பொது மாநாடு
உங்கள் கதையை துவக்க கிறிஸ்துவை அழைக்கவும்
அக்டோபர் 2021 பொது மாநாடு


உங்கள் கதையை துவக்க கிறிஸ்துவை அழைக்கவும்

உங்கள் முன்மாதிரியான, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, உங்கள் கதை விசுவாசத்தின் ஒன்றாக இருக்கட்டும்.

சுய சிந்தனைக்காக, நான் பல்வேறு கேள்விகளை முன்வைத்து ஆரம்பிக்கிறேன்.

  • உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் என்ன வகையான தனிப்பட்ட கதையை எழுதுகிறீர்கள்?

  • உங்கள் கதையில் நீங்கள் விவரிக்கும் பாதை நேராக உள்ளதா?

  • உங்கள் பரலோக வீட்டில், உங்கள் கதை தொடங்கிய இடத்தில் முடிகிறதா?

  • உங்கள் கதையில் ஒரு முன்மாதிரி இருக்கிறாரா, அது இரட்சகர் இயேசு கிறிஸ்துவா?

இரட்சகர் “நமது விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்” என்று நான் சாட்சியமளிக்கிறேன்.1 உங்கள் கதையை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்க அவரை நீங்கள் அழைப்பீர்களா?

அவருக்கு முடிவிலிருந்து ஆரம்பம் தெரியும். அவர் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர். நாம் அவரிடத்திலும் நம் பரலோக பிதாவிடத்திலும் வீடு திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் நம்மிடம் அனைத்தையும் முதலீடு செய்திருக்கிறார், நாம் வெற்றிபெற விரும்புகிறார்.

நமது கதைகளை அவரிடம் திருப்புவதை எது தடுக்கிறது என நினைக்கிறீர்கள்?

ஒருவேளை இந்த விளக்கம் உங்கள் சுய மதிப்பீட்டிற்கு உதவும்.

குறுக்கு விசாரணையில், உங்களுக்கு பதில் தெரியாத ஒரு கேள்வியை ஒரு சாட்சியிடம் நீங்கள் அரிதாகவே கேட்க வேண்டும் என்பதை ஒரு திறமையான விசாரணை வழக்கறிஞர் தெரிந்திருக்கிறார். அத்தகைய கேள்வியைக் கேட்பது சாட்சியையும், நீதிபதி மற்றும் நடுவரையும் உங்களுக்கு ஏற்கனவே தெரியாததை உங்களுக்குத் தெரிவிக்க அழைப்பதாகும். நீங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு பதிலைப் பெறலாம் மற்றும் உங்கள் வழக்குக்காக நீங்கள் உருவாக்கிய கதைக்கு முரணானதாகவும் இருக்கலாம்.

உங்களுக்கு பதில் தெரியாத ஒரு கேள்வியை ஒரு சாட்சியிடம் கேட்பது பொதுவாக ஒரு வழக்கறிஞருக்கு விவேகமற்றது என்றாலும், எதிரானது நமக்கு உண்மை. நமது அன்பான பரலோக பிதாவிடம், நம் இரக்கமுள்ள இரட்சகரின் நாமத்தில் நாம் கேள்விகளைக் கேட்கலாம், மேலும் நம் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சாட்சி எப்போதும் சத்தியத்தையே சாட்சியமளிக்கும் பரிசுத்த ஆவியானவர்.2 பரிசுத்த ஆவியானவர் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் பரிபூரண ஒற்றுமையுடன் செயல்படுவதால், பரிசுத்த ஆவியின் வெளிப்பாடுகள் நம்பகமானவை என்பதை நாம் அறிவோம். அப்படியானால், பரிசுத்த ஆவியால் நமக்கு வெளிப்படும் சத்தியமான இந்த வகையான பரலோக உதவியை நாம் ஏன் சில நேரங்களில் எதிர்க்கிறோம்? சாட்சி நட்பாக இருப்பது மட்டுமல்லாமல் எப்போதும் உண்மையைச் சொல்லும்போது நமக்கு பதில் தெரியாத ஒரு கேள்வியை நாம் ஏன் தள்ளி வைக்கிறோம்?

ஒருவேளை நாம் பெறக்கூடிய பதிலை ஏற்கும் விசுவாசம் நமக்கு இல்லாததால் இருக்கலாம். நம்மில் உள்ள சுபாவ ஆண் அல்லது பெண் எல்லாவற்றையும் கர்த்தரிடம் முழுமையாக திருப்புவதற்கும் அவரை முழுமையாக நம்புவதற்கும் எதிர்ப்பு இருப்பதால் இருக்கலாம். அதனால்தான், முதன்மை ஆசிரியரால் திருத்தப்படாத நமது கதையின் வசதியான பதிப்பான நமக்காக நாம் எழுதிய கதையுடன் ஒட்டிக்கொள்வதை நாம்தேர்ந்தெடுத்திருக்கலாம். நாம் நமக்காக எழுதும் கதையில் சரியாகப் பொருந்தாத ஒரு கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற நாம் விரும்பவில்லை.

வெளிப்படையாக, நம்மில் சிலர் நம் கதைகளில் நம்மைச் செம்மைப்படுத்தும் சோதனைகளை ஒருவேளை எழுதலாம். ஆனால் கதாநாயகன் போராட்டத்தை வெல்லும்போது நாம் படித்த கதையின் புகழ்பெற்ற உச்சத்தை நாம் விரும்புவதில்லையா? நமக்கு பிடித்த கதைகளை அழுத்தமான, காலமற்ற, விசுவாசத்தை ஊக்குவிக்கும் மற்றும் சொல்ல தகுதியானதாக மாற்றும் சதித்திட்டத்தின் மூலக்கூறுகள்தான் சோதனைகள். நம் கதைகளில் எழுதப்பட்ட அழகிய போராட்டங்கள்தான், நம்மை இரட்சகரிடம் நெருங்கச் செய்து, நம்மைச் செம்மைப்படுத்தி, நம்மை அவரைப் போலவே ஆக்குகின்றன.

தாவீது கோலியாத்தை வெல்ல, சிறுவன் ராட்சதனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தாவீதைப்பற்றிய வசதியான விவரிப்பு ஆடுகளை மேய்ப்பதற்கு திரும்பவதாயிருந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக, சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றிய அனுபவத்தை அவன் கூறினான். அந்த வீர சாதனைகளை உருவாக்கி, தேவன் தனது கதையை எழுத அனுமதிக்கும் விசுவாசத்தையும் தைரியத்தையும் திரட்டி, அறிவித்தான், “என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர், இந்தப் பெலிஸ்தனின் கைக்கும் தப்புவிப்பார்.”3 தேவன் வெற்றிபெற வேண்டும் என்ற வாஞ்சையுடன், பரிசுத்த ஆவிக்கு செவிகொடுத்து, இரட்சகர் தனது கதையை துவக்குகிறவராகவும் முடிப்பவராகவும் இருக்க விருப்பத்துடன், சிறுவன் தாவீது கோலியாத்தை தோற்கடித்து தனது மக்களை காப்பாற்றினான்.

சுயாதீனத்தின் உன்னதமான கொள்கை, நிச்சயமாக, நமது சொந்த கதைகளை எழுத அனுமதிக்கிறது, ஆடுகளை மேய்ப்பதற்கு திரும்பவும் தாவீது வீட்டிற்குச் சென்றிருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்து அவரது கையில் கூர்மையான பென்சில்களுடன், ஒரு தலைசிறந்த படைப்பை எழுத, நம்மை தெய்வீக கருவிகளாக பயன்படுத்த தயாராக இருக்கிறார். எனக்கு அவரை அனுமதிக்கும் விசுவாசம் இருந்தால், நான் அவரை என் கதையை எழுத அனுமதித்தால், அவர் ஒரு கசப்பான பென்சிலாகிய, என்னை இரக்கத்துடன், அவரது கைகளில் ஒரு கருவியாகப் பயன்படுத்த விருப்பமாய் இருக்கிறார்.

தேவன் வெற்றி பெற அனுமதித்த மற்றொரு அழகான உதாரணம் எஸ்தர். சுய பாதுகாப்பின் எச்சரிக்கையான கதையுடன் ஒட்டிக்கொள்வதற்குப் பதிலாக, தன்னை முழுமையாக கர்த்தரிடம் ஒப்படைத்து, அவள் விசுவாசத்தைப் பயன்படுத்தினாள். பாரசீகத்தில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்க ஆமான் திட்டமிட்டிருந்தான். எஸ்தரின் உறவினர் மொர்தெகாய், சதித்திட்டத்தை அறிந்து, தன் மக்கள் சார்பாக ராஜாவுடன் பேசும்படி அவளை வலியுறுத்தி அவளுக்கு எழுதினான். அழைக்கப்படாமல் அரசனை அணுகும் ஒருவர் மரணத்திற்கு உட்படுவார் என்று அவள் அவனிடம் சொன்னாள். ஆனால் விசுவாசத்தின் மிக பிருமாண்ட செயலில், யூதர்களைக் கூட்டி, அவளுக்காக உபவாசம் இருக்கும்படி மொர்தெகாயை அவள் கேட்டாள். “நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்;” அவள் சொன்னாள், “இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்.”4

தன் கதையை எழுத இரட்சகரை அனுமதிக்க எஸ்தர் விரும்பினாலும், உலகப்பிரகார கண்ணோட்டத்தில், முடிவு சோகமாக இருந்திருக்கலாம். ஆசீர்வாதமாக, ராஜா எஸ்தரை வரவேற்றான், பாரசீகத்தில் யூதர்கள் காப்பாற்றப்பட்டனர்.

நிச்சயமாக, எஸ்தரின் தைரியத்தின் அளவு நம்மிடம் அரிதாகவே கேட்கப்படுகிறது. ஆனால் தேவன் வெற்றிபெற அனுமதித்து, நம் கதைகளின் துவக்குபவராகவும் முடிப்பவராகவும் இருக்க அனுமதித்து, அவருடைய கட்டளைகளையும் நாம் செய்த உடன்படிக்கைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமது கட்டளை மற்றும் உடன்படிக்கையை காத்துக்கொள்வது, பரிசுத்த ஆவியின் மூலம் வெளிப்பாட்டைப் பெறுவதற்கான தகவல்தொடர்பு வழியைத் திறக்கும். பரிசுத்த ஆவியின் வெளிப்பாடுகளின் மூலமே, நமது கதைகளை நம்முடன், போதகரின் கை எழுதுவதை நாம் உணர்வோம்.

ஏப்ரல் 2021ல், நமது தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், இயேசு கிறிஸ்துவின் மீது அதிக விசுவாசம் வைத்திருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கும்படி நம்மைக் கேட்டார். இயேசு கிறிஸ்துவின் மீது அதிக விசுவாசத்துடன், நமக்கு பதில் தெரியாத ஒரு கேள்வியை நாம் கேட்கலாம், சத்தியத்தை சாட்சியமளிக்கும் பரிசுத்த ஆவியின் மூலம் பரலோகத்திலுள்ள நம் பிதாவிடம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஒரு பதிலை அனுப்பும்படி கேட்கலாம். நமக்கு அதிக விசுவாசம் இருந்தால், நாம் கேள்வி கேட்போம், பின்னர் அது நம் வசதியான கதைக்கு பொருந்தவில்லை என்றாலும்கூட நாம் பெறும் பதிலை ஏற்றுக்கொள்ள விருப்பமாய் இருப்போம். இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தில் செயல்படுவதிலிருந்து வரும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதம், நம் துவக்குபவராகவும் முடிப்பவராகவும் அவர் மீதான விசுவாசத்தின் அதிகரிப்பாகும். “அதிக விசுவாசம் தேவைப்படும் ஒன்றைச் செய்வதன் மூலம் நாம் விசுவாசத்தை அதிகம் பெறுகிறோம்” என்று தலைவர் நெல்சன் அறிவித்தார்.5

எனவே, மலட்டுத்தன்மையால் அவதியுற்ற குழந்தை இல்லாத தம்பதியினர், தங்களுக்காக அவர்கள் எழுதிய கதை ஒரு அதிசயமான பிறப்பை உள்ளடக்கியிருந்தாலும், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாமா எனக்கேட்டு, பதிலை ஏற்கத் தயாராக இருக்க வேண்டுமா என்று விசுவாசத்துடன் கேட்கலாம்.

ஒரு மூத்த தம்பதியினர் அவர்கள் தங்களுக்கு எழுதிய கதைகள் பணியாட்களிடம் அதிக நேரத்தைச் சேர்த்திருந்தாலும் கூட, தங்களுக்கு ஒரு ஊழியத்துக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதா, போவதற்கு விருப்பமாயிருக்கிறார்களா என்று கேட்கலாம். . அல்லது “இன்னும் இல்லை” என்று பதில் இருக்கலாம், மேலும் அவர்கள் வீட்டில் சிறிது அதிக நேரம் ஏன் தேவைப்பட்டது என்பதை அவர்கள் தங்கள் கதையின் அடுத்த அத்தியாயங்களில் கற்றுக்கொள்வார்கள்.

ஒரு பதின்ம வயது இளைஞன் அல்லது இளம் பெண் விளையாட்டு அல்லது கல்வி அல்லது இசையைத் தேடுவது மிகவும் மதிப்புள்ளதா என்று விசுவாசத்துடன் கேட்கலாம், மற்றும் பரிபூரண சாட்சியான பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களைப் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும்.

இரட்சகர் நம் கதைகளின் துவக்குபவராகவும் முடிப்பவராகவும் இருக்க நாம் ஏன் விரும்புகிறோம்? அவர் நம் திறனை சரியாக அறிந்திருப்பதால், நாம் ஒருபோதும் கற்பனை செய்யாத இடங்களுக்கு அவர் நம்மை அழைத்துச் செல்வார். அவர் நம்மை தாவீது அல்லது ஒரு எஸ்தராக ஆக்கலாம். அவர் நம்மை இழுத்துப்பிடித்து, அவரைப் போலவே நம்மை புடமிடுவார். நாம் அதிக விசுவாசத்துடன் செயல்படுவதால் நாம் சாதிக்கும் காரியங்கள் இயேசு கிறிஸ்து மீதான நமது விசுவாசத்தை அதிகரிக்கும்.

சகோதர சகோதரிகளே, ஒரு வருடத்திற்கு முன்பு நமது அன்பான தீர்க்கதரிசி கேட்டார்: “உங்கள் வாழ்க்கையில் தேவன் வெற்றிபெற அனுமதிக்க நீங்கள் விருப்பமுள்ளவரா? … அவர் நீங்கள் செய்ய விரும்புவற்கு மற்ற எல்லா லட்சியங்களுக்கும் மேலாக முன்னுரிமை அளிக்க நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்களா?”6 அந்தத் தீர்க்கதரிசன விசாரணைகளுடன் நான் தாழ்மையுடன் சேர்க்கிறேன்: “உங்கள் கதையை துவக்குபவராகவும் முடிப்பவராகவும் தேவனை அனுமதிப்பீர்களா?”

நாம் தேவனுக்கு முன்பாக நின்று, நம்முடைய கிரியைகளின்படி, ஜீவ புத்தகங்களிலிருந்து தீர்ப்பளிக்கப்படுவோம் என்று வெளிப்படுத்தலில் நாம் கற்றுக்கொள்கிறோம்.7

நாம் நமது ஜீவ புத்தகத்தால் தீர்ப்பளிக்கப்படுவோம். நமக்காக ஒரு வசதியான கதையை எழுத நாம் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மற்ற லட்சியங்களை விட அவர் நாம் வகிக்க வேண்டிய பங்குக்கு முன்னுரிமை அளித்து, முதன்மை துவக்குபவர் மற்றும் முடிப்பவரை நம்முடன் நமது கதையை எழுத அனுமதிக்கலாம்.

கிறிஸ்து உங்கள் கதையை துவக்குபவரும் முடிப்பவராகவும் இருக்கட்டும்!

பரிசுத்த ஆவி உங்கள் சாட்சியாக இருப்பாராக!

தேவனின் சமூகத்தில் வாழ உங்கள் பரலோக இல்லத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் பாதையில் நீங்கள் செல்லும் பாதை நேராக இருக்கும் ஒரு கதையை எழுதுங்கள்.

ஒவ்வொரு நல்ல கதையின் ஒரு பகுதியாக இருக்கும் துன்பம் மற்றும் வியாகுலம், நீங்கள் இயேசு கிறிஸ்துவை நெருங்குவதற்கும், மேலும் அவர் போல் இருப்பதற்கும் ஒரு வழிமுறையாக இருக்கட்டும்.

பரலோகம் திறந்திருப்பதை நீங்கள் அடையாளம் காணும் ஒரு கதையைச் சொல்லுங்கள். தேவன் உங்களுடைய விருப்பத்தை பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கத் தயாராக இருக்கிறார் என்பதை அறிந்து, உங்களுக்கு பதில் தெரியாத கேள்விகளைக் கேளுங்கள்.

உங்கள் முன்மாதிரியாகிய, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, உங்கள் கதை விசுவாசத்தின் ஒன்றாக இருக்கட்டும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.