பொது மாநாடு
நமது இருதயத்தில் ஆழமாக
ஏப்ரல் 2020 பொது மாநாடு


நமது இருதயத்தில் ஆழமாக

நமது இருதயங்களில் சுவிசேஷத்தை ஆழமாகப் பதிக்க—நாமனைவரும்—நமக்கு உதவ கர்த்தர் எப்படி முயல்கிறார் என நாம் பார்ப்போம்.

சகோதரிகளே, சகோதரர்களே, நாம் எவ்வளவு அற்புதமான நேரத்தில் நாம் வாழ்கிறோம். மறுஸ்தாபிதத்தின் ஆரம்பத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, நாம் பார்த்துக்கொண்டிருக்கிற நடந்துகொண்டிருக்கிற மறுஸ்தாபிதத்தையும் கொண்டாடுவது பொருத்தமாயிருக்கும். இந்த நாளில் உங்களோடு வாழ்வதற்காக நான் களிகூர்கிறேன்.1 அவரை வரவேற்க ஆயத்தப்பட நமக்கு உதவ அவரது தீர்க்கதரிசிகள் மூலம் தேவையான அனைத்தையும் அதனதன் இடத்தில் கர்த்தர் தொடர்ந்து வைக்கிறார்.2

அத்தேவையான காரியங்களில் ஒன்று, புது பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் முயற்சி. உங்களில் அநேகர் இலக்குகள் அமைக்கும் இத்திட்டத்தின் முக்கியத்துவம், சொந்தமாயிருப்பதன் புதிய அடையாளங்கள் மற்றும் இளைஞரின் பெலனுக்காக மாநாடுகள் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், இத்திட்டம் கட்டப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் அவற்றின் நோக்கம் பற்றிய நமது பார்வையை அவை மறைக்க நாம் அனுமதிக்கக் கூடாது: நமது பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் இருதயங்களில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆழமாக செல்ல உதவுதல் ஆகும்.3

இந்த கொள்கைகளை நாம் தெளிவாக பார்க்கும்போது, 8 முதல் 18 வயது அங்கத்தினர்களுக்கானதென்பதை விட அதிகமானது என நாம் அடையாளம் காண்போம் என நான் நம்புகிறேன். நமது இருதயங்களில் சுவிசேஷத்தை ஆழமாகப் பதிக்க—நாமனைவரும்—நமக்கு உதவ கர்த்தர் எப்படி முயல்கிறார் என நாம் பார்ப்போம். நாம் ஒன்றாக கற்க பரிசுத்த ஆவியானவர் உதவுவார் என நான் ஜெபிக்கிறேன்.

உறவுகள்—”அவர்களோடு இருங்கள்”4

முதலாவது கொள்கை உறவுகள் ஆகும். அவர்கள் இயேசு கிறிஸ்து சபையின் இப்படிப்பட்ட இயற்கையான பாகமாக இருப்பதால், நமது நடைபெற்றுக்கொண்டிருக்கிற கிறிஸ்துவிடம் செல்லும் பயணத்தில், நாம் சிலசமயங்களில் உறவுகளின் முக்கியத்துவத்தை மறக்கிறோம். உடன்படிக்கையின் பாதையை தனியாக கண்டுபிடிக்கவோ அல்லது நடக்கவோ நாம் எதிர்பார்க்கப்படவில்லை. பாதையில் நடந்துகொண்டிருக்கிற பெற்றோர், பிற குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து நமக்கு அன்பும் ஆதரவும் தேவை.

இம்மாதிரியான உறவுகளுக்கு நேரம் எடுக்கும். ஒன்றாக இருக்க இதுவே நேரம். ஒன்றாக சிரிக்கவும், விளையாடவும், கற்கவும் சேவை செய்யவும் நேரம். ஒருவருக்கொருவரின் ஆர்வங்கள் மற்றும் சவால்களை பாராட்ட நேரம். நன்றாக ஆக ஒன்றாக நாம் முயற்சிக்கும்போது, ஒருவருக்கொருவருடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க நேரம். இந்த உறவுகள் குடும்பங்களாகவும், குழுமங்களாகவும், வகுப்புக்களாகவும், கூட்டங்களாகவும் கூட இந்த உறவுகள் முக்கிய நோக்கங்களில் ஒன்று. ஆற்றல்மிக்க ஊழியத்துக்கு அவை அஸ்திவாரங்களாகும்.5

“பிறருக்கு ஆற்றலுடன் சேவை செய்ய நாம் அவர்களை … பரலோக பிதாவின் கண்கள் மூலம் பார்க்க வேண்டும்”, என அவர் சொன்னபோது, இந்த உறவுகளை மேம்படுத்தும் திறவுகோலை மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் நமக்குக் கொடுத்தார். “அப்போதுதான் நாம் ஒரு ஆத்துமாவின் உண்மையான தகுதியை அறியத் தொடங்குகிறோம். அப்போதுதான் தன் எல்லா பிள்ளைகள் மீதும் பரலோக பிதா வைத்துள்ள அன்பை நாம் உணர்கிறோம்.”6

தேவன் பார்ப்பதுபோல பிறரைப் பார்ப்பது, ஒரு வரம். இந்த வரத்தை நாட நம் அனைவரையும் நான் அழைக்கிறேன். பார்க்கும்படிக்கு நமது கண்கள் திறந்திருக்கும்போது,7, தேவன் பார்க்கிறது போல அவர்களையும் பார்க்க நம்மாலும் பிறருக்கு உதவ முடியும்.8 தலைவர் ஹென்றி பி. ஐரிங் இந்த வல்லமை பற்றி வலியுறுத்தியபோது அவர் சொன்னார்: “அவர்கள் உண்மையாகவே யார் மற்றும் அவர்கள் உண்மையாகவே என்னவாக முடியும் என்பது பற்றி உங்களிடமிருந்து இளைஞர்கள் என்ன கற்கிறார்கள் என்பதே மிக முக்கியமாகும். விரிவுரைகளிலிருந்து அவர்கள் அதிகம் கற்க மாட்டார்கள் என்பதே என் யூகம். நீங்கள் யார், அவர்கள் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் மற்றும் அவர்கள் என்ன ஆக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற உணர்விலிருந்து அவர்கள் பெறுவார்கள்.”9 தங்கள் உண்மையான அடையாளத்தையும் நோக்கத்தையும் பிறர் புரிந்துகொள்ள உதவுதல் நாம் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய வரங்களில் ஒன்று.10 தேவன் பார்ப்பது போல நம்மையும் பிறரையும் பார்த்தல் நமது இருதயங்களை “ஒன்றாக ஒற்றுமையிலும் அன்பிலும்” பிணைக்கின்றன.11

மதச்சார்பற்ற சக்திகள் நம்மை விமரிசிப்பது அதிகரித்துக்கொண்டிருக்கும்போது, அன்பான உறவுகளிலிருந்து வருகிற பெலன் நமக்குத் தேவை. ஆகவே, நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பிற கூடுகைகள், நாம் திட்டமிடும்போது, நமது இருதயங்களில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆழமாக இறங்க உதவ, இந்த கூடுகைகளின் முக்கிய நோக்கம் நம்மை, ஒன்றிணைக்கிற அன்பான உறவுகளைக் கட்டவே என நினைவுகூருவோமாக. 12

வெளிப்படுத்தல், சுயாதீனம், மனந்திரும்புதல்—”அவற்றை பரலோகத்தோடு இணையுங்கள்” 13

உண்மையாகவே, ஒன்றாகக் கட்டப்பட்டிருப்பது மட்டுமே போதாது. பல்வேறு காரணங்களுக்காக ஒற்றுமை உருவாக்கிய அனேக குழுக்களும் அமைப்புக்களும் இருக்கின்றன. ஆனால் நாம் நாடுகிற ஒற்றுமை கிறிஸ்துவில் ஒன்றாவது, அவருடன் நம்மை இணைப்பது.14 மூப்பர் ஆண்டர்சென் நம்மிடம் விரிவாக பேசியதுபோல, நமது இருதயங்களை பரலோகத்தோடு இணைக்க நமக்கு தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவங்கள் தேவை.15 அந்த அனுபவங்கள் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையையும் அன்பையும் நமது மனத்துக்கும் இருதயத்துக்கும் கொண்டு செல்வதால் வருகிறது.16

இந்த வெளிப்படுத்தல் வசனங்கள் மூலமாகவும், விசேஷமாக மார்மன் புஸ்தகத்திலிருந்தும், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள், மற்றும் பிற சீஷர்களின் உணர்த்தப்பட்ட வார்த்தைகள் மூலமும், அமர்ந்த மெல்லிய சத்தத்தின் மூலமும் நம்மிடம் வருகிறது.17 இந்த வார்த்தைகள் ஒரு பக்கத்தில் உள்ள மையை விடவும் நமது காதுகளில் இரைச்சலான அலைகளைவிடவும், அல்லது நமது மனங்கள் அல்லது இருதயங்களின் உணர்வுகளாகவும் இருக்கின்றன. தேவனுடைய வார்த்தை ஆவிக்குரிய வல்லமை ஆகும்.18 இது சத்தியமும் ஒளியுமாகும்.19 இது நாம் அவரைக் கேட்பது போலாகும். வார்த்தை கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை தூண்டி, அதிகரித்து இரட்சகர் போல் அதிகமாக ஆக வாஞ்சையை நமக்குள்ளே எரியூட்டுகிறது, அது மனந்திரும்பி உடன்படிக்கையின் பாதையில் நடப்பதாகும்.20

கடந்த ஏப்ரலில் தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த வெளிப்படுத்தலின் பயணத்தில் மனந்திரும்புதலின் மைய பங்கை புரிந்துகொள்ள நமக்கு உதவினார்.21 அவர் சொன்னார்:“மனந்திரும்ப நாம் தேர்ந்தெடுக்கும்போது மாறுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கிறோம்! நமக்குள்ள சிறந்த மாதிரிக்குள் நம்மை மாற்ற, இரட்சகரை நாம் அனுமதிக்கிறோம். … அதிகமாக இயேசு கிறிஸ்து போல ஆக நாம் தெரிந்துகொள்கிறோம்.”22 தேவ வார்த்தையால் எரியூட்டப்பட்ட இந்த மாற்ற முறை, பரலோகத்தோடு நாம் இணைவதாகும்.

மனந்திரும்புமாறு தலைவர் நெல்சனின் அழைப்பு, சுயாதீனத்தின் கொள்கையாகும். நாமே மனந்திரும்புதலைத் தெரிந்துகொள்ள வேண்டும். சுவிசேஷத்தை நமது இருதயங்களுக்குள் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது மூப்பர் ரென்லண்ட் சொன்னார், “பெற்றோராயிருப்பதில் நமது பரலோக பிதாவின் இலக்கு, அவரது பிள்ளைகள் சரியானதைச் செய்ய வைப்பதல்ல, சரியானதைச் செய்ய அவரது பிள்ளைகளை தெரிந்துகொள்ள வைப்பதாகும்.”23

பில்ளைகள் மற்றும் இளைஞரின் மாற்றப்பட்ட திட்டங்களில் 500க்கும் மேற்பட்ட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்று முடிக்க தேவைகள் இருந்தன.24 இன்று தேவைப்படுகிற ஒன்றிருக்கிறது. இரட்சகர் போல அதிகமாக ஆக தெரிந்துகொள்ள இது ஒரு அழைப்பாகும். பரிசுத்த ஆவி மூலம் தேவ வார்த்தையைப் பெற்றும் நம்மை மிகச் சிறந்தவர்களாக மாற்ற அனுமதித்தும் நாம் இதைச் செய்கிறோம்.

இலக்கு அமைப்பது அல்லது சுய முன்னேற்றத்துக்கு ஒரு பயிற்சியைவிட இது மிக அதிகமானது. வெளிப்படுத்தல், சுயாதீனம், மற்றும் மனந்திரும்புதல் மூலம், கிறிஸ்துவண்டை வரவும் நமது இருதயங்களில் ஆழமாக அவரது சுவிசேஷத்தைப் பெறவும் பரலோகத்தோடு இணைப்புபெற இது ஒரு சந்தர்ப்பம்.

உடன்படுதலும் தியாகமும்—”அவர்கள் தலைமை ஏற்பார்களாக” 25

கடைசியாக, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆழமாகப் பெற நாம் அதில் உடன்பட வேண்டும்— அதற்கு நமது நேரத்தையும் தாலந்துகளையும் கொடுக்க, அதற்காக தியாகம் செய்ய.26 நாமனைவரும் அர்த்தமிக்க வாழ்க்கை வாழ விரும்புகிறோம், இது எழுகிற தலைமுறைக்கு விசேஷமாக உண்மைதான். அவர்கள் ஒரு காரணத்தை விரும்புகின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகத்தில் மிகப்பெரிய காரணம். தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் சொன்னார்: “உலகமெங்கும் இந்த சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நாம் தேவனால் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். இன்று நம்மை ஒன்றிணைக்க வேண்டிய காரணம் அதுதான். அதன் சுய அழிவின் குழப்பத்திலிருந்து உலகத்தை சுவிசேஷம் மட்டும்தான் காக்கும். சுவிசேஷம் மட்டும்தான் சமாதானத்தில் சகல இனங்கள் மற்றும் தேசங்களின் ஆண்களையும் [பெண்களையும்] ஒன்றிணைக்கும். மனுஷ குடும்பத்துக்கு சுவிசேஷம் மட்டும்தான் சந்தோஷமும், மகிழ்ச்சியும், இரட்சிப்பும், கொண்டுவரும்.”27

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் வாக்களித்தார்: “அவர்களை அழைத்து, செயல்பட அனுமதிப்பதால் நாம் இளைஞர்களை வலிமையாக்குகிறோம், சபை அற்புதமான விதமாக முன்னோக்கிச் செல்லும்.”28 கிறிஸ்துவின் மாபெரும் காரணத்துக்காக அடிக்கடி நாம் இளைஞர்களை தியாகம் செய்ய அழைக்கவுமில்லை, அனுமதிக்கவுமில்லை. மூப்பர் நீல் ஏ. மாக்ஸ்வெல் கூறினார், “[நமது] இளைஞர்கள் [தேவ பணியால்] அமிழ்த்தபடவில்லையானால், அவர்கள் உலகத்தால் மிகவும் அமிழ்த்தப்படலாம்.”29

பிள்ளைகள் மற்றும் இளைஞர் திட்டம் இளைஞர்களுக்கு வலிமையளிப்பதில் கவனம் செலுத்துகிறது. அவர்கள் தங்கள் இலக்குகளைத் தெரிந்துகொள்ளுகிறரார்கள். குழும மற்றும் வகுப்புத் தலைமைகள் தங்கள் தகுந்த இடங்களில் வைக்கப்படுகிறார்கள். தொகுதி இளைஞர் ஆலோசனைக்குழு, தொகுதி ஆலோசனைக்குழு போலவே, இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் பணியில் கவனம் செலுத்துகிறது.30 குழுமங்களும் வகுப்புக்களும் தேவன் கொடுத்த பணியை எப்படி செய்வது என ஆலோசித்து தங்கள் பணியைத் தொடங்குகின்றனர்.31

சபையின் இளைஞர்களுக்கு தலைவர் நெல்சன் சொன்னார்: “நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் விரும்பினால் … பெரிய ஒன்றின், மகத்தான ஒன்றின், மகத்துவமான ஒன்றின் பெரிய பகுதியாக நீங்கள் இருக்கலாம்! … கர்த்தர் எப்போதும் உலகுக்கு அனுப்பியுள்ளவர்களிடையே நீங்கள்தான் சிறந்தவர்கள். நீங்கள் துடிப்பாகவும், ஞானமாகவும், எந்த முந்தய தலைமுறையையும் விட உலகத்தில் அதிக தாக்கம் உண்டாக்க திறமை படைத்தவர்கள்!”32 மற்றொரு சமயத்தில் தலைவர் நெல்சன் இளைஞர்களுக்கு சொன்னார், “நான் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன், அதுபோலவே கர்த்தரும் நேசிக்கிறார். அவரது பரிசுத்த பணியில் ஒன்றாக ஈடுபட்டுள்ள நாம் அவரது ஜனம்.”33 இளைஞர்களே, தலைவர் நெல்சன் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், இப்பணியில் நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா?

பெற்றோரே, வயதுவந்தோர் தலைவர்களே, தலைவர் நெல்சன் போலவே, இளைஞர்களைப் பார்க்க நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் அன்பையும் நம்பிக்கையையும் இளைஞர்கள் உணரும்போது, எப்படி வழிநடத்துவது என நீங்கள் ஊக்குவித்து கற்பிக்கும்போது—பின்பு அவர்கள் வழியை விட்டு நீங்கள் விலகும்போது, அவர்களது உள்ளுணர்வுகளுடனும், திறமைகளுடனும், சுவிசேஷத்துக்கு ஒப்புக்கொடுத்தலுடனும் அவர்கள் உங்களை வியக்கச்செய்வர்.34 கிறிஸ்துவின் இந்த மாபெரும் காரணத்துக்காக, உடன்பட்டு, தியாகம் செய்யும்போது, தெரிந்து கொள்ளுதலின் சந்தோஷத்தை அவர்கள் உணர்வார்கள். அவர்களது இருதயங்களுக்குள் சுவிசேஷம் ஆழமாகச் செல்லும், அற்புதமான வழிகளில் பணி முன்னோக்கிச் செல்லும்.

வாக்களிப்பும் சாட்சியும்

நான் வாக்களிக்கிறேன், இக்கொள்கைகள்—உறவுகள், வெளிப்படுத்தல், சுயாதீனம், மனந்திரும்புதல், தியாகம் செய்தல்—மீது நாம் கவனம் செலுத்தும்போது, நாமனைவரின் இருதயங்களின் ஆழத்தில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இறங்கும். இஸ்ரவேலின் மீட்பு மற்றும் சீயோனின் ஸ்தாபகம் ஆகியவற்றின் இறுதியான நோக்கத்துக்காக மறுஸ்தாபிதம் முன்னோக்கிச் செல்வதை நாம் பார்ப்போம்,35 அங்கு கிறிஸ்து இராஜாதி இராஜாவாக ஆளுகை செய்வார்.

அந்த நாளுக்காக தன் ஜனத்தை ஆயத்தம்செய்ய தேவையான எல்லாவற்றையும் தேவன் தொடர்ந்து செய்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். “கிறிஸ்துவினிடத்தில் வந்து அவரில் பரிபூரணப்பட்டிருக்க,” நாம் முயற்சி செய்யும்போது இம்மகத்தான பணியில் அவரது கரத்தை நாம் பார்ப்போமாக.36 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:12 பார்க்கவும். தலைவர் நெல்சன் சொன்னார்: “இவை அனைத்தின் உற்சாகத்தையும் அவசரத்தையும் பற்றி நினையுங்கள், ஆதாமிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தீர்க்கதரிசியும் நமது நாளைப் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேல் கூட்டிச்சேர்க்கப்பட்டு, இரட்சகரின் இரண்டாம் வருகைக்காக உலகம் ஆயத்தப்படுத்தப்படும் நமது நாள் பற்றி பேசியிருக்கிறார்கள். அதைப்பற்றி சிந்தியுங்கள்! பூமி கோளத்தில் எப்போதும் வாழ்ந்திருக்கக்கூடிய எல்லா ஜனத்திலும், நாம் இந்த மாபெரும் கூடுகை நிகழ்வில் பங்கேற்கிறவர்கள். அது எவ்வளவு மகிழ்ச்சியானது!” (“Hope of Israel” [worldwide youth devotional, June 3, 2018], HopeofIsrael.ChurchofJesusChrist.org).

    மூப்பர் ஜெப்ரி ஆர் ஹாலன்ட் போதித்தார்:

    “நாம் வாழ எவ்வளவு பயங்கரமான நேரம்!

    “இப்போதைக்கும் நித்தியத்துக்கும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பூமியில் மிக நிச்சயமான, மிகப் பாதுகாப்பான, மிகவும் நம்பகமான, மிகவும் பயனளிக்கக்கூடிய சத்தியமாகும். இச்சபை தன் ஊவியத்தை நிறைவேற்றுவதிலும், உலக அஸ்திவாரத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இதன் உழியத்தை நிறைவேற்றுவதிலிருந்தும் அடைவதிலிருந்தும் தடுக்க ஒன்றும்—எதுவுமில்லை, யாருமில்லை, எந்த செல்வாக்குமில்லை. எதிர்காலம் பற்றி பயப்படவோ சந்தேகிக்கவோ தேவையில்லை.

    “நமக்கு முந்தய எந்த யுகத்தையும் விட, இந்த ஊழியக்காலம் அமைப்பு ரீதியான மதமாறுபாட்டை அனுபவிக்காது, ஆசாரியத்துவத்துவ திறவுகோல்கள் தொலைக்கப்படுவதை பார்க்காது, சர்வ வல்ல தேவனின் குரலிலிருந்து வெளிப்படுத்தல் நிறுத்தப்படுவதை இது அனுமதிக்காது. … நாம் வாழ்வது எப்படிப்பட்ட காலம்.

    “… நீங்கள் கவனிக்கவில்லையானால் பிற்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன். … நம்புங்கள். எழும்புங்கள். விசுவாசத்தோடிருங்கள். நாம் வாழ்கிற விசேஷித்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ” (Facebook post, May 27, 2015; see also “Be Not Afraid, Only Believe” [address to Church Educational System religious educators, Feb. 6, 2015], broadcasts.ChurchofJesusChrist.org).

  2. யோவான் 1:12 பார்க்கவும்.

  3. நாங்கள் வாலிபர் பொது தலைமையாக அழைக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, இன்று சபையின் இளைஞர்கள் எதிர்கொள்கிற தனித்துவமான சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் பற்றி தலைவர் ஹென்றி பி. ஐரிங் எங்களோடு கலந்துரையாடினார். அவர்களது இருதயங்களில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஆழமாக நுழைய உதவக்கூடிய காரியங்கள் பற்றி கவனம் செலுத்துமாறு அவர் ஆலோசனையளித்தார். வாலிபர் தலைமையாக அந்த ஆலோசனை எங்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறது.

  4. Be with Them,” ChurchofJesusChrist.org/callings/aaronic-priesthood-quorums/my-calling/leader-instruction/be-with-them பார்க்கவும்.

  5. மோசியா 18:25., மரோனி 6:5 பார்க்கவும்

  6. Dale G. Renlund, “Through God’s Eyes,” Liahona, Nov. 2015, 94; see also மோசே 1:4–6.

    தலைவர் தாமஸ் எஸ். மான்சன் போதித்தார்: “அவர்கள் இருக்கும் விதமாக அல்ல, ஆனால் மாறாக அவர்கள் ஆக வேண்டிய விதமாக தனிநபர்களைப் பார்க்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது. இந்த விதமாக அவர்களைப் பற்றி நினைக்க நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.”(“See Others as They May Become,” Liahona, Nov. 2012, 70).

    மூப்பர் மாக்ஸவெல் போதித்தார்: “அடிக்கடி ஒரு இளம் நபரின் சபைத்தரங்களுக்கு ஒத்துவராத வெளித்தோற்றம் அல்லது எதிரப்பதாக தோன்றுகிற கேள்விகள், அவன் தெரிவித்த சந்தேகங்கள் வேகமாக அடையாளமிடச் செய்கிறது. விளைவுகள் சில சமயங்களில் தூரமாகவும் சிலசமயங்களில் அங்கீகரிக்கப்படாமலும் இருக்கலாம். உண்மையான அன்புக்கு அடையாளங்களை விரும்புவதில்லை.” (“Unto the Rising Generation,” Ensign, Apr. 1985, 9).

  7. 2 இராஜாக்கள் 6:17 பார்க்கவும்.

  8. பிரதான தலைமையின் அங்கத்தினராக ஸ்டீபன் எல். ரிச்சர்ட்ஸ் சொன்னார், “மறுப்பின் உயர்ந்த மாதிரி தங்கள் சிறந்த தன்மையையும் அவர்களுக்குள்ளிருக்கிற நல்லவைகளையும் பிறரில் காண்பதும் அவற்றைத் திறப்பதும் ஆகும்” (in Conference Report, Apr. 1950, 162; in David A. Bednar, “Quick to Observe,” Ensign, Dec. 2006, 35; Liahona, Dec. 2006, 19). 2 இராஜாக்கள் 6:17ஐயும் பார்க்கவும்.

  9. Henry B. Eyring, “Teaching Is a Moral Act” (address at Brigham Young University, Aug. 27, 1991), 3, speeches.byu.edu; emphasis added; see also Henry B. Eyring, “Help Them Aim High,” Liahona, Nov. 2012, 60–67.

  10. மோசே 1:3-6 பார்க்கவும்.

  11. மோசியா 18:21; மற்றும் மோசே 7:18 ஐயும் பார்க்கவும்.

  12. “தங்கள் பரலோக பிதாவுடன் உறவை மேம்படுத்த உதவுகிற ஆர்வமுள்ள பிற்காலப் பரிசுத்தவான் குடும்பம், நண்பர்கள் மற்றும் தலைவர்களுடன் பலமான நேர்மறை உறவுள்ள இளைஞர்கள் ஆர்வமாயிருக்கலாம். குறிப்பிட்ட நிகழ்ச்சி கூறுபாடுகள்—ஞாயிறு பாடத்திட்டம், வாலிபர் நிகழ்ச்சி, தனிப்பட்ட சாதனை எதிர்பார்ப்புகள் … போன்றவை அந்த உறவுகளின்றி சிறு பாதிப்பே ஏற்படுத்தும். … முக்கிய கேள்வி, எவ்வாறு குறிப்பிட்ட திட்ட கூறுபாடுகள் முற்றிலுமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதல்ல, ஆனால் [பிற்காலப் பரிசுத்தவான்] இளைஞனின் மத அடையாளத்தை பெலப்படுத்துகிற, நேர்மறை உறவுகளுக்கு பங்களிக்கிறார்கள் என்பதே முக்கியம்”(“Be with Them,” ChurchofJesusChrist.org/callings/aaronic-priesthood-quorums/my-calling/leader-instruction/be-with-them).

  13. Connect Them with Heaven,” ChurchofJesusChrist.org/callings/aaronic-priesthood-quorums/my-calling/leader-instruction/connect-them-with-heaven பார்க்கவும்.

  14. யோவான் 15:1–5; 17:11; பிலிப்பியர் 4:13; 1 யோவான் 2:6; யாக்கோபு 1:7; ஓம்னி 1:26; மரோனி 10:32 பார்க்கவும்.

  15. வேதங்கள் இதைப்பற்றிய முழு விவரங்கள் கொண்டுள்ளன, இரண்டு மட்டும் இங்கே:1 நேபி 2:16; ஏனோஸ் 1:1–4.

  16. லூக்கா 24:32; 2 நேபி 33:1; யாக்கோபு 3:2; மரோனி 8:26; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3 பார்க்கவும்.

  17. 2 தீமோத்தேயு 3:15–16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:3–4; 88:66; 113:10 பார்க்கவும்.

  18. 1 தெசலோனிக்கேயர் 1:5; 2 நேபி 26:13–20; ஆல்மா 26:13; 31:5; ஏலமன் 3:29; 5:17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–6; 42:61; 43:8–10; 50:17–22; 68:4 பார்க்கவும்.

  19. யோவான் 6:63; 17:17; ஆல்மா 5:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:43–45; 88:66; 93:36 பார்க்கவும்.

  20. யோவான் 15:3; 1 பேதுரு 1:23; மோசியா 1:5; ஆல்மா 5:7, 11–13; 32:28, 41–42; 36:26; 62:45; ஏலமன் 14:13 பார்க்கவும்.

  21. 2 நேபி 31:19–21; 32:3, 5 பார்க்கவும்.

  22. Russell M. Nelson, “We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67.

  23. Dale G. Renlund, “Choose You This Day,” Liahona, Nov. 2018, 104.

  24. இந்த எண்ணிக்கை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், கனடாவிலும் முக்கியமாக, சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும், அண்மை வரை சபை நிகழ்ச்சியின் பாகமாக சாரண நிகழ்ச்சிகள் இருந்தன. சாரணத்தில் பங்கேற்காத பகுதிகளில் தேவைகளின் எண்ணிக்கை 200க்கும் அதிகம். கூடுதலாக, குடும்பங்களுக்கு முழு அனுபவத்தையும் குழப்பமாக்கி, சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும், வாலிபர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டன.

  25. Let Them Lead,” ChurchofJesusChrist.org/callings/aaronic-priesthood-quorums/my-calling/leader-instruction/let-them-lead பார்க்கவும்.

  26. ஓம்னி 1:26; 3 நேபி 9:20; 12:19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:34 பார்க்கவும். “எல்லாவற்றையும் தியாகம் செய்ய தேவைப்படாத மதம், வாழ்க்கைக்கும் இரட்சிப்புக்கும் தேவையான விசுவாசத்தை உற்பத்தி செய்ய தேவையான வல்லமை பெற்றுள்ளது.”(Lectures on Faith [1985], 69).

  27. Ezra Taft Benson, The Teachings of Ezra Taft Benson (1988), 167; in Preach My Gospel: A Guide to Missionary Service (2019), 13; see also Russell M. Nelson, “Hope of Israel,” HopeofIsrael.ChurchofJesusChrist.org.

  28. Meeting with Elder David A. Bednar; see also “2020 Temple and Family History Leadership Instruction,” Feb. 27, 2020, ChurchofJesusChrist.org/family-history.

  29. Neal A. Maxwell, “Unto the Rising Generation,” 11. மூப்பர் மாக்ஸ்வெல் தொடர்ந்தார்: “நடைமுறையில், ஒருவரை ஜெபம் பண்ணவோ, அல்லது திருவிருந்து பரிமாறவோ அழைக்க மட்டும் எத்தனை உதவிக்காரன் மற்றும் ஆசிரியர் குழும தலைமைகள் உள்ளன? சகோதரரே, இவை உண்மையாகவே விசேஷித்த வரங்கள், சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டால், அவரகள் விசேஷித்த காரியங்கள் செய்வர்!”

  30. General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 2.2, ChurchofJesusChrist.org.பார்க்கவும்.

  31. Quorum and Class Presidency Resources,” “Using Come, Follow Me—For Aaronic Priesthood Quorums and Young Women Classes,” உள்ளிட்ட பல ஆதாரங்கள் இளைஞர்களை வழிநடத்த உதவ சுவிசேஷ நூலகத்திலும் , Young Women classes and Aaronic Priesthood quorums in “Ward or Branch Callings” ஆதாரங்களிலும் கிடைக்கின்றன.

  32. Russell M. Nelson, “Hope of Israel,” HopeofIsrael.ChurchofJesusChrist.org. அந்த ஆராதனையின்போதே ஒருவேளை தலைவர் நெல்சன் சொன்னார்: “நமது பரலோக பிதா தன் அநேக உத்தமமான ஆவிகளை வைத்திருக்கிறார்—ஒருவேளை நாம் அவரது அருமையான குழு என சொல்லலாம்—இந்த கடைசி கட்டத்துக்கு. அந்த உத்தமமான ஆவிகள்—அந்த அருமையான வீரர்கள்—நீங்கள்!”

  33. Russell M. Nelson, opening remarks in “Children and Youth: A Face to Face Event with Elder Gerrit W. Gong,” Nov. 17, 2019, broadcasts.ChurchofJesusChrist.org.

  34. தலைவர் நெல்சன் சொன்னார்: “இளைஞர்கள் வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும், குறிப்பாக வகுப்பு மற்றும் குழும தலைமைகளில் சேவைசெய்ய அழைக்கப்பட்டு, பணிக்கப்பட்டவர்களை. ஆசாரியத்துவ அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தங்கள் வகுப்பு அல்லது குழுமத்தை வழிநடத்த எப்படி உணர்த்துதல் பெறுவது என அவர்கள் கற்பார்கள்”(in “Children and Youth Introductory Video Presentation,” Sept. 29, 2019, ChurchofJesusChrist.org).

    மூப்பர் க்வெண்டின் எல். குக் சொன்னார், “இளைஞர்கள் தாங்களாகவே செய்ய முடிவதை பெற்றோரும் தலைவர்களும் எடுத்துக்கொள்ளாமல், இளம்வயதிலேயே அதிக தனிப்பட்ட பொறுப்பெடுக்க நமது இளைஞர்கள் கேட்கப்பட்டிருக்கிறார்கள்”(“Adjustments to Strengthen Youth,” Liahona, Nov. 2019, 40).

  35. ஜலைவர் ஜார்ஜ் க்யூ. காநன் போதித்தார்: “உலகத்தையும், பொல்லாங்கனின் தீமைகள் அனைத்தையும், காணப்படுகிற மற்றும் காணப்படாதவற்றையும் எதிர்கொள்ளவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் சத்தியத்தை நிலைவரப்பண்ணவும், எல்லா விளைவுகளுக்கும் பயமின்றி நமது தேவனின் சீயோனை ஸ்தாபிக்கவும் கட்டவும் தைரியமும் தீர்மானமும் உல்ளவர்களை இவ்வூழிய காலத்துக்குகாக தேவன் ஒதுக்கி வைத்திருந்தார். ஒருபோதும் வீழ்த்தப்படாமலிருக்க சீயோனின் அஸ்திபாரத்தைப் போடவும், தேவனை கனம்பண்ணுகிற நீதியான ஒரு சந்ததியை எழுப்பவும், அவரை மேலாக கனம்பண்ணவும், எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு கீழ்ப்படிந்திருக்கவும், இத்தலைமுறையில் அந்த ஆவிகளை அவர் அனுப்பினார் ” (“Remarks,” Deseret News, May 31, 1866, 203); see also Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 186.

  36. மரோனி 10:32.