் நம் பிள்ளைகளின் கவனத்தைச் சிதறடிக்கும் தத்துவங்கள், கலாச்சாரங்கள் மற்றும் யோசனைகளால் நிறைந்துள்ளது. மிகப் பெரிய மற்றும் விசாலமான கட்டிடம், தற்போதைய மீடியா சேனல்களைப் பயன்படுத்தி தினசரி அதன் உறுப்பினர்களுக்கு விளம்பரப்படுத்துகிறது. ஆனால், தீர்க்கதரிசி மரோனி “தம்முடைய குமாரனென்னும் ஈவினால், தேவன் ஒரு அதிமேன்மையுள்ள வழியை ஆயத்தப்படுத்தினார்” என்று கற்பித்தான்.26

உடன்படிக்கைகள் மூலம் நாம் கர்த்தரின் கூட்டாளியாகி, நம் பிள்ளைகளின் பராமரிப்பில் அவருடைய முகவர்களாக மாறும்போது, ​​அவர் நம் நோக்கங்களைப் பரிசுத்தப்படுத்துவார், நம் போதனைகளை ஊக்குவிப்பார், மேலும் நம் அழைப்புகளைத் ஸ்திரப்படுத்துவார், அதனால் “எங்கள் பிள்ளைகள் தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக, எதனைக் கண்நோக்கவேண்டுமென்று அறிந்து கொள்வார்கள்”27 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. சங்கீதம் 127:3 பார்க்கவும்.

  2. Johnny Welch, “The Puppet,” reproduced at inspire21.com/thepuppet; see also Johnny Welch, Lo que me ha enseñado la vida (1996).

  3. இது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம், ஆனால் மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் கூறியது போல், “பரலோக பிதாவின் உதவியுடன் நாம் நினைப்பதை விட அதிகமாக பெற்றோரின் பாரம்பரியத்தை விட்டுச் செல்ல முடியும்” (“The Hands of the Fathers,” Liahona, July 1999, 18).

  4. Russell M. Nelson, “Thou Shalt Have No Other Gods,” Ensign, May 1996, 15.

  5. Dallin H. Oaks, “The Gospel Culture,” Liahona, Mar. 2012, 22.

  6. ரசல் எம். நெல்சன், “சமாதானம் பண்ணுபவர்கள் தேவை,“ Liahona, May 2023, 99.

  7. Dallin H. Oaks, “The Gospel Culture,” 22.

  8. Dallin H. Oaks, “The Gospel Culture,” 22.

  9. மரோனி 10:5 பார்க்கவும்.

  10. Conversion Is Our Goal,” in Come, Follow Me—For Individuals and Families: New Testament 2023, v.

  11. மோசே 6:58

  12. See American Dictionary of the English Language, “freely,” webstersdictionary1828.com/Dictionary/freely.

  13. மோசே 5:12

  14. See “Taking Charge of Technology” and For the Strength of Youth: A Guide for Making Choices (2022), Gospel Library.

  15. யோவான் 5:19.

  16. மத்தேயு 16:17–18. பார்க்கவும். Individual Revelation Needed for a Testimony of Jesus Christ,” in New Testament Student Manual (2018), 52.

  17. See Dale G. Renlund, “Choose You This Day,” Liahona, Nov. 2018, 104: “பெற்றோர் வளர்ப்பில் நமது பரலோகத் தந்தையின் குறிக்கோள், அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்வதல்ல; அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுத்து இறுதியில் அவரைப் போலவே ஆக வேண்டும்.”

  18. See “Appendix: Preparing Your Children for a Lifetime on God’s Covenant Path,” in Come, Follow Me—For Individuals and Families: New Testament 2023, Gospel Library.

  19. See Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 97.

  20. மோசே 1:39 இந்த வசனத்தில், இயேசு கிறிஸ்து பரலோக பிதாவின் சார்பாக பேசுகிறார்.

  21. Russell M. Nelson, “Choices for Eternity” (worldwide devotional for young adults), May 15, 2022, Gospel Library.

  22. See Russell M. Nelson, “Salvation and Exaltation,” Liahona, May 2008, 10: “Do not try to control your children. மாறாக, அவர்களுக்குச் செவிசாய்க்கவும், சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும், அவர்களைத் தூண்டவும், நித்திய ஜீவனை நோக்கி வழிநடத்தவும் அவர்களுக்கு உதவுங்கள். பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளின் பராமரிப்பில் கர்த்தரின் முகவர்கள். நீங்கள் போதித்து வற்புறுத்தும்போது அவருடைய தெய்வீகச் செல்வாக்கு உங்கள் இருதயங்களில் நிலைத்திருக்கட்டும்.

  23. Joy D. Jones, “Essential Conversations,” Liahona, May 2021, 12.

  24. Russell M. Nelson, “The Sabbath Is a Delight,” Liahona, May 2015, 131.

  25. ஏத்தேர் 12:11.

  26. 2 நேபி 25:26.