பொது மாநாடு
பரிசுத்தமான சத்தியம், பரிசுத்தமான கோட்பாடு மற்றும் பரிசுத்தமான வெளிப்பாடு
அக்டோபர் 2021 பொது மாநாடு


பரிசுத்தமான சத்தியம், பரிசுத்தமான கோட்பாடு மற்றும் பரிசுத்தமான வெளிப்பாடு

தயவுசெய்து இந்த மாநாட்டை அவருடைய ஊழியர்களின் மூலம் கர்த்தரிடமிருந்து வரும் செய்திகளை ருசித்துப் பார்க்கும் நேரமாக ஆக்கவும்.

என் அன்புள்ள சகோதர சகோதரிகளே, பொது மாநாட்டுக்கு வரவேற்கிறோம்! உங்களுடன் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி! கடந்த ஆறு மாதங்களில் ஏறக்குறைய நிரந்தரமாக நீங்கள் ல் என் மனதில் இருந்தீர்கள். நான் உங்களைப்பற்றியும் உங்களுக்காகவும் ஜெபித்தேன். சமீபத்திய வாரங்களில், இந்த மாநாடு அந்த ஆசீர்வாதங்களைத் தேடும் அனைவருக்கும் நினைத்துப் பார்த்தல் மற்றும் வெளிப்பாட்டின் நேரமாக இருக்க வேண்டும் என்று நான் தீவிரமாக ஜெபித்தேன்.

மாநாட்டு மையத்திலிருந்து மீண்டும் உங்களுடன் பேசுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன, ஆனால் டாபர்னக்கிள் இசைக்குழுவின் சில உறுப்பினர்கள் இருப்பது ஒரு அற்புதமான முன்னோக்கிய படியாகும். நீங்கள் எங்கிருந்தாலும் இந்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

நாம் இன்னும் கோவிட் -19ன் அழிவுகள் மற்றும் அதன் மாறுபாடுகளைக் கையாள்கிறோம். எங்கள் ஆலோசனையைப் பின்பற்றுவதற்கும், உங்கள் சொந்த சமுதாயத்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுவதற்கும் நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்.

கர்த்தர் வழிநடத்துகிறபடி ஒவ்வொரு பொது மாநாட்டையும் நாங்கள் கூட்டுகிறோம்.1 பல ஆண்டுகளாக வடிவம் மாறுபடுகிறது. நான் மிகவும் இளமையாக இருந்தபோது, மாநாடு மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடித்தது. பின்னர், மாநாடு இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டது. ஒவ்வொரு செய்தியும், அன்றும் இன்றும், தீவிரமான ஜெபம் மற்றும் அதிக ஆவிக்குரிய ஆயத்தத்தின் விளைவாகும்.

சபையின் பொது அதிகாரிகளும் பொது அலுவலர்களும் தங்கள் செய்திகளை நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, அவருடைய இரக்கம் மற்றும் அவரது எல்லையற்ற மீட்பின் வல்லமை ஆகியவற்றின்மீது கவனம் செலுத்துவார்கள். உலக வரலாற்றில் நம் இரட்சகரைப்பற்றிய அறிவு, தனிப்பட்ட முறையில் அதிக முக்கியமானதாக, ஒவ்வொரு மனித ஆத்துமாவுக்கும் பொருத்தமானதான ஒரு காலம் ஒருபோதும் இருந்ததில்லை. நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும், அவருடைய போதனைகளுக்குச் செவிகொடுக்கவும் தீர்மானித்தால் உலகெங்கிலும் உள்ள அழிவுக்கேதுவான மோதல்களும் நமது தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ளவைகளும் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அந்த மனநிலையில், இந்த மாநாட்டின் போது மூன்று காரியங்களைக் கேட்க நான் உங்களை அழைக்கிறேன்: பரிசுத்தமான சத்தியம், கிறிஸ்துவின் பரிசுத்தமான கோட்பாடு மற்றும் பரிசுத்தமான வெளிப்பாடு. சிலரின் சந்தேகங்களுக்கு மாறாக, உண்மையில் சரி மற்றும் தவறு என்று ஒன்று இருக்கிறது. உண்மையாகவே முழுமையான சத்தியமாகிய, நித்திய சத்தியம் உள்ளது. சத்தியத்திற்காக எங்கு திரும்புவது என்பது மிகச் சிலருக்குத் தெரியும் என்பது நம் காலத்தின் கொள்ளை நோய்களில் ஒன்றாகும்.2 இன்றும் நாளையும் நீங்கள் கேட்கப்போவது பரிசுத்தமான சத்தியத்தை உள்ளடக்கியது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

கிறிஸ்துவின் தூய கோட்பாடு வல்லமையானது. அதைப் புரிந்துகொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும், அதை தனது வாழ்க்கையில் செயல்படுத்த முற்படுகிற அவன் அல்லது அவளின் வாழ்க்கையையும் மாற்றுகிறது கிறிஸ்துவின் கோட்பாடு உடன்படிக்கை பாதையைக் கண்டுபிடித்து அதில் தரித்திருக்க நமக்கு உதவுகிறது. அந்த குறுகிய ஆனால் நன்கு வரையறுக்கப்பட்ட பாதையில் தரித்திருப்பது இறுதியில் தேவனிடம் உள்ள அனைத்தையும் பெற நமக்கு தகுதி அளிக்கும்.3 நமது பிதாவிடம் இருக்கும் அனைத்தையும் விட வேறு எதுவும் மதிப்புக்குரியது அல்ல!

இறுதியாக, உங்கள் இருதயத்தில் உள்ள கேள்விகளுக்கான பரிசுத்த வெளிப்பாடு இந்த மாநாட்டை பலனளிக்கும் மற்றும் மறக்க முடியாததாக மாற்றும். இந்த இரண்டு நாட்களிலும் கர்த்தர் சொல்ல விரும்புகிறதைநீங்கள் கேட்க உங்களுக்கு உதவ பரிசுத்த ஆவியின் ஊழியத்தை நீங்கள் இன்னும் நாடவில்லை என்றால், இப்போது அதைச் செய்ய நான் உங்களை அழைக்கிறேன். தயவுசெய்து இந்த மாநாட்டை அவருடைய ஊழியர்களின் மூலம் கர்த்தரிடமிருந்து வரும் செய்திகளை ருசித்துப் பார்க்கும் நேரமாக ஆக்கவும். அவற்றை உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

இதுதான், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை. நாம் அவரது உடன்படிக்கையின் ஜனம். கர்த்தர் தனது வேலையை அதன் நேரத்தில் விரைவுபடுத்துவதாக அறிவித்தார்,4 மேலும் அவர் அதை தொடர்ந்து அதிகரித்து வரும் வேகத்தில் செய்கிறார். அவருடைய பரிசுத்த பணியில் பங்கேற்க நாம் சிலாக்கியம் பெற்றுள்ளோம்.

அதிக வெளிச்சம், அறிவு மற்றும் சத்தியத்தைத் தேடும் அனைவர்மீதும் நான் ஒரு ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பை, இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் தெரிவித்துக்கொள்கிறேன், ஆமென்.