பொது மாநாடு
நித்திய சத்தியம்
அக்டோபர் 2023 பொது மாநாடு


நித்திய சத்தியம்

சத்தியத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற நமது தேவை ஒருபோதும் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை!

சகோதர சகோதரிகளே, பிதாவாகிய தேவன் மீதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீதும் நீங்கள் கொண்ட பக்திக்கு நன்றி, மேலும் ஒருவருக்கொருவர் மீதான உங்கள் அன்புக்கும் சேவைக்கும் நன்றி. நீங்கள் உண்மையிலேயே விசேஷித்தவர்!

முன்னுரை

நானும் என் மனைவி ஆனும், முழுநேர ஊழியம் செய்வதற்கான அழைப்பைப் பெற்ற பிறகு, எங்கள் குடும்பம் களத்துக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு ஊழியக்காரரின் பெயரையும் அறிந்துகொள்ள தீர்மானித்தோம். நாங்கள் புகைப்படங்களைப் பெற்று, ஃபிளாஷ் கார்டுகளை உருவாக்கி, முகங்களைப் படிக்கவும், பெயர்களை மனப்பாடம் செய்யவும் தொடங்கினோம்.

நாங்கள் வந்தவுடன், ஊழியக்காரர்களுடன் அறிமுக மாநாடுகளை நடத்தினோம். நாங்கள் கலந்துகொண்டபோது, எங்கள் ஒன்பது வயது மகன் சொல்வதை நான் கேட்டேன்:

“உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, சாம்!”

“ரேச்சல், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”

“ஆஹா, டேவிட், நீங்கள் உயரமாக இருக்கிறீர்கள்!”

பதற்றத்துடன், நான் எங்கள் மகனிடம் சென்று, “ஏய், ஊழியக்காரர்களை மூப்பர் அல்லது சகோதரி என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்” என்று கிசுகிசுத்தேன்.

அவன் என்னை ஒரு புதிராகப் பார்த்து, “அப்பா, அவர்களின் பெயர்களை நாம் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்” என்றான். எங்கள் மகன் தனது புரிதலின் அடிப்படையில் தான் நினைத்ததைச் செய்தான்.

எனவே, இன்றைய உலகில் உண்மையைப் பற்றிய நமது புரிதல் என்ன? வலுவான கருத்துக்கள், ஒருசார்பான அறிக்கை மற்றும் முழுமையற்ற தரவு ஆகியவற்றால் நாம் தொடர்ந்து அலைக்களிக்கப்படுகிறோம். அதே நேரத்தில், தகவல்களின் ஆதாரங்கள் மற்றும் அளவு வேகமாக வளர்ந்து வருகிறது. சத்தியத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற நமது தேவை இப்போதைவிட முக்கியமானதாக இருந்ததில்லை!

தேவனுடன் ஒரு உறவை ஏற்படுத்தவும் பலப்படுத்தவும், அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறியவும், நமது தெய்வீக ஆற்றலை அடையவும் சத்தியம் முக்கியமானது. இன்று, பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்வோமாக:

  • சத்தியம் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

  • அதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கிறோம்?

  • நாம் சத்தியத்தைக் கண்டறிந்தால், அதை எப்படிப் பகிரலாம்?

சத்தியமே நித்தியம்

வேதத்தில் கர்த்தர் நமக்கு போதித்ததாவது, “அவைகள் இருக்கிறபடியே, அவைகள் இருந்தபடியே, அவைகள் வரப்போகிறபடியே சத்தியம் காரியங்களைப்பற்றிய ஞானமாகும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:24). இது “சிருஷ்டிக்கப்படவோ, உண்டாக்கப்படவோயில்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:29) மற்றும் “முடிவு இல்லை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:66),1 சத்தியம் முழுமையானது, நிலையானது மற்றும் மாறாதது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சத்தியமே நித்தியம்.2

சத்தியம், ஏமாற்றத்தைத் தவிர்க்கவும்,3 தீமையிலிருந்து நன்மையை அறியவும், 4 பாதுகாப்பைப் பெறவும்,5 மற்றும் ஆறுதலையும் குணப்படுத்துதலையும் பெறவும் உதவுகிறது.6 சத்தியம் நம் செயல்களையும் வழிநடத்தும்,7 நம்மை விடுதலையாக்கும்,8 பரிசுத்தப்படுத்தும்,9 நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.10

தேவன் நித்திய சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்.

இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர், தீர்க்கதரிசிகள் மற்றும் நம்மை உள்ளடக்கிய வெளிப்படுத்தும் உறவுகளின் வலைப்பின்னல் மூலம் நித்திய சத்தியத்தை நமக்கு தேவன், வெளிப்படுத்துகிறார். இந்த செயல்பாட்டில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் வகிக்கும் தனித்துவமான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாத்திரங்களைப் பற்றி நான் கலந்துரையாடுகிறேன்.

முதலாவதாக, தேவன் எல்லா நித்திய சத்தியத்துக்கும் ஆதாரமாக இருக்கிறார்.11 அவரும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் 12, சத்தியத்தை பூரணமாக புரிந்துகொண்டு எப்போதும் உண்மையான கொள்கைகள் மற்றும் நியாயப்பிரமாணங்களுக்கு இசைவாக செயல்படுகிறார்கள்.13 இந்த வல்லமை அவர்களை உலகங்களை உருவாக்கவும் ஆளவும் 14 அத்துடன் நம் ஒவ்வொருவரையும் முழுமையாக நேசிக்கவும், வழிநடத்தவும், வளர்க்கவும் அனுமதிக்கிறது.15 அவர்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை நாம் அனுபவித்து மகிழ நாம் சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.16 அவர்கள் நேரில் அல்லது பரிசுத்த ஆவியானவர், தேவதூதர்கள் அல்லது ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் போன்ற தூதுவர்கள் மூலமாக சத்தியத்தை வழங்கலாம்.

இரண்டாவதாக, பரிசுத்த ஆவியானவர் எல்லா சத்தியத்தைக் குறித்தும் சாட்சியமளிக்கிறார்.17 அவர் நமக்கு நேரடியாக சத்தியங்களை வெளிப்படுத்துகிறார், மற்றவர்கள் கற்பிக்கும் சத்தியத்தின் சாட்சிகளை வெளிப்படுத்துகிறார். ஆவியிடமிருந்து எண்ணங்கள் குறிப்பாக நம் மனதிற்கு சிந்தனைகளாகவும், நம் இருதயங்களுக்கு உணர்வுகளாகவும் வருகின்றன.18

மூன்றாவதாக, தீர்க்கதரிசிகள் தேவனிடமிருந்து சத்தியத்தைப் பெற்று, அந்த சத்தியத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.19 வேதங்களில் உள்ள கடந்தகால தீர்க்கதரிசிகளிடமிருந்தும்,20 பொது மாநாட்டில் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்தும் மற்ற அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு முறைகள் மூலமும் நாம் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறோம்.

இறுதியாக, இந்த செயல்பாட்டில் நீங்களும் நானும் முக்கிய பங்கு வகிக்கிறோம். நாம் சத்தியத்தைத் தேடவும், அங்கீகரிக்கவும், செயல்படவும் தேவன் எதிர்பார்க்கிறார். முடிவில், சத்தியத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் நம்முடைய திறன், பிதா மற்றும் குமாரனுடனான நமது உறவின் வலிமை, பரிசுத்த ஆவியின் செல்வாக்கிற்கு நாம் பதிலளிக்கும் தன்மை மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகளுடன் நாம் இணைதல் ஆகியவற்றைப் பொறுத்தது.

சத்தியத்திலிருந்து நம்மைத் தடுக்க சாத்தான் செயல்படுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சத்தியம் இல்லாமல் நாம் நித்திய ஜீவனைப் பெற முடியாது என்பதை அவன் அறிவான். தேவனால் சொல்லப்பட்டவற்றிலிருந்து நம்மைக் குழப்புவதற்கும் திசைதிருப்புவதற்கும் அவன் உலக தத்துவங்களுடன் சத்தியத்தின் இழைகளை நெசவு செய்கிறான்.21

நித்திய சத்தியத்தைத் தேடுதல், அங்கீகரித்தல் மற்றும் பயன்படுத்துதல்

நாம் நித்திய சத்தியத்தைத் தேடும்போது,22 பின்வரும் இரண்டு கேள்விகள், ஒரு கருத்து தேவனிடமிருந்து வந்ததா அல்லது வேறு ஆதாரத்திலிருந்து வந்ததா என்பதை அறிய உதவும்:

  • இந்த கருத்து வேதங்களில் அல்லது ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளில் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறதா?

  • பரிசுத்த ஆவியின் சாட்சியால் கருத்து உறுதிப்படுத்தப்பட்டதா?

தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் நித்திய சத்தியங்களை வெளிப்படுத்துகிறார், பரிசுத்த ஆவியானவர் அந்த சத்தியங்களை தனிப்பட்ட முறையில் நமக்கு உறுதிப்படுத்துகிறார் மற்றும் அதை உபயோகப்படுத்த உதவி செய்கிறார்23 இந்த ஆவிக்குரிய பதிவுகள் வரும்போது அவற்றைப் பெற நாம் தயாராக இருக்க வேண்டும்.24 நாம் தாழ்மையுடன்,25 உண்மையாக ஜெபித்து, தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது,26 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, ஆவியின் சாட்சியை நாம் அதிகமாக ஏற்றுக்கொள்கிறோம்.27

பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஒரு குறிப்பிட்ட சத்தியத்தை உறுதிப்படுத்தியவுடன், அந்தக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரும்போது நமது புரிதல் ஆழமாகிறது. அந்தக் கொள்கையை நாம் தொடர்ந்து கடைபிடிக்கும்போது, அந்த சத்தியத்தைப் பற்றிய உறுதியான அறிவை காலப்போக்கில் பெறுகிறோம்.28

உதாரணமாக, நான் தவறுகளைச் செய்திருக்கிறேன் மற்றும் மோசமான தேர்வுகளுக்காக வருத்தப்பட்டேன். ஆனால் ஜெபம், படிப்பு மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் ஆகியவற்றின் மூலம், மனந்திரும்புதல் கொள்கையின் சாட்சியைப் பெற்றேன்.29 நான் தொடர்ந்து மனந்திரும்பும்போது, மனந்திரும்புதல் பற்றிய எனது புரிதல் வலுவடைந்தது. நான் தேவனுடனும் அவருடைய குமாரனுடனும் நெருக்கமாக உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் மனந்திரும்புதலின் ஆசீர்வாதங்களை நான் அனுபவிப்பதால், இயேசு கிறிஸ்துவின் மூலம் பாவம் மன்னிக்கப்படும் என்பதை நான் இப்போது அறிகிறேன்.30

சத்தியம் இன்னும் வெளிவராத போது தேவனை நம்புதல்

அப்படியானால், இதுவரை வெளிவராத சத்தியத்தை உண்மையாகத் தேடும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வராத பதில்களுக்காக ஏங்கும் நம்மிடையேயுள்ளோர் மீது எனக்கு மிகுந்த மனதுருக்கம் உண்டு.

ஜோசப் ஸ்மித்துக்கு, கர்த்தர் ஆலோசனை கூறினார், இந்தக் காரியத்தைக் குறித்து சகல விஷயங்களையும் உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு ஏற்றதென்று நான் காண்கிறவரை நீ பேசாதிருப்பாயாக. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:37).

மேலும் எம்மா ஸ்மித்திடம், “நீ பார்க்காத காரியங்கள் குறித்து முறுமுறுக்காதே, ஏனெனில் அவைகள் உன்னிடமிருந்தும் உலகத்திலிருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, இது வரப்போகிற ஒரு நேரம் வரை எனது ஞானமாய் இருக்கிறது.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:4)

நானும் இதயப்பூர்வமான கேள்விகளுக்கு விடை தேடினேன். பல பதில்கள் வந்துள்ளன, சில வரவில்லை.31 தேவனுடைய ஞானத்தையும் அன்பையும் நம்பி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, நமக்குத் தெரிந்தவற்றைச் சார்ந்து நாம் காத்துக்கொண்டிருக்கும்போது, நாம் அறிந்தவற்றை சார்ந்திருந்து, அவர் எல்லாவற்றின் சத்தியத்தையும் வெளிப்படுத்தும் வரை அவர் நமக்கு சமாதானம் காண உதவுகிறார்.32

கோட்பாடு மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொள்வது

சத்தியத்தைத் தேடும்போது, கோட்பாட்டுக்கும் கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கோட்பாடு என்பது தேவனின் தன்மை, இரட்சிப்பின் திட்டம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலி போன்ற நித்திய சத்தியங்களைக் குறிக்கிறது. கொள்கை என்பது தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் கோட்பாட்டின் தீர்க்கதரிசன பயன்பாடு ஆகும். கொள்கைகள் தலைவர்கள் சபையை ஒழுங்கான முறையில் நிர்வகிக்க உதவுகின்றன.

கோட்பாடு ஒருபோதும் மாறாது என்றாலும், கொள்கைகள் அவ்வப்போது சரிசெய்யப்படுகின்றன. கர்த்தர் தம்முடைய கோட்பாட்டை நிலைநிறுத்தவும் மற்றும், அவருடைய பிள்ளைகளின் தேவைக்கேற்ப சபைக் கொள்கைகளை சீறாக்கவும் அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் செயல்படுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக, சில சமயங்களில் கொள்கையை கோட்பாட்டுடன் இணைக்கிறோம். வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், கொள்கைகள் மாறும்போது நாம் ஏமாற்றமடைந்து, தேவனின் ஞானத்தை அல்லது தீர்க்கதரிசிகளின் வெளிப்படுத்தும் பாத்திரத்தை சிலர் கேள்விக்குட்படுத்தும் அபாயம் உள்ளது.33

நித்திய சத்தியத்தைக் கற்பித்தல்

நாம் தேவனிடமிருந்து சத்தியத்தைப் பெறும்போது, அந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் நம்மை ஊக்குவிக்கிறார்.34 நாம் ஒரு வகுப்பில் கற்பிக்கும்போது, ஒரு குழந்தைக்கு வழிகாட்டும்போது அல்லது ஒரு நண்பருடன் சுவிசேஷ சத்தியங்களைப் பற்றி விவாதிக்கும்போது இதைச் செய்கிறோம்.

பரிசுத்த ஆவியின் மனமாற்றும் வல்லமையை அழைக்கும் விதத்தில் சத்தியத்தைப் போதிப்பதே நமது நோக்கம்.35 கர்த்தரிடமிருந்தும் அவருடைய தீர்க்கதரிசிகளிடமிருந்தும் உதவும் எளிய, சுருக்கமான அழைப்புகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.36

  1. பரலோக பிதா, இயேசு கிறிஸ்து மற்றும் அவர்களின் அடிப்படைக் கோட்பாடு ஆகியவற்றை மையப்படுத்துங்கள்.37

  2. வேதங்களிலும் பிற்கால தீர்க்கதரிசிகளின் போதனைகளிலும் நிலைத்திருங்கள்.38

  3. பல அதிகாரபூர்வமான சாட்சிகள் மூலம் நிறுவப்பட்ட கோட்பாட்டை சார்ந்திருங்கள்.39

  4. ஊகங்கள், தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது உலகப்பிரகார யோசனைகளைத் தவிருங்கள்.40

  5. சமநிலையான புரிதலை வளர்ப்பதற்கு தொடர்புடைய சுவிசேஷ சத்தியங்களின் சூழலில் ஒரு கோட்பாட்டைக் கற்பிக்கவும்.41

  6. ஆவியின் செல்வாக்கை அழைக்கும் கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தவும்.42

  7. தவறான புரிதலைத் தவிர்க்க தெளிவுடன் தொடர்பு கொள்ளுங்கள்.43

அன்போடு சத்தியத்தைப் பேசுதல்

சத்தியத்தை எப்படிக் கற்பிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. “அன்புடன் சத்தியத்தைப் பேச” பவுல் நம்மை ஊக்குவித்தான் (எபேசியர் 4:14–15 பார்க்கவும்). கிறிஸ்துவைப் போன்ற அன்புடன் தெரிவிக்கப்படும் போது சத்தியம் மற்றொருவரை ஆசீர்வதிக்க சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதே இதன் பொருள்.44

அன்பு இல்லாமல் கற்பிக்கப்படும் சத்தியம், தீர்ப்பு, அதைரியப்படுத்தல் மற்றும் தனிமை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். இது அடிக்கடி மனக்கசப்பு மற்றும் பிளவு, பிணக்குக்கும் கூட வழிவகுக்கிறது. மாறாக, உண்மை இல்லாத அன்பு வெறுமையானது மற்றும் வளர்ச்சியின் வாக்குத்தத்தம் இல்லாதது.

நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு சத்தியம் மற்றும் அன்பு இரண்டும் அவசியம்.45 நித்திய ஜீவனைப் பெறுவதற்குத் தேவையான கோட்பாடு, கொள்கைகள் மற்றும் நியாயப்பிரமாணங்களை சத்தியம் வழங்குகிறது, அன்பில் உண்மையைப் பேசுவது, சத்தியத்தைத் தழுவி செயல்படுவதற்குத் தேவையான உந்துதலை உருவாக்குகிறது.

நித்திய சத்தியத்தை அன்புடன் பொறுமையாக எனக்குக் கற்பித்த மற்றவர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

முடிவுரை

முடிவில், என் ஆத்துமாவுக்கு நங்கூரமாக மாறிய நித்திய சத்தியங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இன்று கலந்துரையாடப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த சத்தியங்களைப் பற்றிய அறிவைப் பெற்றுள்ளேன்.

தேவன் நம்முடைய அன்பான பரலோக பிதா என்பதை நான் அறிவேன்.46 அவர் அனைத்தையும் அறிந்தவர்,47 அனைத்து வல்லமை வாய்ந்தவர்,48 மற்றும் பரிபூரண அன்பானவர்.49 நித்திய ஜீவனைப் பெறவும் அவரைப் போல ஆகவும் உதவும் திட்டத்தை அவர் உருவாக்கினார்.50

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர் நமக்கு உதவுவதற்காக அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.51 பிதாவின் சித்தத்தின்படி செய்ய52 ஒருவரையொருவர் நேசிக்கும்படி இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார்.53 அவர் நம்முடைய பாவங்களுக்குப் பாவநிவர்த்தி செய்து,54 சிலுவையில் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார்.55 அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மரித்தோரிலிருந்து எழுந்தார்56 கிறிஸ்து மற்றும் அவருடைய கிருபையின் மூலம், நாம் உயிர்த்தெழுப்பப்படுவோம்,57 நாம் மன்னிக்கப்படலாம்,58 மற்றும் நாம் துன்பத்தில் வலிமை காணலாம்.59

அவருடைய பூலோக ஊழியத்தின் போது, இயேசு தம்முடைய சபையை நிறுவினார்.60 காலப்போக்கில், அந்த சபை மாற்றப்பட்டது, சத்தியங்கள் இழக்கப்பட்டன.61 தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் இயேசு கிறிஸ்து தனது சபையையும், சுவிசேஷத்தின் எளிய மற்றும் விலையேறப்பெற்ற சத்தியங்களையும் மறுஸ்தாபிதம் செய்தார்.62 இன்றும், கிறிஸ்து ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் மூலம் தனது சபையை தொடர்ந்து வழிநடத்துகிறார்.63

நாம் கிறிஸ்துவிடம் வரும்போது, நாம் இறுதியில் “அவரில் பூரணப்படலாம்” (மரோனி 10:32), “மகிழ்ச்சியின் ஒரு முழுமையை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:33) பெறலாம், மேலும் “பிதாவுக்குள்ள சகலமும் பெறலாம்” என்பதை நான் அறிவேன்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:38). இந்த நித்திய சத்தியங்கள் குறித்து நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் சாட்சி கொடுக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. சங்கீதம் 117:2 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:39ஐயும் பார்க்கவும்.

  2. சிலரின் சந்தேகங்களுக்கு மாறாக, உண்மையில் சரி மற்றும் தவறு என்று ஒன்று இருக்கிறது. உண்மையாகவே முழுமையான சத்தியமாகிய, நித்திய சத்தியம் உள்ளது. நம் நாளின் வாதைகளில் ஒன்று என்னவென்றால், சத்தியத்திற்காக எங்கு திரும்புவது என்பது மிகச் சிலருக்கே தெரியும். (Russell M. Nelson, “Pure Truth, Pure Doctrine, and Pure Revelation,” Liahona, Nov. 2021, 6).

  3. ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:37 பார்க்கவும்.

  4. மரோனி 7:19 பார்க்கவும்.

  5. 2 நேபி 1:9 மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17:8 பார்க்கவும்.

  6. யாக்கோபு 2:8 பார்க்கவும்.

  7. சங்கீதம் 119:105; 2 நேபி 32:3 பார்க்கவும்.

  8. யோவான் 8:32; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:8 பார்க்கவும்.

  9. யோவான் 17:17 பார்க்கவும்.

  10. 2 நேபி 31:20 பார்க்கவும்.

  11. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:11–13; 93:36 பார்க்கவும்.

  12. யோவான் 5:19–20; 7:16; 8:26; 18:37; மோசே 1:6 பார்க்கவும்.

  13. ஆல்மா 42:12–26; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:41. பார்க்கவும்.

  14. மோசே 1:30–39 பார்க்கவும்.

  15. 2 நேபி 26:24 பார்க்கவும்.

  16. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 82:8–9 பார்க்கவும்.

  17. யோவான் 16:13; யாக்கோபு 4:13; மரோனி 10:5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:14; 75:10; 76:12; 91:4; 124:97 பார்க்கவும்.

  18. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:22–23; 8:2–3 பார்க்கவும்.

  19. எரேமியா 1:5, 7; ஆமோஸ் 3:7; மத்தேயு 28:16–20; மரோனி 7:31; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:38; 21:1–6; 43:1–7 பார்க்கவும். ஒரு தீர்க்கதரிசி என்பவர் “அழைக்கப்பட்டவர் மற்றும் தேவனுக்காகப் பேசுபவர். தேவ தூதராக, ஒரு தீர்க்கதரிசி தேவனிடமிருந்து கட்டளைகள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் வெளிப்பாடுகளைப் பெறுகிறார். தேவனின் விருப்பத்தையும் உண்மையான தன்மையையும் மனிதகுலத்திற்கு தெரியப்படுத்துவதும், அவர்களுடன் அவர் கையாள்வதன் அர்த்தத்தைக் காண்பிப்பதும் அவருடைய பொறுப்பு. ஒரு தீர்க்கதரிசி பாவத்தை கண்டித்து அதன் விளைவுகளை முன்னறிவிக்கிறார். அவர் நீதியைப் போதிப்பவர். சில சமயங்களில், மனித குலத்தின் நலனுக்காக எதிர்காலத்தை முன்னறிவிக்க தீர்க்கதரிசிகள் தூண்டப்படலாம். இருப்பினும், கிறிஸ்துவைப் பற்றி சாட்சி கொடுப்பதே அவருடைய முதன்மையான பொறுப்பு. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவர் இன்று பூமியில் தேவனின் தீர்க்கதரிசி ஆவார். பிரதான தலைமையியின் உறுப்பினர்கள் மற்றும் பன்னிரு அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களாக ஆதரிக்கப்படுகின்றனர்.(Guide to the Scriptures, “Prophet,” Gospel Library). இந்த கொள்கைகளின் எடுத்துக்காட்டுகள் ஆதாமின் வாழ்க்கையில் காணப்படுகின்றன (மோசே 6:51–62 பார்க்கவும்), ஏனோக்கு (மோசே 6:26–36 பார்க்கவும்), நோவா(மோசே 8:19, 23–24 பார்க்கவும்), ஆபிரகாம் (ஆதியாகமம் 12:1–3;ஆபிரகாம் 2:8–9),), மோசே (யாத்திராகமம் 3:1–15; மோசே 1:1–6, 25–26 பார்க்கவும்), பேதுரு ( மத்தேயு 16:13–19பார்க்கவும்), மேலும் ஜோசப் ஸ்மித் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5:6–10; 20:2; 21:4–6 பார்க்கவும்).

  20. 2 தீமோத்தேயு 3:16 பார்க்கவும்.

  21. யோவான் 8:44; 2 நேபி 2:18; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:39; மோசே 4:4 பார்க்கவும்.

  22. 1 நேபி 10:19 பார்க்கவும். நாம் [தேவனின்] சத்தியத்தைத் தேடும்போதும், அந்தத் தேடலுக்கான ஆதாரங்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார். மதச்சார்பற்ற முக்கியத்துவத்தையோ அதிகாரத்தையோ தகுதியான ஆதாரங்களாக நாம் கருதக்கூடாது. … நாம் மதத்தைப் பற்றிய உண்மையைத் தேடும்போது, அந்தத் தேடலுக்குப் பொருத்தமான ஆவிக்குரிய முறைகளைப் பயன்படுத்த வேண்டும்: ஜெபம், பரிசுத்த ஆவியின் சாட்சி, மற்றும் வேதம் மற்றும் தற்காலத் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின் படிப்பு.(“Truth and the Plan,” Liahona, Nov. 2018, 25).

  23. மூப்பர் டி. டாட் கிறிஸ்டோபர்சன் கற்பித்தார்: “அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் … தேவனின் வார்த்தையை அறிவிக்கிறார்கள், ஆனால் கூடுதலாக, ஆண்களும் பெண்களும் பொதுவாகவும், குழந்தைகளும் கூட ஜெபம் மற்றும் வேதங்களைப் படிப்பதன் மூலம் தெய்வீக உணர்த்தலிலிருந்து கற்றுக்கொள்ளலாம் மற்றும் வழிநடத்தப்படுவார்கள் என்று நாம் நம்புகிறோம். … இயேசு கிறிஸ்துவின் சபையின் உறுப்பினர்களுக்கு பரிசுத்த ஆவியின் வரம் வழங்கப்படுகிறது, இது அவர்களின் பரலோக பிதாவுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள உதவுகிறது. … ஒவ்வொரு உறுப்பினரும் சபைக்காக பேசுகிறார்கள் அல்லது அதன் கோட்பாடுகளை வரையறுக்க முடியும் என்று சொல்ல முடியாது, ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கையாள்வதில் தெய்வீக வழிகாட்டுதலைப் பெற முடியும்.(“The Doctrine of Christ,” Liahona, May 2012, 89–90, note 2).

  24. 2 நேபி 33:1–2 பார்க்கவும்.

  25. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:28 பார்க்கவும்.

  26. மரோனி 10:3–5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 9:7–9 84:85 பார்க்கவும்.

  27. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 5:35; 63:23; 93:27–28 பார்க்கவும். நமது தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், மனநல சவால்களால் நம்மில் சிலர் ஆவியை உணர இன்னும் போராடலாம். மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற நரம்பியல் நிலைமைகள் பரிசுத்த ஆவியை அங்கீகரிப்பதில் சிக்கலைச் சேர்க்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், சுவிசேஷத்தின்படி தொடர்ந்து வாழ கர்த்தர் நம்மை அழைக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார் (மோசியா 2:41 பார்க்கவும்). பரிசுத்த இசையைக் கேட்பது, சேவையில் ஈடுபடுவது அல்லது இயற்கையில் நேரத்தைச் செலவிடுவது போன்ற கூடுதல் செயல்களை நாம் தேடலாம், இது ஆவியின் கனிகளை உணர உதவுகிறது (கலாத்தியர் 5:22–23 ஐப் பார்க்கவும்) மற்றும் தேவனுடனான நமது தொடர்பை பலப்படுத்துங்கள்.

    மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் இவ்வாறு தெரிவித்தார்: “உங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்புகிறவர்களுக்கோ மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான சவால்கள் ஏற்படும்போது நீங்கள் எவ்வாறு சிறப்பாகப் பதிலளிப்பீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவின் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள், அவர் உங்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு உங்களை நேசிக்கிறார். … கர்த்தரின் ஆவியை உங்கள் வாழ்வில் கொண்டு வரும் நேரம் சோதிக்கப்பட்ட பக்தி நடைமுறைகளை உண்மையுடன் பின்பற்றுங்கள். உங்கள் ஆவிக்குரிய நல்வாழ்வுக்கான திறவுகோல்களை வைத்திருப்பவர்களின் ஆலோசனையை நாடுங்கள். ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களைக் கேட்டுப் பெறுங்கள். ஒவ்வொரு வாரமும் திருவிருந்தை எடுத்து, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் பரிபூரணமான வாக்குறுதிகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அற்புதங்களை நம்புங்கள். நம்பிக்கை இழந்துவிட்டது என்று மற்ற எல்லா அறிகுறிகளும் சொல்லும் போது அவர்களில் பலர் வருவதை நான் பார்த்திருக்கிறேன். நம்பிக்கை ஒருபோதும் இழக்கப்படுவதில்லை” (“Like a Broken Vessel,” Liahona, Nov. 2013, 40–41).

  28. யோவான் 7:17; ஆல்மா 32:26–34 பார்க்கவும். இறுதியில், நாம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் வரை, “வரிக்குமேல் வரியாகவும், கட்டளையின் மீது கட்டளையாகவும்” சத்தியத்தைப் பெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். (நீதிமொழிகள் 28:5; 2 நேபி 28:30; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:67; 93:28 பார்க்கவும்).

  29. 1 யோவான் 1:9–10; 2:1–2 பார்க்கவும்.

  30. தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்திருக்கிறபடி: “மனந்திரும்புதலில் ஒரு வழக்கமான, அன்றாட கவனம் செலுத்துவதைவிட, எதுவுமே அதிக விடுவிப்பதாக, அதிக அந்தஸ்தை உயர்த்துவதாக, அல்லது நம்முடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கப்போவதில்லை. மனந்திரும்புதல் ஒரு நிகழ்ச்சி இல்லை, இது ஒரு செயல்முறை. சந்தோஷத்திற்கும் மனசமாதானத்திற்கும் இது திறவுகோல். விசுவாசத்துடன் இணைந்தால், மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் வல்லமைக்கான வழியைத் திறக்கிறது.(“We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67).

  31. தேவன் நம்மிடமிருந்து சில நித்திய சத்தியங்களை மறைக்கிறார் என்பதற்கான அனைத்து காரணங்களும் எனக்குத் தெரியாது, ஆனால் மூப்பர் ஆர்சன் எப். விட்னி ஒரு சுவாரஸ்யமான உள்ளுணர்வை வழங்கினார்: “பார்க்காமல் நம்புவது ஆசீர்வாதம், ஏனென்றால் விசுவாசத்தின் பயிற்சியால் ஆவிக்குரிய வளர்ச்சி வருகிறது, இது மனிதனின் பூமிக்குரிய வாழ்க்கைக்கான பெரிய காரியங்களில் ஒன்றாகும்; அறிவு, விசுவாசத்தை விழுங்குவதன் மூலம், அதன் பயிற்சியைத் தடுக்கிறது, இதனால் அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது. ‘அறிவே ஆற்றல்’; மேலும் அனைத்து விஷயங்களும் உரிய காலத்தில் தெரிய வேண்டும். ஆனால் அகால அறிவு-தவறான நேரத்தில் அறிவது- முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்தானது” (“The Divinity of Jesus Christ,” Improvement Era, Jan. 1926, 222; see also Liahona, Dec. 2003, 14–15).

  32. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:5–10 பார்க்கவும். கர்த்தர் ஹைரம் ஸ்மித்துக்கு அறிவுரை கூறினார், “என் வார்த்தையை அறிவிக்க வேண்டாம், முதலில் என் வார்த்தையைப் பெற முயலுங்கள். … அமைதியாக இருங்கள் [மற்றும்] என் வார்த்தையைப் படிக்கவும்” (Doctrine and Covenants 11:21–22). பதிலளிக்கப்படாத கேள்விகளைக் கையாளுவதற்கு ஆல்மா தீர்க்கதரிசி ஒரு உதாரணம் தருகிறான்: “இந்த இரகசியங்கள் இன்னும் எனக்கு முழுமையாகத் தெரியப்படுத்தப்படவில்லை; அதனால் நான் பொறுத்துக் கொள்கிறேன்” (ஆல்மா 37:11). அவன் தனது மகன் கொரியாந்தனுக்கு விளக்கினான், “ஆயினும் பாதுகாக்கப்பட்ட அநேக இரகசியங்களுண்டு. அவைகளை தேவனேயல்லாமல், வேறொருவரும் அறியார்.” (ஆல்மா 40:3). அவனால் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வியை முன்வைத்தபோது நேபியின் பதிலில் இருந்து எனக்கு பலம் கிடைத்தது: “[தேவன்] அவருடைய பிள்ளைகளை நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன்; இருப்பினும், எல்லாவற்றின் அர்த்தமும் எனக்குத் தெரியாது”(1 நேபி 11:17).

  33. அதேபோல், கலாச்சார மரபுகள் கோட்பாடு அல்லது கொள்கை அல்ல. கோட்பாட்டையும் கொள்கையையும் பின்பற்றுவதற்கு அவை நமக்கு உதவினால் அவை பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவை உண்மையான கொள்கைகளின் அடிப்படையில் இல்லாவிட்டால் அவை நமது ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கலாம். நம் நம்பிக்கையை கட்டியெழுப்பாத அல்லது நித்திய ஜீவனை நோக்கி முன்னேற உதவாத பாரம்பரியங்களை நாம் தவிர்க்க வேண்டும்.

  34. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:5; 88:77–78 பார்க்கவும்.

  35. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:21–23 பார்க்கவும்.

  36. பிப்ரவரி 2023 இல் பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கோட்பாட்டுத் தூய்மையை உறுதி செய்வதற்கான கொள்கைகள்” ஆவணத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.

  37. 1 நேபி 15:14 பார்க்கவும். தம்முடைய சுவிசேஷத்தின் மையமாக இல்லாத கோட்பாடுகள் அல்லது கருத்துக்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு கர்த்தர் தம் ஊழியர்களை வழிநடத்தினார்: மதக்கொள்கைகளை நீ பேசக்கூடாது, ஆனால் மனந்திரும்புதலையும், இரட்சகர்மேல் விசுவாசத்தையும், ஞானஸ்நானத்தாலும், ஆம், பரிசுத்த ஆவியான, அக்கினியாலும் பாவமன்னிப்பை நீ அறிவி. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:31).

    மூப்பர் நீல் எல். ஆண்டர்சன் விளக்கினார்: இரட்சகர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவருடைய பாவநிவாரண பலியைப்பற்றியுமே எப்போதும் நாம் கவனம் செலுத்துவோமாக. நமது சொந்த வாழ்க்கையிலிருந்து ஒரு அனுபவத்தையோ அல்லது மற்றவர்களிடமிருந்து ஒரு சிந்தனையை பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்பது இதற்கு அர்த்தமில்லை. நமது கருத்து குடும்பங்கள் அல்லது சேவை அல்லது ஆலயங்கள் அல்லது சமீபத்திய ஊழியத்தைப் பற்றியதாக இருந்தாலும், எல்லாம் … கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்ட வேண்டும்” (“We Talk of Christ,” Liahona, Nov. 2020, 89–90).

  38. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:2–3, 8 பார்க்கவும். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு, “அவன் தான் போதித்தவைகளையும், பரிசுத்த தீர்க்கதரிசிகளின் நாவினால் பேசப்பட்டவைகளையும் தவிர, அவர்கள் வேறெந்த காரியத்தைக் குறித்தும் போதிக்கக்கூடாது, என்று கட்டளையிட்டான்.” என்று ஆல்மா தீர்க்கதரிசி அறிவுறுத்தினான் (மோசியா 18:19).

    தலைவர் ஹென்றி பி. ஐரிங் அறிவித்தார், “கோட்பாட்டை அறிவிப்பது அவருடைய பொறுப்பான தீர்க்கதரிசிகளின் நிலையான படைப்புகள் மற்றும் போதனைகளில் அடங்கியுள்ள சபையின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் கற்பிக்க வேண்டும்”(“The Lord Will Multiply the Harvest” [evening with a General Authority, Feb. 6, 1998], in Teaching Seminary: Preservice Readings [2004], 96).

    மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன், “இன்றும் சபையில், பழங்காலத்தைப் போலவே, கிறிஸ்துவின் கோட்பாட்டை நிறுவுவது அல்லது கோட்பாட்டு விலகல்களை சரிசெய்வது, கர்த்தர் அப்போஸ்தல அதிகாரத்தை வழங்குபவர்களுக்கு தெய்வீக வெளிப்பாட்டின் விஷயம்” என்று சாட்சியமளித்தார்.(“The Doctrine of Christ,” 86).

  39. 2 கொரிந்தியர் 13:1; 2 நேபி 11:3; ஏத்தேர் 5:4; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:28. மூப்பர் நீல் எல். ஆண்டர்சன் குறிப்பிட்டார்: “பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு சபைத் தலைவர் நமது கோட்பாட்டிற்கு முரணானதாகத் தோன்றிய ஒரு அறிக்கையைக் கண்டால், சிலர் தங்கள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். சபையின் கோட்பாட்டை நிர்வகிக்கும் ஒரு முக்கியமான கொள்கை உள்ளது. இந்த கோட்பாடு பிரதான தலைமையின் 15 உறுப்பினர்களாலும் பன்னிரண்டு பேரின் குழுவினாலும் கற்பிக்கப்படுகிறது. ஒரு உரையின் தெளிவற்ற பத்தியில் அது மறைக்கப்படவில்லை. உண்மையான கொள்கைகள் அடிக்கடி மற்றும் பலரால் கற்பிக்கப்படுகின்றன. நமது கோட்பாட்டைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல” (“Trial of Your Faith,” Liahona, Nov. 2012, 41).

    மூப்பர் கிறிஸ்டாபர்சன் போதித்தார், “கடந்த அல்லது தற்போதுள்ள சபை தலைவர்களால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு அறிக்கையும் கோட்பாட்டை உள்ளடக்கியிருக்கத் தேவையில்லை என்பது நினைவில் வைக்கப்படவேண்டும். ஒரு தனி சந்தர்ப்பத்தில் ஒரு தலைவரால் கொடுக்கப்பட்ட அறிக்கை, நன்றாக கருதப்பட்ட கருத்தாயிருந்தாலும் முழு சபைக்கும் அதிகாரப்பூர்வமாயிருக்க அல்லது கட்டுப்பாடாயிருக்க வேண்டியதில்லை என பொதுவாக சபையில் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது.”(“The Doctrine of Christ,” 88)

  40. 3 நேபி 11:32, 40 பார்க்கவும். தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி கூறினார்: “சபையின் கோட்பாட்டை தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நான் முன்பே பேசியிருக்கிறேன். … இதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். கோட்பாட்டுப் போதனைகளில் ஏற்படும் சிறிய மாறுபாடுகள் பெரிய மற்றும் தீய பொய்களுக்கு வழிவகுக்கும்” (in Teachings of Gordon B. Hinckley [1997], 620).

    “ஒரு தீர்க்கதரிசியின் போதனைகளிலிருந்து சில வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது பிற தனிப்பட்ட நோக்கங்களுக்கு ஆதரவாக இவற்றைப் பயன்படுத்துபவர்கள் சிலர் உள்ளனர்” என்று தலைவர் டாலின் எச். ஓக்ஸ் எச்சரித்தார். … அரசியல் அல்லது நிதி அல்லது வேறு ஏதேனும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை ஆதரிக்க ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகளைத் திரிப்பது, அவரைப் பின்பற்றுவது அல்ல.(“Our Strengths Can Become Our Downfall” [Brigham Young University fireside, June 7, 1992], 7, speeches.byu.edu).

    தலைவர் ஹென்றி பி. ஐரிங் எச்சரித்தார்: “பரிசுத்த ஆவியானவர் அது உண்மை என்பதை உறுதிப்படுத்துவதால் கோட்பாடு அதன் வல்லமையைப் பெறுகிறது. … நமக்கு பரிசுத்த ஆவியானவர் தேவைப்படுவதால், உண்மையான கோட்பாட்டைக் கற்பிப்பதைத் தாண்டிச் செல்லாமல் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவி. ஊகங்கள் அல்லது தனிப்பட்ட விளக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவரது உறுதிப்படுத்தல் வரவேற்கப்படுகிறது. அதைச் செய்வது கடினமாக இருக்கலாம். … புதிய அல்லது பரபரப்பான ஒன்றை முயற்சிக்க இது தூண்டுகிறது. ஆனால் உண்மையான கோட்பாட்டை மட்டும் போதிப்பதில் கவனமாக இருக்கும்போது பரிசுத்த ஆவியானவரை நமது துணையாக அழைக்கிறோம். தவறான கோட்பாட்டிற்கு அருகில் செல்வதைத் தவிர்ப்பதற்கான உறுதியான வழிகளில் ஒன்று, நமது போதனையில் எளிமையாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பதாகும். அந்த எளிமையால் பாதுகாப்பு பெறப்படுகிறது, கொஞ்சமும் இழக்கப்படுவதில்லை”(“The Power of Teaching Doctrine,” Liahona, July 1999, 86).

    மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் கற்பித்தார்:அதிக புரிதலை நாடுவது நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும், ஆனால் தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். காரணம் வெளிப்படுத்துதலை மாற்ற முடியாது. ஊகங்கள் அதிக ஆவிக்குரிய அறிவுக்கு வழிவகுக்காது, ஆனால் அது நம்மை ஏமாற்றுவதற்கு இட்டுச் செல்லும் அல்லது வெளிப்படுத்தப்பட்டவற்றிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பும். (“Your Divine Nature and Eternal Destiny,” Liahona, May 2022, 70).

  41. மத்தேயு 23:23 பார்க்கவும். தலைவர் ஜோசப் எப். ஸ்மித் எச்சரித்தார்: “சத்தியத்தின் ஒரு பகுதியை எடுத்து, அதை முழுவதுமாக கருதுவது மிகவும் விவேகமற்றது. … கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இரட்சிப்பின் திட்டத்தில் தேவையானவை மற்றும் அவசியமானவை.” அவர் மேலும் விளக்கினார்: “இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு, சுவிசேஷ சத்தியத்தின் முழுத் திட்டத்திலிருந்தும் தனித்தனியாக, அதை ஒரு சிறப்புப் பொழுதுபோக்காக மாற்றி, நமது இரட்சிப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அதைச் சார்ந்திருப்பது நல்ல கொள்கையும் இல்லை, சரியான கோட்பாடும் இல்லை. … அவை அனைத்தும் அவசியம்”(Gospel Doctrine, 5th ed. [1939], 122).

    மூப்பர் நீல் ஏ. மேக்ஸ்வெல் விளக்கினார்: “சுவிசேஷ கொள்கைகளுக்கு … ஒத்திசைவு தேவைப்படுகிறது. ஒவ்வொன்றையும் பிரித்து அல்லது தனிமைப்படுத்தும்போது, இந்த கோட்பாடுகளின் மனுஷர்களின் விளக்கங்களும் செயல்படுத்தல்களும் காட்டுத்தனமாக இருக்கலாம். அன்பு, ஏழாவது கட்டளையால் சரிபார்க்கப்படாவிட்டால், அது மாம்சமாக மாறும். ஐந்தாவது கட்டளையின் பாராட்டத்தக்க முக்கியத்துவம் பெற்றோரைக் கௌரவிப்பது, முதல் கட்டளையால் சரிபார்க்கப்படாவிட்டால், தேவனுக்குப் பதிலாக தவறான பெற்றோருக்கு நிபந்தனையற்ற விசுவாசத்தை ஏற்படுத்தும். … பொறுமையும் கூட ‘பரிசுத்த ஆவியால் நகர்த்தப்படும்போது, கூர்மையுடன் கடிந்துகொள்வதன் மூலம்’ சமநிலைப்படுத்தப்படுகிறது. [Doctrine and Covenants 121:43]” (“Behold, the Enemy Is Combined,” Ensign, May 1993, 78–79).

    தலைவர் மரியன் ஜி. ரோம்னி விளக்கினார், “இயேசு கட்டளையிட்டபடி அவர்கள் கற்பிப்பதைக் கண்டறியும் நோக்கத்திற்காக [வேதங்களை] தேடுவது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவாக சேவையில் அழுத்தப்படக்கூடிய பத்திகளைக் கண்டறியும் நோக்கத்திற்காக அவற்றை வேட்டையாடுவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.”(“Records of Great Worth,” Ensign, Sept. 1980, 3).

  42. 1 நேபி 2:4: மரோனி 6:9 பார்க்கவும். மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் ஆவிக்குரிய ரீதியில் மேம்படுத்துவதற்கு வழிவகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்: “நாம் சுவிசேஷத்தை ஆவியின்படி போதிக்க வேண்டியதை விட அதிக அழுத்தமான ஆலோசனையை கர்த்தர் சபைக்கு ஒருபோதும் வழங்கவில்லை. சுவிசேஷ ‘ஆவியால், சத்தியத்தைப் போதிக்க அனுப்பப்பட்ட தேற்றரவாளன்.’ ‘சத்திய ஆவியால்?’ சுவிசேஷத்தை நாம் கற்பிக்கின்றோமா? அவர் கேட்டிருக்கிறார்: அல்லது ‘வேறு வழி’ யில் கற்பிக்கின்றோமா? அது வேறு வழியில் இருந்தால், ‘அது தேவனால் அல்ல’ என்று எச்சரிக்கிறார்.[கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:14, 17–18]. … பரலோகத்திலிருந்து ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்படாமல் எந்த நித்திய கற்றலும் நடைபெறாது. … அதைத்தான் நமது உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். … அவர்கள் தங்கள் நம்பிக்கையை பலப்படுத்தவும், தங்கள் நம்பிக்கை புதுப்பிக்கப்படவும் விரும்புகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், தேவனின் நல்ல வார்த்தையால் போஷிக்கப்படவும், பரலோகத்தின் வல்லமைகளால் பலப்படுத்தப்படவும் அவர்கள் விரும்புகிறார்கள்.” (“A Teacher Come from God,” Ensign, May 1998, 26).

  43. ஆல்மா 13:23 பார்க்கவும். நமது பரலோக பிதாவைப் பற்றிப் பேசுகையில், தலைவர் ரசல் எம். நெல்சன் சாட்சியமளித்தார், “அவர் எளிமையாகவும், அமைதியாகவும், நாம் அவரைத் தவறாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியூட்டும் எளிமையுடன் தொடர்பு கொள்கிறார்” (“Hear Him,” Liahona, May 2020, 89).

  44. சங்கீதம் 26:3; ரோமர் 13:10; 1 கொரிந்தியர் 13:1–8; 1 யோவான் 3:18 பார்க்கவும்.

  45. சங்கீதம் 40:11 பார்க்கவும்.

  46. ரோமர் 8:16 பார்க்கவும்.

  47. 1 சாமுவேல் 2:3; மத்தேயு 6:8; 2 நேபி 2:24; 9:20.

  48. ஆதியாகமம் 17:1; எரேமியா 32:17; 1 நேபி 7:12; ஆல்மா 26:35.

  49. எரேமியா 3; 1 யோவான் 4:7–10; ஆல்மா 26:37 பார்க்கவும்.

  50. 2 நேபி 9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:17–31 மோசே 6:52–62 பார்க்கவும்.

  51. யோவான் 3:16; 1 யோவான் 4:9–10 பார்க்கவும்.

  52. யோவான் 8:29; 3 நேபி 27:13 ஐயும் பார்க்கவும்.

  53. யோவான் 15:12; 1 யோவான் 3:11; பார்க்கவும்.

  54. லூக்கா 22:39–46 பார்க்கவும்.

  55. யோவான் 19:16–30 பார்க்கவும்.

  56. யோவான் 20:1–18 பார்க்கவும்.

  57. 1 கொரிந்தியர் 15:20–22; மோசியா 15:20–24; 16:7–9; கோட்பாடும் டன்படிக்கைகளும் 76:16–17 பார்க்கவும்.

  58. அப்போஸ்தலர் 11:17–18; 1 தீமோத்தேயு 1:14–16; ஆல்மா 34:8–10; மரோனி 6:2–3, 8; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:13–19 பார்க்கவும்.

  59. மத்தேயு 11:28–30; 2 கொரிந்தியர் 12:7–10; பிலிப்பியர் 4:13; ஆல்மா 26:11–13 பார்க்கவும்.

  60. மத்தேயு 16:18–19; எபேசியர் 2:20 பார்க்கவும்.

  61. மத்தேயு 24:24; அப்போஸ்தலர் 20:28–30 பார்க்கவும்.

  62. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:1–4; 21:1–7; 27:12; 110; 135:3; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:1–20 பார்க்கவும்.

  63. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:14, 38; 43:1–7; 107:91–92 பார்க்கவும்.