பொது மாநாடு
மார்மன் புஸ்தகம் வெளிவருதல்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


மார்மன் புஸ்தகம் வெளிவருதல்

வரலாற்று உண்மைகளும், மார்மன் புஸ்தகத்தின் விசேஷ சாட்சிகளும் இது வெளிவந்தது உண்மையாகவே அற்புதம் என சாட்சியளிக்கின்றன.

ஒரு சந்தர்ப்பத்தில் சபையின் மூப்பர்களோடு சந்தித்தபோது, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார்: “மார்மன் புஸ்தகத்தையும், வெளிப்படுத்தல்களையும் எடுத்துப் போடுங்கள், நமது மார்க்கம் எங்கே? நம்மிடம் ஒன்றுமில்லை.”1 முதல் தரிசனத்தைத் தொடர்ந்து, மார்மன் புஸ்தகத்தின் அற்புதமான வெளிவருதல், இந்த ஊழியக்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் திறக்கும் இரண்டாம் அடிப்படையான மைல்கல் ஆகும். அது தன் பிள்ளைகள் மீது தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் அன்பு—நமது விசுவாசத்தின் தலைமை மூலைக்கல்—அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நேபியர் மத்தியில் அவரது உன்னதமான ஊழியம்பற்றி சாட்சியளிக்கிறது. 2 இஸ்ரவேல் வீட்டின் மீதியானவர்கள் அவரது பிற்காலப் பணி மூலம் ஒன்றாக வேண்டும் மற்றும் என்றென்றைக்குமாய் அவர்கள் தள்ளப்படவில்லை எனவும் சாட்சியளிக்கிறது.3

வேதத்தின் இந்த பரிசுத்த புஸ்தகம் வருதலை நாம் படிக்கும்போது—பரிசுத்த தூதனிடமிருந்து தங்கத்தகடுகளை தீர்க்கதரிசி ஜோசப் பெறுவதிலிருந்து, “தேவ வல்லமையின் வரத்தால்” 4 அதன் மொழிபெயர்ப்பு, அது பாதுகாக்கப்பட்டது, மற்றும் கர்த்தரின் கரத்தால் அது பிரசுரிக்கப்பட்டதுவரை நடந்தது முழுவதும் அற்புதம் என நாம் உணர்கிறோம்.

தூதனாகிய மரோனியின் கரங்களிலிருந்து தங்கத்தகடுகளை ஜோசப் ஸ்மித் பெறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே மார்மன் புஸ்தகம் வருதல் தொடங்கியது. பூர்வகால தீர்க்கதரிசிகள் நமது நாளில் இந்த பரிசுத்த புஸ்தகத்தின் வருகைபற்றி தீர்க்கதரிசனமுரைத்தனர்.5 அது வரும்போது தேவ வார்த்தை குறித்து ஜனங்கள் பிணக்கு கொண்டிருப்பார்கள் என முத்திரையிடப்பட்ட புஸ்தகம்பற்றி ஏசாயா பேசினான். “அவரது அற்புதமும் ஆச்சரியமுமான பணியை” தேவன் நிறைவேற்றும்படியாக, “அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகச்” செய்து, சாந்தமானவர்கள் “கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் மீட்பருக்குள் களிகூர்ந்து,” அந்த சூழ்நிலை, கருப்பொருளைக் கொடுக்கும். 6 யூதாவின் கோல் (வேதாகமம்) மற்றும் எப்பிராயீமின் கோல் (மார்மன் புஸ்தகம்) ஒன்றாகச் சேர்க்கப்படுவது பற்றி எசேக்கியேல் பேசினான். எசேக்கியேலும் (பழைய ஏற்பாட்டில்), லேகியும் (மார்மன் புஸ்தகத்தில்), பொய்யான கோட்பாட்டை தாறுமாறாக்கவும், சமாதானத்தை நிலைநாட்டவும், உடன்படிக்கைகள் குறித்த அறிவுக்கு நம்மைக் கொண்டுவரவும் அவை “ஒன்றாக வளரும்” என குறிப்பிடுகின்றன.7

செப்டம்பர் 21, 1823 மாலையில், முதல் தரிசனத்தைக் கண்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது உருக்கமான ஜெபங்களின் விளைவாக, பூர்வகால அமெரிக்காவில் கடைசி நேபிய தீர்க்கதரிசியாகிய மரோனி தூதனால் சந்திக்கப்பட்டார். இரவு முழுவதும் நீடித்த அவர்களது சந்திப்புக்குப் பிறகு, அவர் நிறைவேற்றும்படி தேவன் ஒரு அற்புதமான பணி வைத்திருக்கிறார் —அமெரிக்க கண்டத்தின் உணர்த்தப்பட்ட பூர்வகால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை மொழிபெயர்த்து உலகுக்கு பிரசுரிக்க வேண்டும் என ஜோசப்பிடம் மரோனி சொன்னான்.8 அடுத்த நாள், நூற்றாண்டுகளுக்கு முன்பு, அவனது வாழ்வின் முடிவில், மரோனியால் தகடுகள் புதைக்கப்பட்ட இடமாகிய, அவரது வீட்டிலிருந்து அதிக தூரத்திலில்லாத இடத்துக்கு ஜோசப் சென்றார். அங்கு ஜோசப் மரோனியைத் திரும்பவும் பார்த்தார், வருங்காலத்தில் தகடுகளைப் பெற தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளுமாறு அவருக்கு அவன் அறிவுறுத்தினான்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22ல், கடைசி நாட்களில் கர்த்தரின் ராஜ்யம் எவ்வாறு ஆளுகை செய்யப்படும் என்பது பற்றிய அறிவு குறித்து மரோனியிடமிருந்து ஜோசப் கூடுதல் அறிவுரைகள் பெற்றார். இந்த ஊழியக்காலத்தில் நடக்கவிருக்கிற நிகழ்ச்சிகளின் மகத்துவம் மற்றும் மகிமையை அவ்வாறு திறந்து, தேவ தூதர்களுடன் சந்திப்புக்கள் ஜோசப்பின் ஆயத்தத்தில் அடங்கின.9

1827ல் எம்மா ஹேலுடன் அவரது திருமணம் அந்த ஆயத்தத்தின் பகுதி. அவரது வாழ்க்கை மற்றும் ஊழியம் முழுமைக்கும் தீர்க்கதரிசிக்கு உதவுவதில் அவர் முக்கிய பங்காயிருந்தார். உண்மையில் செப்டம்பர் 1827ல், எம்மா, குன்றுக்கு ஜோசப்புடன் சென்றார், ஜோசப்பின் கரங்களில் பதிவேட்டை மரோனி தூதன் கொடுக்கும்வரை அவர் அவருக்காக காத்திருந்தார். மரோனியின் கரங்களுக்குள் அவை திரும்பக் கொடுக்கப்படும் வரை அவற்றைப் பாதுகாக்கும் அவரது முயற்சிகள் அனைத்தையும் அர்ப்பணித்தால் தகடுகள் பாதுகாக்கப்படும் என ஜோசப் வாக்குத்தத்தம் பெற்றார்.10

என் அன்பு நண்பர்களே, பூர்வகாலங்களிலிருந்து, இன்றைய கண்டுபிடிப்புகளில் அநேகம் தொல்லியல் அகழ்வாராய்ச்சி அல்லது கட்டடம் கட்டும்போதுகூட விபத்துபோல நடக்கலாம். ஜோசப் ஸ்மித் எனினும், தூதனால் தகடுகளிடம் வழிநடத்தப்பட்டார். தானே அது வெளிவந்தது ஒரு அற்புதம்.

மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பின் முறையும் ஒரு அற்புதமாகும். ஒரு பழங்கால மொழியைக் கற்று பூர்வகால எழுத்துக்களை அறிஞர்கள் மொழிபெயர்த்த பாரம்பர்ய முறையில் இந்த பரிசுத்த பதிவேடு “மொழிபெயர்க்கப்படவில்லை”. மொழிகள் பற்றிய அறிவுடன் ஒருவரால் மொழிபெயர்க்கப்படுவதற்கு எதிராக, கர்த்தரால் வழங்கப்பட்ட கருவிகளின் உதவியுடன் ஒரு வெளிப்படுத்தல் போல இம்முறையை நாம் பார்க்க வேண்டும். ஜோசப் ஸ்மித் தேவ வல்லமை மூலம் அறிவித்தார், “நான் மார்மன் புஸ்தகத்தை உருவ எழுத்து முறையினால் மொழிபெயர்த்தேன், அந்த அறிவு உலகத்தால் இழக்கப்பட்டிருந்தது, கல்வியறிவில்லாத இளைஞன், உலக ஞானத்தையும் பதினெட்டு நூற்றாண்டுகளாக அதிகரித்த அஞ்ஞானத்தையும் எதிர்த்து போரிட அந்த அற்புத நிகழ்வில் நான் தனியாக நின்றேன்.” 11 தகடுகளை மொழிபெயர்ப்பதில் கர்த்தரின் உதவி அதை மொழிபெயர்க்க ஜோசப் ஸ்மித் எடுத்துக்கொண்ட அற்புதமான குறைவான நேரத்தை கருத்தில் கொள்ளும்போது இது தெளிவாகிறது.12

மார்மன் புஸ்தக மொழிபெயர்ப்பில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வெளிக்காட்டப்பட்ட தேவ வல்லமை குறித்து ஜோசப்பின் எழுத்தர்களும் சாட்சியளித்தனர். ஆலிவர் கௌட்ரி ஒருமுறை சொன்னார், ஒருபோதும் மறக்க முடியாத நாட்கள் இருந்த—பரலோக உணர்த்துதலால் சொல்லப்பட்ட குரலின் கீழ் உட்கார்ந்தது, அந்த உணர்வின் உயர்வான நன்றியுணர்வை எழுப்பியது. நாளுக்கு நாள், “மார்மன் புஸ்தகத்தை” … அவர் மொழிபெயர்க்கும்போது, அவர் வாயிலிருந்து வருவதை எழுதுவதை நான் தடையின்றி தொடர்ந்தேன். 13

1827ல், தகடுகளை ஜோசப் ஸ்மித் பெற்ற தருணத்திலிருந்து, அவரிடமிருந்து அவற்றை திருட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. “[அவரிடமிருந்து] [தகடுகளைப்] பெற மிக கடினமான உத்திகள் பயன்படுத்தப்பட்டன” மற்றும் “அந்த நோக்கத்துக்காக கண்டுபிடிக்கக்கூடிய ஒவ்வொரு உபாயமும் பயன்படுத்தப்பட்டது” என அவர் குறிப்பிட்டார்.14 தகடுகளைத் திருட விரும்பிய கும்பல்கள் மற்றும் நபர்களிடமிருந்து பாதுகாப்பான இடம் கண்டுபிடித்து, மொழிபெயர்ப்பின் பணியைத் தொடங்குவதற்கு மான்செஸ்டர் நியூயார்க்கிலிருந்து ஹார்மனி பென்சில்வேனியாவுக்கு செல்ல ஜோசப்பும் எம்மாவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.15 ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுவதுபோல, தகடுகளுக்கு ஜோசப் காப்பாளராக இருக்கும் கடினமான கட்டம் இவ்வாறு முடிந்தது. … ஆயினும் பதிவேடு பாதுகாப்பாயிருந்தது, அவற்றைப் பாதுகாக்கும் அவரது போராட்டங்களில், வருங்காலத்தில் அவருக்கு நன்கு பயனளிக்கக்கூடிய தேவன் மற்றும் மனிதனின் வழிகள் பற்றி அதிகம் கற்றார் என்பதில் ஜோசப்புக்கு சந்தேகமில்லை.16

மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்க்கும்போது, தகடுகளைப் பார்க்க கர்த்தர் சாட்சிகளைத் தெரிந்துகொள்வார் என ஜோசப் அறிந்தார்.17 “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்” என்று கர்த்தர்தாமே சொன்ன பகுதி உறுதிசெய்யப்பட்டது.18 ஆலிவர் கௌட்ரியும், டேவிட் விட்மரும், மார்ட்டின் ஹாரிஸும் இந்த ஊழியக்காலத்தில் தேவனின் அற்புதமான பணியை நிறுவுவதில் ஜோசப்பின் முதல் தோழர்கள், மார்மன் புஸ்தகம் பற்றிய விசேஷித்த சாட்சி சொல்ல அழைக்கப்பட்ட முதல் சாட்சிகள். கர்த்தரின் சமூகத்திலிருந்து வந்த ஒரு தூதன் பூர்வகால பதிவேட்டை அவர்களுக்கு காட்டி, அந்த தகடுகளிலிருந்த பொறிக்கப்பட்ட எழுத்துக்களை அவர்கள் பார்த்ததாகவும் அவர்கள் சாட்சியளித்தனர். பூர்வகால பதிவேடு தேவ வரத்தாலும் வல்லமையாலும் மொழிபெயர்க்கப்பட்டது என பரலோகத்திலிருந்து அறிவித்த தேவனின் குரலை அவர்கள் கேட்டதாகவும் அவர்கள் சாட்சியளித்தனர். பின்பு உலகம் முழுமைக்கும் அது பற்றி சாட்சியமளிக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டனர்.19

அவர்களே தங்கத் தகடுகளைப் பார்க்கவும், உலகத்துக்கு மார்மன் புஸ்தகம் பற்றிய சத்தியத்தையும் தெய்வீகத் தன்மையையும் பற்றிய விசேஷித்த சாட்சிகளாயிருக்கவும் கர்த்தர் அற்புதமாக மற்றும் எட்டு சாட்சிகளை அழைத்தார். அவர்களும் பார்த்து, தகடுகளையும் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் கவனமாக பரிசோதித்தனர். உபத்திரவங்கள், துன்புறுத்தல்கள், மற்றும் எல்லாவிதமான கட்டங்களின் மத்தியிலும்கூட, அவர்களில் சிலர் தங்கள் விசுவாசத்தில் தவறினாலும் கூட, இந்த தெரிந்துகொள்ளப்பட்ட பதினொரு சாட்சிகள், தாங்கள் தகடுகளைப் பார்த்த சாட்சியங்களை ஒருபோதும் மறுக்கவில்லை. மரோனியின் சந்திப்பு மற்றும் தங்கத் தகடுகள் பற்றிய அறிவுடன் இன்னும் ஜோசப் ஸ்மித் தனியாக இல்லை.

சாட்சிகளுக்கு தகடுகள் காட்டப்பட்ட பிறகு மகிழ்ச்சியால் மேற்கொள்ளப்பட்டு தன் மகன் வீட்டுக்கு வந்ததை லூசி மாக் ஸ்மித் பதிவு செய்கிறார். தன் பெற்றோருக்கு ஜோசப் விளக்கினார், “நான் கிட்டத்தட்ட அதிக பாரம் சுமந்ததிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உணர்கிறேன், உலகத்தில் நான் முற்றிலுமாக தனிமையில் இனியும் இல்லை என்பதால் அது என் ஆத்துமாவைக் களிகூரச் செய்கிறது.” 20

அதன் மொழிபெயர்ப்பு முடிவுக்கு வந்தவுடன், மார்மன் புஸ்தகத்தை அச்சிடுவதில் ஜோசப் ஸ்மித் அதிக எதிர்ப்பை எதிர்கொண்டார். மார்ட்டின் ஹாரிஸ் பெரும் விசுவாசம் மற்றும் தியாகத்தின் செயலால் அச்சிடும் செலவுக்காக ஈடாக தன் பண்ணையை அடமானமாக வைத்தபிறகு அச்சிட நியூயார்க்கின் பல்மைராவிலிருந்த எக்பெர்ட் பி. க்ராண்டின் என்ற பெயருடைய அச்சிடுபவரை திருப்திப்படுத்த முடிந்தது. மார்மன் புஸ்தக பிரசுரத்துக்கு பின்பு, தொடர்ந்த எதிர்ப்பினிமித்தம் மார்ட்டின் ஹாரிஸ் விசுவாசத்துடன் 151 ஏக்கர் பண்ணையை விற்று பதிப்பு செலவைக் கொடுத்தார். ஜோசப் ஸ்மித் மூலம் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல் மூலம் தன் சொத்தை இச்சியாதிருக்கவும், தேவனின் சத்தியம் மற்றும் வார்த்தை அடங்கிய புஸ்தகத்தின் அச்சிடும் செலவை செலுத்த மார்ட்டின் ஹாரிஸுக்கு கர்த்தர் அறிவுறுத்தினார். 21 மார்ச் 1830ல், மார்மன் புஸ்தகத்தின் 5,000 பிரதிகள் பிரசுரிக்கப்பட்டன, இன்று நூறு மொழிகளுக்கு மேல் 180 மில்லியன் பிரதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டுவிட்டன.

வரலாற்று உண்மைகளும், மார்மன் புஸ்தகத்தின் விசேஷித்த சாட்சிகளும் இதன் வருகை உண்மையாகவே அற்புதமானது என சாட்சியளிக்கின்றனர். எனினும் இப்புஸ்தகத்தின் வல்லமை இதன் மகத்தான வரலாற்றில் மட்டுமில்லை, ஆனால் இதன் வல்லமையான இணையற்ற செய்தியில் இருக்கிறது.

நான் இளம் வேதபாட வகுப்பு மாணவனாக இருந்தபோது, முதல் முறையாக நான் மார்மன் புஸ்தகத்தை வாசித்தேன். என் ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, அதன் தலைப்புப் பக்கங்களிலிருந்து அதை நான் படிக்கத் தொடங்கினேன். முதல் பக்கங்களில் அடங்கியுள்ள வாக்குத்தத்தம் இன்னும் என் மனதில் எதிரொலிக்கிறது. இதில் அடங்கியுள்ள செய்திகளை உங்கள் இருதயத்தில் சிந்தித்து, புஸ்தகம் உண்மையானதா என கிறிஸ்துவின் நாமத்தில் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில் கேளுங்கள். இந்த வழியைப் பின்பற்றி, விசுவாசத்துடன் கேட்பவர்கள், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அதன் சத்தியம் மற்றும் தெய்வீகம் பற்றி சாட்சி பெறுவார்கள். 22

மனதில் ஒரு வாக்குத்தத்தத்துடன், அதன் சத்தியம் பற்றி அதிகம் அறிய நாடி, ஜெபத்தின் ஆவியுடன், நான் வேதபாட வகுப்பின் வாராந்தர பாடங்களை முடித்தபோது, சிறிது சிறிதாக மார்மன் புஸ்தகத்தை படித்தேன். தன் ஜனத்துக்கு ஆல்மா தேவ வார்த்தையை போதித்தது விவரிக்கப்பட்டபடி, ஒரு இதமான உணர்வு என் ஆத்துமாவை மெதுவாக நிரப்பத்தொடங்கியதை இதமாக உணர்ந்து என் புரிதலை தெளிவாக்கி, அதிகமதிகமாக களிகூர்வதாக ஆவதை நேற்று நடந்தது போல நான் நினைவுகூர்கிறேன். 23 அந்த உணர்வு நாளடைவில் என் இருதயத்தில் வேர் விட்டு அறிவாக மாறி, இந்த பரிசுத்த புஸ்தகத்தில் காணப்படுகிற குறிப்பிட்ட நிகழ்வுகள் மற்றும் போதனைகள் பற்றிய என் சாட்சியின் அஸ்திவாரமானது.

இவை மற்றும் பிற விலையற்ற தனிப்பட்ட அனுபவங்கள் மூலம் இயேசு கிறிஸ்துவில் எனது விசுவாசத்தை தாங்குகிற மூலைக்கல்லாகவும் அவரது சுவிசேஷம் பற்றிய கோட்பாட்டின் எனது சாட்சியாகவும் மார்மன் புஸ்தகம் உண்மையாகவே ஆனது. கிறிஸ்துவின் தெய்வீக பாவநிவாரண பலி பற்றி எனக்கு சாட்சியளிக்கிற தூண்களில் ஒன்றாக ஆனது. என் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தவும், என் மனதில் அவநம்பிக்கையை போடவும் சத்துருவின் முயற்சிகளுக்கு எதிராக என் வாழ்க்கை முழுவதும் கேடகமாகி, உலகத்துக்கு இரட்சகர் பற்றி தைரியமாக சாட்சியளிக்க தைரியம் கொடுக்கிறது.

என் அன்பு நண்பர்களே, என் இருதயத்துக்கு ஒரு அற்புதமாக வரிமேல் வரியாக 24, மார்மன் புஸ்தகம் பற்றிய சாட்சி வந்தது. இன்றுவரை, மார்மன் புஸ்தகத்தில் அடங்கியுள்ள தேவ வார்த்தையை முற்றிலுமாக புரிந்துகொள்ள உண்மையான இருதயத்துடன் நான் தொடர்ந்து தேடும்போது, அந்த சாட்சி தொடர்ந்து வளர்கிறது.

இன்று என் குரலைக் கேட்கும் அனைவரையும், உங்கள் வாழ்க்கையில் மார்மன் புஸ்தகம் அற்புதமாக வருவதன் பாகமாக இருக்க அழைக்கிறேன். நீங்கள் ஜெபத்துடனும் தொடர்ந்தும் இதன் வார்த்தைகளைப் படிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் அதன் வாக்குத்தத்தங்களையும் வளமான ஆசீர்வாதங்களிலும் நீங்கள் பங்குபெறலாம் என நான் வாக்களிக்கிறேன். அதன் பக்கங்களில் எதிரொலிக்கிற வாக்குத்தத்தங்களை மீண்டும் நான் உறுதி கூறுகிறேன், “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில் இக்காரியங்கள் சத்தியமற்றவையா என கேட்க வேண்டுமென உங்களுக்கு அறிவுரை கொடுக்கிறேன். நீங்கள் உண்மையான இருதயத்தோடும் முழு நோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துக் கேட்பீர்களானால்,” அவர் இரக்கத்துடன் “அதன் சத்தியத்தை உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் தெரியப்பண்ணுவார்.”25 அவர் மிகவும் தனிப்பட்ட விதமாக உங்களுக்குப் பதிலளிப்பார், அவர் எனக்கும் உலகெங்கிலுமுள்ள அநேக பிறருக்கும் செய்திருக்கிறார் என நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். ஜோசப் ஸ்மித்தின் அனுபவங்கள் அவருக்கும் முதல் சாட்சிகளுக்கும், இந்த பரிசுத்த புஸ்தகம் பற்றிய உத்தமம் மற்றும் நம்பகத்தன்மை பற்றிய சாட்சியைப் பெற நாடிய அனைவருக்கும் இருந்ததுபோல, உங்கள் அனுபவமும் இருக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மார்மன் புஸ்தகம் உண்மையாகவே தேவ வார்த்தை என நான் சாட்சியளிக்கிறேன். இந்த பரிசுத்த பதிவேடு சுவிசேஷக் கோட்பாடுகளை முன்வைத்து, இரட்சிப்பின் திட்டத்தை குறிப்பிட்டு, இந்த வாழ்க்கையில் சமாதானம் பெறவும் வரவிருக்கிற வாழ்வில் நித்திய ஜீவனுக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனவும், அது மனுஷருக்கு சொல்கிறது என நான் சாட்சியளிக்கிறேன்.26 நமது நாளில் இஸ்ரவேலின் கூடுகையை கொண்டுவரவும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஜனங்கள் அறியவும் மார்மன் புஸ்தகம் தேவனின் கருவியாக இருக்கிறது என நான் சாட்சியளிக்கிறேன். தேவன் ஜீவிக்கிறரார், நம்மை நேசிக்கிறார், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து உலக இரட்சகர், நமது மார்க்கத்தின் பிரதான மூலைக்கல் என நான் சாட்சியளிக்கிறேன். நமது மீட்பரும், நமது போதகரும், நமது கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திலே நான் இவற்றை சொல்கிறேன், ஆமென்.