பொது மாநாடு
விசுவாசத்தில் முன்னேறிச் செல்லுங்கள்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


விசுவாசத்தில் முன்னேறிச் செல்லுங்கள்

சமாதானத்துடனும் கர்த்தரில் அதிகரித்த விசுவாசத்துடனும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

என் அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டின் நிறைவுக்கு நாம் வரும்போது, நாம் கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இசை கம்பீரமாகவும், செய்திகள் உணர்த்துதலாகவுமிருந்தது.

இந்த மாநாட்டின்போது அநேக சிறப்பம்சங்களை நாம் அனுபவித்தோம். இந்த இருநூறாவது ஆண்டுவிழாவில், அதன் முழுமையில் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதத்தின் நிஜத்தை உலகிற்கு ஒரு பிரகடனமாக நாம் அறிமுகப்படுத்துகிறோம்.

ஓசன்னா சத்தத்துடன் மறுஸ்தாபிதத்தை நாம் நினைவுகூர்ந்தோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை முக்கியப்படுத்துவதிலும், அதிகாரப்பூர்வ சபை தகவல் மற்றும் பொருட்களின் காட்சி அங்கீகாரத்திற்காகவும் ஒரு புதிய அடையாளத்தை நாம் வெளியிட்டோம்.

தற்போதைய தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், பராமரிப்பாளர்கள் பாதுகாக்கப்படவும், பொருளாதாரம் வலுவடையவும், வாழ்க்கை இயல்பாக்கப்படவும் உலகளாவிய உபவாசம் மற்றும் ஜெபத்திற்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். இந்த உபவாசம், ஏப்ரல் 10, புனித வெள்ளியில் நடைபெறும். அது என்ன ஒரு மகத்தான வெள்ளிக்கிழமையாயிருக்கும்!

அடுத்த ஞாயிறு ஈஸ்டர், அப்போது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியையும் உயிர்த்தெழுதலையும் நாம் மீண்டும் நினைவுகூருவோம். அவருடைய பாவநிவர்த்தியினால், இதுவரை வாழ்ந்துகொண்டிருக்கிற நம் அனைவருக்கும் அவருடைய உயிர்த்தெழுதலின் வரம் வரும். அவருடைய பரிசுத்த ஆலயங்களில் செய்யப்பட்ட நியமங்களின், உடன்படிக்கைகளின் நம்பகத்தன்மையால் தகுதியுள்ளவர்களான நம் அனைவருக்கும் அவருடைய நித்திய ஜீவனின் வரம் வரும்.

இந்த ஏப்ரல் 2020 பொது மாநாட்டின் மூலக்கூறுகள் மற்றும் இப்போது நாம் ஆரம்பிக்கிற பரிசுத்த வாரம் “இவருக்குச் செவிகொடுங்கள்”1 என்ற தெய்வீக கட்டளைகளின் இரண்டு வார்த்தைகளால் தொகுக்கப்படலாம். அந்த வார்த்தைகளைப் பேசிய நமது பரலோக பிதாவிடத்திலும் அவருடைய நேசக்குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடத்திலும் உங்கள் கவனமிருக்கவும் அது உணர்த்தப்பட்ட அனைத்தும் உங்களுடைய நினைவுகளில் பின்னப்பட்டிருக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம். உண்மையிலேயே செவிகொடுக்கவும், கேட்கவும், இரட்சகரின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தவும் புதிதாக நீங்கள் ஆரம்பிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம்.2 குறைக்கப்பட்ட பயமும் அதிகரிக்கப்பட்ட விசுவாசமும் பின்வரும் என நான் வாக்களிக்கிறேன்.

கர்த்தருடைய ஆவியானவர் வாழக்கூடியதாக உங்கள் வீடுகளை விசுவாசத்தின் உண்மையான சரணாலயங்களாக மாற்றுவதற்கான உங்கள் விருப்பத்திற்காக உங்களுக்கு நன்றி. நமது என்னைப் பின்பற்றி வாருங்கள் படிப்பு பாடத் திட்டம் உங்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து ஆசீர்வதிக்கும். குறிப்பாக வெற்றிபெறவில்லை என்று நீங்கள் உணரக்கூடிய தருணங்களில் கூட இந்த முயற்சியில் உங்கள் தொடர்ச்சியான முயற்சிகள் உங்கள் வாழ்க்கையையும், உங்கள் குடும்பத்தையும், உலகத்தையும் மாற்றிவிடும். நாம் எங்கிருந்தாலும் கர்த்தருடைய இன்னும் வீரம் மிக்க சீடர்களாக மாறி, எழுந்து நின்று அவருக்காகப் பேசுவதால் நாம் பலப்படுவோம்.

இப்போது நாம் ஆலயங்களைப்பற்றி பேசலாம். உலகமுழுவதிலும் 168 பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்கள் நமக்கிருக்கின்றன. மற்றவைகள் திட்டமிடுதலிலும் கட்டமைப்பின் வெவ்வேறு நிலைகளிலிருக்கின்றன. நாம் புதிய ஆலயம் கட்ட, திட்டங்களை அறிவிக்கும்போது, அது நமது பரிசுத்த வரலாற்றின் பகுதியாக மாறுகிறது.

சிறிது காலத்திற்கு நமது ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்போது புதிய ஆலயங்களை அறிவிப்பது விசித்திரமாகத் தோன்றலாம்.

1893ல் கொடுக்கப்பட்ட சால்ட் லேக் சிட்டி ஆலயத்தின் அவருடைய பிரதிஷ்டை ஜெபத்தில் பதிக்கப்பட்டதைப்போல, நாமிருக்கிற நிலைமைகளை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, தலைவர் வில்போர்ட் உட்ரப் முன்னறிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த குறிப்பிடத்தக்க ஜெபத்தின் முக்கிய பகுதிகளை உங்களில் சிலர் சமீபத்தில் பார்த்திருக்கலாம்.

தேவனின் ஒரு பராக்கிரம தீர்க்கதரிசியிடமிருந்து இந்த வேண்டுதல்களைக் கேளுங்கள்: “இந்த பரிசுத்த ஆலயத்திற்குள் பிரவேசிக்க உம்முடைய ஜனங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காதபோது, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், சிரமங்களால் சூழப்பட்டு கஷ்டங்களிலிருக்கும்போதும் . . இந்த பரிசுத்த ஆலயத்தை நோக்கி, தங்கள் முகங்களைத் திருப்பி, விடுதலைக்காக, உதவிக்காக, அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள், உமது வல்லமை நீட்டப்படுவதற்காக, உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து இரக்கத்துடன் கீழே பார்க்கும்படியாகவும் அவர்களுடைய கூக்குரல்களை கேட்கவும் அவர்களின் சார்பாக நாங்கள் உம்மை மன்றாடுகிறோம். அல்லது உம்முடைய ஜனங்களின் பிள்ளைகள், வரவிருக்கும் ஆண்டுகளில், எந்த காரணத்தினாலும் இந்த இடத்திலிருந்து, பிரிக்கப்படுவார்கள்… நிவாரணத்தையும் விடுதலையும் அளிக்க அவர்கள் தங்கள் உபத்திரவத்தின் மற்றும் துக்கத்தின் ஆழத்திலிருந்து உம்மிடம் கூக்குரலிடுவார்கள், அவர்களுடைய கூக்குரல்களைக் கேட்கவும், அவர்கள் கேட்கும் ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கொடுக்கவும் நாங்கள் தாழ்மையுடன் வேண்டுகிறோம்”3

சகோதர சகோதரிகளே, நமது துயரத்தில், நமது ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும் போது உங்கள் உடன்படிக்கைகளை நீங்கள் கனம்பண்ணும்போது, உங்கள் ஆலய உடன்படிக்கைகள் மற்றும் தரிப்பித்தலின் வல்லமையை நீங்கள் இன்னமும் ஈர்க்கமுடியும். ஆலயங்கள் மூடியிருக்கும்போது, ஆலயத்திற்கு தகுதியான வாழ்க்கையை தொடர்ந்து வாழவும், அல்லது ஆலயத்திற்கு செல்ல தகுதியுள்ளவர்களாகவும் தயவுசெய்து இந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஆலயத்தைப்பற்றி பேசுங்கள். ஆலயத்தில் நாம் செய்கிற எல்லாவற்றிற்கும் இயேசு கிறிஸ்து மையமாயிருப்பதால், ஆலயத்தைப்பற்றி நீங்கள் அதிகமாக சிந்திக்கும்போது அவரைப்பற்றி நீங்கள் அதிகமாக சிந்திக்கிறீர்கள். நீங்கள் தரிப்பிக்கப்பட்டதுடன் அல்லது நீங்கள் தரிப்பிக்கப்படப்போகிறதின் வல்லமையையும் அறிவையும்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள, படிக்கவும் மற்றும் ஜெபிக்கவும்.

பின்வரும் இடங்களில் எட்டு புதிய ஆலயங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை அறிவிக்க இன்று நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: பஹியா ப்ளாங்கா, அர்ஜென்டினா, டாலாஹாசி, பிளோரிடா, லுபும்பாஷி, காங்கோ ஜனநாயக குடியரசு, பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, பெனின் சிட்டி, நைஜீரியா, சைரகஸ், யூட்டா, துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஷாங்காய், சீன மக்கள் குடியரசு.

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஆலயம் இணக்கமாயிருந்து கூடுதல் அழகாயிருக்கும்படியாக உள்ளூர் அலுவலர்களுடன் எட்டு இடங்கள் அனைத்திலும் சபை கட்டிடக் கலைஞர்கள் பணியாற்றுவார்கள்.

அவர்களுடைய கருணையுள்ள அழைப்பை நன்றியுடன் நாங்கள் அங்கீகரித்த பதிலில் துபாயில் ஆலய திட்டம் வருகிறது.

ஷாங்காய்க்கான திட்டத்திற்கான சூழல் மிகமுக்கியமானது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக, சீன மக்கள் குடியரசிலுள்ள ஆலயத்திற்கு தகுதியுள்ள அங்கத்தினர்கள் ஹாங்காங் சீனா ஆலயத்தில் பங்கேற்றார்கள். ஆனால் 2019 ஜூலையில், நீண்டகால திட்டத்தினாலும் புதுப்பித்தல் அதிகம் தேவையானதினாலும் ஆலயம் மூடப்பட்டது.

ஷாங்காயில், சீன மக்கள் குடியரசிலுள்ளவர்களுக்காகவும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் ஆலய நியமங்களில் பங்கேற்பதில் தொடர ஒரு நவீன பல்நோக்கு கூடுமிடம் சீன மக்களுக்கு ஒரு வழியைக் கொடுக்கும்.4

சட்டத்தை மதிக்கவும், கீழ்ப்படியவும், ஆதரிக்கவும் ஒவ்வொரு நாட்டிலும் அதன் அங்கத்தினர்களுக்கு இந்த சபை போதிக்கிறது.5 குடும்பத்தின், நல்ல பெற்றோர்களாயிருப்பதன், முன்மாதிரியான குடிமக்களாயிருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் போதிக்கிறோம். சீன மக்கள் குடியரசின் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் நாங்கள் மதிப்பதால், மனமாற்றம் செய்யும் ஊழியக்காரர்களை நாங்கள் அங்கே அனுப்புவதில்லை, இப்போதும் நாங்கள் அதைச் செய்வதில்லை.

வெளிநாட்டு மற்றும் சீன சபையோர் தனியாக தொடர்ந்து சந்திப்பார்கள். அங்கு, சபையின் சட்டப்பூர்வ நிலையில் மாற்றமில்லை. வசதி பயன்பாட்டின் ஆரம்ப கட்டத்தில் பிரவேசம் முனநியமிப்பில் மட்டுமே. பிற நாடுகளிலிருந்து வருகிற சுற்றுலா பயணிகளுக்காக ஷாங்காயிலுள்ள கர்த்தருடைய ஆலயம் ஒரு பயண இலக்கின் இடமாக இருப்பதில்லை.

மரணத்தின் திரையின் இருபுறமிலுமுள்ள அநேக ஜனங்களின் வாழ்க்கையை இந்த எட்டு புதிய ஆலயங்கள் ஆசீர்வதிக்கும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித முழுமைக்கு ஆலயங்கள் ஒரு கிரீடப் பகுதியாயிருக்கிறது. எல்லா இடங்களிலும் தேவனின் நன்மையிலும், தாராளத்திலும் அவருடைய பிள்ளைகளுக்கு மிக அருகில் ஆலயத்தின் ஆசீர்வாதங்களை அவர் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்.

மறுஸ்தாபிதம் தொடரும்போது, இங்கே பூமியில் அவருடைய ராஜ்யத்திற்கு சம்பந்தப்பட்ட அநேக மகத்தான, முக்கியமான காரியங்களை தேவன் தொடர்ந்து வெளிப்படுத்துவார் என நான் அறிவேன்.6 அந்த ராஜ்யம், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை.

அன்பான சகோதர, சகோதரிகளே, உங்களுக்காக என் அன்பை நான் வெளிப்படுத்துகிறேன். பதற்றம் மற்றும் நிச்சயமின்மையின் இந்த நேரத்தில், என்னிடம் உள்ள அதிகாரத்தை செயல்படுத்துகையில், உங்களுக்கு ஒரு அப்போஸ்தல ஆசீர்வாதத்தை வழங்க நான் விரும்புகிறேன்.

சமாதானத்துடனும் கர்த்தரில் அதிகரித்த விசுவாசத்துடனும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.7

ஒவ்வொரு நாளும் மனந்திரும்ப ஒரு விருப்பத்துடனும், சிறிது அதிகமாக அவரைப்போலாகவும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.8

அதன் முழுமையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் என அறிந்துகொள்ள நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

உங்களுக்கு அல்லது உங்களுக்கு அன்பானவர்கள் மத்தியில் சுகவீனம் உண்டென்றால், கர்த்தருடைய சித்தத்திற்கு இசைவாக குணமாக்குதலின் ஆசீர்வாதத்தை நான் விட்டுப்போகிறேன்.

உங்கள் ஒவ்வொருவர்மீதும் என்னுடைய மற்றுமொரு அன்பின் வெளிப்பாடுடன் உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.