பொது மாநாடு
இப்படிப்பட்ட மகத்தான காரணத்துக்காக நாம் தொடர்ந்து போகக்கூடாதா?
ஏப்ரல் 2020 பொது மாநாடு


இப்படிப்பட்ட மகத்தான காரணத்துக்காக நாம் தொடர்ந்து போகக்கூடாதா?

சபையை ஸ்தாபிக்க அநேக பிற விசுவாசமிக்க ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுடன் ஜோசப் மற்றும் ஹைரம் ஸ்மித் செலுத்திய விலைக்கிரயத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட அற்புதமான தொடக்கத்துக்காக தலைவர் அவர்களே உங்களுக்கு மிகவும் நன்றி. சகோதர சகோதரிகளே, இருநூற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, வடகிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில், நியூ இங்கிலாந்து என அறியப்பட்ட பகுதியில், வெர்மாண்டில் ஜோசப்புக்கும் லூசி மாக் ஸ்மித்துக்கும் ஒரு சிறு பையன் பிறந்தான்.

ஜோசப்பும் லூசி மாக் ஸ்மித்தும் இயேசு கிறிஸ்துவை நம்பி, பரிசுத்த வேதங்களைப் படித்து, உருக்கமாக ஜெபித்து, தேவனில் விசுவாசத்துடன் நடந்தார்கள்.

புதிய குழந்தை மகனுக்கு ஜோசப் ஸ்மித் ஜூனியர் எனப் பெரிட்டார்கள்.

ஸ்மித் குடும்பம் பற்றி பிரிகாம் யங் சொன்னார்: “கர்த்தர் தன் கண்களை [ஜோசப் ஸ்மித்] மீதும், அவரது தகப்பன் மீதும், தகப்பனின் தகப்பன் மீதும், தெளிவாக ஆபிரகாம்வரை அவர்களது முற்பிதாக்கள் மீதும், ஆபிரகாமிலிருந்து பிரளயம் வரைக்கும், பிரளயத்திலிருந்து ஏனோக்கு, ஏனோக்கிலிருந்து ஆதாம்வரை வைத்திருந்தார். அதன் ஊற்றிலிருந்து அந்த மனுஷன் பிறக்கும்வரை அந்த இரத்தம் சுற்றி வந்திருப்பதையும், குடும்பத்தையும் அவர் கண்காணித்திருக்கிறார். [ஜோசப் ஸ்மித்] நித்தியத்தில் முன்னியமிக்கப்பட்டார்.” 1

அவரது குடும்பத்தால் நேசிக்கப்பட்டு, ஜோசப் ஜூனியர் பிறக்கும்போது, கிட்டத்தட்ட ஆறு வயதாயிருந்த அவரது மூத்த சகோதரன் ஹைரத்துக்கு ஜோசப் குறிப்பாக நெருக்கமாக இருந்தார்.

கடந்த அக்டோபரில், ஜோசப் பிறந்த வெர்மாண்ட், ஷாரனில், ஸ்மித் வீட்டிலிருந்த அடுப்புக்கல் அருகில் நான் அமர்ந்தேன். ஜோசப் மீது ஹைரமின் அன்பை நான் உணர்ந்து, தன் கரங்களில் தன் குழந்தை சகோதரனைத் தாங்கிக்கொண்டு, எப்படி நடப்பது என அவனுக்குக் கற்றுக்கொடுத்ததையும் நினைத்தேன்.

தங்கள் குடும்பத்தை எண்ணற்ற நேரங்களில் நகர்த்தி கடைசியாக நியூ இங்கிலாந்தில் முயற்சியை நிறுத்தி, இன்னும் மேற்கில் நியூயார்க் மாகாணத்துக்கு நகர்த்த தைரியமாகத் தீர்மானிக்க கட்டாயப்படுத்திய தனிப்பட்ட பின்னடைவுகளை ஸ்மித் அப்பாவும் அம்மாவும் அனுபவித்தார்கள்.

குடும்பம் ஒற்றுமையாக இருந்ததால், இந்த சவால்களில் அவர்கள் தப்பித்தார்கள் மற்றும் நியூயார்க், பல்மைரா அருகில் மான்செஸ்டரில் மரங்கள் நிறைந்த நூறு ஏக்கர் நிலத்தில் (0.4 கி.மீ.2) திரும்பவும் தொடங்கும் தைரியமிக்க வேலையை ஒன்றாக எதிர்கொண்டனர்.

நிலத்தைக் காலிசெய்து, தோட்டங்களையும் வயல்களையும் நட்டு, சிறிய மரவீட்டையும், பிற பண்ணை அமைப்புக்களையும் செய்து, தினக்கூலிகளாக வேலைக்குச் சென்று, நகரத்தில் விற்க வீட்டு உபயோகப் பொருட்கள் செய்து விற்பது—என அந்த தொடக்கம் ஸ்மித் குடும்பத்துக்கு சரீர, உணர்ச்சி பூர்வ சவால்களைக் கொடுத்ததை நம்மில் அநேகர் உணர்வார்களா என உறுதியாக எனக்குத் தெரியவில்லை.

மேற்கு நியூயார்க்கில் குடும்பம் வந்தடைந்த நேரத்தில், அப்பகுதி—இரண்டாம் மாபெரும் எழுச்சி என அறியப்படுகிற மத ஆர்வத்தில் தகித்துக்கொண்டிருந்தது.

மதக் குழுக்கிடையேயான இந்த வாக்குவாதம் மற்றும் உரசல்களின் நேரத்தில், முதல் தரிசனம் என இன்று அறியப்படுகிற அதிசயமான தரிசனத்தை ஜோசப் கண்டார். நான் அதிலிருந்து எடுத்துக்கொள்கிற நான்கு முக்கிய விவரங்களை பெறுவதற்காக நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.2

ஜோசப் பதிவு செய்தார், “இந்த மாபெரும் மத ஆர்வத்தின் நேரத்தில், என் மனம் கடுமையான சிந்தனைக்கும் பெரும் அல்லாடலுக்கும் உள்ளானது. ஆனால் என் உணர்வுகள் ஆழமானதாகவும், கூர்மையானதாகவும் இருந்தாலும், நேரம் அனுமதித்தபடி அவர்களது பல கூட்டங்களில் அடிக்கடி நான் கலந்திருந்தாலும் இந்த குழுக்களிலிருந்து இன்னும் நான் தனித்திருந்தேன். … பல்வேறு சபைகளுக்கிடையே குழப்பமும் விவாதமும் பெரிதாக இருப்பினும், மனுஷரோடும் விஷயங்களோடும் அறிமுகமில்லாத என்னைப்போன்ற இளைஞனுக்கு யார் சொல்வது சரி, யார் தவறு என்ற குறிப்பான முடிவுக்கு வர முடியாததாக இருந்தது.”3

தன் கேள்விகளுக்கு பதில் தேடி ஜோசப் வேதாகமத்திடம் திரும்பினார், யாக்கோபு 1:5 வாசித்தார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக் கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.“4

அவர் குறிப்பிட்டார்: “அந்த நேரத்தில் எனக்கு இதுபோல் மனித இருதயத்துக்கு அதிக வல்லமையுடன் வேதத்திலிருந்து எந்த பாகமும் ஒருபோதும் வந்ததில்லை. என் இருதயத்தின் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் அதிக ஆற்றலுடன் அது நுழைந்ததுபோல் தோன்றியது. நான் அதை மீண்டும் மீண்டும் சிந்தித்தேன்.”5

வாழ்க்கையின் கேள்விகளுக்கு வேதாகமம் எல்லா பதில்களையும் கொண்டிருக்கவில்லை என ஜோசப் உணர்ந்தார். மாறாக, ஜெபத்தின் மூலம் தேவனுடன் நேரடியாக தொடர்புகொண்டு, அவர்களது கேள்விகளுக்கு அவர்கள் பதில்களை எப்படிக் காண முடியும் என ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது போதிக்கிறது.

அவர் சொன்னார்: “ஆகவே, தேவனிடம் கேட்கும் எனது தீர்மானத்தின்படி, அதற்கு ஏற்றார்போல, முயற்சி செய்ய நான் காட்டுக்குப் போனேன். ஆயிரத்து எண்ணூற்றி இருபதின் முன்வசந்தகாலத்தில், அது தெளிவான நாளின் அழகிய காலை.”6

ஜோசப் சொன்னார், அதன் பின் விரைவிலேயே, “ஒரு [ஒளிக்கற்றை] என் மீது அமர்ந்தது, நான் இருவரைப் பார்த்தேன், அவர்களது பிரகாசமும் மகிமையும் எல்லா விவரிப்பையும் கடந்த அது, எனக்கு மேலே ஆகாயத்தில் நின்றது. அவர்களில் ஒருவர் என்னிடம் பேசினார், என்னைப் பெயர் சொல்லி அழைத்து சொன்னார், அடுத்தவரைக் காட்டி—[ஜோசப்], இவர் என் நேச குமாரன். அவர் கூறுவதைக் கேள்!” 7

இரடசகர் பின்பு பேசினார், “ஜோசப், என் குமாரனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. உன் வழியே போ, என் கொள்கைகள் படி நட, என் கட்டளைகளைக் காத்துக்கொள். இதோ, நான் மகிமையின் தேவன். என் நாமத்தை நம்புபவர்கள் யாவரும் நித்திய ஜீவன் பெறும்படியாக, நான் உலகத்துக்காக சிலுவையிலறையப்பட்டேன்.”8

ஜோசப் கூறினார்,” உடனே, ஆகவே, என் கட்டுப்பாட்டைப் பெற்று, பேசும்படிக்கு, ஒளியில் எனக்கு மேலே நின்றவர்களிடம், எல்லா பிரிவுகளிலும் சரியானது எது என நான் கேட்டேன்.”9

அவர் நினைவுகூர்ந்தார்: “எல்லா மத பிரிவுகளும் சரியற்ற கோட்பாடுகளை நம்பிக்கொண்டிருந்தன, அவரது சபையாக அவற்றில் ஒன்றும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர்கள் என்னிடம் சொன்னார்கள். மற்றும் … அதே நேரத்தில் சுவிசேஷத்தின் முழுமை வருங்காலத்தில் ஒரு சமயத்தில் எனக்குத் தெரியப்படுத்தப்படும் என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றேன்.”10

ஜோசப் மேலும் குறிப்பிட்டார், “இந்த தரிசனத்தில் நான் அநேக தூதர்களைப் பார்த்தேன்.”11

இந்த மகிமையான தரிசனத்தைத் தொடர்ந்து, ஜோசப் எழுதினார்: “என் ஆத்துமா அன்பால் நிறைக்கப்பட்டது, அநேக நாட்களுக்கு பெரும் சந்தோஷத்தால் நான் களிகூர முடிந்தது. … கர்த்தர் என்னோடு இருந்தார்.”12

தேவனின் தீர்க்கதரிசியாவதற்கு தம் ஆயத்தத்தைத் தொடங்க பரிசுத்த தோப்பிலிருந்து அவர் வெளிவந்தார்.

பூர்வகால தீர்க்கதரிசிகள் அனுபவித்ததை கற்கவும் ஜோசப் தொடங்கினார்— மறுதலிப்பு, எதிர்ப்பு, மற்றும் துன்புறுத்தல். மத எழுச்சியில் சுறுசுறுப்பாக இருந்த ஒரு ஊழியக்காரரைப் பார்த்து அவர் சொன்னதைக் கேட்டு, பகிர்ந்ததை ஜோசப் நினைவுகூர்ந்தார்:

“அவரது நடத்தை குறித்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்; இவை அனைத்தும் பிசாசினுடையது, இந்நாட்களில் தரிசனங்கள் வெளிப்படுத்தல்கள் போன்றவை இல்லை, அப்படிப்பட்ட காரியங்கள் யாவும் அப்போஸ்தலர்களோடு நின்றுவிட்டன, அவை எதுவும் இனிமேல் இருக்காது என சொல்லி என் உரையாடலை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் பெரும் பிணக்கு ஏற்படுத்தினார்.

“எனினும் மத பிரச்சாரகர்களிடையே நான் சொன்ன கதை என் மீது வெறுப்பை பெருமளவில் தூண்டியது, மற்றும் பெரும் துன்புறுத்தலை ஏற்படுத்தியது, அது அதிகரிக்கத் தொடங்கியது, … அது எல்லா பிரிவினரிடையேயும் பொதுவாக இருந்தது,—என்னைத் துன்புறுத்த அனைவரும் இணைந்தனர், என நான் விரைவில் கண்டேன்.”13

மூன்று ஆண்டுகளுக்குப்பின்பு, 1823ல், கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் தொடர் பகுதியாக, பரலோகங்கள் மீண்டும் திறந்தன. மரோனி என்ற பெயருள்ள ஒரு தூதன் அவரிடத்தில் தோன்றி, “தேவன் நான் செய்யும்படி ஒரு பணியை வைத்திருக்கிறார் [மற்றும்] அதில் அமெரிக்காவின் பூர்வகுடிகளுக்கு இரட்சகரால் கொடுக்கப்பட்டவாறே தங்கத்தகடுகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது, அதில் நித்திய சுவிசேஷத்தின் முழுமை அடங்கியிருக்கிறது” என சொன்னதை ஜோசப் குறிப்பிட்டார்.14

அவ்வாறே, இன்று மார்மன் புஸ்தகம் என்றறியப்படுகிற பூர்வகாலப் பதிவேட்டை ஜோசப் பெற்று, மொழிபெயர்த்து, பிரசுரித்தார்.

அவரது தொடர்ந்த ஆதரவாளரான அவரது சகோதரன் ஹைரம், விசேஷமாக 1813ல் அவரது வேதனைமிக்க உயிர் பயமுறுத்தும் கால் அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, தங்கத்தகடுகளின் சாட்சிகளில் ஒருவரானார். 1830ல் அமைக்கப்பட்டபோது, இயேசு கிறிஸ்து சபையின் ஆறு அங்கத்தினர்களில் அவரும் ஒருவர்.

அவர்கள் வாழ்ந்தபோது, ஜோசப்பும் ஹைரமும் ஒன்றாக கும்பல்களையும் துன்புறுத்தலையும் எதிர்கொண்டனர். உதாரணமாக, 1838–39 அதிகமான குளிர்கால மாதங்களில் ஐந்து மாதங்கள் மிசௌரியின் லிபர்ட்டி சிறையில் மிக கொடிய நிலைகளில் இருந்தனர்.

ஏப்ரல் 1839ல், லிபர்ட்டி சிறைச்சாலையில் தங்கள் சூழ்நிலை பற்றி ஜோசப் தன் மனைவியாகிய எம்மாவுக்கு எழுதினார், “நெருக்கடியின் கீழ், இரவும்பகலும் காவலில், சுவர்கள், அடுப்புகள், கூச்சலிடும் இரும்பு கதவுகள் மற்றும் தனிமையான இருட்டான அசிங்கமான சிறையின் சுவர்களுக்குள் நான் இருப்பது ஐந்து மாதங்களும் ஆறுநாட்களும் என நம்புகிறேன். … எந்த விதமாகவும் நாங்கள் இந்த இடத்திலிருந்து மாற்றப்படுவோம், எங்களுக்கு என்ன ஆனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எங்களுக்கு என்னவேண்டுமானாலும் ஆகட்டும், இதைவிட மோசமான குழியில் நாங்கள் இறங்க முடியாது. க்ளே கௌண்டி, மிசௌரியின் லிபர்ட்டிக்குப் பிறகு நாங்கள் ஒருபோதும் இங்கிருக்க விரும்ப மாட்டோம். என்றென்றும் நினைக்க நாங்கள் போதுமானபடி பெற்றுவிட்டோம்.”15

துன்புறுத்தலின் மத்தியில், அவர் விரும்பினால் தன் எதிரிகளிடமிருந்து, தப்பிக்கும் உறுதி உள்ளிட்ட கர்த்தரின் வாக்குத்தத்தத்தில் விசுவாசத்தை ஹைரம் காட்டினார். ஜோசப் ஸ்மித்தின் கரங்களில் 1835ல் ஹைரம் பெற்ற ஆசீர்வாதத்தில், கர்த்தர் அவருக்கு வாக்களித்தார், “உன் சத்துருக்களின் கையிலிருந்து தப்பிக்க நீ வல்லமை பெற்றிருப்பாய். சோர்வில்லாத உற்சாகத்துடன் உன் உயிர் தேடப்படும், ஆனால் நீ தப்பிப்பாய்.இது உன்னை மகிழ்வித்தால், நீ விரும்பினால், தேவனை மகிமைப்படுத்த உன் உயிரை நீயாகவே கொடுக்க வல்லமை பெறுவாய்.” 16

ஜூன் 1844ல், வாழவோ அல்லது தேவனை மகிமைப்படுத்த உயிரை விடவும், தன் அன்பு சகோதரனாகிய ஜோசப்புடன் ஒன்றாக அருகருகே அவரது உயிரை விடவும், “தன் இரத்தத்தால் தன் சாட்சியை முத்திரிக்கவும்” ஒரு தேர்வு ஹைரமுக்கு கொடுக்கப்பட்டது.17

அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்க தங்கள் முகங்களை சாயம்பூசி, கோழைகளான ஆயுதந்தரித்த கும்பலால் அவர்கள் கொடுமையாக கொலைசெய்யப்பட்ட கார்த்தேஜில் விதிசூழ்ச்சி செய்த வாரத்துக்குப்பிறகு, ஜோசப் பதிவுசெய்தார், “சின்சின்னாட்டிக்கு செல்ல அடுத்த நீராவி படகில் தன் குடும்பத்துடன் செல்ல என் சகோதரனாகிய ஹைரமுக்கு நான் புத்திமதி சொன்னேன்.”

நான் ஹைரமின் பதிலை நினைக்கும்போது இப்பொழுதும் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன்: “ஜோசப் நான் உன்னை பிரிய முடியாது.” 18

ஆகவே ஜோசப்பும் ஹைரமும் கார்த்தேஜுக்கு சென்றனர், அங்கு அவர்கள் கிறிஸ்துவுக்காகவும், நாமத்துக்காகவும், இரத்த சாட்சியாக மரித்தார்கள்.

“கர்த்தரின் தீர்க்கதரிசியும் ஞானதிருஷ்டிக்காரருமான ஜோசப் ஸ்மித், மார்மன் புஸ்தகத்தை வெளிக்கொண்டு வந்தார், … அதை அவர் தேவ வரத்தாலும் வல்லமையாலும் மொழிபெயர்த்தார், இரண்டு கண்டங்களில் பதிப்பிக்கும் காரணமாக இருந்திருக்கிறார், அது கொண்டுள்ள நித்திய சுவிசேஷத்தின் முழுமையை பூமியின் நான்கு திசைகளுக்கும் அனுப்பியிருக்கிறார், கோட்பாடும் உடன்படிக்கைகளுமாகிய இந்த புஸ்தகத்தில் அடங்கியுள்ள, வெளிப்படுத்தல்களையும், கட்டளைகளையும் மனுஷ குமாரரின் நன்மைக்காக பிற அனேக ஞானமிக்க ஆவணங்களையும் அறிவுறைகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார், பிற்காலப் பரிசுத்தவான்களின் ஆயிரக்கணக்கானோரை கூட்டிச் சேர்த்திருக்கிறார், ஒரு மாபெரும் பட்டணத்தை நிறுவியிருக்கிறார், அழிக்க முடியாத புகழையும் பெயரையும் விட்டுச் சென்றிருக்கிறார். … பூர்வ காலங்களில் கர்த்தரின் அபிஷேகம் பெற்ற மிகுதியானவர்கள் போல, ஜோசப் தன் ஊழியத்தையும் பணிகளையும் தன் சொந்த இரத்தத்தால் முத்திரித்திருக்கிறார், அப்படியே அவரது சகோதரர் ஹைரமும்..வாழ்க்கையிலும் அவர்கள் பிரிந்திருக்கவில்லை, மரணத்திலும் அவர்கள் பிரிக்கப்படவில்லை.19

மரணத்தைத் தொடர்ந்து, ஜோசப் மற்றும் ஹைரமின் சரீரங்கள் நவ்வூவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டு, குளிப்பாட்டப்பட்டு, தங்களின் அன்புக்குரியவர்களை ஸ்மித் குடும்பத்தினர் பார்க்க உடுத்தப்பட்டது. “நீண்ட காலமாக ஒவ்வொரு நரம்பையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன், என் ஆத்துமாவின் முழு சக்தியையும் எழுப்பியிருக்கிறேன், என்னை பெலப்படுத்துமாறு தேவனிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் அந்த அறையில் நுழைந்தவுடன், என் கண்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட என் இரு மகன்களும் ஒன்றாக கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டேன், என் குடும்பத்தினரின் முனகல்களையும் பெருமூச்சையும் அவர்களது மனைவிகள், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் உதடுகளிருந்து அழுகையைக் கேட்டேன், இது மிக அதிகம். என் ஆத்துமாவின் வியாகுலத்தில் கர்த்தரிடத்தில் கூக்குரலிட்டு விழுந்தேன், ‘என் தேவனே! என் தேவனே! நீர் ஏன் என் குடும்பத்தை கைவிட்டீர்?’”20

அந்த துயரம் மற்றும் சோகமான தருணத்தில் அவர்கள் சொன்னதை அவர் நினைவுகூர்ந்தார், “அம்மா எங்களுக்காக அழாதீர்கள், நாங்கள் உலகத்தை அன்பால் ஜெயித்திருக்கிறோம்.”21

அவர்கள் உண்மையாகவே உலகத்தை ஜெயித்திருக்கிறார்கள். வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்ட விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் போல, ஜோசப்பும் ஹைரமும், பெரும் பாடுகளிலிருந்து வெளிவந்திருக்கிறார்கள், தங்கள் வஸ்திரங்களை கழுவி, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் வெண்மையாக்கியிருக்கிறார்கள் … தேவனின் சிம்மாசனத்துக்கு முன்பு நிற்கிறார்கள், அவரது ஆலயத்தில் இரவும் பகலும் சேவை செய்கிறார்கள், சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் அவர்களுக்கு மத்தியில் வாசம் செய்வார்.

“இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது அவர்கள்மேல் படுவதுமில்லை.

“சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவதண்ணீருள்ள ஊற்றண்டைக்கு நடத்துவார். தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.”22

முதல் தரிசனத்தின் 200வது ஆண்டு நிறைவை, இந்த சந்தோஷமிக்க தருணத்தை நாம் கொண்டாடும்போது, நாம் இன்று பெற்றிருக்கிற அநேக ஆசீர்வாதங்களையும் இந்த அனைத்து வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களையும் நீங்களும் நானும் அனுபவிக்கும்படிக்கு, சபையை ஸ்தாபிக்க, அனேக விசுவாசமிக்க ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுடன் ஜோசப்பும் ஹைரம் ஸ்மித்தும் செலுத்திய விலைக்கிரயத்தை நாம் எப்போதும் நினைவுகொள்ள வேண்டும். அவர்களது விசுவாசம் ஒருபோதும் மறக்கப்பட முடியாது!

ஜோசப் மற்றும் ஹைரமும் அவர்களது குடும்பங்களும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என நான் அடிக்கடி வியந்திருக்கிறேன். அது நடக்காத வழிகளில் தங்கள் பாடுகள் மூலமாக அவர்கள் தேவனை அறிந்திருக்கலாம். அதன் மூலம் கெத்சமனேவையும் சிலுவையில் இரட்சகரையும் பிரதிபலித்தார்கள். பவுல் சொன்னதுபோல, “ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும், உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.”23

1844ல் அவரது மரணத்துக்கு முன்பு ஜோசப் பரிசுத்தவான்களுக்கு ஆவிநிறைந்த கடிதம் எழுதினார். அது செயல்பட ஒரு அழைப்பு, அது இன்றளவும் சபையில் தொடர்கிறது.

“சகோதர [சகோதரிகளே], இப்படிப்பட்ட மகத்தான காரணத்துக்காக நாம் தொடர்ந்து போகக்கூடாதா? முன்னோக்கிச் செல்லுங்கள், பின்னோக்கியல்ல. சகோதர [சகோதரிகளே], தைரியமாக மேலும் மேலும் ஜெயத்தை நோக்கி. …

“ … ஆகவே ஒரு சபையாக ஜனமாக, பிற்காலப் பரிசுத்தவான்களாக, கர்த்தருக்கு நீதியில் ஒரு காணிக்கையைப் படைப்போமாக.”24

இந்த வாரக்கடைசியில் 200வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின்போது, நாம் ஆவிக்குச் செவிகொடுப்போமாக, வருகிற நாட்களில் கர்த்தருக்கு நீதியில் என்ன காணிக்கையை கொடுப்போம் என்பதைக் கருத்தில் கொள்வோமாக. தைரியமாக இருங்கள்—நீங்கள் நம்பும் ஒருவருடன் இதைப் பகிருங்கள், மிக முக்கியமாக இதைச் செய்ய தயவுசெய்து நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஜோசப், ஹைரம் ஸ்மித் மற்றும் பிற அனைத்து விசுவாசமிக்க பரிசுத்தவான்களாகிய அந்த விசேஷித்த சகோதரர்களின் விசுவாசமிக்க காணிக்கைகளால் அவர் மகிழ்ந்தது போல, நீதியில் நமது இருதயங்களிலிருந்து அவருக்கு ஒரு காணிக்கையை நாம் கொடுக்கும்போது, இரட்சகர் மகிழ்வார் என நான் அறிகிறேன். இந்த சத்தியங்கள் பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த தூய நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.