பொது மாநாடு
கிறிஸ்துவில் அதிகமாக மாறுதல்: சரிவின் உவமை
அக்டோபர் 2021 பொது மாநாடு


கிறிஸ்துவில் அதிகமாக மாறுதல்: சரிவின் உவமை

கர்த்தருடைய நேரத்தில், நாம் எங்கு தொடங்குவது என்பது அல்ல, ஆனால் நாம் எங்கு செல்கிறோம் என்பது தான் முக்கியம்.

ஒரு சிறுவனாக, எனக்கு பெரிய ஆசைகள் இருந்தன. பள்ளி முடிந்த பிறகு ஒரு நாள் நான் கேட்டேன்: “அம்மா, நான் வளரும்போது நான் என்னவாக இருக்க வேண்டும்: ஒரு தொழில்முறை கூடைப்பந்து வீரர் அல்லது ஒரு ராக் ஸ்டார்?” துரதிருஷ்டவசமாக, கிளார்க் “பல் இல்லாத அதிசயமானவன்” எதிர்கால விளையாட்டு அல்லது இசைப் புகழின் அறிகுறிகளைக் காட்டவில்லை. பல முயற்சிகள் செய்தபோதிலும், எனது பள்ளியின் மேம்பட்ட கல்வித் திட்டத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியாக நான் வழக்கமான வகுப்பிலேயே இருக்க வேண்டும் என்று எனது ஆசிரியர்கள் பரிந்துரைத்தனர். காலப்போக்கில், நான் ஈடுசெய்து, படிக்கும் பழக்கத்தை உருவாக்கினேன். ஆனால் ஜப்பானில் எனது ஊழியத்துக்குப் பிறகுதான் எனது அறிவார்ந்த மற்றும் ஆவிக்குரிய சாத்தியங்கள் தோன்றத் தொடங்கின. நான் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். ஆனால் என் வாழ்க்கையில் முதல் முறையாக, நான் எனது வளர்ச்சியில் கர்த்தரை முறையாக ஈடுபடுத்தினேன், அது அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்தியது.

படம்
மூப்பர் கில்பர்ட் ஒரு சிறுவனாக
படம்
மூப்பர் கில்பர்ட் ஒரு ஊழியக்காரராக

சகோதர சகோதரிகளே, இந்த சபையில், நாம் தேவனின் பிள்ளைகளின் அனைவரின் தெய்வீக ஆற்றலையும், கிறிஸ்துவில் மேலும் ஏதாவது ஆகக்கூடிய நமது திறனையும் நம்புகிறோம். கர்த்தருடைய நேரத்தில், நாம் எங்கு தொடங்குவது என்பது அல்ல, ஆனால் நாம் எங்கு செல்கிறோம் என்பது தான் முக்கியம்.1

இந்த கொள்கையை செயலில்காட்ட, நான் சில அடிப்படை கணிதத்தை பயன்படுத்துவேன். இப்போது, பொது மாநாட்டில் கணிதம் என்ற வார்த்தையைக் கேட்டு திகிலடைய வேண்டாம். நமது பிஒய்யு–ஐடஹோ கணித ஆசிரியர்கள், தொடங்குபவர் கூட இந்த மையக் கருத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று எனக்கு உறுதியளிக்கிறார்கள். இது ஒரு வரியின் சூத்திரத்துடன் தொடங்குகிறது. நமது நோக்கங்களுக்காக குறுக்குக்கோடு, நமது வரியின் ஆரம்பம். குறுக்குக்கோடு உயர் அல்லது தாழ்ந்த தொடக்க புள்ளியைக் கொண்டிருக்கலாம். கோட்டின் சாய்வு பின்னர் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சாய்ந்திருக்கும்.

படம்
Slopes and intercepts

நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு குறுக்குக்கோடுகளைக் கொண்டிருக்கிறோம், நாம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வாழ்க்கை தரிப்பித்தல்களுடன் தொடங்குகிறோம். சிலர் அதிக குறுக்குக்கோடுகளுடன், முழு வாய்ப்புகளுடன் பிறக்கிறார்கள். மற்றவர்கள் சவாலான மற்றும் நியாயமற்றதாகத் தோன்றும் ஆரம்ப சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.2 பின்னர், நாம் தனிப்பட்ட முன்னேற்றத்தின் சரிவில் முன்னேறுகிறோம். நமது எதிர்காலம் நமது தொடக்கப் புள்ளியால் மிகக் குறைவாகவும், மேலும் நமது சரிவில் மிக அதிகமாகவும் தீர்மானிக்கப்படும். நாம் எங்கு தொடங்கினாலும் இயேசு கிறிஸ்து தெய்வீக ஆற்றலைப் பார்க்கிறார். அவர் அதை பிச்சைக்காரர், பாவி மற்றும் அங்கவீனம் உள்ளவர்களிடம் பார்த்தார். அவர் அதை மீனவர், வரி வசூலிப்பவர் மற்றும் வைராக்கியமுள்ளவரிடத்தில் கூட பார்த்தார். நாம் எங்கு ஆரம்பித்தாலும், நமக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை வைத்து என்ன செய்கிறோம் என்பதைக் கிறிஸ்து கருத்தில் கொள்கிறார்.3 உலகம் நம் குறுக்குக்கோட்டில் கவனம் செலுத்துகையில், தேவன் நம் சாய்வில் கவனம் செலுத்துகிறார். கர்த்தரின் கணக்கீட்டில், அவர் நம்முடைய சாய்வுகளைபரலோகத்தை நோக்கி திருப்புவதற்கு நமக்குதவ, அவரால் முடிந்த அனைத்தையும் செய்வார்.

இந்த கொள்கை போராடுபவர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு சாதகமும் இருப்பதாகத் தோன்றுவோருக்கு இடைநிறுத்தப்பட வேண்டும். வறுமை, கல்விக்கான வரையறுக்கப்பட்ட சாத்தியம், சவாலான குடும்ப சூழ்நிலைகள் உள்ளிட்ட கடினமான தொடக்க சூழ்நிலைகளுடனுள்ள தனிநபர்களை குறிப்பிட்டு தொடங்குகிறேன். பிறர் சரீர சவால்கள், மனநலக் கட்டுப்பாடுகள் அல்லது வலுவான மரபணு முன்தாக்கங்களை எதிர்கொள்ளலாம்.4 கடினமான தொடக்க கோடுகளில் போராடும் எவரும், இரட்சகருக்கு நமது போராட்டங்கள் தெரியும் என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். அவர் “அவரது மனம் இரக்கத்தால் நிரப்பப்பட,… [நம்] அங்கவீனத்துக்கேற்ப எப்படி [நமக்கு] உதவுவது” என்று அவர் அறியும்படிக்கு நம்முடைய அங்கவீனங்களை தம்மீது எடுத்துக் கொண்டார்.”5

கடினமான தொடக்க சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்கு ஊக்கத்தின் இரண்டு பகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதலில், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் எங்கு தொடங்கினீர்கள் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள். உங்கள் சூழ்நிலைகளை புறக்கணிப்பது தவறானது, அவை உண்மையானவை மற்றும் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் கடினமான தொடக்கப் புள்ளியில் அதிக கவனம் செலுத்துவது உங்களை வரையறுக்கவும் உங்கள் தேர்ந்தெடுக்கும் திறனைக்கூட கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும்.6

படம்
பாஸ்டனில் இளைஞர்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள உள்-நகர இளைஞர்களின் குழுவோடு நான் பணியாற்றினேன், அவர்கள் பெரும்பாலும் சுவிசேஷம் மற்றும் சபையின் எதிர்பார்ப்புகளுக்கு புதியவர்கள். தேவனின் தராதரங்களைக் குறைக்கும் விருப்பத்துடன் அவர்களின் சூழ்நிலைக்கான எனது பச்சாதாபத்தையும் அக்கறையையும் குழப்புவதற்கு இது தூண்டியது.7 என் அன்பைக் காட்டும் மிக சக்திவாய்ந்த வழி, என் எதிர்பார்ப்புகளை ஒருபோதும் குறைக்கக்கூடாது என்பதை நான் இறுதியில் உணர்ந்தேன். செய்வதற்கு நான் அறிந்த எல்லாவற்றுடனும், நாங்கள் அவர்களின் திறனில் கவனம் செலுத்தினோம், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாய்வுகளை உயர்த்தத் தொடங்கினர். சுவிசேஷத்தில் அவர்களின் வளர்ச்சி படிப்படியாக இருந்தது, ஆனால் நிலையானது. இன்று, அவர்கள் ஊழியம் செய்துள்ளனர், கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கிறார்கள், ஆலயத்தில் திருமணம் செய்தார்கள் மற்றும் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

படம்
பாஸ்டனின் வளர்ந்த இளைஞர்கள்

இரண்டாவதாக, உங்கள் சாய்வைத் தூக்கும் பணியில் கர்த்தரை ஈடுபடுத்துங்கள். பி.ஒய்.யு– பாத்வே வர்ல்ட்வைட்- ன் தலைவராக பணியாற்றும் போது, மூப்பர் கார்லோஸ் ஏ. கோடோய் பேச்சாளராக இருந்த பெருவின் லிமாவில் ஒரு பெரிய ஆராதனையில் அமர்ந்திருந்ததை நினைவில் கொள்கிறேன். அவர் கூட்டத்தினரைப் பார்த்தபோது, விசுவாசமிக்க முதல் தலைமுறை பல்கலைக்கழக மாணவர்களைப் பார்த்து அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவேளை தனது சொந்த பாதையை நினைத்து, மூப்பர் கோடோய் உணர்ச்சிபூர்வமாக கூறினார்: “நீங்களே உங்களுக்கு உதவுவதை விட அதிகமாக கர்த்தர் உங்களுக்கு உதவுவார். [எனவே] இந்த செயல்பாட்டில் கர்த்தரை ஈடுபடுத்துங்கள்.”8 தீர்க்கதரிசி நேபி போதித்தான், “நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பின்பு, நாம் கிருபையாலேயே இரட்சிக்கப்படுகிறோம்.”9 நாம் மனந்திரும்புதல் உள்ளிட்ட,10 நம் பங்கை செய்ய வேண்டும், ஆனால் கர்த்தருடைய கிருபையால் மட்டுமே நம் தெய்வீக திறனை நாம் உணர முடியும்.11

படம்
பெருவின் லிமாவில் பி.ஒய்.யு– பாத்வே ஆராதனை
படம்
பெருவின் லிமாவில் மூப்பர் கோடோய் பேசுகிறார்

இறுதியாக, உயர்ந்த தொடக்க புள்ளிகளைக் கொண்டவர்களுக்கு ஆலோசனையின் இரண்டு பகுதிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதலாவதாக, நாமே உருவாக்கிக் கொள்ளாத சூழ்நிலைகளுக்காக நாம் கொஞ்சம் மனத்தாழ்மையைக் காட்ட முடியுமா? முன்னாள் பி.ஒய்.யு தலைவர் ரெக்ஸ் ஈ. லீ தனது மாணவர்களிடம் மேற்கோள் காட்டியபடி, “நாம் அனைவரும் நாம் தோண்டாத கிணறுகளில் இருந்து குடித்தோம், நாம் மூட்டாத நெருப்புகளால் நம்மை சூடாக்கிக் கொண்டோம்.”12 முன்னதாக முன்னோடிகள் கட்டிய கல்வி கிணறுகளை திரும்பத்தரவும், புனரமைக்குமாறும் பின்னர் அவர் தனது மாணவர்களை அழைத்தார். மற்றவர்களால் நடப்பட்ட வயல்களை மறுநடவுசெய்யத் தவறினால் ஒரு தாலந்தை அதிகரிக்காமல் திரும்பக் கொடுப்பதற்கு சமமாக இருக்கும்.

இரண்டாவதாக, ஒரு உயர் தொடக்க புள்ளியில் கவனம் செலுத்துவது, நாம் செழித்து வளர்கிறோம் என்ற உணர்வில் நம்மை அடிக்கடி சிக்க வைக்கலாம், உண்மையில், நம் உள் சாய்வு மிகவும் தேங்கி நிற்கலாம். ஹார்வர்ட் பேராசிரியர் கிளேட்டன் எம். கிறிஸ்டென்சன் கற்பித்தார், மிகவும் வெற்றிகரமான மக்கள் தாழ்மையானவர்கள், ஏனென்றால் அவர்கள் திருத்தப்படவும், யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.13 மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் “மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் [வழிகளைக் கண்டுபிடித்து] சரிசெய்துகொள்ள” நமக்கு அறிவுரை கூறினார்.14 காரியங்கள் நன்றாக நடப்பதாகத் தோன்றினாலும், ஜெப விண்ணப்பம் மூலம் மேம்படுவதற்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும்.

நாம் ஏராளமான அல்லது கடினமான சூழ்நிலைகளில் தொடங்கினாலும், நாம் தேவனை நம் பங்குதாரராக ஆக்கும் போதுதான் நமது இறுதி திறனை உணர்ந்து கொள்வோம். பி.ஒய்.யு–பாத்வே மாணவர்களின் வெற்றியைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்த தேசிய அளவில் பிரபலமான கல்வியாளருடன் சமீபத்தில் நான் உரையாடினேன். அவர் புத்திசாலி மற்றும் அவரது விசாரணை நேர்மையானது, ஆனால் அவர் தெளிவாக ஒரு மதச்சார்பற்ற பதிலை விரும்பினார். எங்கள் தக்கவைத்தல் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல் முயற்சிகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன். ஆனால், நான் சொல்லி முடித்தேன், “இவை அனைத்தும் நல்ல நடைமுறைகள், ஆனால் நமது மாணவர்கள் முன்னேறுவதற்கான உண்மையான காரணம் அவர்களின் தெய்வீக ஆற்றலை நாம் அவர்களுக்குக் கற்பிப்பதே ஆகும். உங்கள் வாழ்நாள் முழுவதும், நீங்கள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று சொல்லப்பட்டிருந்தால் கற்பனை செய்து பாருங்கள். பின்னர், நீங்கள் தெய்வீக சாத்தியம் கொண்ட தேவனின் உண்மையான மகன் அல்லது மகள் என்று கற்பிக்கப்படுவதன் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.” அவர் இடைநிறுத்தினார், பின்னர் பதிலளித்தார், “அது வல்லமையானது.”

சகோதர சகோதரிகளே, இந்த கர்த்தரின் சபையின் அதிசயங்களில் ஒன்று, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவில் இன்னும் மேலாக முடியும். அதன் உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்கும், திருப்பித் தருவதற்கும், மனந்திரும்புவதற்கும், சிறந்த மக்களாக மாறுவதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்கும் வேறு எந்த அமைப்பையும்பற்றி எனக்குத் தெரியாது. நாம் கடினமான அல்லது தாராளமான ஆவிக்குரிய சூழ்நிலைகளில் தொடங்கினாலும், நம் பார்வைகள் மற்றும் நமது சாய்வுகள் பரலோகத்தை நோக்கிச் செல்ல வைப்போமாக. நாம் செய்யும்போது, கிறிஸ்து நம்மை உயர்ந்த இடத்திற்கு உயர்த்துவார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Clark G. Gilbert, “The Mismeasure of Man” (BYU–Pathway Worldwide devotional, Jan. 12, 2021), byupathway.org/speeches பார்க்கவும். இந்த செய்தியில் உலகம் எவ்வாறு மனித ஆற்றலை தவறாக அளவிடுகிறது என்பதை நான் ஆராய்ந்தேன். மன உறுதி மற்றும் மனநிலை வளர்ச்சி கொள்கை (ஏஞ்சலா டக்வொர்த்) (கரோல் எஸ். ட்வெக்) பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் முன்னணி உளவியலாளர்கள் கூட, கற்றறிந்த வடிவங்களை மட்டுமே நம்பி, கிறிஸ்துவில் நம் தெய்வீக திறனை புறக்கணிக்கும் போது உண்மையான மனித திறனை குறைத்து மதிப்பிடுகின்றனர்.

  2. Dale G. Renlund, “Infuriating Unfairness,” Liahona, May 2021, 41–45 பார்க்கவும்.

  3. மத்தேயு 25:14–30 பார்க்கவும். தாலந்துகளின் உவமையில், ஒவ்வொரு ஊழியரும் தங்கள் எஜமானரிடமிருந்து வெவ்வேறு எண்ணிக்கைகளில் தாலந்துகளைப் பெற்றனர். ஆனால் தீர்ப்பு அவர்கள் பெற்றதைப் பொறுத்து தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் அது எவ்வாறு நிர்வகிக்கப்பட்டது என்பதன் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்புதான் கர்த்தரிடம், “நல்லது, உத்தமமும் உண்மையுள்ள ஊழியக்காரனே; கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,” என கர்த்தர் சொல்ல வைத்தது. (மத்தேயு 25:21).

  4. மோசியா 3:19 பார்க்கவும். சுபாவ மனிதனின் இழுப்பிற்கு நாம் வெளிப்படுவது வெவ்வேறு மரபணு முன்கணிப்புகளைக் கொண்டு வித்தியாசமாக இருக்கலாம் என்பது ஒரு உட்பொருளாக இருக்கலாம். நாம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வரங்கள் அருளப்பட்டு இருப்பது போல, நமக்கு வெவ்வேறு உடல், மன மற்றும் உணர்ச்சி சவால்கள் உள்ளன, அவற்றை நிர்வகிக்கவும் கடக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

  5. ஆல்மா 7:11–12. மனந்திரும்புதலின் மூலம் நம்முடைய பாவங்களை வெல்ல கிறிஸ்து நமக்கு உதவுவது மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்க்கையின் கஷ்டங்களில் நம்மை எப்படி ஆறுதல்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும், ஏனென்றால் பாவநிவர்த்தி மூலம் அவர் உணர்ந்து அனைத்து மனித துன்பங்களையும் சமாளித்தார்.

  6. நாம் சுயாதீனர்கள் மற்றும் நமக்காக செயல்பட வேண்டும் என்பதை டேவிட் ஏ. பெட்னார் நமக்கு நினைவுபடுத்துகிறார். உலகின் அடையாளங்களால் நாம் நம்மை வரையறுக்கும்போது, நாம் நமது தெய்வீக திறனை மட்டுப்படுத்துகிறோம், அவ்வாறு செய்வதன் மூலம், தேர்ந்தெடுக்கும் திறனை மட்டுப்படுத்துகிறோம். (David A. Bednar, “And Nothing Shall Offend Them,” Liahona, Nov. 2006, 89–92 பார்க்கவும்.)

  7. Russell M. Nelson, “The Love and Laws of God” (Brigham Young University devotional, Sept. 17, 2019), speeches.byu.edu பார்க்கவும். இந்த பி.ஒய்.யு ஆராதனை நிகழ்ச்சியில், தேவனும் அவருடைய குமாரனும் நம்மை நேசிப்பதன் நிமித்தம், அவர்கள் நமக்கு உதவும் நியாயப் பிரமாணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்கள் என்று தலைவர் நெல்சன் போதிக்கிறார். “தேவனின் நியாயப்பிமாணங்கள் நம் ஒவ்வொருவர் மீதும் அவருடைய பரிபூரண அன்பை பிரதிபலிக்கின்றன. அவருடைய நியாயப்பிரமாணங்கள் நம்மை ஆவிக்குரிய ரீதியில் பாதுகாப்பாக வைத்து, நித்தியமாக முன்னேற உதவுகின்றன” (பக்கம் 2).

  8. Carlos A. Godoy (BYU–Pathway Connections Conference, Lima, Peru, May 3, 2018.

  9. 2 நேபி 25:23.

  10. என் பெற்றோர்கள் “உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள்”என்ற விரிவான கில்பர்ட் குடும்ப இலட்சியத்தை ஏற்படுத்தினர். சாய்வின் உவமையை வடிவமைப்பதற்கான மற்றொரு வழி, நாம் நம்மால் முடிந்ததைச் செய்தால், தேவன் தலையிட்டு வித்தியாசத்தை உருவாக்க முடியும் என்று வலியுறுத்த வேண்டும்.

  11. Clark G. Gilbert, “From Grit to Grace” (BYU–Pathway Worldwide devotional, Sept. 25, 2018), byupathway.org/speeches பார்க்கவும். இந்தச் செய்தியில் கடினமாக உழைக்கவும், ஒழுக்கத்தின் பயனுள்ள முறைகளை வளர்க்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், இயேசு கிறிஸ்துவில் நம்முடைய உண்மையான திறனை உணர நாம் அவருடைய கிருபையை பெற கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நான் ஆராய்கிறேன்.

  12. Rex E. Lee, “Some Thoughts about Butterflies, Replenishment, Environmentalism, and Ownership” (Brigham Young University devotional, Sept. 15, 1992), 2, speeches.byu.edu; Deuteronomy 6:11 ஐயும் பார்க்கவும்.

  13. Clayton M. Christensen, “How Will You Measure Your Life?,” Harvard Business Review, July–Aug. 2010, hbr.org பார்க்கவும். இந்த செய்தி முதலில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பட்டப்படிப்புடன் தொடர்புடைய வகுப்பு நாள் உரையாக வழங்கப்பட்டது. அவரது செய்தியில், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து முன்னேறவும், திருத்தம் பெற நாடவும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தாழ்மையுடன் இருக்க அவர்களுக்கு நினைவூட்டி, பேராசிரியர் கிறிஸ்டென்சன் தனது மாணவர்களை மனத்தாழ்மையிலிருந்து நம்பிக்கையை பிரிக்க எச்சரித்தார்.

  14. D. Todd Christofferson, “As Many as I Love, I Rebuke and Chasten,” Liahona, May 2011, 97.