பொது மாநாடு
சபையின் பெயர் மாற்றக்கூடியதல்ல.
அக்டோபர் 2021 பொது மாநாடு


சபையின் பெயர் மாற்றக்கூடியதல்ல.

அவருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய ஆலோசனையை நாம் விருப்பத்துடன் பின்பற்றும்போது, குறிப்பாக அது நம்முடைய ஆரம்ப சிந்தனைக்கு எதிராயிருந்து, தாழ்மை மற்றும் தியாகம் தேவைப்பட்டால், கூடுதல் ஆவிக்குரிய வல்லமையுடன் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

ஆகஸ்டு 16, 2018ல் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தலைவர் ரசல் எம்.நெல்சன் சொன்னார்: “அவரது சபைக்கு அவர் வெளிப்படுத்தியிருக்கிற பெயராகிய, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் முக்கியத்துவத்தை என் மனதில் கர்த்தர் உணர்த்தியிருக்கிறார்.1 அவரது சித்தத்துடன் நம்மை இணக்கமாக கொண்டுவர நமக்கு முன்னால் நமக்கு பணி இருக்கிறது.”2

இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்டு 18ல், மான்ட்ரியேல், கனடாவில் தலைவர் நெல்சனுடன் நானிருந்தேன். பாலயிஸ் டி காங்கெரில் நடந்த மனதில் பதிகிற நமது உறுப்பினர் கூட்டத்தைத் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு தலைவர் நெல்சன் பதிலளித்தார். “நூறு ஆண்டுகளுக்கும் மேலான [ஒரு]பாரம்பரியத்தை ரத்து செய்வது [சபையின் பெயரை மீண்டும் நிறுவுவது] ஒரு சவாலாக இருக்கும்” என அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் மேலும் கூறினார், “சபையின் பெயர் மாற்றக்கூடியதல்ல.”3

ஏழு வாரங்களுக்குப் பின்னர், பொது மாநாட்டில் தலைவர் நெல்சன் பேசினார்: “அவருடைய சபைக்கு அவர் கட்டளையிட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என்ற பெயரின் முக்கியத்துவத்தை என் மனதில் கர்த்தர் பதிய வைத்தார். … இதை இரட்சகரே சொன்னார், ‘ஏனெனில், என்னுடைய சபை இப்படியாக அழைக்கப்படும்.’” பின்னர் தலைவர் நெல்சன் மீண்டும் கூறினார், “சபையின் பெயர் மாற்றக்கூடியதல்ல.”4

ஒரு நல்ல கேள்வி

ஒரு நல்ல கேள்வி எழுந்தது: பல தசாப்தங்களாக நாம் “மார்மன்” என்ற புனைப்பெயரைத் தழுவிக்கொண்டிருந்தோம் “இப்போது ஏன்?” ஆரம்ப வகுப்பு பாடலான “நான் ஒரு மார்மன்”, “நான் ஒரு மார்மன் பையன்”? என்பதை “The Mormon Tabernacle Choir,” என்ற காணொளி குறிக்கிறது.

கிறிஸ்துவின் கோட்பாடு மாறாதது நித்தியமானது. இருந்தும், இரட்சகரின் பணியின் குறிப்பிட்டதும் முக்கியமுமான படிகள் அவர்களின் பொருத்தமான நேரத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. “மறுஸ்தாபிதம் ஒரு செயல்முறை, ஒரு நிகழ்ச்சி அல்ல”5 என இன்று காலை தலைவர் நெல்சன் சொன்னார். கர்த்தர் சொன்னார், “அதனதன் காலத்தில் அனைத்தும் சம்பவிக்கவேண்டும்.”6 இப்போதே நமது நேரம், வெளிப்படுத்தப்பட்ட சபையின் பெயரை நாம் மறுஸ்தாபிதம் செய்து கொண்டிருக்கிறோம்.

நாம் அவருடைய பெயரால் அழைக்கப்படவேண்டுமென்பது பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அடையாளம் மற்றும் இலக்கு. சபையின் ஒரு சில உறுப்பினர்களுடன் மட்டுமிருந்த தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித், “இந்த சபை அமெரிக்காவின் வடக்கு, தெற்கு பகுதியை நிரப்பும், இது உலகத்தையே நிரப்பும்”7 என அவர் தீர்க்கதரிசனமுரைத்த கர்த்லாந்து, ஒஹாயோவில் சமீபத்தில் நானிருந்தேன். “ஒரு அற்புதமான பணியாகவும் ஒரு அதிசயமாகவும்”8 இந்த ஊழியக்காலத்தின் பணியை கர்த்தர் விவரித்தார். “பூமியிலுள்ள சகலமும் … ஆசீர்வதிக்கப்பட” அனுமதித்து, “பிற்காலங்களில் நிறைவேற வேண்டிய உடன்படிக்கையைப்பற்றி” 9 அவர் பேசினார்.

இந்த மாநாட்டின் வார்த்தைகள் நேரடியாக 55 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இறுதியில், 220 நாடுகளையும் எல்லைகளையும் விட அதிகமாக, 98 மொழிகளில் இந்த வார்த்தைகள் கேட்கப்படும், வாசிக்கப்படும்.

படம்
இரண்டாம் வருகை

மகத்துவத்திலும் மகிமையிலும் இரட்சகர் திரும்புகிறபோது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் விசுவாசமிக்க அங்கத்தினர்கள் சகல தேசங்களுக்கு, சகல ஜனங்களுக்கு, சகல இனங்களுக்கு, சகல பாஷைகளுக்கு மற்றும் உலகத்தின் சகல கலாச்சாரங்களுக்கு மத்தியிலிருப்பார்கள்.

சபையின் வளர்ந்துவரும் செல்வாக்கு

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் செல்வாக்கு சபை உறுப்பினர்கள் மேல் மட்டுமே இருக்காது. நம் நாளில் பரலோக வெளிப்பாடுகளினாலும், பரிசுத்த வேதமும் பரிசுத்த ஆவியின் வல்லமையான வரமும் பூமிக்கு மறுஸ்தாபிதம் செய்யப்பட்டதாலும், இயேசு கிறிஸ்துவில் அவநம்பிக்கையின் நிழல்கள் உலகத்தை இருட்டடிப்பு செய்வதால், நாம் மலையில் ஒரு பிரகாசிக்கும் வெளிச்சமாக இருப்போம். மீட்பர் மீதான தங்கள் விசுவாசத்தை உலகம் மறைக்க பலர் அனுமதித்தாலும், நாம் “[நமது] இடத்தை விட்டு நகரமாட்டோம்.”10 நமது உறுப்பினர்களல்லாத கிறிஸ்தவர்கள் நமது பங்கையும் கிறிஸ்து மீதான நமது உறுதியான சாட்சியையும் வரவேற்பார்கள். இப்போது நம்மை சந்தேகத்துடன் பார்க்கும் கிறிஸ்தவர்கள் கூட ஒருநாள் நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த வரப்போகிற நாட்களில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாம் அழைக்கப்படுவோம்.

சபையின் உண்மையான பெயரை முன்னெடுக்க உங்களுடைய உன்னத முயற்சிகளுக்காக உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். “இரட்சகர் சபையின் சரியான பெயரைப் பயன்படுத்துவதில் நமது கடுமையான கவனம் … அதிக விசுவாசம் மற்றும் அதிக ஆவிக்குரிய வல்லமையை அணுக நடத்தும்”11 என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாநாட்டில் தலைவர் நெல்சன் நமக்கு வாக்களித்தார்.

உலகம் முழுவதுமிலுள்ள அர்ப்பணிப்பான சீஷர்களால் இந்த வாக்களிப்பு நிறைவேற்றப்பட்டது.12

சபையின் முழுப்பெயரைப் பகிர்ந்து கொள்வது சிலநேரங்களில் அருவருப்பாக இருந்ததாக அவர் காண்பதாக, கிழக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரர் லாரி அஹோலா ஒப்புக்கொண்டார். ஆனால், தீர்க்கதரிசியின் ஆலோசனையால் அவர் விடாமல் முயன்றார். ஒரு சந்தர்ப்பத்தில், வேறொரு விசுவாசத்தின் சபையின் ஒரு நண்பரை அவர் சந்தித்தார். பின்வருபவை அவருடைய வார்த்தைகள்:

“அறிமுகமானவர் கேட்டார், ‘நீங்கள் மார்மனா?’

“‘நான், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஒரு உறுப்பினர், ஆம்,’ என நான் சொன்னேன். ‘மார்மன் சபை நம்புகிறதா … ?’ என்பதுடன் ஒவ்வொன்றும் ஆரம்பித்து ஏராளமான கேள்விகளை அவர் என்னிடம் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொரு முறையும் ‘[இயேசு] கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையை நாங்கள் நம்புகிறோம்…’ என்ற சொற்றொடருடன் எனது பதிலை நான் ஆரம்பித்தேன்.

“‘மார்மன்’ என்ற தலைப்பை நான் ஏற்றுக்கொள்ளாததை அவர் கவனித்தபோது ‘நீங்கள் மார்மன் இல்லையா?’ என அவர் என்னிடம் நேரடியாகக் கேட்டார்

“மார்மன் யார் என்று அவருக்குத் தெரியுமா என அவரிடம் நான் கேட்டேன், அவருக்குத் தெரியவில்லை. மார்மன் ஒரு தீர்க்கதரிசி, [அவருடன்] தொடர்பிலிருப்பதால் [நான்] கௌரவிக்கப்பட்டேன் என அவரிடம் நான் கூறினேன்.

“‘ஆனால்,’ நான் தொடர்ந்தேன், ‘மார்மன் எனது பாவங்களுக்காக மரிக்கவில்லை. [எனக்காக] மார்மன் கெத்செமனேயில் பாடுபடவில்லை அல்லது சிலுவையில் மரிக்கவில்லை. … இயேசு கிறிஸ்து என் தேவன், என் இரட்சகர். … அவருடைய நாமத்தால் நான் அறியப்பட விரும்புகிறேன்.’ …

“…ஒரு சில விநாடிகளின் அமைதிக்குப் பின் [அறிமுகமானவர் வியப்பில் சொன்னார்,] ‘எனவே, நீங்கள் ஒரு கிறிஸ்தவர்!’”13

படம்
பொது மாநாட்டில் தலைவர் நெல்சன்

தலைவர் நெல்சனின் வார்த்தைகளை நினைவுகூருங்கள்? “கர்த்தருடைய சபையின் சரியான பெயரை மறுஸ்தாபிதம் செய்ய நம்மால் முடிந்ததைச் செய்தால், அவருடைய சபையாகிய இந்த சபை, நாம் ஒருபோதும் காணாத, அவருடைய வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் பிற்காலப் பரிசுத்தவான்களின் தலைகள் மேல் பொழியப்பண்ணுவார் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”14

கர்த்தர் எப்போதுமே வழியைத் திறக்கிறார்

கர்த்தர் எப்போதுமே தம்முடைய வாக்குறுதிகளைக் காத்துக் கொள்கிறார். அவருடைய வேலையை நாம் செய்யும்போது அவர் நமக்காக வழியைத் திறக்கிறார்.

இணைய தளங்களான ChurchofJesusChrist.org மற்றும் ChurchofJesusChrist.com ஆகியவற்றை வாங்குவோம் என்று பல ஆண்டுகளாக நாம் நம்பியிருந்தோம். இரண்டுமே விற்பனைக்கு இல்லை. தலைவர் நெல்சனின் அறிவிப்பின்போது இரண்டும் திடீரெனக் கிடைத்தன. அது ஒரு அற்புதமாயிருந்தது.15

சபையுடன் நீண்டகாலமாக இணைக்கப்பட்டிருந்த பெயர்களைத் திருத்துவதில் எங்களது முயற்சிகளை கர்த்தர் பெரிதாக்கினார்.

விசுவாசத்தோடு முன்னேறும்போது, மார்மன் டாபர்னாக்கல் தேர்ந்திசைக் குழுவின் பெயர், ஆலய சதுக்கத்தில் டாபர்னாக்கல் தேர்ந்திசைக் குழு என மாற்றப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 21 மில்லியன் பார்வைகளை விட அதிகமாக பெறுகிற LDS.org இணையதளம் ChurchofJesusChrist.org என மாற்றப்பட்டது.16 LDS Business கல்லூரி என்ற பெயர், Ensign கல்லூரி என மாற்றப்பட்டது. Mormon.org இணையதளம் ChurchofJesusChrist.org என திருப்பி விடப்பட்டது. “மார்மன்” அல்லது “எல்.டி.எஸ்” என்ற பெயர் இணைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் மறு பெயரிடப்பட்டன. உண்மையுள்ள பிற்காலப் பரிசுத்தவான்கள், தங்கள் வலைத்தளங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகளை சரிசெய்தனர்.

படம்
சபையின் புதிய சின்னம்

இயேசு கிறிஸ்துவை மையப்படுத்துகிற ஒரு புதிய சின்னத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.

“சின்னத்தின் மையத்தில் தோர்வால்ட்சனின் கிறிஸ்டஸ் பளிங்கு சிலையின் பிரதிநிதித்துவம் உள்ளது. அவரண்டை வருகிற அனைவரையும் அரவணைக்க கரங்களை நீட்டுகிற உயிர்த்தெழுந்த, ஜீவிக்கிற கர்த்தரை இது சித்தரிக்கிறது.

“உயிர்த்தெழுப்பப்பட்ட இரட்சகர் கல்லறையிலிருந்து வெளிவருவதை நமக்கு [நினைவூட்டி] அடையாளமாக, இயேசு கிறிஸ்து ஒரு வளைவின் கீழ் நிற்கிறார்.”17

படம்
பல மொழிகளில் சபை பெயர்
படம்
கூடுதல் மொழிகளில் சபை பெயர்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, 50 மொழிகளுக்கும் மேல் அச்சைப் பயன்படுத்துகிறது. உலகம் முழுவதிலும் புதிய டொமைன் பெயர்கள் வாங்கப்பட்டுள்ளன.

மற்றவர்களின் உதவிக்காக பாராட்டுதல்கள்.

நமது சரியான பெயரால் அழைக்கப்பட நமது விருப்பத்தை மதித்த அநேக நல்ல, கருணையுள்ள மக்களை நாம் பாராட்டுகிறோம். “பிற்காலப் பரிசுத்தவான்களைக்”18 குறிப்பிட்டு, ஒரு கத்தோலிக்க கார்டினல் மேற்கோள் காட்டிய ஒரு கட்டுரையை சமீபத்தில் நான் படித்தேன். கிழக்கு அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு கிறிஸ்தவ சபையின் தலைவரை சந்தித்தபோது, அவர் தனது முதல் குறிப்பில் நமது சபையின் முழு பெயரையும் குறிப்பிட்டார், அதைத் தொடர்ந்து, ஒரு முறைக்கும் மேலாக, “இயேசு கிறிஸ்துவின் சபை” என குறிப்பிட்டார்.

நமது பெயருடன் ஆறு வார்த்தைகளைச் சேர்ப்பது ஊடகங்களுக்கு உகந்ததல்ல என்பதை நாங்கள் உணர்ந்தோம், ஆனால் தலைவர் நெல்சன் முன்னறிவித்தபடி, “பொறுப்பான ஊடகங்கள் எங்கள் கோரிக்கைக்கு பதிலளிப்பதில் அனுதாபம் காட்டும்.”19 கலாச்சார, விளையாட்டு, அரசியல் அல்லது சமூக அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அதே சலுகையான, எங்களுக்கு விருப்பமான பெயரைப் பயன்படுத்த எங்களுக்கு சலுகையளித்ததற்கு உங்களுக்கு நன்றி.

நமது ஊழியத்தின் தீவிரத்தை திசைதிருப்ப அல்லது குறைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து எங்களை “மார்மன்கள்” அல்லது “மார்மன் சபை” என்று அழைக்கும் சிலர் இருப்பார்கள். கிட்டத்தட்ட 200 ஆண்டுகால எங்கள் பெயரால் அழைக்கப்படும் எங்கள் விருப்பத்தை மதிக்கும்படி, மரியாதையுடன், நியாயமான மனதுள்ள ஊடகங்களை நாங்கள் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் தைரியம்

சபையின் பெயரை தைரியமாக பிரகடனப்படுத்துகிற ஆயிரம் ஆயிரமான பிற்காலப் பரிசுத்தவான்கள் இருக்கிறார்கள். நமது பங்கை நாம் செய்யும்போது, மற்றவர்கள் பின்பற்றுவார்கள். டஹிட்டியிலின் கதை எனக்குப் பிடிக்கும்.

தலைவர் நெல்சனின் ஆலோசனையைப் பின்பற்ற பத்து வயதான இரியுரா ஜீன் தீர்மானித்தாள்.

“அவர்களுடைய வார இறுதியைப்பற்றி … அவளுடைய பள்ளி வகுப்பில் அவர்கள் விவாதித்தபோது, … சபையைப்பற்றி இரியுரா பேசினாள்.

“அவளுடைய ஆசிரியர் வெயிட்டே பிபோ கேட்டார், ‘ஓ, எனவே நீ ஓரு மார்மன்?’

“இரியுரா தைரியமாக கூறினாள், ‘இல்லை, … நான், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஒரு உறுப்பினர்!’

“அவளுடைய ஆசிரியர் பதிலளித்தார் ‘ஆம், … நீ ஓரு மார்மன்.’

“இரியுரா வலியுறுத்தினாள், ‘இல்லை ஆசிரியரே, நான், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஒரு உறுப்பினர்!’

“இரியுராவின் நம்பிக்கையைக் கண்டு திருமதி பிபோ வியந்து, தனது சபையின் நீண்ட பெயரைப் பயன்படுத்த அவள் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருந்தாள் என்று ஆச்சரியப்பட்டாள். [சபையைப்பற்றி அதிகமாய் கற்றுக்கொள்ள அவள் தீர்மானித்தாள்.]

“[பின்னர், சகோதரி] வெயிட்டே பிபோ ஞானஸ்நானம் பெற்று தலைவர் நெல்சனின் ஆலோசனைக்கு இரியுரா செவிசாய்த்ததற்கு,” [அவள் நன்றியைத் தெரிவித்தாள்]20

படம்
அவளுடைய மாணவியால் சகோதரி சபையைப்பற்றி அறிந்துகொண்டாள்

“சபையின் பெயர் மாற்றக்கூடியதல்ல.” விசுவாசத்தில் நாம் முன்னேறிச் செல்வோமாக. அவருடைய ஜீவனுள்ள தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய ஆலோசனையை நாம் விருப்பத்துடன் பின்பற்றும்போது, குறிப்பாக அது நம்முடைய ஆரம்ப சிந்தனைக்கு எதிராயிருந்து, தாழ்மை மற்றும் தியாகம் தேவைப்பட்டால், கூடுதல் ஆவிக்குரிய வல்லமையுடன் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து, நம்மை ஆதரிக்கவும் நம்மோடு நிற்கவும் அவருடைய தூதர்களை அனுப்புகிறார்.21 கர்த்தருடைய நிச்சயத்தையும் ஒப்புதலையும் நாம் பெறுகிறோம்.

நமது அன்பிற்குரிய தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சனின் மேலிருக்கிற பரலோகத்தின் வல்லமைக்கு நானே கண்கண்ட சாட்சி. கர்த்தரைப் பிரியப்படுத்தி நம் பரலோக பிதாவின் பிள்ளைகளை ஆசீர்வதிப்பது அவருடைய மிகுந்த உண்மையான விருப்பம். அவர்மீது கர்த்தருடைய அன்பை, பரிசுத்தமான, தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நான் சாட்சியளிக்கிறேன். அவர் தேவனின் தீர்க்கதரிசி.

தேவ குமாரனாகிய இயேசுவே கிறிஸ்து என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. 3 நேபி 27:7–9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:4 பார்க்கவும்.

  2. Russell M. Nelson, in “The Name of the Church,” Newsroom, Aug. 16, 2018, newsroom.ChurchofJesusChrist.org.

  3. President Nelson Discusses the Name of the Church,” Newsroom, Aug. 21, 2018, newsroom.ChurchofJesusChrist.org.

  4. Russell M. Nelson, “The Correct Name of the Church,” Liahona, Nov. 2018, 87.

  5. Russell M. Nelson, “The Temple and Your Spiritual Foundation,” Liahona, Nov. 2021, 94.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:32.

  7. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 137.

  8. 2 நேபி 27:26.

  9. 1 நேபி 15:18

  10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:17.

  11. Russell M. Nelson, “Becoming Exemplary Latter-day Saints,” Liahona, Nov. 2018, 114.

  12. Henry B. Eyring, “Thus Shall My Church Be Called,” Liahona, Oct. 2021, 6–9 பார்க்கவும்.

  13. Lauri Ahola, “Using the Full Name of the Church Was Awkward but Worth It” (digital-only article), Liahona, Apr. 2020, ChurchofJesusChrist.org.

  14. Russell M. Nelson, “The Correct Name of the Church,” 89.

  15. சபையின் Intellectual சொத்து அலுவலகம் 2006 முதல் ChurchofJesusChrist.org ன் டொமைன் பெயரை கண்காணித்து வந்தது, அது கிடைக்கவில்லை. தலைவர் நெல்சன் அறிவித்த அதே நேரத்தில் அது விற்பனைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் சபை டொமைன் பெயரை மிகக் குறைந்த தொகையில் சபை வாங்கியது.

    அதே முறையில், ChurchofJesusChrist.com என்ற டொமைன் பெயரின் நிலை மற்றும் கிடைக்கும் தன்மையை சபை 2011 முதல் கண்காணிக்கத் தொடங்கியது. ஆச்சரியப்படும் வகையில், ஆகஸ்டு 2018ல் அதுவும் கிடைக்கப்பெற்று வாங்கப்பட்டது.

  16. அக்டோபர் 2018 பொது மாநாட்டில் தலைவர் நெல்சன் சொன்னார்:

    “சகோதர சகோதரிகளே, சபையின் சரியான பெயரை மறுஸ்தாபிதம் செய்வதற்கு எதிராக அங்கே அநேக உலகப்பிரகாரமான விவாதங்களிருந்தன. நாம் வாழுகிற டிஜிட்டல் உலகத்திலினாலும், ஏறக்குறைய உடனடியாக, கர்த்தருடைய சபையைப்பற்றிய தகவலையும் சேர்த்து, நமக்குத் தேவையான தகவலைக் கண்டுபிடிக்க உதவுகிற தேடுதல் இயந்திரத்தின் தேர்வுமுறையினாலும், இந்த நேரத்தில் திருத்தம் புத்திசாலித்தனமானதல்ல என விமர்சகர்கள் சொல்லுகிறார்கள்.

    “… கர்த்தருடைய சபையின் சரியான பெயரை மறுஸ்தாபிக்க நம்மால் முடிந்ததைச் செய்தால், இந்த சபையில் இருக்கும் அவர், அவருடைய வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் பிற்காலப் பரிசுத்தவான்களின் தலைகள் மேல் பொழியப்பண்ணுவார் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”(”The Correct Name of the Church,” 88, 89).

    LDS.org ஐ ChurchofJesusChrist.org க்கு மாற்றியதிலிருந்து, டொமைன் அதிகாரம் (தேடுபொறிகளில் தரவரிசைப்படுத்தும் தளத்தின் திறன் மற்றும் சக்தி) முன்பு இருந்ததை விட வலிமையானது. உதாரணமாக, ChurchofJesusChrist.org முகப்புப்பக்கம் இப்போதும் ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளது, அமெரிக்காவில் கூகுளில் “சபை” என்ற வார்த்தையை யாராவது அதிகமாய் தேடும்போது, முன்பு இந்த வேறுபாட்டை அது கோரமுடியவில்லை.

  17. Russell M. Nelson, “Opening the Heavens for Help,” Liahona, May 2020, 73.

  18. Tad Walch, “‘If We Can’t Get Along, It’s Downright Sinful’: The Partnership between Catholics and Latter-day Saints,” Deseret News, July 1, 2021, deseret.com பார்க்கவும்.

  19. Russell M. Nelson, “The Correct Name of the Church,” 89.

  20. The Correct Name of The Church: A Tahitian Story,” Sept. 15, 2019, news-nz.ChurchofJesusChrist.org.

  21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:88 பார்க்கவும்.