பொது மாநாடு
ஒரு சதவீதம் சிறந்தது
அக்டோபர் 2021 பொது மாநாடு


ஒரு சதவீதம் சிறந்தது

நாம் மாறுவதற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், நமக்கு எவ்வளவு சிறியதாகத் தோன்றினாலும், நமது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, பிரிட்டனின் தேசிய சைக்கிள் பந்தய அணிகள் சைக்கிள் ஓட்டுதல் உலகின் நகைச்சுவையாக இருந்தன. சாதாரணத்தில் திளைத்து, பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுபவர்கள் 100 வருட ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு சில தங்கப் பதக்கங்களை மட்டுமே பெற முடிந்தது, மற்றும் 110 வருடங்களில் எந்த பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுபவரும் வெற்றிபெறாத சைக்கிளிங் மார்க்யூ நிகழ்வான, 3 வார கால டூர் டி பிரான்ஸ் இன்னும் மோசமாக இருந்தது. பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுபவரின் நிலை மிகவும் வருந்தத்தக்கது, கஷ்டப்பட்டு பெற்ற நிறுவனத்தின் நற்பெயரை என்றென்றும் கெடுத்துவிடும் என பயந்து சைக்கிள் உற்பத்தியாளர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு சைக்கிள்களை விற்க மறுத்துவிட்டார்கள். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஒவ்வொரு புதிய பயிற்சி முறையிலும் அதிக ஆதாரங்களை அர்ப்பணித்த போதிலும், எதுவும் வேலை செய்யவில்லை.

படம்
பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டும் வீரர்கள்

எதுவும் இல்லை, அதாவது, 2003 வரை, பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுதலின் மேல்நோக்கிய பாதையில் எப்போதும் மாற்றும் ஒரு சிறிய, பெரும்பாலும் கவனிக்கப்படாத மாற்றம் ஏற்பட்டது. நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ளும் அடிக்கடி குழப்பமான உலகத் தேடலைப் பற்றிய ஒரு வாக்குறுதியுடன், அந்தப் புதிய அணுகுமுறை ஒரு நித்திய கொள்கையை வெளிப்படுத்தும். எனவே பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுதலில் நடந்தது என்ன? அது தேவனின் சிறந்த மகள்களாகவும் மகன்களாகவும் இருக்க நமது தனிப்பட்ட முயற்சிக்கு பெரிதும் பொருத்தமானது

2003 இல், சர் டேவ் பிரெயில்ஸ்ஃபோர்ட் பணியமர்த்தப்பட்டார். ஒரே இரவில் பெரும் திருப்பங்களை முயற்சித்த முந்தைய பயிற்சியாளர்களைப் போலல்லாமல், சர் பிரெயில்ஸ்ஃபோர்ட் அதற்கு பதிலாக “விளிம்பு ஆதாயங்களின் ஒருங்கிணைப்பு” என்று குறிப்பிட்ட ஒரு உபாயத்தில் உறுதியாயிருந்தார். இது எல்லாவற்றிலும் சிறிய மேம்பாடுகளை செயல்படுத்துவதை உள்ளடக்கியது. அதாவது, குறிப்பிட்ட பலவீனங்களை குறிவைத்து முக்கிய புள்ளிவிவரங்கள் மற்றும் பயிற்சியை தொடர்ந்து அளவிடுவதாகும்.

இது லாமானியனாகிய சாமுவேல் தீர்க்கதரிசியின் “கவனத்துடன் நடப்பது”என்ற கருத்துடன் ஓரளவு ஒத்திருக்கிறது.1 இந்த பரந்த, அதிக முழுமையான பார்வை, வெளிப்படையான பிரச்சனை அல்லது கையில் உள்ள பாவம் தொலைநோக்குப்பார்வையின்றி சிக்குவதை தவிர்க்கிறது. ப்ரெயில்ஸ்ஃபோர்ட் கூறினார், “நீங்கள் சைக்கிள் சவாரி செய்ய பயன்படும் நீங்கள் நினைக்க முடிகிற அனைத்தையும் நீங்கள் உடைத்து, பின்னர் அதை ஒரு சதவிகிதம் மேம்படுத்தி பிறகு நீங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கிடைக்கும் என்ற எண்ணத்திலிருந்து முழு கொள்கையும் வந்தது.”2

அவரின் அணுகுமுறை, 99 சதவிகிதத்தின் இழப்பில் கூட, 1 சதவிகிதத்தின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்றுக் கொடுத்த கர்த்தரின் அணுகுமுறையுடன் நன்றாக ஒத்துப்போகிறது. நிச்சயமாக, தேவையுள்ள தனிநபர்களைத் தேட, அவர் சுவிசேஷத்தின் அவசியத்தைப் போதித்தார். ஆனால் அதே கொள்கையை சுவிசேஷத்தின் இனிப்பும் காரமுமான இரண்டாவது கொள்கையான மனந்திரும்புதலுக்கு நாம் பயன்படுத்தினால் என்ன? பாவத்திற்கும் மனந்திரும்புதலுக்கும் இடையேயான குழப்பம் மற்றும் வியக்கத்தகுந்த ஊசலாட்டங்களால் தடுமாற்றப்படுவதற்குப் பதிலாக, நாம் அதை விரிவாக்கும்போது கூட நமது அணுகுமுறை கவனத்தை சுருக்கினால் என்ன? எல்லாவற்றையும் பரிபூரணமாக்க முயற்சிப்பதற்கு பதிலாக, நாம் ஒரு காரியத்தை சமாளித்தால் என்ன?

உதாரணமாக, உங்கள் புதிய பரந்த கோண விழிப்புணர்வில், மார்மன் புஸ்தகத்தின் தினசரி வாசிப்பை நீங்கள் புறக்கணித்ததை நீங்கள் கண்டறிந்தால் என்ன ஆகும்? சரி, ஒரே இரவில் அனைத்து 531 பக்கங்களையும் பார்ப்பற்குப் பதிலாக, அதில் 1 சதவிகிதத்தை மட்டும் வாசிப்பதற்கு நாம் உறுதியளித்தால், அதாவது ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்கள், அல்லது உங்கள் நிலைமையை சமாளிக்கக்கூடிய மற்றொரு இலக்கு? நம் வாழ்வில் ஒன்றுசேர்ந்த சிறிய ஆனால் நிலையான ஓரளவு முன்னேற்றங்கள், இறுதியாக நமது தனிப்பட்ட தொல்லை தரும் குறைபாடுகளில் கூட வெற்றிக்கான வழியாக இருக்க முடியுமா? நமது கறைகளை கையாள்வதற்கான இந்த கடி-அளவிலான அணுகுமுறை உண்மையில் வேலை செய்யுமா?

இந்த யுத்ததந்திரம், கணிதத்தை நமக்கு சாதகமாக சரிப்படுத்துகிறது என பாராட்டப்படுகிற எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர் சொல்லுகிறார். “பழக்கவழக்கங்கள் சுய முன்னேற்றத்தின் ‘கூட்டு வட்டி’ என்று அவர் கருதுகிறார். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றில் ஒரு சதவிகிதம் முன்னேற்றம் அடைந்தால் ஒரு வருடத்தின் முடிவில் … நீங்கள் 37 மடங்கு சிறப்பாக இருப்பீர்கள்.3

பிரெயில்ஸ்ஃபோர்டின் சிறிய பலன்கள் உபகரணங்கள், உபகரண துணிகள் மற்றும் பயிற்சி முறைகள் போன்ற வெளிப்படையானவற்றுடன் தொடங்கியது. ஆனால் அவரது அணி அங்கு நிற்கவில்லை. அவர்கள் ஊட்டச்சத்து, மற்றும் பராமரிப்பு நுணுக்கங்கள் போன்ற கவனிக்கப்படாத மற்றும் எதிர்பாராத பகுதிகளில் 1 சதவிகிதம் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்டறிந்தனர். காலப்போக்கில், இவை மற்றும் எண்ணற்ற பிற நுண்ணிய முன்னேற்றங்கள் அதிர்ச்சியூட்டும் முடிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டு, யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேகமாக வந்தன. உண்மையாகவே, “வரி வரியாகவும், கோட்பாட்டுக்கு மேல் கோட்பாடு, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்” என்ற நித்தியக் கொள்கையில் அவர்கள் இருந்தனர்.4

நீங்கள் விரும்பும் “பலமான மாற்றத்தை” சிறிய அனுசரிப்புகள் செய்யுமா?5 சரியாகச் செயல்படுத்தினால் அவைகள் செய்யும் என 99 சதவீதம் நான் உறுதி கூருகிறேன்! ஆனால் இந்த அணுகுமுறையின் ஒரு எச்சரிக்கை என்னவென்றால், சிறிய ஆதாயங்களை நமக்கு சாதகமாக திரட்ட, ஒரு நிலையான, அன்றாட முயற்சி இருக்க வேண்டும். நாம் பரிபூரணமானவர்களாக இருக்க முடியாது என்றாலும், நம் பொறுமையை விடாமுயற்சியுடன் பிரதிபலிக்க, நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதைச் செய்யுங்கள், அதிகரித்த நீதியின் இனிமையான வெகுமதிகள் நீங்கள் தேடும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தரும். தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்திருக்கிறபடி: “மனந்திரும்புதலில் ஒரு வழக்கமான, அன்றாட கவனம் செலுத்துவதைவிட, எதுவுமே அதிக விடுவிப்பதாக, அதிக அந்தஸ்தை உயர்த்துவதாக, அல்லது நம்முடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கப்போவதில்லை. மனந்திரும்புதல் ஒரு நிகழ்ச்சி இல்லை, இது ஒரு செயல்முறை. சந்தோஷத்திற்கும் மனசமாதானத்திற்கும் இது திறவுகோல். விசுவாசத்துடன் இணைக்கப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பாநிவர்த்தியின் வல்லமையை நாம் அடையும்படிக்கு மனந்திரும்புதல் திறக்கிறது.”6

படம்
கடுகு விதை
படம்
கடுகு மரம்

இந்த விசுவாசத்தின் முன் நிபந்தனையைப் பொறுத்தவரை, வேதங்கள் தெளிவாக உள்ளன. ஆரம்பத்தில் தேவைப்படுவது வெறும் “விசுவாசத்தின் துகள்” மட்டுமே.7 நாம் இந்த “கடுகு விதை” மனநிலையை சேகரிக்க முடிந்தால்8 நாமும் எதிர்பாராத மற்றும் விதிவிலக்கான முன்னேற்றங்களை நம் வாழ்வில் எதிர்பார்க்கலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒரே இரவில் அட்லா தி ஹன் என்ற நிலையில் இருந்து அன்னை தெரசாவிடம் செல்ல முயற்சிக்க மாட்டோம், அதேபோல, நமது முன்னேற்ற முறைகளையும் நாம் படிப்படியாக மாற்றியமைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் தேவையான மாற்றங்கள் மொத்தமாக இருந்தாலும், சிறிய அளவில் தொடங்கவும். நீங்கள் அழுத்தத்தை அல்லது அதைரியத்தை உணர்ந்தால் அது குறிப்பாக உண்மை.

இந்த செயல்முறை எப்போதும் ஒரு கோடுபோடும் முறையில் நிறைவேற்றப்படுவதில்லை. மிகவும் உறுதியானவர்களுக்குக் கூட பின்னடைவுகள் இருக்கலாம். என் சொந்த வாழ்க்கையில் இதன் விரக்தியை அனுபவித்த எனக்கு, அது சில சமயங்களில் 1 சதவிகிதம் முன்னோக்கி சென்று மற்றும் 2 சதவிகிதம் பின்வாங்குவது போல் உணரலாம் என்பதை நான் அறிவேன். ஆயினும் அந்த 1 சதவிகித முன்னேற்றங்களை தொடர்ந்து வெளியேற்றுவதில் நாம் துணிச்சலுடன் உறுதியாக இருந்தால், “நம் துயரங்களை சுமந்தவர்”9 நிச்சயமாக நம்மைச் சுமப்பார்.

வெளிப்படையாக, நாம் கடுமையான பாவங்களில் ஈடுபட்டிருந்தால், கர்த்தர் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவானவர்; நாம் நிறுத்த வேண்டும், நம் ஆயரிடமிருந்து உதவி பெற வேண்டும், உடனடியாக இதுபோன்ற பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் கற்பித்தபடி: “சிறிய, நிலையான, படிப்படியாக அதிகரிக்கும் ஆவிக்குரிய முன்னேற்றங்கள் கர்த்தர் நம்மை எடுக்க வைக்கச் செய்யும் அடிகள். தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நடக்கத் தயாராக இருப்பது பூலோக வாழ்வின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும் மற்றும் வாழ்நாள் முயற்சி, தீவிர ஆவிக்குரிய ஆங்காங்கே நிகழும் செயல்பாடுகளின் எழுச்சியால் இது ஏற்படாது.”10

படம்
பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டும் வீரர்கள்

எனவே, மனந்திரும்புதல் மற்றும் உண்மையான மாற்றத்திற்கான இந்த பாக்கெட் அளவிலான அணுகுமுறை உண்மையில் வேலை செய்யுமா? சொல்லப்போனால், நிரூபணம் மிதிப்பதில் உள்ளதா? இந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்து கடந்த இரண்டு தசாப்தங்களில் பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுவதில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டுபவர்கள் இப்போது டூர் டி பிரான்ஸை அதிர்ச்சியூட்டும் ஆறு முறை வென்றுள்ளனர். கடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளின்போது, கிரேட் பிரிட்டன் அனைத்து சைக்கிள் ஓட்டுதல் துறைகளிலும் மிகவும் வெற்றிகரமான நாடாக இருந்திருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், வேறு எந்த நாட்டையும் விட இங்கிலாந்து சைக்கிள் ஓட்டுதலில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றது.

படம்
ஒலிம்பிக் வீரர்கள்

பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டும் வீரர்களின் புகைப்படங்கள் (கடிகாரச் சுற்றுமுறையில் இடது மேல்புறத்திலிருந்து ) பிரீட்மேன் வோகல், ஜான் கில்ஸ், மற்றும் கிரெக் பேக்கர்/கெட்டி இமேஜஸ்

ஆனால் மிகப் பிரகாசிக்கும் வெள்ளி அல்லது தங்கத்தை விட மிகச்சிறந்ததாக, நித்தியத்திற்கான நமது பாதையில் நமது விலைமதிப்பற்ற வாக்குறுதி என்னவென்றால், நாம் உண்மையில் “கிறிஸ்துவில் வெற்றி சிறப்போம்”.11 சிறிய ஆனால் நிலையான முன்னேற்றங்களைச் செய்ய நாம் ஒப்புக்கொடுக்கும்போது, “மகிமையுள்ள மங்காத கிரீடம் தூரத்திலில்லை,” என நமக்கு வாக்களிக்கப்படுகிறது.12 மங்கலாக்க முடியாத பளபளப்புடன், உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, உடன்படிக்கை பாதையில் எது தேங்கிப்போக அல்லது மெதுவாக போக செய்தது என காண உங்களை நான் அழைக்கிறேன். பின்னர் விசாலமாக பார்க்கவும். உங்கள் வாழ்க்கையில் சுமாரான ஆனால் செய்யக்கூடிய தீர்வுகளைத் தேடுங்கள், அது கொஞ்சம் சிறப்பாக இருப்பதன் இனிமையான மகிழ்ச்சியை விளைவிக்கக்கூடும்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், தாவீது ஒரு சிறிய கல்லைப் பயன்படுத்தி, வெல்ல முடியாத ஒரு ராட்சதனை வீழ்த்தினான். ஆனால் அவன் தயாராக நான்கு கற்களை வைத்திருந்தான். இதேபோல், இளைய ஆல்மாவின் பொல்லாத மனப்பான்மையும் நித்திய இலக்கும், இயேசு கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையைப்பற்றிய அவரது பிதாவின் போதனையின் நினைவின் ஒரு எளிய, முக்கிய சிந்தனையால் மாற்றப்பட்டது. . பாவமில்லாதவராக இருந்தாலும், நம் இரட்சகரும் அப்படித்தான், “முதலில் முழுமையைப் பெறவில்லை, ஆனால் அவர் பரிபூரணத்தைப் பெறும் வரை, கிருபையிலிருந்து கிருபைக்குத் தொடர்ந்தார்.”13

படம்
இயேசு கிறிஸ்து

ஒரு சிட்டுகுருவி எப்போது விழும் என்பது அவருக்குத் தெரியும், அதுபோலவே நம் வாழ்வின் முக்கியமான தருணங்களையும், இந்த மாநாட்டில் இருந்து உங்கள் 1 சதவீதத் தேடலில் எது வந்தாலும் உங்களுக்கு உதவ இப்போது யார் தயாராக இருக்கிறார் என்றும் அவருக்குத் தெரியும். ஏனென்றால், நாம் மாற செய்யும் ஒவ்வொரு முயற்சியும், நமக்கு எவ்வளவு சிறியதாகத் தோன்றினாலும், நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இந்த நோக்கத்திற்காக மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் போதித்தார், “ஒரு நீதியான ஆசையின் ஒவ்வொரு கூற்றும், ஒவ்வொரு சேவைச் செயலும், ஒவ்வொரு ஆராதனைச் செயலும், சிறியதாகவும் படிப்படியாக வந்தாலும், நமது ஆவிக்குரிய வேகத்தோடு சேர்கிறது.”14 உண்மையாக, சிறிய, எளிமையான, மற்றும், ஆம், 1 சதவிகித காரியங்களால் கூட பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியும்.15 இறுதி வெற்றி 100 சதவிகிதம் உறுதியானது, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமை, தகுதிகள் மற்றும் இரக்கம் மூலம் “நம்மால் செய்ய முடிந்ததாகும்.” 16 அப்படியே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.