பொது மாநாடு
மகிமையின் ராஜ்ஜியங்கள்
அக்டோபர் 2023 பொது மாநாடு


மகிமையின் ராஜ்ஜியங்கள்

நம்முடைய சொந்த விருப்பங்களும் தேர்வுகளும் அனுமதிக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் ஒவ்வொரு நன்மையையும் நாம் பெறுவதைக் காணும் அன்பான பரலோக பிதாவை நாம் பெற்றிருக்கிறோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை உறுப்பினர்கள் அடிக்கடி கேட்கப்படுகிறார்கள், “உங்கள் சபை மற்ற கிறிஸ்தவ சபைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?” நாம் கொடுக்கும் பதில்களில் இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டின் முழுமையும் அடங்கும். அந்தக் கோட்பாட்டில் முதன்மையானது, பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா தம் பிள்ளைகள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறார், நாம் அனைவரும் என்றென்றும் மகிமையுள்ள ராஜ்யத்தில் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மேலும், நாம் அவரோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் நித்தியமாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கையும் வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் போதனைகளையும் தேர்வுகளைச் செய்வதற்கான வாய்ப்பையும் அவருடைய திட்டம் நமக்கு அளிக்கிறது.

I.

பூமியில் வாழும் அனைவரின் இறுதி இலக்கு, நீதிமான்களுக்கு சொர்க்கத்தைப் பற்றிய போதிய யோசனையல்ல, மீதமுள்ளவர்களுக்கு நரகத்தின் நித்திய துன்பங்கள் அல்ல என்பதை தற்கால வெளிப்பாட்டிலிருந்து நாம் அறிவோம். தம்முடைய பிள்ளைகளுக்கான தேவனின் அன்பான திட்டத்தில், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து கற்பித்த இந்த யதார்த்தம் அடங்கும்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. ”1

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடு, தேவனின் குழந்தைகள் அனைவரும்—இங்கே கருத்தில் கொள்ள மிகவும் வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன்—இறுதியில் மகிமையின் மூன்று ராஜ்யங்களில் ஒன்றைப் பெறுவார்கள், அவைகளின் குறைந்தபட்சம்கூட “எல்லா புரிந்துகொள்ளுதலுக்கும் மேலானது.”2 கீழ்ப்படியாதவர்கள் தங்கள் பாவங்களுக்காக அவதிப்படும் ஒரு காலத்திற்குப் பிறகு, பின்பு வருவதற்கு அந்தத் துன்பம் அவர்களைத் தயாராக்குகிறது, அனைவரும் உயிர்த்தெழுப்பப்பட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இறுதி நியாயத்தீர்ப்புக்குச் செல்வார்கள். அங்கே நமக்கு போதிக்கிற நம் அன்பான இரட்சகர், “பிதாவை மகிமைப்படுத்துகிற, அவரது கைகளின் சகல கிரியைகளையும் பாதுகாக்கிற,”3 தேவனின் எல்லா குழந்தைகளையும் அவர்களின் தேர்வுகள் மூலம், அவர்கள் வெளிப்படுத்திய ஆசைகளின்படி இந்த மகிமையின் ராஜ்யங்களில் ஒன்றிற்கு அனுப்புவார்.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் மற்றொரு தனித்துவமான கோட்பாடு மற்றும் நடைமுறையானது வெளிப்படுத்தப்பட்ட கட்டளைகள் மற்றும் உடன்படிக்கைகள் ஆகும், இது தேவனின் குழந்தைகள் அனைவருக்கும் பரலோக ராஜ்யத்தில் மிக உயர்ந்த மகிமைக்கு தகுதிபெறும் பரிசுத்த சிலாக்கியத்தை வழங்குகிறது. அந்த உயர்ந்த இலக்கான சிலஸ்டியல் இராஜ்யத்தில் மேன்மையடைதல், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் மைய நோக்கமாகும்.

தற்கால வெளிப்பாட்டிலிருந்து, பிற்காலப் பரிசுத்தவான்கள் தேவனின் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியின் திட்டத்தைப் பற்றிய தனித்துவமான புரிதலைக் கொண்டுள்ளனர். அந்தத் திட்டம் நாம் பிறப்பதற்கு முன்பே ஆவிகளாக நம் வாழ்வில் தொடங்குகிறது, மேலும் அது பூலோகத்தில் நாம் தேர்ந்தெடுத்த பயணத்தின் நோக்கம் மற்றும் நிலைமைகள் மற்றும் அதற்குப் பிறகு நாம் விரும்பிய இலக்கை வெளிப்படுத்துகிறது.

II.

“சகல ராஜ்யங்களுக்கும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது”4 மற்றும் இறுதித் தீர்ப்பில் நாம் பெறும் மகிமையின் ராஜ்யம் நமது பூலோக பயணத்தில் நாம் பின்பற்றத் தேர்ந்தெடுக்கும் பிரமாணங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை தற்கால வெளிப்பாட்டிலிருந்து நாம் அறிவோம். அந்த அன்பான திட்டத்தின் கீழ், பல ராஜ்யங்கள் உள்ளன—பல மாளிகைகள்—இதனால் தேவனின் குழந்தைகள் அனைவரும், அவற்றின் நியாயப்பிரமாணங்களை வசதியாக “தரித்திருக்கக்கூடிய” மகிமையின் ராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள்.

பிதாவின் திட்டத்தில் மூன்று ராஜ்யங்களின் ஒவ்வொரு தன்மையையும் தேவைகளையும் விவரிக்கும்போது, நாம் மிக உயர்ந்தவற்றிலிருந்து தொடங்குகிறோம், இது பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் மூலம் தேவன் வெளிப்படுத்திய தெய்வீக கட்டளைகள் மற்றும் நியமங்களின் மையமாகும். “சிலஸ்டியல்” மகிமையில்5 மூன்று நிலைகள்6 உள்ளன, அவற்றில் மிக உயர்ந்தது, சிலஸ்டியல் ராஜ்யத்தில் மேன்மையடைதல். இது “அவருடைய முழுமையையும் அவருடைய மகிமையையும் பெற்றவர்களின்” வசிப்பிடமாகும், எனவே, “அவர்கள் தேவர்களாகவும், தேவ குமாரர்களாகவும் [மற்றும் குமாரத்திகளாகவும்]” கூட 7 மற்றும் “தேவன், மற்றும் அவருடைய கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இவர்கள் என்றென்றைக்குமாக வாசம்பண்ணுவார்கள்.”8 இந்த தெய்வீக ஆற்றலை உணர தேவையான தெய்வீக பண்புகளை வளர்த்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நித்திய நியாயப்பிமாணங்கள், நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளை வெளிப்படுத்துதல் மூலம் தேவன் வெளிப்படுத்தியுள்ளார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை இவற்றில் கவனம் செலுத்துகிறது, ஏனெனில் இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் நோக்கம் தேவனின் குழந்தைகளை பரலோக மகிமையில் இரட்சிப்பிற்காகவும், குறிப்பாக, அதன் மிக உயர்ந்த மட்டத்தில் மேன்மைப்படுவதற்காகவும் தயார்படுத்துவதாகும்.

நித்திய சத்தியத்தின் அடிப்படையில் அடித்தளமிடப்பட்ட தேவனின் திட்டம், பரிசுத்த ஆலயத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நித்திய திருமணத்தின் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் மட்டுமே மேன்மையை அடைய முடியும்,9 இறுதியில் அனைத்து விசுவாசிகளுக்கும் அத்திருமணம் சாத்தியம். அதனால்தான் நாம், “பாலினம் என்பது தனிப்பட்ட அநித்தியத்துக்கு முந்திய, அநித்திய மற்றும் நித்திய அடையாளம் மற்றும் நோக்கத்தின் ஒரு அத்தியாவசிய பண்பு ஆகும்”10 என போதிக்கிறோம்.

மேன்மையடைதலுக்கு தயாராவதற்கு உதவும் ஒரு தனித்துவமான மதிப்புமிக்க போதனையானது குடும்பம் பற்றிய 1995 பிரகடனம் ஆகும்.11 பிதாவாகிய தேவனுடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் வாழ நம்மைத் தயார்படுத்தும் தேவைகளை அதன் அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. பிதாவின் பிள்ளைகளுக்கான அன்பான திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள், இந்தக் குடும்பப் பிரகடனத்தை மாற்றக்கூடிய கொள்கை அறிக்கையாகக் கருதலாம். இதற்கு நேர்மாறாக, மாற்ற முடியாத கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட குடும்பப் பிரகடனம், நமது நித்திய வளர்ச்சியின் மிக முக்கியமான பகுதியாக நிகழக்கூடிய குடும்ப உறவுகளின் வகையை வரையறுக்கிறது என்று நாம் உறுதிப்படுத்துகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் அவற்றை சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் மகிமைகளுடன் ஒப்பிட்டு, மகிமையின் மூன்று நிலைகளை விவரிக்கிறான்.12 அவன் மிக உயர்ந்ததை “சிலஸ்டியல்” மற்றும் இரண்டாவது “டிரஸ்ட்ரியல்” என்று பெயரிடுகிறான்.13 அவன் மிகக் குறைவானதை பெயரிடவில்லை, ஆனால் ஜோசப் ஸ்மித்திற்கு ஒரு வெளிப்பாடு அதன் பெயரை “டிலஸ்டியல்” என சேர்த்தது.14 இந்த மகிமையின் ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் நியமிக்கப்படும் நபர்களின் தன்மையையும் மற்றொரு வெளிப்பாடு விவரிக்கிறது. “ஏனெனில் சிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க”15 தேர்வு செய்யாதவர்கள், சிலஸ்டியலை விடக் குறைவான, ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரமாணங்களுக்குப் பொருத்தமான மற்றொரு மகிமையின் ராஜ்யத்தைப் பெறுவார்கள், மேலும் வசதியாக “தரித்திருக்க” முடியும். தரித்திருத்தல் என்ற வார்த்தை, வேதங்களில் மிகவும் பொதுவானது, பாதுகாப்பான இடம் என்று பொருள்.16 உதாரணமாக, டிரஸ்ட்ரியல் ராஜ்யத்தில் இருப்பவர்கள்—பரலோகம் பற்றிய பிரபலமான கருத்துடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கலாம்—“அவர்கள் குமாரனின் பிரசன்னத்தைப் பெறுகிறார்கள், ஆனால் பிதாவின் முழுமையை அல்ல.”17 அவர்கள் “பூமியில் மரியாதைக்குரிய மனுஷர்களும், மனுஷர்களின் சூதினால் குருடாக்கப்பட்டவர்களும் இவர்களே.”18 ஆனால் “இயேசுவைக் குறித்த சாட்சியில் பராக்கிரமம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்.”19

மகிமையின் மிகக் குறைந்த ராஜ்யங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தும் விளக்கம், டிலஸ்டியலில் இருப்போர், “டிரஸ்டியல் மகிமையில் … நிலைத்திருக்க முடியாதவர்கள்”.20 இது இரட்சகரை நிராகரிப்பவர்களை மற்றும் அவர்களின் நடத்தைக்கு தெய்வீக வரம்புகளை கடைபிடிக்காதவர்களை விவரிக்கிறது. துன்மார்க்கர்கள் தங்கள் பாவங்களுக்காகத் துன்பப்பட்ட பிறகு தரித்திருக்கும் ராஜ்யம் இது. தற்கால வெளிப்பாட்டில் இவை விவரிக்கப்பட்டிருக்கின்றன, “கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும், இயேசுவின் சாட்சியையும் பெறாதவர்கள் இவர்களே.

“பொய்யர்களும், சூனியக்காரர்களும், விபச்சாரக்காரர்களும், வேசித்தனம் செய்பவர்களும் பொய்யைச் சொல்ல விரும்புகிறவர்களும் இவர்களே.”21

அவரது தீர்க்கதரிசன பார்வையுடன் மகிமையின் மூன்று ராஜ்யங்களைப் பற்றி பேசுகையில், தலைவர் ரசல் எம். நெல்சன் சமீபத்தில் எழுதினார்: “நித்தியத்துடன் ஒப்பிடும்போது பூலோக ஆயுட்காலம் ஒரு நானோ வினாடி மட்டுமே. ஆனால் அது என்ன ஒரு முக்கியமான நானோ விநாடி! இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனமாகக் கருத்தில் கொள்ளுங்கள்: இந்த பூலோக வாழ்க்கையில் நீங்கள் எந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்—சிலஸ்டியல் ராஜ்யம், அல்லது டிரஸ்டரியல், அல்லது டிலஸ்டியல்—எனவே, எந்த மகிமையின் ராஜ்யத்தில் நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள். என்ன ஒரு திட்டம். இது உங்கள் சுயாதீனத்தை முழுமையாக மதிக்கும் திட்டம்.22

III.

நாம் அனைவரும் “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவை” அடைய கர்த்தரின் போதனைகளும் கட்டளைகளும் கொடுக்கப்பட்டதாக அப்போஸ்தலனாகிய பவுல் கற்பித்தான்.23 அந்த செயல்முறைக்கு அறிவைப் பெறுவதை விட அதிகம் தேவைப்படுகிறது. சுவிசேஷத்தை நம்புவது கூட போதாது; நாம் செயல்பட வேண்டும் மற்றும் அதனால் நாம் மாற்றப்படும் அளவுக்கு சிந்திக்க வேண்டும். எதையாவது தெரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கிற மற்ற பிரசங்கங்களுக்கு மாறாக, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஏதோவொன்றாக மாற நமக்கு சவால் விடுகிறது.

இறுதி நியாயத் தீர்ப்பு என்பது நாம் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் மொத்த மதிப்பீடு அல்ல, என்பதை இது போன்ற போதனைகளிலிருந்து நாம் முடிவெடுக்கிறோம். இது நமது செயல்கள் மற்றும் நாம் என்ன ஆனோம்” எனும் எண்ணங்களின் இறுதி விளைவை பொறுத்ததாகும். மனமாற்றத்தின் மூலம் நித்திய ஜீவனுக்கு நாம் தகுதி பெறுகிறோம். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளபடி, பல அர்த்தங்களைக் கொண்ட இந்த வார்த்தை இயல்பின் ஆழமான மாற்றத்தைக் குறிக்கிறது. எவருக்கும் வெறும் நடவடிக்கை மட்டும் போதாது. சுவிசேஷத்தின் கட்டளைகள், நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள் சில பரலோக கணக்கில் செய்ய வேண்டிய வைப்புகளின் பட்டியல் அல்ல. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமானது, நம்முடைய பரலோகபிதா நாம் எப்படி ஆக வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்படி ஆக வேண்டும் என்பதைக் காட்டும் ஒரு திட்டமாகும்.24

IV.

இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவிர்த்தியின் காரணமாக, இந்த வாழ்க்கையில் நாம் குறையும் போது, நாம் மனந்திரும்பி, நமது பரலோக பிதா நமக்காக விரும்புவதை நோக்கி வழிநடத்தும் உடன்படிக்கைப் பாதையில் மீண்டும் சேரலாம்.

மார்மன் புஸ்தகம் “இந்த ஜீவியம் மனுஷருக்குத் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாயிருக்கிறது”, என்று போதிக்கிறது.25 ஆனால் “இந்த வாழ்க்கை” என்ற சவாலான வரம்புக்கு ஒரு நம்பிக்கையான சூழல் கொடுக்கப்பட்டது, (சில நபர்களுக்கு ஓரளவுக்கு குறைந்த பட்சம்) தலைவர் ஜோசப் எப். ஸ்மித்துக்கு கர்த்தர் வெளிப்படுத்தியதன் மூலம், இப்போது கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 138 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி எழுதினார், “அவர்கள் அநித்திய ஜீவியத்திலிருந்து புறப்பட்டபோது இந்த ஊழியக்காலத்தின் உண்மையுள்ள மூப்பர்கள், மரித்த ஆவிகளின் மகா உலகத்தில் அந்தகாரத்திலும் பாவத்தின் அடிமைத்தனத்தின் கீழுமிருக்கிறவர்களுக்கு மத்தியில் ஒரேபேறான தேவ குமாரனின் பலியின் மூலமாக மனந்திரும்புதல் மற்றும் மீட்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் தங்களுடைய பிரயாசத்தைத் தொடர்ந்ததை நான் கண்டேன்.

“தேவனின் ஆலயத்தின் நியமங்களுக்குக் கீழ்ப்படிதலின் மூலமாக, மனந்திரும்பிய மரித்தவர்கள் மீட்கப்படுவார்கள்.

“தங்களுடைய மீறுதல்களுக்காக அவர்கள் கிரயம் செலுத்திய பின், சுத்தமாகக் கழுவப்பட்ட பின்பு, அவர்கள் இரட்சிப்பின் சந்ததிகளாயிருப்பதால் அவர்களின் கிரியைகளுக்குத் தக்கதாய் ஒரு பலனைப் பெறுவார்கள்.”26

கூடுதலாக, இரட்சகரின் இரண்டாம் வருகையைத் தொடர்ந்து வரும் ஆயிர வருடங்கள், தங்கள் பூலோக வாழ்க்கையில் அவற்றைப் பெறாதவர்களுக்குத் தேவையான நியமங்களை நிறைவேற்றுவதற்கான காலமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம்.27

இரட்சிப்பின் திட்டத்தில் உள்ள மூன்று முக்கிய காலகட்டங்களைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன: (1) அநித்தியத்திற்கு முந்திய ஆவி உலகம், (2) பூலோக ஜீவியம், மற்றும் (3) அடுத்த வாழ்க்கை, மற்றும் அவற்றில் ஒன்றுக்கொன்றான உறவு. ஆனால் இந்த நித்திய சத்தியங்களை நாம் அறிவோம்: “இரட்சிப்பு ஒரு தனிப்பட்ட விஷயம், ஆனால் மேன்மையடைதல் என்பது குடும்ப விஷயம்.”28 நம்முடைய சொந்த விருப்பங்களும் தேர்வுகளும் அனுமதிக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் ஒவ்வொரு நன்மையையும் நாம் பெறுவதைக் காணும் அன்பான பரலோக பிதாவை நாம் பெற்றிருக்கிறோம். அவருடைய விருப்பத்திற்கு மாறாக யாரையும் ஒரு முத்திரிக்கும் உறவுக்கு வற்புறுத்தமாட்டார் என்பதையும் நாம் அறிவோம். முத்திரிக்கப்பட்ட உறவின் ஆசீர்வாதங்கள் தங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் உறுதியளிக்கப்படுகின்றன, ஆனால் தகுதியற்ற அல்லது விருப்பமில்லாத மற்றொரு நபரின் மீது முத்திரிக்கப்பட்ட உறவை கட்டாயப்படுத்துவதில்லை.

என் அன்பு சகோதர சகோதரிகளே, இவைகள் பற்றிய சத்தியத்துக்கு நான் சாட்சியளிக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் சாட்சியளிக்கிறேன், “[நம்] விசுவாசத்தைத் துவங்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறவர்”,29 அவருடைய பாவநிவர்த்தி, பரலோகத்திலுள்ள நமது பிதாவின் திட்டத்தின் கீழ், அனைத்தையும் சாத்தியமாக்குகிறது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்ஆமென்.